ஒரு பாடாவதிபடமா கூட இருக்கலாம். ஆனால் அதுல ஒரு சூப்பர் ஷாட் இருக்கும். இல்லே சூப்பர் சீன் இருக்கும் .அதை மட்டும் கட் பண்ணி பார்க்க முடிஞ்சா எப்படி இருக்கும். எனக்கும் இன்டர் நெட்ல ப்ரவுஸ் பண்ணிட்டிருந்தப்ப ஒரு வீடியோ கட்டர் சாஃப்ட் வேர் கிடைச்சது. அதை உபயோகிச்சு என்.டி.ஆர் படத்துல ஒரு காட்சிய கட் பண்ணி உங்க பார்வைக்கு வச்சிருக்கேன்.
நான் என்.டி.ஆர் புகழ் பாடுவது சிலருக்கு அருவறுப்பாக கூட இருக்கலாம். என் ரசனையையே கூட அண்டர் எஸ்டிமேட் பண்ணியிருக்கலாம். என்.டி.ஆரோட ஓவர் ஆக்சன் நாட் நாட் டைரக்சன் டெக்னிக் பத்தி பத்தியா பேசற வசனம் எல்லாத்துக்கும் நான் ஹேண்ட்ஸ் அப். ( ஆனால் விஜய காந்த் இன்னிக்கும் பேசறாரே அதை என்ன சொல்ல)
நான் என்.டி.ஆரை லைக் பண்றதுக்கு பல காரணங்கள் உண்டு. அதுல ஒன்னு என்னன்னா புத்தர் சொன்னாரே சத்தியம் அந்த முனைலயும் நஹி இந்த முனையிலயும் நஹின்னு அப்படி ஆக்டிங்ல மையமாவே நின்னுக்கிட்டு தேவையானப்ப அந்தப்பக்கம் இந்தபக்கம் ஓடி ஆட்டங்காட்டின பார்ட்டி என்.டி.ஆர்.
தமிழ்ல எம்.ஜி.ஆர் நடிச்ச படங்களை மட்டுமில்லை,சிவாஜி நடிச்ச படங்களையும் தெலுங்குல என்.டி.ஆர் பண்ணியிருக்காரு. இவ்ளோ ஏன் ரஜினிகாந்த் பண்ண படங்களையும் பண்ணியிருக்காரு. உ.ம் பில்லா, தீ
என்.டி.ஆரோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா அவரு டைரக்டர் ஆர்ட்டிஸ்ட். தான் நடிச்ச கட்ட கடைசி படத்துல ஒரே ஒரு சீன்ல ஒரே ஒரு கரெக்சன் மட்டும் சொன்னாராம் அது செய்தி.
முந்தா நேத்து பேஞ்ச மழைல நேத்து முளைச்ச காளான் பயலெல்லாம் கதை கேட்டு, கண்டதுலயும் மூக்கை நுழைக்கிற இந்த காலத்தையும் என்.டி.ஆரோட ரேஞ்சுக்கு அவர் டைரக்டர் ஆர்டிஸ்டா இருந்ததையும் நினைச்சு பாருங்க.
அவர் கிட்டே ஸ்டைல், நடிப்பு எல்லாமே இருந்தது. அவருக்குள்ள எல்லா பாத்திரங்களும் இருந்தது . என்ன உங்க டேஸ்டுக்கு அதெல்லாம் டபுள் ஸ்ட்ராங்கா ,ஓவர் ஆக்டிங்கா தெரியலாம். ஆனால் எங்களை பொருத்த வரை டபுள் ஓக்கே.
சரி இப்போ வச்சிருக்கிற வீடியோ க்ளிப்பிங்க பாருங்க ஸ்டைல், நடிப்பு ரெண்டுமே க்ளப் பண்ணியிருப்பாரு. சீன் என்னடான்னா ( தங்கப்பதக்கம் தெலுங்குல)
புள்ள நாதாரி. சின்னவயசுலயே நாய் மேல ஏறி கோலம் வருது. என்.டி.ஆர் தான் அப்பா. புள்ளை வீட்ல இருந்து காசு, நகையெல்லாம் திருடிக்கிட்டு வீட்டை விட்டு ஓடிர்ரான். போலீஸ் பிடிச்சு சிறுவர் சீர்திருத்த பள்ளில சேர்த்துர்ராங்க. என்.டி.ஆர் தன் செல்வாக்கை உபயோகிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. ஆனால் என்.டி.ஆர் ஸ்ட் ரெயிட் ஃபார்வார்ட். சட்டம் தன் வேலைய செய்யட்டும்னு விட்டுர்ரார். புள்ளை பெரியவனாயி வெளிய வர்ரான். விஷத்தை கக்கறான். வேற ஒரு பொண்ணை லவ் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டு சட்டவிரோத செயல்கள்ள ஈடுபட்டுக்கிட்டு வாழறான். என்.டி.ஆர் வைஃப் இறந்துர்ராங்க . கொள்ளி வைக்க கூப்பிட என்.டி.ஆர் புள்ள வீட்டுக்கு போறார். அவன் இவரை அவமானப்படுத்திர்ரான்.
அப்போ இன்னொரு பார்ட்டி என்டர் ஆகி புள்ள தான் கொள்ளி போடனும்னு ஒன்னும் இல்லை. நானும் அவிகளுக்கு புள்ள மாதிரிதான் . நான் போடறேன் வாங்க சார்னுட்டு சொல்றான். அப்போ என்.டி.ஆர் கண்ணை துடைச்சிக்கிட்டு திரும்பி போறார்.
இந்த சீனை பாருங்க.. கண்ணை துடைச்சிக்கிறாரா ? மீசைய திருப்பறாரா ஒன்னுமே தெரியாது. ஆனால் தியேட்டர்ல இந்த சீனுக்கு பயங்கர அலப்பறை. சீனை பாருங்க உங்க கருத்து என்ன சொல்லுங்க?