Showing posts with label செக்ஸ். Show all posts
Showing posts with label செக்ஸ். Show all posts

Monday, April 2, 2012

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கு வாரத்துல 2 ஆவது நாள். நாட்டு நடப்பை கிளிக்கனும். நேத்திக்கு பெரீ மன்சங்களையும், விகடனாரையும் கிளிச்சம்.

நாட்ல ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கு. அதுக்கெல்லாம் தனித்தனியா தீர்வும் இருக்கும். ஆனால் நம்ம தலீவருங்களுக்கு எந்த வீட்டுக்கு போறது,எந்த பொஞ்சாதிக்கு பொறந்தவனை தலீவராக்குறதுங்கற பிரச்சினைதான் பெரும் பிரச்சினை இவிக தொழில் கொள்ளையடிக்கிறது.உபதொழில் கொள்ளையடிச்சதை காப்பாத்தறது+ கோர்ட்டுக்கு அலையறது.

பிரச்சினைகளை ரீடெயிலாவும் தீர்க்கலாம். ஹோல் சேலாவும் தீர்க்கலாம். லாங் டெர்ம் ப்ராசஸ்லயும் தீர்க்கலாம் ( ஆப்பரேஷன் இந்தியா 2000) ஷார்ட் டெர்ம் ப்ராசஸ்லயும் தீர்க்கலாம். (பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம்)

சமீபத்துல பி.பி,ஷுகர்,பைல்ஸ்,மனப்பிறழ்வுன்னு ஒரு பதிவை போட்டேன். அதுல பி.பி,ஷுகர், பைல்ஸ் கேஸை மட்டும் அனலைஸ் பண்ணோம். வே ஆஃப் திங்கிங் கரீட்டா இருந்தா வே ஆஃப் லைஃப் கரீட்டா இருக்கும். இது ரெண்டும் கரீட்டா இருந்தா பாயும் இல்லை நோயும் இல்லை.

இன்றைய ஐடி யுகத்துலயும் மனிதனோட மண்டையில ஆறிலிருந்து அறுபது வரை சீரணமாகம சீரழிக்கிறது செக்ஸு. இந்த ஒரு மேட்டர்ல எப்படியா கொத்த ஜீனும் தடுமாறிருது.எப்படியா கொத்த அறிவு கொழுந்தும் வாடிப்போகுது .

நாட்ல உள்ள பல பிரச்சினைகளுக்கு இதுவே ஆணி வேரா இருக்கு. ஆண்,பெண்ணுக்கு குற்ற உணர்ச்சியற்ற - சட்டப்பூர்வமான -தங்குதடையற்ற செக்ஸ் மட்டும் அவெய்லபிள்ள இருந்தா பல பிரச்சினைகள் தீர்ந்து போயிரும்.

நான் ஏதோ திருமணத்துக்கு எதிரின்னு நினைச்சுராதிங்க. திருமணங்கற நிறுவனம் கரப்ட் ஆகாம இருக்கனும்னா அதுக்கு தகுதியில்லாத தத்தாரிகளை அதுக்குள்ள விடப்படாது. அவிகளுக்கு ஒரு ஆல்ட்டர்னேட்டிவ் இருக்கனும். அப்பத்தேன் இந்த நிறுவனம் இன்னொரு 25 வருஷத்துக்காச்சும் தொடரும்.

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வ‌ழ‌ங்குவ‌தால் ஏற்ப‌ட‌க்கூடிய‌ ந‌ன்மைக‌ளை பார்ப்போம்.
1.உள்ளடக்கி வைக்கப்பட்ட செக்ஸ் எண்ணங்களே வ‌ன்முறையாக,அதிகார வெறியாக, பண பித்தாக வெடிக்கின்ற‌ன. எனவே இவை யாவும்குறையும்.

2.ம‌னித‌ர்க‌ள் ப‌ல்வேறு போர்வைக‌ளில் செய்வ‌து இர‌ண்டு வேலைக‌ளைத்தான்.1.சாத‌ல் 2.சாகசடித்தல் .இவை இர‌ண்டுமே செக்ஸில் சாத்திய‌மாவ‌தால் ஸ்தூலமான கொலைகள், தற்கொலைகள், மறைமுக, தவணை முறை கொலை, தற்கொலைகள் குறையும்

3.செக்ஸை மீண்டும் மீண்டும் அடைய மனிதர்கள் எதற்கும் துணிகிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அதை குற்ற உணர்ச்சியுடன் அணுகி, அரைகுறையாக ஈடுபட்டு, ஆழத்துக்கு செல்லாது பாதி வழியில் திரும்புகிறார்கள். கவிஞனின் மனம் தான் முடிக்காத‌ கவிதையையே எண்ணி மருகுவது போல் மனித மனம் மீண்டும் மீண்டும் அதையே வட்டமிடுகிறது
இதனால் அவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்புகள் குறைகின்றன.

4.மனிதனை நீ மிருகம் என்று ருசுப் படுத்துவது உயிர்பயமும்,பசியும்,
செக்ஸும் தான். மனிதன் மிருகமாகிவிட்டால் அவனை அரசு, சமுதாயம் ,மதம் இத்யாதி எதுவும் கட்டுப் படுத்த முடியாது.


5.ம‌னித‌ருக்குள் இருப்ப‌து ஒரே ச‌க்தி. அது பாலிய‌ல் ச‌க்தி. பாலிய‌ல் ச‌க்தியே ப‌டைப்பு ச‌க்தியாக‌வும்,வ‌ன்முறையாக‌வும், ப‌ண‌,அதிகார வெறியாக‌வும்,யோக‌ச‌க்தியாக‌வும் வெளிப்ப‌டுகிற‌து. அது மேனோக்கி பாய்ந்தால் (ஸ்தூலமாக அல்ல உன்னதங்கள் நோக்கி என்று புரிந்துகொள்ளுங்கள்) அது யோகிக் பவர். கீழ் நோக்கி பாய்ந்தால் அது செக்ஸ் பவர்.

6.மேனோக்கியா, கீழ் நோக்கியா (எல்.ஜி. இல்லையா) என்பது கேள்வியல்ல. முதற்கண் அந்த சக்தி அசைய வேண்டும் எதையோ நோக்கி பாய வேண்டும். அது அசையவோ,பாயவோ துடித்துக்கொண்டே இருக்கும். தண்ணீரை அழுத்தி சுருக்க முடியாதென்ற பாஸ்கலின் விதி தெரியுமல்லவா? அதை அழுத்தி வைத்தால் வெடிக்கிறது. சிலர் ரேப்புகிறார்கள், சிலர் பணத்தை துரத்துகிறார்கள்

6.ம‌னித‌ர்க‌ள் எது செய்தாலும் அதை தூண்டுவ‌து செக்ஸ்தான். அத‌ன் பின் இருப்ப‌து செக்ஸ்தான். ப‌ண‌ம்,புக‌ழ்,ஒழுக்க‌ம்,துற‌வு,தியாக‌ம் எத‌ன் பின்னும் இருப்ப‌து செக்ஸ்தான். பொத்தி பொத்தி வைத்து அவனவன்/அவளவள் ஆய் போக ஒதுங்கறச்ச கூட தப்பு பண்ணிட்டு கண்ட நோயை வாங்கி/கொடுத்து நாறிப்போனது ஒரு பக்கம், அதால கொலை/தற்கொலை மறு புறம் , இன்னொரு பக்கம் பார்த்தா அடுத்த தலைமுறை ? அதன் ஆரோக்கியம் (உடல் மனம் ) .

உதவாத விசயங்கள், பிரிலிமினரி ஃபேக்ட்ஸ்...

1.பெண்களுக்கு தாயே மாதாந்திர விலக்கின் போது சுத்தப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் தேவையற்ற ரோமங்களை நீக்கிவிடு என்று எந்த தாயாவது கூறியிருக்கிறாளா ? இல்லை .

2.இரவில், தூக்கத்தில் கண்ட கனாவின் பலனாய் தான் தன் ஜட்டியில் போட்ட மேப் காரணமாய் அரண்டு போன பையனை " தம்பி அதெல்லாம் ஒன்னுமில்லடா அணை நிரம்பி வழியறமாதிரி தான் என்ரு எந்த தகப்பனாவது கூறியிருக்கிறானா ? இல்லை

காரணம் என்ன ஹிப்பாக்ரசி .அவள் வயிற்றில் வாங்கி கொண்டு வந்துவிட்டாலோ ? இவன் கொனேரியா, சிஃபிலிஸ் வாங்கிக்கொண்டு விட்டாலோ வாயிலும் வயிற்றிலும் அடித்து புலம்புவது . தேவையா /


ஆணுறை க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌ இந்த‌ யுக‌த்தில் கூட இளைஞர்களும்,யுவதியரும் தாம் பருவமடைந்த பிறகும் ஏறக்குறைய இருபது வருடங்கள் தங்கள் உறுப்புகளை சிறு நீர் கழிக்க மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று நினைப்பது ம‌டிச‌ஞ்சிதனம் மட்டுமல்ல. முட்டாள் தனம். ப‌த்தாம்ப‌ச‌லித்த‌ன‌ம்.

இது அவர்களை மன நோய்களுக்கு ஆளாக்குமே தவிர, தகாத உறவு, கள்ள உறவு, சுய இன்பம் இத்யாதிக்கு துரத்துமே தவிர ஒரு இழவும் நடக்காது.

என‌வே பாலிய‌ல் தொழிலுக்கு ச‌ட்ட‌ அங்கீகார‌ம் வ‌ழ‌ங்கிவிட்டால் செக்ஸ் என்ப‌தை மிக எளிதாக மாண‌வ‌,மாண‌விய‌ர் க‌ட‌ந்துவ‌ந்துவிடுவார்க‌ள்.

அதில் ஈடுபட்டால் வரும் தீமைகளை விட ( வித் அவுட் காண்டோம்) அதை நினைப்பதால், அதை பேசுவதால் / பேச முடியாததால் வரும் தீமைகள் அதிகம்.

பெரியவர்கள் ஹிப்பாக்ர‌ட்டுக‌ளாய் வாழ்ந்து இளைய‌த‌லைமுறையை ப‌லி கொண்ட‌து போதும்.

இப்போதாவ‌து ய‌தார்த்த‌வாதிக‌ளாகி நேர்மையுடன் சிந்திப்போம். 40 வ‌ய‌துவ‌ரை இளைய‌ த‌லைமுறையை செக்ஸ் த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ங்க‌திக‌ளை யோசிக்க‌விடாம‌ல் செய்த‌து போதும். இனியாவ‌து புதிய‌ இளைய‌ பார‌த‌த்தை ப‌டைப்போம்

மேலும் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதால். நிறைவான செக்ஸுக்கு வாய்ப்பில்லாத போலீசார்,ரவுடிகள், குட்டித்தலைவர்கள் கூட பலன் பெறுவார்கள். லாக்கப் டெத் குறையும், குற்றமும் குறையும் . அரசியலில் ஊழல் கூட குறையும்

மனிதன் பணம் சம்பாதிப்பதே உள்ளூற அதை பலான விசயத்துக்கு பயன்படுத்தலாம் என்ற ஊமை எண்ணமே என்று மனோதத்துவம் கூறுகிறது

Sunday, October 30, 2011

பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு மூலம் செக்ஸ்



( முந்தா நாளு தாய்குலத்தின் மிரட்டல் மெயில்னு ஒரு பதிவை போட்டிருந்தம். ஒரு தாய்க்குலம் நாம சகட்டுமேனிக்கு ப்ளாக்ல எழுதினதையெல்லாம் படிச்சுட்டு தொடர்ந்து எடக்கு மடக்கா நம்மை மடக்கி மெயில் போட்டதையும் சொல்லியிருந்தம் . அந்த மகராசிக்கு பதில் கொடுக்கிறதுக்குள்ள உன்னைப்பிடி என்னைப்பிடின்னு ஆயிப்போச்சு. இப்பம் தேவையில்லாத மேட்டரையெல்லாம் வடிக்கட்டி கேள்வி பதில் கணக்கா மாத்தி இங்கன தந்திருக்கோம். வெறுமனே படிச்சுட்டு போயிராம நம்ம வாதத்துல தப்பு தவறு இருந்தா குட்டி சொல்லுங்க. )

1. நாட்ல எத்தனையோ பிரச்சினைகள் பத்தி எரியறச்ச வெறுமனே ஆண் -பெண் , செக்ஸாலஜி,சைக்காலஜின்னு ஜல்லி அடிக்கிறிங்களே.. இதெல்லாம் எஸ்கேப்பிசமில்லையா?

வரேன்.வரேன். இன்னைக்கு மனித குலத்தை பாதிக்கும் பிரச்சினைகள் எல்லாமே ஒரே பிரச்சினையின் விளைவுகளே.

அந்த ஒரே பிரச்சினை எதுன்னா மனிதகுலம் இயற்கையிலிருந்து விலகிவிட்டது தான். அடிப்படையில் பார்த்தா மனிதன் கூட ஒரு மிருகம் தான்.ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான்.

ஒவ்வொரு மன்சனுக்குள்ளவும் ஒரு மிருகம் லேசான சங்கிலியால் பிணைக்கப்பட்டு எந்த கணமும் அது தெறிச்சு -வெளிய வந்துர்ர நிலையில இருக்கு. மனிதன் ஒரு மிருகம் இது இயற்கையின் விதி. ஆனால் அவன் மனிதனா நடிக்கிறான். இது சமுதாயத்தின் சதி.

சரி ஒழிஞ்சு போவட்டும் அட்லீஸ்ட் அந்த மிருகத்தை ரெண்டு நாளைக்கொருதரமாச்சும் காலாற நடக்கவிட்டு கக்கா,உச்சா போக வச்சு சீசன் சீசனுக்கு கிராசிங் அனுப்பி வச்சு மறுபடி கட்டி வச்சாலும் பரவால்லை.

அது பாவம் மூத்திரப்பை நிரம்பி, மூத்திரம் முட்ட,மலக்குடல் கனத்து ,விந்துப்பை பிதுங்கி யோனி உதடுகள் லூப்ரிக்கேட் ஆகி மினு மினுத்து கனிஞ்சு ,க்ளிட்டோரிஸ் விரைத்து ஏங்கி தவிச்சிட்டிருக்கு.

அதை இந்த சமூகத்தை போலவே தனிமனிதனும் கண்டுக்கிடறதில்லை. இதன் விளைவு ? செக்ஸுக்கு மாற்றா வன்முறை -பணம் -பதவின்னு தவிக்குது. எத்தனை உசரத்துக்கு போனாலும் அடியை பிடிடா பரதப்பட்டான்னு மறுபடி செக்ஸுலயே வந்து முட்டி நிக்குது.

மனிதர்களில் பலருக்கு வன்முறைக்கான உடல் வலிமையோ ,பணம் சம்பாதிக்கிறதுக்கு தேவையான திறமை , தகுதி ,சாலாக்கு, மானங்கெட்ட தனம் ,பதவியை பெறுவதற்கான தலைமை பண்புகள்,தியாகம் ,கூட்டி/காட்டி கொடுக்கும் கயவாளித்தனம் இல்லாம இருக்கலாம்.

ஆனால் கொஞ்சமே கொஞ்சம் பேரை தவிர அல்லாருக்கும் செக்ஸை பெறுவதற்கான தகுதியை இயற்கை தந்திருக்கு. இவிகளுக்கு செக்ஸ் மட்டும் எவ்வித குற்ற உணர்வோ ,பக்கவிளைவு குறித்த அச்சமோ (எய்ட்ஸ்/கர்பம்/கல்யாணம்) இல்லாம கிடைச்சுட்டா இவிக வன்முறை -பணம் -பதவியை நினைச்சுக்கூட பார்க்கமாட்டாய்ங்க.

இன்னைக்கும் மனிதனை இயற்கையோடு இணைக்கும் வல்லமை பெற்றிருப்பது செக்ஸ் ஒன்னுதான். ஆனால் அது எவ்வித குற்ற உணர்வுமில்லாம -குறிப்பிட்ட இடைவெளியில கிடைக்கனும் -எப்போதைக்கும் அவெய்லபிளா இருக்கனும். இது மட்டும் சாத்தியமாகி போனா நீங்க சொல்ற பற்றி எரியும் பிரச்சினைகள் எல்லாம் தானா அணைஞ்சு போயிரும்.

உதாரணத்துக்கு ஒன்னை மட்டும் டச் பண்றேன்.

மின்சார பற்றாக்குறைய ஓவர் லுக் பண்றதுக்கு அணுமின்சாரத்தை உற்பத்தி செய்ய அவுட் டேட்டட் ஃபார்முலாவை கொண்டு அணு உலைகளை ஸ்தாபிக்க துடிக்கிறாய்ங்க. லேட்டஸ்டா பிரதமரே அணு உலை எதிர்ப்பாளர்கள் வன்முறைய தூண்டுவதா புகார் சொல்லியிருக்காரு.அடுத்தது என்ன? அடக்குறைதேன்.

மின்சாரம். இதன் உபயோகங்கள் பலப்பலவா இருந்தாலும் அம்பானி முதல் கிறிஸ்டியான் பேட்டை அம்புரோஸ் வரை மின்சாரத்தை தேடறது ஒளி மற்றும் ஒலிக்காக.

ஒளியில்லேன்னா இருட்டு மண்டும். இது மரணத்தை ஞா படுத்தும். ஒலி இல்லேன்னா பேரமைதி நிலவும். இதுவும் மரணத்தை ஞா படுத்தும். செல் ஃபோனை சார்ஜ் பண்ண முடியாது. கம்யூனிகேஷன் பாதிக்கும். தனிமை மரணத்தை ஞா படுத்தும்.

மன்சன் அரண்டு போயிர்ரான். என்ன வேணம்னா செய்துக்க எனக்கு மின்சாரத்தை கொடுங்கற நிலைக்கு வந்துர்ரான்.

செக்ஸிலான உச்சத்தை அடையும் வாய்ப்பு பெற்றவன் /தன் செக்ஸ் பார்ட்னருக்கும் உச்சத்தை தரும் திறம் படைத்தவன் மரணத்தையே தரிசிச்சவனாயிர்ரான். அவன் மரணத்தின் நிழல்களான அமைதிக்கோ ,தனிமைக்கோ, இருட்டுக்கோ அஞ்சவே மாட்டான்.

நான் வேணம்னா சேலஞ்ச் பண்ணி சொல்றேன். பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை கொடுக்க சொல்லுங்க. மின் உபயோகம் பாதிக்கு மேல குறைஞ்சுரும்.

மின்சாரத்தை வச்சு உற்பத்தி செய்யறாய்ங்க. ஏன்? இயற்கை அவனுக்கு தந்த ஆணை உருவாக்கம் -பரவுதல் . இதை செக்ஸுவலா செய்யமுடியாத குறைக்கு உற்பத்தி.

அந்த உற்பத்திகளை வாங்கி வீட்டை நிறைக்கறாய்ங்க.ஏன்? அவிகளுக்குள்ள ஒரு வெற்றிடம். இயற்கையின் முழுமுதல் எதிர்ப்பார்ப்பு உருவாக்கம் - பரவுதல். இதை நிறைவேற்ற முடியாத காரணத்தால் சப்காஷியஸா அவிக இன்ஃபிரியரா ஃபீல் ஆகறாங்க. கில்ட்டியா ஃபீல் பண்றாங்க.

அதனால தான் ப்ளாஸ்டிக்,எலக்ட்ரானிக் குப்பைகள் ஹாட் கேக்கா சேல் ஆகி வீடுகளை நிறைக்குது. இந்த குப்பைகள் வீட்டை குப்பை மேடாக்க முடியுமே தவிர மனிதனில் உள்ள வெற்றிடத்தை நிரப்பவே முடியாது.

அது சரி மின்சாரம் போதலின்னா காற்றாலை, கடல் அலைன்னு என்னென்னமோ சொல்றாய்ங்களே அது எதையாவது ட்ரை பண்ணாம ஆட்சியாளர்கள் எதுக்கு அணுமின்சாரத்தை ஆப்ட் பண்றாய்ங்கன்னு கேப்பிக. சொல்றேன்.

மனிதர்கள் ஸ்தூலமாக பல்வேறு செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களை உந்துவது இரண்டு இச்சைகளே. ஒன்று : கொல்வது இரண்டு: கொல்லத்துடிப்பது.

இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம் . மக்களை போலவே ஆட்சியாளர்களுக்கும் செக்ஸ் நாட் அவெய்லபிள். ஆகவே அவிகளோட கொல்லும்-கொல்லப்படும் இச்சை செக்ஸ்ல நிறைவேற வாய்ப்பில்லாததால நேரடியா கொல்லப்பார்க்கிறாய்ங்க. தேர்தல் வந்தா அரசியல் ரீதியா கொல்லப்பட துடிக்கிறாய்ங்க.

இப்படி ஒவ்வொரு பிரச்சினைக்கும் மூல காரணம் செக்ஸ் செக்ஸ் செக்ஸ். செக்ஸ் தவிர வேறில்லை. அதனாலதான் நான் செக்ஸை பத்தி எழுதறேன்.

பிரச்சினைகளோட சில்லிவேர்களை பிடிச்சுக்கிட்டு சில்லியா ஊசலாட நம்மால முடியலிங்க. சாரி..

Sunday, January 30, 2011

பத்தாம் பாவமும் படுக்கையறை சுகமும்

ஜோதிட விதிகளின் படி பத்தில் (லக்னம் முதல் 10 ஆவது ராசியில்) ஒரு பாவியாவது  இருக்கவேண்டும் அ ஒரு பாம்பாவது இருக்கவேண்டும்ங்கறாய்ங்க. பத்துல பாவி இருந்தா அவன் அகிம்சாவாதியாவா இருப்பான்? நோ. பத்துல பாம்பு இருந்தா அவன் சட்டப்படி வியாபாரம் பண்றவனாவா இருப்பான் ? நோ ஆனாலும் எதுக்கிந்த பாவி,பாம்பு சமாசாரம்? இதுக்கும் படுக்கையறை சுகத்துக்கும் என்ன சம்பந்தம்? கேப்பிக சொல்றேன்.

9ஆவது இடத்தை தர்ம ஸ்தானம்னும் 10 ஆமிடத்தை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. இதுல பெரிய சூட்சுமம் இருக்கு. 9ங்கறது சொத்தை காட்டற இடம். உங்க கணக்குல தர்மம் இருந்தாதான் சொத்து  இருக்கும். சொத்து இருந்தா நிலையான வருமானம் இருக்கும். கு.ப வருமானவரியை குறைக்கவாச்சும் செய்விக.

பத்துங்கறது கர்ம ஸ்தானம்.அதாவது நீங்க என்.............னா தொழில் செய்தாலும் அது என்ன்ன்னாஆஆஆஆஆ நாணயமான தொழிலா இருந்தாலும் உங்களுக்கு வர்ர ஒவ்வொரு பைசா பின்னாடியும் அதை உங்களுக்கு கொடுத்தவனோட கருமமும் வந்து சேரும்.

இதை பாலன்ஸ் பண்ணா நல்லாருக்குமே - இது ரெண்டும் சேர்ந்திருந்தா நல்லாருக்குமேனுதான் இந்த ரெண்டு பாவாதிபதியும் சேர்ந்தா நல்லது .அது தர்ம கர்மாதிபதியோகம்னு சொல்லியிருக்காய்ங்க. சொத்தும் இருக்கும் -நிலையான வருமானமும் இருக்கும் -கூடவே கருமமும் செய்விக (தொழில்) சாரிட்டியும் அமோகமா நடக்கும் . இது பெட்டருனு நினைச்சாப்ல இருக்கு.


ஆனால் எத்தனையோ வள்ளல்களோட வாரிசுகள் இன்னைக்கு பிச்சையெடுக்கிறதை பார்க்கிறோம் படிக்கறோம். இது எப்டி? எப்டி? எப்டி? 

நீங்க மூதாதையரோட சொத்துல கிடைச்ச பணத்தால சாரிட்டி பண்ணா அந்த மூதாதையர்களோட கருமம்தான் தொலையும், உங்க கருமம் தொலையாது. இன்னம் சொல்லப்போனா அவிக கருமம் வந்து உங்க தலையில உட்காரும்.

சரிங்க .. நான் தொழில் செய்து பொருளீட்டி தர்மம் பண்றேம்பிங்க. தொழிலே கருமம்தேன். வியாபாரம் த்ரோஹ சிந்தஹா.

நாம பாவம்ங்கறது பென்சில் எழுத்து -புண்ணியங்கறது ரப்பர் மாதிரினு நினைக்கிறோம். அது தப்பு. அன்னமாச்சாரி "தெகது பாபமும் -தீரது புண்ணியம்"ங்கறாரு.

