Sunday, April 18, 2010

உனக்கு 22 எனக்கு 32

அண்ணே வணக்கம்னே,
நேத்து மாதிரியே சின்னதா விளக்கத்தோட என்.டி.ஆர் படத்துலருந்து  ஒரு க்ளிப்பிங். விளக்கம் முடிஞ்சதுமே உனக்கு 22 எனக்கு 32 தொடருது படிங்க
( ஒரு நகராட்சியை எப்படி தேத்தறதுனு ஸ்கெட்சிருக்குங்கண்ணா)

பில்லா படத்தை தெலுங்குல என்.டி.ஆர் செய்தார். அதுலருந்து ஒரு க்ளிப்பிங்.
(Please !  Look at the Bottom of the Blog) (வலைப்பூவின் கீழே பார்க்கவும்)
சீன் என்னடான்னா ஒரு ஆள் காட்டிய பில்லா போட்டு கழட்டிர்ரான். அவனோட காதலி பில்லாவை ட்ராப் பண்ண ரூமுக்கு வரா. பில்லாவ மயக்க பார்க்கிறா.இவர் கழட்டி விடறாரு. அவள் ஏன் உனக்கு பொம்பளைங்கனா பிடிக்காதா?னு கேட்கிறா.

அதுக்கு தலை என்னா சொல்றாரு தெரியுமா? " கண்ணம்மா எல்லா பொம்பளைங்களையும் பிடிக்காதுன்னுல்ல. ஒன்னை மாதிரி சங்கினி ஜாதி பொண்ணுங்கன்னா பிடிக்காது.

யப்பாடி பலான பதிவுக்கு நாட் கிடைச்சுருச்சுப்பா விரைவில் எதிர்பாருங்கள் ஆயுளை குறைக்கும்  சங்கினி ஜாதி பெண்கள் 

ஜகன் நகராட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லேனு சொல்லிட்டாலும் கர்ட்டசிக்காக அவரை போய் பார்த்தேன். அவர் ஒரே வார்த்தை சொல்லிட்டாரு " நீ என்ன வேணா செய்துக்க. அடுத்த தேர்தல்ல நகராட்சி எல்லைல என் மெஜாரிட்டிக்கு  நீதான் பொறுப்பு.

கோவா போயிருந்த ஸ்ரீராம் ஊரை வந்து சேர்ந்தான். மொட்டை மாடிக்கு கூட்டிப்போய் பேசினேன்

