இவ்ளோ பெரிய கதைய சின்ன சின்ன ஷாட்ஸ்ல முடிச்சிக்கிட்டு , ஜகன் கடந்த தேர்தல்கள்ள பிரச்சாரம் செய்யும்போது ஷூட் பண்ணி கைவசமிருக்கிற சில க்ளிப்பிங்க்ஸை பொருத்தமான இடங்கள்ள வச்சு தெலுங்கு, தமிழ் காமென்ட்ரிகளை சினிமா பாட்டுகளை பின்னணில ரீ ரிக்கார்டிங்க் பண்ணி எடிட் பண்ணி முடிச்சோம்.
முத்தாய்ப்பா ரொம்ப போராட்டத்துக்கு பிறகு ஒரு சீனை ஷூட் பண்ணி இணைச்சோம்.
ஜெயில் கம்பிக்கு பின்னாடி ஜகன். வீடில்லாத கட்டிட தொழிலாளுகளுக்காக கட்டி முடிச்சிருக்கிற அப்பார்ட்மென்ட்சோட ஃபோன்சாய்க் வடிவத்தை ஆசையா தடவி கொடுத்துக்கிட்டிருக்கார். கேமரா பக்கம் திரும்பி ஒரு வசனத்தை சொல்றார்.
" நம் கைகளை விலங்குகள்
சிறைப்படுத்தியிருக்கட்டும்
சிறையே நம் வீடாகட்டும்.
நம் பார்வை மட்டும்
அதோ அந்த மலை உச்சியில்
உதித்து வரும் உதய சூரியன் மீதே
நிலைத்திருக்கட்டும்"
ரொட்டீனா மாஸ் மைண்ட்ஸை கேட்ச் பண்றாப்ல ஒரு ஸ்லோகனோட படம் முடியுது. அப்பார்ட்மென்டோட திறப்பு விழாவுக்கு ஏற்பாடு பண்ணேன். ஜகனோட ஆதரவாளர்கள் ஒரு வெறியோட கோ ஆப்பரேட் பண்ணாங்க. அதே விழால மேற்படி டிவிடியோட திரைக்கதைய தமிழ் தெலுங்குல புஸ்தவமாவும் ரிலீஸ் பண்ண ரெடி செய்தோம். பாத யாத்திரைல இருந்த ஒய்.எஸ்.ஆரை மாயாவும் நானும் போய் பார்த்தோம். நிலவரத்தை சொல்லி நீங்க வந்தாதான் ஜகனை 90 நாளைக்கு பிறகாவது ரிலீஸ் பண்ணுவாங்கனு சொன்னேன்.
ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிச்ச ஒய்.எஸ்.ஆர் "ஓகே வரேன். வெளியாளு நீ இத்தனை பண்றப்ப .. கட்சி தலைவன் நான் வரனும். ஜகன் என் ஆளு. நான் வரதால அவருக்கு நல்லது நடக்கும்னா நிச்சயமா வரேன்"னாரு.
திறப்பு விழா பிரம்மாண்டமா நடந்தது. இன்டலிஜென்ஸ் ஐ.ஜி யே வந்து முகாமிட்டு தகவல் சேகரிச்சாரு.
அதனோட விளைவு 30 நாள் கழிச்சு தெரிஞ்சது. முதல்வர் அலுவலகத்துல இருந்து ஒரு லெட்டர் வந்தது மானிலமெங்கும் வீடில்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு அரசாங்கமே வீடு கட்டி தரும். நீங்க கட்டியிருக்கிற அப்பார்ட்மென்டோட மதிப்பை அரசாங்கமே திருப்பி தரும்.
உடனே லாயரை பிடிச்சு ஹை கோர்ட்ல ஒரு ரிட் போட்டோம். விசாரணைக்கு வர 3 மாசமாகும்னு லாயர் சொன்னாரு.
பெனிஃபிஷியரீஸுக்கும் லெட்டர் வந்தாப்ல இருக்கு. 30 நாள் கழிச்சு கலெக்சனுக்கு போன பையன் வந்து "சார்! பணம் கட்டாதிங்கனு கவர்ன்மென்ட்ல இருந்து அவங்களுக்கு லெட்டர் வந்திருக்காம்"னான்.
