முதல்ல ஒரு ஜோக். ஒரு கணவன்,மனைவி, அவர்களுக்கு 8 வயதில் பையன். கணவன் மனைவியிடையில் அந்த விஷயத்துக்கு "டைப் பண்ணனும்" னு ஒரு கோட். வார்த்தை. ஒரு நாள் இரவு . மனைவி கிச்சனில் வேலையாயிருக்கிறாள் . கணவன் சிறுவனிடம் சொன்னான் "டேய் மம்மிக்கிட்டே போய் சொல்லு அப்பா எதோ அர்ஜெண்டா டைப் பண்ணனுமாம் . மிஷின் ரெடியானு கேட்கறாங்க". பையன் மம்மிக்கு இந்த தகவலை சொன்னான். அதற்கு அவள்" டேய் மிஷின் ரெட் ரிப்பன்ல ஓடுதுனு சொல்ரா" என்றாள். பையனும் அபபாவுக்கு இந்த தகவலை சொன்னான். கணவனுக்கோ பயங்கர மூட். "டேய்.. விஷயம் ரொம்ப அர்ஜெண்டுனு சொல்றா" என்றான் அவன். இத்தகவலை சுமந்து வந்த மகனிடம் அந்த இளம் மனைவி சொன்னாள் ." அவ்ள அர்ஜெண்டா இருந்தா கைல எழுதிக்க சொல்லு"
இதற்கான விளக்கத்தை அடுத்த பதிவில் பார்ப்போம் .
செக்ஸ் ஜோக் + சைக்காலஜி என்ற இந்த தொடர்பதிவு தொடர்ந்து வெற்றி நடை போடுவது மகிழ்ச்சியை தந்தாலும். உள்ளூற ஒரு வித குற்ற மனப்பான்மையும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கான காரணத்தையும் என் கருத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்
நான் வாழும் ஆந்திரமானிலத்தில் 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி , தற்போது சேற்றில் மூழ்கியிருக்க, மக்கள் சர்வம் இழந்து உண்ண உணவு, உடுக்க உடை , இருக்க வீடு இன்றி பல்வேறு வியாதிகளால் பீடிக்கப்பட்டு,
அவதிப்பட்டுக்கொண்டிருக்க நான் இப்படி செக்ஸ் ஜோக்கை அனலைஸ் செய்து கொண்டிருப்பது தவறோ என்று தோன்றுகிறது. ஆனால் இந்த செக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி இல்லாததால் தான் , செக்ஸ் குறித்த புரிதல் இல்லாததால்தான் மனிதர்கள் இது போன்ற இயற்கை பேரழிவுகளை உண்டாக்கி கொள்கிறார்கள் என்று என்னால் நிரூபிக்க முடியும். இத்தனை பெரிய வெள்ளத்துக்கு காரணம் என்ன ? கிருஷ்ணா நீர்பிடிப்பு பகுதியில் அடை மழை பொழிகிறது.ஒருவாரமாக. அந்த வெள்ள நீர் நிச்சயம் ஸ்ரீசைலம் அங்கிருந்து நாகார்ஜுன சாகர், சாகரிலிருந்து பிரகாசம் ப்யேரேஜுக்கு வரும். இதை சின்னக்குழந்தை கூட சொல்லிவிடமுடியும். இதற்கு என்ன தீர்வு ? புது வெள்ளம் அணையை வந்து சேர்வதற்குள்ளாக (சுமார் 52 மணி நேரம் கெடு இருந்துள்ளது) அணையை காலி செய்து வைத்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை ?
