Wednesday, September 8, 2010

டிரிங்கிங் வாட்டர் ஃப்ரம் அலாஸ்கா

அல்லாருக்கும் ஒரு குட் நியூஸுப்பா !
ஆமாண்ணே .. விஞ்ஞான பூர்வமா சொன்னா  ஹெச் டூ ஓ ஃப்ரம் அமெரிக்கா .
அலாஸ்கா நாட்லருந்து துருவப்பனிய உருக்கி அமெரிக்க கம்பெனிங்க  நம்ம நாட்டுக்கு தண்ணி சப்ளை பண்ணப்போகுதாம். அலாஸ்காலருந்து எங்கன இருந்து அலாஸ்காலருந்து இந்தியாவுக்கு பைப் லைன் போடப்போறாய்ங்களாம் பைப் லைனு.

தாளி நம்ம நாட்டுக்குள்ள ஓடி வீணா கடல்ல கலக்கிற நதிகளை திருப்பி இணைக்க சிறப்பு ராணுவம் அமைக்கனும்னா நான் மந்திரத்துல மாங்காய் வரவழைக்கிற பார்ட்டியாம்.

அலாஸ்காலருந்து தண்ணி வரும் நாக்கை தொங்க போட்டு காத்திருங்க. என்ன லிட்டர் 100 ரூவா விப்பாய்ங்க. அந்த ஏஜென்சிய வாங்க இங்கன அரசியல் வாதிங்க கூட்டி கொடுப்பாய்ங்க. விட்டு கொடுப்பாய்ங்க.

நல்லா பண்றாங்கய்யா வாதம்.

"ஆட்டோ ஒன்று தன் மொட்டை முகத்தை மறைத்துக்கொண்டு விளக்குப்பல்லை காட்டியபடி சென்றது"

இந்த வர்ணனையை எழுத இதே மாதிரி ஒரு உறங்காத  ராவுல   நகர்வலம் போய் வந்ததுண்டு. 

ஆஃப்டர் ஆல் மழை நேரத்துல ஒரு ஆட்டோ போறதை வர்ணிக்கவே ஃபீல்ட் ஸ்டடி தேவைப்பட்டுது. ஆனால் சனங்க இந்தியாவுல வறுமை இருக்கா இருந்தா நிரூபிச்சு காட்டுனு சூ காட்டறாய்ங்க.

இன்னைக்கு இந்த அரசியல்,சமூக,பொருளாதார அமைப்பு இப்படி இழவெடுக்க காரணமே சனத்தோட பிரமைதான். அந்த பிரமை தான் இப்படியெல்லாம் பேச வைக்குது.

சனத்துக்கு என்னென்னமோ பிரமைகள் இருக்கு. சாப்பிடலைன்னா செத்துருவம்.. ( நான் 12  நாள் சாப்பிடாம இருந்தேன்) தூங்கலைன்னா பைத்தியம் பிடிச்சுரும் ( வருஷ கணக்குல தூங்காத பார்ட்டியெல்லாம் உண்டுங்கோ)  இந்த பிரமைகளாலத்தான் ரோட்டுக்கு வர்ர தயங்கறாய்ங்க.போராட தயங்கறாய்ங்க.  அதனாலத்தான் இந்த அரசியல்,சமூக,பொருளாதார அமைப்பு இப்படி இழவெடுக்குது.

டிஸ்டில்ட் வாட்டர் தெரியுமில்லை. இஞ்செக்சன்ல சேர்த்து ஊசி போடுவாய்ங்க. அதுல கால் கழுவறதுன்னா என்ன தெரியுமா? அதையேதான் நாமும் செய்துக்கினு கிடக்கறோம்.