இருக்கிற சகல சோர்ஸையும் அப்பார்ட்மென்ட் மேல போட்டாச்சு. பேங்க்ல 50 லட்ச ரூபா லோனிருக்கு, சிமெண்ட் டீலர், ஐரன் அண்ட் ஸ்டீல்ஸுக்கெல்லாம் பில்ஸ் பாக்கியிருக்கு. தவணையா வராதுனு தெரிஞ்சு போச்சு.
அலறியடிச்சு கடப்பா ஜெயிலுக்கு போய் ஜகனை கேட்டா " கட்டினது நீ, சாவி கொடுத்தது ஒய்.எஸ்.ஆர் கவர்ன்மென்டு தானா முன்வந்து தானே பணம் தரேங்குது வாங்கிக்க. அடுத்து இன்னொரு க்ரூப் ஆஃப் பீப்பிளுக்கு அப்பார்ட்மென்ட் கட்டறேனு அனவுன்ஸ் பண்ணிரு"ன்னாரு
பிரஸ் மீட் வச்சு விசயத்தை போட்டு உடைச்சேன். பணம் வாங்கிக்க சம்மதம். பணம் கைக்கு வந்ததும் கணவனை இழந்த ஏழை பெண்களுக்கு ஷாபிங்க் காம்ப்ளெக்ஸ் கட்டி தவணைல தரப்போறேன்னு அனவுன்ஸ் பண்ணேன். கலெக்டர் கூப்பிட்டனுப்பிச்சாரு.
"த பாருப்பா ! நீ இந்த ஜகன் சகவாசத்தை விட்டுட்டு பேசாம பிழைப்ப பார்த்துக்கற மாதிரி இருந்தா கவர்ன்மென்ட்ல பேசி அந்த அப்பார்ட்மென்டோட வேல்யூல கொஞ்சமாச்சும் முன்பணமா கிடைக்கிறாப்பல பண்றேன். இல்லேன்னா பத்து பைசா கூட வராது"ன்னு சொல்ட்டார்.
வீட்டுக்கு வந்தேன். நான் நடந்த விஷயத்தை சொன்னேன் ஒரு செகண்ட் கூட யோசிக்காத மாயா, "முகேஷ் ! இட் ஈஸ் தி டைம் டு ஃபேஸ் தி ரியல் ஃபேஸ் ஆஃப் தி லைஃப். இத்தனை நாள் கனவுவாழ்க்கைய வாழ்ந்தோம். இப்போத்தான் ரியல் லைஃபுக்கு வர போறோம். உனக்கு வரவேண்டிய காசு வரலேன்னு நீ பெண்டிங்க் பில்ஸை செட்டில் பண்ணலன்னா அரசாங்கமும், போலீசும் க்ரெடிட்டார்ஸை இஞ்செக்ட் பண்ணி உன்னை டார்ச்சர் பண்ண வச்சுருவாங்க. பேசாம மொத்தத்தையும் துடைச்சுருவம். நம்ம பணம் என்னைக்கோ ஒரு நாள் வரும். பேங்க் லோனை தவணைல தான் செலுத்தனும். அது ஒன்னும் பெரிய பிரச்சினை கிடையாது. அதர் கமிட்மென்ட்சையெல்லாம் ஒழிச்சுரு"ன்னாள்
இந்த விஷயத்தை அப்பா கிட்டே சொன்னேன். என்னை பத்தியோ, உன் பாட்டிய பத்தியோ யோசிக்காத. நாங்க வயசான கட்டைங்க. எங்கே வேணம்னா ,எப்படி வேணம்னா வாழ்ந்துருவம். மாயாவோட ஸ்டாண்ட் என்ன அதை தெரிஞ்சுக்க"ன்னாரு. மாயாவோட ஒப்பீனியனை சொன்னேன்.
" இன்னம் என்ன வீடு,கார், ஃப்ளாட், எல்லாத்தயும் சேல்ஸுக்கு வச்சுரு. ஏற்கெனவே கட்டி வாடகைக்கு விட்டிருக்கிற அப்பார்ட்மென்ட் மேல கடன் வாங்கு, ஸ்டுடியோவ கூட ஒழிச்சுரு. ஃபுல் டைம் ஜர்னலிஸ்டாயிரு. இந்த சந்திரபாபு ரொம்பவே ஆட்டம் போடறான். எல்லாமே அடுத்த தேர்தல் வரைக்கும்தானே" ன்னாரு
எல்லாத்தயும் ஒழிக்க ரெண்டு வாரம் கூட ஆகலை. கடன் காரனுங்க "அய்யோ .. உன்னை கேட்டோமா.. ஜகனுக்கு தெரிஞ்சா காறி துப்பிருவாம்பா.. நீயே வச்சுக்க. உன் பணம் வந்த போது கொடு"ன்னாங்க. சமாதானப்படுத்தி கொடுத்துட்டு வந்தேன்.
