கவிதை 07 வலைப்பூவை தொடர்ந்து வசிப்பவர்களுக்கு என்.டி.ஆர் குறித்து தமிழ் மீடியா சித்தரித்து வைத்துள்ள ஆந்திர எம்.ஜி.ஆர் இமேஜை மீறி ஓரளவுக்காவது சில உண்மைகளாவது தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நண்பர் தெலுங்கு கற்றுக்கொள்ள ஏதுவாக பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருந்தார்.
எனவே என்.டி.ஆர் நடித்த சர்தார் பாப்பாராயுடு என்ற படத்தின் சூப்பர் சீனை தெலுங்கு மூலம்+ மொழி பெயர்ப்புடன் இந்த பதிவில் தருகிறேன்.
அதற்கு முன்பாக மேற்படி படம் குறித்து சின்ன அறிமுகம். இது ஒரு வகையில் கமல் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் படத்தின் மூலம். ஆம் இந்தியனில் அப்பா சுதந்திர போராட்ட வீரர். பிள்ளை கரப்ட்டட் ஃபெல்லோ.
சர்தார் பாப்பாராயுடுவிலும் அப்பா சுதந்திர போராட்ட வீரர். ஆனால் சுதந்திர போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை செல்லும் பாப்பாராயுடு இந்திய துரோகிகளின் சதி காரணமாய் சிறையில் நடக்கும் ஒரு கொலையில் சிக்கி ஜெயிலிலேயே இருந்து மகன் வளர்ந்து எஸ்.ஐ ஆக இருக்கும் நிலையில் வெளி வருகிறார். துரோகிகளை வேட்டையாடுகிறார். மகன் ட்யூட்டி கான்ஷியஸுடன் அவரை பிடிக்க, சிறையில் அடைக்க துடிக்கிறான். இப்போ சொல்லுங்க இந்தியனின் மூலக்கதை இதானே.
சரி இப்ப சீனுக்கு வந்துருவம். பாப்பாராயுடு பிரிட்டீஷாரின் ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்கிறான். கலெக்டர் எப்படியாவது பாப்பாராயுடுவை பிடித்து சுட்டுத்தள்ளும்படி உத்தரவிட்டுவிட்டு மாடிப்படி ஏறுகிறான். மாடிப்படியின் உச்சியில் பாப்பாராயுடு.
கலெக்டர்: எவரு நீவு.. வூ ஆர் யு ? ( யார் நீ.. )
பா.ராயுடு: பாப்பாராயுடு.. சர்தார் பாப்பா ராயுடு
கலெக்டர் : ப..பப்ப ராயுடு ( அதிர்ச்சியில் கை துப்பாக்கி நழுவிவிடுகிறது.)
பா.ராயுடு: ஏம்.. பேரு செப்ப கானே பிஸ்தூலு ஜாரி போயிந்தா.. ஊம் தீசுகோ. வேலுதோ நொக்கு . குண்டு பைட்டகொஸ்துந்தி. குண்டெல்லோனுன்சி தூசுக்கு போதுந்தி கால்ச்சரா கால்ச்சு ! ( இதெல்லாம் இதற்கு முன்பு கலெக்டர் போலீஸ் அதிகாரிகளிடன் சொன்ன டயலாகின் ரிப்பிட்டேஷன்/இனி அர்த்தம்/
என்ன .. பேரை சொன்னதும் துப்பாக்கி நழுவிருச்சா. ஊம் எடுத்துக்க விரலால அழுத்து. குண்டு வெளிய வரும். மார்வழியா துளைச்சிக்கிட்டு போகும். சுடுடா சுடு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு சம்புதானு . அசலு நுவ்வெந்துகொச்சாவிக்கடிக்கீ (நான் எதுக்கு உன்னை சுடனும். அசல் நீ எதுக்கு இங்கே வந்தே)
பா.ராயுடு: நுவ்வு சச்சே லோப்பல பாப்பாராயுடு எலா உண்டாடோ சூஸி தரிஸ்தாவனி ( நீ சாகறதுக்குள்ள பாப்பாராயுடு எப்படியிருப்பான்னு பார்த்து சந்தோஷப்பட
கலெக்டர் :ஓகுட் பர்சனாலிட்டி. பெஸ்ட் ஆஃப் லக். போ போ
பா.ராயுடு: பிரிக்கி பந்தா பிட்டனு கால்ச்சினட்டு சம்பி சவான்னி தீசுகுரம்மன்னாவு வச்சின வாட்னி வெள்ளி பொம்மன்டுன்னாவ் பயமா?( கோழைப்பயலே! பறவைய சுடற மாதிரி சுட்டு பிணத்தை கொண்டு வரச்சொன்னே. நேர்ல வந்தவனை போயிரசொல்றே..பயமா?)