பாவம் அறுந்து போகாது. புண்ணியம் தீர்ந்து போகாதுனு அர்த்தம். ரெண்டும் ரெண்டு ட்ராக்ல ஓடிக்கிட்டே இருக்கும். அப்ப நான் தொழிலே செய்ய கூடாதானு கேட்கலாம். செய்யலாம். ஆனால் நான் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டறேன், நான் கர்ண மகா பிரபு தானம் பண்றேன் தர்மம் பண்றேன்னெல்லாம் கிளம்ப கூடாது.

நம்ம தேவைக்கு+ எதிர்கால பாதுகாப்புக்கு  பொருளீட்டின பிறவு  ஃப்ரீயா உடுமாமேனு  விட்டுரனும். இன்னைக்கிருக்கிற நிலைமைக்கு ஒழுங்கு மரியாதையா மானம்,ஈனம்,சூடு ,சுரணை எல்லாத்தயும் விட்டுட்டு "பொழப்ப" பார்த்தா ,சிக்கனமா வாழ்ந்து பத்துரூபா எடுத்து வச்சா இந்த மாதிரி ஒரு திட்டத்தோட வாழ்க்கைய ஆரம்பிச்சா ஒரு பத்து வருஷம் தொழிலை தொழிலா செய்தா போதும் . அப்பாறம் ரிட்டையர்டு லைஃபுக்கு வந்துரனும்.

உனக்கு பசி . ரோட்டோரம் ஏதோ தோட்டம் இருக்கு. பசிக்கு ரெண்டு பழம் சாப்பிட்டே. ரெண்டை மடில கட்டிக்கினே. போய்க்கினே இரு. நீ என்ன பாடையில போறவரை  கூடையில எடுத்து  கூப்டு கூப்டு தர்மம் பண்றது? தோட்டத்துலயே விட்டுரு.  உனக்கு பின்னாடி பசியோட வர்ரவன் ரெண்டை தின்னுட்டு ரெண்டை மடில கட்டிக்கிட்டு போவட்டும்.

அடடா..பதிவு  ரெம்ப சீரியஸா போயிட்டாப்ல இருக்கு.  பத்து தொழில் ஸ்தானம். இங்கன பாபகிரகமோ,பாம்புகிரகமோ இருந்தாதேன் மனுசன் "எதையோ" ஒன்னை பண்ணி துட்டு சேர்ப்பான். துட்டு சேர்த்தாதேன் பொஞ்சாதி. ( கொண்டு வந்தால் மனைவி).

பணம் சம்பாதிக்கனும்னா நீங்க செய்யவேண்டியதெல்லாம் ரெண்டுதேன். ஒன்னு எதிராளிய  கொல்லனும் (ஃபிசிகலா இல்லிங்க பாஸ்..சைக்காலஜிக்கலா)  இல்லை நீங்க சாகனும். தொழில்ல நீங்க எந்த அளவுக்கு உங்களை சனம் கொல்ல அனுமதிக்கிறிங்களோ அந்த அளவுக்கு கொலைவெறி ஏறும். இது தீர நீங்க செக்ஸ்ல இறங்க வேண்டி வரும்.செக்ஸ் லைஃப் ஓஹோ தான்.

கொல்றதுன்னா எதிராளியோட  ஈகோவை கொல்றது கூட கணக்குதேன். நீங்க கொல்ல ஆரம்பிச்சா பணம் சம்பாதிக்கமுடியாது . உங்க ஈகோவை எதிராளிகள் கொல்ல அனுமதிச்சா சுராங்கனிக்கா சேக்கு ( செமை பணம்)

இதுக்கு சின்னதா ஒரு  உதாரணம்:


கடைக்காரர்: என்னண்ணே .. ஒரே தாட்டியா நாலணா குறைக்க சொன்னா எப்டி? இதுல எனக்கு வர்ரதே அஞ்சு பைசாதேன்

வாங்க வந்தவர்:யோவ் நான் ட்ராயர் போட்ட வயசுலருந்து இப்படி அஞ்சு பைசா அஞ்சுபைசானு சொல்லியே அஞ்சு காம்ப்ளெக்ஸ் கட்டிட்டே.ஏன்யா இப்படி பீலா விடறே.சரி ஒழி ..இந்தா பணம் , சரக்கை அனுப்பி வை

இதுல கடைக்காரரோட செக்ஸ் லைஃப் சூப்பரா இருக்கும். வாங்க வந்தவரோ கொல்லும் இச்சை இங்கேயே நிறைவேறிட்டதால அவரோட செக்ஸ் லைஃப் நியூஸ் ரீல் மாதிரிதேன் இருக்கும்.

தொழில் ஸ்தானத்துல பாவகிரகம்,பாம்புகிரகம் உள்ளவன் எதையோ உருட்டி பிரட்டி, பொய்யோ,புரட்டோ பண்ணி ஒப்பேத்தி பணம் சம்பாதிச்சுருவான் - குடும்பத்துல ,சமூகத்துல அவனோட சர்வைவல் ஓகே ஆயிரும். நேச்சுரலாவே அவனுக்குள்ள தன்னம்பிக்கை பெருகும்.ஆண்மை பெருகும். கில்மால விளையாடுவான்.

பை சான்ஸ்.  பத்துல சுபகிரகம் இருக்குதுனு வைங்க உஞ்ச விருத்திதேன். அவன் ஆன்மீக ரீதியில பெரிய ஆளா வளரலாம்.ஆனால் லோகாயதமா பார்த்தா அதுவும் செக்சுவலா பார்த்தா வீக்குதேன். இதை வீக்குனு சொல்ல முடியாது. சுலபமா தாண்டிருவான்.

சரிங்கண்ணே என் ஜாதகத்துல பத்துல கிரகமே இல்லையேனு ஃபோன் பண்ணிராதிங்க.அந்த பாவம் காலியா இருந்தாலும் அந்த பாவாதிபதி பாபியா சுபனா எங்க நின்னாரு பத்தை ஆரு பார்க்கிறாய்ங்கங்கறத பொருத்து தொழிலும் , கில்மாவும் அமையும். உடு ஜூட்டு..

Thursday, January 27, 2011

ஒன்பதாம் பாவமும் -கில்மாவும்

நேத்து ராசிச்சக்கரத்தை வெட்டி படுக்க போட்டு நிமிர்த்தி பக்கத்துல ஒரு மனிதனோட படத்தையும் வச்சுப்பார்க்க சொன்னேன். இந்த வகையில பார்த்தா 9 ஆம் பாவம் முழங்காலை காட்டுது. முழங்காலுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்? படங்களை பாருங்க..(ஹி ஹி.. மேட்டர் இத்தோட முடிஞ்சுராதுங்கன்னா)



அப்பா: அப்பா சொத்து:அப்பாவழி உறவு:சேமிப்பு: தூரதேச தொடர்புகள்:தீர்த்தயாத்திரை: இப்படி பல விஷயங்களை காட்டற பாவம் 9 ஆம் பாவம். இதை தர்மஸ்தானம்/பித்ரு பாக்யஸ்தானம்னெல்லாம் சொல்வாய்ங்க. இது கோணஸ்தானம். இங்கன சுபர்கள் இருந்தா சூப்பர். இங்கன சுபர்கள்,சுபபலமா இருந்தா அப்பாங்கிறவர் எப்படி இருப்பாருனு சொல்லிர்ரன்.



"ஏன் நைனா! ஏதோ கண்ணாலத்துக்கு மிந்திதான் ராத்திரி வீடு திரும்ப பத்து பதினொன்னு ஆச்சு. இப்ப கண்ணாலமாகி ஒரு உசுரு உனக்காக காத்துக்கினு கீதுனு தெரியாது.. ராத்திரி எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேரப்பாருப்பா ...இன்னாது ஓவர் டைமா? நைனா! கடவுள் புண்ணியத்துல சொத்து சுகமிருக்கு, அப்பன் நானும் ஏதோ கொஞ்சம் சம்பாதிச்சு வச்சிருக்கேன். ஏதோ உத்யோகம் புருச லட்சணம்னு வேலைக்கு போனமா வந்தமான்னு இல்லாமா ..எதுக்குப்பா இதெல்லாம். கால் கடுதாசிய வீசியெறி.. நான் சின்னதா ஒரு வியாபாரம் வச்சுத்தரேன். காத்தால 9 மணிக்கு போனமா மதியம் வீட்டுக்கு வந்து சாப்டு கொஞ்ச நாழி தூங்கனமா அஞ்சுமணி வாக்குல போனமா ராத்திரி 9க்கெல்லாம் வந்தமான்னு இருக்கனும்பா"


ஓகே கோணஸ்தானமா இங்கே பாபகிரகம் இருக்குதுனு வைங்க ஐ மீன் கேந்திராதிபதிகள் ஆராவது.


"இன்னாடா டைம் இன்னா ஆவுது பார்த்தியா பத்து ஆகுது. ஒரு ஆம்பளை இன்னம் ஊடு திரும்பலைன்னா ஒரு பொம்பளை இன்னா நினைக்கும். சின்ன ஊடு வச்சிக்கினு கீறானு நினைச்சுட்டா .. அட அவன் அப்பனுக்கு ஃபோனை போட்டு புலம்பினா.. நான் பழைய படி அரிவாளை தூக்கனுமா இன்னா தெரிலை. இன்னையோட இதெல்லாம் ஸ்டாப்பு.. ஒழுங்கு மரியாதையா நாளைலருந்து ஏழு எட்டுக்கெல்லாம் ஊட்டை வந்து சேர்ர வழியப்பாரு. இல்லைன்னா மருவாதி இருக்காது"


இந்த மாதிரி ஒரு அப்பன் இருந்தா தாளி ஊர்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமே தவிர மைண்ட்ல காம்ப்ளெக்ஸ் இருக்குமா ? ஊஹூம். கில்மாவுல விளையாட இதைவிட பெட்டர் என்விரான்மென்ட் என்ன வேணும்.

இதுவே 9 ஆமிடத்துல 6,8,12 அதிபதி யாராவது மாட்டினா என்ன ஆகும்?

ஆறுக்கதிபதி மாட்டினா அப்பன் பேஷண்ட்/கடன் காரன்/கோர்ட்டு கேஸுனு அலைஞ்சிக்கிட்டிருப்பான். அவனுக்கு பிறந்த நீங்க வேற எப்படி இருப்பிங்க? விரையென்று போட்டால் சுரையொன்று முளைக்குமா என்ன? எட்டுக்கதிபதி மாட்டினா அப்பன் காலி அ அண்டர் கிரவுண்ட் அ அவரோட குத்துப்பழி கொலைப்பழி. 12க்கு அதிபதி மாட்டினா தாத்தா சொத்தெல்லாம் அப்பா ரெஜிம்லயே காலி. இந்த மாதிரி சிச்சுவேஷன்ல உங்க ஜீன்ஸ் எப்படி இருக்கும்? உங்க கேரக்டர் எப்படி இருக்கும்? உங்க எக்கனாமிக்கல் கண்டிஷன் எப்படியிருக்கும்? உங்க ஹெல்த் எப்படி இருக்கும்? உங்க முழங்கால் எப்படி இருக்கும்?

9ங்கறது பித்ருஸ்தானம், சூரியன் பித்ருகாரகன். சூரியந்தேன் எலும்புக்கெல்லாம் இன் சார்ஜு.இவர் தேன் கால்ஷியத்தை பாடி க்ராஸ்ப் பண்ணிக்க உதவுற பார்ட்டி. 9ஆம்பாவம்+ சூரியன் ரெண்டு பேரும் கெட்டாய்ங்கனு வைங்க பேக் கிரவுண்ட் காலி. கைய ஊனி கரணம் போடவேண்டியதுதான்.கூனி குறுகி காரியத்தை முடிக்கனும். இப்படி குனிஞ்சு குனிஞ்சு முதுகெலும்பே பிரச்சினை கொடுக்க ஆரம்பிச்சுரும்னா முழங்காலை பத்தி தனியே சொல்லனுமா என்ன?


நான் வெறும் அப்பாவ பத்தி மட்டும் தேன் அனலைஸ் பண்ணேன். மத்த ஐட்டத்தையெல்லாம் நீங்களே ஒரு ஓட்டு ஓட்டிப்பாருங்க. அப்பாறம் முருகேசு ஜல்லியடிக்கிறாருப்பான்னிருவாய்ங்க.

நாளைக்ககு பத்தாம் பாவத்தை பத்தி பீராஞ்சுருவம். படம் தானே கீழே ஒரு மேட்டர் இருக்கு அதை படிச்சுருங்க அதுக்கு கீழே படம்..


ஆமாங்கண்ணா ஆனந்த விகடன்ல நம்ம இனத்தை (வலைப்பதிவர்கள் -ப்ளாகர்ஸ்) வாரு வாரு்னு வாரியிருக்காய்ங்களே.. அதைஎல்லாம் கிழிச்சு ஒரு பதிவ போட்டிருக்கேனே ..உங்க கருத்தை தெரிவிச்சுட்டிங்களா?


என்ன? இல்லியா.. இது நம்ம வீட்டு கல்யாணம் பாஸு.. இந்த பதிவுக்கு எத்தீனி கமெண்ட் விழுதோ அத்தீனி டிகிரி ஜுரம் விகடனுக்கு வரும். மத்த பத்திரிக்கைக்காரனுக்கும் பரவும். இல்லாட்டி நம்ம தன்மானத்தை சீண்டி கிட்டே கிடப்பாய்ங்க. தூசு விழறப்பயே தட்டி விட்டுரனும். இல்லாட்டி தூண் விழும். என்ன பதிவுக்கான லிங்கா? இதோ இங்கன அழுத்துங்க





Wednesday, January 26, 2011

எட்டாம் பாவமும் இன உறுப்பும்

இந்த தலைப்புல  1 முதல் 7 பாவங்களை அனலைஸ் பண்ணியாச்சு. இன்னைக்கு எட்டாம் பாவம்.இது  ஜாதகரோட ஆயுள்,கொலை,தற்கொலை விருப்பம், விபத்துகள்,செயிலுக்கு போறதை ,ஐபி போடறதை காட்டற இடம். இதுக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். படத்துல உள்ள ராசி சக்கரத்தை பாருங்க. 12 டப்பா இருக்கு.இதை இதை அப்படியே ரைட் டாப்ல ஒரு டப்பாவை விட்டுட்டு கட் பண்ணி படுக்கப்போடுங்க. படுக்கப்போட்டதை அப்படியே நிமிர்த்துங்க. பக்கத்துல ஒரு மனிதனை நிற்க வைங்க. 12 டப்பாக்களுக்கு நேர மனிதனோட எந்த அங்கம் வருது பாருங்க. இந்த கணக்குல பார்த்தா எட்டாம் பாவம் "பலான" பார்ட்டை காட்டும்.

இன்னாங்கடா இது ஒரே பாவம் லுல்லாவையும் காட்டுது, ஆயுளையும் காட்டுது. இது ரெண்டுத்துக்கும் இன்னா சம்பந்தம்னு  ஒரு வேளை கில்மாவால அல்பாயுசாயிருவமோ? பொட்டுன்னு போயிருவமோனு டர்ராயிராதிங்க.

காந்தியோட மூணு குரங்கு பொம்மைகளுக்கு ஃபோஸ் கொடுத்த கமல் நாலாவதா ஒரு ஃபோசை சேர்த்தாரு. ஞா இருக்கா?

வள்ளுவர் "யாகாவாராயினும் நா காக்க"ன்னாரு. ( நா - நாக்கு) நாக்கை மட்டுமே இல்லிங்கண்ணா எல்லாத்தையும் காக்க வேண்டியதுதான். சிலருக்கு செல்ஃப் கண்ட்ரோல் பை பர்த் வந்துருது. அல்லாரும் அப்டமன் கார்ட் போட்டுக்கிட்டா வெளிய வராய்ங்க.யாருக்கு எட்டாமிடம் வீக்கோ அவிகளுக்கு மட்டும் பல்பு பெருசாயிருது.

நாக்கை விடுங்க .அது ஸ்தூலமான வஸ்து . வள்ளுவர் கூட "தீயினாற்சுட்டபுண் உள்ளாறும். ஆறாதே நாவினாற்சுட்ட வடு"ன்னு சொல்லி வச்சாரு. ஜஸ்ட் பார்வைய எடுத்துக்கங்க.

நீங்க விஜய் மாதிரி யூத்தான ஃபிசிக். ஒரு ஆன்டிய கேஷுவலா பார்க்கிறிங்க. என்னடா.. அபுதாபில இருக்கிற நம்ம கசின் மாதிரியிருக்கேன்னு கூட பார்த்திருக்கலாம். ஒரு வேளை அந்த ஆன்டியோட செக்ஸ் லைஃப்ல எதுனா பிரச்சினை இருந்து, புருசங்காரனுக்கு தன் கப்பாசிட்டில சந்தேகம் இருந்து, அதுவே சந்தேக புத்தியாகி புகைஞ்சுக்கிட்டு கிடக்குனு வைங்க.

ஆன்டி ஒரு அரை செகண்ட் யோசிப்பா. இந்த பையன் பார்க்கிறதை ஆத்துக்காரரு பார்த்துட்டா வம்பு நாமளே முந்திக்கிட்டு சொல்லிருவம்னு " என்னங்க ..அந்த பனியன் போட்ட பையன்  குறு குறுன்னு பார்த்துக்கிட்டிருக்கானு என்னனு விஜாரிங்க" ன்னிட்டா மேட்டர் ஓவர்.

ஆக எல்லா பார்ர்ட்டையும் போல ஜனனேந்திரியத்தையும் காக்கவேண்டிய அவசியம் இருக்கு. காக்க காக்கன்னா அஜால் குஜால் வேலையில இறங்காம இருக்கிறதே இல்லை. சுத்தம்,சுகாதாரம்,காண்டம் எல்லாமே வருது.

பெண்குட்டிகள் மேட்டர்ல (மலையாள பாஷைங்கோ) இது ரெம்ப முக்கியம்.(பேட் உபயோகிக்கிறது - அல்ப சங்கியைக்கு பிறகு கழுவறது - கால் கழுவறச்ச கீழ் நோக்கி கழுவறது -உபயம்: ஆ.வி.ல ஞானி சார்.

ஒரு பையன் ரெம்ப உத்தமன். குளிக்கிறச்ச சாஸ்திரப்படி இடது கையால கூட தொட மாட்டான். ( எட்டாம்பு படிக்கிற சமயம் நடந்தசம்பவம் இது)

திடீர்னு கின்னஸ் சாதனைக்கு போல ஒரு வாரமா  தொடர்ந்து கிட்டார் வாசிக்க ஆரம்பிச்சான். "தத் என்னடா இது"ன்னா  பயங்கர நமைச்சல் வலி வீக்கம்னான். படக்குனு டாக்டர்(?) பண்டரிக்கிட்ட கூட்டிப்போனோம். அவர் தோரகா பண்ணி உறிச்சு (பிரசவ அலறல்) வென்னீர்ல அலம்ப சொன்னாரு.


இப்படி காக்க காக்கன்னா 108 மேட்டர் இருக்கு. கில்மா கூடாதுங்கறது மட்டும் பாதுகாப்பு முறை கிடையாது. அணை நிரம்பினா ஒன்னு சானலை திறந்துவிடனும். இல்லாட்டி அதுவே வழிஞ்சுரும். தெலுகு கங்கா கால்வாய்ல கண்டவன் பைப் போட்டு உறிஞ்சிர மாதிரி உறிஞ்சினா சென்னைக்கு குடி  நீர் வந்து சேராதில்லை.

மேலும் இன்னொரு உபகதை. ஒரு பழைய தோஸ்த். எதிர் வீட்டு பெண்ணை பிக் அப் பண்ண என்ன செய்தான் தெரியுமா? அவனோடது ஓவர் சைஸாம். விடியல்ல அந்த பொண்ணு மாடிக்கு வர்ர நேரமா பார்த்து தூக்கத்துல போல கண்காட்சி ஏற்பாடு பண்ணுவானாம். காக்கா கொத்தி விதைய எடுத்துட்டு போயிட்டா என்னடா பண்ணுவேன்ன பிறவுதான் அடங்கினான்.

மேலும் ஐ.பி போடறது, சிறை ,கொலை தற்கொலைக்கெல்லாம் இவனோட ஜனனேந்திரியம் காரணமாகிற சம்பவங்கள் நிறைய இருக்கு.

ஐ.பி: (மஞ்ச கடுதாசிங்கோ)

ஒரு எலக்ட்ரிக்கல் வைர் மேன். அவனுக்கு கண்ணாலமாகி பொஞ்சாதி,புள்ளை குட்டி எல்லாம் இருக்கு. வயசு முப்பது சில்லறை.  கோ டெனன்டோட மகள் ஒருத்தியோட படிப்பை ( மாசத்துக்கு சில ஆயிரம் ரூபாதேன்) ஸ்பான்சர் பண்ணாரு. அஞ்சு வருசம்.  நல்ல எண்ணத்தோட பண்ணினா தனக்கு மிஞ்சி தர்மங்கற சூத்திரமெல்லாம் ஃபாலோ பண்ணியிருப்பாரு. "கெட்ட' எண்ணத்தோட பண்ண ஆரம்பிச்சு அந்த குட்டியும் "வடை"உனக்குத்தேன்னு சொல்லி (இவர் ஜொள்ளி) சொல்லியே (இவர் ஜொள்ளி ஜொள்ளியே) அஞ்சு வருசம் ஓடிப்போச்சு.

நம்மாளு ஆட்டை தூக்கி மாட்ல போட்டு மாட்டை தூக்கி ஆட்ல போட்டு (வடை நமக்குத்தேங்கற நம்பகத்துல)  அஞ்சு வ்ருசத்தை ஓட்டிட்டாரு. செக்சுவல் எதிர்பார்ப்புகளோட கமர்ஷியல் எதிர்பார்ப்புகளும் இருந்தது.

வடைய காக்கா தூக்கிட்டு போயிருச்சு. நம்மாளு மஞ்ச கடிதாசி கொடுத்துட்டு  ..வரை தாடி வளர்த்துக்கிட்டிருக்காரு.

சிறை:

ஒரு சகோதர பத்திரிக்கையாளர் ( ரெஃபர் டு: பாண்டவர் & கௌரவர்)  ரெண்டு பொஞ்சாதி. தினசரி எப்படியாச்சும் ரூ ஆயிரம் பண்ணிருவாரு. (இத்தனைக்கும் பத்திரிக்கை நிர்வாகம் தர வேண்டிய சம்பள மேட்டர்  லேபர் கமிஷன் டேபிள்ள பெண்டிங்)   ராயலா ஓடிக்கிட்டிருந்தது. ஒரு சமயம் ஏதோ அசந்தர்ப்பமா? இவரோட ஆதாயம் இவரோட லாலா -மசாலாவுக்கே போதலியா தெரியலை. பெரிய வீட்டுக்கு அரிசி மூட்டை அனுப்பலை. தாளி அந்த மாராஜி இவன் மேல டவுரி அட்ராசிட்டி  கேஸை கொடுத்துருச்சு. பார்ட்டி கம்பி எண்ண வேண்டியதாயிருச்சு.

கொலை,தற்கொலைல்லாம் பேட்டைக்கு எட்டு  நடந்திருக்கும் . ஒரு தாட்டி கொசுவர்த்தி சுருளை உங்க முன்னாடி வச்சு சுத்திப்பாருங்க.

இதான் கில்மாவுக்கு எட்டாமிடத்துக்கும் உள்ள லிங்க். இந்த இடம் காலியாயிருக்கிறது பெஸ்ட். இதனோட அதிபதி கூட 6 அ 12 ஆமிடத்துல நின்னாதான் சேஃப். அப்படி ஏதேனும் கிரகமிருந்தா அது பாபகிரகமா இருந்தா பெட்டர். (பாபர்கள் ஆயுளை கொடுத்து இம்சை +நோயையும் கொடுப்பாய்ங்க. ஸ்டேஷனுக்கே போனாலும் லாக்கப் டெத் நடக்காது - சிறைக்கு கூட்டிப்போறச்ச என்கவுண்டர் நடக்காது .ஒரு மாதிரியா  சமாளிச்சுரலாம்)

ஆனாஇங்கன சுபர்கள் இருந்தா  ரெம்ப லொள்ளு பண்ணமாட்டாய்ங்க.ஆனா திடீர் மரணத்துக்கு  வாய்ப்புண்டு.கில்மாவை பொருத்தவரை இங்கன சுக்கிரன் இருந்தா நல்லதுன்னு ஒரு விதி. எட்டுங்கறது மரணத்தை காட்டுது. சுக்கிரன் கில்மாவுக்குரிய கிரகம். ஆக இந்த அமைப்புல பிறந்தா தெலுங்கு பழமொழி சொல்றாப்ல ( எத்தய்தே துன்னி சாவாலா -மொகவாடைதே ....சாவாலா)  கதை சுபமா ச்சீ சுகம்மா முடியும்.

ஆனால் ஜாதகர் சுக்கிரனோட இதர காரகங்கள்ள ( வீடு வாகனம்) இறங்கிட்டா ஆட்டோ மெட்டிக்கா பேட்டரி வீக் ஆயிரும்.

