Sunday, April 4, 2010

செக்ஸ் பவர் - தொடர் பதிவு

மிளகாய்னா காரம் இருக்கனும். அரசியல்னா ஊழல் இருக்கனும். மனுஷ ஜன்மம்னா செக்ஸ் மேல ஆர்வமிருக்கனும். அது இல்லேன்னா ஆணானாலும், பெண்ணானாலும் சரி அவிக வாழ்க்கைல எதுவோ ராங்கா போயிருச்சுனு அர்த்தம். எதிர்காலம் கூட ராங்காவே போகும்னு அர்த்தம். ஒரு வார்த்தைல சொன்னா அப் நார்மல். அது உடலளவுல அப் நார்மல்னா கூட சமாளிச்சுரலாம். மனசளவுல அப் நார்மல்னா லொள்ளுதான்.

வணக்கம்னா,
என்னடா மறுபடி பேய் முருங்கை மரம் ஏறிருச்சுன்னு நினைச்சுராதிங்கண்ணா. பேய்க்கு கூட செக்ஸ் மேல எத்தனை ஆர்வம் பாருங்க முருங்கை மரத்துல ஏறி பவர் ஏத்துது ( பாக்யராஜ் சாரை நினைச்சுக்காதிங்க புரையேறப்போவுது)

நண்பர் ஒருத்தரு சிறப்பு பதிவுகள் போட்டு தெலுங்கு கத்துக்கொடுங்கனு கேட்டிருந்தாரு. அவரோட உத்தரவு படி ஒரு பதிவு  போட்டிருக்கேன். இந்தியன் படத்தோட மூலக்கதைய கொண்ட என்.டி.ஆர் நடிச்ச சர்தார் பாப்பாராயுடு படத்துலருந்து ஒரு காட்சி . தெலுங்கு உச்சரிப்பு+ மொழி பெயர்ப்போட போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க.

மேலும் நேத்து உனக்கு 22 எனக்கு 32 தொடருக்கு தொடுப்பு கொடுத்தப்ப அது தப்பா போச்சு இன்னைக்கு கரெக்டா கொடுத்திருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்க.

என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கான். அவிக அப்பா  40 வயசுல ஹார்ட் அட்டாக்ல போயிட்டார். அவிக அம்மா பசங்களை முன்னுக்கு கொண்டுவர அப்படி இப்படி இருந்தாங்க. இவனுக்கு மேலும் ரெண்டு தம்பிங்க. அவிக ரெண்டு பேரும் லவ்ஸ் பண்ணி இவனுக்கு முன்னாடியே கண்ணாலம் கட்டிக்கிட்டு போயிட்டாங்க. இவன் கண்ணாலமே கட்டிக்கிடல. தனிமைய தவிர்க்க காலைல ஜாகிங், டென்னிஸ், மதியத்துல சீட்டுகச்சேரி, அப்படியும் தனிமை தகிச்சா ஊர் ஊரா போய் வருவான். இதனால என்னாகுது? அவிக சாதில ஒரு பெண்ணுக்கு புருஷன் நை. இவன் தன் நெசசிட்டிக்கு ஒரு பாலியல் தொழிலாளிய அணுகறான். அவள் தொழிலை தொடர்ரா.
இவன் ஏதோ நல்லவங்கறதால சரியா போச்சு. என் அம்மாவ லோலாயி ஆக்கின இந்த சமுதாயத்துல எந்த அம்மாவும் பத்தினியா இருக்ககூடாதுனு நினைச்சிருந்தா? இவன் கிட்டே பணம் வேற இருக்கு.

இந்த கேஸ் ஏதோ பாசிட்டிவா போய்க்கிட்டிருக்கு.எந்த செகண்ட்ல வேணம்னா நெகட்டிவா மாறலாம். நெகட்டிவா மாறிட்ட  கேசு  ஆயிரம் கேஸிருக்கு.

