இப்படி ஒரு கேள்வி தமிழ் சனங்க மனசுல இருக்கும்னு நினைச்சு இந்த பதிவை போடறேன். நாகார்ஜூன சாகர் பிழைக்குமானு ஒரு பதிவை போட்டு அது பயங்கர மொக்கையாகிப்போக பலான ஜோக்+ மனோதத்துவத்துக்கு இறங்க வேண்டியதாயிருச்சு. உலகம் போற போக்கை தெரிஞ்சிக்கிடலைன்னா நஷ்டம் நமக்குத்தான். உலக போக்குக்கே இதான் விதி. பக்கத்து மானிலம்? சொல்லவே தேவையில்லை. தமிழ் நாட்டு சம கால சரித்திரத்தை உன்னிப்பா அப்சர்வ் பண்ணதாலதான் என்.டி.ஆரால கட்சி ஆரம்பிச்சு சி.எம் ஆக முடிஞ்சது.
நம்ம கலைஞர் தாத்தா ஆந்திர அரசோட நல திட்டங்களை உன்னிப்பா கவனிச்சதாலதான் சந்திர பாபு கிட்டேருந்து உழவர் சந்தை, ஒய்.எஸ்.ஆர் கிட்டே இருந்து ரெண்டு ரூபா அரிசி, ஆரோக்கிய ஸ்ரீ (கலைஞர் காப்பீடு) எல்லாத்தயும் சுடமுடிஞ்சது. ஸோ அக்கம் பக்கம் என்ன நடக்குதுனு ஒரு கண் போட்டு வைங்கண்ணா.
மேட்டருக்கு வந்துருவம்:
ஒய்.எஸ்.மரணம் - ஒய்.எஸ்.ஆரோட மரண துக்கத்தை தாங்க முடியாத நூத்துக்கணக்கான பேர் மாரடைப்பில் சாவு - தற்கொலை - செத்துப்போனவுகளோட வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்வேனு ஜகனோட அறிவிப்பு-ஜகனுக்கு 150 எம்.எல்.ஏ ங்க ஆதரவு தெரிவிச்சு கடிதம் கொடுத்தது- அதையும் மீறி சோனியா ரோசய்யா தாத்தாவை சி.எம் ஆக்கினது. சரி ஜகனை டெப்புடி சி.எம் மாதிரி எதாச்சும் போடுவாங்கனு பார்த்தா ஒய்.எஸ்.இறந்ததால காலியான கடப்பா எம்.எல்.ஏ தொகுதிக்கு ஒய்.எஸ்,மனைவி விஜய லட்சுமிக்கு சீட்டு கொடுத்தாய்ங்க.
ஒய்.எஸ் இருக்கறச்ச வாய்லயும் ... சூ..லயும் ஃபெவிகால் வச்சிருந்த கிழவாடிங்களை எல்லாம் ரோசய்யா செட்டு சேர்த்து மந்திரிசபை மாற்றம் அது இதுனு வாலை அவிழ்த்துவிட ஆரம்பிச்சாரு. ஆட்டோமேட்டிக்கா ஜகனுக்குள்ளயும்,அவரோட ஆதரவாளர்கள்ளயும் இன்செக்யூரிட்டி ஜாஸ்தியாயியோருச்சு.,
ரோசய்யா சி.எம் ஆனதுமே மந்திரி கொண்டா சுரேகா ராஜினாமா பண்ணிட்டாய்ங்க. ரோசய்யா அந்த சி.எம். சீட்ல உட்கார்ந்ததுலருந்து 9 கிரகமும் வக்கிரமாயிட்டாப்ல வறட்சி ஒரு பக்கம் வெள்ளம் ஒரு பக்கம், தெலுங்கானா கேட்டு மூக்கரோட (கே.சி.ஆர்) உண்ணாவிரத நாடகம் ஒரு பக்கம்- சிதம்பரம் ப்ளேட்டை மாத்தி மாத்தி தெலுங்கானா விஷயத்துல அறிக்கை - ஆந்திரா பகுதி எம்.எல்.ஏக்கள் கூண்டோட ராஜினாமா- பார்லிமெண்ட்ல தெ.தேசம் காரவுக ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக ப்ளே கார்ட்ஸை காட்டி கத்தி, வெளி நடப்பு செய்தப்போ ஜகன் அந்த எம்.பிங்க கிட்டருந்து ஒரு ப்ளே கார்டை வாங்கி தானும் எக்ஸிபிட் பண்ணி வெளி நடப்பு செய்து வெளியே வந்து கோல்டன் தெலுங்கானானு புதுசா ஒரு ப்ரபோசலை முன் வச்சாரு.
தெலுங்கானா ஆந்திரா பகுதிகள்ள மாறி மாறி கதவடைப்பு,வன்முறை- ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி நியமனம்.
சரி எல்லாம் ஓய்ந்ததுன்னு இருந்த சமயம் பார்த்து ரோசய்யா பஞ்சப்பாட்டு பாட ஆரம்பிச்சாரு. ஒய்.எஸ்.ஆரோட நல திட்டங்கள் ரெம்ப பாரமாயிருச்சுனு கழட்டிவிட (அவர் பாஷைல மறு பரிசீலனை) முயற்சி. பொங்கி எழுந்த ஜகன் . தன்னோட சாட்சி டிவி, சாட்சி தினசரில இந்த சதிகள் அம்பலமாக்க முயற்சி பண்ணார். ரோசய்யாவுக்கு தில்லி கண்ணசைவுல செயல்படற, சோனியா வகையறாவுக்கு உள் பாவாடை துவைச்சுப்போடற கிழவாடிகள் க்ரூப் ஒன்னு நல்லாவே நெருக்கம் காட்டுச்சு.
இடையில ஹைதராபாத் கார்ப்போரேட் தேர்தல்கள் வந்தது. ஜகன் பரவலா பல வார்டுகளில் சுற்றி வந்து பிரசாரம் செய்தார். ரோசய்யாவின் சொந்த வார்டில் காங்கிரஸ் தோற்றுப்போனது. அந்த சுற்றுப்பயணத்தின் போது ஜகனுக்கு ஒரு மெகாஸ்டாரை மிஞ்சிய ஃபாலோயிங் கவர்ச்சி வெளிப்பட்டது.
ஜகன் தன் அப்பா மரணத்தை தாங்கமுடியாது செத்துப்போன குடும்பங்களை நேரில் சந்திக்க தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். சமீபத்தில் தெலுங்கானா பகுதியிலும் தன் சுற்றுப்பயணத்தை திக்விஜயமாக நடத்தி முடித்தார்.
அடுத்த கட்ட சுற்றுப்பயணமாக வரங்கல் புறப்பட போறதா அறிவிச்சாரு. உடனே ரோசய்யா, லோக்கல் தெலுங்கானா காங்கிரஸ் எம்.பிங்க அஸ்து போட ஆரம்பிச்சாய்ங்க. ஜகன் போடாங்கோத்தா.. நான் போறது போறதுதானு சொல்ட்டாரு.
உடனே சிரஞ்சீவி தில்லிக்கு அழைக்கப்பட்டார். எந்த கட்சியுமே தேர்தல்ல ஜெயிச்சு அதிகாரக்கட்டில்ல உட்கார்ந்த பிறகுதான் ஊழல் குற்றச்சாட்டு கிளம்பும். ஆனா சிரஞ்சீவியின் பிரஜாராஜ்ஜியம் ஆரம்பிச்ச நாள்ளருந்தே ஊ.கு புற்றீசலா கிளம்பிருச்சு. சீட்டுக்கு இத்தனை கோடின்னு ரேட் வச்சு கூவி கூவி சீட் கொடுத்தாய்ங்க.