ஆனால் இந்த அஷ்டம சுக்கிரன் ரிஷப,துலா லக்னத்துக்கு மாட்டினா ஷாமியானாமேல ப்ரேக் டான்ஸ் ஆடின கதையாயிரும்.

இங்கன லக்னாதிபதி மாட்டினா அதீத சுய இன்பங்கள்/ விந்து ஊறுமுன் புணர்ந்து காஞ்ச கருவாடாயிர்ரது/தற்கொலை நடக்கலாம்

இங்கன தனபாவாதிபதி மாட்டினா பிச்சையெடுக்கனும், வீட்டுக்காரி விரட்டிவிட்டுருவா.( இப்படி ஒரு கேஸு இன்னைக்கும் ஒரு  புதையல்  மேட்டரா மந்திரவாதிகளை விரட்டிக்கிட்டிருக்கு), கண் டப்ஸ். ஊமையாகலாம்

சோதராதிபதி இங்கே மாட்டினா சவுண்ட் பாக்ஸ் அவுட். உடன் பிறப்புகளுக்கு டிக்கெட்.அ அவிகளால இவருக்கு டிக்கெட், விபத்து

மாத்ருபாவாதிபதி மாட்டினா: தாய்,வீடு,வாகனம்,கல்வி காலி. ஹார்ட் ட்ரபுள் வரலாம்

புத்ராதிபர் மாட்டினா: மலடாகலாம் . வாரிசுகள் உயிரிழக்கலாம். பெருத்த அவமானம்

ரோகாதிபர் மாட்டினா: சத்ரு ஜயம்,ரோக நிவர்த்தி, ருண விமுக்தி, விவகார ஜெயம்

களத்ராதிபர் மாட்டினா: மனைவிக்கு மரணம், மனைவியால் மரணம், அ மனைவியை கொல்லலாம்

அஷ்டமாதிபர் இருந்தா ( தன் பாவத்துல பாவாதிபதி ஆட்சி பெறுவது)  அதிக வேதனையில்லாத தற்கொலை. அ தன் சொத்தை தானே அழிச்சுர்ரது

பாக்யாதிபதி நின்னா: அப்பாவுக்கு டிக்கெட். அவர் சொத்தெல்லாம் காலி. கண்டம் விட்டு கண்டம் போகையில (தூரபிரயாணத்துல) கண்டம்

ஜீவனாதிபதி நின்னா: நெத்தி வேர்வை நிலத்துல ஒழுக வேலை செய்தா பிரச்சினையில்லை. ஏசி ரூம்ல இருந்தா என்னடா சத்தம்னு வெளிய வந்தா உத்தரம் சரிஞ்சு சாவு

லாபாதிபதி:அண்ணன் அக்கா காலி. அ அவிகளால ஜாதகர் காலி. எல்லாத்துலயும் நஷ்டம்

விரயாதிபதி: கஞ்சனாவார்." தேனிலவே போனாலு தனியாய் தானே போவா(னே)ரே" ரேஞ்சு

சரிங்கண்ணா நாளைக்கு மாமனார்,அப்பா,அவிக வழி சொத்து,  தூரதேச சம்பாத்தியம், சேமிப்பு, பக்தி பரவசங்கள், தீர்த்தயாத்திரைகள்,முழங்கால் எல்லாத்தயும் காட்டற 9 ஆமிடத்துக்கும் கில்மாவுக்கும் என்ன சம்பந்தம்னு பார்ப்போம்..

உடு ஜூட்

Saturday, January 15, 2011

சங்கீதமும் சம்போகமும்



சங்கீதம்ங்கறது அவாளோட ஜூரிஸ்டிக்சனுங்கற மாதிரி சனத்துக்கு ஒரு ஃபீலிங் இருக்கு. ஆனால் மரணத்தை -சம்போகத்தை நினைவுப்படுத்தற எந்த சங்கீதமும் நல்ல சங்கீதம்தான்.

ஒரு காலகட்டத்துல சம்போக காலத்து முக்கல் முனகலையெல்லாம் சங்கீதத்துல கொண்டுவந்தாய்ங்களே அவிக அது என்னவோ தங்களோட மார்க்கெட்டிங் உத்தின்னு நினைச்சுருக்கலாம். ஆனால் சங்கீதத்தோட இலக்கே அதான். இவிக லேட்.

செக்ஸுக்கும் சங்கீதத்துக்கும் நெருக்கமான ஒற்றுமை இருக்கு.மனித உடலுக்கும் -இசைக்கருவிகளுக்கும் இடையில  ஒரு ஒத்திசைவு  ஒற்றுமை இருக்கு. இன்னம் சொல்லப்போனா நிறைய இசைக்கருவிகள் செக்ஸுவல் பார்ட்ஸ் போலவே இருக்கும். உடலுறவு விருப்பத்துக்கும் சங்கீத ரசனை இசைக்கருவிகளை இயக்கறதுக்கும் நிறைய தொடர்பிருக்கு. அதனாலதான் அந்த காலத்துல பெண் பார்க்க போற பார்ட்டிங்க பெண்ணை பாடச்சொல்லி, வீணை வாசிக்க சொல்லி பார்த்தாய்ங்களோ என்னவோ?

அந்த பொண்ணு வீணைய எப்படி ஹேண்டில் பண்றாளோ அப்படி கணவனை ஹேண்டில் பண்ணாள்னா அவன் அலியாவே இருந்தாலும் ஆண்மையின் சிகரமாயிருவான்.

சம்போகத்துக்கு மட்டுமில்லே சங்கீதத்துக்கும் செக்ஸ் பவர் தேவை. அது உச்சத்துல உள்ள இசை அமைப்பாளன் ஆன்மீகத்துக்கு வந்தே ஆகனும். இதெல்லாம் பக்கத்து பக்கத்து பஸ் ஸ்டாப்புங்கப்பு.

என்னங்கடா இது சித்தூர் முருகேசன் படக்குனு சித்தார் முருகேசனாயிடாருனு மலைக்காதிங்க. நான் என்ன ராமதாஸா படக்கு படக்குனு ஸ்டாண்ட் மாத்திக்கறதுக்கு.

பிணத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே பணப்பெட்டி மீது கண்வையடா தாண்டவக்கோனேன்னுட்டு "உடலுறவு விருப்பமும் கிரக நிலையும்"ங்கற நம்ம சப்ஜெக்ட்லருந்து டீவியேட் ஆகாம இருக்கம்லே.

லக்னம் , இரண்டாம் பாவம் கெட்டா என்னெல்லாம் நடக்கும் -கில்மா மேட்டர்ல மேற்படி பாவ காரகத்வத்தோட முக்கியத்துவம் என்னனு பார்த்தோம். அடுத்தது மூன்றாமிடம்.மூன்றாமிடம் தேன் சங்கீதத்தையும் காட்டுதுங்கண்ணா.

அரசியல்ல வேணம்னா மூன்றாவது அணி மொக்கையா இருந்திருக்கலாம். ஆனால் ஜாதகத்துல 3 ஆவது பாவமும் ரெம்ப முக்கியங்கண்ணா. மூன்றாவது இடம் இளைய சோதரஸ்தானம், தைரிய ஸ்தானம், கர்ண ஸ்தானம், ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸை சங்கீத ரசனையை காட்டற இடம்.சவுண்ட் சிஸ்டத்தை காட்டற இடம்.

இங்கே பாவ கிரகம் இருக்கனும்ங்கறது ஒரு முக்கியமான விதி.  அதுசரி இங்கன சுபகிரகங்கள் இருந்தாதானே ரசனை நல்லாருக்கும்னு கேப்பிக.

நல்ல சங்கீதம் சம்போகத்துக்கு பின்னான அமைதிய தந்துருங்கண்ணா. கெட்ட சங்கீதம் சம்போகத்துக்கு தூண்டும்ங்கண்ணா..

அது சரி மூன்றாவது இடத்துல பாவகிரகங்கள்  இருந்தா இன்னம் எப்படியெல்லாம் அது கில்மாவுக்கு உதவும்னு இப்ப பார்ப்போம்.

இளைய சோதரஸ்தானம்:
உங்களுக்கப்புறம் குழந்தையே பிறக்காம போகலாம். அ ஆண் குழந்தைகளே பிறக்காம போயிரலாம். (தம்பிக இருக்கமாட்டாய்ங்க - தங்கைகள் மட்டுமே இருக்க வாய்ப்பு)

ஒரு வீட்ல ரெண்டாவது குழந்தை பிறந்தப்பறம் மொதல் குழந்தைக்கு அடிக்கடி உடம்பு நல்லால்லாம போயிரும் அ அது அடம் பிடிக்கிறது சாஸ்தியாயிரும். இன்னாபா மேட்டருன்னா ஊட்ல உள்ள சனம்லாம் "புதிய பிரஜைக்கு" அதிக முக்கியத்துவம் தர ஆரம்பிச்சுருவாய்ங்க, மொத குழந்தைக்கு தான் புறக்கணிக்கப்படறோம்ங்கற ஃபீலிங் வந்துரும். அப்ப அது பெற்றோரோட கவனம் தன் மேல திரும்பனும்னு தவிக்கும்.

இந்த எண்ணம் மூளைக்கு போயி அங்கன ஒரு சில கெமிஸ்ட்ரி எல்லாம் ஒர்க் அவுட் ஆகி நிஜமாலுமே ஜுரம்,வயித்துப்போக்குனு ஆரம்பிக்கும். அப்ப பெற்றோரோட கவனம் மூத்த வாரிசு மேல திரும்பும். இது சப்கான்ஷியஸா பெரியவனோட  மன அமைப்பு  மேல ஒரு  நிரந்தர பாதிப்பை ஏற்படுத்திரும்.

முக்கியத்துவத்துக்காக ஏங்கறது ஒரு மன நோய். இத விசாலமான படைப்புல நம்மை சுத்தி இருக்கிற 4 பேர் மத்தில முக்கியத்துவம் கிடைச்சுட்டா போதுமா? அதனால நமக்கென்ன கொம்பா முளைச்சுரப்போவுது.

ஆனா இந்த குழந்தை முக்கியத்துவத்துக்காக ஏங்கறதோட ,அந்த எண்ணம் பலமா இருந்து ,அது அதனோட பாடி மேல ஒர்க் ஆகி நோய் வர்ர ரேஞ்சுக்கு இருந்தா போட்டிகள் நிறைஞ்ச உலகத்துல எப்படி ஓவர் கம் ஆகமுடியும்? முடியாது.

அதனாலதான் 3 ஆவது இடத்துல பாவ கிரகம் இருக்கனும்னு விதிய வச்சாய்ங்க. தங்கச்சி பாப்பான்னா பெருசா பிரச்சினை இருக்காதுங்கறது  விதியை உருவாக்கினவுக எண்ணம்.

அன்னைக்கு சொசைட்டில இருந்த  மேல்சேவனிசத்தால இது ஒர்க் அவுட் ஆகியிருக்கும்.இன்னைக்கும் அப்பர் மிடில் க்ளாஸ்/மிடில் க்ளாஸ்/லோயர் மிடில் க்ளாஸ் ஃபேமிலீஸ்ல மேல் சேவனிசம் இருக்கு. ஏழைக்குடும்பங்கள்ள, BC,SC குடும்பங்கள்ள  கூட மேல் சேவனிசம் இருக்கு. "ஹும் பொட்டை குட்டியா பொறந்துவச்சிருக்கு .. நீ கொடுத்துவச்சது இவ்ளதான்"ங்கற ரேஞ்சுல கமெண்ட்ஸ் வரும்.

ஆனால் ஹை க்ளாஸ் ஃபேமிலீஸ்ல இந்த பிரச்சினை இருக்காது. அப்ப மூத்ததுக்கு இளைய சகோதரத்தின் வரவால/அது பெண் குழந்தையாவே இருந்தாலும்  முக்கியத்துவம் குறையறதுக்கு வாய்ப்பிருக்கு.

ஆக மூன்றாமிடம் எந்த அளவுக்கு கெட்டா அந்த அளவுக்கு நல்லதுங்கோ.. இதனால ஃபேமிலில நீங்களே எவர் க்ரீனா இருப்பிங்க - இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் -முக்கியத்துவத்துக்கு ஏங்கறது இத்யாதிக்கெல்லாம் வாய்ப்பிருக்காது.  இந்த என்விரான்மென்ட் உங்களை கான்ஃபிடென்டா வளர உதவும்.

கில்மாவுல முத தேவையே செல்ஃப் கான்ஃபிடன்ஸுதேன்.  மூன்றாவது இடத்துல வச வசனு சுபகிரகங்கள் இருந்து ,கிண்டர் கார்டன் மாதிரி உங்க கீழே நிறைய தம்பி தங்கைகள் இருந்து -அதுல யாராச்சும் மேன் ஆஃப் தி மேச் கணக்கா கொண்டாடப்பட்டா உங்க சைக்கலாஜிக்கல் செட்டப்பே நாறிப்போயிரும். இதனோட இம்பாக்ட் உங்களோட மேரீட் லைஃப், செக்ஸ் லைஃப் மேலயும் இருக்கும்.

மூன்றாம் பாவ காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கு என்ன சம்பந்தமுன்னு பார்க்கற சீக்வென்ஸ்ல இளைய சகோதரம் மேட்டரைதான் பைசல் பண்ணோம்.அடுத்தடுத்த காரகத்வங்களுக்கும் கில்மாவுக்கும் உள்ள தொடர்பை இப்ப பார்ப்போம்.

தைரிய ஸ்தானம்:
தைர்யே சாஹசே லக்ஷ்மீ. துணிஞ்சவனுக்கு துக்கமில்லை, துணிவே துணை,வீரன் இறப்பதே இல்லை,கோழை வாழ்வதே இல்லை - இந்த மாதிரி மேட்டர்லாம் நிறைய கேள்விப்பட்டிருப்பிங்க.

கில்மா மேட்டருக்கும் தைரியத்துக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். பையன் டிகிரி படிச்சிருப்பான். பத்தாங்கிளாஸ் அ இண்டர் படிச்ச பெண்ணையே தேடுவான். ஏன்னா பயம்.

நாய் எல்லாரையும் கடிக்காது. எவனுக்கு நாயை பார்த்ததுமே பேதியாகி வேர்வை குபுக்குனு பொங்குதோ அவனைத்தான் கடிக்கும். ஓடற நாயை கண்டா துறத்தற நாய்க்கு இளப்பம். பல வீடுகள்ள புருசனை பெஞ்ச் மேல ஏத்தி நிக்கவைக்காத குறையா புருசங்களை குறுக்கு விசாரணை பண்ணுவாய்ங்க. இந்த விசாரணையிலயே சப்த நாடியும் ஒடுங்கிரும். இவன் எங்கன கில்மால சாதனை படைக்கிறது. காலப்போக்குல இழந்த சக்தி வைத்தியர்களை பார்க்க வேண்டியதுதேன்.

தைரியம் பத்தாத பார்ட்டிங்க செக்ஸ் தொடர்பான மன நோய்களுக்கு இலக்காக நிறைய வாய்ப்பிருக்கு. ( நிர்வாணத்தை ரகசியமா ரசிக்கிறது -குழந்தைகள் மேல செக்ஸ் பவரை பிரயோகம் பண்றது -பெண்களோட உள்ளாடைகள் திருடி அதை முகத்துல உரசி இன்பம் அனுபவிக்கிறது )   சுய இன்ப பிரியர்களா மாறிரலாம்.

பெண்ணே சதா இன்செக்யூரிட்டில -டைலம்மா - குழப்பத்துல இருக்கிற பார்ட்டி . அவளுக்கு தில்லு துரைகளைத்தான் பிடிக்கும். தொடை நடுங்கிகளை நல்ல "தோழியா" ஏத்துக்கலாமே தவிர.. காதல் கீதல் எல்லாம் ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

வேணம்னா ஒரு தடவை காதலிச்சு -கர்பம் அதுஇதுன்னு நாறிப்போன குட்டிங்க சூடுகண்ட பூனைக்கணக்கா "பேதி"கேஸுகளை சூஸ் பண்ணிக்கலாம்.


கர்ண ஸ்தானம்:
இங்கன சுபகிரகங்கள் இருந்தா கெட்ட ஒலிகளை கேட்கிற "பாக்கியமே" கிடைக்காது. ( ஆஃப்டர் ஆல் முத்த சத்தம் உட்பட)  குழந்தைய முழு ஆண்மகனாவோ, பெண் மகளாவோ (?) மோல்ட் பண்றதுல ஒலிகளுக்கும் முக்கியபங்கிருக்குங்கோ. பாவகிரகங்கள் இருந்தா "கண்ட" சத்தங்களையும் கேட்டு கேட்டு  கில்மாவுல சூப்பர் ப்ளேயரா மாறலாமே கண்டி  டபுள் ட்யூட்டி பார்த்ததால  நடுவயசுலயே சவுண்ட் பாக்ஸ் அவுட் ஆயிரும்.

ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் ஜர்னீஸ்:

தெலுங்குல ஒரு பழமொழி. "திரிகி செடிந்தி ஆடதி -திரக்க செட்டாடு மகவாடு"  (ஊர்)சுத்தி கெட்டா பொம்பளை, சுத்தாம கெட்டான் ஆம்பளை. ஆம்பளை மட்டுமில்லை,பொம்பளை கூட சுத்தனும் - ஒரு மனித உடல்ல தன் தினசரி உணவை தேடவே  11 கிமீ சுத்தற அளவுக்கு சக்திய வச்சிருக்காம் இயற்கை. உங்க வீட்ல ரீடிங் ரூமுக்கும், டைனிங் டேபிளுக்கு எவ்ளோ தூரம் இருக்கு தலைவா? இதுல சில பார்ட்டிங்க மேகிய வச்சுக்கிட்டு ரீடிங் ரூம்லயே கொறிச்சுர்ராய்ங்க.ஏன்யா வராது ஷுகரு.. ஏன்யா வராது ஆண்மைகுறைவு

மூன்றாமிடத்துல பாவகிரகம் இருந்தா "பாவம்" நிறைஞ்ச இடத்துக்கெல்லாம் கூட போகவேண்டிவரலாம். ஒரு வேலைக்கே நாலு தாட்டி அலைய வேண்டி வரலாம்.
இந்த பயணங்கள் திட்டமிட்டு செயல்படும் டெக்னிக்கை தரும். எதிர்பாரா திருப்பங்களை சமாளிக்கிற தந்திரத்தை தரும், உங்க அறிவை விசாலப்படுத்தும். பங்க்சுவலாக்கும், தன்னம்பிக்கைய வளர்க்கும்.

இதெல்லாம் கில்மாவுலயும் ஒர்க் அவுட் ஆகி உங்களை காமக்கலையரசனாக்கும்..

எச்சரிக்கை:
டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் ங்கற மாதிரி 3ஆமிடம் பாவகிரகங்களால ஹவுஸ் ஃபுல் ஆகியிருந்தா கச்சா முச்சான்னு பயணம் போக ஆரம்பிச்சு -இன்னபிற கிரகங்களும் ,பாவங்களும் வீக்காயிருந்து கச முசால்லாம் பண்ண ஆரம்பிச்சா எய்ட்ஸுல கொண்டு விட்டுருங்கோ.

மேலும் மனித உடலின் டெம்பரேச்சர் 98.4 டிகிரீஸ். இந்த வெப்பத்துல உயிரணுக்கள் உயிர் வாழமுடியாதுன்னுதான் விதைகளை உடலுக்கு வெளியவச்சிருக்கு இயற்கை. நீங்க கச்சா முச்சானு பயணம் போயிட்டே இருந்திங்கன்னா பாடி டெம்பரேச்சரே விதைகளுக்கும் பரவி கவுண்ட் குறைஞ்சுப்போயிரும். ஜாதகத்துல சந்திரன் வீக்காயிருந்தா நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் வரும்.

Tuesday, January 4, 2011

சபலம் : ஒரு 360 டிகிரி பார்வை

தகுதியற்ற நிலையில் தகுதிக்கு மீறிய ஆசை அல்லது தம் தகுதிக்கு கீழான மேட்டர்ல வர்ர ஆசையை சபலம்னு சொல்லலாம். இது கண நேர ஆசையா இருக்கலாம் அ குறுகிய கால ஆசையா இருக்கலாம். அ மிச்சம் மீதி உள்ள லைஃப் தொடர்பான ஆசையா இருக்கலாம்.

சபலம்னா சர்க்கரை வியாதி உள்ளவன் லட்டு சாப்பிட ஆசைப்படறதுலருந்து, சர்வீஸ்ல பல காலம் நெருப்பா இருந்துட்டு ரிட்டையராக 6 மாசம் இருக்கிறச்ச ராணுவ ரகசியத்தை எதிரி நாட்டுக்கு விக்க நினைக்கிறது வரை எல்லாமே சபலம் தான்.


தகுதியற்ற நிலையில் தகுதிக்கு மீறிய ஆசை :

திரிசங்கு. பூத உடலோட ஸ்வர்கம் போகனும்னு ஆசைப்பட்ட பார்ட்டி இவரு. விஸ்வாமித்திரர் இவனை ஸ்வர்கத்துக்கு போஸ்ட் பண்ண அங்கனருந்து இந்திரன் ஃபுட் பால் ப்ளேயராகி ஒரு உதைவிட பூமிக்கும் -ஸ்வர்கத்துக்கும் மத்தில தொங்கறாரு. இதைத்தான் திரிசங்கு ஸ்வர்கம் ங்கறாய்ங்க.

தம் தகுதிக்கு கீழான மேட்டர்ல வர்ர ஆசை:

சந்தனு பீஷ்மரோட டாடி. வயசான காலத்துல ஒரு ஃபிகரை பார்த்து ஜொள்ளுவிட்டு அவள் தனக்கு பிறக்கறதைதான் வாரிசாக்கனும்னு கேட்க பீஷ்மர் கண்ணாலமே கட்டமாட்டேன் சபதம் போட்டுட்டாரு. டுபுக்கு பார்ட்டிங்கல்லாம் ஆட்சிக்கு வந்து கண்ட கண்ட அய்யரெல்லாம் கிராஸ் ஆகி வேலைக்காரிக்கெல்லாம் வாரிசு உருவாகிருச்சு. வம்சமே நாசமா போயிருச்சு


தங்களோட கடந்த கால வாழ்க்கைக்கு தொடர்பில்லாத ,தொடர்ச்சியா இல்லாத மேட்டர்ல வர்ர ஆசையையும் சபலம்னு தான் சொல்லனும்.

ஜங்கால பல்லி சீனிவாசுலு ( எங்க ஊருல ஏ ஒன் காண்ட்ராக்டர் -2004 தேர்தல் சமயம் படக்குனு களமிறங்கி தெ.தேசத்துல டிக்கெட்டுக்கு ட்ரை பண்ணாரு. ஜூரம் மாட்டிக்கிச்சு. 2009ல பிரஜா ராஜ்ஜியத்துல சேர்ந்து கன்டெஸ்ட் பண்ணாரு. ஜஸ்ட் 40 கோடி காலி./ நிம்மதி போச்சு.)


சபலம்னா பீடி சிகரட் பான் பீடா பீர் பிராந்தி குட்டி ஹோமோ சுய இன்பம் இரவு ராணி ஆன்டி செக்ஸ் கள்ள உறவு கள்ள நோட்டு இப்படி எந்த மேட்டர்லனா கிராஸ் ஆகும்.

சபலத்துக்கு இடம் கொடுத்துட்டா உங்க பலம் எல்லாம் மோகினியோட கூடின மாதிரி மெட்டாஷ் ஆகி இழந்த சக்தி வைத்தியர்களோட பாடாவதி விளம்பரம்லாம் "பாரம் சுமப்பவர்களே வாருங்கள். உங்களுக்கு இளைப்பாறுதல் தருகிறேன்" என்ற ஏசு நாதரோட அழைப்பா தோன ஆரம்பிச்சுரும்.


சபலத்துக்கு இரையாகிறவுக நினைப்பு:

1.இது யாருக்கு தெரியப்போகுது

2.நாம என்ன வாழ் நாள் எல்லாம் தொடரவா போறோம்.இன்னைக்கு ஒரு நாள் தானே

3.இத்தீனி நாள் உப்பு சப்பில்லாத வாழ்க்கைய வாழ்ந்துட்டம். ஒரு தாட்டி..

4.நாம 100% பர்ஃபெக்ட். இந்த ஒரு மேட்டரால பெருசா என்ன டேமேஜ் ஆயிரப்போவுது

5.ஊர் உலகத்துல நடக்காததா? எவனும் செய்யாததா?


6.பெருசா என்ன பிரச்சினை வந்துரப்போவுது..அப்படியே வந்தாலும் என்னை மீறி என்ன நடந்துரும்


7.நாம என்ன வி.ஐ.பியா ? கவர் ஸ்டோரிலயா வந்துரப்போவுது

8.இதுக்கெல்லாம் என்ன பெருசா செலவாயிரப்போவுது

9. நம்ம கடமைகளை எல்லாம் முடிச்சுட்டம். பிறருக்காகவே வாழ்ந்துட்டம் நமக்கா வும் கொஞ்சமா வாழ்ந்தா என்ன?

