Tuesday, April 6, 2010

ஆண்மை இழப்பு -2

அண்ணே வணக்கம்னே
இன்னைக்கு இந்த‌  ஆண்மை இழப்பு -2 (செக்ஸ் பவர் தொடர் ) பதிவோட "உனக்கு 22 எனக்கு 32" தொடரோட லேட்டஸ்ட் அத்யாயம், " தெலுங்கு திரைப்பாடல்களில் சிருங்காரம் ங்கற சூடான பதிவு, கமல் வெர்ஸஸ் என்.டி.ஆர் ங்கற வில்லங்க பதிவு எல்லாமே போட்டிருக்கேன். அந்தந்த தலைப்பை அழுத்தினா அந்தந்த பதிவுக்கு போயிரலாம். உடுங்க ஜூட் !


என்விரான்மென்டல் காஸஸ்:
என்விரான்மென்ட்டுன்னா தெரியுமில்லயா? சுற்று சூழல். இதுக்கும் ஆண்மையிழப்புக்கும் என்ன சம்பந்தமுனு கேட்கலாம். நம்ம செக்ஸ் பவர் அவிகவக ஜெனரல் ஃபிட்னெஸ்ஸை பொறுத்த விஷயம். ஃபிட்னெஸ்  மனிதன் எடுத்துக்கற  தண்ணி, காத்து,உணவை பொறுத்த விஷயம்.

உணவு:
அந்த உணவு மரம்,செடி,கொடிகள் மூலமா கிடைக்குது, இல்லன்னா அதை தின்னு வாழற மிருகங்கள்,பறவைகளோட மாமிசம் மூலமா கிடைக்குது. தாவரங்களுக்கு எப்படி உணவு கிடைக்குது? தண்ணீர்,காற்று,சூரிய ஒளிய வச்சு தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்குது. அதை தான் நாம திங்கறோம்.

மேற்படி தாவரங்களுக்கும், பறவைகள், மிருகங்கள், மனிதர்களோட உடல் நலனுக்கு சுத்தமான காற்று, தண்ணி, மண் தான்  அடிப்படை.

காற்று, தண்ணி, மண் தான் சுற்று சூழலை நிர்ணயிக்குது. இந்த சுற்று சூழல் சீர்கேட்டைதான் பொல்யூஷனுனு இங்கிலிபீசுல பீசறாங்க.


பொல்யூஷன் பத்தி புதுசா சொல்ல என்ன இருக்கு. சனம் பெருத்து போச்சு. இவிகளுக்கு போதுமான தானியங்களை விளைவிக்கிறதுக்காக பசுமை புரட்சினு ஆரம்பிச்சு பொன் விளையற பூமி எல்லாம் விஷமா போச்சு. ஆறு,குளமெல்லாம் விஷமா போச்சு. பத்து மூட்டை கடலை விளையற இடத்துல 40 மூட்டை விளைய வச்சாங்க. நல்லதுதானேனு நீங்க நினைக்கலாம். ஆனால் இயற்கைக்குனு ஒரு விதி இருக்கு. அதை மீறினா டப்பா டான்ஸ் ஆடிரும். எப்படினு பார்க்கலாம்.

ஒரு பசு மாடு ஒரு நாளைக்கு காலைல ரெண்டு லிட்டர், சாயந்திரம் ரெண்டு லிட்டர் பால் கொடுக்குதுனு வைங்க. ஒரு ஊசிய போட்டா 3+3 லிட்டர்ஸ் கொடுக்கும்னு சொல்றாங்க.இது எப்படி சாத்தியம்? வெட்டினரி டாக்டர் என்ன வைகுண்டத்து பாற்கடலுக்கும், பசு மடிக்கும் பைப் கனெக்சன் கொடுத்துர்ராரா இல்லே.

பிரசவத்தின் போது குழந்தை யோனி வழியா வெளிய வருது. சிலருக்கு யோனி வாசல் குறுகலா இருக்கும். குழந்தை வெளிய வர்ரதுல பிரச்சினை வரும். அதுக்கு ஒரு ஊசிய போடுவாங்க. அந்த ஊசி என்ன மாயம் பண்ணுதோ தெரியாது. யோனிவாசல் விரிஞ்சு கொடுக்கும். குழந்தை டேபிளுக்கு கீழே லஞ்சப்பணம் மாதிரி வெளிய வந்துரும் .