வீட்டை வாங்கினவரு.. உங்களுக்கு எப்ப வசதியோ அப்ப காலி பண்ணி கொடுத்தா போதும். ஒரு வேளை மனசு மாறி வீடு வேணம்னாலும் சொல்லுங்க ஏற்பாடு பண்ணிரலாம்னாரு. எல்லாருக்கும் ஜகன் மேல ஒரு பயம் இருந்ததை உணர முடிஞ்சது. ஜகன் ஒன்னும் செய்யலன்னாலும் அவரை நம்பியிருக்கிற கூட்டம் அவரை மீறி கூட ஏதாச்சும் செய்துரும்னு பயந்தது நல்லா தெரிஞ்சது. நானா ஒரு வாடகை ஃபிக்ஸ் பண்ணி அட்வான்ஸா ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்து நீங்க எப்ப காலி பண்ண சொன்னா அப்ப காலி பண்ணிர்ரேன்னேன்.
வீடு என்னவோ அதே வீடுதான். எந்த விதமான ஃபர்னிச்சரோ , ஏ.சி, ஃப்ரிட்ஜ், எட்செட் ராவோ கிடையாது. ஒரு கடுப்புல மொத்தத்தையும் வித்து தொலைச்சாச்சு. ஏறக்குறைய வீடு ஒரு ஆசிரமம் மாதிரி ஆயிருச்சு.கைதான 90 நாளைக்கு பிறகு ஜகன் ரிலீஸானாரு. சித்தூர்ல இருந்து பல நூறு வாகனங்கள்ள போய் கடப்பால இருந்து ஊர்வலமா அழைச்சிட்டு வந்தோம். சந்திரபாபுவோட ஆட்சி காலம் முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கு. தேர்தல் ஜுரம் பிடிக்க இன்னும் ஆறு மாசமிருக்கு.
மாசத்துக்கு ரெண்டு நாள் நகர தூதனோட இஷ்யூஸ் ரெடி பண்ணது தவிர எந்த விதமான ஆக்டி விட்டீஸும் கிடையாது. வாரம் ஒருதடவை ஜகனை மீட் பண்ணிக்கிட்டு இருந்தேன். இடையில ஒரு தரம் ஒய்.எஸ்,.ஆரோட பாதயாத்திரைல கலந்து கிட்டு 30 கி.மீ நடந்துட்டு வந்தோம். மக்கள் மத்தில ஆளுங்கட்சிக்கு எதிரான கடுமையான அதிருப்தி அலை இருக்கிறதை உணர முடிஞ்சது.
அந்த மாசம் பாங்க் லோன் தவணை கட்டனும். நகர தூதன் தொடர்பான எந்த கலெக்சனும் பேரலை விளம்பர வசூலும் அதே கதி, வெளியூர்ல இருந்து வர வேண்டிய விற்பனை பாக்கியும் அதே கதி. முதல் முறையா ஒரு திகில் ஏற்பட்டது. தப்பு பண்ணிட்டமானு ஒரு சந்தேகம்.
என்.டி.ஆர் யாரு? அந்தாளு தோத்தா என்ன? செத்தா என்ன ? ஒய்.எஸ்.ஆர் யாரு? அவர் சி.எம் ஆனா என்ன? ஆகாட்டி என்ன? இந்த ஜகன் யாரு? இவர் கொலை கேஸ்ல மாட்டினா எனக்கென்ன? நான் ஏன் இதுல எல்லாம் தலைய கொடுக்கனும்.