10. நம்ம பாடி ஹெல்த்தி பாடி இது ஒன்னும் பண்ணிராது

11. ஆ.. நான் சைக்கலாஜிக்கலா ரொம்ப ஸ்ட்ராங்கு. நான் நினைச்சா படக்குனு நிறுத்திரமாட்டேன்


இந்த நினைப்பெல்லாம் எப்படி பிழைப்ப கெடுத்துரும்னு தொடர்பதிவே போடலாம். ஆனால் நம்ம ப்ளாகை படிக்கிறவுக அந்த அளவுக்கு அப்பாவிகனு நான் நினைக்கலை.

மேற்படி 11 நினைப்புமே தப்போ தப்பு. இதை புரிஞ்சிக்கிட்டு கண்டெயினர் லாரியா பறந்து வர்ர சபலத்தை டேக் டைவர்ஷ்ன்னு சொல்ட்டு பொழப்ப பாருங்க பாஸ்..

பி.கு:
தமிழ் என்ற நண்பர் "பாஸ்! எல்லா மேட்டர்லயும் புகுந்துவர்ரிங்க இந்த சபலம் பத்தி ஒரு பதிவை போடுங்களேன்"ன்னு சஜஸ்ட் பண்ணார். போட்டாச்சு . தமிழுக்கு யாராச்சு தகவல் சொல்லிருங்கப்பு.

எச்சரிக்கை:
ஆமாண்ணே..வெறுமனே படிச்சுட்டு போயிட்டா எப்படி இண்ட்லி டாட்காம்ல ஒரு ஓட்டையாவது போடுங்கண்ணே

Sunday, January 2, 2011

கில்மா சிறுகதை: 3 (பாகம்:2)

அண்ணே வணக்கம்ணே,
இது கடந்த பதிவில் எழுதிய கில்மா சிறுகதையின் பார்ட் :2 பார்ட் ஒன்னை படிக்கலைன்னா /ஞாபகமில்லேன்னா இங்கே அழுத்தி ஒரு ஓட்டு ஓட்டிருங்க .அப்பத்தேன் புரியும்.

மறு நாள் டாக்டர் ஜெயதேவுக்கு ஃபோன் செய்தேன். "வாங்க..பேசுவோம்" என்றார்.சென்றேன்.எங்களிடையில் இடம் பெற்ற உரையாடலை ( ஒரு சில வெட்டுக்களுடன்- அதாவது குசல விசாரிப்பு -பழைய கேஸ்கள் குறித்த ஃபாலோ அப்ட்ஸ் ) அப்படியே தருகிறேன்.

"டாக்டர் ! பண்டரியோட ஹெரிடட்டரி எனக்கு  நல்லா தெரியும். அவங்க ஹெரிடட்டரியிலயே இதெல்லாம் கிடையாது. எனக்கென்னமோ இது சைக்கலாஜிக்கல் ப்ராப்ளமோனு தோணுது"

" மேபி.. மொதல்ல  நீங்க அவங்க குடும்பத்தை பத்தி உங்களுக்கு தெரிஞ்சது.பண்டரி உங்க கிட்டே ஷேர் பண்ணிக்கிட்டது எல்லாத்தயும் ஒன்னு விடாம சொல்லுங்க"

"சார்.. பண்டரி முழுமையான ஆண்மகன்.அவங்க வைஃப் ஹோம்லி லுக். இந்த  நடுத்தர வயசுலயும் சின்னதா  சிவக்கக்கூடிய கன்னம். சராசரி குடும்பத்தலைவி. மொதல்ல ஒரு பெண் குழந்தை. அதுக்கு சின்னவயசுல அம்மை போட்டு அந்த தழும்புகள் நிரந்தரமா  முகத்துல தங்கிருச்சு"

" ம்...ம் மேல சொல்லுங்க"

" அடுத்து ஒரு ஆண் குழந்தை. அவனுக்கு எந்த பிரச்சினையுமில்லேன்னாலும் பக்கத்து போர்ஷன் பெண் மேல ஒருதலைகாதல் . இதே யோசனையில பத்தாம் கிளாஸ்ல 3 தாட்டி குண்டு. பண்டரியோட கூட மாட இருப்பான். ஒரு வேலை  சொந்தமா செய்யமாட்டான். காடா தாடி வளர்த்துக்கிட்டு கலங்கலா பார்த்துக்கிட்டு இருப்பான். கஞ்சா கிஞ்சா அடிக்கிறானோன்னு ஒரு சம்சயம். அடுத்து ஒரு பையன் .அடிச்சு பிடிச்சு இண்டர் வரை வந்துட்டான். அண்ணன் பொசிஷனை பார்த்தோ என்னமோ பெண்களை ஏறெடுத்து பார்க்கமாட்டான். வாரத்துக்கொரு குப்பி ஃபேஸ் க்ரீம் வாங்குவான்.தினசரி ஷேவ் பண்ணுவான்.டீக்கா ட்ரஸ் பண்ணுவான்.சினிமாபார்ப்பான் .வேலை வெட்டி எதுவும் கிடையாது.ஐ திங்க் அவன் சுய இன்ப பிரியனா இருக்கலாம்."

"ஓகே முகேஷ் வீட்டு ஆண்களை பத்தி விலாவாரியா சொல்லிட்டே பெண்கள் பத்தி இன்னம் எதுனா அடிஷ்னல் இன்ஃபர்மேஷன் இருந்தா நல்லது"

"முதல் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாரு.வந்தவனெல்லாம் அந்த பெண்ணோட முகத்துல இருக்கிற அம்மையை மட்டும் பார்த்துட்டு வாய் கூசாம லட்சக்கணக்குல வரதட்சிணை கேட்டாய்ங்க. இதுல அந்த பெண் கொஞ்சம் போல அப்செட். நம்ம பண்டரியும் தான்"

"இந்த மேட்டர்ல அந்த மதரோட நிலை என்ன?"

"உள்ளுக்குள்ள வச்சு குமைவய்ங்க போல"

"பண்டரி, மற்றும்  அவரோட வைஃபோட அதர்  ஆக்டிவிட்டீஸ்  பத்தி எதுனா தெரிஞ்சா சொல்லுங்க"

"அதர் ஆக்டிவிட்டீஸ்னா.. பண்டரி தினசரி ஏதோ ஒரு  கோவிலுக்கு விசிட் அடிப்பாரு. ரெண்டு மூணு கோவில்களுக்கு மாலை கூட போடுவார். வள்ளலார் மேல ஆர்வம் அதிகம். ஏதோ சங்கம் மாதிரி வச்சு வாரம் ஒருதடவை கூட்டம்லாம் போடுவாரு.மதருக்கும் பக்தி சாஸ்தின்னுதான் சொல்லனும். தினசரி பூஜை ரூம்ல உட்கார்ந்து சின்ன சின்னதா புஸ்தவங்கள் வச்சிக்கிட்டு முணுமுணுன்னு படிச்சுக்கிட்டிருப்பாய்ங்க"

ஜெயதேவ் , மாடிக்கு போலாம் வாங்கன்னாரு. தொடர்ந்தேன். சிகரட் பாக்கெட்டை நீட்டினார். கவர்ந்து பற்றினேன். அவருக்கும்.

சுருள் சுருளாய் புகை விட்டபடி ஜெயதேவ் பேச ஆரம்பித்தார்.

"இன்னைக்கு இங்கே  பந்த் /கர்ஃப்யூ /144 இப்படி எதுனா இருந்திருந்தா நீ புறப்பட்டிருப்பயா?"

"நோ "

"அதே வேலையதான் அந்த பெண்ணோட உடலும் செய்திருக்கு. பண்டரிக்கும் அவரோட மனைவிக்கும் இடையில  இயல்பான செக்ஸ் லைஃப் இல்லாம இருக்கும்னு  நினைக்கிறேன். இல்லாட்டி நான் ஸ்டாப்பா  இத்தனை கோவில்,பக்தி எல்லாம் சாத்தியமே இல்லை.அதுவும் இந்த 40  அ 45 ரேஞ்சு வயசுல.  அவங்களோட செக்ஸ் லைஃப் பாதிக்கப்பட பெரிய பெண்ணோட திருமண பிரச்சினையும் ஒரு காரணமா இருந்திருக்கலாம். பண்டரி ஆண் பிள்ளை .வெளிய போயிர்ராரு. ஆனால் அவரோட வைஃப் வீட்டோட தான் இருக்கனும். மிஞ்சிப்போனா கிட்டத்துல இருக்கிற கோவிலுக்கு போகலாம். தன் தாயோட நிலைய அந்த பெண்குழந்தை சூட்சுமபுத்தியோட க்ராஸ்ப் பண்ணியிருக்கலாம்.இது  பாய்ண்ட் நெம்பர் ஒன். அம்மாவோட டெப்ரஷன்,தன்னிரக்கம், சில சமயம் எரிச்சல் .

ஆனா பண்டரி ஏஸ் எ மேல் செக்ஸ் இல்லாத  குறைய மறக்க அ அதை இன்னபிற ஆக்டிவிட்டீஸால நிரப்ப வாய்ப்பிருக்கு.ஆனால் அவரோட வைஃபுக்கு அது இல்லை. ஸோ பண்டரி மே பி கூல்.  காதல் தோல்வி அண்ணன் .அவனும் ஒரு எஸ்கேப்பிஸ்ட் தான் சுகஜீவனம். அடுத்த அண்ணன் ஃபேஸ் க்ரீம் பார்ட்டி .அவன் பாடும் அவிழ்த்து விட்ட மாடு மாதிரி.

வீட்ல உள்ள பெண்கள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்க ( அக்கா +அம்மா) ஆண்கள் எல்லாம் எஸ்கேப்பிஸ்டுகளாகி சொகமா இருக்க அந்த பெண்ணுக்கு தான் ஏன் பெண்ணா பிறந்தோம்ங்கற இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருந்திருக்கலாம். மைண்ட்  ஃபேண்டசிக்கு போயிருச்சு. வலுவான எண்ணங்கள் பாடி மேல வேலை செய்ய போதுமான வளர்ச்சி,அடையாளங்கள் இல்லாம போயிருக்கலாம்"

" ஓகே டாக்டர் பிரச்சினை இதுன்னு கெஸ் பண்ணிட்டிங்க.இதுக்கு என்ன சொல்யூஷன்?"

"மொதல்ல பெரிய மகளுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி எதுனா ட்ரை பண்ணி கண்ணாலம் கட்டி துரத்தச்சொல்லு"

"ஓகே"

"மொதல் அண்ணனை செருப்பாலடிச்சு கண்ணாலம் பண்ணி தனிக்குடித்தனம் வைக்க சொல்லு"

"ஓகே"

"ரெண்டாவது அண்ணனை  பண்டரி தன் வேலையில ரெய்ன் பண்ணட்டும். முடிஞ்சா அவனுக்கும் கண்ணாலம் தனிக்குடித்தனம்"

"ஹேண்ட் பை ஹேண்ட் பண்டரி கோவில் குளத்தையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு செக்ஸ் லைஃபோட செகண்ட் இன்னிங்சை துவக்கட்டும்.."

"ஓகே டாக்டர்.. இதுக்கும் அந்த பெண் மீசை வரைஞ்சுக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?"

"முட்டாள் ! அவள் கண் முன்னாடி எல்லா பெண்ணும் (அக்கா,தாய்)  கண்ணீர் விட்டுக்கிட்டிருக்காங்க. எல்லா ஆண்களும் (அப்பா,இரண்டு ஆண்கள்) பிரச்சினைலருந்து,வாழ்க்கையிலருந்து தப்பிச்சுக்கிட்டு சொகம்மா காலம் கழிக்கிறாங்க. அவள் மனசு சுருங்கி போச்சு. ஆமை மாதிரி தன் இயல்பான கிளர்ச்சிகளை,ஆவலை ஓட்டுக்குள்ள சுருக்கிக்கிட்டா.. ஆணா மாறிட்டா தனக்கு எந்த பிரச்சினையுமில்லைங்கற ஃபேண்டசில இறங்கிட்டா.அவளோட எண்ணம் வலிமையா இருந்ததால பாடி அதை ஒபே பண்ணிருச்சு"

Wednesday, December 22, 2010

மரணம் = செக்ஸ் = பணம்

மரணம் வந்த பிறகு உடல் உதிர்ந்து போகுது. உயிர்  முடிவில்லாத இந்த படைப்போட கலந்துருது. செக்ஸ்ல வீர்ய ஸ்கலிதம் நடக்கறச்ச பாடி பத்தின ஞா ஒட்டு மொத்தமா போயிருது. ( ஒரு க்ஷணத்துக்காச்சும்) .இதை காலாதீத நிலை,ப்ளாக் அவுட் குட்டிமரணம்னு கூட சொல்றாய்ங்க.

உடம்புங்கற சிறைல சிக்கிக்கிடந்த உசுரு /ஆன்மா/நினைவு படைப்போட இரண்டற கலந்துருது.

பணம் பல வகையான எல்லைகளுக்குள்ளாற சிக்கி சீரழியற மனிதனை உலகத்தோட ஒன்னு மண்ணா சேரவைக்குது. உ.ம்: மொழி,தூரம், ஜியாக்ரஃபி

மரணம் உங்களை இந்த உலகத்துலருந்து விடுவிக்கிற மாதிரியே செக்ஸ் கூட விடுவிக்குது.

செத்துப்போன பிற்பாடு உங்களுக்கு செக்ஸோ பணமோ தேவையில்லை.

செக்ஸ் அவெய்லபிலிட்டில இருக்கிறச்ச பணத்தோட வேலையிருக்காது. மரணம் பத்தின நினைவு இருக்காது.

உங்க கிட்ட பணம் இருந்தா மரணத்தோட ( ஐம் சாரி மரணத்தோட நிழல்களான தனிமை,இருட்டு,முதுமை எட்செட்ரா) ஃபைட் பண்ணி ஜெயிச்சுக்கிட்டு (அட்லீஸ்ட் ஜெயிச்சுட்டதா நினைச்சுட்டு) சந்தோசமா இருப்பிங்க. இந்த ஃபைட்ல தோத்துட்டுத்தான் இருக்கிங்க. உண்மையில ஹைவேல போயிட்டிருக்கிற மரணத்தை விசிலடிச்சு கூப்ட்டுட்டிங்கனு தெரியற வரை செக்ஸ் குறித்த தேவையிருக்காது ( ஃபிசிக்கல் வீரிய புரளல் இருக்கலாம் - நான் சொல்றது சைக்கலாஜிகல் வில்) மரணம் பத்தின நினைவு இருக்காது.

இப்படி மரணம் -மைதுனம்-தனம்ங்கற மூணுக்கும் உள்ள ஒற்றுமை எந்தளவுக்கு போயிருதுன்னா ஒன்னிருக்கும்போது அடுத்ததுக பத்தின ஞா மே இருக்காதுங்கோ.

எலக்ட் ரானிக் உபகரணங்கள்ள ஆன்,ஆஃப் ஆப்ஷன் இருக்கிறாப்லயே ஒவ்வொரு உயிர்லயும் வாழனுங்கற துடிப்பும்,சாகனுங்கற வெறியும் சமமா இருக்கு.

மரணம் மீதான காதல் கூட வாழனுங்கற வெறியாலத்தான்னா நீங்க சிண்டை பிச்சுக்குவிங்க. ஆமாங்கண்ணா "உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு" இல்லியா? எல்லாம் ஒன்ஸ் மோர்மாதிரிதேன் டேக் ஒன் டேக் டூ மாதிரி தேன்.


மன்சன் காட்ல வாழ்ந்தப்போ சாவு அப்பப்போ கண்ணடிச்சு கூப்புடும், பின்னால தட்டிட்டு போவும், கை குலுக்கும். அந்த கால கட்டத்துல பார்த்திங்கனா செக்ஸுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது.

மரணத்தோட ஸ்பெஷாலிட்டி என்னடான்னா அது ஒவ்வொரு தாட்டி நமக்கு ஹலோ சொல்றப்பயும் வாழ்க்கை பற்றிய நம் எண்ண குப்பைல்லாம் பக்குனு எரிஞ்சு போயிரும். நம்மோட ப்ரியாரிட்டி லிஸ்ட் ரெம்ப சின்னதாயிரும்.  மரணத்துடனான நம்ம அறிமுகமே டாப்ல நிக்கும். இது காட்டு வாழ்க்கைல சாத்தியமாச்சு.அதனாலதான் மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவான செக்ஸுக்கு பெரிய முக்கியத்துவம் இல்ல.


எப்போ இவிக சஞ்சார வாழ்க்கைலருந்து ஸ்திரவாசத்துக்கு மாறினாய்ங்களோ மரணத்துடனான ஹாய்,ஹலோக்கள் குறைஞ்சு போச்சு.

மரணத்தோட விஷயத்துல இன்னொரு பெக்யூலர் திங் என்னடான்னா
அது அப்பப்ப ஹலோ சொல்லலைன்னா உள்ளுக்குள்ளாற சாவு பத்தின பயம் ஸ்டார்ட் ஆயிரும்.  அட்லீஸ்ட் மரணத்தோட நிழல்களாச்சும் நம்மை உரசிக்கிட்டு போகனும்.இல்லைன்னா தாளி தற்கொலை பண்ணிக்க்கிட்டு செத்துப்போயிருவம்.

ஸ்திர வாசத்துல மரணத்துடனான உறவு குறைஞ்சு போச்சு.மரணம் பத்தின பீதி அதிகமாயிருச்சு. மரணத்துலருந்து தப்பிக்க ஒரே வழி செத்துப்போறது. அப்படி சாக தில்லில்லாதவன் தேர்ந்தெடுக்கிற தவண முறை சாவு செக்ஸ்.(ஞா படுத்திக்கங்க குட்டிமரணம்)

ஸ்திரவாசத்துல தான் மன்சன் செக்ஸை ஆற அமர அனுபவிச்சிருக்கனும்.

இயற்கையோட க்ரூர விதி என்னடான்னா எதுமேல உங்களுக்கு எவ்ள சீக்கிரம் எந்த அளவுக்கு ஆர்வம் பிறக்குதோ அந்த அளவுக்கு ,அவ்ள சீக்கிரம் அதை அனுபவிக்கிறதுக்கான சக்தி குறைய ஆரம்பிக்கும்.

உ.ம் தின்னிப்பண்டாரங்களுக்கு ஷுகர்,அல்சர் மாட்டிக்கிறமாதிரி

இப்படியாக செக்ஸில் அதிகமா ஈடுபட்ட மன்சனுக்கு பேட்டரி வீக் ஆக ஆரம்பிச்சது. சாவு ஹலோ சொல்லாததால சாவு பயம் வந்து சாவறதுக்காக செக்ஸுல இறங்கி அஜீஸ் பண்ணிக்கிட்டிருந்தவனுக்கு பேட்டரி வீக்காகி ( இந்த காலத்து வீக்னெஸ்  இல்லிங்கண்ணா அந்த காலத்து பெண்ணை சமாளிக்க முடியாத வீக்னெஸ்) செக்ஸுக்கும் அன்ஃபிட் ஆக ஆரம்பிச்சான்.

இன்னொரு பக்கம் பெண்ணோட செக்ஸ்பவர் என்னானு புரிஞ்சு போச்சு ( ஒரே ராத்திரில பலதடவை உச்சம் பெறும் சக்தி - 7 வெர்ஸஸ் 23ல்லாம் ஞா இருக்கில்லை)

இன்னொரு பக்கம் இவன் பாடுபட்டு பண்படுத்தின நிலம் ஒரு சொத்தா உருவாக ஆரம்பிச்சது. சாவு பயம் மேலும் நெருக்கமா துரத்த - செக்ஸுலயும் அதுக்கு பெருசா  வடிகால் கிடைக்காம இருந்த நிலையில - தன் வாரிசுகள் தன் பிரதிரூபமா - தன்னோட மறுபதிப்பா - தன்னோட நீட்சியா நினைக்க ஆரம்பிச்சான்.

தன் சொத்து தன் வாரிசுக்கே போகனும்னு  நினைச்சான். யோனிய பூட்ட முடியாத குறைக்கு பெண்ணையே பூட்ட ஆரம்பிச்சான். ( சில பார்ட்டிங்க அதை கூட ட்ரை பண்ணியிருக்காய்ங்க)

காட்டு வாழ்க்கைல தன் சகபோராளியா இருந்த பெண்ணை படிப்படியா அடிமையாக்க ஆரம்பிச்சான். அடிமைன்னா அவள் என்னைக்கோ ஒரு நா புரட்சி பண்ணுவானுதானே அர்த்தம்.இவன் எங்கே தன் ஆயுதங்கள்,கவசங்களையெல்லாம் கழட்டி வச்சுட்டு காதல் பண்றது.

செக்ஸுக்காக அவளை அண்டினா அவளுக்கு அடிபணிஞ்சதாயிருமோனு ஒரு சம்சயம்.  அவளோட செக்ஸ் பவர் தந்த எரிச்சல் ஒரு பக்கம். எல்லாமா சேர்ந்து மரணத்துக்கு ஆல்ட்டர்னேட்டிவா செக்ஸை வச்சுட்டிருந்த இவனை அதுக்கு ஆல்ட்டர்னேட்டிவா இன்னொன்னை தேட வச்சிருச்சு.

ஆரம்பத்துல பண்ட மாற்றுல ஆரம்பிச்சது பணத்துல போய் முடிஞ்சது. பணம் எல்லா வகையிலயும் மரணம் -செக்ஸுக்கு மாற்றா அமைஞ்சது.

அவனவன் பணம் பணம்னு அலைய முழுமுதற்காரணம் இதான். இவனுக்கு சாவுன்னா பயம், சாகனும்னா பயம், செக்ஸுன்னா பயம்,பொம்பளைன்னா பயம் ஆனால் சாகனும் அதுக்காகத்தான் மன்சன் பணத்தை துரத்த ஆரம்பிச்சான்.

இவன் பணத்தை வெறும்  பணமா பார்த்திருந்தா பிரச்சினையே இல்லை. இவன் சைக்காலஜிக்கலா என்னென்னமோ காம்ப்ளெக்ஸுல மாட்டிக்கிட்டு பணத்துக்கு இல்லாத அருமை பெருமைகளையெல்லாம் கற்பிச்சிக்கிட்டு பணம் பணம்னு அலைய ஆரம்பிக்கிறான்.

ஒரு காலகட்டம் வரை பணம் அவனை திருப்தி படுத்துது. ஒரு கட்டத்துல தாளி செக்ஸுதாண்டா நாம தேடினதுனு தாமதமா ஸ்ட்ரைக் ஆக காம வேட்டைல இறங்கறான்.

அமீபாங்கற ஒரு செல்லுலருந்துதான் எல்லாரும் வந்தோம்.பிரிஞ்சோம். கரீட்டுதான் ஆனால் நம்ம எல்லாரையும் ஒரு  தங்க கயிறு இணைச்சிருக்கு. இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.

மொபைல் தான் உடல். சிம் தான் ஆத்மா. மொபைல்ல எத்தனையோ மேக்ஸ் இருக்கலாம். சிம்ல எத்தனையோ வகையிருக்கலாம்.  பலவித நெட் ஒர்க்ஸ் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு மொபைலும் இணைக்கப்பட்டுதான் இருக்கு.

டவர் வராத இடத்துல நிக்கிறது, பேட்டரி லோ ஆயிர்ரது, மொபைல தண்ணில போட்டுர்ரது, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிர்ரதுனு இருந்தா நெட் ஒர்க் வேலை செய்யுமா? அழைப்பு வருமா? அழைக்க தான் முடியுமா?

உள்ள நெட் ஒர்க்கை புரிஞ்சிக்கிடாம பிரிஞ்சுட்டோம்னு நினைக்கிறது - மறுபடி ஒன்னு சேர்ரதுக்காக சாகனும்,சாகடிக்கனும்னு நினைக்கிறது -அதுக்கு மாற்றா செக்ஸ் - செக்ஸுக்கு மாற்றா பணத்தை நினைக்கிறது -அந்த பணத்தை வச்சுக்கிட்டு மரணத்தோட நிழல்களோட ஃபைட் பண்றது - ஹை வேல போற மரணத்தை கை தட்டி கூப்புடறது இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனமா இல்லியா?

Thursday, December 2, 2010

பெண்ணின் மறு(ரு)பக்கம்

பெண் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி - அட இயற்கையே அவள் தான் - இறை வன் தன்னை இயற்கையா வெளிப்படுத்தியிருக்கான் - இயற்கைய பற்றிய புரிதல் பெண்ணிலிருந்துதான் துவங்குது - பெண்ணை புரிஞ்சா இயற்கைய புரிஞ்சிக்கிடலாம். ஆண் ஒன்னை பெத்த பிறவுதான் தந்தை - பெண் பிறக்கும்போதே தாய்.

