Showing posts with label மனைவி. Show all posts
Showing posts with label மனைவி. Show all posts

Wednesday, February 15, 2012

காதலி/ மனைவியுடன் உங்க டீலிங் எப்படி?


அண்ணே வணக்கம்ணே !
இதுக்கு முந்தில்லாம் ஒரு மேட்டர் மாட்டினா அதை பல கோணங்கள்ள அலசி ,பிழிஞ்சு காயப்போட்டு இஸ்திரி போட்டுருவம்.ஆனால் என்னாச்சுன்னே தெரியலை சுஸ்தா இருக்கு. ( உடனே ஜா.ரா அலியாஸ் சுன்டு ஆகா சுடுகாட்டுல நாங்க போட்ட பூஜை தான் காரணமுன்னு டிக்ளேர் பண்ணுவாய்ங்க. அதெல்லாம் டுபுக்கு)

அசலான காரணம் என்னன்னா பணத்துக்கு முக்கியத்துவம் தர்ர பார்ட்டிங்களை கிராஸ் பண்ணும்போது இப்படி ஒரு மன நிலை ஏற்பட்டுரும்.

அடுத்த நாளே இதுக்கு மாறான மனிதர்கள் கிராஸ் ஆனா நம்ம கான்ஷியஸ் உச்சத்துக்கு போயிரும். ப்ரஸ் காரன் பேப்பர் மேட்டர்ல ஒரு எண்ணூறு ரூபா ஆட்டைய போட்டுட்டான். ரேப்பர் ஒன்னுக்கு 3 வருதுன்னா ரெண்டுதான் வரும்னு தீட்டிட்டான்.

அப்பாறம் நாம கோதாவுல இற்ங்கி 3 க்கு அஜீஸ் பண்ணி மிச்சம் பிடிச்சம். இன்னொரு பிக்காலி லாட்டா கொடுத்த வேலைக்கு பாட்டா கம்பெனி கணக்கா பத்து காசு குறைக்கமாட்டேன்னு அடம்பிடிச்சான். ஒரே நாள்ள 3 சம்பவங்கள் .நம்முது கடகலக்னமாச்சா இந்த ரேஞ்சு மன்சாளை பார்த்தா படா பேஜாரா பூடுதுப்பா.

அல்லாருமே அல்லார் கிட்டேயும் அல்லா மேட்டர்லயும் பணத்தை மட்டும் பார்த்திருந்தா ஒலகம் நாறிப்பூட்டிருக்குமே. எஸ்.ரா சொல்றாரு கிளைவ்/ ட்யூப்ளே ரெண்டு பேருக்கும் கடேசியில சமாதி கூட மிஞ்சலியாம். சரி உடுங்கண்ணா மேட்டருக்கு வரேன்.

ஒரு மன்சன் எப்படியா கொத்த பொண்ணை கண்ணாலம் கட்டிக்குவாங்கற மேட்டரை போலவே அவன் தன் லவ்வரு /பொஞ்சாதிய எப்டி டீல் பண்ணுவாங்கற மேட்டரும் அவன் ஜாதகத்துலயே அடங்கியிருக்குங்ணா. அதனோட விளைவு எப்டி இருக்கும்னு குத்து மதிப்பா சொல்லலாங்ணா. அந்த வேலையத்தான் இந்த பதிவுல சொல்லப்போறோம்.

லக்னம் முதற்கொண்டு (அதையும் சேர்த்து எண்ணும் போது 7 ஆவதா வர்ர ராசிதேன் களத்ர பாவம் இதான் லவ்வரு ,பொஞ்சாதியை எல்லாம் காட்டற பாவம்.

இந்த பாவம் எந்த ராசி/அதுல ஆரு இருக்கா / ஆரோட சேர்ந்திருக்கா / அந்த ராசிக்கு ஆரு அதிபதி/அவரு எங்கன இருக்காரு/இதுவரை சொன்ன கிரகங்கள் அந்த ஜாதக லக்னத்துக்கு சுபரா பாபரான்னு 1008 கான்செப்டை வச்சு இறுதி முடிவை எடுக்கனும்.ஆனா இதை எல்லாம் விலாவாரியா எளுதினா ரெம்ப டெக்னிக்கலா போயிரும். உங்க மூளை பஜ்னு ஆயிரும் ( நன்றி:சுஜாதா)

அதனால உத்தாரா/ குன்ஸா /ரஃபா /கொள்கையளவுல களத்ர பாவாதிபதி எங்கன இருக்காருங்கற ஒரே ஒரு பாய்ண்டை வச்சு இந்த பதிவை எழுதறேன்.