" த பாரு ஸ்ரீராம் ! கலை, ஷார்ட் ஃபிலிம், கம்ப்யூட்டர் எதுக்கும் நான் எதிரி கிடையாது. ஆனா ஒரே கண்டிஷன் அது மக்களுக்கு உபயோகப்படனும்.தாளி ! எட்டாங்கிளாஸ்ல தென் அமெரிக்காவில் கால் நடை வளர்ச்சி பத்தி கூட பாடம் வந்திருக்கு. படிச்சிருக்கேன். ஆனா அந்த இழவெல்லாம் வாழ்க்கைக்கு உதவலே. கத்துக்கனுங்கற வெறி தான் முக்கியமே தவிர காலேஜ்ல சேர்ரது, கோர்ஸுல சேர்ரதுஇதெல்லாம் முக்கியம் கிடையாது.  இனி உன் லைஃப்ல காலேஜ்,கோர்ஸு  இந்த கருமாந்திரத்துக்கெல்லாம் இடமில்லே.இன்னைக்கு நம்ம  நகராட்சியோட ஜன தொகை 2 லட்சம். 33 வார்டா பிரிச்சிருக்கான். 33 கவுன்சிலரும், 200 எம்ப்ளாயிசும் இந்த நிர்வாகத்தை செய்யமுடியும்னு நான் நம்பலை. எல்லாத்தயும் மாத்தனும். முதல்ல இப்படியெல்லாம் மாத்த போறேன், மாத்தினாதான் கதி மோட்சம்,  மார்ரத தவிர வேற உங்களுக்கு வேற வழியே இல்லை. மாறலைன்னா ஒன்னும் பேராது வீட்டுக்குத்தான் போகனும்னு ஸ்ட் ரிக்டா ஒரு மெசேஜ் பாஸ் பண்ணனும். என் கிட்டே ஒரு அஜெண்டா இருக்கு. அதை அமல் படுத்த எனக்கு ஆள் பலம் தேவை.முக்கியமா லஞ்சம்,லாவணியம், சுய நலம், எதிர்காலம் பத்தின பயம் இதெல்லாம் இல்லாத ஆள் பலம் தேவை. எலக்சன் டைம்ல நமக்கு ஒவ்வொரு வார்ட்லயும் பத்து பேர் கோ ஆப்பரேட் பண்ணாங்க. எனக்கு ஒவ்வொரு வார்டுலயும் பத்து ஆள் தேவை. ஈகோங்கறது இல்லாம ஒரு டீமா , ஒரு காமன் அஜெண்டாவோட வேலை செய்யற பக்குவம் இருக்கிற ஆட்கள் தேவை. நீ என்ன பண்றேன்னா வார்ட் வைஸ் போ. நமக்கு தேர்தல்ல வேலை செய்த அந்த பத்து பேரை மீட் பண்ணு. அதுல  நமக்கு  கம்ப்யூட்டர்  நாலட்ஜ் உள்ள ஒரு பார்ட்டி அவசியம் தேவை. இன்னொரு ஆள் ஆஃபீஸ் மேனேஜ்மென்ட்ல ஆர்வம், திறமை இருக்கிறவனா இருக்கனும். மத்த எட்டு பேரும் வார்டுல இருக்கிற மக்களோட நேரடி காண்டாக்ட்ல இருக்கனும். ச்சும்மா சேம்பர்ல உட்கார்ந்துகிட்டு காடா கிழிச்சுரலாம்னு நினைச்சா அதெல்லாம் வேஸ்டு.  அந்த பத்து பேர்ல குவாலிஃபைட் பர்சன் இல்லேன்னா அவனையே ரெகமண்ட் பண்ணச்சொல்லு. ஒவ்வொரு மாசத்துக்கும் வார்ட்  ஆஃபீஸ் ரெண்ட், பவர் பில், அந்த பத்து பேருக்கு நாமினலா ஒரு அமவுண்ட் அப் டு 2.5 வரைக்கும் தர தயார். ஆனால் அவிக எனக்கும் அந்த வார்டு மக்களுக்கும் இடையில பாலமா செயல் படனும்.அவிக பிரச்சினைகளை எனக்கு தெரிவிக்கனும். அந்த பிரச்சினைகளை தீர்க்க  நாம  நாம எடுக்கிற நடவடிக்கையால மக்களுக்கு எதுனா பிரச்சினை வராப்ல இருந்தா முன் கூட்டியே சொல்லனும். முக்கியமா  நம்மளோட கமிட்மென்டை, நல்லெண்ணத்தை மக்களுக்கு கம்யூனிக்கேட் பண்ணனும். அந்த பத்து பேருக்கு வெறுமனே 2.5 கொடுத்து கழட்டிவிட்டுருவம்னு நினைக்க வேண்டாம். அவிக எந்தளவுக்கு கமெட்மென்டோட வேலை பார்க்கிறாங்களோ அந்த அளவுக்கு அவிகளுக்கு கவுரவமான ,ஸ்திரமான வருமானத்துக்கு வழி செய்வோம். அவிக தங்களோட லைஃப் ஸ்டைலையே மாத்திக்கனும். காலைல தியானம், யோகா, வாக்கிங் , ஹெல்த் ரூல்ஸ் ஃபாலோ பண்ணனும். அதர் கமிட்மென்ட்ஸ் இருக்கக்கூடாது.  இன்னொரு முக்கியமான விஷயம் அவிக ஆல்க்கஹாலிக்ஸா இருக்க கூடாது.  33 வார்டுக்கும் அப்பாயிண்ட் பண்ற கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்ஸ், ஆஃபீஸ் பேரர்ஸ், வார்ட் மெம்பர்ஸுக்கு தனி தனியா, ஒட்டு மொத்தமா ட்ரெயினிங் கண்டக்ட் பண்ணனும். அந்த ட்ரெயினிங் எப்படி இருக்கனும்னா பாடி லேங்குவேஜ்,சைக்காலஜி, ரிஸ்க் மேனேஜ்மென்ட், டைம் மேனேஜ்மென்ட், இப்படி ஒன்னுன்னுல்ல ஏ டு ஜெட் அவிக அப்படியே நிர்வாக புலிகளா மாறிரனும். ஒரு பய நகராட்சிக்கு வந்து அது என்ன இதுஎன்னனு கேட்க கூடாது.

