Monday, October 5, 2009

ஏ ஜோக் + மனோதத்துவம் - 5

புதுமை முயற்சிக்கு பதிவுலகத்தின் ஆதரவுக்கு நன்றி. இந்த பதிவில் மற்றொரு ஜோக்கை பார்ப்போம். இது என் கண்டுபிடிப்போ இழவோ கிடையாது. பெருவாரியாக தமிழ் கூறு நல்லுலகத்து இளைஞர்கள் மத்தியில் சொல்லப்பட்டு ரசிக்கப்பட்டு வருவதே. இதன் பின்னான சைக்காலஜியை அலச இந்த ஜோக்கை வெளியிட்டுள்ளேன்.

உங்களுக்கு பிடிக்காத நடிகர்கள் 10 பேரை நினைவில் கொள்ளுங்கள். நான் மட்டும் இந்த ஜோக்கில் நடிகர்களின் பெயர்களை குறிப்பிடுவதாயில்லை. ஜெயில் கைதிகள் மாதிரி எண்களால் மட்டும் குறிப்பிடுவேன். அந்த இடத்தில் தங்களுக்கு பிடிக்காத நடிகர்களை கற்பனை செய்து இந்த ஜோக்கை படிக்கவும்.
லேட்டஸ்ட் நடிகர் (முதல்வர் ஆசையில் உள்ளவராகவும் இருக்கலாம்) ஒருவர் ஒரு நடிகையிடம் தனியே "டிஸ்கஷன்" நடத்தினார், மறு நாள் காலை ஒன் பாத்ரூம் போக சென்ற போது தன்னுடையதை காணாமல் அதிர்ந்தார். என்னங்கடா இது லொள்ளு என்று மேற்படி நடிகைக்கு போன் போட்டார். அவள் நேரில் வரும்படி சொன்னார். இவரும் போனார். அந்த நடிகை தமது ...க்குள் கை விட்டு அரை டஜன் உருப்படிகளை எடுத்து வெளியே போட்டார். அதில் எதுவும் நம்ம பார்ட்டிக்கு சொந்தமான ஸ்பேர் பார்ட் கிடையாது. நம்ம ஆளு அரண்டு போயி என்ன தாயி இது என்று புலம்பவே ஆரம்பித்துவிட்டார். நடிகை சரி தம்பி நீயே உள்ளாற போயி பாரு என்றார். நம்மவர் ஒரு டைவ் அடித்தார். அங்கே முன்னாள் பிரபல நடிகர்கள் ஒரு குரூப்பாக உட்கார்ந்து சீட்டாடிக்கொண்டிருந்தார்களாம்.

நடிகர், நடிகைகள் பற்றிய மக்கள் கருத்து பிற விஷயங்களில் எப்படியோ செக்ஸ் விஷயத்தில் மட்டும் நடிகர்களை மதன காமராஜர்களாகவும், நடிகைகளை விபச்சாரிகளாகவும் கருதிக்கொள்ளும் நிலைதான் உள்ளது. அதற்கேற்றார்போல் இன்று படவுலகில் நடிகர் , ந‌டிகைகளீடையிலான உறவுகள் "பச்சை" பசேலாகி இந்த கருத்துக்கு உரம் போடுகின்றன. (பாஸ்பேட்டா, யூரியா வா ?) நடனம் கற்பவர்களுக்கு என்றல்ல இயல்பாகவே கலைஞர்களுக்கே பலான உணர்வுகள் அதிகம். படைப்பு திறன் என்பதே செக்ஸ் பவரின் வெளிப்பாடுதான் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அதனால் தான் அந்த காலத்தில் நடனக்கலையை குறிப்பிட்ட குழுவுக்கு ஒதுக்கி வைத்தனர். (அது சரி என்று நான் கூறவில்லை.இப்போதெல்லாம் சகல உணர்வுகளையும் தூண்டவும் , கட்டுப்படுத்தவும் அற்புதமான ரசாயனங்கள் உள்ளன) இப்போதோ 90 சதம் இளைஞர் இளைஞிகளின் கோல் சினிமாவில்/விளம்பர படத்தில் நடிப்பதேவாக உள்ளது. (ஹி ஹி.. நானும் ஒரு காலத்தில் ஜொள் விட்டவன் தான்) இதற்கு காரணம் உயிரின் அடிப்படை தேவையான எக்ஸ்பேன்ஷன் அதாவது விரிவாக்கம்.