1.களத்ராதிபதி லக்னத்தில் நின்றால் :

அவர் லக்னாத் சுபரானால் விஞ்ஞானிகள் சொல்றாப்ல அவிகளுக்கு சம்பந்தப்பட்ட அவுட்லைன் உங்க மைண்டுக்குள்ளயே இருந்து அவிகளை பார்த்ததும் சர்ருன்னு மேலுக்கு வரும். தலைக்கு மேல வச்சு கொண்டாடுவிங்க. தன்னைப்போலத்தான் அவளும்னு சமம்மா பார்ப்பிங்க

பாபரானால் அவிக இறக்கி வைக்கமுடியாத சுமை மாதிரி . கண்ல தூசு ,செருப்புக்குள்ள கல்லு கணக்கா தொல்லை கொடுத்துக்கிட்டே இருப்பாய்ங்க

2.களத்ராதிபதி தனபாவத்தில் நின்றால் :

அவர் லக்னாத் சுபரானால்:

கொடுக்கல் வாங்கல்லயே இவிக கிராஸ் ஆகியிருக்கலாம். அல்லது ஃபேமிலி ஃபங்சன்ஸ். லவ்வர்/மனைவியாரால் பொருளாதாரம் உயரும் . பொளுது போறதே தெரியாம ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக்கிட்டு கிடப்பிக. குடும்பத்துல ஒற்றுமை பெருகும் ,

அவர் லக்னாத் பாபரானால்:

நிலைமை மேற்சொன்ன பலனுக்கு கொய்ட் ஆப்போசிட்டா


3.களத்ராதிபதி 3 ல் நின்றால்

அவர் சுபரானால் அவிகளை நீங்க பிரயாணத்துல/ஏதேனும் போட்டி /இன்டர்வ்யூல சந்திச்சிருக்கலாம்.நீங்க கொஞ்சம் பயந்த ஸ்வபாவமா இருப்பிங்க (ரெம்ப ரோசிப்பிங்க) இதனால அவிக டெசிஷன் மேக்கிங் பண்ணி நிறைய ரிஸ்க் எடுக்க வேண்டி வரும். மச்சினி மனைவியா வர வாய்ப்பு. அண்ணன் தங்கச்சி மத்தியில வர்ர ஈகோ மோதல்கள் உங்களுக்கிடையில் வரலாம்.

பாபரானால் நீங்க தில்லு துரையா இருக்கலாம். அவிகளோடயும் மோதலுக்கு அப்புறம் காதல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உங்களோட அசட்டுத்துணிச்சல் காரணமா அவிக டர்ராகி டல்லாகி டயர்டாயிருவாய்ங்க.

4.களத்ராதிபதி 4 ல் நின்றால்
அவிக உங்க தாயாரின் பெயர்/உருவம்/பேச்சு/பாடி லேங்குவேஜில் எதையாவது பெற்றிருக்கலாம். தாய்மாதிரி டீல் பண்ணுவாய்ங்க. நீங்க மகன் என்ற ரோலை பிடிச்சுட்டா உங்க ஜோடி தூள் பண்ணும்.

உங்க முதல் சந்திப்பு உங்க வீட்ல அ அவிக வீட்ல / கல்விச்சாலையில நடந்திருக்கலாம் . ஒரு வாகன சம்பந்தமா கூட மொதல் டீல் ஆரம்பிச்சிருக்கும்.

சுபரானால் மகனோட ரோலை எடுத்துக்கிட்டு விட்டேத்தியா இருந்துக்கிட்டு லைஃபை எஞ்சாய் பண்ணுவிக
அவிக குட்னெஸ்ஸே அவிகளுக்கு ஆப்படிச்சு ஆயுசை குறைச்சுக்கிட்டே வரும்.

அவர் பாபரானால் "என்ன நீ பாட்டி மாதிரி சதா அட்வைஸ் பண்ணிக்கிட்டு எங்களுக்கும் தெரியும்"னுட்டு முட்டி மோதிக்கிட்டே இருப்பிங்க. உங்க எதிர்ப்பே அவிகளுக்கு பிக்காசில்ஸ் மாதிரி உற்சாகத்தை கொடுத்து ஆயுளை நீட்டிக்கும்.

5.களத்ராதிபதி 5 ல் நின்றால்
கடந்த பிறவியிலான மனைவியே இந்த பிறவியிலும் மனைவியா வரலாம்.இதுக்கு சில ஆதாரங்களும் தரேன்.

ஆதாரம் 1:
அவிகளை பார்த்ததும் கொய்யால இவளை பத்து நிமிசம் கூட சகிச்சுக்க முடியாதுங்கற ஃபீலிங் வரும்
ஆதாரம்2:
லவ் சக்ஸஸ் ஆனாலும் /கண்ணாலமே பண்ணிக்கிட்டாலும் அவரை பற்றி மேலுக்கு ஒருவித அலட்சியபாவம் இருக்கும். ( காலேஜ்ல சேர்ந்த புதுசுல வாங்கின பழைய செல்ஃபோனை இப்போ பார்த்தா மாதிரி ஒரு ஃபீலிங்) ஆனால் அவிகளுக்கு ஒன்னுன்னா பதறிருவிங்க பதறி..
ஒரு வேளை லவ் ஃபெயில் ஆறது /பிரிஞ்சு போறது நடந்தாலும் அவர் குறித்த நினைவுகள், விவகாரங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவர் தரப்பு வில்லங்கமுள்ள சொத்து அல்லது ரீ சேல் மதிப்பற்ற சொத்து தொடரலாம். அல்லது அவர் தரப்பு உறவினர்கள் குறைந்த பட்சம் அவரது நண்பர்களின் தொடர்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அவிக உருவம் /பிஹேவியர் உங்க மகளை போன்றதாக இருக்கலாம் .( சைல்டிஷ்)

சுபரா இருந்தா:
ஒன்னு சேருவிக

பாபரா இருந்தா:
பிரிஞ்சுருவிங்க

களத்ர பாவாதிபதி மற்ற பாவங்கள்ள நின்னா என்ன பலன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.. உடுங்க ஜூட்

Tuesday, July 12, 2011

7 ஆம் பாவம் : சில ரகசியங்கள்



அண்ணே வணக்கம்ணே ..