 நகராட்சிக்கு புதிய கட்டிடம் வேணும். அது ரெடியாறதுக்குள்ள எம்ப்ளாயிஸ் மொத்த பேரும் தயாராகனும். அதுக்காக ரொட்டீன் ஆக்டிவிட்டீஸ் பாதிக்க கூடாது. அவிகளுக்கு ட்ரெயினிங் அவசியம் . எஸ்பெஷலி ஆல்க்கஹாலிக்ஸ் இருக்காங்க. பி.பி.ஷுகர்,பைல்ஸுனு நிறைய காம்ப்ளிகேஷன்ஸ் இருக்கு. ஒரு மெடிக்கல் கேம்ப் கண்டக் பண்ணனும் .அவிக உடம்பு, மனசு  ரெண்டும் ச்சொம்மா அரேபியன் ஹார்ஸ் மாதிரி தயாராகனும். ஆஃபீஸ்ல இருக்கிற சில பத்தாம் பசலி நடைமுறையெல்லாம் மாத்த போறேன்.  எல்லாம் டிப்பார்ட்மென்டும் ஒரே ஹால்ல வந்துரனும். ஹால் நடுவுல ரெண்டு சேம்பர் ஒன்னு கமிஷ்னருக்கு, இன்னொன்னு எனக்கு. சன் கிளாஸ் யூஸ் பண்ண கூடாது. எல்லாமே ட்ரான்ஸ்பரண்டா இருக்கனும்.இதுக்கு தேவையான வேலைகளையும் கவனி.

இன்னொரு முக்கிய சமாசாரம்  நகராட்சி சார்பா நகரத்துல 3 இடத்துல வித் ஹன்ட் ரட் சிஸ்டம்ஸ் இன்டர் நெட் சென்டர் வைக்கிறோம் . ஆல் சிஸ்டம்ஸ் மஸ்ட் பின் இன் ஓப்பன். ரைஸ் கார்டு இருக்கிறவனுக்கு 30% ஆஃப். அடுத்து இதே மாதிரி 3 இடத்துல ஜிம் வைக்கிறோம். லைப்ரரி வைக்கிறோம். எல்லாம் எப்படி இருக்கனும்னா கார்ப்போரேட் லெவல்ல இருக்கனும். ஆனால் மூளைக்கு வேலை கொடுத்து செலவை குறைக்கனும். இதுக்கு தேவையான மேன் பவர், பிளானிங், மேப்பிங்,டெக்னிக்கல் அட்வைஸ், கொட்டேஷன் , டீட்டெய்ல்ட் ரிப்போர்ட் எல்லாமே ஒரு வாரத்துல என் டேபிள்ள இருக்கனும். உன் ஃப்ரெண்ட்ஸ்ல பத்து பேரை செலக்ட் பண்ணிக்கோ. உனக்கு கொடுத்த வேலைய பிரிச்சு கொடு. நீயும் ஒரு வேலைய எடுத்துக்க எல்லாத்தயும் கோ ஆர்டினேட் பண்ணு.