2009 தேர்தலுக்கு பிறகு ஒய்.எஸ்.ஆர் ஆப்பரேஷன் ஆகர்ஷானு துவங்கினார். பிற கட்சிகள்ள இருந்து ஆட்களை சொந்த கட்சிக்கு கொண்டுவர துவங்கினார். சந்திரபாபு பிறகட்சிகளுக்கு(முக்கியமா பிரஜாராஜ்ஜியத்துக்கு ) போன தமது கட்சி ஆட்களை மறுபடி கட்சிக்கு கொண்டு வர ஆப்பரேஷன் ஸ்வக்ருஹா துவங்கினார். இந்த ரெண்டு ஆப்பரேஷன்லயும் டங்கு வார் அறுந்தது சிரஞ்சீவி கட்சிக்குதான். டர்ராகி திகிலடிச்சுகிடந்த சிரஞ்சீவிக்கு தில்லி அழைப்பு அற்புத தாயத்து மாதிரி இருந்தது. ஒடோடிப்போய் சோனியா கால்ல விழுந்தார்.
இவருக்கு ஆந்திர சட்டமன்றத்துல மொத்தம் 18 எம்.எல்.ஏக்கள். இவர் தெலுங்கானா பிரச்சினைல ஒன்று பட்ட ஆந்திரானு ஸ்டாண்ட் எடுத்ததுல தெலுங்கானாவை சேர்ந்த 2 எம்.எல்.ஏ தாவிட்டாய்ங்க.
சோனியா மேடத்தோட ஸ்கெச் என்னன்னா சொல் பேச்சு கேட்காம தெலுங்கானால ஆறுதல் யாத்திரைய துவக்கிட்ட ஜகன் ஒரு வேளை கட்சியை விட்டுப்போயிட்டாலும் பிரசாரத்துக்கு சிரஞ்சீவி இருப்பார். சட்டமன்ற கூட்டங்கள்ள அவரோட 16 எம்.எல்.ஏக்கள் இருப்பாய்ங்க. மேடம் கணக்கு இதான்.
இப்படி ஜகன் மேலிடத்து உத்தரவை திரஸ்கரிச்சு வரங்கல் போன போதுதான் திட்டப்படி மெகபூபாபாத் கல்லெறி,துப்பாக்கிச்சூடு, சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மேண்டேஜ் ஷாட்ஸா அரசியல் சதுரங்க விளையாட்டு துவங்கியது. ஜகன் கைதானார் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார்.
மறு நாளே ஜகன் தில்லி புறப்பட்டார். மீடியால ரோசய்யா க்ரூப்போட சதியை போட்டு உடைச்சாரு. வீரப்ப மொய்லியை சந்திச்சார். சோனியாவின் அரசியல் உபதேசி அஹ்மது பட்டேலை சந்திச்சார். சோனியா மேடம் நோ அப்பாயிண்மென்ட்.
மொய்லி சிரிச்சிக்கிட்டே தெலுங்கானால தேர்தல் நடக்குது. அதை நெக்ஸ்ட் ரவுண்ட்ல பார்த்துக்கப்பா. ஆந்திரா பகுதில உன் யாத்திரை தொடர்ந்து நடக்கட்டும்னு சொன்னதா ஜகன் மீடியாவுக்கு சொல்லிட்டு ஹைதராபாத் வந்தார்.
இங்கே பார்த்தா மந்திரிங்க குழு ஒன்னு மீடியாவை சந்திச்சு ரோசய்யா சின்னபாப்பா வாய்ல விரல் வச்சாலும் கடிக்க தெரியாதுனு முட்டு கொடுத்து பேசினாய்ங்க.
24 மணி நேரத்துல காங்கிரஸ் தில்லி தலைமை மறுபடி அந்தர் பல்ட்டி அடித்தது. இப்போ ஜகன் தாயாரு ஒய்.எஸ்.ஆர் மனைவியார் விஜயலட்சுமி சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பாயிண்ட்மென்ட் கேட்டதா செய்திகள் வருது.
ஒரு தெ.தே.ஆதரவு சேனல் ஒன்னு இந்த மேட்டர்ல ஜகன் ஐசோலேட் ஆயிட்டதா தொடர்ந்து கிண்டலடிக்க அதே மந்திரிங்க இப்ப சொரைக்காய்க்கு உப்பில்லைனு சப்பை கட்டு கட்டினாய்ங்க. ஈ நாடு அதிபரோட மார்க தர்ஸி சிட் ஃபண்ட் ஊழலை வெட்டவெளிச்சமாக்கி அவருக்கு பேதியாக்கின ராஜ மண்ட்ரி எம்.பி உண்டவல்லி அருண்குமார் ஜகனுக்கு ஆதரவா குரல் கொடுத்திருக்காரு. பல எம்பிக்கள், மந்திரிகள், மானில கட்சி தலைவர்கள் தொடர்ந்து ஜகனை சந்திச்சுக்கிட்டே இருக்காய்ங்க.
ஜூன் 8 ஆம் தேதி ஆறுதல் யாத்திரையில் ஒரு அங்கமா ஸ்ரீகாகுளம் சென்றாகனும். அதுக்குள்ளாற மேலிட அனுமதியை பெற முடிஞ்ச வரை முயற்சி பண்ணிருவம்னு ஜகன் நினைக்கிறாப்ல இருக்கு. மேலிடத்துக்கு கீழிடம் குளிர்ந்திருந்து அனுமதி கொடுத்தா சரி. இல்லன்னாலும் யாத்திரை நிற்கிற மாதிரி இல்லே.
இன்னைக்கு கேரளாவை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷுக்கு ஆந்திராவுலருந்து ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. என்.டி.ஆர் முன்னெடுத்து சென்ற செல்ஃப் ரெஸ்பெக்ட் சுயமரியாதை கோசம் கிளம்பியிருக்கிறது. இதை பத்தி சானல்ஸ்ல டிஸ்கஷன்ஸ் சூடு பறத்திக்கொண்டிருக்கிறது. இந்த சுய மரியாதை குறித்த சர்ச்சைல தனிப்பட்ட யாத்திரை போக கூட ஜகனுக்கு மேலிடத்து அனுமதி தேவையா ? இது தெலுங்கர்களுக்கு அவமானமில்லையானு ஒரு கேள்வி எழும்பினதுதான் ஹைலைட்.
மொத்தத்துல ஜகனுக்கு 2009 , செப். 2 ஆம் தேதி முதல்வராகிற தகுதி இருந்ததோ இல்லையோ அல்லாரும் சேர்ந்து நல்லாவே தேத்திவிட்டுட்டாய்ங்க..
Showing posts with label cm ap. Show all posts
Showing posts with label cm ap. Show all posts
Thursday, June 3, 2010
Saturday, March 6, 2010
சீஃப் மினிஸ்டருக்கு 10 ரூபா எம்.ஓ

ஒரு மானில முதல்வருக்கு பத்து ரூபா எம்.ஓ அனுப்பறஅளவுக்கு முருகேசன் சவுண்ட் பார்ட்டியா இல்லை அந்த முதல்வர் தான் ஷெட் பார்ட்டியான்னு குழம்பிராதிங்க. எங்க ஆந்திர மானில முதல்வர் (முன்னாள் ) சந்திரபாபுவுக்கு நான் எம்.ஓ அனுப்பின கதைய தான் இந்த பதிவுல படிக்கப்போறிங்க.