இதுக்கு தான் நான் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க சொல்றேன். ஒருத்தன் வருஷ கணக்குல குளிக்காம இருந்தா எப்படி அந்த தெரு, ஏரியாவே நாறிப்போகுமோ ஒருத்தன் செக்ஸ்ல பார்ட்டிசிப்பேட் பண்ணாம இருந்தாலும்  முதல்ல அவன் மனசு, அப்புறம் அந்த வீட்டு வைபரேஷன்ஸ், அடுத்து அந்த தெருவோட நூஸ்ஃபியரே மாறிரும் (அட்மாஸ்ஃபியர் மாதிரி எண்ணங்களால உருவாகற சூழல்)

இவன் தொடை நடுங்கியா இருக்கலாம். இவன் எவளையும் ரேப்பாமயே வாழ்ந்துரலாம். ஆனால் இவன் எண்ண அலைகள் அந்த ஏரியா பசங்களை தாக்கி அவுக செய்துரலாம்.

வாழ்க்கைல எல்லாமே ஒன்னுக்கொன்னு இன்டர் லிங்க்ட். அதே சமயத்துல நீங்க நினைச்சா ஒன்னுக்கொன்னு தொடர்பில்லாத மாதிரி வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கலாம். இப்போ நான் சொன்ன ஃப்ரெண்டோட ரெண்டு தம்பிங்களோட  அம்மாவும் ஒருத்தி தானே . அவ அப்படி இப்படியிருந்தவ தானே. அவிக ரெண்டு பேர் மட்டும் ரொட்டீனா கண்ணாலம் கட்டிக்கிட்டாங்களே. ஏன் இவன் மட்டும் கட்டிக்கல. இவன்  சென்சிட்டிவ். மோர் சென்சிடிவ் தேன் ஹிஸ் ப்ரதர்ஸ்.

பதிவு ஃபுல் டெம்போல போய்ட்டிருக்கிறப்பவே ஒரு விஷயத்தை சொல்லிர்ரங்கண்ணா.

 நான் செக்சாலஜிஸ்ட் அல்லன். மூலிகை வைத்தியன் அல்லன். அதிலும் ஸ்வாமி நித்யானந்தா மாதிரி  மிஸ்டிக் ஹீலிங் வெங்காயம் இத்யாதி அறிந்தவனும் அல்லன். முக்கியமாக பரிசோதனைகள் செய்பவனும் அல்லன். எனது இந்த பதிவு தீவிர  குறைபாடுகள், பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு பத்தே பத்து பைசாவுக்கு கூட உபயோகப்படாது. ஏதோ மதில் மேல் பூனைகளை ஆண்மையின்மை பக்கமா குதிச்சுராம இந்த பக்கம் குதிக்கச்சொல்லி மோட்டிவேட் பண்ணலாம்.

ஆரோக்கியமான பெற்றோர் கொடுத்த ,ஆரோக்கியமான உடலிருந்தும் போதிய புரிதல்,விழிப்புணர்ச்சி இல்லாம பாதிப்புக்குள்ளாகியிருந்தா அவிகளுக்கு உதவினா உதவலாம் .

( அப்பாடா..... எதிர்கால வில்லங்கங்களுக்கும் இழந்த சக்தி வைத்தியன் கணக்காய் வரும் அகால ஃபோன் கால்ஸையும் தவிர்த்தாச்சு)

இந்த பதிவை பின்னே எந்த தகுதில எழுதறேனு நீங்க கேட்கலாம். முதற்கண் நான் ஒரு ஆரோக்கியமான சராசரி  ஆண். வயது 43. என் ஞா சரியாக இருக்குமேயானால் 1984 முதல் 1991 வரை பேச்சலர் லைஃப் லீட் பண்ணவன்.  ( நன்றாக கவனியுங்கள் பிரம்மச்சரிய  வாழ்க்கையை  அல்ல) வாழ்ந்தவன்.  1991 முதல் நாளிது வரை மேரீட் லைஃப்லயும் இருக்கிறவன். இடையில 1986 முதல் 1989 வரை சில மாத இடைவெளிகளில் பிரம்மச்சரியத்தையும் முயன்றவன்.

தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு."கொத்த டாக்டருகன்னா பாத ரோகி நயம் ( புது வைத்தியனை விட பழைய ரோகி பெட்டர் )

மேலும் நமக்கு பிடிச்ச முயலுக்கு மூனே காலுங்கற பிடிவாதமெல்லாம் கிடையாது. தவளைப்பாச்சல்ல ஒரே பிரச்சினையை பல கோணத்துல பார்க்கிற டெக்னிக் உண்டு. புக் நாலட்ஜ் மட்டுமில்லாம , படிச்சதை புரிஞ்சு , அப்ளை செய்யற தில் உண்டு. தோத்து போனா ரிவீல் பண்ற  தம்மும்  உண்டு. இத்தனை உண்டு இருக்கும்போது நாலு வார்த்தை சொல்ல தயங்குவனா?

செக்ஸ் பவர் என்றால் என்ன? அதனால என்னென்னல்லாம் செய்ய முடியும்? மிதமா இருந்தா  அதை  காப்பாத்திக்கிறது எப்படி? ரொம்ப குறைவா இருந்தா  அதிகரிச்சுக்கறது எப்படி ? ரொம்ப அதிகமா இருந்தா கட்டுப்படுத்திக்கறது எப்படி ? இதை பத்தியெல்லாம் விலாவாரியா இந்த பதிவுல சொல்லத்தான் போறேன்.

முதல்ல உங்களுக்கு  செக்ஸ் பவர் புஷ்கலமா  இருக்கா இல்லையானு தெரிஞ்சிக்க சில டிப்ஸ் தரேன்

1.அதை பத்தி பெரிசா யோசிக்கவே மாட்டிங்க. முக்கியமா பேச மாட்டிங்க: (  நிறை குடம் தளும்பாது)

 நீ பேசறியே நிறைய யோசிக்கிறயானு கேட்கலாம். இதெல்லாம் இன்னைக்கு நேத்து யோசிச்ச சமாசாரங்க இல்லே. நாம பால்யத்துல சுக்கிரதசை கேசு. பிஞ்சுல பழுத்த கேஸு. ஏதோ ஒரு சக்தி நம்மை ரூட்டை மாத்தி விட்டுருச்சு. பிழைச்சோம். இல்லேன்னா நாமளும் இழந்த சக்தி வைத்தியருங்களை தேடி ஓடி   நாறியிருக்க வேண்டியதுதான்.

இதை பத்தி பேச காரணம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"ங்கற எண்ணம்தான். ஆன்மீக பயணம் மூலம் மனிதன் பெறக்கூடிய பேரின்பம் சினிமான்னா, செக்ஸுங்கறது தியேட்டர் ப்ரிண்ட்ல பார்க்கிற பைரசி சி.டி மாதிரி.

சிற்றின்பத்தோட உச்சத்துலதான் பேரின்பத்தோட முதல் படி இருக்கு. எல்.கே.ஜி படிக்காதவன் எப்படி யு கே ஜி  போக முடியாதோ அப்படியே சிற்றின்பத்தை  ஆழமா அனுபவிக்காதவன் அதுக்கப்புறம் ஏதோ இருக்குங்கற உணர்வை கூட பெற முடியாது.

சிற்றின்பத்தையே பெறாதவன் பேரின்பத்துக்கு முயற்சிக்கிற சான்ஸே கிடையாது.


இது ஒரு காரணம்னா இந்த சிற்றின்பத்துக்கே வாய்ப்பில்லாம, வாய்ப்பும் கிடைச்சாலும் அது  குறித்த  விழிப்புணர்வு இல்லாம  ஒழுங்கா அனுபவிக்க தெரியாம, இந்த தடவையாவது பர்ஃபெக்டா செய்துரலாம்,  இந்த முறையாவது பர்ஃபெக்டா செய்துரலாம்னு சிலர் அதுலயே சிக்கிக்கிறாங்க.