யார் கிட்டே பேசினாலும் பேச்சில கவனமிருக்கட்டும். இதமா பேசு. அதுக்காக அவன் சொல்ற நொண்டி சாக்கயெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்காதே.  பத்து பேரை சேலரி பேஸ்டா பிடிச்சா ஆயிரம் பேரை காண்டாக்ட்ல வச்சுக்க. புறம்போக்கு இடத்துல டீக்கடை போட்டுக்க சொல்வியோ, கமிஷ்னர் கிட்டே பேசி காண்ட் ராக்ட் வாங்கி தருவயோ , அதெல்லாம் உன் சாமர்த்தியம். ஆனால் வேலைல நாணயம் இருக்கனும். கெட்ட பேர் வரக்கூடாது. முக்கியமா இதெல்லாம் எனக்கு தெரியாம நடக்கற மாதிரி நடக்கனும். என் காதுக்கு ஏதாவது கம்ப்ளெயிண்ட் வந்தா  கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். அப்புறம் ஃபீல் பண்ண கூடாது.."

ஸ்ரீ ராம் நான் பேச பேச என் முகத்தையே பார்த்துக்கிட்டிருந்தான். "என்னடா பேந்த பேந்த முழிக்கிறே. மாறு கண் இருக்கானு பார்க்கிறியா , இல்லே பேசறப்ப  லேசா மூச்சிரைக்குது டாடினு சொல்ல போறியா"

" நோ டாட் ! இதெல்லாம் சாத்தியமானு யோசிக்கிறேன். இது 2 லட்சம் மக்களுக்கு சம்பந்தப்பட்ட வேலை. ஒரு வீட்ல நாலு பேருக்கு சமைக்கனும்னாலே  என்ன சமைக்கிறதுன்னு டிசைட் பண்றதே பெரிய தலைவலி. ஒரு வேளை டிசைட் பண்ணி, சமைச்சுட்டா அது நொட்டை இது நொள்ளைனு குறை சொல்லுவாங்க.. ஏதோ உட்கார்ந்து நாற்காலிய தேச்சிக்கிட்டு இருக்காம, நம்ம பிசினஸை டெவலப் பண்ணாம இப்படி எம்.ஜி.ஆர் வேலைங்களை செய்துக்கிட்டிருந்தா நாளைக்கு எனக்கு சைக்கிளாவது மிஞ்சுமானு "

"அது கூட மிஞ்ச தேவையில்லே கண்ணா ! குட் வில் ..குட் வில் இருந்தா போதும். நீ நடந்து போனா கூட பத்து கார் வந்து நிக்கும். தம்பி ஏறிக்கங்கனு லிஃப்ட் கொடுப்பாய்ங்க.. மேலும் நான் சுத்தத்தங்கம் இல்லேடா.  உனக்கு அந்த நிலைமை வராது. செக்ஸ் ஒர்க்கர்ஸுக்குன்னு  ஆரம்பிச்சிருக்கிற அப்பார்ட்மென்ட்ஸ் கம்ப்ளீட் ஆகட்டும். ஸ்டேட் வைட் இப்படி அப்பார்ட்மென்ட்ஸ் கட்டற வாய்ப்பு வரும். அதுக்குண்டான வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. நீ சமையல பத்தி பேசினே. அதெல்லாம் வேளா வேளைக்கு சமைக்கிறாப்ல இருந்தாதான்.  நகராட்சி கதை எப்படி இருக்குன்னா இவிக சமைச்சே பல காலமாச்சு நைனா.. நீ எதை சமைச்சு வச்சசாலும் அம்ருதம் மாதிரி தான் கணக்கு. அடிச்சு தூள் கிளப்பு. போ.."

