Wednesday, April 28, 2010

நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை : 5

நவகிரகங்களின் பிடியிலிருந்து விலக உதவினதா கடந்த பதிவுல  பல அம்சங்களை குறிப்பிட்டேன். இதெல்லாம் தானா அமைஞ்ச விஷயம், தானா நடந்த விஷயம்.  நான் ஜோதிஷத்துல ஓரளவுக்கு தேர்ந்த பிற்பாடு இந்த விஷயங்களையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி டேலி பண்ணேன்.

ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம்.  இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா  ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல்  நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.

அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க

( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல  ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.

முன்னொரு அத்யாயத்துல  ஜாதகம்னு சொல்ற  ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும்  நிமிர்த்தி நிக்க வச்சா அதான்  நம்ப பாடின்னேன்.

இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க.  அதை    12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல  வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.

நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.

ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும்  வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.

எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி  நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும்  வீடு  சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்)  கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது)  கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.

அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.

யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட  அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க.  முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.

ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.

இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.

சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.

வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு  நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த  ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான்.  நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )

சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு.  என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை.  ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.

அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும்  சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம  எதுக்கு சொம்மா  இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.

இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல  ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை.  மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.

ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)

1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி  அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு.  சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட  மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)

தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.

இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே)  சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல  குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர  அட்டாச் மெண்ட் வந்துருச்சு.

ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு  ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் .  அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.

ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்)  ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம  நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.


ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)

நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.