தொடர்பதிவுல ஒரு புது ட்ரெண்டை கொண்டு வர ப்ளான் பண்ணி அதை இன்னைக்கே அப்ளை பண்றேன். உங்க கருத்தை பதிவு பண்ணுங்க. நேற்றைய பதிவை படிச்சு கமெண்ட் போட்டவுகளுக்கெல்லாம் - நமகு கிடைச்ச மாதிரியே பெரியாரின் அருள் கிட்ட வாழ்த்துக்கள்.

அதென்னா புது ட்ரெண்டுன்னு கேப்பிக சொல்றேன். பெரியவுக என்ன சொன்னாய்ங்க? பல குட்டிய கணக்கு பண்ணி கோட்டை விடறதை விட ஒரே குட்டியை ஒழுங்கா கணக்கு பண்ணுன்னு சொன்னாய்ங்க.

ஹி ஹி ..அகல உழுவதை விட ஆழ உழுவது நல்லதுங்கற பழமொழிக்கு நம்ம இன்டர் ப்ரிட்டேஷன் இது.

பதிவு போடும் போது - அதுவும் நம்மை மாதிரி கொம்பு முளைச்ச பார்ட்டி போடும்போது - (தனக்கு) தெரிஞ்ச மேட்டருதானேன்னு அனுமார் இலங்கைக்கு தாவின கணக்கா தாவிட்டே போயிருவம். இதுல ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணத்தெரியாத பார்ட்டிங்க மந்திரி பதவி போன மாறன் மாதிரி மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு நிப்பாய்ங்க.

அதனால நேத்து பதிவுலயே விட்டுப்போன விஷயங்களையெல்லாம் சேர்த்து குஷ்பு - நமீதா ரேஞ்சுக்கு ஆக்கி மீள் பதிவா போடறேங்ணா.


//மத்த 11 பாவங்களை விட்டுத்தள்ளுங்க. தாளி 7 ஆம் பாவம் ஒன்னு கரீட்டா இருந்தா போதும் தூள் பண்ணிரலாம்//னு சொல்லியிருந்தேன். எப்டி?எப்டி?னு ரஜினிகாந்த் மாதிரி கேட்கிற பார்டிங்களுக்கு என் பதில்:

7 ல நிக்கிற கிரகம் லக்னத்தையும் பார்க்கும். 7 மனைவியை காட்டற இடம் .லக்னம் உங்களை காட்டற இடம். எல்லாகிரகங்களுக்கும் 7 ஆம் பார்வை உண்டு.

பாலகுமாரன் " ஒவ்வொரு வீட்டிலும் அதன் ஒவ்வொரு அங்குலத்துலயும் குடும்பத்தலைவன் தெரிவான்"னு சொன்னதா ஞா.

இன்ஃப்ளுயன்ஸுங்கறது ம்யூச்சுவல். பக்தனுக்கு கடவுள் எவ்ளோ முக்கியமோ கடவுளுக்கு பக்தன் அம்மாம் முக்கியம். பக்தன் இல்லின்னா பகவானுக்கு என்ன் பெருமை . பக்தாளே இல்லேன்னா கடவுளுக்கும் கலைஞருக்கும் வித்யாசமே இருக்காது.

தாத்தா அறிவாலயத்துல டைம் பாஸ் பண்ணிக்கிறாப்ல கடவுள் ஆலயத்துல ஆஸ் கிங் ஜாக்குன்னிட்டு கிடக்கவேண்டியதுதான்.

நம்ம பாய்ண்ட் என்னன்னா புருசன் பொஞ்சாதிய எந்தளவு இன்ஃப்ளுயன்ஸ் பண்றானோ அந்த அளவுக்கு பொஞ்சாதி கூட புருசனை இன்ஃப்ளுயன்ஸ் பண்றா.

லக்னத்துல உள்ள கிரகம் ஏழை பார்க்குது . ஏழுல உள்ள கிரகம் லக்னத்தை பார்க்குது. ஆத்துக்காரரு கோவக்காரருன்னா அதுல ஆத்துக்காரிக்கும் பங்கிருக்குங்கோ.

சொந்த பலம் இல்லேன்னாலும் வி.காந்த் அண்ட் கோ எதிர்கட்சியாயிருச்சு. காரணம் அ.தி.மு.க வோட கூட்டு. அந்த மாதிரி சொந்த ஜாதகத்துல சரக்கு இல்லின்னாலும் -வந்தவள் ஜாதகத்துல மசாலா இருந்தா ஒர்க் அவுட் ஆகும்.