இன்னும் ஒரு வாரத்துல பாங்குக்கு இன்ஸ்டால்மென்ட் கட்டலன்னா வட்டி போடுவான். போட்டாலும் பரவாயில்லை அசிங்கமா ரெஜிஸ்டர் போஸ்ட்ல நோட்டீஸ் அனுப்புவான். என்ன பண்றது இப்படியெல்லாம் யோசனை தறி கெட்டு ஓடிக்கிட்டிருந்தது. ஆஷ் ட்ரே நிரம்பி வழியுது. இத்தனை சிகரட்டா பிடிச்சுட்டேனு தோண படக்குனு எந்திரிச்சேன். நேர சமையலறைக்கு போனேன். மாயா சமைச்சுக்கிட்டிருந்தா. பின்னாடி போய் வயித்துல கைவச்சு கட்டி பிடிச்சேன்.
"ஏய் என்ன இது வழக்கமில்லாத வழக்கமா சமையலறைல சரசம்?"
"உனக்கு நான் போதுமான முக்கியத்துவம் தரலியோனு கில்ட்டியா இருக்கு"
"அப்படி ஒன்னிருக்கா என்ன? அப்படியிருந்தா நான் தானே உன்ன கேட்கனும்?"
"இல்லே மாயா .. என்னமோ என்னோட சைக்கலாஜிக்கல் ஃபீலிங்க்ஸுக்காக பிராக்டிக்கல் ப்ராப்ளம்ஸ எல்லாம் இழுத்து விட்டுட்டனோன்னு தோணுது. பாவம் உங்கப்பா உன் கல்யாண செலவுக்குனு ஃபிக்ஸட்ல போட்டு வச்சிருந்த பணமெல்லாம் கூட போயிருச்சு"
" நான் என்ன பண்ணிக்கிட்டிருக்கேன் பார்த்தல்ல. சமைச்சிக்கிட்டிருக்கேன். கையில ஜல்லிகரண்டி இருக்கு பார்த்தேல்ல. இன்னொரு தடவை இந்த பேச்சை எடுத்தே நாக்குல வச்சி இழுத்துருவன். ஓடி ஓடி அலுத்து போச்சுரா . இப்பதான் நிம்மதியா இருக்கேன். எத்தனை லட்சம் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத நிம்மதி இப்போ கிடைச்சிருக்கு. முதல்ல சாப்பிடுன்னு தட்டை எடுத்து வச்சாள் .
"ஏய் அப்பாவும் பாட்டியும் சாப்பிடலையா?"
"அவங்க டிஃபன் சாப்பிடவே பத்து மணியாயிருது. இப்ப மணி பன்னெண்டு. இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் குட்டியா ஒரு தூக்கம் போட்டுட்டு மதியம் ரெண்டு மணிக்கு மேல சாப்பிடுவாங்க. நீ சாப்பிடு. "
"அப்ப நீ ?"
" சாப்பிடறேன்"
மவுனமா சாப்பிட்டோம். "ஏய் எல்லாத்தயும் எடுத்து வச்சிட்டு வந்து சேரு" ன்னேன்.
"ச்சீ என்ன இது பகல்ல.. அப்பா பாட்டியெல்லாம் இருக்கிறப்ப"
"இந்த ஒரு விசயத்துல மட்டும் இடம் ,பொருள்,ஏவல் எல்லாம் பார்க்க முடியாது. உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா சொல்லு ச்சும்மா கட்டிக்கிட்டு படுத்துக்கிடலாம்."
"அய்...யோ கத்தி பேசாதே .. மானம் போகுது"
பெட் ரூமுக்கு வந்தேன். டபுள் காட் இருந்த இடத்துல கோரைப்பாய், ஃப்ரிட்ஜ் இருந்த இடத்துல பானை, ஏசி இருந்த இடத்துல டேபிள் ஃபேன். ஆஷ் ட்ரேவ பார்த்தேன். சிகரட். ஆமா இதை மட்டும் ஏன் விடலை. இனி பீடிதான் புகைக்கனும்னு முடிவு பண்ணேன்.
கொஞ்ச நேரத்துல மாயா வந்தாள் புதுசா பார்க்கிறாப்ல இருக்கு. காதோரம் நரைச்சிருக்கு. தலை உச்சில நரைச்சிருக்கு. கட்டு தளர்ந்திருக்கு. இந்த டிசம்பர் வந்தா 48 வயசாக போவுதே. கதவை ஒருக்களிச்சு சாத்திட்டு கிட்டே வந்து உட்கார்ந்தாள் . முகத்துல ஒரு சின்ன சுளிப்பு.