எச்சரிக்கை
அய்யாமாரே, மறுபடி அவள் என்ற தொடர்கதை உனக்கு 22 எனக்கு 32 ஆக நாமகரணமாயி தொடருது இந்த தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க (துடிக்க) இங்கே அழுத்துங்க
உங்கள்ள பலரும் கூரியர், மணி ட்ரான்ஸ்ஃபர் யுகத்துல பிறந்திருப்பிங்கன்னு யூகம். 1967ல பிறந்த எனக்கெல்லாம் எம்.ஓ வர்ரதும், அனுப்பறதும் சகஜம். சாதாரணமா பத்திரிக்கைல தப்பி தவறி எதுனா பப்ளிஷ் ஆனா , தப்பி தவறி பத்துலருந்து 50 ரூபாய்க்குள்ள எம்.ஓ வரும். எதாச்சும் புக் தருவிக்கனும்னா எம்.ஓ அனுப்புவம். ஆனால் சி.எம்முக்கு எம்.ஓ அனுப்பனுங்கற ஐடியா ஏன் வந்தது. அதை எந்த திமிர் பிடிச்சவன் டெலிவரி வாங்கினான்ற விவரங்களை இங்கே சொல்லத்தான் போறேன்.
நான் இந்தியாவ பணக்கார நாடாக்க ஏதோ ஒரு திட்டம் போட்டேன். அதுக்காக ரொம்பவே மெனக்கெட்டேன்னு உங்களுக்கு ஒரு ஐடியா இருக்கலாம். திட்டத்தின் முக்கிய அம்சங்களை அறிய இங்கே அழுத்துங்க. (இந்திய திரு நாட்ல எந்த கவர்ன்மென்ட் ஆஃபீசுக்கு போனாலும் அழுத்தினாதான் வேலை நடக்கு. இந்த வலையுலகத்திலும் அழுத்தினா தான் வேலை நடக்குது ..என்ன ஒரு பொருத்தம் பாருங்க.)
ஆப்பரேஷன் இந்தியா 2000 ங்கறஇந்த திட்டத்தோட 200 பிரதிய லோக்சபா ஸ்பீக்கர் ஆஃபீசுக்கு பதிவு தபால்ல அனுப்பினேன்.அன்றைய ரூலிங்க் கொய்லிஷன் எம்.பிக்களுக்கு கொடுக்க சொல்லி கேட்டிருந்தேன். அவிக கண்டுக்கவே இல்லை.
நூத்துக்கணக்குல ரிமைண்டர்ஸ் அனுப்பின பிறகு அது மாதிரி எந்த ப்ளானும் வரவேயில்லை. ஓடி போடான்னு பதில் அனுப்பினாங்க.
அப்புறம் போஸ்டல் டிபபர்ட்மென்டை கான்டேக் பண்ணி ப்ரூஃப் ஆஃப் டெலிவரி வாங்கி அனுப்பினென். அதுக்கப்புறம் நீங்க அனுப்பினேன்னு சொல்றிங்க. ஆதாரமும் காட்டறிங்க ஆனா எவ்ளதான் தேடிப்பார்த்தாலும் நீங்க சொல்ற பார்சலை இங்கே லொக்கேட் பண்ண முடியலை . நீங்க பெரிய மனசு பண்ணி ஒரே ஒரு பிரதி அனுப்புங்க. நாங்களே பிரதியெடுத்து குடுத்துர்ரம்னு பதில் அனுப்பினாங்க. அனுப்பினேன்.
அதுவும் பத்திரிக்கைக்கு அனுப்பின கதையா போச்சு ( கிணத்துல போட்ட கல்லுங்கறதுக்கு பதில் இந்த பிரயோகம்).அதுக்கப்புறம் நம்ம வயித்தெரிச்சல் வேலை செய்தோ விதி முடிஞ்சு போயோ ஸ்பீக்கர் பாலயோகி ஹெலிகாப்டர் விபத்துல போய் சேர்ந்துட்டார்.அவருக்கு பிறகு பிஎம். சயீதுன்னு நினைக்கிறேன்.அவர்தான் அப்போ டெபுட்டி ஸ்பீக்கர் .அவரை கலாய்க்க அம்பது ரூபா போஸ்டல் ஆர்டர் அனுப்பினேன். என் ப்ளானை எனக்கு திருப்பிகுடுங்கன்னு. அதையும் ஸ்பீக்கர் அலுவலகம் ஆசனத்துல செருகி வச்சிக்கிட்டு இருக்கு. நிற்க.
இந்த இழவெல்லாம் எடுக்கறதுக்குள்ளவே நான் திவாலாயிட்டன். கூரியர் கம்பெனிங்க பிரபலமாக ஆரம்பிச்சுருச்சு. கூரியலர்ல அனுப்பினா பத்து ரூபாதான். ஆனால் தில்லிக்கு அனுப்பினான் ஜாஸ்தி சார்ஜ் பண்றான்.என்னடா பண்ணலாம்னு யோசனை பண்ணி
ஐதராபாதுல இருக்கிற சந்திரபாபுவ டார்கெட் பண்ணேன்.
அப்ப அவர் தான் சி.எம்."போஸ்ட் கார்ட் போடுங்க பதில் போடறேன்.. ஐடியா கொடுங்க ஃபாலோ பண்றேன், புகார் பண்ணுங்க நடவடிக்கை எடுக்கேன்னு "ஒரே அனல் . ( என் ஐடியல் ஹி என்.டி.ஆருக்கு ஆப்பு வச்சி சி.எம். நாற்காலில தொத்திக்கிட்டதில்லாம அடுத்து வந்த எலக்சன்ல பா.ஜா.க துணையோட மறுபடி சி.எம். ஆயிருந்தாரு.) இவருக்கு 1997 லயே சாஸ்திரத்துக்கு என் ப்ளானோட ஒரு காப்பிய அனுப்பியிருந்தேன். அத பேஸ் பண்ணிக்கிட்டு சந்திரபாபுவுக்கு ரிமைண்டர் மேல ரிமைண்டர் அனுப்பி குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சேன்.
1999 லருந்து 2002 ஏப்ரல் வரை இப்படி சரமாரியா கடிதக்கணைகள் தொடுத்து, தெலுங்கு தினசரிகள்ள ஸ்டேட்மெண்ட் எல்லாம் கொடுத்து என்னென்னவோ பண்ணி வச்சிருந்தேன். மேற்படி ஸ்டேட்மெண்டையெல்லாம் ஜெராக்ஸ் எடுத்து சி.எம் ஆஃபீசுக்கு அனுப்பறது வாடிக்கை.
தூங்கறவனை எழுப்பலாம்.தூங்கற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியுமா என்ன?
