Tuesday, April 6, 2010

உனக்கு 22 எனக்கு 32 - தொடர் கதை

மறு நாள் தனியார் டிவி சேனல்ஸ்ல ஃப்ளாஷ் ந்யூஸ்.  திருமலை காட் ரோடில்
சந்திரபாபு சென்ற கார் கண்ணி வெடியில் சிக்கியது. சில மாசம் வரைக்கும் கோடி வரங்கள்ன்ற பேர்ல ரேசன் கார்டு, இலவச வீட்டுமனையெல்லாம் அள்ளி வீசினாரு. அப்பத்துலேர்ந்து  ஜகனை உஷார் பண்ணிக்கிட்டே இருந்தேன்.சந்திரபாபு  பை எலக்சன் போறாப்ல இருக்கு .. நாம கொஞ்சம் ஆக்டிவா செயல்படனும் அது இதுனு கீர் போட்டும் என்னமோ அவருக்கு ருசிக்கல.  காங்கிரஸ் கலாச்சாரம் தெரிஞ்சவங்கறதால டிக்கட் விஷயத்துலயாவது ஆக்டிவா முயற்சி பண்ண சொல்லி தூண்டினேன். ஒய்.எஸ்.ஆர் இருக்கிறப்ப எனக்கு டிக்கட் பத்தின கவலையில்லேனு ஜகன் சொல்லிக்கிட்டிருந்தார். நான் பயந்தாப்லயே ஆச்சு. ஒய்.எஸ்.ஆர் எவ்ளவோ ட்ரை பண்ணியும் ஜகனோட எதிரிகள் தில்லி அளவுல லாபியிங் பண்ணாங்க. கொலை விவகாரத்தை ஹைலைட் பண்ணி ஜகனுக்கு சீட் கொடுத்தா ஜில்லால ஒரு தொகுதி கூட ஜெயிக்கமுடியாதுங்கற லெவலுக்கு டர்ராக்கியிருக்காய்ங்க.

ஒய்.எஸ்.ஆர் ஜகனை கூப்டு " தபாருப்பா .. இந்த ஒரு தடவை சீட்டை மறந்துரு. அதுக்காக உனக்கு துரோகம் பண்ணமாட்டேன். நீ வேற யார் பேரையாவது சொல்லு அவனுக்கு டிக்கட் டிக்ளேர் பண்ண வேண்டியது என் பொறுப்பு"ன்னு சொன்னாரு.

ஜகன் ஒரு செகண்ட் கூட யோசிக்கல. முகேஷ் உன் இனிஷியல் என்னனு கேட்டார். நான் ஃபோன் லைனை கட் பண்ணேன். ஜகன் கடுப்பாய்ட்டாரு. "இப்ப ஏன்பா லைன் கட் பண்ணே அங்கே அவரு என்ன நினைச்சுக்குவாரு?"  நானும் ஒருமணி நேரம் சொல்லிப்பார்த்தேன். "சீட் கிடைக்கலன்னா இன்டிபெண்டென்டா கன்டெஸ்ட் பண்ணுங்க. அதென்ன உங்களுக்கு புதுசா" ஜகன் ஒத்துக்கவே இல்லை. பிசிசிக்கு ஃபோன் போட்டு என் பேர்ல பிஃபார்ம் வர ஏற்பாடு பண்ணிட்டாரு.  நாமினேஷன் போட ஒரு டேட்டை ஃபிக்ஸ் பண்ணாரு.

நான் மாயாவ கூட்டிக்கிட்டு திருவண்ணாமலை போய்ட்டேன். ஜகன் கிட்டேருந்து ஃபோன் மேல ஃபோன் . செல்ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டேன்.  சாயந்திரம் நாலு மணிக்கு அப்பாவுக்கு ஃபோன் போட்டேன் அப்பா சொன்னார்" ஜகன் இன்டிபெண்டென்ட் வேட்பாளரா  நாமினேஷன் தாக்கல் பண்ணிட்டார்"

அதுக்கப்புறம் செல்ஃபோனை ஆன் பண்ணேன். ஜகன் ஃபோன் போட்டு திட்டின திட்டு திட்டாம திட்டினாரு.  நேர்ல வரேன்னுட்டு சித்தூர் புறப்பட்டேன்.