இந்த மாதிரி வீரவசனங்களையெல்லாம் நான் எழுதிட்டிருந்தப்ப உங்கள்ள  மஸ்தா பேரு சாமி இன்னம் எங்கயும் அடிவாங்கலை போல. சரிய்யா ஆப்பு வாங்கினா அப்பத்தேன் சத்தியம் புரியும்னு  நினைச்சிருப்பிக.

சிலர் மட்டும் பரவால்லை சாமி ஜாதகத்துல சுக்கிரன் செமர்த்தியான இடத்துல உட்கார்ந்தாப்ல கீது சாமிக்கு க்ராஸ் ஆன பொம்பளையெல்லாம் அப்படி இருந்திருப்பாய்ங்க போலனு நினைச்சிருக்கலாம்.

இது ஏதும் உண்மையில்லை. நானும் செமர்த்தியா அடி வாங்கியிருக்கேன். ஆப்பும் வாங்கியிருக்கேன். எனக்கும் பல பஜாரிங்க, காந்தா, டைப்பு பொம்பளைங்க கிராஸ் ஆகியிருக்காய்ங்க. இல்லேங்கலை. ஆனால் நான் அவிகளோட பிஹேவியரை சீரியஸா எடுத்துக்கறதில்லை.

ஏன்னா அவிக வீக். பலவீனமே பாபங்களின் கங்கோத்ரிங்கறாரு விவேகானந்தர்.மேலும் அவிக அடிமைங்க. உங்க எதிர்க்க ஒரு ஆளு நாய கூட்டிட்டு வராரு. அந்த நாயி உங்களை கடிச்சுருச்சுனு வைங்க. நாய்கிட்டயா சண்டைக்கு போறிங்க. இல்லை .அந்தாளுகிட்டேதான் சண்டைக்கு போவிங்க.

அதுமாதிரி தாய்குலம் அவிக எசமானங்க கையில நாய் மாதிரி.( அப்படி சீன் போட்டுக்கிட்டே கணவனை நாயாக்கிர்ர தா.குலத்தையும் பார்த்திருக்கேண்ணா). நான் ஒரு ஆப்டிமிஸ்ட். பாசிட்டிவ் திங்கர். என்னால யாரையும் கோச்சுக்க முடியாது. ஏன் தாத்தாவ கூட ( கலைஞர்) வாழ்க்கையின் நோக்கம் பற்றி  தெரியாத்தனம்,வாழ்க்கையின் சூட்சுமம் குறித்த புரியாத்தனம், தாங்கள் கடந்து வந்த லட்சியபாதை குறித்த மறதி இப்படித்தேன் ரோசிப்பேன். அந்த மாதிரி எலிமெண்ட் எதுனா என் கிட்டே இருக்கானு செக் பண்ணிக்குவன்.

கலைஞரையே கோச்சுக்க முடியாத நான் தா.குலத்தையா கோச்சுக்க போறேன். அவிகளை செலுத்தற ஒரே சக்தி இன் செக்யூரிட்டிதேன். என்னதான் பெண் கல்வி,பெண் வேலை வாய்ப்பு, லேடீஸ் ஹாஸ்டலுன்னு காலம் மாறினாலும் பல யுகங்களா தொடர்ர ஜீன் வழி வந்த இன்செக்யூரிட்டி மாறலை.

ஸ்ட் ரீட் ஃபைட்ல கூட பாருங்க. எவன் ரெம்ப பயந்திருக்கானோ அவன் தேன் மொதல்ல கைய நீட்டுவான். அப்படி பொம்பளைக்கு ஆம்பளைய பார்த்தா பயம். அவனை செயிக்கனுங்கற எண்ணமெல்லாம் கிடையாது. ஜஸ்ட் ஒரு நாக் அவுட் கொடுத்து தாளி ..நீ ஒன்னும் புலியில்லடா.. நான் நினைச்சா நீ காலினு காட்டனும். இது எதுக்குன்னா ஒரு சுய பாதுகாப்புக்காக.

எல்லாம் இந்த ஃபிசிக்கல் வீக்னெஸ் தர்ர இம்சை. இவிக பார்க்கிற மொத ஆம்பளை அப்பங்காரன். அவனுக்கு சுக்கிரன் சரியா இருந்து அவன் பெண்டாட்டி ( இவளோட அம்மா) கொஞ்சம் போல இணக்கமா வாழ்ந்திருந்தா அவன் ஒரு ரேஞ்சுல மாறி மோல்ட் ஆகியிருப்பான்.

இவனால ராத்திரில முடியலைன்னா பகல்ல மிதிப்பான். அவள் இவன் ஈகோவை மிதிப்பாள். இதான் நடக்குது. இதை பார்க்கிற ,பார்த்தே வளர்ர அந்த பொம்பளை புள்ளைக்கு ஆம்பளைன்னாலே கிலி பிறந்துருது. அதுலயும் சில தாய்மாருங்க புருசங்காரனோட சண்டைனு  வந்துட்டா சரோஜா தேவி நாவலை விட கேவலமா பேசுவாய்ங்க.ஓரல் செக்ஸ் பத்தியெல்லாம் டீட்டெயில் கொடுப்பாய்ங்க. இதையெல்லாம் கேட்டுத்தேன் அந்த பொம்பளை புள்ள வளருது.

"தாளி மனுச ஜென்மங்க எது செய்தாலும் - அது கில்மாவாவே இருந்தாலும் - அதுக்கு அவிகளை உந்தி தள்றது கொல்லும் அ சாகும் இச்சைதான். ஸ்தூலமா பார்க்கறச்சதான் வன்முறையும் ,செக்ஸும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டும் ஒன்னுதேன்"னு  அந்த புள்ளைக்கு தெரியாதே.


இதெல்லாம் அந்த இளம் மனசுல நுரையீரல்ல பஞ்சு நூல் மாதிரி ஒட்டிக்கிது. அப்பனுக்கு டபுள் ஆக்டு  இருக்கு. ஆத்தாளுக்கும் டபுள் ஆக்ட் இருக்குது. குடும்பம் -பல்கலை கழகம் - இத்யாதி ஒரு பக்கம் ..

காலமெல்லாம் ஒனக்கு முந்தி விரிச்சு நான் இன்னா சுகம் கண்டேங்கற சரோஜாதேவித்தனமான வியாக்யானம் ஒரு பக்கம்.

பாப்பா வயசுக்கு வருது. ஒடனே அப்பன்,ஆத்தாளோட ட்ரீட் மென்ட் மாறுது. அவிகளோட சாஃப்ட் கார்னர் எக்சிபிட் ஆகுது. பாப்பா எங்கே ஸ்விட்ச் போட்டா எந்த பல்பு எரியும்னு தெரிஞ்சுக்குது. அப்பனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண ஆரம்பிக்குது.
உடலுறவுக்கு வாய்ப்பில்லாத ஆண் பெண் உறவு ரெம்ப அழகா, ஆழமா இருக்கும்..  ஆனால் அண்டர் கரெண்ட்ல உடலுறவு இச்சையும் இருக்கும். இந்த ஸ்டேஜ்ல மனைவியுடனான உறவை விட ( அங்கே உடலுறவுக்கு வாய்ப்பிருக்கு ) மகளுடனான உறவு ஃபேரா, நோபலா இருக்கு. இந்த மாதிரி ஸ்டேஜ்ல தான் ஆத்தாளுக்கும் ,பெண்ணுக்கும் சக்களத்தி சண்டைல்லாம் வரும். அது வேற மேட்டர்.

அப்பனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி பழக்கப்பட்ட பொண்ணு கண்ணாலத்துக்கப்பாறம் புருசனை எக்ஸ்ப்ளாய்ட் பண்ண ஆரம்பிக்குது. அவனும் புது பெண்டாட்டி  மோகத்துல எல்லாத்துக்கும் மண்டைய மண்டைய ஆட்டுவான். அதுவும் அவன் டேமேஜ் பார்ட்டியா இருந்து காணாததை கண்டா சரண்டர் ஆஃப் இண்டியா.

பழக பழக பாலும் புளிக்குங்கற மாதிரி செக்ஸும் பழகிப்போயிட்டா அவன் மண்டைய குறுக்க ஆட்ட ஆரம்பிக்கிறான்.

ஏற்கெனவெ சொன்ன விதிய ஞா படுத்திக்கங்க. உடலுறவுக்கு வாய்ப்பில்லாத ஆண் பெண் உறவுதான்  ரெம்ப அழகா, ஆழமா இருக்கும்.. மத்ததெல்லாம் தேஞ்சுப்போயிரும்.

அப்பன் தன்னிச்சையா சந்தோசமா எக்ஸ்ப்ளாயிட் ஆக சம்மதிக்க, புருசங்காரன் முரண்டு பிடிக்கிறான். இங்கதான் எல்லா பிரச்சினையும் ஆரம்பிக்குது. ( பல கேஸ்ல புருசங்காரன் டப்ஸ் கேஸா இருந்தா தாளி நம்மனால அந்த மேட்டர்ல தான் முடியலை.. பெண்டாட்டி சொல்றதயாவது கேட்டுக்குவமேனு இருந்துர்ரான் பிரச்சினை பெருசாவறதில்லை)

சில கேஸ்ல ஒனக்கு எதுல குறை வச்சேன்.. நான் எதுக்கு உனக்கு சரண்டர் ஆகனும்னு புருசங்காரங்க ரெபல் ஆக ஆரம்பிச்சுட்டா பிரச்சினை ஆரம்பமாகுது. இதுல தாய்குலத்துக்கு தன்னிரக்கம், தனிமை உணர்வுல இருந்து , தற்கொலை உணர்வு வரை முத்த ஆரம்பிச்சுருது. சான்ஸ் கிடைச்சா புருசனை கிடைக்கலைன்னா வேலைக்காரிய,. அதுவும் இல்லைன்னா குழந்தைகளை .. அதுக்கும் வாய்ப்பில்லேன்னா கார்னர்ல நிக்கிற டீன் ஏஜ் பசங்களை இம்சை பண்ண ஆரம்பிச்சுர்ரா..

இதையெல்லாம் நான் ஏதோ கற்பனையா எழுதறேனு நினைச்சுராதிங்க தலை.. அனுபவம் அனுபவம் பேசுது.

பொம்பளைக்குள்ள ரெண்டு பொம்பளை இருக்கா. ஒருத்தி நீங்க / நானு பார்க்கிற சாதாரண சராசரி  பொம்பளை. மேனேஜருக்கு தன்னோட பீரியட் டேட்ஸ் வரை சொல்லி உசுப்பேத்துவா அந்த கிழவாடி ஏதோ பழைய ஞாபகத்துல எசகு பிசகா தட்டிட்டா போலீஸுக்கும் போறாளே  அந்த பொம்பளையத்தான் சொல்றேன்.

அவளுக்குள்ளயே இன்னொரு பொம்பளையும் இருக்கா அவள் தேன் இயற்கையின் பிரதி - நிதி - பிரதிநிதி - அட இயற்கையே அவள் தான்.  இவளை சராசரி பொம்பளையோட ஆழ்மனதிலிருந்து மீட்டெடுப்பது எப்படினு அடுத்தடுத்த பதிவுல பார்ப்போம்.

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சுட்டாங்கய்யா

Sunday, November 28, 2010

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்: 2

கடந்த பதிவின் கடைசி பாரா:

" சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க."

"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?"னுவாய்ங்க. இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

எச்சரிக்கை:
இந்த பதிவு ஆரோக்கியர்களுக்கு மட்டுமானது. உடல் குறை ,மனக்குறை உள்ளவுக இழந்தை சக்தி வைத்தியர்களையோ , நல்ல சைக்கியாட்ரிஸ்டையோ பாருங்க.

நிறைய பேரு இன்னா நினைக்கிறாய்ங்கன்னா செக்ஸுக்கு இவன் உடல்ல அந்த  ஒரு சமாசாரமும், பெண் உடல்ல அந்த ரெண்டு உருப்படியும் தான் தேவை.

உங்க பாடியோட அதி மூலம் ஒரு செல். அந்த செல்லுக்கான பேர் பாதி க்ரோமோசோம் கிடைச்சதே டாடி மம்மியோட செக்ஸ் க்ரோமோ சோம்லருந்துதேன். செக்ஸுல பிறந்து வளர்ந்த பாடி இது. அதனால செக்ஸுங்கறது ஒவ்வொரு அணுவுலயும் இருக்கு.

இதை நீங்க முழுக்க உணரணும்னா அதுக்கு பெஸ்ட் வே பிரம்மச்சரியம். என்னங்கடா இது அவுக்கிறதை பத்தி பேசுவாருனு பார்த்தா தண்ணில நனைச்சு கட்டறதை பத்தி சொல்றாருனு கோச்சுக்கிடாதிங்க. நெஜம் இதான்.

நீங்க ஒரு விருந்துக்கு தயாராகனும்னா , ஒரு கட்டு கட்டனும்னா அதுக்கு முன்னாடி ஒரு வேளையாச்சும் வயித்தை காய போட்டிருக்கனும். ஒரு லைம் அடிச்சிருக்கனும். விருந்துக்கு முந்தி தொண்டைக்குழில ஒரு மிடறு தண்ணீர் விடனும் ( இல்லாட்டி விக்கிக்கும்) .அவசரப்படாம நிதானமா சாப்பிடனும். இல்லாட்டி அடைச்சுக்கும்.

செக்ஸும் அதே மாதிரி தேன். நல்ல ஆரோக்கியமான வயசு புள்ளை ஒரு 15 நாள் பொம்பள வாசம் படாம இருந்தா அவனுக்குள்ள கிளர்ச்சியை உருவாக்க ஒரு பெண்ணின் குரல் கூட போதும். அவளோட உடலுக்கும் இவன் உடலுக்கும் 30 செ.மீ கேப் இருக்கும்போதே உடல் புல்லரிக்கும். ( விறைக்கும்னு சொல்லலை) ஒவ்வொரு செல்லும் இன்ப  அதிர்வுகளை உணரும். ஆனந்தத்தில் திளைக்கும்.

அதனால தான் சொல்றேன். செக்ஸுல வெற்றிக்கொடி நாட்டனும்னா பிரம்மச்சரியம் அவசியத்துலயும் அவசியம். ஆணுக்கு உண்மையில கிளர்ச்சியை தர்ரது பெண்ணுடல் அல்ல இவனுடல்தான். என்ன ஒரே ஒரு நிபந்தனைன்னா ரெண்டு முதலிரவுகளுக்கிடையில் அ சுய இன்பங்களுக்கு இடையில்  ஒரு உத்தேசமான கேப் இருக்கனும்.

சுய இன்பம் அனுபவிக்கிற பார்ட்டிகளுக்கு  ஆத்திரம்,அவசரம்,அச்சம்,குற்ற உணர்வு, சீக்ரசி மெயின்டெய்ன் பண்ணியாக வேண்டிய கட்டாயம் இத்யாதி காரணங்களால் சீக்கிரம் காரியத்தை முடிக்கும் வழக்கம் ஏற்பட்டுவிடும். இந்த காரியத்தில் ஜஸ்ட் இன உறுப்பு மட்டும் தூண்டப்பட்டு ,தீண்டப்பட்டு காரியம் நடப்பதால் இவர்களின் உணர்வு ஜஸ்ட் இன உறுப்பில் மட்டுமே மையம் கொண்டு மற்ற உணர்வு கேந்திரங்கள் எல்லாம் மழுப்பப்பட்டுவிடும். ( இவிகதேன் சிட்டிபஸ்ல முட்ட கொடுக்கிறது). இவிகளுக்கு தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்ங்கறாப்ல ஆஃப்டர் மேரேஜும் இந்த அவசரம் குறையாது. இவிகளா டிலே பண்ண நினைச்சாலும் முடியாத நிலை. இவிகளும் கொஞ்சம் போன மன,உடல் கட்டுப்பாடுகளை கடைபிடிச்சா  மம்முத ராசாக்களா மாறிரலாம் டோன்ட் ஒர்ரி.

(பெண்களுக்கும் இந்த விதி பொருந்தும். இவிக இன்னம் அட்வான்ஸ்ட் செயற்கை பொருட்களையெல்லாம் உபயோகிக்கிறதா கேள்வி.. இவிகளுக்கும் உணர்வுகள் இன உறுப்பிலேயே மையம் கொண்டுவிடும் - இவிகளும் நார்மலா மாற கொஞ்ச நாள் பிடிக்கும்)

செக்ஸ் பவர்ங்கறது டோட்டலா உங்க பாடி பவர் மேல டிப்பெண்ட் ஆகி இருக்கும். உடம்புல ஜீரண மண்டலம், இனப்பெருக்க மண்டலம்னு ரெண்டு இருக்கு. ஒன்னு ஒர்க் ஆகும்போது இன்னொன்னு ஒர்க் ஆகாது. ஆனால் பலவந்தப்படுத்தினா அம்மாவுக்கு தண்ணி கொண்டு போற குரங்கு மாதிரி வேலை செய்ய ஆரம்பிக்கும்.

இந்த பழக்கம் தொடர்ந்தா ரெண்டு மண்டலத்தோட செயல் திறனும் பாதிக்கும். செக்ஸுங்கறது வேற, சுய இன்பங்கறது வேற . செக்சுங்கறது அடுத்தவுக கோஆப்பரேஷனோட நடக்கறது. சுய இன்பம்ங்கறது தான் தோன்றித்தனமா நடக்கறது.

முறை எதுவா இருந்தாலும் உணவையும் செக்ஸையும் பிரிச்சு வைச்சுக்கறது நல்லது.
கரப்பான் பூச்சிக்கு ஆயுள் அதிகம்.ஏன்னா அது முதல்ல கில்மா அப்பாறம் தண்ணி அப்பாறம் உணவுனு ஷெட்யூல் வச்சிருக்கு.

அதனால உணவுக்கும் செக்ஸுக்கும், செக்ஸுக்கும் உணவுக்கும் இடையில குறைஞ்ச பட்சம் 3 மணீ நேரமாச்சும் கேப் கொடுக்கிறது உங்க செயல்திறனை அதிகரிக்கும்.


ஆங் இன்னா சொல்லிக்கினிருந்தேன். செக்ஸுல உடலிலான ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு அணுவும் இன்பத்தில் திளைக்க முடியும். அதுக்கு தேவை பிரம்மச்சரியம்னு சொன்னேன்.

இந்த பாயிண்டை நிறைய பேர் குறை சொல்லலாம். ஆமா ஏற்கெனவே கேட் எல்லாம் வீக்கா இருக்க அணைய  நிரப்பினா  அசலுக்கு மோசம் வந்துராதானு கேப்பாய்ங்க.

பிரம்மச்சரியம்னா வெறுமனே விந்துவை வெளியேற்றாம இருந்துர்ரதுனு நினைச்சா அந்த இழவுதான் நடக்கும்.

பிரம்மச்சரியம்ங்கறது வேற ஸ்கூலு. லெசன் ப்ளானே வேற அதை இன்னொரு பதிவுல பார்ப்போம்.

இப்போ பொசிஷனுக்கு வந்துரலாம். பத்து பதினைஞ்சு நாள் பிரம்மச்சரியம் -அதுக்கப்பால ஹால் - அம்மா வராய்ங்க.

ஒடனே பெட் ரூமுக்கு ஓடப்படாது.லேசான தொடுகைகள்,சீண்டல், சுளுக்கெடுக்கறது,  சின்னதா முத்தங்கள்னு ஒரு 15 நிமிஷமாவது ஓட்டனும்.

அதுக்கப்பாறம் பெட் ரூம். இப்ப உங்க முன்னாடி இருக்கிறது ரெண்டே அஜெண்டா ஒன்னு உங்க உணர்ச்சிகளை ஒத்திப்போடறது. அடுத்தது அவிக உணர்ச்சிகளை தூண்டறது.

ஸ்ரீ ஸ்ரீ சொல்வாரு "கவிதகேதி காது அனர்ஹம்" அதாவது பாடு பொருளாகும் தகுதியற்ற வஸ்துவே கிடையாதாம். அப்படி பெண்ணின் உடலில் உணர்ச்சியை தூண்ட உதவாத அங்கமே கிடையாது. கூந்தல் , நெற்றி, மூக்கு,கன்னம், உதடு, கழுத்து இப்படி ஒன்னில்லை ரெண்டில்லை ஓராயிரம் இருக்கும்.

வாத்சாயனர் சொல்ற தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல்,கடித்தல் (லேசா..வலிக்கும்)  போன்ற ஐட்டங்களையெல்லாமொரு பாட்டம் முடிக்கவே ஒரு மணி   நேரமாகும். குறைஞ்ச பட்சம் அரை மணியாச்சும் முன் விளையாட்டு இடம் பெறலைன்னா இத்தீனி முஸ்தீபும் வீணாயிரும்.

அது சரி இத்தனை விஸ்தாரமா போறதுக்குள்ள காரியம் கை மீறிட்டா என்ன பண்றதுனு கேப்பிக.

முதற்கண் எதிர்காலத்தில் நான் போடப்போற பிரம்மச்சரியம் பத்தின பதிவுகளை படிச்சாகனும்.

ரெண்டாம் கண் (முதற்கண்ணுக்கு அடுத்தது இதானே) வாசனை பாக்கு (இதை எதுக்கு சொல்றேனு ரோசிச்சு பார்த்தா - ட்ரை பண்ணி பார்த்தா புரியும்) , இளவட்டங்களா இருந்தா பபுள் கம் யூஸ் பண்ணலாம். கில்மால இறங்கறதுக்கு முந்தி நிறைய தண்ணீர் எடுத்துக்கனும். ஐஸ்வாட்டர் இருப்புல வச்சுக்கனும். காரியம் கை மீறி போற மாதிரி இருந்தா ஒரு ஜலாபிஷேகம். அந்த பிரதேசம் வரை செஞ்சாலே போதும். எல்லாமே பேக் டு தி பெவிலியன் வந்துரும்  (குளிர்காலம்னா இன்னம் ஸ்ரேஷ்டம்).

இன்னொரு டெக்னிக் என்னன்னா உங்க கான்சன்ட் ரேஷன் எல்லாம் துகிலுறியறதுல  இருக்கலாமே தவிர நீங்க மட்டும் சர்வாலங்கார பூஷிதரா இருக்கனும். வாட்சை கூட கழட்டாதிங்க. மேலும் உங்க இடுப்பு பிரதேசத்தை பாதுகாத்துக்கனும். ( அதாவது உரசல்லருந்து)


 யோனியின் அமைப்பை புரிஞ்சிக்கிடனும். (ஒரு பாட்டம்  வெஜினான்னுட்டு கூகுல் இமேஜஸ்ல சர்ச் பண்ணிப்பாருங்க .படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருப்பாய்ங்க. இதுல க்ளிட்டோரிஸ்ங்கற மதன பீடம்தான் முக்கியம்மேற்படி தொடுகை,தடவல், உருட்டல், பிடித்தல்,பிசைதல், கிள்ளல், கவ்வுதல் எட்ஸெட்ரா ட்ரீட் மெண்டை இங்கனயும் ஆரம்பிச்சுரனும்.

இந்த எடுப்பு,தொடுப்பு, பல்லவி,அனுபல்லவி, நாலு சரணம்லாம் முடிஞ்சதுக்கு அப்பாறம்தான் நீங்க பார்த்த பாடாவதி நீலப்படம்லாம் . அப்பத்தான் சமரதம்னு சொல்ற ஒரே நேரத்திலான உச்சம் சாத்தியம்.  நாளை மிக்கா நாளைக்கு ஹால்ல உட்கார்ந்து "ஆச்சா ஆச்சானு கேட்டாலே அங்கன பத்திக்கும்.

ஆழமான உடலுறவுன்னா இதான். உங்க உடலுறவு இப்படி அமைஞ்சா அடுத்த உடலுறவு பத்து பதினைஞ்சு நாள் தள்ளி போகும் இயல்பான பிரம்மச்சரியம் கைவரும்.

ஒரு நாளில்லை ஒரு நாள் இந்த ப்ராசஸ்லருந்து  நீங்க ஆன்மீகம்ங்கற ப்ராசஸுக்கு ப்ரமோட் ஆவிக.

ஓகே உடு ஜூட்..

Friday, November 26, 2010

செக்ஸில் முன் விளையாட்டின் முக்கியத்துவம்

நம்ம புள்ளைங்களுக்கு ( நடிகர் திலகம் பாணி) செக்ஸுன்னா என்னனு சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.  கண் பார்த்தா கை செய்யும்னு ஒரு பழமொழி உண்டு. கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்னு நாமக்கல் கவிஞர் சொன்னாரே அல்லாத்தயும் நம்ம புள்ளைங்க தப்பாவே புரிஞ்சிக்கிட்டாய்ங்க.

செக்ஸுன்னா என்னனு தெரியும். ஆனால் அதுல கிடைக்கிற "காலாதீத நிலை" "குட்டி மரணம்" "ப்ளாக் அவுட்"  ஜஸ்ட் ஒரு  சினிமா ஸ்லைடு. அசலான படம் வேற இருக்குனு தெரியாது.