ஒரு மனித உடல் இன்னா மாதிரி அற்புதமான இயந்திரம் தெரியுமா?  பேப்பர் முனையை கிழிச்சு காது குடைஞ்சிக்கிட்டே பெண்டாட்டிக்கிட்ட பொய் சொல்ற அளவுக்கு சாலாக்கான இயந்திரம் ( இதெல்லாம் ரோபோவால முடியாதுன்னு சுஜாதாவே சொல்லியிருக்காருங்கோ)

ஆனா சனத்தை நாம எங்க விட்டிருக்கோம். குப்பை தொட்டிகள்ள. சாக்கடை ஓரங்கள்ள. நடைபாதைகள்ள. இந்தியா ஜொலிக்கிறதுன்னு பீலா உட்டானுங்கோ. அது உண்மையா இருந்திருந்தா வாஜ்பாயி இன்னைக்கும் கவிதை எழுதிக்கினு இருந்திருப்பாரு, மானம் கெட்ட தமிழ் பத்திரிக்கைங்க அதனோட மொழி பெயர்ப்பை வெளியிட்டுக்கிட்டிருந்திருக்கும்.

எனக்கு யாருடைய மனசையும் புண்படுத்தனுங்கற எண்ணம் கிடையாது. என்னோட இந்த ரியாக்சனை ஓவராக்சனுன்னு சொல்ல சனமிருக்கு தெரியும். இருந்தாலும் என் மனசுல உள்ளதை கொட்டித்தீர்த்துர்ரதுனு ஒரு முடிவுக்கு வந்துட்டன். 

இன்னைக்கு எவனும் எதையும் ஃபீல்டுல இறங்கி செய்யற மாதிரி இல்லே. எவனோ எதையோ செய்தா பார்க்கத்தான் தயாரா இருக்காய்ங்க. டிவி, கம்ப்யூட்டரோட இம்பாக்ட் இது.

கண் இடுங்கி போய், தொந்தி சரிஞ்சு, பிருஷ்டம் பெருத்து கை ,கால் எல்லாம் குச்சியா ஒரு தலை முறை உருவாயிட்டிருக்கு.

சாக்கடை அடைச்சுக்கிட்டா வீடு நாறும். மனசு அடைச்சிக்கிட்டா உடல் ,மனசு ரெண்டும் நாறிப்போயிரும். அதனாலதான் இன்னைக்கு சுட சுட ரிலீஸ். இங்கன பிரவிகிக்கிறது கங்கை வெள்ளம். இதுல எரிஞ்சும் எரியாத பிணங்கள் உட்பட சகலமும் வந்து விழும் சொல்ட்டேன்.

மானம் கெட்ட மன்சங்கதான் இன்னைக்கிருக்கிற அரசியல்,சமூக,பொருளாதார நிலையை அங்கீகரிப்பாய்ங்க.

ஆமாங்கண்ணா இந்த அரசியல்,சமூக,பொருளாதார அமைப்பு நான் மானத்தோட வாழறதை அனுமதிக்கலை. ஒவ்வொரு கணமும் என் தன்மானத்தை சீண்டி பார்க்குது. 

சந்திரபாபு ஒரு 9 வருஷம் விவசாயிலருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரி வரை வயித்தெறிச்சலை கொட்டிக்கினு  குண்டி கீழே க்ளைமோர் பாம் வெடிச்சு ரிட்டையர் ஆனாரு. அந்த இழவெடுத்த இருண்ட காலத்தை லாலி பாடி  மறக்கடிச்ச ஒய்.எஸ் பாடியை மூட்டை கட்டி ஹெலிகாப்டருக்கு இழுத்தானுங்கோ.

இன்னைக்கு சென்டர்ல மன்மோகனார் ஸ்டேட்ல  ரோசய்யா .  தாயகமாச்சேன்னு தமிழ் நாட்டுபக்கம் பார்த்தா  கலைஞர் எல்லாருமே சோனியாவோட பினாமிங்க. இவிக போக்கை பார்த்தா தெலுகு தல்லி, தமிழ்த்தாய், பாரதமாதா கையில எல்லாம்  ஆளுக்கொரு கப்பறைய  கொடுத்து ரோட்ல  வுட்டுர்ர மாதிரி கீதே கண்டி ஒன்னையும் கழட்டற மாதிரி காணோம்.