அப்போ கலாம் அய்யா ஜனாதிபதி. பயங்கர சீன் எல்லாம் போடுவார். அவருக்கு ஒரு புகார் அனுப்பினேன். அவிக சி.எம். ஆஃபீசுக்கு என் புகாரை ஃபேக்ஸ்ல அனுப்பினாப்ல இருக்கு. சி.எம்.செக்ரட்டரி ஒருத்தர் அது மேலயே எனக்கு நோட் போட்டு அனுப்பினார். சி.எம் முன் வைக்க உங்க ப்ரப்போசலை அனுப்புங்க இதான் சாரம். உடனே அனுப்பினேன். இது நடந்தது 2002, ஆகஸ்ட் மாசம்
இதனால எனக்கோ , நம்ம திட்டத்துக்கோ ஒரு மயிரும் பேரலை. ஆனா பாபு மட்டும் செப்டம்பர் மாசம் 1 ஆம் தேதி கட்சி ஆண்டு விழால " கங்கை காவிரி இணைப்பாலதான் நாடு செழிக்கும்"னு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டாரு. அவரு அரசியலுக்கு வந்து எந்த நாளும் கங்கை காவிரி இணைப்பை பத்தி பேசினவரில்லே. மொத்தத்துல ஆ.இ திட்டத்துல இருந்து ஒரு பாயிண்டை எடுத்து விட்டு பேர் வாங்கிர பார்த்தார்.நானு வயிறெரிஞ்சு செத்தேன். மத்த படி நம்ம ப்ளான் விஷயாத்துல ஒரு ல..டா முன்னேற்றமும் இல்லை . இது நடந்தது 2002 ,செப்டம்பர் மாசம்.
மறு வருசம் ஏப்ரல் 22 ஆம் தேதி சி.எம்.க்கு என்னாது சீஃப் மினிஸ்டருக்கு பத்து ரூபா எம்.ஓ அனுப்பினேன்.
அப்பல்லாம் பாபு அரசாங்கம் மக்களுக்கு எதையும் / குடி நீர் ,மருத்துவ வசதி உள்பட இலவசமா தரக்கூடாதுன்னு ஓதிக்கிட்டிருந்தார்.
யப்பா நீ தான் இலவசமா ஒன்னுமே செய்ய மாட்டியே இந்தா மாரி உங்க செக்ரடரி ஆத்தரைஸ்டா கேட்டாருன்னு ப்ளான் ஒன்னு அனுப்பினேன் அதுக்கு பதில் போட யூஸர் சார்ஜ் எதுனா கட்ட வேண்டியது இருந்தா இந்த ரூபாய வாங்கிக்க பதில் போடுன்னு சொல்லியிருந்தேன். எம்.ஓ டெலிவரி ஆயிருச்சு. அக்னாலட்ஜ்மென்ட் வரலை. நான் உஷாரா போஸ்டல் டிப்பார்ட்மென்ட்லருந்து பேமெண்ட் ரெசிட் வாங்கி வச்சுக்கிட்டேன். சி.எம். ஆஃபீஸ் சிண்டு என் கைல வந்தது. அதை முதல்ல அந்த காலத்து எதிர்கட்சி தலைவர் ஒய்.எஸ் .ஆருக்கு தான் கோர்த்துவிட்டேன். ஆனால் காங்கிரஸ் அப்போ அவர் சாதாரண கதர் சட்டைதான். ( அவரு மானிலம் முழுக்க பாதயாத்திரை ஸ்டார்ட் பண்ண பிறகுதான் பல சக்தி வாய்ந்த ஆத்மாக்கள் அவருக்குள் பிரவேசமாகி தூக்கிருச்சுங்க)
மாவட்ட நுகர்வோர் மன்றத்துக்கு புகார் ஒன்னு தட்டி விட்டேன். நேர்ல கூப்டு அதை எப்படி எழுதனும், எத்தனை காப்பி தரனும்னெல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. செய்தேன். கேஸ் போட்டு ஜெயிச்சு என்னத்த கிழிக்க. நம்ம திட்டம் மானிலம் முழுக்க பேசப்படனும் அதானே நம்ம நோக்கம். உடனே தெலுங்கு தினசரிகளுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்தேன். வார்த்தா காரன் மெயின் எடிஷன்ல தூக்கி தட்டிட்டான். இந்த செய்தி எல்லா பதிப்புலயும் வந்து நாறிப்போச்சு.
2003 ஏப்ரல் மாசம் சி.எம்.ஆஃபீஸ்ல இருந்து நமக்கு ஒரு லெட்டர் வந்தது. அத கூட செக்ரட்டரி தான் அனுப்பியிருந்தார். சி.எம். ஐ மேற்கோள் காட்டி " தங்கள் யோசனைகளை உரியவிதத்தில் உபயோகித்துக்கொள்கிறோம். தட்ஸால்.
நமக்கு அப்பவே தெரியும் சந்திரபாபு டுபாகூர் பார்ட்டின்னு. ஆனால் நாடு அந்தாளை பெரிய சீர்திருத்தவாதியா கொண்டாடிக்கிட்டிருந்தது. அந்த நேரத்துல ச்சும்மா சீன் போடவாவது என்ன கூப்டு பெசி ஆ.இ.பத்தி ஒரு சின்ன ஸ்டேட்மெண்ட் கொடுத்திருந்தா கூட இப்ப சொல்லிக்க அந்த ஒரு விஷயமாவது இருந்திருக்கும்.
இப்ப பாருங்க கண்டமேனிக்கு கட்சிகளை சேர்த்து மஹா கூட்டமி வச்சும் புட்டுக்குச்சு. தெலுங்கானா விஷயம் பத்தி எரியுது. வாயை திறக்க முடியல. தெலுங்கானா வேணம்னா இந்தபக்கம் கந்தலாயிரும். ஒன்றுபட்ட ஆந்திரா தொடரனும்னு சொன்னா அந்த பக்கம் நாறிடும்.
என்ன ஒரு சோகம்னா ஒரு என்.டி.ஆர்.ஒரு ஒய்.எஸ்.ஆருக்கு அப்புறம் எல்லா பகுதிக்கும் சேர்த்து ரெப்ரசன்ட் பண்ணீ பேச ஒரு தலைவனில்லாம போயிட்டான் ஆந்திரால.
ஜகன் என்னமோ கோல்டன் தெலுங்கானான்னு ஒரு ஸ்லோகன் விட்டாரு.. ஆனால் அதை கண்டுக்கற நாயே காணோம். இதான் தலை.. சி.எம்முக்கு நான் பத்து ரூபா எம்.ஓ அனுப்பின கதை. இதுக்குண்டான ஆதாரங்களையும் இதே பதிவுல போஸ்ட் பண்ணியிருக்கேன்.
இத்தனை நாள் பலான ஜோக், பலான சமாச்சாரம்லாம் எழுதி நாறடிச்சது பத்து பேர் கூடுதலா இந்த விஷயத்தை படிக்கனும்னுதான். முடிஞ்ச வரை இந்த பதிவை ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரி சோஷியல் நெட்வொர்க்ஸ்ல ஷேர் பண்ணிக்கங்க.. உங்க கருத்தை தெரிவிங்க.