" ஓகே டாடி"

முதல்ல எல்லா ரிப்போர்ட்டருக்கும் சிந்து டவர்ஸ்ல பார்ட்டி அரேஞ்ச் பண்ணேன். ஒரு ப்ரஸ் மீட் வச்சு கச்சிதமா சொல்லிட்டேன். ஒரு வருஷம் விளம்பரம்,கிளம்பரம் எதிர்பார்க்காதிங்க. நான் உண்மையிலயே எல்லாத்தயும் மாத்திரனும்னு இறங்கியிருக்கேன். கோ ஆப்பரேட் பண்ணுங்க. ஏதாச்சும் காம்ப்ளிகேசன், கம்ப்ளெயிண்ட் இருந்தா என் காதுல போடுங்க. அதை நான் ரிசால்வ் பண்றேன். அப்போ கம்ப்ளெயிண்ட் ஆக்ஷன் ரெண்டையும் சேர்த்து போடுங்க. நோ அப்ஜெக்ஷன். கடந்த கவுன்சிலுக்கும் இந்த கவுன்சிலுக்கும் வித்யாசமிருக்கு. அவிக எதையுமே செய்யாம கதை பண்ணிட்டிருந்தாங்க. நான் எதையாவது செய்யனும்னு இறங்கியிருக்கேன். உங்க 60 பேருக்கும் உடனடியா இப்போ செல்ஃபோன்ஸ் தரப்போறேன். உங்க  ஐடி எட்ஸெட் ரா கமிஷ்னர் கிட்டே  கொடுத்திங்கணா லைஃப் டைம் வேலிடிட்டியோட சிம்ஸ் தருவாரு. எவ்ரி மந்த் தவுசன்ட் ருப்பீஸ் ரீசார்ஜ் தரப்போறேன். உங்க 60 பேருக்கும் தனியா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டி எந்த விதமான ப்ராஃபிட்டும் இல்லாம தவணை முறைல தரப்போறேன்.  பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் கடந்து போனதை மறந்துருங்க. புதுசா மாறுங்க. இந்த  நகரத்தையே புதுசா மாத்திக்காட்டறேன்.

இல்லே நாங்க மாறமாட்டோம். ரயில் சரியான நேரத்துக்கு டெஸ்டினேஷனை சேர்ந்தா அது ந்யூஸில்லை. ஆக்சிடெண்ட் ஆனாதான் ந்யூஸுனு அந்த ரூட்ல போற மாதிரியிருந்தாலும் போங்க. உங்க எல்லாருக்கும் தெரியும் . நகர தூதா என் சொந்த பத்திரிக்கை. இப்ப உங்களுக்கு ஆஃபர் பண்ணின விஷயத்துக்கு ஆவுற செலவை என் பத்திரிக்கைக்கே செலவழிச்சு  நீங்க நெகட்டிவ் ந்யூஸ் போடறப்பல்லாம் ஸ்பெஷல் இஷ்யூ போட்டு  ஃப்ரீ டிஸ்ட் ரி ப்யூஷன் பண்ணுவேன். நீங்க 60 பேர் இருக்கிங்க. இதுல அஞ்சாயிரம் காப்பி போற பத்த்ரிக்கையும் இருக்கு 50 கூட விக்காத பத்திரிக்கையும் இருக்கு. அயனான பத்திரிக்கையா ஒன்னையோ ரெண்டையோ செலக்ட் பண்ணிக்கிட்டு மேனேஜ்மென்ட் லெவல்லயும் சரி பண்ணிக்க தெரியும். ஓகே."

கடைசி பாராவ பேசும்போது அவனவன் மூஞ்சி விளக்கெண்ணை குடிச்ச மாதிரி ஆயிருச்சு. அப்புறம் ந்யூஸ் வடிவத்துலயே எழுதி வச்சிருந்த என் ப்ரப்போசல்ஸோட ஜெராக்ஸ் காப்பிய 60 பேருக்கும் கொடுத்து பெரிய கும்பிடு போட்டேன். மறு நாள் ஏறக்குறைய எல்லா பேப்பர்லயும் ப்ரப்போசல்ஸ் பப்ளிஷ் ஆயிருந்தது.
சிலதுல கிண்டலா, சிலதுல சாதாரணமா, சிலதுல ஆர்பாட்டமா கவர் ஆகியிருந்தது.
ஒரே ஒரு பத்திரிக்கைல மட்டும்   "நகரத்துக்குள்ளே திரிய  நுழைவு கட்டணம்"னு
தலைப்பை போட்டு கிழி கிழினு கிழிச்சிருந்தான்.