Thursday, April 8, 2010

மனிதன் Vs மிருகம்

உடைகளுக்கு மேல் இருக்கும் என்னை சந்திக்க
அவற்றிற்கு பின்னே இருக்கும் அவன் வந்தான்.

மிருகத்தை தேடி மனிதன் செல்லலாம்..
அது வேட்டை.
மனிதனை தேடி மிருகம் ?
விதியின் சேட்டை.

மனிதர்கள் காட்டை அழிக்க உணவு தேடி
காட்டை யொட்டிய  கிராமங்களுக்கு வருகை தரும்
மிருகம் போல் அந்த மிருகம் வந்தது

அதிலென்  ஜாடை தெரிந்தது. எம்மிடை பேச்சு துவங்கியது

மனிதன்: யார் நீ?
மிருகம் : நீயே நான்
மனிதன்: அசாத்தியம். நான் மனித குல மேன்மையே நோக்கமாய் கொண்டு
கவிப்புனல்சொரியும் காள மேகம். உன்னைப்பார்த்தால் நர மாமிசம் புசிப்பவனாய்,  இருள் மண்டிய காட்டில் வசிப்பவனாய் தோன்றுகிறாய். நீ நானாவதாவது.
மிருகம்:சரி உன்னைப்போன்ற  ஒருவன் என்று கொள்
மனிதன்: என் தாய்,தகப்பன் என்னை போன்றவர்கள் அல்லர்.அவர்கள் தவறு செய்ய தர்கமே    இல்லை.இயற்கையின் விபத்தே போல்  நீ என்னைப்போல் இருப்பதை வேண்டுமானால் அங்கீகரிப்பேன்.  நானே நீ என்றால்  நோ நோ நெவர்.. ஐ அக்ரி
மிருகம்:நான் உன்னை போல் இருப்பதென்ன நான் சென்ஸ் நீதான்  என்னைப்போல் இருக்கிறாய். நான் உன் ஆதி ரூபம்.
மனிதன்:இல்லை நீ தான் என்னை போல் இருக்கிறாய்
மிருகம்:அடடா .. மேகம் போன்ற கூந்தல் என்று சொல்லும் போது மேகம் ஒரிஜினல், கூந்தல்  அதற்கு கூறப்பட்ட உவமை. மேகம் முதலில் வந்தது. அதனால் தான் மேகம் போன்ற கூந்தல் என்பது வழக்காயிற்று
மனிதன்: நான் ஒப்ப மாட்டேன். உன் உடலெல்லாம் மயிர். நீ மிருகம்.எனக்கு நீ மூத்தவனா?
மிருகம்:முட்டாள்!  இளையவன் மூத்தவன் என்ற பிரயோகமே தப்பு. நீ நானாக தான் இருந்து வந்தாய். இன்று நீயாக மாறியிருக்கிறாய். உன் உடலில் இருந்த மயிரை மழை,வெய்யில்,குளிருக்கு பால் மாறி  காட்டுக்குள்ளிருந்து  வீட்டுக்கு  மாறி, உதிர்த்துவிட்டாய். அன்று உதிர்ந்த என் மயிர் இன்னும் உன் அடிமனதில் ஒட்டியிருக்கிறது.
மனிதன்: எனக்கு புரியவில்லை
மிருகம்:சிந்திக்க ஆரம்பித்துவிட்டால்  இதுதான் சிக்கல். சின்ன சின்ன சத்தியங்கள் கூட புரிவதில்லை
மனிதன்:ஏய் சிந்தனை என் கை விளக்கு.
மிருகம்:சிந்தியாமை பவுர்ணமி நிலா. உன் கை விளக்கின் ஜோதியே என்னை முழுக்க தரிசிப்பதை  தடுக்கிறது.
மனிதன்: இரு இரு.. உன்னை சந்தித்ததில்லையே தவிர  எங்கோ பார்த்திருக்கிறேன்
மிருகம்:முட்டாள் ! என் மீது கண்டதையும் போர்த்தி மறைத்து மூச்சு திணற வைத்துவிட்டு பார்த்திருக்கிறேன் என்று பம்மாத்து செய்கிறாயா?
மனிதன்: போர்வை என்ன? மூச்சு திணறல் என்ன?
மிருகம்:ஆம் கலாசாரம், பண்பாடு, நாகரீகம் இப்படி ஒன்றா இரண்டா  போர்வைகள் வெக்கை தாங்க வில்லை .
மனிதன்: நான் ஏன் உனக்கு போர்வை  போர்த்த வேண்டும்.
மிருகம்:என் மீது போர்வைகளை போர்த்தி புழுக்கம் ஏற்படுத்தி  அதை ஒழுக்கம் என்று சொல்லிக்கொண்டாய். அவை இல்லாவிட்டால் நானே நீ. என்னை சமூகம் சந்தித்தால் நீ தூக்குக்கயிறை சந்திக்க வேண்டும் அதனால் தான் என்னை போர்வைகளுக்குள் சமாதி செய்ய முயன்றாய் .
மனிதன்: நான் நாகரிகன். நீ காட்டுமிராண்டி . நான் நீயா?
மிருகம்: பாவம் உன் பதற்றம் அதிகரித்துக்கொண்டே போகிறது.. சரி இப்படி வைத்துக்கொள்வேம். என்னிலிருந்து நீ வந்தாய்.
மனிதன்:  அப்போ  நீ எங்கிருந்தாய்?
மிருகம்:உனக்குள் இருந்தேன்.
மனிதன்:இதெப்படி சாத்தியம்?
மிருகம்: உனக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம். நாலு பேருக்கு மத்தில  நீயிருக்கறப்ப நான் பேஸ் மென்டுக்கு போயிருவன். யாருமில்லாதப்ப மட்டும்தான் நான் வெளிய வருவேன்.
மனிதன்: இன்னும் எப்பல்லாம் வெளிய வருவே..?
மிருகம்: உன் உயிருக்கு ஆபத்து வரும்போது, பசி, உடலுறவு இச்சை எழும் போது அது மறுக்கப்படும்போது,  தூக்கம், காலைக்கடன் உந்தும்போது, தேய் பிறை காலங்களில், தட்சிணாயன காலங்களில், இரவு பொழுதுகளில்
மனிதன்: எப்போதெல்லாம் நீ பேஸ் மென்டுக்கு போகிறாய். ?
மிருகம்:உன்னை நீ சுகப்படுத்திக்கொண்டு, உடல்,மனம்,புத்தி ,ஆன்மாவை சுத்தப்படுத்திக்கொண்டு  இந்த உலகின் பால், சமூகத்தின் பால், உன்னை சுற்றியுள்ள மனிதர்களின் பால் இயற்கையின் பால், இயற்கையின் பிரதியாம், நிதியாம், பிரதி நிதியாம் பெண்ணின் பால் நன்றி உணர்வுடன் இருக்கையில் நான் பேஸ் மென்டுக்கு என்ன காஷ்மோரா பேய் போல் 21 ஆண்டுகள்  நீண்ட தூக்கத்துக்கு போகிறேன்
மனிதன்: சரி நீ தூங்க போகலாம்..
மிருகம்: என்ன சொல்கிறாய்..
மனிதன்: இது நாள் வரை கவிதை07 வாசித்து தான் வந்தேன். இனி பின்பற்ற போகிறேன். உன் கட்டிலே உனக்கு கல்லறையாகும். உன்னை நான் வென்று விட்டேன். நீ  சென்று விடு...