"மாயா ! என்ன எங்கயாச்சும் வலியா?"
" ஒடம்பெல்லாம் லேசா வலி"
"கெய்சரை போட்டு கொதிக்க கொதிக்க உடம்பு மேல ஊத்து .வலியெல்லாம் பறந்து போயிரும்" - டக்கென்று நாக்கை கடித்து கொண்டேன்.
மற்ற ஃபர்னிச்சர்,ஃபிக்சர்ஸை வித்து தொலைச்சப்பவே ஒரு வெறில கெய்சரையும் கழற்றி வித்தாச்சு.
மாயாவோட முகத்தை பார்த்தேன்.16 வருசத்துக்கு முந்தி பார்த்த அதே முகம் . எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து மொழி வேறயா இருந்தாலும்,படிச்ச படிப்புக்கு தொடர்புள்ள வேலையே இல்லன்னாலும் தண்ணில எண்ணெயா மிதக்காம , பாலோட தண்ணீர் மாதிரி குடும்பத்தோட இரண்டற கலந்து போயி இத்தனை நாள் க்ளாக் வைஸ் லைஃப்ல இருந்த அதே உற்சாகத்தோட அதே பிடிப்போட சின்ன உதட்டுல அதே உறுதியோட இருந்த மாயா முகத்தை பார்த்தா மனசெல்லாம் ஒரு நன்றி உணர்வு.
"இப்போ நாம ஒரு விளையாட்டு விளையாடலாம்."
"அய்யய்யோ அந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் நான் வரலப்பா"
" தத்.. எப்ப பாரு அதே நினைப்பு உனக்கு. மெனோஃபஸ் ஸ்டார்ட் ஆயிருச்சா என்ன?"
"எங்க குடும்பத்துல அதெல்லாம் 55 வயசு வரைக்கும் கூட ரெகுலராயிருக்கும்"
"அப்படியா.. நம்ம ஸ்ரீராம் பாவம் தனிமைல தவிக்கிறான். அவனுக்கு ஒரு கம்பெனி வேணாமா?"
"எனக்கு ஏற்கெனவே ரெண்டு பிள்ளைங்க இருக்காங்களே. ஒருத்தருக்கொருத்தர் கம்பெனியா இருந்துட்டு போறாங்க"
"ஏய் என்ன இது உனக்கேதாச்சும் ஃப்ளாஷ் பேக் எதுனா இருக்கா என்ன?"
"ஹும்..அதுக்குதான் வாத்தியார் பாடி வச்சாரு ஆளும் வளரனும் அறிவு வளரனும் அதுதாண்டா வளர்ச்சின்னு. என் எல்டர் சன் பேர் முகேஷ்"
" கிழிஞ்சது போ.. இன்னைக்கு என் வயசு என்ன தெரியுமா? 38"
"தில்லிகி ராஜைனா தல்லிகி பிட்டே (தில்லிக்கு ராஜான்னாலும் தாய்க்கு பிள்ளைதான்)"
"என்ன நீ பாட்டி மாதிரி பழமொழியெல்லாம் எடுத்து விடறே"
"என்ன பண்றது இளமைல பழமொழியெல்லாம் கிழவாடிங்க பேச்சா தோணுது. இளமை வடியும்போது பட்டுத்தெளிஞ்சவங்க சொல்லா தோணூது"
"யம்மாடி .. நீ ஏன் அவ்ளோ சீரியசா போறே. நாம ஒரு விளையாட்டு விளையாடலாமானு கேட்டேன் அதுக்கு பதில் சொல்லு"
"அய்யய்யோ வேணாம்பா உன் கூட விளையாட்டுன்னு ஆரம்பிச்சா அது வினையா தான் முடியும்"
"என்ன நீ.. ஏதோ சின்ன வயசுல அப்படி இப்படி இருக்கிறதுதான் இப்ப எனக்கென்ன வயசு தெரியுமா? 38.."
"ஆமா. நாடி நரம்பெல்லாம் அப்படியே அடங்கி போய் சாமியாராயிட்டே.. ஹார்ம்லெஸ்"
" நக்கலா? "
"இல்லப்பா உண்மை. சத்தியம்.சச் போல் ரஹா ஹூம். என்ன விளையாட்டு அதை முதல்ல சொல்லு"