சிலர் சம வயது பார்ட்னருக்குன்னா  நம்ம  பவிசு தெரிஞ்சுரும்னு பாவம் பிஞ்சுகளை கூட கசக்கி எறிஞ்சுர்ராங்க.

சிலர் மிருகங்களை கூட விடறதில்லை, தலையணைய நாசம் பண்ணிர்ராங்க. முக்கியமா அந்த மாதிரி ஆசைய அடக்கி வச்சு அது வன்முறையா மாறி பீறிட்டு கிளம்புது. பணவெறி, மத வெறி, பதவி வெறி,லஞ்சம்,ஊழல் எல்லாத்துக்கும் இதுவே காரணமா இருக்கு.

 முறை தவறிய உறவுகள், செக்ஸ் குற்றங்கள், ஆசிட் வீச்சு இப்படி ஒன்னுதானில்லை. சமூகத்துல நிலவற  நூற்றுக்கு 99 பிரச்சினைக்கு இதுவே காரணமா இருக்கு.

இவிக அவசரப்பட்டு ஆன்மீக வாழ்க்கைல இறங்கினா அதையும் நாறடிச்சுர்ராங்க. வியாபாரத்துல இறங்கினா வியாபாரத்தை மொக்கை பண்ணிர்ராங்க.
இந்த மாதிரி பார்ட்டிங்களால இவிகள பெத்தவங்க, பெண் கொடுத்தவங்க, கட்டிக்கிட்ட அந்த பெண், அவ தங்கச்சி இப்படி பல பேரு பாதிக்கப்படறாங்க,

சர்வே ஜனோ சுகினோபவந்துன்னு எழுதிக்கிட்டிருந்தா போதாது. ஏ..தா...வது செய்யனும்.

அதனால தான் இவிகளை ஆன்மீகத்துக்கு இழுக்கறதுக்கு முன்னாடி பேரின்பத்துக்கு அழைக்கறதுக்கு முன்னாடி இவிக சிற்றின்பத்தை முறைப்படி அனுபவிக்க கத்து தரனும். இல்லேன்னா சமூக வாழ்வே நாறி போயிரும்ங்கறதால இந்த பதிவை போட முடிவு செய்திருக்கேன்.

பல பதிவுகள்ள சொன்னாப்ல இந்த படைப்புக்கு மூலம் செக்ஸ். மலர் மலர, மலர்ல தேனிருக்க, வண்டு தேடிவர, பறவைகள் கூடு கட்ட,
மனிதன் வீடு கட்ட:
பெண்டாட்டியோட படுத்துக்கிரலாம்னுடான்
படிக்க, வேலை தேட:
படிச்சாதானே வேலை கிடைக்கும். வேலை கிடைச்சாதானே பொண்ணை கட்டி குடுப்பாங்க
 இலக்கியம் படைக்க,ப்ளாக் எழுத:
ரசிகைகள் கிடைப்பாய்ங்கனு ஒரு நப்பாசை . தெலுங்குல பிரபல நாவலாசிரியர் எண்டமூரி வீரேந்திர நாத் இப்படித்தான் ஒரு கேஸ்ல மாட்டிக்கிட்டு முழிச்சாரு

நீங்க ஒத்துக்கிட்டாலும், ஒத்துக்கிடலன்னாலும்  எல்லா ...ஆத்துக்கும் மூலம் செக்ஸ் தான். இந்த இழவுக்குத்தான் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கனும்னு கூட ஒரு பதிவை போட்டேன்.

செக்ஸ் உங்களுக்கு தரப்பட்டது இனப்பெருக்கத்துக்கு மட்டுமில்லே. அதுல எத்தனையோ சமாச்சாரம் அடங்கியிருக்கு. அதையெல்லாம் ஏற்கெனவே பல பதிவுகள்ள சொல்லியிருக்கேன். ஸோ உடுங்க ஜூட்.


