Wednesday, April 14, 2010

பாலிய‌ல் வேட்கை

இந்த 43 வயதுக்கே வறுமைக்கு பயந்து,லட்சியத்துக்கு லாங் லீவ் போட்டு விட்டு, ஒரு வெகுஜன நாளிதழில் காலணா ரிப்போர்ட்டனாக வயிற்றைக் கழுவும் நிலைக்கு வந்துவிட்டமைக்கு மனம்  நொந்தபடி முதல் சிகரட்டை பற்ற வைத்துக்கொண்ட அதே கணம்  என்னை சந்திக்க யாரோ ஒரு  இளம்பெண் வந்திருப்பதாய் என் மனைவி சொல்ல ஹால்ல உட்காரவை இதோ வந்துட்டன் என்று சிகரட்டை அவசர அவசரமாக இழுக்க ஆரம்பித்தேன்.

மேலுக்கு ஒரு டவலை எடுத்து போர்த்திக்கொண்டு ஹாலுக்கு வர அங்கிருந்தவள் ஏறக்குறைய ஸ்ரேயா போலிருந்தாள். நான் வணக்கம் போடலாமா ஹாய் போடலாமா யோசித்து வணக்கம் சொல்ல அவள்  தன் விஸிட்டிங்க் கார்டை எடுத்து கொடுத்தாள்.


மிஸ்.ப்ரஸ்னா,
த‌லைவி,
பாலிய‌ல் தொழிலாள‌ர்க‌ள் ச‌ங்க‌ம்.( த. நா)

என்ன‌ங்க‌டா இது உண‌ர்ச்சி வ‌ச‌ப்ப‌ட்டு என் வ‌லைப்பூ எதிலாவ‌து பாலிய‌ல் தொழிலாள‌ர்களை அவ‌ம‌தித்து எதையேனும் எழுதி தொலைத்துவிட்டேனா? இல்லையே பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கேட்டுத்தானே எழுதினோம்னு பூஸ்ட் அப் பண்ணிக்கிட்டேன்.


உண்மையில்  காவலர்களை விட, நீதிப‌திக‌ளை விட‌, ஸ்மாமிஜிக்களை விட  இவ‌ர்கள்தான் குற்றங்களை குறைப்பதாக எனக்கு ஒரு கருத்து உண்டு.(உள்ளடக்கி வைக்கப்பட்ட‌ பாலிய‌ல் வேட்கையே வ‌ன்முறையாக‌ வெளிப்ப‌டுகிற‌து). இந்நிலையில் நான் ஏன் இவ‌ர்க‌ளை வ‌ம்புக்கிழுக்க‌ப் போகிறேன். இந்த எண்ணம் எழுந்ததும்  என் முகத்தில் தன்னம்பிக்கை தவழும்  ஒரு புன்னகை ஒன்று  தானாகவே மலர்ந்தது.


அவ‌ளே மௌன‌த்தை க‌லைத்தாள். பாலிய‌ல் தொழிலாள‌ர்கள் ந‌ல‌னுக்காக‌ ஒரு வார‌ இத‌ழ் ஆர‌ம்பிக்க‌ ஆலோச‌னைக‌ள் வ‌ழ‌ங்க‌வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

ஒரு அரை ம‌ணி நேர‌ம் போல‌ வாரி வ‌ழ‌ங்கினேன். ( பார்க்க : பத்திரிக்காசிரியர்களுக்கு பத்து கேள்விகள்)

த‌லை குறுக்கே ஆட்டிக் கொண்டே ஒரு நிமிட‌ம் யோசித்த‌ அவ‌ள் "இதை விட‌ எங்க‌ள் தொழிலே மேல்" என்றாள். சென்றாள்.