கலெக்டர் : நீ செவிலோ வயர்லெஸ்..நீ சூப்புலோ கேர்லெஸ், நீ மாட்டலு ஃபியர்லெஸ் ( உன் காதுல வயர்லெஸ்/ அவன் போலீஸ் அதிகாரிங்க கிட்ட பேசினதையெல்லாம் ரிப்பீட் பண்ணதால ? உன் பார்வை கேர்லெஸ், உன் பேச்சு ஃபியர்லெஸ்
பா.ராயுடு: யுவார் ப்ரெயின் லெஸ்
கலெக்டர் :ஹ ஹ குட் ஜோக்.தேங்க்யூ.. பார்த்துட்டன்ல போ போ
பா.ராயுடு: நன்னு பட்டுகுன்டே லக்ஷ ரூபாயலு பஹுமானம் இஸ்தாமனி மீ ப்ரபுத்வம் ப்ரகடிஞ்ச்சிந்தி கதரா. நீ ஜீதம் நுவ்வு நீ பெள்ளாம் ,பிட்டலதோ ஆனந்தங்கா ஜீவிஞ்சடானிகி சாலது கனுக நன்னு பட்டுக்குனி ஆ லக்ஷ ரூபாயலு தீசுகுனி மீ தேசானிகி வெள்ளி நீ பெள்ளாம் பிட்டலதோ சுகங்கா ஜீவிஞ்சு ( என்னை பிடிச்சா லட்ச ரூபா பரிசு தரேன்னு உங்க கவர்ன்மென்ட் சொல்லியிருக்கில்லியாடா. நீ உன் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோசமா வாழ உன் சம்பளம் பத்தாது. என்னை பிடிச்சு அந்த லட்ச ரூபா வாங்கிக்கிட்டு உங்க நாட்டுக்கு போய் பெண்டாட்டி பிள்ளைங்களோட சந்தோஷமா இரு
கலெக்டர் : நேனெந்துக்கு நின்னு பட்டுகுன்டானு. நுவ்வு நா ஸ்னேஹிட்துடு . மீ பாரதீயுலந்தா நா ஸ்னேஹித்துலு மா வண்டவாடு பாரதீயுடு, மா தோட்டவாடு பாரதீயுடு, மா தீபாலு முட்டிஞ்சே வாடு பாரதீயுடு. ( நான் எதுக்கு உன்னை பிடிக்கப்போறேன். நீ என் ஃப்ரெண்டு. இந்தியருங்கெல்லாம் என் ஃப்ரெண்ட்ஸு) எங்க சமையக்காரன் இந்தியன், எங்க தொட்டக்காரன் இந்தியன். எங்க விளக்கை ஏத்தறவன் இந்தியன்)
பா.ராயுடு: ஹூம்.. மீ பட்டலு உதிக்கே வாடு பாரதீயுடு, மீ செப்புலு துடிச்சே வாடு பாரதீயுடு, மீ காள்ளு பட்டே வாடு பாரதீயுடு . சிவரிக்கி மீ ப்ராணாலு தீசே வாடு கூட ஈ பாரதீயுடே ஏமன்னாவு மேமு நீ ஸ்னேஹித்துலமா காது .பாரதீயுலன்டே நீ த்ருஷ்டிலோ கேவலம் பானிசலு. அந்துகே வண்டவாட்னி,தோடவாட்னி பணிவாரந்தரினி பாரதீயுலு பெட்டுகுன்னாவ். .கபர்தார் . அசலு மீரு மா தேசானிக்கி எந்துகொச்சாரு?