இன்னைக்கு இருக்கிற நிலைக்கேற்ப தன்னை மாத்திக்கிறவன் வியாபாரி.என் பார்வையில விபச்சாரி.  தன், தன்னவர் நிலைக்கேற்ப இன்னைக்கிருக்கிற அமைப்பை மாத்த முயற்சி பண்றவன் தான் தலைவன்.

உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு கமெண்ட் போட துடிக்காதிங்க . மேற்கொண்டு படிங்க.

பேசிக்கலி நமக்கு லீடர் ஷிப் க்வாலிட்டீஸ் எல்லாம் கிடையாது. என்னைக்குமே  நாம  நெம்பர் டூ தான். எவனாச்சும் டைனமிக் கேரக்டர் இருந்தா அவனுக்கு மதியூக மந்திரியா இருந்து பட்டி, சாணக்யன் கணக்கா ஸ்கெட்ச் போட்டு குடுக்கிற  நெம்பர் டூவா இருந்ததுதான் நம்ம சரித்திரம்.

விவரம் தெரிஞ்சு தலைவன்னு ஏத்துக்கிட்டது ஒரு என்.டி.ஆரைத்தான்.  இந்த பாயிண்டை வச்சு கிண்டலடிக்க ஒரு கூட்டமே இருக்கு. என்.டி.ஆரை பத்தி நிறையவே எழுதியிருக்கன். அதை படிச்சுட்டு விமர்சிச்சா சந்தோசப்படுவேன்.

என்.டி.ஆரும் போய் சேர்ந்துட்டாரு. அட என்.டி.ஆரோட க்வாலிட்டீஸ் நிறைஞ்ச ஒய்.எஸ்.ஆரை வச்சு காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன்.அவரும் போய் சேர்ந்துட்டாரு.
ஜகன் மோகன் ரெட்டி ஜாதகம் ஓகேதான். அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கும் தான். ஆனால் அவரோட வியூகம்,பேச்சு, நடவடிக்கை எதுவும் சொல்லிக்கிறாப்ல இல்லை.

சர்க்கஸ்ல பார் விளையாட்டின் போது பஃபூன்ஸ் கீழே அங்கே இங்கே சுத்திக்கிட்டு கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டிருப்பாய்ங்க. ஆனா நிறைய பேருக்கு தெரியாத மேட்டர் என்னடான்னா அவிக எக்ஸ்பீரியன்ஸ்ட் பார் விளையாட்டுக்காரவுக. திடீர்னு யாராச்சும் பொண்ணு தவறி விழுந்தா பந்தா பிடிச்சு காப்பாத்திருவாய்ங்க.

அந்த பஃபூனோட நிலைதான் என்னுதும்.

ஒரு நண்பர் தன் மனைவிக்கு வீசிங் பிரச்சினை இருக்கு அதை கொஞ்சம் விவரமா எழுதுங்கனு கேட்டிருந்தாரு.வீசிங் வர்ரதுக்கு  மிக முக்கியமான காரணம் மன அழுத்தம்.  1993ல வந்த வீசிங்கை விரட்டி அடிச்சாச்சு. அதுக்கான காரணங்களை ( அஜீரணம், கேஸ் ட்ரபுள், கூல் எஃபெக்ட், மசலா, தூசு, புகை, அலர்ஜி - இதுல ஃபிசிக்கல் சைக்கலாஜிக்கல்னு ரெண்டிருக்குங்கோ ) முடிஞ்ச வரை கிட்ட சேர்க்கிறதுல்ல. ஆனாலும் முந்தா  நேத்து வீசிங் மாட்டிக்கிச்சு. என்னடா மேட்டர்னா  இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டின திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ பத்தி கழுகு வலைச்சரத்துல ஒரு பதிவு வெளியாச்சு. அதைப்பத்தி தமிழமுதம் கூகுல் குழுமத்துல ஒரு சர்ச்சை நடந்துக்கிட்டே இருக்கு.