இந்த ஊசியதான் மேற்படி பசுவுக்கு போடறாங்க. 2லி 3 லி ஆயிருது. நிலத்துல கச்சா முச்சானு  போர் போடறாய்ங்க. அவனவன் சக்தி 500 , 600 அடில கூட போட்டாங்க. என்னாச்சு? நிலத்தடி நீர் மட்டம் குறைஞ்சு போய் கடல் தண்ணி உள்ளாற புகுந்துருச்சு.

கரும்பு ருசியா இருக்குனு வேரோட பிடுங்கின கதைதான். அந்த பசு இயற்கையா கொடுத்த பாலுக்கும், ஊசி போட்டு கறந்த பாலுக்கும் வித்யாசமிருக்குமா இருக்காதா அந்த பாலை முதலிரவுக்கு கொண்டு போற பார்ட்டியோட ஃபிட்னெஸ் பாதிக்குமா பாதிக்காதா (ச்சொம்மா அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர் கலந்தா ஜிலு ஜிலுப்பா இருக்குமில்லே அதுக்காகத்தேன்)


பத்து மூட்டை கடலைக்காய் விளைஞ்ச இடத்துல 40 மூட்டை விளைவிச்சாலும் இதே கதிதான். நீங்க சாதாரணமா ஆய் போனா மஷ்டு மட்டும் தான் வெளிய வரும்.  பேதிக்கு குடிச்சு ஆய் போனா உடம்புக்கு தேவையான  நீர் சத்து, உப்பு,சர்க்கரை, தாது உப்பெல்லாம் வெளிய கொட்டிரும். உடம்பு நாலு முதலிரவை ஒரே நாள்ள கொண்டாடின கதையா ஆடிப்போயிரும்.

பெண்ணும்,மண்ணும் ஒன்னு. வருசத்துக்கு ஒரு பிரசவம்னா அது இயற்கை. அரை டஜன் பிரசவம்னா? அந்த பெண்ணோட பாடி காட்பாடி ஆயிரும். இதே ஃபார்முலாலதான் பூமி சாரமிழந்துருச்சு.சாரமிழந்த பூமில விளைஞ்சதை திங்கற மனித உடல்ல எப்படி சாரம் இருக்கும்?

சரி ஓஞ்சு போவட்டும் இப்படி வருசத்துக்கு அரை டஜன் பிரசவம் கணக்கா பூமிய விளைய வைக்கிற இரசாயண உரங்கள்,பூச்சி மருந்துகள் பூமிய வெறுமனே சாரமிழக்கச்செய்தாலும் பரவாயில்லே. விஷமயமா  ஆக்கிருச்சுங்க. சாக்கடைல கூட வாழற சக்தி படைச்ச தவளை கூட்டம் கூட தாரவாந்து போயிருச்சுனா பார்த்துக்கங்க

இப்படி சுற்றுச்சூழல் கெட்டதால  உணவோட சத்தும், தரமும் கெட்டுது. இதனால ஃபிட்னெஸ் காலி. ஃபிட்னெஸ் காலியான ஆட்டோமேடிக்கா செக்ஸ் பவரும் காலி.செக்ஸ் பவர் குறைஞ்சா செக்ஸ் மேல அதீத ஆர்வம் ஏற்படும். செக்ஸ் வக்ரங்கள் உருவாகும்.அவசரத்துக்கு அவசரமா விளைய வச்ச தீனிய தின்னா எல்லாத்துலயும் அவசரம் தான் வரும். செக்சுக்கு அவசரம், கர்பமாக்க அவசரம்,  பெத்துக்க அவசரம் பணக்காரனாக அவசரம் விபத்துல சாக அவசரம். எல்லாமே ஸ்பீட் ஸ்பீட் செமை ஸ்பீட். ஆண்மை இழப்பு கூட ஸ்பீடா வந்துருது

