போலி மருந்துகள்,காலாவதியான மருந்துகள்னு நிறைய பேசறாங்க .. நிறைய எழுதறாங்க. ஆனால் ஒரிஜினல்னு சொல்லப்படற மருந்தே, காலாவதியாகாத மருந்தே மருந்தா விஷமா?னு எனக்கு சந்தேகம் இருக்கு.
அல்லோபதி ,ஹோமியோபதி,சித்தா , தமிழ் வைத்தியம், மலையாள வைத்தியம் எத்தனை எத்தனை வைத்தியம் இருக்கு தெரியுமா? இத்தனை வைத்தியம் இருந்தும் நோய்கள் கூடிட்டே போகுதே தவிர குறையற மாதிரியில்லே,
அல்லோபதி,ஹோமியோபதி,சித்தா, நேச்சுரோபதி இதையெல்லாம் எல்லாம் நாம் கேள்வி கூட கேட்க முடியாது. ஏன்னா இதுக்கெல்லாம் அரசால அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கு,படிப்புகள் இருக்கு, தரக்கட்டுப்பாடு இருக்கு.
இருந்தாலும் என்ன ? துணிஞ்சவனுக்கு துக்கமில்லே. எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஜஸ்ட் லாஜிக். இயற்கைய ,அதன் போக்கை ஓரளவு உன்னிப்பா கவனிப்பேன். அனுபவம் எதிர்ப்பட்டப்ப அதை மறக்க மாட்டேன்.
நல்ல மாட்டுக்கு ஒரு அடி, நல்ல மனுஷனுக்கு ஒரு சொல். ஒரு நோய் தடவை தான் வரனும். அது ஏன் தானா வரப்பொவுது நாமதான் தெரியாத்தனமா இன்வைட் ண்ணியிருக்கனும். இந்த உண்மைய புரிஞ்சிக்கிட்டு நோயை வெத்தலை பாக்கு வச்சி கூப்டாம இருந்தாலே போதும். நோய் நாடி நோய் முதல் நாடினு சொல்வாங்க. என்னா நோய்னு மட்டும் பார்த்தா போதாது. அதுக்கு முதல் என்னா? அதாங்க காரணம் .. என்னானு பார்த்து அதை அவாய்ட் பண்ணாலே போதும்.
ஒரே நோய் மறுபடி வந்தா என்ன அர்த்தம் போன தபா அது வந்தப்போ நாம அதுக்கு நல்ல தீனி போட்டோம்னு அர்த்தம் அவ்ளதான்.
"வரும் முன் காத்தல்" தான் நம்ம பாலிசி.வந்துட்டா முடிஞ்ச வரை ஃபேஸ் பண்றது. முடியலியா .. எத்தனை சந்தேகம் இருந்தாலும் எல்லாத்தயும் தூக்கி தூர போட்டுட்டு டாக்டர் கிட்டே போய் சரண்டர் ஆஃப் இண்டியா.
ஆனால் கடவுள் புண்ணியத்துல பெரிசா ஏதும் பிரச்சினை வந்தது கிடையாது. வந்ததெல்லாம் சின்னவயசுல கொப்பளம், சிரங்கு, ஒரு தரம் அம்மை, ஒரு தரம் உப்பு அதிகமாகி மூச்சா வராம போனது, ஒரு தாட்டி டைஃபாயிட் தட்ஸால்.
மேலுக்கு என்னதான் கான்ஃபிடண்டா பேசினாலும் உள்ளாற கொஞ்சம் உதறல் பார்ட்டிதான். உதறல்னா பயம்னு இல்லே. தாளி இன்னைக்கு செத்தா பத்து நாள் காரியம். இதுக்கு முன்னாடியாவது "அய்யய்யோ .. நம்ம மூளைல மஸ்தா சப்ஜெக்ட் சேர்த்து வச்சிருக்கமே எல்லாம் வீணா போயிருமேனு ஒரு பயம் இருந்தது. கால ஓட்டத்துல அதெல்லாம் இன்னைக்கு நேத்திக்கு வந்தும் கிடையாது, நாளைக்கு நாளன்னைக்கு போயிரப்போறதும் கிடையாது. இந்த ஜன்மத்துல எப்படி எல்லாத்தயும் ஃபைல் ரெக்கவரி மாதிரி ரிக்கவர் பண்ணிக்கிட்டமோ அப்படியே அடுத்த ஜென்மத்துலயும் ரிகவரி ஆயிட்டு போவுது விடுனு ஒரு தைரியம். பை தி பை இன்டர் நெட் உபயத்துல என் எழுத்துக்கள் எல்லாம் சிரஞ்சீவத்வம் அடைஞ்சாச்சு. என்னைக்கோ ஒரு நாள் என் எழுத்தெல்லாம் வேதமாகும். ஒட்டு மொத்தமா மனித குலமே கொண்டாடுங்கற நம்பிக்கை உண்டு. என் உதறல் பயமல்ல. எனக்குள்ள ஒரு சூப்பர் ஈகோ உண்டு. எனக்கா நோயா ஹ.. நடக்க கூடியதா சொல்லுப்பாங்கற மாதிரி.