தாய்குலத்துக்கு கம்ப்யூட்டர் பாஷையில சொன்னா சிஸ்டத்துல இல்லாத சாஃப்ட்வேரை பென் ட்ரைவ்ல இருந்து காப்பி பண்ணி இன்ஸ்டால் பண்ற மாதிரிதேன்.

கல்யாணமாகி பத்துவருசமான சோடிகளை பாருங்க ( ஆறு மாசம் ஆத்தா வீடு - ஆறு மாசம் மாமியா வீடு கேசு மாணாம் பாஸ்)

என்னதான் ஃபிசிக்கலா வித்யாசங்கள் இருந்தாலும் அவிக பேச்சு, பாடி லேங்குவேஜ் , முக பாவங்கள்ள ஒருவித ஒற்றுமை தெரியும். இதுக்கு காரணம் 1 -7 ஆம் பாவங்களுக்கிடையிலான ஒத்திசைவுதான்.


இந்த 7 ஆம் பாவ மேட்டர்ல கிரக நிலை எப்படி இருந்தா அனுகூலம் ? எப்படி இருந்தா பிரதி கூலம்னு கேப்பிகன்னு ஆரம்பிச்சு திராட்டுல விட்டுட்டன்.

7ங்கறது கேந்திர ஸ்தானம் அதனால பாவிகளுக்குத்தேன் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸுன்னு ஜோதிட விதி சொல்லுது.

இது மேல் சேவனிசமா? பொம்பளை ஏற்கெனவெ செக்ஸுவலா பவர் ஃபுல். இதுல அங்கன சுபகிரகம் வேற நின்னு அவளை "மகிமைப்படுத்தினா" புருசன் காஃபி ஃப்ளாஸ்க் சுமக்கவேண்டியதுதாங்கற எண்ணமா? அல்லது இதர இல்லற கடமைகளை அலட்சியப்படுத்திட்டா ராத்திரி போட்ட தாழ்ப்பாளை திறக்கவே மாட்டாய்ங்களோங்கற பயமா தெரியலை. 7 ஆவது இடத்துல பாவிக்குத்தேன் ப்ரிஃஃபரன்ஸ் தருது சோசியம். செகண்ட் ப்ரிஃபரன்ஸ்தான் சுபருக்கு.

இங்கன துஸ்தானாதிபதிகள் இருந்தா (6 -8 -12 ) கதை கந்தலாயிரும். 6 க்கு அதிபதி இருந்தா அந்த தம்பதிக்கு சத்ரு -ரோக -ருண உபாதைகள் ஏற்படும். எட்டுக்கதிபதி இருந்தா டிக்கெட்டு அ சிறை வாசம் அ ஐபி போட்டுருவாய்ங்க அ நிரந்தர பிரிவு.

விரயாதிபதி இருந்தா இவரு அவளை கண்டுக்கிடவே மாட்டாரு. அந்த மகராசிக்குள்ள நல்ல ஜீன் இருந்தா கொடுத்துவச்சது இவ்ளதான்னு வாழ்ந்து முடிச்சுரும். இல்லாட்டி டாக்டர் மனைவி ட்ரைவருடன் ஓட்டம் - ஆடிட்டர் மனைவி சமையல்காரனுடன் ஓட்டம்" னு தந்தியில செய்தி வந்துரும்.

Tuesday, December 14, 2010

மனைவி/ காதலியால் பிரச்சினைகள்+ தீர்வுகள்

அண்ணே வணக்கம்ணே. கடந்த பதிவுல தாய்குலத்தை 9 டைப்பா பிரிச்சு அவிகளோட அம்சங்களை  விவரிச்சிருந்தேன். இன்னைக்கு ஒவ்வொரு டைப் பெண்ணாலயும் என்னா மாதிரி பிரச்சினை வரும். அதை எப்படி சால்வ் பண்றதுனு பார்ப்போம்

அதுக்கு மிந்தி ஒரு இன்டரப்ஷன் "இறந்தவன் பேசுகிறேன்"ங்கற தலைப்புல ஒரு வில்லங்கமான பதிவும் போட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிச்சுருங்க.

இப்ப பிரச்சினை தீர்வு பாய்ண்டுக்கு வந்துருவம். மொதல்ல கடந்த பதிவை படிக்காத புண்ணியாத்மாக்களுக்காக டைப் ஒன் லேடீஸோட அம்சங்களை மறுபடி இங்கன காப்பி பேஸ்ட் பண்றேன்.

டைப் ஒன்:

1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம்,  வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு  சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம். இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ்.  மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம்.  ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.