ஓகே ஜூட்
Friday, October 23, 2009
சோனியாவின் மறுமணம்
சோனியாவின் மறுமணம்
மகாராஷ்டிரா, அருணாசல பிரதேஷ், ஹரியானா மானிலங்களில் காங். வெற்றியை சோனியாவின் வெற்றியாக வருணிக்கும் நிலை இருக்கிறது. "அது அந்த காலம்" ஆம் அந்த காலத்தில் மனிதர்களில் ஈகோ குறைவு. மக்கள் கூட்டத்துக்கு சிறிதேனும் நன்மை செய்ய எவர் முன் வந்தாலும் மக்கள் அவர்களை அப்படியே உபாசிப்பது வழக்கம். இது காந்தி,நேரு,இந்திரா ஏன் ராஜீவ் காலம் வரை சரியாக இருக்கலாம். சோனியாவுக்கு "அவ்ள சீன் இல்லே கண்ணா" . சமீபத்தில் தேர்தல் நடந்த மானிலங்களில் எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்ததால் தான் காங்.வெற்றி பெற்றிருக்கிறதே தவிர ஒரு இழவுமில்லை. அங்கு வெற்றி பெற்ற எம்.எல்.ஏவுக்கு எத்தனை ஓட்டு, கட்சிக்கு எத்தனை ஓட்டு, அதுல சோனியாவுக்கு எத்தனை ஓட்டு என்ற விஷயமெல்லாம் யாருக்கு தெரியும். இதற்கு தான் நான் 1986 முதலே நேரிடை ஜன நாயகம் அமலாகவேண்டும் என்று கோரி வருகிறேன். கு.ப. விகிதாச்சார பிரதி நிதித்துவமாவது வரவேண்டும்.
ஒரு குடும்பத்தில் பெண்கள் அதிகமாக கஷ்டப்பட அக்குடும்பத்து முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு செய்த துரோகமே காரணம். இதை ஜோதிட ரீதியாய் வெகு சுலபமாக நிரூபிக்க முடியும். கொய்யாமரத்துக்கு கொய்யாவே காய்க்கும். ஒரு வமிசாவழி கூட மரம் போன்றதே. சமஸ்கிருதத்தில் இதை வம்ச விருட்சம்(மரம்) என்றுதான் சொல்வார்கள். இப்படி பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படியாக வாழ்ந்த ஆண்களை கொண்ட வம்சத்தில் ஆண் வாரிசு இல்லாது போகும். காதல் திருமணங்கள் நடைபெறும். ஆண்களுக்கு அகால துர்மரணங்கள் சம்பவிக்கும். பெண்கள் இளவயதில் விதவையாவார்கள். நேரு குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நேரு அப்படியும் இப்படியுமாக வாழ்ந்தவர். அந்த காலத்தில் லேடி மவுண்ட் பேட்டனுக்கே ரூட் போட்டவர் என்று பேச்சு உண்டு. அவர் செய்த பாவம் அவருக்கு ஆண் வாரிசின்றி போனது. இந்திரா காதல் திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் ,ராஜீவ் காதல் திருமணம் செய்து கொண்ட் அகால+ துர் மரணமடைந்தனர். மேனகா, சோனியா சிறுவயதிலேயே விதவையானார்கள்.
ஒரு குடும்பத்து முன்னோர் (ஆண்கள்) பெண்ணினத்துக்கு துரோகம் செய்திருந்தால் அந்த குடும்பத்தில் பிறக்கும் ஆண், பெண்கள் , அக்குடும்பத்தில் வாழ்க்கைப்படும் பெண்கள் (மருமகள்கள்) ஜாதகங்களில் எல்லாம் சுக்கிரன் பலவீனப்படுதல், ஏழாமிடம் கெட்டிருத்தலை காணலாம். தற்போது ராகுல் காந்தி கூட காதல் திருமணமே செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
மாதா,பிதா செய்தது மக்களுக்கு. இதை சுக்கிர சாபம் என்பார்கள். இதற்கு பரிகாரமாகத்தான் ஏழை சோடிகளுக்கு திருமணம் சுமங்கலி பூஜை இத்யாதி
செய்யப்படுகின்றன.
டாக்டர் ஒய்.எஸ்.ஆர் விஷயத்தில் எடுத்துக்கொண்டால் அவரது தந்தை ஃபேக்ஷனிஸ்ட் என்று பெயர் எடுத்திருக்கலாம், அசைண்ட் பூமிகளை (அரசு எஸ்.சி.எஸ்.டி.க்கு ஒதுக்கிய நிலங்களை )பறித்திருக்கலாம். (அவற்றை கூட ஒய்.எஸ்.ஆர் தாம் முதல்வராக இருந்த போது அரசுக்கு ஒப்படைத்துவிட்டார். ) ஆனால் பெண்கள் விஷயத்தில் ஒய்.எஸ்.ஆரின் தந்தையாகட்டும், ஒய்.எஸ்.ஆராகட்டும் எவ்வித புகாருக்கும் கூட ஆளானதில்லை. இன்னும் சொல்லப்போனால் தமது ஆதரவாளர் இந்திரா ரெட்டி மறைவுக்கு பிறகு ஒய்.எஸ். ஆர் அவரது மனைவியான சபீதா இந்திரா ரெட்டியை " சேவிள்ள செல்லெம்மா" ( சேவிள்ளாவில் உள்ள தங்கை என்று பொருள்) என்று பாசம் காட்டினார். எந்த புது திட்டமானாலும் சபீதாவின் சேவிள்ளாவில் தான் அறிவிப்பது வழக்கம். தமது இரண்டாவது இன்னிங்ஸில் சபீதாவுவை உள்துறை மந்திரியாக்கி அழகு பார்த்தார். அதனால் தான் 60 வயது வரை நிறைவான வாழ்வை வாழ்ந்தார் ஒய்.எஸ்.ஆர். ( 2009 ஜூலை எட்டாம் தேதி சஷ்டியப்த பூர்த்தி/ செப்டம்பர் 2 ஆம் தேதிதான் ஏர் கிராஷ்)
சோனியாவின் கல் நெஞ்சம்:
ஆனால் பாவ மூட்டையை சுமக்கு நேரு வமிசத்தில் வாழ்க்கைப்பட்ட சோனியாவோ செய்த பூர்வ ஜென்ம கருமங்களை தொலைக்கும் எண்ணம் சிறிதும் இன்றி மேலும் மேலும் பாவங்களை மூட்டை கட்டிவருகிறார்.
ஆந்திராவில் காங். நிலை :
மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர் தமது 33 ஆவது வயதில் காங்கிரஸ் மானிலக்கட்சி தலைவரான நாள் முதலாக கட்சிக்காக நாயாய் உழைத்தார். என்.டி.ஆர் வருகைக்கு முன் ஏதோ நகராட்சி பள்ளிக்கணக்காகவேனும் இருந்த மானில காங்.கட்சி இந்திரா தொடர்ந்து மானில முதவர்களை அதிரடியாய் மாற்றியதில் நாறிப்போனது. என்.டி.ஆர். முன்னெடுத்த சுயமரியாதை உணர்வு மக்கள் மனதில் ஊறிப்போனது. என்.டி.ஆர் மறைவுக்கு பின்னும் சந்திரபாபு 9 வருடங்கள் தூள் கிளப்பினார். அப்போதெல்லாம் வேலை செய்யாத சோனியா ஃபேக்டர் இப்போ மேற்படி 3 மானிலங்களில் மட்டும் வேலை செய்தது என்று சொன்னால் நம்ப நாங்கள் என்ன கேணையர்களா ?