( ஊம்.. உங்க துணிய துவைக்கிறவன் இந்தியன். உங்க செருப்பை துடைக்கிறவன் இந்தியன். உங்க காலை பிடிக்கிறவன் இந்தியன். கடைசில உங்க உயிரை எடுக்கப்போறவன் கூட இந்தியந்தான். என்ன சொன்னே நாங்க உன் ஃப்ரெண்ட்ஸா இல்லே இந்தியன்னா உங்க பார்வைல வெறும் அடிமை. அதனாலதான் வேலைக்காரங்களையெல்லாம் இந்தியனா வச்சிருக்க . டேக் கேர். ஆமா நீங்க எதுக்குடா எங்க நாட்டுக்கு வந்திங்க)
கலெக்டர் :உத்யோகம் கோசம் (உத்யோகம் பண்றதுக்கு)
பா.ராயுடு:காது காது. வியாபாரம் பேருதோ மா தேசம்லோ அடுகு பெட்டாரு. மாவாரு மிம்மல்னி நம்மி மீத்தோ சேத்துலு கலிப்பாரு. ஆ மருக்ஷணமே ஊரிக்கி,ஊரிக்கி, குடும்பானிக்கி குடும்பானிக்கி , தல்லிக்கி,பிட்டக்கி, அக்ககி செல்லெலிகி,செல்லெலிக்கி அக்ககி, அண்ணகு தம்முடிக்கி ,தம்முடிக்கி அண்ணக்கி, சிவரிக்கி பார்யா பர்த்தல மத்ய கூட விபேதாலு ஸ்ருஷ்டிஞ்சி விடதீசி, விட தீசின வாரினி மீதோ கலுப்புகுனி டிவைட் அண்ட் ரூல் பாலிசிதோ ஈராஜ்யான்னி மீ ஹஸ்தகதம் சேஸுகுன்னாரு..அயினா இன்னி கோட்ல மந்தி ப்ரஜானீக்கம் மீரு மா ப்ரபுவுலு காரு அண்டுன்டே ஈ கட்ட பட்டுக்குனி நல்லுல்லா வேலாட்டானிக்கி மீகு சிக்கு லேதூ.. இதிகோ இப்புடே செபுதுன்னா .. இப்பட்டிகைனா புத்தி தெச்சுகுனி மா தேசானிக்கி ஸ்வாதந்த்ரயம் ப்ரகடிஞ்சி இப்புடே மீ தேசானிக்கி மர்லி பொண்டி. லேக போத்தே மீ சவாலே மீ தேசானிகி பம்பபடதாயி..
( இல்லே இல்லே வியாபாரங்கற பேர்ல எங்க நாட்ல கால வச்சிங்க. எங்காளுங்க உங்களை நம்பினாங்க. அந்த மறு கணமே .. ஊருக்கு ஊருக்கு, குடும்பத்துக்கு குடும்பத்துக்கு, தாய்க்கும்,பிள்ளைக்கும், பிள்ளைக்கும் தாய்க்கும், அக்காவுக்கும் தங்கச்சிக்கும் ,தங்கச்சிக்கும் அக்காவுக்கும், அண்ணனுக்கும் தம்பிக்கும், தம்பிக்கும் அண்ணனுக்கும் , கடைசில புருஷன் ,பெண்டாட்டி நடுவுல கூட வேற்றுமைய உருவாக்கி ,பிரிச்சு,பிரிச்சவங்களை உங்களோட சேர்த்துக்கிட்டு டிவைட் அண்ட் ரூல் பாலிசியோட இந்த நாட்டை கைப்பற்றிக்கிட்டிங்க. ஆனாலும் இத்தனை கோடி மக்கள் நீங்க எங்க ஆட்சியாளர்கள் இல்லேனு சொல்லிக்கிட்டிருந்தாலும் இந்த மண்ணை பிடிச்சிக்கிட்டு மூட்டைப்பூச்சி மாதிரி தொங்க உங்களுக்கு வெட்கமா யில்லே.. இதோ இப்போவே சொல்றேன். இப்பயாவது வெட்கத்தை வரவச்சுக்கிட்டு எங்க நாட்டுக்கு சுதந்திரத்தை அறிவிச்சுட்டு, உங்க நாட்டுக்கு போயிருங்க. இல்லேன்னா உங்க பிணங்க உங்க நாட்டுக்கு அனுப்பப்படும்.)
//தலைவர் பாட்டுக்கு வீரதீரமா வசனம் பேசிட்டு போயிருவார். தலை மறைஞ்சதுமே //
கலெக்டர் :ஊ ஈஸ் தேர்