சில வருஷங்களுக்கு முந்தி குமுதத்துல ஒரு தொடர் கட்டுரை வந்தது. கோழிக்கறியால சிறுமிக எல்லாம் சீக்கிரம் வயசுக்கு வந்துர்ராங்க . கேன்சர் வருது. வயித்தால போகுது அது இதுனு கண்டமேனிக்கு எழுதியிருந்தானுக. இது உண்மைதான். ( மேற்படி  கோழிகள் சீக்கிரம் வளர்ந்து கறியாகனும்னு போட்ட தீவனம், ஊசி ,மருந்து நேச்சர் அப்படி) ஆனா என்னாச்சு. ரெண்டு மூனு வாரத்துல பேரம் குதிர்ந்து போச்சு. ஒரு அஞ்சு வாரம் கோழிக்கறி சாப்பிடலன்னா  நீ மன்சனே கிடையாதுனு மல்ட்டிகலர் அட்வர்டைஸ் மெண்ட்ஸ் போட்டானுவ. கோழிக்கறி பிரச்சினைய கூவத்துல போட்டுட்டானுவ. மேலே சொன்ன அவசர  ரூல்  கோழிக்கறிக்கே இல்லை வாய்க்கா ஓரம் விளையுதே கீரை அதுக்கும் பொருந்தும். ஏன்னா நிலத்துல போட்ட பூச்சி மருந்தும்,இரசாயண உரமும் வாய்க்கா தண்ணில கலந்து ஓடிவருதுல்ல. 


சனம் பெருத்தால வந்த வினை இது. இதுவாச்சும் பரவாயில்லை. டென்சிட்டி ஆஃப் பாப்புலேஷன் (ஒரே இடத்துல மக்கள் கூட்டம் குவியறது)  அதிகரிச்சுருச்சு. இதுக்கு காரணம் என்னன்னா.. விவசாயம் காஸ்ட்லியா மாறி சூதாட்டமாவே மாறிப் போயிருச்சு. கிராமத்து சனம் நகரங்களுக்கு வலசை வர ஆரம்பிச்சுட்டாய்ங்க. லேபர் சப்ளை அதிகமாக கூலி குறைஞ்சது. கூலி குறைய தொழிலாளி அதிருப்தி அடைஞ்சான். அவன் அதிருப்திலருந்து ட்ரேட் யூனியன் வந்தது. அதை ஓவர் கம் பண்ண தொழிற்சாலை நிர்வாகம்  இயந்திரமயத்துக்கு போனாங்க. ஆட் குறைப்பு நடக்குது. ட்ரேட் யூனியன் உக்கிரமாவுது. அதை அடக்க நிர்வாகம் ரவுடிகளை வளர்க்குது. ரவுடிக வேலையில்லாத நேரத்துல ஆக்கிரமிப்புல இறங்கினாங்க. ஏமாந்தவனை குத்தினாங்க. எவனும் ஏமாந்தவன் கிடைக்கலன்னா தங்களையே குத்திக்கிட்டாய்ங்க. இவிகளுக்கு அரசியல் வாதிங்க உதவி தேவை பட்டுது.


பத்து பேருக்கு சாப்பாடு தயார் பண்றதுக்குள்ள நாப்பது பேர் வந்துட்டா என்ன செய்ய ? (இதுல ஊழல் காரணமா அஞ்சு பேருக்கு தான் சாப்பாடு தயாராகியிருக்கும்)
. சனம் பெருத்து, சன நெருக்கம் அதிகமாயிட்டே போக அரசாங்கம் எத்தனை தான் செலவழிச்சாலும் ரிசல்ட் சூனியம். மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகறாங்க.
பாப்புலேஷனோட டென்சிட்டி அதிகரிச்சா சுத்தம்,சுகாதாரம் எல்லாம் காலி. வீடு அதிகமாவுது. காற்று குறையுது. வாகனம் அதிகமாவுது. ஏர் பொல்யூஷன். ஹாரன் ஒலி அதிகமாவுது சவுண்ட் பொல்யூஷன். பிளாட்ஃபார்ம் ஆக்கிரமிப்புக்குள்ளாகுது.
மனிதனோட வாழ்க்கை போக்கே தலை கீழா மாறி போகுது.
மனுஷனை மனுஷன் சாப்பிட ஆரம்பிச்சுர்ரான்.

