Friday, April 30, 2010

உனக்கு 22 எனக்கு 32 தொடர்

அரசு மருத்துவ மனை சிப்பந்தி ஸ்ட் ரெச்சரோட உள்ள வர ஜகனை தூக்கி குப்புற  ஸ்ட் ரெச்சர்ல போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வச்சு சைரன்  அலற அலற வாழ்க்கைலயே மறக்க முடியாத பயணம்..  ஜகனோட மனைவிக்கு தகவல் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆஸ்பத்திருக்கு கூட்டி வரும்படி மாயாவுக்கு தகவல் கொடுத்தேன்.

அந்த 10 நிமிஷ பயணத்துலயே எஸ்.பி க்கு ஃபோன் மூலமா சில தகவல்கள் யோசனைகள் எல்லாம் சொல்லி அலர்ட் பண்ணேன். ஃபாரஸ்ட் ஏரியா, செக் போஸ்டு, பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் , ஊருக்கு வெளிய இருக்கிற சந்தேகாஸ்பதமான இடங்கள், சென்னகேசவனுக்கு சொந்தமான இடங்க, அவனுக்கு தேவைப்பட்டவங்களோட இடங்க எல்லாத்து மேலயும் ஒரு கண்ணை போட்டு வைக்கச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன். போலீசோட கோ ஆர்டினேட் பண்ணும்படி  ஸ்ரீராமுக்கு மெசேஜ் கொடுத்தேன்.  உன் பவிசென்ன, உன் டீமோட யோக்யதை என்னனு காட்ட இது ஒரு சான்ஸுன்னு உசுப்பேத்தினேன். ஜகனோட முக்கிய ஆதரவாளர்கள், அவர் ஒதுக்கி வச்சிருந்த பழைய நண்பர்கள் எல்லாருக்கும் மறு நாள் காலை 10மணிக்கு மீட் ஆகனும்னு மெசேஜ் கொடுத்தேன்.

ஆம்புலென்ஸ் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சி கேஷுவால்டியை எட்டி பிடிக்க அங்கே ஆஸ்பத்திரி  சூப்பிரனன்டே  காத்திருக்க ஜகன் அணிஞ்சிருந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட்டை அப்படியே கட் பண்ணி எடுத்தாங்க.இடுப்பு பகுதில நடு முதுகுல புல்லெட் துளைச்சிருக்க இன்னம் கூட ரத்தம் தயங்கி தயங்கி கசிஞ்சிக்கிட்டிருந்தது. உடனே சூப்பிரனன்ட் காயத்தை சுத்தப்படுத்தி ஸ்டெரிலைஸ் பண்ணி ஒரு இஞ்செக்சன் கொடுத்தாரு. இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போங்கன்னாரு. நான் தயக்கமா" சார்.. இங்கன முடியுமா ? இல்லே சி.எம்.சி போயிரலாமா"ன்னேன்.

 " கம் லெட்டஸ் மூவ்னிட்டு ஸ்ட் ரெச்சரை  தொடர்ந்து நடந்து கிட்டே "முகேஷ்! டோன்ட் வொர்ரி. குண்டு மேலோட்டமாதான் பாஞ்சிருக்கு.அதை முதல்ல நீக்கிட்டு ட்ரஸ்ஸிங்க் பண்ணிர்ரன்.ப்ளட் வேற ஏத்தனும். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை.ஆனால் புல்லட் பாஞ்சிருக்கிறது தண்டுவடத்துல இதனோட விளைவு எப்படியிருக்கும்னு இப்ப சொல்ல முடியாது" ன்னிட்டு மாடில இருந்த இன்டென்சிவ் கேருக்குள்ள நுழைஞ்சிட்டார். வெளிய சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிச்சது.