பராசக்தி காலத்துலயே கலைஞர் எழுதிட்டாரு " ஆண்டவன் கட்டளைக்கே காரணம் கேட்கிறார்கள்"  ஆப்பரேஷன் இந்தியா 2000 ஒன்னம் புனித நூலுமில்லை. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதுமில்லை. விமர்சிக்கலாம். உண்மையில நடந்தது என்னன்னா ஆப்பரேஷன் இந்தியா 2000  ஐ கிழிச்சு ஒரு தனிப்பதிவே போடும்படி  தனிக்காட்டு ராசாவை ரிக்வெஸ்ட் பண்ணேன். அவர்தான் கழுகு வலைச்சரத்தை பத்தி சொல்லி அதுல  பதிவை போடுங்க நிறைய பேரு கிழிப்பாய்ங்கன்னாரு ..போட்டாச்சு.

ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கா போன கதையா ஆ.இ 2000 பற்றிய விவாதம் தமிழ் அமுதத்துல போயிட்டிருக்கு. இந்தியாவின் ஏழ்மைய ஒழிக்கத்தான் இந்த திட்டம்னா இந்தியாவுல ஏழ்மை எங்கன இருக்கு காட்டுங்கறாய்ங்க.நான் எங்கன போயி முட்டிக்குவன்.

இந்தியாவுல வறுமை கோட்டுக்கு கீழே வாழற மக்களோட எண்ணிக்கையை கண்டறிய இது வரை மூணு கமிட்டி போட்டிருக்காய்ங்க. கமிட்டிகளும் அவை தெரிவித்த வ.கோ.கீ வசிக்கும் மக்கள் சதவீதமும் வருமாறு (விளக்குமாறு?)

சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி    - 38.4 சதவீதம்
என்.சி.சக்ஸேனா கமிட்டி          -  53 சதவீதம்
அர்ஜுன் சென் குப்தா கமிட்டி  -  60 சதவீதம்

( தகவல் : ஆனந்த விகடன்)

இதை சொன்னாலும் கமிட்டி கிடக்கு கமிட்டி வறுமை கோட்டுக்கு கீழ வசிக்கிறவுக நாலு பேரை காட்டுன்னு கேட்க ஆளிருக்கு. தூங்கறவுகளை எழுப்ப முடியும் தூங்கற மாதிரி நடிக்கிறவுகள ? ஊ ஹூம்.

வாதத்துக்கு மருந்துண்டு பிடிவாதத்துக்கு ? விதண்டா வாதத்துக்கு?  ஊஹூம் . இருந்தாலும் நம்ம ஸ்டைல்ல ட்ரை பண்ணி பார்க்கலாமேன்னு நப்பாசை.

 ஏழ்மையின் அளவுகோல் க்ரைம்.  உங்க ஊருக்கு வர்ர தினத்தந்தி பதிப்புல எந்தெந்த ஊர் டேட்லைன்ல கிரைம் செய்தி அதிகம்  வருது பாருங்க. அந்த ஊர்ல விவசாயம் ஒன்னுமத்து போயிருக்கும். ஃபேக்டரி எதுவும் இருக்காது, இருந்தா மூடியிருக்கும். அல்லது ஸ்ட்ரைக்ல இருக்கும். பத்து வட்டி ,மீட்டர் வட்டி தூள் கிளப்பிக்கிட்டிருக்கும். இதெல்லாம் ஒன்னுக்கொண்ணு இன்டர் லின்க்ட்.

எங்க ஊர்ல ஜானகார் பல்லி, காஜூருன்னு ஒரு ஏரியா . எல்லாமே நத்தம் நாடோடிங்க , களவாணிபய ஏரியாவா இருந்தது. அங்கன ஒரே ஒரு மிட்டாய் கம்பெனி வந்தது. முக்காவாசி பேரு அதுல எம்ப்ளாயி ஆயிட்டானுவோ. குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டானுவோ. இதுலருந்து என்னா தெரியுது? வேலை கொடுத்தா வறுமை ஒழியுது. வறுமை ஒழிஞ்சா கிரைம் குறையுது.

