Sunday, April 11, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதை

"நீ சொன்ன மாதிரி சந்தா கட்டலன்னா என்னாகும்னு எல்லாரும் இல்லேன்னாலும் உங்கள்ள சில பேர் கேட்கலாம். ஜகனோட என்ட்ரிக்கு முன்னாடி மாதிரி கண்ணாடி உடைக்கிறது, ஷோ கேஸ் உடைக்கிறதெல்லாம் நடக்காது. நீங்க ஏற்கெனவே பண்ண எகிடு திகுடு வேலைங்களுக்கெல்லாம் அரசாங்கத்தோட அந்தந்த டிப்பார்ட்மென்ட் பக்காவா என் கொய்ரி ஆரம்பிக்கும். நோண்டி நுங்கெடுக்கும். சரி சந்தாவ கட்டிட்டா  நாங்க எப்படி வேணம்னா ஆட்டை போடலாமானு கேட்டா ஊகூம் அந்த பப்பு வேகாது. இந்த அபராதம் உங்களோட கடந்த கால தவறுகளுக்குத்தான்.  நீங்க வாழ்  நாளெல்லாம் பணம் பணம்னு அலைஞ்சு அதை தவிர வேற எதையும் நினைச்சு கூட பார்க்க முடியாத ஸ்டேஜுக்கு வந்துட்டிங்க. இல்லேன்னா நகர தூதனுக்கு சந்தா கட்ட இப்படி நான் ப்ளாக் மெயில் பண்ண வேண்டிய அவசியமே இல்லை"


நான் பேசி முடிச்சதும் ஜகனோட பிரிய சிஷ்யன் பி.கே வை கூப்டு பேரை பார்த்து ஸ்லிப்ஸ் கொடுக்கச்சொல்லிட்டு ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன். எல்லாருக்கும்  லஞ்ச் அரேஞ்ச் பண்ணியிருந்தோம். ஜகனும் வந்து கலந்துக்கிட்டாரு. அடுத்து ஒரு வாரம் பத்து நாள்ள டிடியும்,செக்கும்,எம்.ஓவுமா வந்து குவிய முதல்ல ஜகனுக்கு 49 % ஷேர் குடுக்கிறாப்ல பேப்பர்ஸ் ரெடிபண்ணோம். அடுத்து வந்த சந்தா தொகையை எல்லாம்  கூட்டி பார்த்ததுல அம்பது லட்ச ரூபாய்க்கு தேறுச்சு.

அதுல பாதிய  நகராட்சி தேர்தலுக்கான பட்ஜெட்டா ஒதுக்கியாச்சு. அன்னைலருந்து வார்ட் வைஸ் பார்ட்டி ஒர்க்கர்ஸ் மீட்டிங்க வச்சுக்கிட்டு வார்ட் வைஸ்  எத்தனை ஆஸ்பிரன்ட்ஸ் இருக்காங்க?, இதர கட்சில கன்டெஸ்ட் பண்ண கூடிய கேண்டிடெட்ஸ் எத்தனை பேர் இருக்காங்க? வார்டுல   என்னென்ன பிரச்சினை இருக்கு? அதுல குறைஞ்ச பணத்துலயே உடனடியா தீர்ந்துர கூடிய பிரச்சினைகள் எத்தனை ? இப்படி ஒரு டீட்டெயில்ட் லிஸ்ட் தயார் பண்ணோம்.

ஜகன் தோத்து போனாலும் ஒய்.எஸ்.ஆர் ஜகனை தொகுதி பொறுப்பாளரா போட்டு வச்சாரு. மாவட்ட நிர்வாகத்துக்கு ஓரல் இன்ஸ்ட்ரக்ஷன் போல. வார்ட் வைஸ் இருந்த சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக கலெக்டர், ஆர்.டி.ஓ மாதிரி ஆட்களை காண்டாக்ட் பண்ணப்ப சூப்பர் ரெஸ்பான்ஸ். சில வேலைகளுக்கு பட்ஜெட் வரணும்னா 6 மாசமாகும்னாங்க. அந்த மாதிரி சந்தர்ப்பத்துல கைக்காசு செலவழிச்சு தீர்த்து வச்சோம்.

ஆஸ்பிரன்ட்ஸை கூப்டு  தீர்கமா பேசி கேண்டிடெட்ஸ் லிஸ்ட் ப்ரிப்பேர் பண்ணோம். வார்ட் வைஸ் 24 பேர் கொண்ட கமிட்டி போட்டோம்.கமிட்டி உறுப்பினர்களுக்கு க்ரூப் கால் வசதியோட  செல் ஃபோன் ஏற்பாடு செய்தோம். அந்த 24 பேரும் வார்ட் மக்கள்ள தலா 100 பேரோட பர்சனலா டச்ல இருக்கிறாப்ல செய்தோம்.அந்த 24 பேருக்கும் ரேஷன் ஷாப் டீலர்ஷிப்,அங்கன் வாடில வேலை மாதிரி ப்ராமிஸஸ் கொடுத்தோம்.

