Friday, April 30, 2010

ராம நாம மகிமை

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி  மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின்  அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக்  கொண்டாலும்  வெறுமனே  ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து  ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத  இரைச்சல்,  புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.

( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா  பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்)  மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று  அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய  உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை  பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம்.  ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு.  இந்த ப்ராசஸ்ல  ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு  நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ  நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும்,  நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க.  ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

 யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும்  யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட  யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு  அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம  உண்மைன்னு எதை  நினைக்கிறோமோ அது உண்மை  கிடையாது.  கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி  நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம   ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில  சேனல்கள் தெரியறாப்ல  உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு  வீட்ல காலைல சன் டிவிய  வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

 கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற  நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம்.  அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்"  னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல  இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு  நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில்  பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  மேல் நோக்கி  நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் -  விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.

 விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.  அன்றைய உன்னத நிலையில் இன்று  என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?

பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.