பிரச்சினை & தீர்வு:

ஓவர் கான்ஃபிடன்டா இருப்பாய்ங்க. சைல்டிஷா கூட இருக்கலாம். இவிகளுக்கு ரகசியம்னாலே பிடிக்காது. எல்லாத்தையும் எல்லார் முன்னேயும் போட்டு உடைச்சுரலாம். சிலருக்கு போலி கௌரவம் இருக்கும். சரியான தூக்கம் இருக்காது. இதனோட விளைவா  தலைவலி,மலச்சிக்கல், ஜாய்ண்ட் பெய்ன்ஸ் இருக்கும். இவிகளை விமர்சிச்சா அசலுக்கே மோசம் வந்துரும். இது உன்னால தான் முடியும்னு ஒரு வேலைய கொடுத்தா  ஒடனே பைசல் பண்ணுவாய்ங்க. உன்னால முடியுதா பாரு இல்லாட்டி அவள் செய்துருவானு ஈகோவை சீண்டினா கோவிந்தா. இவிகளுக்கு முதுகெலும்புல கூட பிரச்சினை வரலாம். சின்ன வயசுலருந்தே அட்லீஸ் கண்ணாலமான நாள்ளருந்தே முதுகெலும்பை நேர வச்சு உட்கார நிற்க கத்து கொடுங்க.

1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. . வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

Monday, December 13, 2010

மனைவி /காதலியுடன் பிரச்சினையா?

மனைவி /காதலியுடன் பிரச்சினையா? கவலைய விடுங்க. கீழே ஒன்பது விதமான கேரக்டரிஸ்டிக்ஸ் தந்திருக்கேன். இதுல உங்காளு எந்த கேட்டகிரில வராங்கனு பார்த்து வச்சிக்கங்க. தீர்த்துரலாம்.


1. நல்ல நிறம். பவர் கிளாஸ் அணியலாம். ஒற்றைத்தலைவலி இருக்கலாம். ஒரே பெண்ணா இருக்கலாம் ( பெற்றோருக்கு) . தன்னம்பிக்கை உள்ளவுக. லீட் பண்ணுவாய்ங்க. இவிக வீட்ல ஏதேனும் ஒரு இடத்துல ஓப்பன் ப்ளேஸ் இருக்கலாம். புதுசா வந்த காலனியில, குக்கிராமத்துல,மலை பிரதேசத்துல பிறந்திருக்கலாம்,  வசிக்கலாம். டூரிங் ஜாப். பேரு  சூரியன்,காயத்ரி,மலை சார்ந்த பேரா இருக்கலாம்.ஒல்லி. ஆண்மை மிளிரும். இவிகளுக்கும் 1,19,28 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 1ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். முதல் க்ராஸ், மொதல் வீடு. இவிக ஃபேமிலி லோக்கல் செல்ஃப் கவர்ன்மென்ட்ல இருக்கலாம். கு.ப லோக்கல் காண்ட் ராக்டர், சாதி சங்கம், விளம்பரத்துறை, எஸ்காம்.
இவிக இருப்பிடம் நகரம் அ கிராமத்துல நட்டு நடுவுல இருக்கலாம். அதிகாலை முதல் நடுப்பகல் வரை ரெம்ப ஆக்டிவ்.  மாலைல டல்லடிப்பாய்ங்க. இவிகளுக்கு அப்பா ரோல் மாடலா இருக்கலாம்.  ப்ராக்டிக்கலா திங்க் பண்ணுவாய்ங்க புகழ்ச்சிக்கு மயங்குவாய்ங்க.ஃபாதர்லி நேச்சர் இருக்கும்.


2.வெள்ளை நிறம். சீதள நோய்கள் இருக்கும். பகல்ல டல்லடிப்பாய்ங்க. சந்திரோதயத்துக்கு அப்பாறம் ஆக்டிவாயிருவாய்ங்க. மித மிஞ்சிய தன்னம்பிக்கையும்,தாழ்வு மனப்பான்மையும் மாறி மாறி வரும். கூட இருக்கிறவுக இவிகளை ஈஸியா லீட் பண்ணுவாய்ங்க.  இவிக பேர்ல நதி,மனசு,முத்து,சந்திரன் அம்மன் இருக்கலாம். இவிக ஃபிசிக் ஸ்டெடியா இருக்காது. திடீர்னு வெய்ட் போடுவாய்ங்க. திடீர்னு மெலிய ஆரம்பிப்பாய்ங்க.இவிக குடும்பம் சீசனல் வியாபாரம், தண்ணீர்,திரவப்பொருள்,கடல், மக்களோட நேரடி தொடர்புள்ள துறைல இருக்கலாம். ஊர் அ கிராமத்தில் பள்ளமான பகுதில இருக்கலாம். அல்லது வடமேற்குல இருக்கலாம்.இவிகளுக்கும் 2,11,20,29 தேதிகளுக்கும் தொடர்பிருக்கும். இவிக மேட்டர்ல 2ங்கற எண்ணுக்கு லிங்க் இருக்கும். ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது க்ராஸ், ரெண்டாவது பெண். மதர்லி நேச்சர் இருக்கலாம்.

3.சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர்  கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல  ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம்,  லேசான படபடப்பு,  முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன  செவ் தொடர்பான  தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள்  இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4. இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ  இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ  பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற  பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்


5. நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,
சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை.  நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல  யோசனை சொல்லுதல்,  நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம்.  இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற  நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க.  எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல்  யூஸ் பண்ற  வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .


7.ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி  ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும்.  பெருமாள் மனைவி  பேரை கொண்டிருக்கலாம்  .ஜாதகர் + அவிக குடும்பம்  போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை  தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம்.  வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.

8.ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9. இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு  முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம்  பிராமண இளைஞர் ஒருத்தர்  இவிக ஃபேமிலி  ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி,  முத்துலட்சுமி தெரு

இந்த க்ளாசிஃபிகேஷன்ல 40 முதல் 60 சதவீதம் கரீட்டா இருந்தா அவிகளால பிரச்சினை இருந்தா/ அவிகளுக்கு பிரச்சினை இருந்தா அதை  எப்படி சால்வ் பண்ணலாம்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

Sunday, September 19, 2010

மருமக மாமியாருக்கு சக்களத்தி தான் : 2

அண்ணே வணக்கம்ணே,

மனைவி அமைவதெல்லாம்ங்கற தொடர்பதிவை ஆரம்பிச்சு அதுல ஒரு துணை தொடரை மருமக மாமியாருக்கு சக்களத்தி தான்ங்கற தலைப்புல எழுதிக்கிட்டிருக்கேன். நான் நேத்து தாய் - மகனுக்கிடையிலான உறவை பத்தி எழுதின மேட்டருக்கு சனம் மனோகரா சினிமா கணக்கா பொங்கி எழுந்து டங்கு வாரு அறுத்துரப்போவுதுனு நினைச்சேன். ( யதார்த்த வாதிபஹுஜன விரோதி- உள்ளதை சொன்னா நொள்ளக்கண்ணிக்கு நோப்பாளம் )



ஞாயிற்று கிழமை காரணமா இல்லே இந்த ஆளுக்கு சுய புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது அனுபவிக்கட்டும்னு ஒரு எண்ணமா புரியலை. ஹிட்ஸ் மட்டும் 12 மணி நேரத்துக்கு இரட்டிப்பாகியிருக்கு. சந்தோசம். மசூதி மந்திர் மேட்டரை எத்தனை பேர் படிச்சாய்ங்கனு தெரியலை.



முக்கியமா நான் போடற பதிவுகளை உடனுக்குடன் படிக்கிறவுக குறைச்சல். பழைய பதிவுகளையெல்லாம் ஒரு பாட்டம் படிச்சுட்டுத்தான் லேட்டஸ்டுக்கு வராய்ங்க.ஒரு வேளை ரிவிஷன் பண்றாய்ங்களோ? (அப்ப நம்ம எழுத்து வைன் மாதிரினு சொல்லலாமா? அதுக்குத்தான் பழசாக பழசாக மவுசு கூடும்)



இந்த துணைத்தொடர் எழுதறதுல என் உத்தேசம் என்னன்னா மொதல்ல ஃபேக்ட்ஸ் தெரியனும்.அப்பத்தான் தீர்வு சுலபம். ஃபேக்ட்ஸ் கசப்பா இருக்கு, அசிங்கமா இருக்கு,வக்கிரமா இருக்குன்னு கண்ணை மூடிக்கிட்டு பிரச்சினையை தொட்டா அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டுட்ட மாதிரி அது இன்னம் சிக்கலாயிரும்.



மேக்கியவல்லி தன்னோட "தி ப்ரின்ஸ்" ல அரசனுக்கு அட்வைஸ் பண்றச்ச "மக்களோட மனைவி, நிலம் ரெண்டை மட்டும் தொடாதேங்கறார்" இப்ப பார்த்தா சிறப்பு பொருளாதார மண்டலம்னு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தறாய்ங்க. சனம் ஏதோ சம்பிரதாயத்துக்கு போராடுது.அதுவும் அதிக நஷ்ட ஈடு கேட்டுத்தான். ஏன்?



ஏதோ ஆதிவாசிகள் மட்டும் நக்சல்ஸோட சேர்ந்து டஃப் ஃபைட் கொடுக்கிறாய்ங்க. அவிக தற்கால நாகரீகத்துக்கு (?) பழக்கப்படாம இயற்கையோட நெருங்கின வாழ்க்கை வாழறதால ஆதி மனித காலத்து மூர்கம் அ இயற்கையின் சிம்பலான நிலத்தின் மீதான பற்று தொடர்ராப்ல இருக்கு.



மேக்கியவல்லியோட லிஸ்ட்ல அடுத்து வர்ரது பெண்டாட்டி. மனிதன் நாகரீகமடைய அடைய அவனுடைய இயல்பு நிலை பாதிக்கப்படுது. ஆண்மை குறைஞ்சு போகுது. இயற்கையிலேயே அவனுக்குள்ள இருக்கிற மூர்கம் குறைஞ்சு போகுது. இது எந்த நிலைக்கு போயிருச்சுன்னா பெண்டாட்டி மேட்டர்ல கூட காம்ப்ரமைஸ் ஆகிற ஸ்டேஜுக்கு வந்துட்டாய்ங்க.