இதுக்கு காரணம் என்னன்னா நின்னு விளையாடறதில்லை. சச்சினாச்சும் எப்பயும் டக் அவுட் ஆனாலும் அப்பப்போ செஞ்சுரி போட்டுர்ராரு. நம்ம புள்ளைங்க எப்பயும் டக் அவுட்டுதேன்.

நாம எப்ப கில்மாவை தொட்டோமோ அப்பத்துலருந்தே பிரபல பத்திரிக்கைலல்லாம் ஒரு காலமாச்சும்  கில்மா எழுத ஆரம்பிச்சுட்டாய்ங்க.

நாம பரிகாரம் எழுத ஆரம்பிச்சா அவிகளும். நாம அனைவருக்கும் தனயோகம் போட்டா அவிகளூம்.

அடங்கொய்யால உங்களுக்கு தில்லிருந்தா இந்த பதிவுல எழுத போற சமாசாரத்தை எழுதுங்கடி.

நம்ம புள்ளைங்களுக்கு 7 : 23 நெம்பர் நல்லா ஞா இருக்கும்னு நினைக்கிறேன். அசலான வேலைக்கு பின்னாடி அவள் உச்சம் பெற  அவளுக்கு 23  அசைவு தேவைப்படுது. இவன் 7 அசைவுலயே நாக் அவுட்.

இடைப்பட்ட 16 நெம்பரை இழுத்துப்புடிக்கத்தேன் இந்த பதிவு. " அழுக்கு போக குளிச்சவனுமில்லை . ஆசை தீர ......வனும் இல்லை"னு சொல்வாய்ங்க. அதையெல்லாம் நம்பாதிங்க.

எல்லாத்துக்கும் ஒரு குன்ஸ் இருக்கு. ஒரு வியூகம் இருக்கு.  அதுல ஒரு பாகம் தான் இந்த முன் விளையாட்டு (இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லிங்கண்ணா)

இந்த ஃபோர் ப்ளேவோட நோக்கம் நிறைவேறனும்னா ஆண்,பெண் ரெண்டு பேருமே மேற்படி 7:23 வித்யாசத்தை புரிஞ்சிக்கிடனும்.

பெண் தன்னோட அச்சம்,  நாணம், வெட்கம்,மடம்,பயிர்ப்பு இத்யாதியையெல்லாம் ஓரளவாச்சும் ரிலாக்ஸ் பண்ணிக்கிடனும். டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட். மேற்படி ஐட்டம்லாம் ஓவராயிருச்சுன்னா அது அசலுக்கே மோசமாயிரும்.

பெண் தன் நிர்வாணத்தை மறைக்கவே விரும்பறா. ஆண் அதை தரிசிக்கவே விரும்பறான். இவள் மறைக்க மறைக்க அவன் அதிகம் உ.வசப்படறான். 7ங்கறது நாலு அஞ்சு அசைவுலயே அவுட்.

 நமக்கு டீ சாப்பிடனும்போல இருக்கும். அந்த நேரம் பார்த்து நம்ம கூட்டாளி "மாமூ.. ஒரு டீ அடிக்கலாமா" னு கேட்டா ஒடனே நம்ம மைண்ட் அவன் கேஸ் ஹிஸ்டரிய புரட்டி பார்க்கும்.

இவனோட டீ குடிச்சா  நம்ம சமூக கௌரவம் பாதிக்கப்படுமா? இவன் காசு கொடுப்பானா? நாம கொடுக்க வேண்டி வருமா? இங்க இவனுக்கு கணக்கிருக்கா ? நமக்கு கணக்கிருக்கா?

செக்ஸுல அதுவும் தம்பதிகளுக்கிடையில இந்த கணக்கெல்லாம் தேவையில்லாத மேட்டர். நான் "சயனேஷு ரம்பா"ன்னுட்டு அவாளே சொல்லியிருக்கா.  இதும்படி பார்த்தா பெட்ல உட்காரச்சொன்னா படுத்துக்கிடனும். அப்படி படுத்தா தாளி அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கி போயிரும்.அரண்டு போயிருவான். அந்த ரேஞ்சுக்கு போகலைன்னாலும்..

வாரி சுருட்டிக்கிட்டு ஓடாம, மதியம் சாம்பார்ல உப்பை போட நோகுதானு கேட்டதை ஞா வச்சுக்கிட்டு மரவட்டை கணக்கா சுருட்டிக்காம , ரொட்டீனா " சீ என்ன இழவு இதெல்லாம்"னுட்டு சொம்மா வேடிக்கை பார்த்தாலே போதும் ஆப்பரேஷன் பாதி சக்ஸஸ்.

இந்த ஃபோர் ப்ளேல ஆண் பெண் ரெண்டுபேருக்குமே மணீ ரத்னம் சினிமா மாதிரி ஒரு வரி வசனம் தேன். அவள் " வேணாங்க.. ச்சீ நீங்க ரெம்ப மோசம்" இவன் " ப்ளீஸ்டீ இன்னைக்கு ஒரே நாள்" பிரச்சினை தீர்ந்து போயிரும்.

எச்சரிக்கை:
இந்த டிப்ஸெல்லாம் சைக்காலஜிக்கலா, ஃபிசிக்கலா ஃபிட்டாயிருக்கிறவுகளுக்கு, அதுலயும் சாதாரண சந்தர்ப்பத்துக்குத்தேன். கண்ட நேரத்துல ,கண்டவுக கிட்ட அப்ளை பண்ணி அப்பள கட்டைல அடி வாங்கினா அதுக்கு நான் பொறுப்பில்லிங்கண்ணா.

7:23 க்கிடையில வித்யாசம் 16. இதை பாலன்ஸ் பண்றதுலதான் செக்ஸிலான வெற்றியே அடங்கியிருக்கு.

அந்த காலத்துல 10.30 மணிக்கு ஷோ ஆரம்பம்னா  9 மணிக்கே ரிகார்டு போட ஆரம்பிச்சுருவாய்ங்க. அதே குன்ஸுதான். செக்ஸுல ஆண் தான் முன் மொழியனும். பெண் வழி மொழியனும்.

அதனால ராத்திரி 10.30க்கு ஷோன்னா 10.15க்கு வீடு வந்து அள்ளிப்போட்டுக்கிட்டு பெண்டாட்டி மேல பாயறது முட்டாள் தனம்.

எட்டு எட்டரைக்கெல்லாம் மல்லிகை பூ இத்யாதியோட வீடு வந்து குளிச்சி டிவி பார்த்துக்கிட்டே.. " த .. நீ ச்சொம்மா அது இதுனு நீட்டி முழக்கிக்கிட்டு இருக்காதே எதுனா உப்புமா அது இதுனு சுருக்கமா முடி"ங்கனும்.

"த இன்னும் நீ இந்த பூவை வச்சிக்கலயா"ன்னுட்டு சமையலறைக்கே போய் தேவையில்லாம உரசினபடியே வச்சு விடனும் .

சாப்டுட்டு டிவிய பார்த்துக்கிட்டே "ஆச்சா ஆச்சா.. இன்னம் என்னத்த உருட்டறே நீ"ன்னுட்டு கேட்டுக்கிட்டே இருக்கனும். அப்ப அவிக சைக்கலாஜிகலா பிரிப்பேர் ஆயிருவாய்ங்க.

உங்க மைண்டல் ஒரு பாய்ண்டை கரீட்டா ஃபீட் பண்ணிக்கனும். உங்களோட ஃபோர் ப்ளே அதாங்க முன் விளையாட்டு அவிகளை டெம்ப்ட் பண்ணனுமே தவிர  உங்கள டெம்ப்ட் பண்ணக்கூடாது.

செக்ஸுங்கறது ஒரு வித்யாசமான ரன்னிங் ரேஸ். இதுல ஆண் முயல். பெண் ஆமை.

முயல் தன் வேகத்தை குறைச்சிக்கிட்டு ஆமையோட வேகத்தை கூட்டியபடியே ஓடனும். ஆணோட காமம் பால் பொங்கின மாதிரி. பெண்ணோட காமம் அரிசி உலை மாதிரி .

மெல்ல மெல்ல மோகத்தீய கிளப்பி சுடர் விட்டு பிரகாசிக்க வைக்கனும். அரிசி முழுக்க வேகற வரை தீ தொடரனும். இல்லைன்னா நாளைக்கு நீங்க ஊட்டி மலர் கண்காட்சியையே பேர்த்து எடுத்துக்கிட்டு போனாலும் .. வேஸ்டு.

நிறைய பெண்களுக்கு செக்ஸ் மேல இன்டரஸ்ட் குறைய காரணமே ஆண்களோட டக் அவுட் சமாசாரம்தேன்.

சரி மேட்டருக்கு வருவோம். சாப்டாச்சு, சமையல் மேடைய கழுவி விட்டுட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி வருவாய்ங்க.

"இன்னாத்துக்கு அப்டி அர்ஜெண்ட் பண்றிங்க.. என்ன விஷயம்?" இங்கருந்து காதல் நாடகம் ஆரம்பம்.

(மீதி அடுத்த பதிவில்


அதான் பி.கு: சுகுமார்ஜீ  நம்ம ஆப்பரேஷன் இந்தியா2000 (வல்லரசு கனவுகள்) ப்ளானை விஷுவலைஸ் பண்ணி ஒரு ஒளிப்படம் தயாரிச்சு விட்டிருக்காரு (பார்த்திங்கல்ல) அதை மஸ்தா பேரு பார்க்கனும்னு தான் இந்த கில்மா பதிவு

Sunday, September 19, 2010

மருமக மாமியாருக்கு சக்களத்தி தான் : 2

அண்ணே வணக்கம்ணே,

மனைவி அமைவதெல்லாம்ங்கற தொடர்பதிவை ஆரம்பிச்சு அதுல ஒரு துணை தொடரை மருமக மாமியாருக்கு சக்களத்தி தான்ங்கற தலைப்புல எழுதிக்கிட்டிருக்கேன். நான் நேத்து தாய் - மகனுக்கிடையிலான உறவை பத்தி எழுதின மேட்டருக்கு சனம் மனோகரா சினிமா கணக்கா பொங்கி எழுந்து டங்கு வாரு அறுத்துரப்போவுதுனு நினைச்சேன். ( யதார்த்த வாதிபஹுஜன விரோதி- உள்ளதை சொன்னா நொள்ளக்கண்ணிக்கு நோப்பாளம் )



ஞாயிற்று கிழமை காரணமா இல்லே இந்த ஆளுக்கு சுய புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது அனுபவிக்கட்டும்னு ஒரு எண்ணமா புரியலை. ஹிட்ஸ் மட்டும் 12 மணி நேரத்துக்கு இரட்டிப்பாகியிருக்கு. சந்தோசம். மசூதி மந்திர் மேட்டரை எத்தனை பேர் படிச்சாய்ங்கனு தெரியலை.



முக்கியமா நான் போடற பதிவுகளை உடனுக்குடன் படிக்கிறவுக குறைச்சல். பழைய பதிவுகளையெல்லாம் ஒரு பாட்டம் படிச்சுட்டுத்தான் லேட்டஸ்டுக்கு வராய்ங்க.ஒரு வேளை ரிவிஷன் பண்றாய்ங்களோ? (அப்ப நம்ம எழுத்து வைன் மாதிரினு சொல்லலாமா? அதுக்குத்தான் பழசாக பழசாக மவுசு கூடும்)



இந்த துணைத்தொடர் எழுதறதுல என் உத்தேசம் என்னன்னா மொதல்ல ஃபேக்ட்ஸ் தெரியனும்.அப்பத்தான் தீர்வு சுலபம். ஃபேக்ட்ஸ் கசப்பா இருக்கு, அசிங்கமா இருக்கு,வக்கிரமா இருக்குன்னு கண்ணை மூடிக்கிட்டு பிரச்சினையை தொட்டா அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டுட்ட மாதிரி அது இன்னம் சிக்கலாயிரும்.



மேக்கியவல்லி தன்னோட "தி ப்ரின்ஸ்" ல அரசனுக்கு அட்வைஸ் பண்றச்ச "மக்களோட மனைவி, நிலம் ரெண்டை மட்டும் தொடாதேங்கறார்" இப்ப பார்த்தா சிறப்பு பொருளாதார மண்டலம்னு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தறாய்ங்க. சனம் ஏதோ சம்பிரதாயத்துக்கு போராடுது.அதுவும் அதிக நஷ்ட ஈடு கேட்டுத்தான். ஏன்?



ஏதோ ஆதிவாசிகள் மட்டும் நக்சல்ஸோட சேர்ந்து டஃப் ஃபைட் கொடுக்கிறாய்ங்க. அவிக தற்கால நாகரீகத்துக்கு (?) பழக்கப்படாம இயற்கையோட நெருங்கின வாழ்க்கை வாழறதால ஆதி மனித காலத்து மூர்கம் அ இயற்கையின் சிம்பலான நிலத்தின் மீதான பற்று தொடர்ராப்ல இருக்கு.



மேக்கியவல்லியோட லிஸ்ட்ல அடுத்து வர்ரது பெண்டாட்டி. மனிதன் நாகரீகமடைய அடைய அவனுடைய இயல்பு நிலை பாதிக்கப்படுது. ஆண்மை குறைஞ்சு போகுது. இயற்கையிலேயே அவனுக்குள்ள இருக்கிற மூர்கம் குறைஞ்சு போகுது. இது எந்த நிலைக்கு போயிருச்சுன்னா பெண்டாட்டி மேட்டர்ல கூட காம்ப்ரமைஸ் ஆகிற ஸ்டேஜுக்கு வந்துட்டாய்ங்க.



ஒரு பிக்காலி ஃபைல்ஸை தன் மனைவி மூலமாத்தான் அதிகாரிகளுக்கு கொடுத்தனுப்பும்.என்னய்யா இதுன்னா" உடு சாமீ.. நம்மால ஆகாத வேலை பெண்டாட்டியால ஆகுதுன்னா ஆகட்டுமே"ங்குது அந்த பன்னாடை.



அந்த பண்பட்ட (?) ஸ்டேஜுக்கு இன்னம் வராம மெத்த நாகரீகமடையாத பார்ட்டிகளோ, அல்லது இத்தனை நூற்றாண்டுகளாகியும் ரத்தத்துல குறையாத மூர்கத்தை வச்சிருக்கிறவுகளோ மட்டும் தான் நிலத்தகராறு, கள்ளக்காதல் மேட்டர்ல ஆயுதம் தாங்கி தந்தில செய்தியாயிர்ராய்ங்க.



அதுக்குனு மத்தவுகல்லாம் கம்ப்ளீட்டா காம்ப்ரமைஸ் ஆயிட்டாய்ங்கனுல்ல அங்கனயும் கொலை செய்ய முயற்சி நடக்குது ஆனால் ஆயுதம் வேற, களம் வேற, யுத்தமுறைகள் வேற.



இதை வேறும் ஒரு ஆணோட பார்வையில மட்டுமில்லை, பெண்ணோட பார்வையிலயும் பாருங்க. ஒரு தாய். அவளோட மீனியேச்சர் கணவன் மகன். உடலுறவு ஒன்னை தவிர உடலுறவுக்கு முந்தி பிந்தி நடக்கிறதெல்லாம் நாசூக்கா, யதேச்சையா, தவணையில நடக்குது. என்னைக்கோ ஒரு நா "அது"வும் நடக்கும்ங்கற எதிர்பார்ப்பும் இருக்கலாம். ( ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா) அதை மருமக வந்து இனி இல்லவே இல்லைன்னு ஆக்கிர்ரா. இதை எப்படி அந்த தாய் மனசு ஏத்துக்கும்?



பொருளாதார காரணங்களை காட்டறாய்ங்க. இதுவும் ஒரு காரணமா இருக்கலாம். ஆனால் இதுவே காரணம் கிடையாது. ஒரு பெண்ணுக்கு பெண் மேல எந்த வித ஈர்ப்பும் இருக்க வாய்ப்பே கிடையாது. மருமகளை பிடிக்காத எந்த மாமியாரும் ஆரம்ப நிலையிலயே மகனை கூப்டு " த பாருப்பா உன் பிச்சை எனக்கு தேவையில்லை நான் பிச்சையெடுத்தாச்சும் பிழைச்சுக்குவன் . நான் போறேன்"னுட்டு கிளம்பறதில்லை. அதே மாதிரி மருமகளை கூப்டு "த பாரும்மா எதுக்கு சும்மா லொள்ளு ..உன் புருசனாய் கூட்டிக்கிட்டு தனியா போயிரு"ன்னு சொல்றதில்லை. அப்படி போயிட்டா மகனை கண்ணால கூட பார்க்க முடியாதே



செக்ஷுவல் ஃபேக்டர்ஸ் கலக்காத எந்த பிரச்சினையையும் கொஞ்சம் மெனக்கெட்டா பைசல் பண்ணிரலாம். ஆனால் செக்ஷுவல் ஃபேக்டர்ஸ் கலந்திருக்கிற பிரச்சினையை பைசல் பண்ணவே முடியாது. (அந்த செக்ஷுவல் ஃபேக்டர்ஸை ஸ்மெல் பண்ணா தவிர)

மத்தபடி காசு பணம் காரணமா வர்ர எந்த பிரச்சினையும் இந்த ரேஞ்சுக்கு போகாது போகாது போகாது.



இந்த ஃபேக்டரை எடுத்து சொன்னது எதுக்குன்னா இதான் அசலான பிரச்சினை. இதுதான் அடிமனசுல கொழுந்து விட்டு எரியற கட்டை. எரியறத பிடுங்கினா கொதிக்கிறது ஆட்டோமேட்டிக்கா அடங்கிரும்.



மாமியாராகட்டும், மருமகளாகட்டும் இந்த பாயிண்டை புரிஞ்சிக்கிட்டா " தூத்தேரிக்க இந்த பிரச்சினைக்கு இப்படி ஒரு இழவெடுத்த காரணம் இருக்கா.. அய்யய்யோ நான் இந்த மேட்டர்ல எந்த அளவுக்கு பிடிவாதமா இருக்கேனோ அந்த அளவுக்கு இந்த பிரச்சினைக்கு சித்தூர் காரரு சொன்ன காரணம் தான் காரணம்னு இந்த உலகம் நம்ப ஆரம்பிச்சுருமோங்கற பதைப்புலயே தங்கள் பிடிவாதத்தை குறைச்சுக்குவாய்ங்க. அட்லீஸ்ட் மறைச்சுக்குவாய்ங்க.



ஒரு தாய் தன் மகனை மீனியேச்சர் கணவனா பாவிக்கிற நிலைக்கு வர காரணம் அவளோட மண வாழ்வு , கணவனுடனான உறவு ( உடலுறவு இல்லிங்கோ) அவள் எதிர்பார்ப்புகளுக்கிணங்க அமையலைங்கறதுதான்.



ஒரு பெண்ணோட பேசிக்கல் இன்ஸ்டிங்ட் தாயா மாறனுங்கறதுதான். இல்லாட்டி செக்ஸுவல் ஆர்காசம் சாத்தியமே இல்லாத கணவனோட தொடர்ந்து வாழறது சாத்தியமே இல்லை. தாயா மாறனுங்கறது மனித மனங்கள்ள மறைஞ்சிருக்கிற பாஸிசமா கூட இருக்கலாம். அது வேற விஷயம். அவளோட கணவனே அவளுக்கு குழந்தையா மாறிட்டா இந்த பிரச்சினையே வராது.



ஆணா ஆண்மனம் எப்பவும் பெண்ணை சந்தேக கண் கொண்டே பார்க்குது ( இவனால தான் ஆர்காசத்தை கொடுக்க முடியலியே) அதனால அவளை எப்பயும் தன் கட்டுப்பாட்லயே வச்சுக்க துடிக்குது. "போஜேஷு மாதா"ன்னு ஸ்லோகம் சொன்னாலும் மனைவி ஒரு தாயா மாற, தாயா வாழ ஆயிரம் சிச்சுவேஷன்ஸ் இருக்கு. கணவனே அவளுக்கு மகனா மாறிட்டா அவள் ஏன் மகனை மீனியேச்சர் கணவனா பாவிக்கப்போறா. மருமகளை சக்களத்தியா எண்ணி சண்டையிழுக்க போறா?



தன் வருங்கால மனைவியை தேடும் ஒரு இளைஞன் தன் தாயைத்தான் தேடறான் . வருங்கால கணவனை தேடும் ஒரு இளைஞி தன் தந்தையை தான் தேடறானு சைக்காலஜி சொல்லுது.



இதை கொஞ்சம் டீப்பா பார்த்தா இந்த தியரி மன முதிர்ச்சியடையாத யூத்துக்கு மட்டும் பொருந்தறாப்ல இருக்கு. மெச்சூர்ட் மைண்டட் இளைஞன் மகளை தேடவும் கூட வாய்ப்பிருக்கு.



ஆனா மனிதனோட மூட் 4 நிமிஷத்துக்கு ஒரு தரம் மாறுது. ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் கம்ப்ளீட்டா மாறுது. அவன் நினைச்சா சில சமயம் தந்தையாவும், சில சமயம் மகனாவும் பிஹேவ் பண்ணமுடியும். (தந்தையா மாறினா பொஞ்சாதி பொறுப்பில்லாதவளா மாறி அப்பனை சதாய்ச்ச ரேஞ்ஜுல உங்களை சதாய்ச்சுர சான்ஸு இருக்கு பாஸ்! அட் தி சேம் டைம் நீங்க மகனா மாறிட்டா அவிகளை உங்க அம்மாவை சதாச்ச மாதிரி சதாச்சுரலாம். மகன்,மகளா மாறிர்ர கணவன் அ மனைவி நித்ய யவ்வனமா இருப்பாய்ங்க. தீர்காயுசு. தாயா மாறிர்ர பொஞ்சாதி நித்ய யவ்வனமா இல்லேன்னாலும் ஆத்ம திருப்தி காரணமா ஆயுசாச்சும் கூட்டிக்கலாம். தந்தையா மாறிர்ர கணவன் தான் சீக்கிரம் கிழவாடி ஆகி அல்பாயுசுல போயிருவான். புருசன் புருசனாவே ,பொஞ்சாதி பொஞ்சாதியாவே வாழ்ந்துட்டா லைஃப் நியூஸ் ரீல் மாதிரியாயிரும்.



இந்த ஃபார்முலாவை அந்த தாயோட கணவன் ஃபாலோ பண்ணியிருந்தான்னா இந்த ப்ராப்ளம் வந்தே இருக்காது. வந்துருச்சு. இப்ப என்ன செய்யறது? அந்த தாயோட மேரீட் லைஃப் எப்படியிருந்தது, செக்ஷுவல் லைஃப் எப்படியிருந்தது, அதை அவிக எப்படி எடுத்துக்கிட்டாய்ங்க மாதிரி டீட்டெயில்ஸ் எல்லாம் தேவை. அப்பத்தான் இந்த மாமியார் - மருமக பிரச்சினையோட ஆணி வேரை அசைச்சு பிடுங்கி எறிய முடியும்.



அது மட்டுமில்லிங்கண்ணா மருமகளா வந்த பெண்ணோட தாயார் விஷயத்துலயும்

அவிகளோட மேரீட் லைஃப் எப்படியிருந்தது, செக்ஷுவல் லைஃப் எப்படியிருந்தது, அதை அவிக எப்படி எடுத்துக்கிட்டாய்ங்க மாதிரி டீட்டெயில்ஸ் எல்லாம் தேவை. இதையெல்லாம் எப்படி கலெக்ட் பண்றது, எப்படி டீ கோட் பண்றது. இந்த மா - ம பிரச்சினையை எப்படி சவப்பெட்டில இட்டு ஆணி அறையறதுன்னு அடுத்த பதிவுல பார்ப்போம்.

Tuesday, March 2, 2010

மறுபடி அவள் - தொடர் கதை

முன்  கதை சுருக்கம்
என் பேரு முகேஷு வயசு22.டிகிரி முடிச்சுட்டு 'ச்சும்மா' இருந்த நேரம் அப்பாவோட ஃப்ரெண்ட் ஒருத்தர் தன்னோட டூர் பஸ்ஸுக ரெண்டையும் பார்த்துக்க கூப்டாரு. நல்லாவே டெவலப் ஆச்சு. எனக்கு வெளி வேலைல இருக்கிற ஆர்வம் க்ளரிக்கல் வேலைல இல்லாததை பார்த்த ஓனர் மாயாவ எனக்கு உதவியா அப்பாயிண்ட் பண்ணார்.