இந்த சில்லறை உபாதைகள் வரும்போது ரொம்பவே அலர்ட் ஆயிருவன். ஏன் எதுக்கு எப்படினு மண்டைய போட்டு ஊறுகாய் பாட்டில் மாதிரி உலுக்கி கிழங்கை தோண்டி எடுக்கிறாப்ல விஷயத்தை எடுத்துருவன். அந்த நோய் எனக்கு வந்ததற்கான காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணி தடா போட்டுருவன். இது என் ஸ்டைல்.
இப்படித்தான் 1993 ல எனக்கு திடீர்னு ஆஸ்மா,ப்ராங்கடைஸ், வீசிங் எல்லாமே மாட்டிக்கிச்சு. காரணங்களை லிஸ்ட் அவுட் பண்ணேன். அவாய்ட் பண்ணேன். இதோ 17 வருஷம் ஆகுது நோ வீசிங்.
ஆனால் எல்லாராலயும் இப்படி இருக்க முடியாதில்லயா? நோய் வந்துதான் தீரும். மறுபடி மறுபடி வரும். என்ன செய்ய? டாக்டர் கிட்டே போய்தான் ஆகனும்.
உலகத்துல கச்சா முச்சானு எத்தனையோ நோய்கள் இருக்கு. இதுக்கெல்லாம் ஜெனட்டிக் காஸஸ், என்விரான்மென்ட்டல் காஸஸ், சைக்கலாஜிக்கல் காஸஸ், சோஷியல் காஸஸ், எக்கனாமிக்கல் காஸஸ்னு நிறைய காஸஸ் இருக்கு.
ஆனால் நோய்ங்கறது எப்பவுமே நமக்கு நண்பன் தான். காரணம் என்ன தெரியுமா?
நோய்ங்கறது ஒரு அறிவிப்பு. ராஜா கைய வைக்கலே ஏதோ ராங்கா பூட்சுபாங்கற அறிவிப்பு.
அலாரம் மாதிரி. பேங்க்ல அலாரம் அடிச்சா பேங்க் மேனேஜர் உடனே போலீசுக்கும், ஃபயர் ஸ்டேஷனுக்கும் போன் பண்றாரா அலாரத்தை நிறுத்தறாரா?
போன் பண்றார். ஆனால் உடம்பு விஷயத்துல நாம என்ன பண்றோம் அலாரத்தை நிறுத்தறோம். இது எவ்ளோ பெரிய முட்டாள் தனம்?
உதாரணத்துக்கு திடீர்னு வயித்தால போவுதுனு வைங்க. இது ஒரு அலாரம். என்னமோ ராங்கா பூட்சி. அத என்னா ஏதுனு ஆராய்ச்சி பண்ணாம உடனே டாக்டர்கிட்டே ஓடறோம். வடிவேலு ஏதோ சினிமால தார் உருண்டைய சாப்ட மாதிரி டாக்டர் ஏதோ மாத்திரை கொடுக்கிறாரு. சாப்டு கார்க் போட்டுக்கிட்டு வீட்டுக்கு வந்து வாயே செத்து போச்சுனு சொல்லி ஊறுகாயை போட்டு பிசைஞ்சி சோத்தை ஒரு கட்டு கட்டறோம்.
வயித்தால போனா கொஞ்சம் டென்சனாவறது சகஜம் தான். ஹ்யூமன் பாடில 70% வாட்டர் கன்டென்ட் தான் . அது வேகமா குறைய ஆரம்பிச்சா கை காலெல்லாம் உதற ஆரம்பிச்சுரும். நியாயம் தா. ஆனால் வயித்தால போவுதே அதுல என்ன ரத்த மாமிசமா போயிருச்சு. இல்லியே மஷ்டுதான் போவுது. என்ன கூடவே நீர்சத்தும், சில தாது உப்புகளும் போயிருது சுஸ்தாயிர்ரம். நிறைய சர்க்கரையும், கொஞ்சமா உப்பும் வென்னீர்ல கலந்து குடிச்சா எல்லாமே ஓரளவு பேலன்ஸ் ஆயிரும். அட இன்னும் சுஸ்தாயிருந்தா எலக்ட் ரால் பவுடர் கலந்து குடிங்க.
(தொடரும்)
வாசகர் கேள்வி:
அடுத்த ஜன்மத்துலயா?