இப்போ உலக மயம், சாணி உருண்டை மயம்னு அந்த கம்பெனிய பார்லேக்கு வித்துட்டானுவோ, மொத்தம் மெக்கனைஸ் ஆகி ஆட்குறைப்பு பண்ணி
-ட்டிருக்கானுவோ. இப்ப என்னாவும் ?

வறுமை அதிகரிக்கும். வறுமை அதிகரிச்சா கிரைம் அதிகரிக்கும்.

எங்க ஊர்ல பால் டைரி ஒன்னு இருந்ததுங்கண்ணா. கூட்டுறவு தான். சந்திர கிரி கிட்டே சந்திரபாபு ஒரு டைரி திறந்தாரு. அதை ஊட்டி வளர்க்க இதை பொலி போட்டானுவோ. அதுல வேலை செய்தவன்ல ஒழுங்கா வி.ஆர்.எஸ் வாங்கி வந்தவனாச்சு வட்டிக்கு திருப்பி அல்லாடறான். வேலை தான் வேணம்னு போராடின அப்பாவியெல்லாம் குடும்பத்தோட பட்டினி. ( அ .. மொத்தமா  நூறு பேரானு கேப்பாய்ங்க. இந்த 100 பேர் குடும்பத்தையும் இந்த சமூகம்தானே போஷிக்கனும். இவனுக்கு பால்,தயிர் ஊத்தினவன், ஊத்துறவன் கதி என்ன? இவனுக்கு வாடகைக்கு வீடு விட்டவன் கதி என்ன?

ஜான்.எஃப் கென்னடி ஒரு சமாசாரம் சொல்லியிருக்காருங்கண்ணா. " உலகத்தின் எந்த பகுதியிலாவது சிறு அளவு வறுமை மிச்சமிருந்தாலும் அது உலகமெங்கும் பரவ ரெம்ப நாள் பிடிக்காது"

க்ரைம்ல ரெண்டு விதமிருக்கு. ஏழ்மையால  நடக்கிற க்ரைம். இதுல பாதி ஸ்டேஷன் ரெக்கார்ட்ஸ்ல இருக்காது. ஏட்டு, ஏ.எஸ்.ஐ, மிஞ்சிப்போனா எஸ்.ஐ ரேஞ்சுலயே செட்டில் மென்டாயிரும்.

ஏழைகளை தூண்டி,ஏவி  விட்டு நடத்திக்கிற கொழுப்பெடுத்த க்ரைம். இதுலயும் ரெண்டு வகை உண்டு ஏழைய ஏழை மேல தூண்டிவிடற கிரைம் ஒரு சாதி. தன்னைப்போல கொழுத்தவன் மேல ஏவி விடறது அது ஒரு சாதி. இதுலயும் பேர் பாதி கணக்குல வராது.

எப்படி பார்த்தாலும் வறுமை தான் கிரைமை பெருக்குது.  வறுமை இல்லைன்னா கிரைம் இல்லே. பெருகி வரும் கிரைம் ரேட்டே வறுமையின் அடையாளம்.

ஏழ்மையின் அளவுகோல்  மஞ்ச கடுதாசி. உங்க பக்கத்து டெய்லீஸ்ல எப்படியோ தெரியாது.. தந்தில ஆள் சாகலைன்னா விபத்து செய்தியே வராது. சித்தூர் மாவட்ட செய்திகளுக்குன்னு ஒரே பக்கம் ஒதுக்குவாய்ங்க.அதுலயும் தாளி முக்காபக்கத்துக்கு விளம்பரம் தான் இருக்கும். ஆனால் இந்த பக்கம் டபுள் டெமி சைஸ்ல  16 பக்கம் மாவட்ட இணைப்பு போடறான். மஞ்ச கடுதாசி செய்தி இல்லாத நாளே கிடையாது. புளி வியாபாரி,மிளகா வியாபாரிலருந்து தாரதம்மியமே கிடையாது. அவனுக்கு கடன் கொடுத்தவன் கதி என்ன?