ஆந்திராவில் 2004 தேர்தல்களில் காங். வென்றதையாவது கூட்டணி பலத்தால் வென்றதென்று கூறிவிடலாம். ஆனால் 2004 தேர்தல்களுடன் ஒப்பிடும்போது 2009 தேர்தல்களில் தெலிங்கானா ராஷ்டிர சமிதி கூட்டணியில் இல்லை. இதற்கு காரணம் தெலிங்கானா அம்சத்தை காங்.மேலிடம் ஊறப்போட்டதுதான். அணு ஒப்பந்தம் விவகாரம் காரணாமாய் ,கம்யூனிஸ்ட்கள் விலகினர். ஒய்.எஸ்.ஆர் சக்கிலியருக்கு
வாக்களித்த உள் ஒதுக்கீட்டு முறையை மத்திய அரசு கண்டு கொள்ளாததால்
சக்கிலியர் அமைப்பு விலகியது. மானில கட்சியில் இருந்த கிழவாடிகள் சோனியா
நேரு குடும்ப ஜெபத்தில் காட்டிய ஆர்வத்தில் 1 சதவீதத்தை கூட தேர்தல் பிரச்சாரத்தில் காட்டவில்லை.
1% வித்யாசம்:
2009 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெறுமனே 1% வாக்கு வித்யாசத்தில் தான் கரையேறியது. ஆந்திர ப்ரிண்ட் மீடியா , சில விஷுவல் மீடியாக்கள் மானில அரசை டார்கெட் செய்து கிழி கிழி என்று கிழித்தபோது , நேரடி அரசியலுக்கு வராத குறையாய் தமது பத்திரிக்கைகளை துண்டு பிரசுரம் ரேஞ்சுக்கு மாற்றி துஷ் பிரச்சாரம் செய்த போது கட்சிக்கு துணை நின்றது ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜகன் மோகன் ரெட்டிதான்.
சாட்சி -நாளிதழ்,டிவி:
ஆம் சாட்சி நாளிதழ் மற்றும் சாட்சி டி.வி. துவங்கி சந்திரபாபுவின் கடந்த காலத்தை கிழி கிழி என்று கிழித்ததால் தான் காங்கிரஸ் கரையேறியது. தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் தாமாய் திரண்டு வந்த காலமெல்லாம் போயே போச். சோனியா ஒரு மாவட்டத்துக்கு பிரச்சார நிமித்தம் வருகிறார் என்றால் பக்கத்து மாவட்டங்கள் நான்கிலாவது எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இவர் கூட்டத்துக்கு ஆட்களை ஓட்டி வரவேண்டும். சரி இதெல்லாம் ஒழியட்டும். எப்படியோ கட்சி வென்றது. ஒய்.எஸ்.ஆர் முதல்வரானார். அகாலமாய் மரணமடைந்தார். தற்காலிக முதல்வராக ரோசய்யாவை போட்டார்கள்.
இந்த ரோசய்யா தம் தொகுதியில் இன்றுள்ள நிலையில் மேயராகவோ, நகராட்சி சேர்மனாகவோ கூட ஜெயிக்க முடியாது. இவர் நிர்வாகத்தில்புலி என்று கூறுகிறார்கள்.
ஒரு முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மாயமாய் மறைந்துவிட்டது. இந்த மனிதர் என்ன செய்தார் தெரியுமா ? காலை 9.45 முதல் மதியம் 3.30 வரை புல் பிடுங்கிக்கொண்டிருந்து விட்டு 3.45 க்கு அறிவிக்கிறார். வனப்பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் காட்டுக்கு போய் தேடனுமாம். ஹெலிகாப்டர்கள் வர தாமதமாகுமாம். இருட்டிட்டா தேட முடியாதாம். ஏதோ ஒய்.எஸ்.அமல் செய்த நல திட்டங்களால் கிடைத்த புண்ணியம் ஒரு கதறல், ஒரு கூக்குரல் ஏதுமின்றி ஒரு கணத்தில் உயிரிழந்துவிட்டார் ஒய்.எஸ். ஒருவேளை அந்த பாவுரால குட்ட மலை மீது குற்றுயிராய் இருந்திருந்தால் என்ன கதி. ஒரு முதல்வரையே காப்பாற்ற முடியாத கிழவாடியை முதல்வராக்கி அழகு பார்த்தார் சோனியா.
செப்டம்பர் 2 ஆம் தேதி அரசு இயந்திரத்தின் டெலிவரி சிஸ்டத்தை அதன் செயல் திறனை சுயமாய் பரிசோதிக்க ரச்சபண்டா என்ற நிகழ்ச்சியை அறிவித்தார்
அதில கலந்துகொள்ள சென்ற போதுதான் ஏர் கிராஷில் ஒய்.எஸ். இறந்தார்.
அவர் உட்கார்ந்த அதே நாற்காலியை பிடித்து தொங்க விரும்பும் ஆசாமி இதுவரை மேற்படி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது குறித்தோ , அதில் கலந்து கொள்வது குறித்தோ நாளிதுவரை ஒரு சொல்லில்லை.( பல்லில்லை).
ஒய்.எஸ்.ஆருக்கு பிறகு ஜகனை முதல்வராக்க வேண்டும் என்று 128 எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தும் காங்கிரஸ் ஏதோ பெரிய ஜன நாயக அமைப்பு போலும் வாரிசுஅரசியலின் வாசனையே அலர்ஜி போலும் ஆன பில்டப் எல்லாம் கொடுத்தார் சோனியா. நேற்று அதாவது ஏறக்குறைய 50 நாட்கள்க்கு பிறகு ஜகனுக்கு அழைப்பு விடுத்த சோனியா எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்றாராம். ஜகனும் மேலிடக்கட்டளையை ஏற்று செயல்படுவேன் என்று கூறியிருக்கிறார்.
பெண்களின் மொழி போல் அரசியல் மொழிக்கு அர்த்தங்கள் வேறு . இன்றோ நாளையோ ஜகன் சீறியெழப்போவது நிச்சயம். தில்லி நவாபுகளுக்கு தக்க ஜவாபு (பதிலடி) கொடுக்கப்போவது நிச்சயம்.
பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். தனக்கு உரிமையுள்ளதை அடுத்தவன் அனுபவித்தால் எப்படியிருக்கும் என்பது சோனியாவுக்கு தெரியும். நரசிம்மராவும், அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும் இதை காட்டினார்கள். அன்று நரசிம்மராவ்/ இன்று ரோசய்யா ! அங்கே சோனியா ! இங்கே ஜகன் ! இதுதான் வித்யாசம்.
பெண் என்பவள் அன்பு மயமானவள். ஆனால் அதை அந்த அன்பை புடம் போடுவது குடும்பம் என்ற அமைப்பு. அகாலமாய் கணவனை இழந்த சோனியாவுக்கு தெரியாதா ஒய்.எஸ்.ஆரை இழந்த திருமதி விஜயலட்சுமி ராஜ சேகரரெட்டியின் மன நிலை?. அகாலமாய் ராஜீவை இழந்த ராகுலுக்கு தெரியாதா ஜகனின் நிலை ?
பாவம் சோனியாவின் இழப்பு பழையதாகிவிட்டது போலும். மேடம் இழப்பின் கொடுமை லேட்டஸ்டா தெரியன்ம்னா சோனியாவின் மறுமணம் + மற்றொரு மனித வெடிகுண்டு சம்பவம்தான் தீர்வோ என்னவோ ?