இங்கேதான் செக்ஸ் வருகிறது. எவனொருவன் செக்ஸ் குறித்த 100 சதம் விழிப்புணர்வு, செயல்திறன்,புரிதலை கொண்டுள்ளானோ அவனுக்கு வேலை, ஹோதா, சம்பளம், சமூகத்தில் அங்கீகாரம் ஏதும் தேவையில்லை. இவை ஏதுமின்றியே அவனால் தன் மனைவியை சந்தோஷமாக வைத்திருக்க முடியும். (முக்கியமாய் ட்ரைவருடனோ , கொரியர் பையனோடோ ஓடிப்போக மாட்டாள்/வெறும் செக்ஸ் இல்லை என்று எவளும் ஓடிப்போவதில்லை. தன்னால் முடியாத குறைக்கு அதை மறைக்க இவன் இஷ்டத்துக்கு கொடுமை படுத்த ஆரம்பிக்கிறான். தன் ஆதிக்கத்தை நிலை நாட்ட பார்க்கிறான். இந்த லொள்ளு தாங்க்காமல் தான் மனைவி ஓடிப்போகிறாள். என்னால முடியலடி என்றால் அடச்சே ..போனா போவுது போ. என்றுதான் எந்த மனைவியும் கூறுவாள்)
ஆனால் செக்ஸ் குறித்த 100 சதம் விழிப்புணர்வு, செயல்திறன்,புரிதல் அற்ற ஆண்மகன் வேலை, ஹோதா, சம்பளம், சமூகத்தில் அங்கீகாரம் இவற்றை வைத்துதான் ஒப்பேற்ற வேண்டி உள்ளது. "ஊர்ல நாலஞ்சு இடத்துல ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மனசுல கச்சா முச்சானு காம்ப்ளெக்ஸ். இதனால என்ன செய்தேனும் தன் வேலையை காப்பாற்றிக்கொள்ள துடிக்கிறான். நானே ஸ்ரீ சைலம் அணையை நிர்வகிக்கும் தலைமை பொறியாளராக இருந்திருந்தால் நீர் பிடிப்பு ஏரியாவில் அடை மழை என்றதுமே அணைக்கதவுகளை திறந்து விட்டிருப்பேன். வேணம்னா செக்ரட் ரியேட்டுக்கு ஒரு ஃபேக்ஸ்.
நான் வாழ்வை ஒரு விளையாட்டாகவே கருதி எதையும் உதற தயாராக இருக்க காரணம் திருப்திகரமான செக்ஸ் லைஃப். நான் விட்டு உதறிய வேலைகள் என்று கணக்கிட்டால் நிச்சயம் அது செஞ்சுரியை தாண்டும். திருப்திகரமான செக்ஸ் லைஃப் இல்லாதவன் என்றோ ஒரு நாள்செக்ஸை விலை கொடுத்து வாங்கிவிடலாம் என்ற சப்கான்ஷியல் சிந்தனை காரணமாக வேலையில் தொடர மேலதிகாரிக்கு ஜால்ரா போடுகிறான், எவனோ செத்தான் எனக்கென்ன போச்சு என்று சிகப்பு நாடாத்தனத்தை வளர்க்கிறான். லஞ்சம் வாங்குகிறான். ஊழல் செய்கிறான். லஞ்சம் கொடுத்து ப்ரமோஷன் வாங்குகிறான்.
திருப்திகரமான செக்ஸ் லைஃப் உள்ள எந்த மனிதனிலும் நன்றி பொங்கும். இயற்கையின் பால், நாட்டின் பால் ,சமூகத்தின் பால் , தன் மக்களின் பால் நன்றி பொங்கும். அவன் எக்காரணத்தை கொண்டும் ஏரியை ஆக்கிரமிக்க மாட்டான் , கண்மாயில் வீடு கட்டமாட்டான்.
இதற்காகத்தான் நான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழ்ங்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன்.
நான் சவால் விட்டு கூறுகிறேன். ஒரே ஒரு 6 மாதம் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கட்டும். ஈவ் டீசிங் ,கற்பழிப்பு, கள்ள உறவு, லஞ்சம் ஊழல் கொள்ளை எல்லாமே ஒழிந்து போகும் உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் ஆசைகள் தான் மனிதனை வன்முறைக்கும் ,குற்றத்துக்கும் தூண்டுகின்றன. மனிதர்களின் செக்ஸ் ஆசைகள் சட்டத்துக்குட்பட்ட வகையில் நிறைவேற வசதி வாய்ப்பு ஏற்படுமானால்
மேற்படி சமூக அவலங்கள் யாவும் கட்டுப்பட்டு விடும்.
மீண்டும் எனது பிரபலமான கொட்டேஷனை கொண்டு இந்த பதிவை முடிக்கிறேன்.
"செக்ஸ் கோரிக்கைகள் நிறைவேறாத ஆணோ பெண்ணோ மனித வெடிகுண்டை விட மோசமானவர்கள். எப்போது வெடிப்பார்களோ தெரியாது"