இந்த தலைப்பை கமலே விரும்ப மாட்டார் என்று தான் நினைக்கிறேன்.ஆனால் என்ன செய்ய நானேதோ சுவாரஸ்யமா தெலுங்கு கத்துக்கொடுத்தமாதிரியும் இருக்கும் மேற்படி பதிவை அடிக்கும் போதே தலைவரோட வசனத்தை அனுபவிச்ச மாதிரியும் இருக்கும்னு சர்தார் பாப்பாராயுடு படத்துலருந்து ஒரு காட்சியை வசனத்தோட பதிவா போட்டேன். அந்த ஒரே ஒரு காட்சிய வச்சிக்கிட்டு ஞான திருஷ்டியோட சிலர் அட இது கைதியின் டைரின்னிட்டாங்க. கைதியின் டைரிய சனம் இன்னும் ஞா வச்சிருக்க காரணம் அந்த க்ளைமேக்ஸ்தான். (சிவாஜி சிலைக்கு பதில் கமல் உட்கார்ந்துக்கிட்டிருந்து திறப்பு விழா பண்ற வில்லனை போட்டுர்ராரு) மத்தபடி எதுவுமே ஞா வரமாட்டேங்குது. எல்லாம் ப்ளர்ரா இருக்கு. (ஏபிசி நீ வாசி பாட்டு / இரட்டை வேட கமல்/ பெரிய கமலோட மனைவி ராதாவ ரேப்பிர்ராங்க /அதுக்கு இவர் முன் கூட்டி பாவ மன்னிப்பு வாங்கிக்கிட்டு போட்டு தள்றாரு/ இதான் ஞா வருது.
சர்தார் பாப்பாராயுடுல பெரிய என்.டி.ஆர் வன்முறைய நம்பற சுதந்திர போராட்ட குழுவோட லீடர். சந்தர்ப்ப வசமா சாரதாவை லாக்கப் ரேப்ல இருந்து காப்பாத்தி அவளோட ஆசிரமத்துக்கு வரார். குண்டு காயத்துக்கு சிகிச்சை நடக்குது. இவிக ரெண்டு பேரும் ஆத்திரம் அவசரத்துக்கு ஒதுங்க சாரதா கர்பமாயிர்ராங்க.பெரிய என்.டி.ஆர் சுதந்திர போராட்டத்துல கைதாகி ஜெயில்ல இருக்கிறப்ப ஒரு கொலைப்பழிக்கு இலக்காகி ஆயுள் தண்டனை அனுபவிச்சுட்டு வெளிய வர்ராரு.
தன்னை கொலைகாரனா முத்திரை இட்ட வில்லன்களை பழிவாங்க முற்பட ஆசிரமத்து பாபா நான் உண்மைய சனத்துக்கு சொல்றேனு புறப்பட்டு கொலையாயிர்ரார். ஒரு பக்கம் எஸ். ஐ யா இருக்கிற மகன் மறுபக்கம் வில்லனோட ஆட்கள் வேட்டையாட வில்லன்ஸை பழிவாங்கிட்டு செத்து போயிர்ரார்.
இந்த ரெண்டு கதைக்கும் நடுவுல டபுள் ஆக்சன் சமாசாரம் . அப்பன் வான்டட் பர்சன். புள்ள போலீஸுங்கறதை தவிர என்ன ஒத்துமையிருக்கோ புரியல.
ஆனால் இந்தியனுக்கும், சர்தார் பாப்பாராயுடுவுக்கும் வேணம்னா நிறைய ஒத்துமை இருக்கு. டபுள் ஆக்சன், அப்பன் வான்டட் பர்சன், பையன் போலீஸ்.அப்பன் ஃப்ரீடம் ஃபைட்டர் (ரெண்டுத்தலயும் மிலிட்டன்ட்ஸேதான்) சர்தார் பாப்பாராயுடு 1980 ல ரிலீஸ் . அதைதான் இந்தியன்ல உருவியிருக்க முடியுமே தவிர .. இந்தியனை பார்த்து சர்தார் பாப்பாராயுடு எடுத்திருக்க முடியாது.
யாரோ ஒரு நண்பர் ஓவர் ஆக்சன் படம்னு புறந்தள்ளி, இந்தியனை ஆகா ஓகோன்னிட்டாரு. இந்தியன்ல கமலோட மேக்கப் பொறுப்பை ஏத்துக்கிட்டவர் ஃபாரினர். இந்த மேக்கப் சமாசாரத்தை பத்தி கவர் ஸ்டோரியே வந்ததுனு நினைக்கிறேன். இந்தியன்ல உபயோகிக்கப்பட்ட தொழில் நுட்பம் செல்ஃபோன் ரேஞ்சுன்னா பாப்பாராயுடுல தீப்பெட்டிக்கு நூல் கட்டி பேசற டெக்னிக். இந்தியன் கதை அப்படி இல்லே. ஆகா ஓகோனு டகுலு விட்டுக்கிட்டு கோடிக்கணக்கான ரூபாய்களை கொட்டி அழுது கார்ப்பரேட் லெவல்ல எடுத்தாங்க
நான் கதைய பத்தி மட்டும் தான் பேசினேன். அனாவசியத்துக்கு கமலோட நடிப்பு, சங்கரோட தொழில் நுட்பம் பத்தியெல்லாம் இழுத்து விட்டுட்டாய்ங்க.
கமல் நித்யானந்தா மாதிரி பரிசோதனையாளர். ரொம்பவே மெனக்கெடுவார். மூணாவது நாய் மாதிரி இவரே கூட ஏறியடிக்க ஆரம்பிச்சுருவார். என்.டி.ஆர் கேரக்டரே வேற படம் முடிஞ்சு ,ப்ரிவ்யூ ப்ரொஜெக்சன் முடிஞ்சி வெளிய வர்ர வரைக்கும் கருத்து தெரிவிக்கிற பிசினஸ் கூட கிடையாது. " நீ சம்பளம் கொடுக்கறே நான் நடிக்கிறேன். நீ முதலாளி நான் தொழிலாளி ரேஞ்சுதான். ப்ரிவ்யூ பார்த்துட்டு வெளிய வருவாராம். டைரக்டர் தலைவர் பின்னாடியே ஓடி வந்து "அண்ண காரு ! சினிமா எலா வச்சிந்தி"னு கேட்பாராம். அப்பத்தான் தலைவர் வாய திறப்பார்.
தாசரி வித்யாசமான டைரக்டர்தான். ஆனால் சார் போஸ்ட் கேரக்டருக்கு கூட அவர்தான் டயலாக் கத்துக்கொடுப்பார் போல.(அதுவும் ஹீரோவுக்கு கத்துக்கொடுத்த வேவ் லெங்க்த்லயே இருக்கும்)சர்தார் பாப்பாராயுடுங்கற இந்த படத்துல என்.டி.ஆரோட பேசிக்கல் பாடி நாலட்ஜ் தவிர, மிக சில டயலாக் டெலிவரி மோடை (இதெல்லாம் பை பர்த் வந்தது மாறாது) தவிர மத்ததெல்லாம் தாசரியோட முத்திரைதான்.
இந்தியனெல்லாம் சிசேரியன் மாதிரி மண்டைல ஆயுதம் பட்டிருந்தா பாப்பா காலி. ஆனால் பாப்பாராயுடு நார்மல் டெலிவரி. தாயும் சேயும் நலம்.
ஆள விடுங்கப்பு.