Monday, October 5, 2009

செக்ஸ் ஜோக் + மனோதத்துவம் -3

செக்ஸ் ஜோக்குகள் பின்னான சைக்காலஜி பற்றிய எனது பதிவுகள் அனைவரையும் கவர்ந்துள்ளதாக கருதுகிறேன். தமிழ் 10 ரேங்கில் 23 ல் தொங்கிக்கொண்டிருந்த எனது வலைப்பூ இன்று 15 ஆவது ரேங்குக்கு வந்துள்ளது . எனவே இந்த தொடரில் மீண்டும் ஒரு பதிவு. முதலில் ஜோக்கைப் பார்ப்போம்:

ஒரு கஞ்சன் . வயது 50க்கு மேல். மனைவி இறந்து விட்டாள். இரண்டாவதா ஒன்னை பிடிச்சான். காசு மதிப்பு புதுப்பெண்டாட்டிக்கு தெரியனுங்கறதுக்காக பலான காரியத்துக்கு இறங்கும்போதெல்லாம் ஒரு உண்டியல்ல 50 ரூ நோட்டை போட்டுட்டு ஆரம்பிப்பார். ஒரு நாள் பாங்க் லீவ். ஏடிஎம்ல ப்ராப்ளம். உண்டியலை திறந்து காட்ட சொன்னார். அதுல 500, 1000 ரூ நோட்டெல்லாம் கிடந்தது. ஆசாமி கிர்ரா யிட்டு என்ன சமாச்சாரம்னு கேட்டார். "அக்காங்.. எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா என்னன்னு பதவிசா கேட்டாளாம் அவள்

இந்த ஜோக்கில் பாருங்கள் முதிய கணவன் ,இளைய மனைவி இதிலும் தொடர்கிறார்கள். சைக்காலஜி படி பார்த்தால் ஒவ்வொரு இளைஞனும் தாயை தேடுகிறான். ஒவ்வொரு பெண்ணும் தன் தந்தையை தேடுகிறாள். இந்த கணக்குப்படி பார்த்தால் மேற்படி சோடி ஆதர்சமானதாகதானே இருக்க வேண்டும். ஏன் இந்த மாதிரி சோடி பற்றியே நிறைய ஜோக்ஸ் உள்ளன ?

செக்ஸ் என்பதே குழந்தை பிறப்புக்கான ஏற்பாடுதான். ஆண் தன் மரணத்துக்கு 10 நிமிடங்களுக்கு முன்னால் கூட குழந்தையை தரும் சக்தியை பெற்றுள்ளான். பெண்ணுக்கோ மாதவிலக்கு தொடரும் வரைதான் குழந்த பாக்கியம். எனவே குழந்தைப்பேறை பொருத்த அளவிலும் மேற்படி சோடி ஓகே தான்.

ஏற்கெனவே சொன்னபடி செக்ஸில் உச்சம் பெற பெண்ணுக்கு 23 அசைவுகள், ஆணுக்கு 7 அசைவுகள் மட்டுமே தேவைப்படுகின்றன. இளமையில் துரித ஸ்கலிதம் போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் 40 ஐ கடந்த பிறகு இவை குறைந்து மறைந்து விடவே வாய்ப்பு அதிகம். (மனம் முதிர்ச்சியடைவதால்)

பின்னே ஏன் கிண்டலடிக்கிறார்கள் ? மனித மனம் கடந்த காலத்துக்கு கட்டுப்பட்டே இயங்குகிறது. சாதாரண நடை முறையில் தம்பதி என்றால் 2 முதல் 5 வயது வரைதான் வித்யாசம் இருக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு மனித மனம் பைண்ட் ஆகி புதுமையை எதிர்க்கிறது. அந்த எதிர்ப்பு இப்படிப்பட்ட ஜோக்குகளாக வெளிப்படுகிறது.


வயது முதிர்ந்த கணவன் என்றதுமே அவனுடைய இளம் மனைவி மலையாளப்படம் மாதிரி விரகதாபத்தில் தான் இருப்பாள் என்று இவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். அடுத்து அவள் லோலாயியாக தான் இருப்பாள் என்றும் கருதுகிறார்கள் . சமுதாயம் இது போன்ற மூட நம்பிக்கைகளை துறந்தாலன்றி செக்ஸ் லைஃப் சுமுகமாகாது. இது போன்ற மூட நம்பிக்கைகளால் சிலர் தம்முடைய, பிறருடைய செக்ஸ் லைஃபுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதோடு அதன் மூலம் அவர்களது சமூக வாழ்வையும் அதன் மூலம் ஒட்டு மொத்த சமுதாயத்தையுமே சீர்குலைக்கிறார்கள்.

பொதுவாக இந்த செக்ஸ் ஜோக்குகளின் கர்த்தாக்கள் ஆண்களே என்பதால் இவற்றில் ஒரு தரப்பான கருத்துக்களே அதிகம். பெண்கள் உலகத்தில் பரவிக்கிடக்கும் செக்ஸ் ஜோக்குகளை யாரேனும் சகோதரி வெளியிட்டால் அதில் ஆண்கள் பற்றிய நக்கல் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.அவற்றின் பின்னணியிலான சைக்காலஜியையும் அலச தயார்.