Thursday, April 22, 2010

உனக்கு 22 எனக்கு 32 : தொடர் கதை

சென்ன கேசவன் ஸ்பீக்கிங்
நான் ஜகனை போட்டு தள்ள முடிவு செய்ய முதல் காரணம் முகேஷ். ஆனால் முகேஷை போட்டு தள்ளினா அது ஜகனை கடுப்பாக்கி வெறி கொள்ள வச்சிரும். நீங்க ஜகனோட கேரீரை பார்த்திங்கனா அவன் எதையும் எப்பவும் தனக்காக செய்ததே கிடையாது. அந்த காலத்துல நாயுடு வளர்த்து ஆளாக்கி,போஷிச்ச ரவுடிங்க கிட்டே ஜகன் மோதினது கூட தனக்காக  இல்லே. தன் ஃப்ரெண்ட்ஸோட அந்த ரவுடிகளுக்கு மோதல் ஏற்பட்டப்ப ஃப்ரெண்ட்ஸுக்கு ஆதரவா மூக்கை நுழைச்சது தான் அவன் மூணு தரம் எம்.எல்.ஏ ஆக்கிருச்சு. இப்போ முகேஷ போட்டுத்தள்ளி ஜகன் மறுபடி கோதாவுல இறங்கினா கதை கந்தலாயிரும். மேலும் அந்த எபிசோட்ல தான் எவ்ள தடுத்தும்  உ.வசப்பட்டு அந்த ரவுடிகளை  போட்டுத்தள்ளின ஃப்ரெண்ட்ஸையெல்லாம்
இத்தனை நாள் ஒதுக்கி வச்சிருந்தவன் இப்போ சேர்த்துப்பிடிக்கிறதா கேள்வி. மேலும் உள்ளுக்குள்ள ஒரு நப்பாசை இந்த முகேஷ் பயல் எப்படியும் துறு துறுன்னு இருக்கான். ஜகன் இல்லன்னா பைசா பெற மாட்டான். ஆனால் நம்ம பக்கம் வந்தான்னா அவன் மூளைய நல்லாவே யூஸ் பண்ணிக்கலாம்.

போன மாசம் பெங்களூர்லருந்து கார்ல சித்தூர் வரேன். செக் போஸ்ட் தாண்டினதுமே அடியெல்லாம் மழை தண்ணி தின்னுட்ட  இரும்பு கம்பங்கள் மேல  துருப்பிடிச்ச  போர்டு ஒரு பக்கம் கழண்டு கிட்டு அபாயகரமா காத்துல ஆடிக்கிட்டே தேசலா சித்தூர் நகராட்சி வரவேற்கிறதுங்கும்.

ஆனால் இப்ப பாருங்க. ரெண்டுபக்கமும் ரெண்டு அழகான  பெண் சிலைகள் கையில பன்னீர் செம்போட ஒய்யாரமா வரவேற்க ( கம்பத்தையே அப்படி டிசைன் பண்ணியிருக்கானுவ)   ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ரேஞ்சுல  ப்ரவுன் பேக் கிரவுண்ட்ல  பித்தளை லெட்டர்ஸ்ல  போர்டு . கார் அந்த கம்பத்தை தாண்டும்போது
முன் கண்ணாடில மழை தூறல்.  The Chittoor Municipal Corporation Welcomes you ன்னிட்டு கான்வென்ட் பசங்க கோரஸா சொல்ற மாதிரி வாய்ஸ் . ஹூம் ஊருக்குள்ள நுழையறச்ச மழை வருது .. சகுனம் சரியில்லையே ....  இங்கே கூட கான்வென்ட் வச்சுட்டானுவளா என்னா கூச்சல் போடுதுங்கனு நான்  முனுமுனுக்க  ட்ரைவர் தான் சொன்னான் " பாஸ் ! அது தூறல் இல்லே நிஜமாவே பன்னீர் தெளிப்பு.இந்த கூச்சல் பசங்க போட்டதுல்ல . டெக்னாலஜி. வெஹிக்கிள் பாஸ் ஆகிறப்ப ஆட்டோ மேட்டிக்கா சிப்லருந்து வாய்ஸ் வரும். எல்லாம் சோலார் பவர்ல வேலை செய்யுது.ராத்திரில பார்க்கனுமே ச்சொம்மா ஜகஜ்ஜோதியா இருக்கும். மூல வியாதி லட்சணம் ஏற்பட்டாற்போல கடுப்பு. " டேய் ரோட்டை பார்த்து வண்டிய ஓட்டு" ன்னிட்டு கண்ணை கெட்டியா மூடிக்கிட்டேன்.