மனிதன் எல்லாத்து மேலயும் , தலைவர்கள் மேல கூட நம்பிக்கைய இழந்துர்ரான். தலைவர்கள் மக்கள் மேல  நம்பிக்கைய இழந்துர்ராங்க.  இந்த நிலைல அரசியல் வாதி ஓட்டு வாங்க குறுக்கு வழில பாய ஆரம்பிச்சான். பிரிட்டீஷ் காரன் ஸ்டைல்ல டிவைட் அண்ட் ரூல் பாலிசிக்கு வந்துட்டான். சன நெருக்கம் அதிகமாகி.போட்டி அதிகமாகி சகமனிதன் மேல பரிவு இல்லாத நிலைல அரசியல் வாதியோட ட்ரிக் சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சு. இந்து, முஸ்லீம், உயர் சாதி,கீழ் சாதி , அந்த  ஸ்டேட் ஆளு,  இந்த  ஸ்டேட் ஆளு, அந்த மொழிக்காரன்  இந்த மொழிக்காரன்னு தூண்டிவிட ஆரம்பிச்சாங்க.அது நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு. எல்லாத்துக்கும் காரணம் வாய்ப்பு குறைவுதான். (இன்சஃபிஷியன்ட் ஆப்பர்ச்சுனிட்டீஸ்) வன்முறை வளர ஆரம்பிச்சது. ரவுடிகளோட உதவி அரசியல் வாதிக்கு தேவைப்பட்டுது.   ஒரு ஸ்டேஜுல ரவுடிக  இல்லன்னா  அரசியலே இல்லைங்கற நிலை வந்துருச்சு.
ரெண்டு க்ரூப்பும் இறுக்கமா  கை கோத்துக்கிட்டங்க  "அட இவனுகளை என்ன நாம பெரிய மனுசனாக்கறது. நாமே எம்.எல்.ஏ,எம்.பி ஆனா என்னனு நினைக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

இதையெல்லாம் சொல்ல காரணம் சமூக வாழ்வுல அபத்திரம் அதிகமாக அதிகமாக
லைஃப்ல ரிஸ்க் அதிகரிக்க அதிகரிக்க செக்ஸ் பவர் ஃபவுண்டெயின் மாதிரி சீக்கிரமா சீறி சீக்கிரமா அடங்கிரும்னு சொல்லத்தான்.

இது என்னய்யா லாஜிக். சமூகத்துல என்ன இழவோ நடந்துட்டு போவுது அதுக்கும் என் ஆண்மைக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க கேட்கலாம். சமூகத்துல நடக்கிற சீரழிவுகள் உங்கள் கான்ஷியஸ் மைண்டை பாதிக்கலன்னாலும் உங்க சப் கான்ஷியஸ் மைண்டை பாதிச்சுருது. "அய்யய்யோ நாடு போற போக்கை பார்த்தா நாம ரொம்ப நாளைக்கு வாழ முடியாதுங்கற எண்ணம் " உங்க சப்கான்ஷியஸ்ல பூந்துருது.

ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்ன மாதிரி பாடில நிறைய க்ளாண்ட்ஸ் இருக்கு. அதெல்லாம் சகட்டு மேனிக்கு இரசாயங்களை சுரந்து ரத்தத்துல கலக்குது. மேற்படி இரசாயணங்கள்தான் உங்க சகல குணங்கள், பாடி நேச்சர், இம்யூன் பவர் எல்லாத்தயும் கண்ட் ரோல் பண்ணுதுங்க. இந்த க்ளாண்ட்ஸுக்கெல்லாம் கிங் ஹைப்போதலாமஸ். அதை கண்ட் ரோல் பண்றது உங்க எண்ணம். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு கரீக்டா வரும்.

மேலும் அவசரத்துக்கு அவசரமா விளைஞ்ச பயிர்,பச்சைய திங்கறிங்க,
அவசரமா வளர்த்த கோழி கறிய திங்கறிங்க. போட்டி நிறைஞ்ச உலகத்துல அவசரப்படலன்னா பொழைக்க முடியாது. இந்த அவசரத்தால ஹாட் பீட்ஸ், பல்ஸ் எல்லாமே எகிறுது ஆயுஷா குறைஞ்சிக்கிட்டே போவுது, ஃபிட்னெசா தலைமுறைக்கு தலைமுறை குறைஞ்சிக்கிட்டே போவுது.இயற்கை உங்க கிட்டேருந்து எதிர்பார்க்கிற ஒரே கடமை இனப்பெருக்கம்தான். அதனால தான் தலைமுறைக்கு தலைமுறை வயசுக்கு வர்ர வயசு குறைஞ்சிக்கிட்டே போகுது.