இது ஒருபக்கம்னா நகராட்சி எல்லைக்குள்ள என்னென்ன பிரச்சினை இருக்கு ,அதுக்கு சொல்யூஷன் என்ன ? அதுக்கு அரசாங்க தரப்புல இது வரை என்ன செய்தாங்க. அந்த முயற்சி எந்த லெவல்ல இருக்கு? மனசு வச்சா எவ்ள காலத்துல அதையெல்லாம் கம்ப்ளீட் பண்ண முடியும் ? இப்படி நோட்ஸ் தயாரிச்சோம். நகராட்சி தேர்தலுக்குனு ஸ்பெஷலா ஒரு எலக்சன் மேனிஃபெஸ்டோ தயாரிச்சோம்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு  தேவையான மெட்டீரியல் மொத்தத்தையும் டிசைன் பண்ணிக்கிட்டோம். தேர்தல் தேதி வந்ததும்  பிரிண்டிங் போயிர வேண்டியதுதான்.இதற்கிடைல ஸ்ரீராம் ( என் பையனுங்கண்ணா) ஒரு ஐடியா கொடுத்தான்.

ஜகன் & எனக்காக தலா ஒரு ப்ளாக் வச்சா என்ன ? ப்ளாக் வச்சதோட எங்க 2 பேருக்கும் தலா  ஒரு மெயில் ஐடி க்ரியேட் பண்ணி  ஓரளவு மெயில் செக்கறது, சாட்  பண்றது மாதிரி வித்தைகளை கத்துக்கொடுத்து வாரத்துல ஒரு நாள் ( ஞாயிறு) காலைல  1 மணி நேரம், மாலைல ஒரு மணி நேரம் ஆன்லைன்ல இருந்து கிட்டு மக்களோட தொடர்புல இருக்கிறாப்ல செய்தான்.

மொத்தம் 36 வார்டு.வார்டுக்கு ஒரு ஆஃபீஸ். அதுல ஒரு கம்ப்யூட்டர். நெட் கனெக்சன். வார்ட் கமிட்டில இருக்கிறவங்களோட பசங்கள்ள யாருக்கு ஆர்வமிருக்கோ பார்த்து ரெண்டு பேருக்கு இதே அளவுல ட்ரெயினிங் கொடுத்தான் ஸ்ரீராம்.

ஜகன் தனக்காக கொலை,அடி தடினு போனதால  ஒதுக்கி வச்சிருந்த பார்ட்டிங்களை பத்தி ஜகன் கிட்டே பேசி கெஞ்சி கூத்தாடி கன்வின்ஸ் பண்ணி அவிகளயெல்லாம் கூப்டு "த பாருப்பா நடந்தது நடந்து போச்சு. இனி எதுவும் ரிப்பீட் ஆக கூடாது. உங்களை அடி வாங்கிக்கனு சொல்லமாட்டேன். ஆனால் முதல் அடி நம்முதா இருக்க கூடாது. உங்களை மறுபடி உள்ளாற கொண்டு வந்தது எக்ஸ் பார்ட்டிங்க வன்முறைல இறங்க யோசிக்கனுங்கறதுக்குதான். நீங்க வன்முறைல இறங்கறதுக்காக இல்லே."ன்னு  ஸ்ட்ரிக்டா சொன்னேன்.

தொகுதில ஜெயிச்சிருந்தாலும் , ஸ்டேட் லெவல்ல தோத்து போனதால பாவம் தெ.தேசம் அரண்டு போய் கிடந்தது. கேண்டிடெட்ஸ் கிடைக்கறதே குதிரை கொம்பா போயிருச்சு அவிகளுக்கு. தொகுதிய பைக்குள்ள ,கைக்குள்ள வச்சிருந்த நாயுடு குடும்பம் ஆடிபோயிருந்தாலும், ஒரு காலத்துல அவிக சர்க்கரை ஆலைல போலி சர்ட்டிஃபிகேட் கொடுத்து இஞ்சினீரா இருந்து சஸ்பெண்ட் ஆகி எப்படியோ கோடிகள் பார்த்துட்ட கேசவன்ங்கற பார்ட்டி மட்டும் நான் ஜெயிக்க வைக்கிறேன் பார்ட்டியனு களத்துல குதிச்சான்.பேண்ட் போட்ட காட்டெருமை மாதிரி பர்சனாலிட்டி. புலிய பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா வார்ட் வைஸ்  மீட்டிங் போட ஆரம்பிச்சான்.

அதுக்குள்ள தேர்தலுக்கான நோட்டிஃபிகேஷன் வந்தது. ஹைகமாண்ட்ல இருந்து  என் பேருக்கு பி ஃபார்ம் வந்தது. நல்லதொரு முகூர்த்தத்துல நாமினேஷனும் போட்டாச்சு. தெ.தேசம் சார்புல ஜகன் மேல கொலைப்பழி சுமத்துன பொம்பளைய கேண்டிடெட்டா போட்டாய்ங்க.