யாரோ ஒரு பார்ட்டி இந்த விவாதத்துல ஒரு அயனான பாய்ண்ட சொன்னாரு சனங்க கிட்ட பணமிருக்கிறதாலதான் இத்தனை கோடீஸ்வரங்க உருவானாய்ங்களாம்.  எங்க போய் குறைய கொட்ட.

ஏழ்மையின் அளவுகோல் கடன் தொல்லை தாங்காது தற்கொலை. இந்த வகை செய்தியும் அடிக்கடி வருது. அதுவும் ஏழுமலையான சன்னிதில செத்தா ஷார்ட் கட்ல வைகுந்தம்னு எந்த பாப்பார .........டை சொல்லி வச்சானோ தெரியாது. பொழுது போய் பொழுது வந்தா இதே இழவு.

இந்த கேஸெல்லாம் வறுமையே இல்லைனு சாதிக்கிற கேஸ்தான். சமுதாயத்துல லாவா தேவிகள் பல ரேஞ்சுல நடக்குதுங்கண்ணா. 

1.ஏ க்ரூப் : வாய் பேச்சு தான். " மாப்ள !  நம்மாளுதான் பேசிக்கலாம்"னுட்டா கோடிக்கணக்குல பட்டுவாடா நடக்கும்
2.பி க்ரூப்:  ஃபோன்ல பேச்சு வார்த்தைக்கு பிறவு அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆவும் அல்லது செக்கை போய் பொறுக்கிக்கிட்டு வரனும்
3.சி க்ரூப்:  நேர்ல போய் கையது கொண்டு மெய்யது பொத்தி  நின்னா  தினத்தந்தி பேப்பர்ல சுத்தி கட்டா கொடுப்பாய்ங்க
இன்னம் நிறைய க்ரூப்ஸ் இருக்கு. ஏ சென்டருக்கும் , ஜெட் சென்டருக்கு வட்டிவீதம்  எகிறியிருக்கும். மானம் கவுந்தடிச்சு படுத்திருக்கும்.

மேற்சொன்ன மொத 3 க்ரூப்ல இருக்கிற பட்சிகள் தான் வறுமையே இல்லைனு சாதிக்கிற கேசுங்க. இவிக ஒரு பிரமைல இருப்பாய்ங்க.

பார்ட்டி ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயினு வைங்க.  சம்பளம்,கிம்பளம், பூர்வீக வீடு, அதுல ரெண்டு போர்ஷன் வாடகைனு வைங்களேன் பிரமை என்ன நெஜமாலுமே வறுமை இருக்காது. அதாவது பார்ட்டிக்கும் பார்ட்டிக்கு டச் ஆகிற சர்க்கிளுக்கும். இதுவே அந்த ஆசாமி ஏ.சி.பி ரெய்ட்ல மாட்டி சஸ்பெண்ட்  ஆயிட்டான், பூர்வீக வீட்டை கட்சிக்காரன் தன்னதுனு நோட்டீஸ்  விட்டுட்டானு வைங்க அப்பறம் பாருங்க டப்பா டான்ஸ் ஆடும்.

பார்ட்டிக்கு நாளிதுவரை டீலிங் இருந்த க்ரூப்ல  கடன் பொறக்காது. கடன்  வாங்க இன்னம் கீழ இறங்கி வரவேண்டியதுதான்.இப்படி இறங்க ஆரம்பிச்சா Z க்கு கீழவும் இடமிருக்கு. எனக்கு தெரிஞ்சு அஞ்சு இலக்க சம்பளக்காரன் எல்லாம் ஹோம் லோன், வெயிக்கிள் லோன், பர்சனல் லோனு, க்ரெடிட் கார்டு எல்லாம் தீர்ந்து போய் அஞ்சு வட்டிக்கு இறங்கியிருக்கான்.