ஒரு பிக்காலி ஃபைல்ஸை தன் மனைவி மூலமாத்தான் அதிகாரிகளுக்கு கொடுத்தனுப்பும்.என்னய்யா இதுன்னா" உடு சாமீ.. நம்மால ஆகாத வேலை பெண்டாட்டியால ஆகுதுன்னா ஆகட்டுமே"ங்குது அந்த பன்னாடை.



அந்த பண்பட்ட (?) ஸ்டேஜுக்கு இன்னம் வராம மெத்த நாகரீகமடையாத பார்ட்டிகளோ, அல்லது இத்தனை நூற்றாண்டுகளாகியும் ரத்தத்துல குறையாத மூர்கத்தை வச்சிருக்கிறவுகளோ மட்டும் தான் நிலத்தகராறு, கள்ளக்காதல் மேட்டர்ல ஆயுதம் தாங்கி தந்தில செய்தியாயிர்ராய்ங்க.



அதுக்குனு மத்தவுகல்லாம் கம்ப்ளீட்டா காம்ப்ரமைஸ் ஆயிட்டாய்ங்கனுல்ல அங்கனயும் கொலை செய்ய முயற்சி நடக்குது ஆனால் ஆயுதம் வேற, களம் வேற, யுத்தமுறைகள் வேற.



இதை வேறும் ஒரு ஆணோட பார்வையில மட்டுமில்லை, பெண்ணோட பார்வையிலயும் பாருங்க. ஒரு தாய். அவளோட மீனியேச்சர் கணவன் மகன். உடலுறவு ஒன்னை தவிர உடலுறவுக்கு முந்தி பிந்தி நடக்கிறதெல்லாம் நாசூக்கா, யதேச்சையா, தவணையில நடக்குது. என்னைக்கோ ஒரு நா "அது"வும் நடக்கும்ங்கற எதிர்பார்ப்பும் இருக்கலாம். ( ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா) அதை மருமக வந்து இனி இல்லவே இல்லைன்னு ஆக்கிர்ரா. இதை எப்படி அந்த தாய் மனசு ஏத்துக்கும்?



பொருளாதார காரணங்களை காட்டறாய்ங்க. இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆனால் இதுவே காரணம் கிடையாது. ஒரு பெண்ணுக்கு பெண் மேல எந்த வித ஈர்ப்பும் இருக்க வாய்ப்பே கிடையாது. மருமகளை பிடிக்காத எந்த மாமியாரும் ஆரம்ப நிலையிலயே மகனை கூப்டு " த பாருப்பா உன் பிச்சை எனக்கு தேவையில்லை நான் பிச்சையெடுத்தாச்சும் பிழைச்சுக்குவன் . நான் போறேன்"னுட்டு கிளம்பறதில்லை. அதே மாதிரி மருமகளை கூப்டு "த பாரும்மா எதுக்கு சும்மா லொள்ளு ..உன் புருசனாய் கூட்டிக்கிட்டு தனியா போயிரு"ன்னு சொல்றதில்லை. அப்படி போயிட்டா மகனை கண்ணால கூட பார்க்க முடியாதே



செக்ஷுவல் ஃபேக்டர்ஸ் கலக்காத எந்த பிரச்சினையையும் கொஞ்சம் மெனக்கெட்டா பைசல் பண்ணிரலாம். ஆனால் செக்ஷுவல் ஃபேக்டர்ஸ் கலந்திருக்கிற பிரச்சினையை பைசல் பண்ணவே முடியாது. (அந்த செக்ஷுவல் ஃபேக்டர்ஸை ஸ்மெல் பண்ணா தவிர)

மத்தபடி காசு பணம் காரணமா வர்ர எந்த பிரச்சினையும் இந்த ரேஞ்சுக்கு போகாது போகாது போகாது.



இந்த ஃபேக்டரை எடுத்து சொன்னது எதுக்குன்னா இதான் அசலான பிரச்சினை. இதுதான் அடிமனசுல கொழுந்து விட்டு எரியற கட்டை. எரியறத பிடுங்கினா கொதிக்கிறது ஆட்டோமேட்டிக்கா அடங்கிரும்.



மாமியாராகட்டும், மருமகளாகட்டும் இந்த பாயிண்டை புரிஞ்சிக்கிட்டா " தூத்தேரிக்க இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு இழவெடுத்த காரணம் இருக்கா.. அய்யய்யோ நான் இந்த மேட்டர்ல எந்த அளவுக்கு பிடிவாதமா இருக்கேனோ அந்த அளவுக்கு இந்த பிரச்சினைக்கு சித்தூர் காரரு சொன்ன காரணம் தான் காரணம்னு இந்த உலகம் நம்ப ஆரம்பிச்சுருமோங்கற பதைப்புலயே தங்கள் பிடிவாதத்தை குறைச்சுக்குவாய்ங்க. அட்லீஸ்ட் மறைச்சுக்குவாய்ங்க.