அது பாவம் முதல் பார்வைலயே " இந்த பொம்பள நல்ல மாதிரி பொம்பளயாவே தெரியலியேனு தாய்குலம் பேசிக்கிற கெட் அப்ல ஃபீல்டுக்கு வந்தது. ஓப்பன் டாப்  ஜீப்ல அந்த பொம்பளைய கொண்டுவந்து பேசவச்சுட்டாலே ஜெயிச்சுரலாம்னு கேசவன் நினைச்சுட்டிருந்தான். தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கிறப்ப பணத்தை இறைக்க ஆரம்பிச்சான். வார்டுலருந்து போனவனெல்லாம் ஆயிரம் ரூபாயாவது லவட்டிக்கிட்டுதான் வந்தாய்ங்க.

நான் ஜகனுக்கு சொல்லி எங்காளுங்கள்ள நம்பிக்கையான ஆட்களை செலக்ட் பண்ணீ  கேசவன் கிட்டே போகச் சொன்னேன். காசு கொடுத்தா வாங்கிக்க சொன்னேன்.தேர்தலுக்கு முந்தின நாள் ஷெட்டுக்கு வந்துருங்கனு இன்ஸ்ட் ரக்சன்.
மதில் மேல் பூனை கேசுங்க, கேசவனோட சாதிக்காரவுங்களுக்கு பத்து நாள் முன்னாடியிருந்தே பணம் பட்டுவாடா ஆக ஆரம்பிச்சது.

கள்ள ஓட்டுக்கு வாய்ப்பிருக்கிற இடத்துல எல்லாம் ரிட்டர்னிங்க் ஆஃபீசர்ஸை கவர் பண்ணிக்கிட்டு போட்டு வைக்கிறாப்ல ப்ளான். கேசவன் பெங்களூர்ல இருக்கிற தன் தொழிற்சாலை ஆட்களை எல்லாம் வரவச்சு கல்யாண மண்டபங்கள்ள தங்க வச்சிருந்தான். ரகசியங்கற பேர்ல பகிரங்கமா சுத்திக்கிட்டு கிடந்தாய்ங்க. தேர்தலுக்கு முதல் நாள் எல்லாத்தயும் புடிச்சு உள்ள  போட்டாச்சு

தேர்தல் அன்னைக்குதான் கேசவனுக்கு உண்மை நிலவரம் புரிஞ்சது. ஏஜெண்டா உட்கார வைக்கவே ஆளில்லாத நிலை.  பயங்கர கடுப்பாயிட்டான்.  பைத்தியக்காரன் மாதிரி பிஹேவ் பண்ண ஆரம்பிச்சான்.

அவன் கண்ணுக்கு யாரை பார்த்தாலும் ரவுடி மாதிரி தோணவே அரெஸ்ட் பண்ண சொல்லி போலீஸை லந்து பண்ண ஆரம்பிச்சான். எவனை பார்த்தாலும் கள்ள ஓட்டு போட வந்தவனா தெரிஞ்சது.  எட்டாம் நெம்பர் வார்டுல கேசவன் பூத்துக்குள்ள பூந்து அலப்பறை பண்றதா தகவல் வந்தது. இதர பூத்ஸ்ல இருக்கிற ஆட்களை டிஸ்டர்ப் பண்ணாம ரிசர்வ்ல வச்சிருந்த ஜகனோட முன்னாள் ஃபாலோவர்ஸ கூட்டுக்கிட்டு நானும், ஜகனும் போனோம்.

கேசவன் அதுக்குள்ள நம்ம ஏஜெண்ட்ஸை எல்லாம் அடிச்சு , ஓட்டிங்க் மிஷினையெல்லாம் கீழே தள்ளீ கந்தர் கோலம் பண்ண வச்சிருந்தான். ஜகன் உள்ள நுழைஞ்சதுமே மீடியாவும் பரபரப்பாயிருச்சு. ஜகன் பெரிசா  ஒன்னுமே பண்ணலை .சொல்லலை. கேசவன் முதுகுல கைய வச்சி வெளிய தள்ளிக்கிட்டு வந்தாரு. மீடியா  காமிராக்கள் விழிச்சிருக்க " ப்தூ.. நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷன். இன்டஸ்ட் ரியலிஸ்ட். போய்யா டாக்டரை கூப்டு பிபிக்கு ஊசி போட்டுக்கிட்டு தூங்கு. நீ ஆடறதால் உன் கட்சி ஜெயிக்க போறதுல்ல . மதியமே தோத்து போச்சு "ன்னாரு.

உண்மைல கேசவனோட சோஷியல் ஸ்டேட்டஸ், பணம்,செல்வாக்கோட ஒப்பிட்டால் ஜகன் ஒன்னுமே இல்லை. இந்த நிலைமல இந்த  சீன் கேசவனை ரொம்பவே பாதிச்சுருச்சு. ஆனால் அவன் ஜகனை கொல்லவே திட்டம் போட்றுவான்னு அந்த நிமிசம் யாரும் கற்பனை கூட பண்ணலை.