இதுல அந்தந்த க்ரூப் காரன் அந்தந்த க்ரூப்புக்குள்ளயே ட்ரான்சேக்சன் பண்ணா பெருசா பிரச்சினை இல்லே. மேல இருந்து கீழே இறங்கி வந்தாலும் பிரச்சினையில்லை. கீழே இருந்து மேலே போயி தொபுக்கடீர்னு விழறான் பாருங்க அங்கனதான் லொள்ளே.

இந்த பன்னாடை பரதேசி பண்ண வேலைக்கு அவனவன் அரண்டு போயி வட்டி ரேட்டை தூக்கிருவான். பணப்பையை இறுக்க்கிக்குவான். சமுதாயத்துல வட்டி ரேட்டு இன்னம் கொஞ்சம் எகிறிக்கும். ஏழ்மையின் அளவுகோல் வட்டி சதவீதம்.  ஒரு  நூறு ரூபாய்க்கு நாலு பத்து ரூபா வசூல் பண்ற கூட்டம் இருக்கு. இதுலமீட்டர் வட்டியெல்லாம் வேற ஓடுதாம்.

எங்க ஊர்ல ஒரு சர்க்கஸ் காரன் வந்து கூடாரம் போட்டான். அவனுக்கு என்ன முடையோ என்ன இழவோ தெரியலை. ஒரு கந்து வட்டி கும்பல் கிட்டே மாட்டினான். கந்துவட்டிக்காரன் ஆளு கவுண்டர்லயே  உட்கார்ந்து டிக்கெட் வித்து  கலெக்சன் எடுத்துப்போக ஆரம்பிச்சான். சர்க்கஸ் காரன் என்ன நினைச்சானோ என்னவோ கூடாரத்தை அடிச்ச முளைய கூட பிடுங்காம கம்பிய நீட்டிட்டான்.

ஆக வறுமையின் அளவு கோல் வட்டி விகிதம். இன்னும் நிறைய ஐட்டம்ஸ் இருக்குங்கண்ணா..

விபச்சாரம், பெண்களின் மீதான வன்முறை ( ஏழ்மை -வறுமையின் உடனடி பின்  விளைவு சுரண்டல் - சுரண்டலுக்கு பக்க வாத்தியம் லஞ்சம் லாவணியம் - அரசியல், சமுதாய,பொருளாதார சீர்கேடு எதுவானாலும் சரி அதுக்கு உடனுக்குடன் பலியாறது பெண்கள் தான் ) பட்டினி சாவுகள், கடன் தள்ளுபடி, இலவசங்கள்,  மது அடிமைகள்.

ஆயிரம் கண்கொண்டாள்னு ஆத்தாவுக்கு ஒரு பேரு இருக்குதுங்கண்ணா.. வறுமைக்கும் ஆயிரம் கண்ணு இருக்கு. அதனோட பார்வை பட்ட இடமெல்லாம் பக் னு எரிஞ்சு போயிரும். மன்சங்க செத்தா நான் பெருசா ஃபீல் பண்ண மாட்டேன். மனிதமும் செத்துப்போயிரும் ராசா.

பெத்த குழந்தைய விக்கிறான்யா மார்க்கெட்ல.. பெத்து வளர்த்த மகளை விடறான்யா தோல் மார்க்கெட்ல.  வறுமைக்கு இதுக்கு மிஞ்சின சாட்சி என்னங்கய்யா வேணம்?

அட ஒரு சவால் . இதை ஏத்துக்க தயாரா ? குழந்தையும், குடிகாரனும் ஒன்னு. பொய் சொல்ல மாட்டாய்ங்க. ஒரு டாஸ்மாக் கடை வாசல்ல நிப்போம்.

வாத்யாரே குடிக்க வந்தியே காசு ஏதுன்னு கேட்போம்.