மாயா என்னைவிட பத்து வயசு பெரியவ. குஷ்பு தனமான ஃபிசிக். ரொட்டீன் உமன் இல்லே வேலைல எமன். அவளுக்கு 4 அக்கா எல்லாரும் மேரீட். அவியளுக்கு கல்யாணம் பண்றதுக்குள்ளாற அப்பா சலிச்சு போயி செத்துப்போயிட்டாரு. மிச்சம் மீதி நிலத்தையும், எஃப்,டிக்களையும் மாயா பேருக்கு வச்சிட்டார். இதனால அக்கா புருசங்க 4 பேரும் இவளை கவுத்து சொத்து பணம் அடிச்சுரலாம்னு பார்க்க இவ டவுனுக்கு ஜூட்.

போது போறதுக்கு நம்ம டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்ல வேலை. சபார்டினேட்டா வீக் எண்ட்ல மீட் பண்றதுண்டு. நேரு ஸ்ட்ரீட்ல அறையெடுத்து தங்கியிருக்கா. அறைனு சொன்னது அவ தனியா இருக்காங்கற கான்செப்ட்ல . சின்ன வீடுன்னு சொல்லலாம். ( பாக்யராஜ் படத்துல வர்ர வீடில்லங்கண்ணா). எனக்கு அம்மா 1984லயே டிக்கட்.பாலச்சந்தர் தனமான அப்பா, ரெண்டு அண்ணன் ,ஒரு தம்பி, பொம்பளையிலயே சேர்த்தியில்லாத பாட்டி. ஊர்ல நத்தம்,  நாடோடி,புறம்போக்கு ,ப்ளாக் டிக்கட் எல்லாத்தோடயும் டச். அப்பப்ப ரீஃபில் பண்ணிக்கிறதுக்காக பலான வீடுகள். 

ஒரு நாள் ஞா கிழமை மாயாவோட அறைக்கு போறேன். வாயில் நுரை. பக்கத்துல பூச்சி மருந்து பாட்டில். எப்படியோ ஒரு போலி டாக்டர்,அவர் மூலமா கவர்ன்மென்ட் ஹெட் நர்ஸு மூலமா காப்பாத்தி வுட்டாச்சு. என்னம்மா விசயம்னு கேட்டா பழைய காதலனாம். மாயாவோட அப்பா பார்த்த சம்பந்தம் பெண் பார்க்க வர்ரப்பல்லாம் மொட்டை கடிதாசு போட்டு கெடுக்கிறது வேலை. தங்கச்சிக்கு முடியாம இவர் பண்ணமாட்டாராம்.அதுவரை மாயா வாயாம இருக்கனுமாம். மாயா மாதிரி கேரக்டர் அவனை எப்படி டைஜஸ்ட் பண்ணிக்கும்.தங்கச்சி கல்யாணத்துக்கு செக் கிழிச்சு கொடுத்து  "ஓடிப்போடா"ன்னிருக்கா.

அந்த நாய் வெளில போய் " நீ என்னை வச்சிருக்கிறதாவும் என் மேல ஆசைப்பட்டு செக் கொடுத்ததாவும் ஊரெல்லாம் சொல்லுவேன்னு" சொல்ட்டு போக மாயா தற்கொலை முயற்சி. பாபுரெட்டி ஆட்கள் துணையோட மாயா கிராமத்துக்கு போயி மேற்படி நாயை தூக்க முயற்சி. கிராமத்தாளுங்க எங்களை மரத்துல கட்டி வச்சு செமை காட். மாயா ஜீனும், கார்ட்டூன் போட்ட பஞ்சு மிட்டாய் டீ ஷர்ட் ,சம்மர் கட்டுனு என்னை இம்சிக்க நானும் ஓஞ்சு போன்னு ஈடுகொடுக்க படக்குனு முகத்தை வாரி நெஞ்சுல அணைச்சுக்கிட்டா. நான் பேசாம எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கயேன். அந்தாளும் விடோயர்தான்னேன்..அவள் உனக்கு அம்மா தானே வேணம் வாடா செல்லம்னு நெஞ்சோட அணைச்சிக்கிட்டா.

மறு நாள் ஓனர் அவர் சம்சாரத்தை மெட்ராஸ் அப்போலோ கூட்டிப்போகனும்னாரு. மாயாவை துணைக்கு கூட்டிப்போறனு சொல்ட்டு மாயாவுக்கு போன் போட்டு விவரம் சொன்னேன்."சரி வரேன்"ன்னா.  ஆஃபீஸ் போய் என்ன மாயா..  நீ ரூமுக்கு போய் பேக்கிங் முடி நான் வந்து பிக்கப் பண்ணிக்கறேன்னேன். " என்ன நினைச்சிருக்கே என்னப்பத்தி .. "ன்னு சீறினாள் மாயா.

அப்புறமா பார்த்தா நீ என்னை ஏன் காப்பாத்தினே மனிதாபிமானம். அது எனக்கு இருக்கா இல்லியானு சந்தேகப்பட்டுத்தானே போன் பண்ணேன் அதான் கோபம்னாள். ஷாட் கட் பண்ணா சென்னை. சொறி பார்ட்டியான என் அண்ணனோட சென்னை ஃப்ரெண்ட்ஸ் உதவியோட ஓனரம்மாவை அப்போலோல  அட்மிட் பண்ணினேன். ஓனர் கொடுத்த தகவலை கேட்டு ஆஸ்பத்திரிக்கு வந்துட்ட சொந்தக்காரவுக  நாங்களே பார்த்துக்கறோம்னிட்டாங்க. ஓனருக்கு   ஃபோன்ல தகவல் சொல்லிட்டு அவர்  சொன்னாப்ல சிக்கன் சென்டருக்கு போனோம்.

மாயாவ மாடில படுக்கச்சொல்லிட்டு கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தேன். அப்புறம் மாடிக்கு போக மாயா ஏன் லேட்டுன்னு கோச்சுக்கிட்டா. " நீ என்ன பெண்டாட்டியா?" ன்னேன். அவள் என்ன வண்டி ரூட் மாறுதுன்னா. அம்மா மேல இருக்கிற காதலால அப்பனை வெறுக்கற மன நிலையான ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் பத்தி சொன்னேன்.

"சீ சீ .. அம்மாவ போய் எவனாச்சும் காதலிப்பானா?"
"காதலிச்சுருக்கான்.  சரித்திரத்துல மட்டுமில்லே புராணத்துலயும் இதுக்கு உதாரணம் இருக்கு . வினாயகர் தன் தாய் பார்வதி மாதிரி பெண்ணைத்தான் கட்டனும்னு ஆற்றங்கரைல,அரச மரத்தடில  உட்கார்ந்திருக்காராம்..பாவம் அவருக்கு விஷயம் தெரியாம அங்கே உட்கார்ந்திருக்காரு. ஆறு எல்லாம் சாக்கடையாகி பல காலம் ஆச்சு. குட்டிங்கல்லாம் இப்ப ஆத்துக்கே போறதில்ல..ஆனால் வினாயகர் மட்டும் அங்கேயே தங்கிட்டாரு"

"ஏய் கடவுள் மேலயே ஜோக்கா ?"

"கடவுள் வந்து தாய்ப்புலி. மனுஷங்க எல்லாம் குட்டிப்புலி. ஆனா இவிக ஆட்டு மந்தையாயிட்டதால புலி புலின்னு பயந்து சாகறாங்க.. ஆனால் நான் குட்டிப்புலி. கடவுளோட சண்டை போடுவேன், தகராறு பண்ணுவேன்,கோச்சுக்குவேன்.. ஜோக்கடிப்பேன். என் கடவுள் என் இஷ்டம்"

"சரிடா அம்பி ! நீ புலியா இருக்கலாம் நான் மட்டும் .."

"பசுவா  அக்கா ? உன் சைஸுக்கு அதைத்தான் சொல்லனும்"

"த்தூ.. பொம்பளைன்னா வெறும் உடம்புதானா?"

"இல்லைதான். ஆனால் பொம்பளைங்கள்ள நிறைய பேரு  தங்களை அப்படித்தான் , வெறும் உடம்பாத்தான் எக்சிபிட் பண்ணிக்கறாங்க. உடம்பை பத்தி பேசினாதான் ரசிக்கிறாங்க"

"பின்னே உன் பார்வைல  பொம்பளைன்னா என்ன ?"

"ஒரு மனுஷ பிறவி. என்னாட்டம் ஒரு ஜீவன். எனக்கிருக்கிற வலி, மல,ஜல உபாதை எல்லாம் அவளுக்கும் உண்டுதானே "

' யப்பா உனக்கு இன்னா வயசு இருபத்திரெண்டா  ?அறுபத்தி ரெண்டா?"

"பார்த்தயா இதான் பொம்பளை சைக்காலஜி. உங்க கணக்கு பிரகாரம் 22 வயசுல மெச்சூரிட்டியே வராது அப்படித்தானே .. வயசான பார்ட்டியா இருந்தா குண்டு தீர்ந்து போன துப்பாக்கி மாதிரி அப்படித்தானே .. எத்தனை மாமனார் மருமகளை முடிச்சிருக்கான் தெரியுமா?  எத்தனை வாத்தியார் மாணவிகளை முடிச்சிருக்கான் தெரியுமா?  இளமைல காமம்ங்கறது அனலைசிங்க்ல , டெசிஷன் மேக்கிங்க்ல ,  ஒரு டிஸ்டர்பன்ஸ்தான் இல்லைங்கலே.. அதுக்காக அறுபத்தி ரெண்டுலதான் மெச்சூரிட்டின்னா எப்படி ? என்னையே எடுத்துக்க.. அதுக்குன்னு சில பார்ட்டி இருக்கு. அங்கே போய் எல்லாத்தயும் முடிச்சுர்ரேன். ஃப்ரெஷ் மைண்டடா வெளிய வந்துர்ரன்.. என்னை இத்தனை மாசமா பார்க்கிறே.. எப்பயாச்சும்.. உன்னை ஒரு உடம்பாவோ, ஒரு பொம்பளையாவோ பார்த்திருக்கேனா?"

"அஸ்கு புஸ்கு.. ஒன்னும் பேராதுன்னு அடக்கி வாசிக்கிறயோ என்னவோ?"

" உன் கிட்டயா ? பேராதுங்கறயா .. கிழிஞ்சது போ.. பந்தயமா எண்ணி பத்து நாள்ள முடிச்சுருவன்"

"பின்னே ஏன் உன்னை ஒரு உடம்பாவோ, ஒரு பொம்பளையாவோ பார்த்திருக்கேனா?ன்னு நீட்டி முழக்கறே.."

"முதலை ஆடு மாடை கூட அப்படியே மென்னு விழுங்கிருமாம். மாமிச துணுக்குங்க ஈறு சந்துல மாட்டிக்கிட்டு  நாத்தமெடுத்து வீங்கி  அவதிப்படுமாம். அப்போ கரையோரமா வந்து தலைய கரை மேல வச்சு வாயை திறந்து வச்சி படுத்துக்குமாம் ....... அந்த சமயம் சின்ன பறவை ஒன்னு வந்து முதலையோட பலிடுக்குல இருக்கிற சதை துணுக்குகளையெல்லாம் கொத்தி கொத்தி தின்னுமாம்.. அந்த பறவைய விழுங்க முதலைக்கு எவ்ள நேரம் பிடிக்கும் ? ஆனா விழுங்காது.. அதே இழவுதான் உன் சங்கதியும். ஒரு ஆம்பள  எல்லா பொம்பளையையும் பெட் ரூம் பார்வையே பார்த்தா அவன் பலான விஷயத்தை தொட்டுக்கூட பார்க்கலைன்னு அர்த்தம்.. அவன் கூடிய சீக்கிரம் மன நோயாளி ஆயிருவான்"

சொல்லி முடித்து சிகரட்டை எடுத்து பற்ற வைக்க தீப்பெட்டி தேட மாயா எடுத்துக்கொடுத்தாள்.. அவள் பார்வையில் பூஜ்ய பாவம்.. கீதை சொன்ன கண்ணனை பார்த்த அர்ஜுனன் மாதிரி பார்த்துக்கிட்டிருந்த மாயாவ.. " ஹோய் !  என்னா பார்வை இது ரஜினிகாந்தை ரஜினி ரசிகன் பார்த்தமாதிரி.. நான் ஒன்னும் மகானில்லே.. ப்ராக்டிக்கல் மேன்.தட்ஸால்"ன்னிட்டு சீறினேன்.

மாயா பாலகுமாரன் நாவல் கணக்கா என் கையை எடுத்து கண்ல ஒத்திக்கிட்டு "முகேஷ் ! ரியலி யுவார் க்ரேட். 22 வயசுல இப்படி ஒரு கோணத்துல யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்னா .. "

" அறுபத்திரெண்டுல கபாலம் வெடிச்சு கதி மோட்சம் தாங்கறியா.. யம்மாடி .. என் லாப்ல நான் தான் தவளை, நான் தான் குரங்கு  என் ஆராய்ச்சிகளோட இடைக்கால முடிவுதான் இதெல்லாம்.. ஆஃப்தி ரிக்கார்டுன்னு வச்சுக்கயேன்"

அதுவரை நான் சேரிலும் அவள் கட்டிலிலும் உட்கார்ந்திருந்தோம். திடீர் என்று "முகேஷ்!  இங்கே வாயேன் இங்க வந்து உட்காரு"ன்னிட்டு கைய பிடிச்சு இழுத்தா. நான் கேலியா " என்னம்மா கண்ணு பத்து நாள்ள முடிச்சுர்ரதா பந்தயம் போட்டது நான் .. உனக்கென்ன அவசரம்"னேன்.

"ஷிட்.. வாடான்னா "ன்னிட்டு ஒரு இழுப்பு இழுத்தாளா .. நான் ஏதோ அசால்ட்டா தம் போட்டுட்டிருந்ததால ( நம்ம பாடி  வேற காட்பாடியாச்சா) கட்டில்ல போய் விழுந்தேன். "தத்.. சரியான தக்கை நீ.. ஒரு இழுப்புக்கேவா இப்படி விழறது.. சரி ஒழியட்டும் எந்திரிச்சு உட்கார்"ன்னாள். எந்திரிச்சு உட்கார்ந்தேன்.

"என் தலை மேல கைய வை"ன்னா மாயா.. எனக்கு ஒன்னுமே புரியலை. ஒரு கைல சிகரட்டை வச்சுக்கிட்டு மாயா தலைமேல கைய வச்சேன். அந்த கைய எடுத்து அப்படியே தன் முகத்துல வச்சிக்கிட்டா. என் கை கண்ணீரால நனைஞ்சது..

"சனியனே ..நான் என்ன பண்ணேன்.. ஏன் அழறே இப்போ"

"என் அப்பா ஞா வந்துருச்சு.. ஒரு நாள் என்னை பெண் பார்க்க வரதா இருந்தவங்க சொன்ன நேரத்துக்கு வரலை. ஏதோ கன்னா பின்னானு லெட்டர் வந்ததாவும் அதனால வரலைன்னும் தகவல் வந்தது. நான் புழக்கடைல துணி துவைக்கிற கல் மேல உட்கார்ந்து அழுதுக்கிட்டிருந்தேன். என் அப்பா வந்து என் தலை மேல கைய வச்சு யம்மாடி .. அழுவாதடா.. நான் செத்து பிறந்து வரதுக்குள்ள நீ கிழவியாயிருவ..அதனால நான் ஒன்னு பண்றேன் .. உனக்கு முன்னாடி நான் செத்து  எவனாச்சும் நல்ல பையனா பார்த்து அவன் மனசுல பூந்து  உன்னை கல்யாணம் பண்ணி காலமெல்லாம் கண் கலங்காம வச்சு காப்பத்தறாப்ல செய்றேன்னார்.. என் அப்பாதான் உன் மனசுல பூந்து இதெல்லாம் பேசினாரோனு தோணுச்சு.. அதான் "

"மாயா .. உனக்கொரு ரகசியத்தை சொல்லவா.. பிற குட்டிகளோட பழகறப்போ அதுகல்லாம் ஏதோ கவுன் போட்ட அரை டிக்கட் மாதிரி தோனுமே தவிர ஒரு இழவு ஃபீலிங்கும் வராது. என்னமோ நான் கிழடா மாறிட்ட மாதிரி டீலாயிருவன். ஏதோ நீ மதர்லி லுக்கிங்கோட இருக்கறதால என்னை நான் யூத்தா ஃபீல் பண்ண முடிஞ்சது.. இப்ப என்னடான்னா நீயும் என்னை கிழவாடியாக்கிட்டே"

"ஏய் பெண் குழந்தை பிறக்கும் போதே தாயா பிறக்குது. மெஸ்யூர்ட் மேல் தான் தந்தையா மாறமுடியும்னு நீதானே சொன்னே  .. நீ பிஞ்சுல பழுத்த கேஸு உன்னை  எந்த பொண்ணும் தந்தையாதான் ஃபீல் பண்ணுவா?"

"அப்படிங்கறே.. பின்னே பி.ஆர் எதுக்கு உன்னை முத்தல் கோழின்னாரு?"

"என்.........ன முத்தல் கோழியா? நாளைக்கு வச்சிக்கறேன்.."

"யம்மாடி ஆல்ரெடி அவரு மச்சினிய வச்சிருக்காரு. சித்தூர்ல ஒரு டூ டவுன் இருக்கு .. அவரை ஏன் வச்சிக்கறே.. வேணம்னா என்னை  வச்சிக்க"

உடனே மாயா என் பின்னங்கழுத்தை ஒரு பிடி பிடிச்சு முகத்தை நிமிர்த்தி பார்த்துட்டு "ப்ச்.. ஒரு பிடிக்கு தாங்கமாட்டே .. உன்னை வச்சிக்கிட்டு என்ன பண்றது .. அதிலயும் சம்மர் கட் சூப்பர்மா ..  கான்வென்ட்ல கூட கேள்வி கேட்காம சேர்த்துப்பாங்க" ன்னிட்டு அப்படியே கீழே தள்ளினாள்.  சிகரட் எகிறி கீழே விழ .. நான் எழுந்து தரையில் அதை தேடிக்கிட்டே " ராட்சசி.. ஆனை  குட்டி.. இட்லி பாப்பா" ன்னேன், அவ்ளதான் என்னை இழுத்து கட்டில்ல தள்ளி மேலே ஏறி உட்கார்ந்து  மரியாதையா நிறுத்து நிறுத்தலே ..." ன்னிட்டு நாக்கை மடிச்சு முறைச்சு பார்த்தா.. எனக்கு லேசா மூச்சிரைச்சது. இருந்தாலும் தம் கட்டி " பம்ப்ளிமாசு, பன்னி , பிந்து கோசு"  ன்னு வரிசையா கத்தினேன். அப்படியே என் மேல குனிஞ்சு  என் உதட்டை பிடிச்சு நறுக்குனு ஒரு கடி கடிச்சுட்டு  என்னையே பார்த்தாள்.

நான் வலியை பொறுத்துக்கிட்டு " மாயா உனக்கொன்னு சொல்லவா? ஆணும் பெண்ணும் சேர்ந்து ஸ்தூலமா எதை பண்ணாலும் சூட்சுமத்துல பலானதைத்தான் பண்றாங்களாம்" னேன்.

சட்டுனு பக்கவாட்டில உருண்டு " பிசாசே..உன்னை... நாளைக்கு வச்சிக்கிறேன்.. இப்ப தூங்கு" ன்னிட்டு பாத்ரூம் போய் வந்து போர்த்திக்கிட்டு திரும்பி படுத்துக்கிட்டா. எனக்கு தூக்கம் பிடிக்கலை. இருந்தாலும்  நைட் லேம்புக்கான ஸ்விட்சை தேடி போட்டுட்டு  யூப் லைட்ட ஆஃப் பண்ணிட்டு வந்து படுத்தேன்.  நீல நிற லேம்ப் அடக்கமான வெளிச்சத்தை சிந்த மாயா நத்தை மாதிரி சுருண்டு படுத்துக்கிட்டிருக்கா. ரெண்டு கையும் கழுத்தை சுத்தியிருக்க ,கனமான போர்வையால கூட அவளோட உடம்பின் வரி வடிவத்தை மழுப்ப முடியலை. ஏனோ அவள் முகத்தை பார்க்கனும் போல இருந்தது. எந்திரிச்சு வந்து எதிர்ல இருந்த சேர்ல உட்கார்ந்தேன். அவள் முகத்துல  இந்த உலகத்தின் மீதான பரிபூரண நம்பிக்கை தெரிஞ்சது.  தலை முடியோட அடர்த்தி குறைவா இருந்தாலும் அவள் முகத்துக்கு போதுமானதாவே இருந்தது. அந்த சின்ன கண்களுக்குள்ளே கருவிழிகள் வேகமா அசையறது தெரிஞ்சது . ஏதோ கனவு போல. லேசான சிணுங்கல். கண்கள்ள கண்ணீர். பதை பதைச்சு போய் அவள் நெத்தில அலைபாஞ்சுகிட்டிருந்த தலை முடிய ஒதுக்கி விட்டு அவள் உச்சந்தலைல கைய வச்சேன்

" தெய்வமே .. நீ இருக்கயோ இல்லியோ .. ஆனா இருந்தா நல்லாருக்கும்னு இந்த செகண்ட் தோணுது. இவளை எனக்கு அறிமுகப்படுத்தினதுக்கு..ஜஸ்ட் ஒரு தேங்க்ஸ் சொல்ல. நீ இருந்தா நல்லாருக்கும்னு தோணுது இவளுக்கு இவளை புரிஞ்சிக்கிட்டு இவளையும் ஒரு சராசரி பொம்பளையாக்கிராத ஒரு நல்ல கணவனை கொடுன்னு கேட்க" என் மனசுல நன்றியுணர்ச்சியும், வர்ணனாதீதமான உணர்வுகளும் சினிமா விட்ட சனம் போல கிளம்ப  இன்னொரு சிகரட்டை எடுத்து பத்த வச்சேன்.

தொண்டை வறள ஃப்ரிட்ஜை திறந்தேன். தண்ணி பாட்டிலை எடுத்து குடிச்சேன்.. தண்ணி என் தொண்டைக்குள்ள இறங்கற சத்தம் கேட்டோ  என்னவோ " ம் ம் எனக்கும்"ங்கற முனகல் கேட்டது மாயாவிடமிருந்து. பாட்டிலை வாங்கி படுத்துக்கிட்டே குடிக்க முயற்சி பண்ண நான் அவள் பக்கத்துல உட்கார்ந்து அவள் பின் கழுத்தை தாங்கி தூக்கிப்பிடிச்சேன் குடிச்சுட்டு பாட்டிலை  நீட்டினாள். 

ஹை வேல கூட ட்ராஃபிக் குறைஞ்சிருந்தது. மணி என்ன தெரியலை. மறு நாள் சீக்கிரம் கிளம்பனும்ங்கறது ஞா வரவே பாட்டிலை ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டு வந்து பேண்டை கழட்டி ஹேங்கர்ல மாட்டிட்டு  பேக்ல இருந்து லுங்கிய எடுத்து கட்டிட்டு படுத்தேன். கண்ணை மூடினேன். கொஞ்ச நேரம் ரோட் ரோடா தெரிஞ்சது.  பஸ்ஸும் ,லாரியும்,காருமா கண்ணுக்குள்ள தெரிய.. எப்ப தூங்கினேன்னு தெரியாது.

மாயா "ஏய் முகேஷ்..முகேஷ்"  ன்னு உசுப்பிக்கிட்டிருந்தா. எந்திரிச்சு மலங்க மலங்க விழிக்க .." ச்சீ  எந்திரி சீக்கிரம் உன் அண்ணனோட ஃப்ரெண்ட்ஸ் அசிங்கமா நினைக்க போறாங்க" ன்னா படபடப்பா."  த பார்ரா பிடிவாதமா ஜோடியா தான் தங்குவேன்னு அடம் பிடிச்சது அசிங்கமில்லே ஒரே ரூம்ல ஒரே படுக்கைல படுத்துக்கிட்டது அசிங்கமில்லே . நான் எந்திரிக்க லேட்டானா அசிங்கமா ? சரி சரி நீ கீழே போ பதினைஞ்சு நிமிஷத்துல  நான் ரெடியாயிர்ரன்"னேன். சரி சரி சீக்கிரம் வா. வரப்ப என் பேகையும் எடுத்துட்டு வா"  ன்னிட்டு மாயா கீழே போனா. குளிச்சு ரெடியாயி கீழே வந்தா மாயா கேஷ் கவுண்டர்ல உட்கார்ந்து பணம் வாங்கிக்கிட்டிருந்தா. "ஏய் எங்க அவங்க"ன்னேன். உள்ள டிஃபன் சாப்பிடறாங்க. அசிங்கமா இங்கே வச்சு சாப்பிடறேன்னாங்க நான் தான் நான் பார்த்துக்கறேன்னு அனுப்பினேன்"னா

பி.ஆருக்கும் ஸ்ரீதர் சாருக்கும் சொல்லிக்கிட்டு காரை கிளப்பி அப்போலோ போனோம். வார்ட்ல நர்ஸு "என்னங்க இது பேஷண்டோட யாருமே இல்லாம போயிட்டிங்க"ன்னிட்டு எரிஞ்சு விழுந்தா. நொந்துட்டன்.

