Monday, April 5, 2010

அசத்த போவது யாரு..? - ஒரு விமரிசனம்

தமிழ் உச்சரிப்பில் ஒரு புதிய ஸ்டைலை (இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய திரைப்படம்)அறிமுகப்படுத்தி இம்சை பண்ணும் சன் டிவி ( பாருங்க தமிழ்ல பேர் வச்சா மட்டும் சலுகை கொடுப்பாங்க இவிக மட்டும் சன், டாடினு பேர் வைப்பாங்க. கலைஞர் இதன் மூலம் தமிழ் பெருங்குடி மக்களுக்கு கூறும் செய்தி என்னன்னா என் சின்னம் சன். எனக்கு முக்கியம்  என் சன்(ஸ்)( மகன்கள்).

சரி நம்மை இந்தி படிக்காதிங்கனு சொல்லிட்டு ஹிந்தி தெரிஞ்ச பேரனை தில்லி அனுப்பின சரித்திரத்தை சாரி தரித்திரத்தை எத்தனை தடவை தான் சொல்லறது. அதைவிடுங்க. இந்த அசத்த போவது............யாரு நிகழ்ச்சிய பார்ப்போம்.

இதுல முதற்கண் வெளிப்படையா தெரியறது தற்புகழ்ச்சிதான் ( செல்ஃப் டப்பா) சிட்டி பாபு ,மதன்  முகங்களில்  தெரியும் விஸ்கி  களை . இதை  மதன் முகத்திலாவது ஜீரணிக்க முடிகிறது. சிட்டிபாபு முகத்தில் அப்பட்டம்.

அடுத்து வெறுப்பேற்றுவது தொகுப்பாளரின் ஸ்டீரியோ தனமான சிரிப்பும் (இளிப்புனு கூட சொல்லலாம்) பாடி லேங்குவேஜும்.  இதில் செத்துப்போன பிரபலங்களை , ஊனமுற்றவர்களை, கிராமத்தவர்களை,டாக்டர்களை, டீச்சர்களை,மாணவர்களை அழகற்றவர்களை,மனைவியரை  நக்கலடித்து கேவலப்படுத்தி அசத்தும்  நபர்களே அதிகம். இதில் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களும் யதேஷ்டம்

அசத்த வருபவர்கள் அனைவரையுமே தூள் பண்ணிட்டிங்க அசத்திட்டிங்க என்று புகழ்வது ரொம்பவே செயற்கையாக இருக்கிறது. அதிலும் வந்த (வந்து மாட்டிய ) அசத்தியவர்களை(?) சிட்டிபாபுவும், மதனும் சகட்டுமேனிக்கு புகழ்ந்து விட்டு  விருந்தினரை " இவங்க ப்ரோக்ராமை பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்கனு சாஸ்திரத்துக்கு கேட்கிறது " மவனே அசத்திட்டாங்கனு சொல்லு இல்லே டின்னுதான்"ங்கற மாதிரி இருக்கு.

ஒரே செட், ஒரே முகங்கள்னு கடுப்பேத்தறத விட புதுசா யோசிக்கலாமே. இதே நிகழ்ச்சி சன் டிவி தவிர வேறு ஏதாவது அரசியல்,பொருளாதார பின்னணி இல்லாத டிவில ஆரம்பிச்சிருந்தா எப்பவோ ஊத்தி மூடியிருப்பாங்க.சன் டிவிலங்கறதால இன்னமும் இழுத்துக்கிட்டு கிடக்குனு நினைக்கிறேன்.

பி.கு: வடிவேலு, விவேக் காமெடிகளை மாற்றி மாற்றி போடுவதால் ஒரு விஷயம் மட்டும் ரொம்பவே குழப்புது. இவரை பார்த்து அவர் காப்பியடிச்சாரா? அவரை பார்த்து இவர் காப்பியடிச்சாரா?