Saturday, September 5, 2009
ஒய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன்
ஒய்.எஸ்.ஆரை கொன்ற சென்னை ஏவியேஷன்
ரகு நந்தன் என்ற பதிவர் ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தர்ம நியாயங்கள் செத்துப்போகவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அது மரணமாக இருந்தால் பரவாயில்லை. ஒரு வகையில் சென்னை ஏவியேஷன் காரர்கள் கொலை செய்துள்ளார்கள்
Now you can see the openions of Sri Ragunandan and my clearification :
//ஆனால் எனது கேள்வி எல்லாம் ஹெலிகொப்ரர் வெடித்தது ஒரு மெக்கானிக் கையில் இருக்கும் போது, அதுவும் இந்த ஹெலிகொப்ரரின் நிலை மோசமானது என ஆரம்பத்தில் அறிக்கையே வந்தது, தர்மத்தின் கையில் பழிபோடுகிறீர்கள்.//
ஐயா !
நீங்கள் நக்கீரன் பரபரப்புக்காக வெளியிட்ட இணைய செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த பாயிண்டை சொல்கிறீர்கள். உண்மை நிலை வேறு. நக்கீரன் செய்தி டுபாக்கூர் செய்தி.
வேண்டுமானால் சேட்டிலைட் போனை வைத்துக்கொள்ள செய்யாததை வேண்டுமானால் மனித தவறாக கூறலாம். பாவம் பைலட் சென்னை ஏவியேஷனை தொடர்பு கொண்டு ஐயா நாலாபுறமும் மேகம் சூழ்ந்திருக்கிறது நான் 1,500 மீட்டர் உயரத்தில் பறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த உயரத்தில் விமானங்கள் தான் பறக்கலாமாம். சாதாரணமாக ஹெலிகாப்டர்கள் 500 மீட்டர் உயரத்தில் தான் பறக்க வேண்டுமாம். சென்னை ஏவியேஷன் அதிகாரிகள் ரெஸ்பாண்ட் ஆகாததை அடுத்து அவர் வடக்கு/தெற்கு திசைகளை ( ஐதராபாத் திரும்ப வேண்டுமானாலும்/ சித்தூர் நோக்கி வரவேண்டுமானாலும் இந்த திசைகளில் தான் பயணித்திருக்க வேண்டுமாம் விட்டு கிழக்காக திருப்பியுள்ளார்.
மேலும் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு பணிவானவர்கள் என்றால் வானிலை,பாதுகாப்பு விஷயங்களில் கூட தலைவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டார்கள். சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர் என்றால் அவரை நியமித்தது அரசு. அரசு என்றால் மக்கள். அவர் சம்பளம் வாங்குவது மக்களின் வரிப்பணத்தில்.அவர் பணி தம்மிடம் ஒப்படைத்த தலைவரின் உயிரை காப்பாற்றுவது. வானிலை சரியில்லை என்றால் பிரயாணம் கூடாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூற வேண்டும். இந்த கோயான் கள் தலை சொறியத்தான் லாயக்கு.
நான் பைலட்டாகயிருந்தால் வானிலை சரியில்லாத போது பயணம் செய்யவேண்டும் என்று ஒரு தலைவர் கூறியிருந்தால் ஹெலிகாப்டர் சாவியை வீசியெறிந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டிருப்பேன்.
அல்லது நானே சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசராக இருந்திருந்தால் துப்பாக்கி முனையிலாவது கேம்ப் ஆஃபீசிற்கோ, தலைமை செயலகத்துக்கோ கொண்டு சேர்த்திருப்பேன்.
இந்த டுபாகூர்களின் ஜால்ரா தனத்தால் ஒரு பெட்டர் சாய்ஸை மக்கள் இழந்து விட்டனர்.// ஆனால் அதே ஹெலிகொப்ரர்கள் குண்டு வீச்சு விமானங்கள், ராடார்கள் அப்பாவித் தமிழர் (ஒரே நாளில் 20,000) தலையில் குண்டு போட்டபோது மட்டும் ஏன் தர்ம நியாயம்ம் பற்றி சிந்திக்கவில்லை. அதுவும் ‘புண்ணிய பூமி’ இந்தியா கொடுத்த கெலிகொப்டர், ராடார்கள் மிக நன்றாக வேலை செய்ததே!!!!//
அது நம் தமிழினத்தின் தலையெழுத்து. தமிழினத்தலைவர்கள் தொடை நடுங்கிகளாக, பதவி பிரியர்களாக, சுய நல பிசாசுகளாக இருக்கும் வரை கெலிகாப்டர்கள் என்ன துடைப்ப குச்சிகள் கூட குறி தவறாது பாய்ந்து தமிழனை கொல்லும்
//(துச்சமாக பேசுவது அசிங்கமா?//
நீங்கள் இரண்டு விஷயங்களையும் போட்டு குழம்பி/குழப்புகிறீர்கள். ஒய்.எஸ்.ஆரின் இழப்பு அதன் தீவிரம் பாதிக்கவிருப்பது முதற்கண் எங்களை (ஆந்திரம் வாழ் தமிழர்கள் )
ஏதோ வயிற்றெரிச்சலை சற்றே ஆற வைக்க ஒரு அவுட் லெட்டுக்காக தான் மேற்படி பதிவை எழுதினேன். பதிவிலான விஷயம் மனித அடிப்படையிலானது. அதில் ஈழத்தமிழர்கள் விசயத்தை ப்ரஸ்தாபிக்கலாம் . ஆனால் போகிறபோக்கில் இதுக்கு என்ன சொல்றிங்க என்று வினவியிருக்கலாம்.
மரணம் என்பது இழப்புதான். அது ஒரு தலைவரின் மரணமானாலும் சரி ஒரு சாமானியனின் மரணமானாலும் சரி. மரணத்திலோ , மரணம் ஏற்படுத்தும் இழப்பிலோ பேதமில்லை. இல்லை. இல்லவே இல்லை.
//. இந்தியாவில் எனக்கு வாக்குரிமை இல்லைங்க)//
அய்யா தனிமரம் தோப்பாகாது. உங்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை இருந்திருந்தால் காங். திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே போட்டிருப்பீர்கள் இல்லை என்று கூறவில்லை. மற்றவர்கள் நிலை என்ன ? கோழி பிரியாணி, சில்லறை, சாராயம் தானே வேலை செய்தது
//அதுமட்டுமல்ல 25 நாடுகள் கொண்டுவந்த ஐ.நா மனித உரிமை விசாரனையை, கியூபா, சீனா, லிபியா போன்ற புண்ணிய பூமிகளுடன் கைகோர்த்து கவிழ்த்து ஸ்ரீலங்காவை பாராட்டும்படி முடிவைக் கொண்டுவந்ததை என்ன வகையில் சொல்லாம்?//
கடைந்தெடுத்த கயவாளித்தனம் எனலாம்.
இதற்குத்தான் நான் ஆரம்பம் முதலே பாராளுமன்ற ஜன நாயக முறையை எதிர்த்து வருகிறேன். ஜனாதிபதி ஜன நாயகம் அமலுக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு இது போன்ற கேணத்தனமான முடிவுகளை எடுக்கவேண்டிய தலை எழுத்து இராது என்பது என் கருத்து.