ஓனரம்மாவ விசாரிச்சா " எல்லாம் பன்னாடைங்க... பேரம் பேசுதுங்க. நாலு நாள் கூட இருந்து பார்த்துக்கிட்டா அவள் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணனுமாம். இன்னொருத்தி பொண்ணை என் புள்ளைக்கு கட்டனுமாம்.. தத் போங்கடின்னிட்டன்"ன்னாங்க. எனக்கு ஒன்னுமே புரியலை. மாயா, "இதுல யோசிக்க என்ன இருக்கு. கமிட் ஆகிதான் வந்தோம். இதுவும் நல்லதுக்குதான். நான் இருந்து பார்த்துக்கறேன்.பொம்பளைக்கு பொம்பளதான் கரெக்டு"ங்கறா. சரின்னு சிக்கன் சென்டர் போன் நெம்பரை கொடுத்துட்டு "ஏய் மனசுல என்னை நல்லா  திட்டிக்கப்போற அப்படித்தானே" ன்னேன். " நீ இப்படி இன்னும் கொஞ்ச நேரம் பேசினா
மனசுல இல்லே வெளியவே திட்டுவேன்.. முதல்ல ஊரை போய் சேரு பாவம் ஓனர் டென்ஷன்ல இருப்பாரு. நாலு நாள் தானே. எப்படியும் எங்களை பிக்கப் பண்ண நீதானே வரனும்"ன்னிட்டு துரத்தாத குறையா அனுப்பிட்டா. நான் கவுண்டர்லயும் , அட்மினிஸ்ட்ரேஷன்லயும் எம்.எல்.ஏ ஆளுங்க அது இதுனு பீலா விட்டு, பி.ஆர்,ஸ்ரீதர் கிட்டே போன்ல பேசி விவரம் சொல்லி முடிஞ்சா ஒரு நடை பார்த்துக்கங்கனு ரிக்வெஸ்ட் பண்ணிக்கிட்டு சித்தூர் வந்தேன்.

நாலு நாள் போறது நாலு வருஷம் மாதிரி இருந்தது. மனசுல மாயா மாயானு ஒரு ட்ராக் ஓடிக்கிட்டே இருக்கு. ஓனரே நக்கலடிச்சுட்டாரு ' என்னடா பெண்டாட்டி செத்தவன் மாதிரி"ன்னு.  அஞ்சாவது நாள்  மெட் ராஸ்ல இருந்து போன். ஓனர் "நானும் வரேண்டா"ன்னு கிளம்பிட்டாரு. மாயாவ  முகத்துக்கு  நேரா பார்க்க கூட முடியாத நிலைமை.. எப்படியோ ஊர் வந்து சேர்ந்தோம்.

மாயா இல்லாததால டச் விட்டு போனதால க்ளரிக்கல்  ஒர்க் எல்லாம் அரை குறையாவே  நின்னிருக்க அவள் திட்டிக்கிட்டே எல்லாத்தயும் ஃபினிஷ் பண்ணா. சரி ஈவ்னிங்காவது மாயாவோட ஸ்பெண்ட் பண்ணலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டிருந்தா என் அப்பா வந்தார். சின்னப்பசங்களுக்கு ச்சூ காட்டற மாதிரி" ஏம்மா  மாயா ..பஜார்ல எதுனா வேலையிருந்தா பார்த்துக்கிட்டு வா. பொட்டு,ஸ்னோ, பவுடர் எதுனா வாங்க வேண்டியதிருந்தா வாங்கிக்க நான் இவன் கிட்டே தனியா பேசனும்"னாரு.

எனக்கு வயித்த கலக்குது. என் அப்பா ஊர்ல இருக்கிற அப்பனுங்க மாதிரி கிடையாது. தன் வரை உதாரண புருஷரா இருந்தாலும் 'தண்ணி போடறியா தனியா போடு. பொம்பளை கிட்டே போறியா தனியா போ ' எதுக்கு சொல்றேன்னு யோசனை பண்ணு உனக்கே புரியும்.. நீ அறிவாளி உனக்கு விளக்கமா சொல்ல தேவையில்லேம்பார். ராத்திரில 9 க்கெல்லாம் வீடு வந்து சேருன்னு சொல்லிட்டிருந்தார். நானும் 9மணிக்கு வீட்டுக்கு போற மாதிரி போயி மாடியில இருக்கிற என்   ரூம்ல இருந்து வெளியேறி பால்கனி வந்து பால்கனி சன் ஷேட்ல இறங்கி குதிச்சு ஜூட் விடறது வழக்கம். பாதி ராத்திரி பன்னெண்டுக்கோ ரெண்டுக்கோ மறுபடி அதே வழில  ரூம்ல போய் செட்டிலாயிருவன். ஒரு நாள் பீட் கான்ஸ்டபிள் பார்த்துட்டு போட்டுக்கொடுத்துர" யப்பா.. நீ எந்த நேரத்துக்கு வேணம்னா வா , பெல் அடி!   நான் கதவு திறக்கறேன். ஆனா திருடனுக்கு வழி காட்ற வேலை மட்டும் வேணா. பீட் கான்ஸ்டபிள் எனக்கு தெரிஞ்சவங்கறதால சரியா போச்சு. புது ஆளா இருந்திருந்தா.. சந்தேக கேஸ்ல உன்னை கூட்டிப்போயிட்டிருந்தா மறு நாள் எஸ்.ஐ ஸ்டேஷனுக்கு வர வரைக்கும் லாக்கப்ல கிடந்திருப்பே..'ன்னவருதான்.

இருந்தாலும் ஞம ஞமங்குது.தனக்கே உரிய ஸ்டைல்ல தன் ஸ்டீல் பொடி டப்பிய எடுத்து ரெண்டு தட்டு தட்டி ஒரு சிட்டிகைய எடுத்து ஹீரோ அறிமுக காட்சில துப்பாக்கில புல்லெட் போடற ரேஞ்சுல மூக்குல திணிச்சுக்கிட்டு கர்சீஃபா கயிறாக்கி  ஒரு தேய் தேய்ச்சுக்கிட்டு " ஏண்டா முகேஷூ.. இந்த மாயாவ பத்தி என்ன நினைக்கிறே?" ன்னாரு.

க்ளைமேக்ஸ் காட்சில டைம்பாம்ல முள் நகருமே அதுமாதிரி முதுகுதண்டுல பரபரப்பு ஒட்டிக்கிச்சி. எங்கப்பா ஊர்ல இருக்கிற அப்பனுங்க மாதிரி இல்லேதான் அதுக்காக.. ஷைனி ஆப்ரஹாம் கணக்கா பிச்சிக்கிட்டு ஓடற எண்ண்னகளை 144 போட்டு நிறுத்திட்டு
"மொட்டையா கேட்டா எப்படி ..வேலைக்கு சேர்க்க போறியா.. உன் ஃப்ரெண்டு பசங்களுக்கு யாருக்குன்னா அலையன்ஸ் செட் பண்ண போறியா எந்த கோணத்துல கேட்கிறேன்னு தெரியாம நான் என்னத்த சொல்றது"
"ஆமாம் எங்கப்பன் டாட்டா கோடி கோடியா சொத்து சேர்த்து பதினாறு கம்பெனி  வச்சிருக்கான்..அதுல வேலை தரப்போறேன்.. உன் அண்ணனுங்களுக்கு அல்லையன்ஸ் பார்த்து முடிக்கவே வக்கில்லை.இதுல ஃப்ரெண்ட்ஸ் பசங்களுக்கு அலையன்ஸாம் அதெல்லாம் ஒன்னுமில்லடா..பாவம் தனியா ரூம்ல தங்கியிருக்குதாமே.. உங்க ஓனர் தான் சொன்னான் (தனக்கு ஃப்ரெண்டுதானே) "

"ஆமாம்.. அதுக்கென்ன இப்போ ?'

"அதுக்கில்லடா ..பாவம் உங்க ஓனர் சம்சாரம் ஆப்பரேசனுக்காக அட்மிட் ஆனப்ப இந்த பொண்ணுதான் 4 நாள் பக்கத்துல இருந்து பார்த்துக்கிச்சாம்"

"ஆமாம்பா.. பார்த்துக்கிட்டா இப்ப என்னாங்கறே நீ ச்சும்மா சஸ்பென்ஸ் வச்சு கடுப்பேத்தாதே.."

"தத் இந்த அவசரம் தாண்டா உங்கிட்ட எனக்கு பிடிக்காத விஷயம்.. பொண்ணு நல்ல மாதிரியா தெரியுது. எங்கயோ ரூம் எடுத்துக்கிட்டு எதுக்கு தனியா தங்கி அவதிபடனும்.  19 X 64 =1216 ஸ்கொயர் ஃபீட்ல கட்ன அவ்ளோ பெரிய வீட்ல இருக்கிறது  நீ , உன் சின்ன அண்ணன்,தம்பி,பாட்டி நானு மொத்தம் 4 பேர்தான். பாட்டி உள்பட எல்லாரும் ஹால்லதான் படுக்கறோம். உனக்கு மாடில தனி ரூம் கொடுத்திருக்கு. தெரு ரூம் காலியாத்தானே இருக்கு. பெரியவனுக்கு கல்யாணமானா அதுவும் அந்த கம்னாட்டி தனியா போறேன் அது இதுன்னு கிளம்பாம இருந்தா அப்போ அவனுக்கு,அவன் பெண்டாட்டிக்கு கொடுத்தாகனும் .பேசாம இந்த பொண்ணை நம்ம வீட்டுக்கே வந்துரச்சொல்லேன்"

'வாடகைக்கா?"

"தூத்தேறி.. என்னை என்ன அல்பமுன்னு நினைச்சியா..பத்து பைசா வந்தா கூட அது என் கஷ்டமா ,உழைப்பா இருக்கனும்னு நினைச்சி வாழ்ந்தவன் நானு.. என்னடா பெரிய வாடகை வந்துரும்.. ஒரு ஐ நூறு ரூபா வந்துருமா.. ஊர்ல இருக்கிற அப்பன் எல்லாம் ஆண்குழந்தை வேணம்னு கோவில் கோவிலா சுத்தினா பெண் குழந்தை வேணம்னு ராத்திரி பகல் தெய்வத்தை வேண்டினவன்டா நானு. என்னமோ பொண்ணு அடக்கமா இருக்கே.. உன் ஓனரம்மா ஆகா ஓகோன்னு சொல்ட்டாளாம், உன் ஓனர் அந்த பொண்ணுக்கு எதுனா செய்யனும் எதுனா செய்யனும்னு ஒரே நச்சரிப்பு. நான் தான் அடக்கி வச்சேன். பார்த்துரா நல்லா இருக்கப்பட்ட குடும்பம்ங்கறே தப்பா நினைச்சிக்கபோவுதுனு ப்ரேக் போட்டு வச்சிருக்கேன். சரி உன் அபிப்ராயம் என்ன சொல்லு  நம்ம வீட்டுக்கே வந்துர சொல்லலாமா?"

எனக்கு ஒரு கூடை பூவை தலையில் கவிழ்த்தாப்பல ஆயிருச்சு, இருந்தாலும் லேசா சம்சயம். " யப்பா..இதுல உன் சதியெல்லாம் எதுவுமில்லியே அவள் தனியா ரூம்ல இருக்கிறதால தானே இந்த நாயி  பாதிராத்திரி வரை கூத்தடிச்சுட்டு வருது.. வீட்டோட வச்சிட்டா என்னத்த கிழிக்க முடியும்னு ஸ்கெட்ச் போட்டயா?"ன்னு கேட்டேன். " அட போடாங்.. தான் திருடி பிறனை நம்பான், கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்னு ஒரு பழமொழியிருக்கு. உன்னை மாதிரி என்னை நினைச்சியா ..நீ என்ன முட்டாளா.. உன்னை சொல்லி திருத்த முடியுமா? எல்லே அடிச்சி திருத்த நீ என்ன சின்னப்பையனா..உப்பு தின்னா தண்ணி குடிக்கப்போறே" ன்னாரு அப்பா.

"யப்பா நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒன்னுமில்லை .. ஏதோ பேசிக்கிட்டிருப்போம் அவ்ளதான்"

" நீ பேசினா எனக்கின்னா? படுத்துக்கிட்டா எனக்கின்னா? விந்து விட்டான் நொந்து கெட்டான்.. இந்திரியம் தீர்ந்து விட்டா சுந்தரியும் பேய் போலே. டேய்..உடம்பு கொஞ்ச நாள் தான் பேசும்.. உடம்போட இரைச்சல்ல மனசு,புத்தி சொல்றது உறைக்காது.  ஆனால் உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்குடா. நீ என்னதான் கேப்மாரி ஆட்டம் போட்டாலும் உன் கிட்டே உண்மையிருக்கு. சரி சரி அந்த  மாயா கிட்டே  நீ பேசறியா? நான் பேசட்டா? "

"அய்யயோ நீ வேணாம்பா நீ எதாச்சும் வெகண்டையா பேசிரப்போறே.. நானே பேசிட்டு சொல்றேன்"

அப்பா கிளம்பி போக மாயா வந்தாள்

"என்ன டாப்பிக் என்னை பத்திதானா?"
"எக்ஸாக்ட்லி.. உன்னை வேலைய விட்டு தூக்கப்போறாராம்.ஓனர் அதுக்கு ஒத்துக்கலன்னா நான் வேலைய விட்டு நின்னுரனுமாம் .. நீ என்னை கெடுக்கிறியாம். வயசுல மூத்த பொண்ணை வச்சிக்கிட்டா சீக்கிரம் கிழவனாயிருவனாம் .. ஆயுசு  குறைஞ்சுருமாம்"
"யேய் ..பொய் தானே சொல்றே.. உங்கப்பாவ பார்த்தா நல்ல மாதிரியா தெரியுது. இது மாதிரி பாக்யராஜ் சமாச்சாரம்லாம் அவர் பேசியிருக்கமாட்டார்"
"எனக்கு தெரியாம கேட்கிறேன்.. யார் தான் உன் பார்வைல கெட்டவன்?"
"சூழ் நிலை"
"தபார்ரா..அப்ப சூழ் நிலைதான் வில்லனுன்றே?"
"ஆமாடா கண்ணா... நீ ஏதோ சில்லறை கிராக்கிங்க கிட்ட போய் கூத்தடிச்சுட்டு உன் அவஸ்தையெல்லாம் ஒழிச்சுட்டு வந்துர்ர.. எனக்கா என் அக்காவுங்க கல்யாணம் கட்டிக்கிட்டு  படற நரகவேதனைய பார்த்து பார்த்து வெறுத்து போய் உடம்பெல்லாம் கூம்பி போச்சு.. இதுவே என் அக்காங்க நல்லபடியா வாழ்ந்துக்கிட்டிருந்து எனக்கும் அப்படி ஒரு சந்தோசம் கிடைச்சா எப்படி இருக்கும்னு நான் கனவு கண்டுகிட்டிருந்து, உனக்கு மேற்படி டெக்காமெரான் எபிசோடெல்லாம் இல்லாம இருந்திருந்தா ப்ஞ்சு நெருப்பு ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகியிருக்கும்லியா.. அப்போ நீ கெட்டவனா ? நான் கெட்டவளா? இல்லே சூழ் நிலைதான் காரணம்"
"ஆத்தாடி.. நீ இதே மாதிரி தத்துவம்லாம் விட ஆரம்பிச்சா உன்னை டெய்லி சீரியல்ல கொண்டாந்துருவாங்க ..  நீ கொஞ்சம் அடங்கு..அர்ஜெண்டா  நீ உன் ரூமை காலி பண்னனுமாம் எங்கப்பன் உத்தரவு.."
"ஏன் வாஸ்து சரியில்லயாமா?"
"இல்லடி செல்லம் .. நம்ம ஓனர் அதான் எங்கப்பன் தோஸ்து உன்னை பத்தி மஸ்தா விட்டிருக்காரு..அதனால நீ எங்க வீட்டோட வந்துரனுமாம்"
"உன் மனைவியாவா? உங்கப்பனுக்கு ரெண்டாவது மனைவியாவா?"
"ஆசைய பார்ரா ஆசை தோசை அப்பளம் வடை..எனக்கு அக்காவா .. என் அப்பனுக்கு மூத்த பொண்ணா எப்படி வந்துர்ரயா"
மாயாவின் கண்களில் கண்ணீர்.

"தபாரு என்ன  நீ சதா சர்வ காலம் டிவி சீரியல் மாதிரி அழுதுக்கிட்டு."

"இல்லடா மனுஷ ஜாதி பாசத்துக்கு எவ்ள ஏங்கி போயிருக்கு பாருன்னு நினைச்சேன். ஜஸ்ட் நாலு நாள் அந்த கிழவிய எங்கம்மாவா நெனைச்சிக்கிட்டு சர்வ் பண்ணதுக்கே அந்த கிழவி ஓனர்கிட்டே புலம்ப அவரு உங்கப்பா கிட்டே புலம்ப ஏண்டா மனுஷங்க இப்படி பாசப்பறவைகளா இருக்காங்க"

"அப்படி சொல்றீ என் ராசாத்தின்னானாம். கிழிஞ்சது போ .. தெலுங்கு சேனல்ல க்ரைம் டைம் பார்க்கறதில்லயா..அப்பனை,புள்ள,புள்ளய அப்பன், பெண்டாட்டிய புருஷன்,புருஷனை பெண்டாட்டி,அண்ணனை தம்பி,தம்பிய அண்ணன் ஆயிரம் வெரைட்டில கொலை பண்ணியிருக்கான்... பாசப்பறவைகளாம் பாசப்பறவைகள்..இப்படியே பிரமைல வாழ்ந்துக்கிட்டிருந்தே எவனாச்சும் தூக்கிட்டு போய் துபாய்ல வித்துருவான்"

"ஷிட்.. ஏண்டா உனக்கு மனுசங்க மேல இவ்ள கோபம்"
"இது கோபமில்லே கண்ணு அக்கறை.. சரி விஷயத்துக்கு வா. என்ன சொல்றே எங்க வீட்டுக்கு வந்துர்ரயா. எங்க வீட்ல இருக்கிற பார்ட்டிங்களை பத்தி விவரமா சொல்லிக்கொடுத்துர்ரன் எப்படி சமாளிக்கிறயோ சமாளி."
'வந்துர்ரண்டா"

மாயா சம்மதம் தெரிவிச்சதை ராத்திரி அப்பாவுக்கு சொன்னேன். உடனே அவருக்கு அத்தனை சந்தோஷம். போவட்டும்டா பொம்பள குழந்தைக்காக நான் வேண்டி புலம்பினதெல்லாம் வீண் போகல. ஏதோ இத்தனை காலத்துக்கப்புறமாவது தெய்வம் கண்ண துறந்ததே அது இதுன்னு புலம்பிக்கிட்டிருந்தாரு.

மறு நாள் காலைல நான் எந்திரிச்சப்ப தெருவுல ஆளுங்க பேச்சுக்குரல் பலமா  கேட்குது. முக்கியமா என் அப்பாவோட குரல். பால்கனிக்கு வந்து பார்த்தா  வீட்டு முன்னாடி செங்கல்,மணல் கொட்டிக்கிடக்க, சிமெண்ட் மூட்டைகள் அடுக்கியிருக்க   அப்பாவோட ஃப்ரெண்டும் ஒரு காலத்துல  மேஸ்திரியுமான  ஏ.செங்கல்ராய நாயக்கர் தன் ஆட்களோட ஆஜராகியிருந்தார். எனக்கு ஒன்னும் புரிய்லை,ஏ.சி.என் அண்ட் கோன்னா ஊர்ல அவ்ளோ பிரபலம். சிமெண்ட்ல அவர் தயார் பண்ணாத பொருளே கிடையாது.தலைவர்களோட  சிலைகள் உள்பட .அவர் வந்து ஆஜராகிற அளவுக்கு அப்படி என்ன பெரிய  வேலைனு புரியலை.

எந்திரிச்சதும் ஒரு சிகரட்ட பத்த வச்சுர்ர செயின் ஸ்மோக்கரான நான் சஸ்பென்ஸ் தாங்காம  லுங்கிய சரியா கட்டிக்கிட்டு  கீழே இறங்கி வந்தேன். அப்பா சொல்லிக்கிட்டிருக்காரு

" யோவ் ! இந்த பயல் பாதி ராத்திரி வந்து கதவை இடிப்பான் . விதிய நொந்துக்கிட்டு நான் போய் திறந்துக்கிட்டிருந்தேன்.இப்ப அந்த பொண்ணு வேற வந்து தங்க போவுது. சட்டுனு அந்த பொண்ணு போய் திறக்க வேண்டியிருக்கும். இந்த கம்னாட்டி சிங்கிளா வ்ரானோ டபுளா வரானோ தெரியாது. எதுக்கு லொள்ளுன்னுதான் வெளிப்பக்கம் மாடிக்கு  படி வச்சுரு. வாஸ்து காரன் இது கிழக்கு பார்த்த வீடு வாயு மூலைல படி வைக்கவே கூடாதுன்னு அடம்பிடிச்சான். நான் தான் அவனுக்கு தைரியம் கொடுத்தேன். என் புள்ள அனுமார் பக்தன் .அவரு வாய் புத்திரன் இவனும் காத்து மாதிரிதான் எந்த பக்கம் திசை திரும்புவானு சொல்லவே முடியாதுன்னு சொன்னேன். ஒத்துக்கிட்டான். அப்படியே அட்டாச்ட் பாத்ரூமும்,  லேவட்ரியும் கட்டிருங்க. ஃப்ளோரிங்குக்கு  மொசைக் தான். ஆனா அந்த பொண்ணு கொஞ்சம் வஞ்சனை இல்லாம வளர்ந்திருக்கு வழுக்கி கிழுக்கி விழுந்து தொலைக்கபோவுது. கொஞ்சம் கூட வழுக்கக்கூடாது .. ஃப்ளோரிங்க் அப்படியிருக்கனும். ஒரு வேளை ராத்திரில டிவி பார்க்கிற பழக்கம் இருந்தா என்ன செய்யறது அதனால டிவி வைக்க ஒரு ஸ்லாபு. அது பொட்ட புள்ள மேக்கப் சாமானே ஒரு வண்டி இருக்கும். அதுனால பவர் கட்ல கூட நல்லா  வெளிச்சம் வரக்கூடிய திசைல சுவர் சைஸுக்கு  சிமெண்ட்ல ரேக் . மத்தில கண்ணாடி வைக்கிற மாதிரி இருக்கட்டும்.மூனு நாள் தான் டைம் தருவேன். எனக்கு நீட்டா ஃபினிஷ் பண்ணி கொடுத்துரனும் "

என் அப்பா இது மாதிரி படபடன்னு ஆர்டர் பாஸ் பண்றத பார்த்து பல காலம் ஆச்சு. ரிட்டையர் ஆனது ஒரு பக்கம்னா , இவரோட சகல பலகீனங்களையும் சகிச்சுக்கிட்டு குடும்பம் நடத்தின அம்மா போனது மறுபக்கம் .. மனுஷன் இருக்கிற இடமே தெரியாம ஆயிட்டிருந்தாரு..

ஏ.சி.நாயக்கருக்கும் அப்பாவுக்கும் இருந்த நட்பு பத்தி சொன்னா நம்பவே மாட்டிங்க. அப்போ அப்பா வெளியூர்ல இருந்தாராம். கல்யாணமாகி குஞ்சும் குளுவானுமா 4 பசங்க. 10 வருசமா குடியிருந்த வாடகை வீட்டை திடீர்னு விக்கப்போறேனு வீட்டு ஓனர் நோட்டீஸ் கொடுத்துட்டானாம்.அப்போ ஏ.சி.நாயக்கர் சீன்ல என்டர் ஆகி அப்பாவுக்கு விஷயமே சொல்லாம   மிச்ச ஃப்ரெண்ட்ஸுக்கு விஷயத்தை சொல்லி ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு இந்த வீட்டை வாங்கி ரெஜிஸ்டர் பண்ண வச்சாராம். வீடு அம்மா பேர்ல் ரெஜிஸ்டர் அக இதான் காரணம். பிற்பாடு விஷயம் தெரிஞ்சு ஊருக்கு வந்து புலி வேஷமெல்லாம் ஆடி ஃப்ரெண்ட்சை கச்சாமுச்சானு திட்டினாலும், எண்ணி ரெண்டு வருஷத்துல அவங்க பணத்தை பாங்க் வட்டியோட திருப்பி கொடுத்தாராம்  நாயக்கருக்கு    தன் நண்பனோட சந்தோஷம் தான் முக்கியம். தான் ஒரு கம்பெனி எம்.டிங்கறத கூட மறந்துட்டு தினமும் வந்து அப்பா கூட இருந்து மேற்பார்வை பார்த்தாரு. மாயாவுக்கு இதையெல்லாம் சொல்ல அவளால நம்பவே முடியலை. மறுபடி கண்ணீர் விட்டா.