எக்கானமில ப்ரொடக்டிவ் - அன் ப்ரொடக்டிவ்னு ரெண்டு ஆக்டிவிட்டீஸ் இருக்கு. அவனுக்கு குடிக்க கிடைச்ச பணம் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டி மூலம் வந்ததா? அன் ப்ரொடக்டிவ் ஆக்டிவிட்டி மூலம் வந்ததானு பார்ப்போம்.

இந்தியா இன்னைக்கு எரியற வீடு.. பிடுங்கின வரை லாபம்னு பிடுங்கிக்கிட்டிருக்கான் எல்லாரும். என் நஷ்டம் உன் லாபம். உன் லாபத்துல இன்னொருத்தன் லாபமடைய பார்க்கிறான். அவனை அடிக்க இன்னொருத்தன் காத்திருக்கான்.

சின்ன மீனை பெரிய மீன் பெரிய மீன் சுறா மீன் விழுங்கின கதைதான்.  கிராமீய கலைகள், நாடகங்களை சினிமா ஒழிச்சது, சினிமாவை டிவி ஒழிச்சது. டிவிய இன்டர் நெட் ஒழிக்க போவுது.. என்ன பெரிய வித்யாசம்னுவாய்ங்க.

கிராமீய கலைகள், நாடகங்கள்ள நேட்டிவிட்டி இருந்தது - வெரைட்டி இருந்தது - ரியாலிட்டி ,ரிஸ்க், ஹ்யூமன் டச் இருந்தது - பலன் பெறுவோர் எண்ணிக்கை லட்சங்கள்ள இருந்தது

சினிமாவுல  மேற்சொன்ன மேட்டர்ஸ்ல 65 சதவீதம்  போச்சு - பலன் பெறுவோர் எண்ணிக்கை நூறுக்குள்ள முடிஞ்சு போச்சு.( முக்கியமா நேட்டிவிட்டி, பம்பாடு ,கலாசாரம்)

டிவிக்கள் வந்தது  சினிமாவுல மிச்சமிருந்த 35  சதவீதத்துல 30 சதவீதம்  காத்துல அடிச்சிக்கினு பூட்சி. பலன் பெறுவோர் எண்ணிக்கை பத்துக்குள்ள அடங்கி போச்சு
( தற்சமயத்துக்கு சிக்கனமா  இடுப்புக்கு கீழே ஒரு நெக்லஸும் ., மார்ல ரெண்டு வண்ணாத்தி பூச்சியுமா குட்டிக நடை போடறாய்ங்க)

இன்டர் நெட்டுக்கு  வந்தா ?  கோவிந்தா... கோவிந்தா..

கேபிள் டிவி, டி.டி.ஹெச், ப்ராண்ட் பேண்ட் எல்லாம் முன்னேற்றம்தான் இல்லேங்கலை. டிஸ்டில் வாட்டர் தான் இல்லேங்கலை. குண்டி கழுவுதே சனம். கும்பி காயுதே சனத்துக்கு.

இந்த இன்டர் நெட் பார்லர்காரவுகளை பார்க்கனும் டாரா கிழிஞ்சு  தொங்குது..
தூத்தேறிக்க..

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்லுவார்னு வள்ளுவர் சொம்மாவா சொன்னாரு. உழைச்சு களைச்சவன் பார்த்தாத்தான்யா நாடகத்துக்கு, தெருக்கூத்துக்கு, சினிமாவுக்கு,டிவிக்கு எந்த மயித்துக்கும் மரியாதை. தேவையான உழைப்பை தேடவும், பெறவும், சந்தைப்படுத்தவும், விற்கவும் பயன் பட்டாத்தான்யா தகவல் தொழில் நுட்ப புரட்சி, கணிணி , வலைப்பின்னல் எல்லாத்துக்கும் மரியாதை.

சொம்மா நாற்காலியை சூடு பண்ணிக்கிட்டு ஷேர் மார்க்கெட் அப்டேட்ஸை சூ நோகாம  லைவ் பார்த்துக்கிட்டிருந்தா  ஆசனத்துல கட்டிதான் வரும். ரத்தம் கொட்டத்தான் செய்யும்.