ரகு நந்தன் என்ற பதிவர் ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மரணத்தால் தர்ம நியாயங்கள் செத்துப்போகவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். அது மரணமாக இருந்தால் பரவாயில்லை. ஒரு வகையில் சென்னை ஏவியேஷன் காரர்கள் கொலை செய்துள்ளார்கள்
Now you can see the openions of Sri Ragunandan and my clearification :
//ஆனால் எனது கேள்வி எல்லாம் ஹெலிகொப்ரர் வெடித்தது ஒரு மெக்கானிக் கையில் இருக்கும் போது, அதுவும் இந்த ஹெலிகொப்ரரின் நிலை மோசமானது என ஆரம்பத்தில் அறிக்கையே வந்தது, தர்மத்தின் கையில் பழிபோடுகிறீர்கள்.//
ஐயா !
நீங்கள் நக்கீரன் பரபரப்புக்காக வெளியிட்ட இணைய செய்தியை அடிப்படையாக கொண்டு இந்த பாயிண்டை சொல்கிறீர்கள். உண்மை நிலை வேறு. நக்கீரன் செய்தி டுபாக்கூர் செய்தி.
வேண்டுமானால் சேட்டிலைட் போனை வைத்துக்கொள்ள செய்யாததை வேண்டுமானால் மனித தவறாக கூறலாம். பாவம் பைலட் சென்னை ஏவியேஷனை தொடர்பு கொண்டு ஐயா நாலாபுறமும் மேகம் சூழ்ந்திருக்கிறது நான் 1,500 மீட்டர் உயரத்தில் பறக்க அனுமதி கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இந்த உயரத்தில் விமானங்கள் தான் பறக்கலாமாம். சாதாரணமாக ஹெலிகாப்டர்கள் 500 மீட்டர் உயரத்தில் தான் பறக்க வேண்டுமாம். சென்னை ஏவியேஷன் அதிகாரிகள் ரெஸ்பாண்ட் ஆகாததை அடுத்து அவர் வடக்கு/தெற்கு திசைகளை ( ஐதராபாத் திரும்ப வேண்டுமானாலும்/ சித்தூர் நோக்கி வரவேண்டுமானாலும் இந்த திசைகளில் தான் பயணித்திருக்க வேண்டுமாம் விட்டு கிழக்காக திருப்பியுள்ளார்.
மேலும் நமது அதிகாரிகள் எந்த அளவுக்கு பணிவானவர்கள் என்றால் வானிலை,பாதுகாப்பு விஷயங்களில் கூட தலைவர்களின் பேச்சுக்கு மறு பேச்சு பேசமாட்டார்கள். சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசர் என்றால் அவரை நியமித்தது அரசு. அரசு என்றால் மக்கள். அவர் சம்பளம் வாங்குவது மக்களின் வரிப்பணத்தில்.அவர் பணி தம்மிடம் ஒப்படைத்த தலைவரின் உயிரை காப்பாற்றுவது. வானிலை சரியில்லை என்றால் பிரயாணம் கூடாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாய் கூற வேண்டும். இந்த கோயான் கள் தலை சொறியத்தான் லாயக்கு.
நான் பைலட்டாகயிருந்தால் வானிலை சரியில்லாத போது பயணம் செய்யவேண்டும் என்று ஒரு தலைவர் கூறியிருந்தால் ஹெலிகாப்டர் சாவியை வீசியெறிந்து விட்டு வீட்டுக்கு வந்து விட்டிருப்பேன்.
அல்லது நானே சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசராக இருந்திருந்தால் துப்பாக்கி முனையிலாவது கேம்ப் ஆஃபீசிற்கோ, தலைமை செயலகத்துக்கோ கொண்டு சேர்த்திருப்பேன்.
இந்த டுபாகூர்களின் ஜால்ரா தனத்தால் ஒரு பெட்டர் சாய்ஸை மக்கள் இழந்து விட்டனர்.// ஆனால் அதே ஹெலிகொப்ரர்கள் குண்டு வீச்சு விமானங்கள், ராடார்கள் அப்பாவித் தமிழர் (ஒரே நாளில் 20,000) தலையில் குண்டு போட்டபோது மட்டும் ஏன் தர்ம நியாயம்ம் பற்றி சிந்திக்கவில்லை. அதுவும் ‘புண்ணிய பூமி’ இந்தியா கொடுத்த கெலிகொப்டர், ராடார்கள் மிக நன்றாக வேலை செய்ததே!!!!//
அது நம் தமிழினத்தின் தலையெழுத்து. தமிழினத்தலைவர்கள் தொடை நடுங்கிகளாக, பதவி பிரியர்களாக, சுய நல பிசாசுகளாக இருக்கும் வரை கெலிகாப்டர்கள் என்ன துடைப்ப குச்சிகள் கூட குறி தவறாது பாய்ந்து தமிழனை கொல்லும்
//(துச்சமாக பேசுவது அசிங்கமா?//
நீங்கள் இரண்டு விஷயங்களையும் போட்டு குழம்பி/குழப்புகிறீர்கள். ஒய்.எஸ்.ஆரின் இழப்பு அதன் தீவிரம் பாதிக்கவிருப்பது முதற்கண் எங்களை (ஆந்திரம் வாழ் தமிழர்கள் )
ஏதோ வயிற்றெரிச்சலை சற்றே ஆற வைக்க ஒரு அவுட் லெட்டுக்காக தான் மேற்படி பதிவை எழுதினேன். பதிவிலான விஷயம் மனித அடிப்படையிலானது. அதில் ஈழத்தமிழர்கள் விசயத்தை ப்ரஸ்தாபிக்கலாம் . ஆனால் போகிறபோக்கில் இதுக்கு என்ன சொல்றிங்க என்று வினவியிருக்கலாம்.
மரணம் என்பது இழப்புதான். அது ஒரு தலைவரின் மரணமானாலும் சரி ஒரு சாமானியனின் மரணமானாலும் சரி. மரணத்திலோ , மரணம் ஏற்படுத்தும் இழப்பிலோ பேதமில்லை. இல்லை. இல்லவே இல்லை.
//. இந்தியாவில் எனக்கு வாக்குரிமை இல்லைங்க)//
அய்யா தனிமரம் தோப்பாகாது. உங்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை இருந்திருந்தால் காங். திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே போட்டிருப்பீர்கள் இல்லை என்று கூறவில்லை. மற்றவர்கள் நிலை என்ன ? கோழி பிரியாணி, சில்லறை, சாராயம் தானே வேலை செய்தது
//அதுமட்டுமல்ல 25 நாடுகள் கொண்டுவந்த ஐ.நா மனித உரிமை விசாரனையை, கியூபா, சீனா, லிபியா போன்ற புண்ணிய பூமிகளுடன் கைகோர்த்து கவிழ்த்து ஸ்ரீலங்காவை பாராட்டும்படி முடிவைக் கொண்டுவந்ததை என்ன வகையில் சொல்லாம்?//
கடைந்தெடுத்த கயவாளித்தனம் எனலாம்.
இதற்குத்தான் நான் ஆரம்பம் முதலே பாராளுமன்ற ஜன நாயக முறையை எதிர்த்து வருகிறேன். ஜனாதிபதி ஜன நாயகம் அமலுக்கு வரவேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறேன். மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் தலைவனுக்கு இது போன்ற கேணத்தனமான முடிவுகளை எடுக்கவேண்டிய தலை எழுத்து இராது என்பது என் கருத்து.
Subscribe to:
Posts (Atom)