கூடவே வந்திருந்த ஜூனியர் டாக்டர் ஒருத்தர் வந்து சார் உங்களுக்கு பி.பி செக் பண்ணிரலாம் வாங்கனு கூப்பிட இறங்கி வந்தேன்.  புஸ் புஸ்சுனு அடிச்சி பார்த்து எக்கச்சக்கமா எகிறியிருக்குன்னிட்டு ஒரு ஊசிய போட்டார். தன்னோட ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபி கொடுத்தார் .அதை குடிக்கவும் சிகரட் தாகமெடுக்க வெளிய வந்தேன்.
ஒரே இரைச்சல். கேஷுவாலிட்டிய ஏறக்கிறைய முற்றுக்கையிட்டிருந்தது சனம். அவிகளை கண்ட்ரோல் பண்ண முடியாம  போலீஸ் திணறிக்கிட்டிருந்தாங்க. எஸ்.பி சனத்தை கலைஞ்சு போக சொல்லி  மெகாஃபோன்ல  அப்பீல் பண்ணிட்டிருந்தாரு

என்னை பார்த்ததுமே எஸ்.பி என் பக்கம் வந்தாரு. நானும் அவரை நோக்கி போனேன். மெகா ஃபோனை என் கையில கொடுத்து ப்ளீஸ் ..இவிகளை கலைஞ்சு போக சொல்லுங்க. இல்லாட்டி லத்தி சார்ஜ் பண்ண வேண்டி வரும்.  ஜகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு முன்னாடியே பயங்கர கல்லெறி கடைகளையெல்லாம் அடிச்சு நாசம் பண்ணியிருக்காங்கன்னாரு"

நான் மெகாஃபோனை கையில் வாங்கி மக்களையும்,ஜகன் ஆதரவாளர்களையும் உருக்கமா ரிக்வெஸ்ட் பண்ணேன். தயக்கமா கலைஞ்சி போக ஆரம்பிச்சாங்க .

ஜகனோட பிரதான சிஷ்யனுங்க பி.கேவும் , விஷ்ணு ரெட்டியும் என்னையே பார்த்துக்கிட்டிருக்க, அவனுக ஊத்தி குளிப்பாட்டற பொறுக்கி கும்பல் எட்ட நின்னு எங்களையே பார்த்துக்கிட்டிருக்க வாங்கப்பானு ஆஸ்பத்திரி  பின்னாடி பக்கம் கூட்டிப்போனேன். சிகரட்டை எடுத்து நீட்ட பத்தவச்சிக்கிட்டு பி.கே " நினைச்சதை செய்துட்டானுவ இனி ரத்தத்துக்கு ரத்தம் தான். ஒத்தைக்கு ரெட்டையா போட்டு தள்ளனும்"னு கொதிக்க
விஷ்ணுரெட்டி "இன்னைக்கு ராத்திரி முகூர்த்தம் வச்சிருக்கேன்"னான். எனக்கு பயங்கரகடுப்பாயிருச்சு.

"ஏண்டா வெத்து தடியனுங்களா ! உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா? ஜகனுக்கு முதுகுல குண்டு பாய்ஞ்சு  ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரதுக்குள்ள என்னடா கல்லெறி, தீவைப்பு. கல்லெறிஞ்சுட்டா, தீ வைச்சுட்டா  ஜகன் உடம்புக்குள்ள போன குண்டு வெளியவந்துருமா செருப்பு பிஞ்சிடும்.  துப்பாக்கியால சுட்டவனுங்க எல்லாருமே வெளியூர் ஆளுதான். அவனுங்க ஒன்னு இங்கனயே தங்கனும்.இல்லாட்டி தப்பி போக முயற்சி பண்ணனும். ஸ்ரீராமும் அவனோட செட்டும் , போலீசோட  ஃபீல்டுல இறங்கியாச்சு. போங்க , உங்க ஆள் படை அம்போட போலீஸுக்கு கோ ஆர்டினேட் பண்ணுங்க. ஒன்னு ஆட்களையே பிடிக்கனும். இல்லே அந்த ஆட்கள் எங்கே தங்கியிருந்தாங்க, யார் தங்க வச்சாங்க, எங்கருந்து வந்தாங்க, எங்கே போனாங்க இந்த விவரமெல்லாம் தேவை. போங்க  டே குடிங்கடா.. பரவால்லை. குடிக்கிறதையே வேலையா வச்சிக்கிட்டா உங்களால ஒரு மயிரும் பிடுங்க முடியாது..போங்கடா போங்க"ன்னு துரத்தி விட்டுட்டேன்.

செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன் .சூப்பிரணன்டு. "சார் நீங்க உடனே வாங்க. ஜகன் சம்பந்தா சம்பந்த மில்லாம என்னென்னவோ உளர்ராரு"