வீட்டுக்கு போனதும் ஒரு வென்னீர் குளியல் போட்டேன். ஆஃபீஸ் ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு நிதானமா யோசிக்க ஆரம்பிச்சேன். நான் வெறும் பிசினஸ் மேக்னெட்டுன்னே வச்சிக்கிட்டாலும் போட்டு தள்றதுன்னா அது காமெடி கிடையாது. ஜாஸ்தி கம்மியாயிட்டா நாஸ்திதான். இதுல நான் ஒரு முன்னாள் எம்.பி. கைல ஒரே ஒரு ரத்தத்துளி ஒட்டிக்கிட்டாலும் அதை கழுவறது கஷ்டமாயிரும்.( ஆதாரம் சிக்கினா).

என் கைக்கு ரத்தம் ஒட்டக்கூடாது. ஆனால் காரியம் நடக்கனும். ப்ரொஃபெஷ்னல்ஸை வச்சித்தான் காரியத்தை முடிக்கனும் அட் தி சேம் டைம் அவிகளை அப்பாயிண்ட் பண்ற வேலைய கூட நான் செய்ய கூடாது.இந்த வேலைய யார்கிட்ட ஒப்படைக்கிறது. முத தடவை நான் எலக்சன்ல நின்னப்ப சாதி,சனம்னு நம்பி தேர்தல் செலவுக்கு சிலருக்கு   பணம் கொடுத்தேன். தே.பசங்க கொடுத்த பணத்தை வச்சி அவனவன் ஃபோர் வீலர் வாங்கறதும், தன் பெண்டுகளுக்கு நகை வாங்கறதும், பொங்களுக்கு (பெண்களுக்கு ) கல்யாணம் கட்டி வைக்கிறதுமா உபயோகிச்சிட்டானு தோத்த பிறகுதான் தெரிஞ்சது.

இந்த விஷயத்துல அந்த மாதிரியெல்லாம் நடக்கக்கூடாது. இந்த வேலைய செய்யறவனுக்கும் ஜகன்  மேல கொலை வெறி இருக்கனும். அவன் நம்பிக்கையானவனா இருக்கனும். அப்படி யாரிருக்கானு யோசிச்சிக்கிட்டிருந்தப்ப கிஷ்டன் ஃபோன் பண்ணான்.

கிஷ்டன் நம்ம சாதிதான். ஆனால் ஸ்ட் ரெயிட் ஃபார்வோர்டு, மானஸ்தன். 20 வருசத்துக்கு முன்னாடி பேருக்கேத்த வியாபாரம் செய்துக்கிட்டிருந்தான். அதாங்க பால் யாவார. வீட்டு பின்னாடியே பத்து மாடு வச்சி ஓகோனு நடந்து கிட்டிருந்தது. ஆனால் இவன் குட்டியும்,புட்டியுமா இருந்து கிட்டு வேட்டு விட்டுக்கிட்டிருந்தான்.
குந்தி தின்னா குன்றும் மாளுமில்லியா. ஒரு நாள் பண உதவி கேட்டு வந்தான்.அப்போ என்னடா சந்தர்ப்பம்னா ஒரு பெரிய ரூபா அடிஷ்னலா இருந்தது. எதுல போட்டாலும் சூப்பர் டாக்ஸ் கட்ட வேண்டி வந்துரும்ங்கற நிலைம..