செக்ஸ் மீதான மிதமான ஆர்வம், வாய்ப்புக்காக மெனக்கெடாமலே  வாய்ப்பு கிடைக்கும் போது அதை உடனே உபயோகிச்சுக்கற துடிப்பை விட  அது பாதுகாப்பானதுதானா? செக்ஸுல  பார்ட்டிசிப்பேட் பண்ற ரெண்டு பேருக்கும் என்னெல்லாம் பிரச்சினை வரும்னு ரோசிச்சுப்பார்த்து அந்த பிரச்சினைகளை சால்வ் பண்ண பிறகே, அவாய்ட் பண்ண பிறகே இறங்கற அளவுக்கு பொறுமை.எவ்வித படபடப்போ,பரபரப்போ இல்லாம தன்னம்பிக்கையோட ஒவ்வொரு அடியையும் ( கெட்ட வார்த்தை இல்லிங்கண்ணா) நிதானமா எடுத்துவைக்கிற நேச்சர், செக்ஸுங்கறது வெறுமனே உடல் தொடர்பானதில்லை, இதுல உடலும் பார்ட்டிசிப்பேட் பண்ணாலும் திருப்தியடைய போறது மனசுதாங்கற தெளிவு. இதெல்லாமெ செக்ஸ் பவர்ல ஒரு பாகம். வெறுமனே குறி விரைத்தலும், பொலிட்டிக்கல் வி.ஐ.பிக்கு தேர்தல் பிரச்சார நேரத்துல ஷேக் ஹேண்ட் கொடுத்த கணக்கா செயல் படறதும், எடுத்தேன் கவிழ்த்தேன்னு மூச்சிரைக்க இறங்கி பாத்ரூம் போறதும் செக்ஸ் பவர்ல சேர்த்தியே கிடையாது.


செக்ஸ் மீதான மிதமான ஆர்வம்  உங்க செக்ஸ் பவரோட நிலைய காட்டற மானிட்டர் மாதிரி.  அணையற விளக்கு ஜகஜ்ஜோதியா எரியற மாதிரியும், எண்ணெய் தீர்ந்து போன பிறகு வெறுமனே திரி எரியறமாதிரியும் சிலருக்கு அமிதமான ஆர்வம் இருக்கும். ஆனால் அது நாளடைவில  பொக்குனு அணைஞ்சி போயிட்டாலும் பழைய பாட்டுல நாலாவது சரணத்துக்கு பிறகு வர்ர பல்லவி மாதிரி தேஞ்சி போயிரும். இதெல்லாம் மெனொஃபஸ் மாதிரி.

ஜோசிய பிரகாரம்னா பால்யத்துல சுக்கிர தசை மாட்டிக்கிட்டவுக, சுக்கிர அஸ்தமனம், கேந்திர சுக்கிரன் கேஸ் எல்லாம் இந்த கேட்டகிரிதான்.


முதல்ல செக்ஸ் பவர் குறைய காரணங்களை பார்ப்போம்.

ஜெனட்டிக் காரணங்கள் , என்விரான்மென்டல் காஸஸ், வளர்ப்பிலான குறைபாடுகள், சத்துக்குறைவு,பலவீனம், சாதாரண உடல் கோளாறுகள், குற்ற உணர்ச்சி, உள் மன பாதிப்புகள், விழிப்புணர்ச்சி இன்மை, செக்ஸ் குறித்த மூட நம்பிக்கைகள், அதிகாமம், பொருந்தா காமம், இடம்,பொருள் ,ஏவல் பாராது முயன்று தோற்றல், அதீதமான சுய இன்பம், தொடர் ஸ்வப்ன ஸ்கலிதம், செக்ஸ் பார்ட்னரின் ஒத்துழைப்பின்மை, பொருளாதார காரணங்கள், அரசியல்,சமூக  காரணங்கள் இப்படி டஜன் கணக்கா இருக்கு. இதையெல்லாம் வச்சு ஒரு வருசத்துக்கு தொடர்பதிவே போடலாம்.  போட்டுர வேண்டியதுதானேங்கற தம்பிகளா.. இதோ ஆரம்பிச்சாச்சு ..