ஒரு தாய் தன் மகனை மீனியேச்சர் கணவனா பாவிக்கிற நிலைக்கு வர காரணம் அவளோட மண வாழ்வு , கணவனுடனான உறவு ( உடலுறவு இல்லிங்கோ) அவள் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அமையலைங்கறதுதான்.



ஒரு பெண்ணோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் தாயா மாறனுங்கறதுதான். இல்லாட்டி செக்ஸுவல் ஆர்காசம் சாத்தியமே இல்லாத கணவனோட தொடர்ந்து வாழறது சாத்தியமே இல்லை. தாயா மாறனுங்கறது மனித மனங்கள்ள மறைஞ்சிருக்கிற பாஸிசமா கூட இருக்கலாம். அது வேற விஷயம். அவளோட கணவனே அவளுக்கு குழந்தையா மாறிட்டா இந்த பிரச்சினையே வராது.



ஆணா ஆண்மனம் எப்பவும் பெண்ணை சந்தேக கண் கொண்டே பார்க்குது ( இவனால தான் ஆர்காசத்தை கொடுக்க முடியலியே) அதனால அவளை எப்பயும் தன் கட்டுப்பாட்லயே வச்சுக்க துடிக்குது. "போஜேஷு மாதா"ன்னு ஸ்லோகம் சொன்னாலும் மனைவி ஒரு தாயா மாற, தாயா வாழ ஆயிரம் சிச்சுவேஷன்ஸ் இருக்கு. கணவனே அவளுக்கு மகனா மாறிட்டா அவள் ஏன் மகனை மீனியேச்சர் கணவனா பாவிக்கப்போறா. மருமகளை சக்களத்தியா எண்ணி சண்டையிழுக்க போறா?



தன் வருங்கால மனைவியை தேடும் ஒரு இளைஞன் தன் தாயைத்தான் தேடறான் . வருங்கால கணவனை தேடும் ஒரு இளைஞி தன் தந்தையை தான் தேடறானு சைக்காலஜி சொல்லுது.



இதை கொஞ்சம் டீப்பா பார்த்தா இந்த தியரி மன முதிர்ச்சியடையாத யூத்துக்கு மட்டும் பொருந்தறாப்ல இருக்கு. மெச்சூர்ட் மைண்டட் இளைஞன் மகளை தேடவும் கூட வாய்ப்பிருக்கு.



ஆனா மனிதனோட மூட் 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மாறுது. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மாறுது. அவன் நினைச்சா சில சமயம் தந்தையாவும், சில சமயம் மகனாவும் பிஹேவ் பண்ணமுடியும். (தந்தையா மாறினா பொஞ்சாதி பொறுப்பில்லாதவளா மாறி அப்பனை சதாய்ச்ச ரேஞ்ஜுல உங்களை சதாய்ச்சுர சான்ஸு இருக்கு பாஸ்! அட் தி சேம் டைம் நீங்க மகனா மாறிட்டா அவிகளை உங்க அம்மாவை சதாச்ச மாதிரி சதாச்சுரலாம். மகன்,மகளா மாறிர்ர கணவன் அ மனைவி நித்ய யவ்வனமா இருப்பாய்ங்க. தீர்காயுசு. தாயா மாறிர்ர பொஞ்சாதி நித்ய யவ்வனமா இல்லேன்னாலும் ஆத்ம திருப்தி காரணமா ஆயுசாச்சும் கூட்டிக்கலாம். தந்தையா மாறிர்ர கணவன் தான் சீக்கிரம் கிழவாடி ஆகி அல்பாயுசுல போயிருவான். புருசன் புருசனாவே ,பொஞ்சாதி பொஞ்சாதியாவே வாழ்ந்துட்டா லைஃப் நியூஸ் ரீல் மாதிரியாயிரும்.



இந்த ஃபார்முலாவை அந்த தாயோட கணவன் ஃபாலோ பண்ணியிருந்தான்னா இந்த ப்ராப்ளம் வந்தே இருக்காது. வந்துருச்சு. இப்ப என்ன செய்யறது? அந்த தாயோட மேரீட் லைஃப் எப்படியிருந்தது, செக்ஷுவல் லைஃப் எப்படியிருந்தது, அதை அவிக எப்படி எடுத்துக்கிட்டாய்ங்க மாதிரி டீட்டெயில்ஸ் எல்லாம் தேவை. அப்பத்தான் இந்த மாமியார் - மருமக பிரச்சினையோட ஆணி வேரை அசைச்சு பிடுங்கி எறிய முடியும்.



அது மட்டுமில்லிங்கண்ணா மருமகளா வந்த பெண்ணோட தாயார் விஷயத்துலயும்

அவிகளோட மேரீட் லைஃப் எப்படியிருந்தது, செக்ஷுவல் லைஃப் எப்படியிருந்தது, அதை அவிக எப்படி எடுத்துக்கிட்டாய்ங்க மாதிரி டீட்டெயில்ஸ் எல்லாம் தேவை. இதையெல்லாம் எப்படி கலெக்ட் பண்றது, எப்படி டீ கோட் பண்றது. இந்த மா - ம பிரச்சினையை எப்படி சவப்பெட்டில இட்டு ஆணி அறையறதுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.