ஆக சினிமா உலகத்து டெக்காமரான் கதைகள் பட்டி தொட்டியெங்கும் பரவியுள்ளன என்பதை இந்த ஜோக் காட்டுகிறது. உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்றும் சைக்காலஜி கூறுகிறது. மேற்படி விழைவைதான் நடிகரை "உள்ளாற" டைவ் அடிக்கச்செய்து தீர்த்துக்கொள்கிறார்களோ என்னவோ. இதர ஜோக்குகளை போலவே இதிலும் பெண்ணை நடத்தை கெட்டவளாக சித்தரிக்கப்பட்டாலு.. யாவும் பெண்ணுள் அடக்கம் என்பதை விரசமாகவேனும் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.


படிக்க அசூயையாக இருந்தாலும் ஆண், பெண்களின் இன உறுப்புகளின் அமைப்பே அவர்களின் அடிப்ப்டை மனோதத்துவத்தை காட்டுகின்றது.

ஆண் அலை பாய்கிறான். ஆக்கிரமிக்க துடிக்கிறான் என்பது மேலோட்டமான கருத்து. சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இவன் தான் பாதுகாப்பின்மையில் உள்ளான். பாதுகாப்பை தேடித்தான் செக்ஸில் தன்னை அவளில் புதைக்கிறான்.

மேலோட்டமாக பார்த்தால் பெண் குறைபட்டவளாக தெரிகிறாள். (எம்ப்டினெஸ்) ஆனால் அவளோ ஆணின் ஆக்கிரமிப்புக்கு இடம் கொடுத்து ஆணை தன்னில் புதைத்து அவனுக்கு பாதுகாப்பு தருகிறவளாய் மாறுகிறாள்

மொத்தத்தில் செக்ஸ் ஜோக்குகளை க்ரியேட் செய்பவர்களின் மனோதத்துவத்தை பார்த்தால் அவர்கள் அதில் மூழ்கி கு.ப.சிப்பியேனும் எடுத்தவர்களாக தோன்றுகிறது. இவற்றை சொல்லி சிரிப்பவர்கள் /சிரிக்க வைப்பவர்களை நினைத்தால் கவலை ஏற்படுகிறது. காரணம் அவர்களுக்கு செக்ஸ் மீது ஒரு வித "அயோ மயம்" உள்ளது. ஈர்ப்பு உள்ளது. அனுபவிக்க வேண்டும் என்ற துடிப்பும் உள்ளது, இனம் புரியாத அச்சம் உள்ளது. ஆனால் இவற்றை மறைத்துக்கொள்ளும் துடிப்பில் இது போன்ற ஜோக்குகளை சொல்லி சிரித்து, சிரிக்க வைத்து ஆறுதல் தேடுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

மொத்தத்தில் செக்ஸ் பற்றி இத்தனை நீண்ட டிஸ்கஷன்/ஜோக்ஸ்/விமர்சனம் இத்யாதி சமூகத்தில் பரவிக்கிடக்க காரணம் மக்களில் மெஜாரிட்டி பிரிவினர் இதில் திருப்தியுற்று வாழ‌வில்லையோ என்று தோன்றுகிறது .

ராம கிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். பந்தியில் சலசலப்பு இருக்குமாம். எதுவரை ? உணவு பரிமாறப்படும் வரை. உண்ணும்போது ? ஊஹூம். என்ன யாரோ ஓரிருவர் ஏம்பா சாம்பார் இங்கே வா போன்று குரல் கொடுக்கலாம் அவ்வளவே.

ஆனால் செக்ஸ் குறித்து இத்தனை சலசலப்பு சமூகத்தில் தொடர காரணம் இவர்கள் சாப்பிடவே துவங்கவில்லையோ என்றும் தோன்றுகிறது.