கிஷ்டன் பணம் கேட்டதும் செமர்த்தியா எகிறினேன் அவனை எந்த அளவுக்கு இன்சல்ட் பண்ணனுமோ பண்ணேன். "சொந்த காரனா வா போ. பணம் கிணம்னா உன்ன மாதிரி குடிகாரனுக்கு,கூத்திகள்ளனுக்கு வாரி கொடுக்கிற அளவுக்கு இங்கே ஒன்னும் கொட்டி கிடக்கல. பதினைஞ்சு நாள் டைம் எடுத்துக்கோ இந்த பீடையையெல்லாம் விட்டுட்டு ஒழுங்கு மரியாதையா பொழப்ப பார்க்கமுடியும்னு உனக்கு உன் மேல நம்பிக்கை வந்தா வா. மாடு தானே வளர்த்துக்கிட்டிருந்தே.உனக்கு  ஒரு கோடி ரூபா தரேன்.டைரிஃபார்ம் வை.  இதுல 50 லட்சம் என் ஷேர். அம்பது லட்சம் உனக்கு ரெண்டு வட்டிக்கு கடன். உனக்கு சம்மதம்னா வா "ன்னேன்.

வந்தான் வெறும் கையோட வரலை. பக்கா ப்ராஜக்ட் ரிப்போர்ட்டோட  ஊருக்கு வெளிய இருக்கிற தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தோட பத்திரத்தோட வந்தான்." மாமா ! என் முதல் பத்து ஏக்கர் நிலம். உன் முதல் ஒரு கோடி ரூ பணம்.
இந்த டைரி ஃபார்மை நிக்க வைக்கிற வரை குடிக்க மாட்டேன். பெண்டாட்டிய தவிர வேற எவளையும் தொடமாட்டேன். இந்த வாக்கை நான் மீறினா ஏண்டா நாயேனு கேளு. பத்து ஏக்கரு நெலமும் உனக்கே. டைரிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது"ன்னான்.

மானஸ்தன். ஒரே வருஷத்துல ஸ்டேட் வைட் நெட் ஒர்க் ஏற்படுத்திக்கிட்டான். அடுத்த வருஷம் அதை சவுத் இண்டியா  மொத்தத்துக்கும் எக்ஸ்பேண்ட் பண்ணிக்கிட்டான்.

போன கார்ப்பரேஷன் எலக்சன்ல 36 வார்டு கவுன்சிலர் கேண்டிடெட்டையும் அடாப்ட் பண்ணிக்கிட்டு பயங்கரமா செலவழிச்சான். ஆனா 6 பேர்தான் ஜெயிச்சானுவ. ஜெயிச்சவன்ல ஒருத்தன் கூட வீட்டை விட்டு வெளிய வரலை. இதுல கிஷ்டனுக்கு ரொம்பவே வருத்தம்.

அவனை கூப்பிட்டு கன்வின்ஸ் பண்ணேன்.  ஒரு கோடி ரூபா செலவானாலும் சரி ஜகனை போட்டு தள்ளிருன்னேன். அவனும் டைரிய திறக்க,அதை சிறக்க செய்ய எப்படி சின்சியரா ஒர்க் பண்ணானோ அதே மாதிரி ஒர்க் அவுட் பண்ணான். எதையாவது சொல்லவந்தாலும் நான் காதுல போட்டுக்கல. "மொதல்ல உனக்கு எனக்கும் கம்யூனிகேஷனே இருக்க கூடாது. இன்னம் சொல்லப்போனா உனக்கும் எனக்கும் விரோதமிருக்கனும். நான் டைரி பார்ட்னர்ஷிப்லருந்து விலகிக்க நினைக்கிறதாவும் நான்  முதல் போட்ட  கோடி ரூபாயையும், 4 வருஷத்துல வந்த லாபத்துல என் பங்கை வட்டியோட   திருப்பித்தான்னும் உனக்கு நோட்டிஸ் விடறேன்.  நீ அதெல்லாம் எப்பயோ செட்டில் பண்ணியாச்சு. வாயா வார்த்தையா நீ சொல்லி விட்டப்பல்லாம் நான் உனக்கு சேரவேண்டியதை விட இரண்டு மடங்கா பணம் அனுப்பியிருக்கேன்னு பதில் நோட்டீஸ் விடுனு ஸ்கெட்ச் கொடுத்தேன்


கிஷ்டனை சும்மா சொல்ல கூடாது ஸ்படிக துல்லியமாதான் ப்ளான் பண்ணான்.