ஜகன் பயங்கரமா ஃபயர் ஆனார் "ஏம்பா உன்னை நான் எவ்ளோ நம்பினேன். இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டியே. ஒய்.எஸ்.ஆர் என்ன நினைப்பாரு? நான் ஏதோ வேணும்னே  நாடகமாடறேனு நினைச்சுட்டிருந்தா எப்படிப்பா அவர் முகத்தை மறுபடி பார்ப்பேன். "

நான் பொறுமையா சொன்னேன்" சார் !  இப்ப நீங்க வெறும் ஜகன் இல்லே .கொலைப்பழிய சுமந்துக்கிட்டிருக்கிங்க. நீங்களே கட்சி டிக்கட்ல கன்டெஸ்ட் பண்ணாகூட ஜெயிக்கிறது சந்தேகம் தான். நிலைமை இப்படியிருக்க உங்களோட 15 வருஷ அரசியல் அனுபவமோ, தியாகமோ இல்லாத நான் எப்படி ஜெயிக்க முடியும்? . ஸ்டேட் மொத்தம் காங்கிரஸ் கட்சிக்கு அனுகூலமான அலையடிக்குது. பார்ட்டி ஜெயிச்சா ஒய்.எஸ் தான் முதல்வருனு பேசிக்கிறாங்க. இந்த சந்தர்ப்பத்துல நீங்க ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆனால் தொகுதியோட தலை எழுத்தே மாறிடும். நான் ஜெயிச்சு என்னத்த கிழிக்கறது.

நீங்க  முதல் தடவை எம்.எல்.ஏ ஆனப்ப நீங்க சுயேச்சை. அடுத்த ரெண்டு தடவை ஜெயிச்சாலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ. அதனால ஒரு இழவும் பண்ண முடியாம போயிருச்சு இப்போ  நீங்க எம்.எல்.ஏவா  ஜெயிக்காட்டாலும் பரவால்லை, போட்டியிட்டு ஓரளவாவது  ஓட்டு வாங்கி காட்டலை கொலைப்பழி நிரந்தரமாயிரும்.
எதிர்காலமே கேள்விக்குறியாயிரும். அதனாலதான் திட்டம் போட்டு காணாம போயிட்டேன்.

நான் ஹைதராபாத் போய் ஜகன்  பேரை சொல்லி  ஒய்.எஸ்.ஆரை பார்த்தேன். எந்த சந்தர்ப்பத்துல ஜகன் நாமினேஷன் போட வேண்டி வந்ததுனு விவரிச்சேன்.  ஒரு நிமிஷம் கண்ணை மூடிக்கிட்டு யோசிச்சவர் கலகலனு சிரிச்சுட்டு போவட்டும் எனக்கு ஜகன் மாதிரி , ஜகனுக்கு நீ கிடைச்சிருக்கே. கீப் இட் அப். நான் ஹை கமாண்ட் கிட்டே எப்படியோ சமாளிச்சுக்கறேன்னார்.

ராமன் வனவாசம் போனப்ப அயோத்தி மக்கள் எல்லாமே காடு வரைக்கும் கூடவே போய்ட்டாங்களாம். ராமன் கட் அண்ட் ரைட்டா கோ ஹோம்னு சொன்ன பிறகுதான் வீடு திரும்பினாங்களாம்.

என்.டி.ஆரை முதல் தடவை நாதேள்ள பாஸ்கர்ராவ் முதுகில குத்தினப்ப மானிலமே பொங்கி எழுந்தது. ஆனால் இரண்டாவது தடவை சந்திரபாபு துரோகம் பண்ணப்போ?  நாலு மாசத்துலயெ மறந்துட்டாய்ங்க.

ஜகன் விஷயத்திலும் இதுவே நடக்க போவுதானு சந்தேகம் வந்துருச்சு. வெறியோட பிரச்சாரத்துல இறங்கினோம். காங்கிரஸ் கலாச்சாரம் தெரிஞ்சதுதானே ஒரு லிக்கர் கிங்க் பார்ட்டிக்குள்ள இருந்து கிட்டு உள்ளடி அடிச்சான். தெ.தேசம் காரங்க மேடைக்கு மேடை கொலை , கொலைகாரன்னு  லாவணி பாடினாங்க. இந்த தடவை மாயாவையும் களத்தில இறக்கினேன். ஜகனோட மனைவியையும் ஃபீல்டுக்கு அனுப்பி அவிகளுக்கு துணையா மாயா தெரு தெருவா பிரச்சாரம் பண்ணாள். சின்னம் புதிய சின்னம் (ஏரோ ப்ளேன்) கட்சி டிக்கட் வேற இல்லே. இருந்தாலும் மொத்த சக்தியையும் பணயம் வச்சு ஒர்க் அவுட் செய்தோம்.

எதையெதையோ வித்து,எதையெதையோ வச்சு செலவு செய்தும் பணம் பத்தலை. ஜகன் வெளிய இருந்திருந்து கிரவுண்ட் ஒர்க் பண்ணியிருந்தா இந்த அளவுக்கு டஃப் ஃபைட் இருந்திருக்காது. மூணு மாசத்தை  கடப்பா ஜெயில் விழுங்கிருச்சு. தேர்தல் முடிஞ்சது. ஜகன் 1,500 ஓட்ல தோத்துட்டாரு. பயங்கர அப்செட். ஆனால் ஸ்டேட்ல காங்கிரஸ் ஸ்வீப் பண்ணிருச்சு. அது ஒரு கொண்டாட்டமா இருக்கவேண்டியது ஜகன் தோல்வி காரணமா ஒரு ஆறுதலா மாறிருச்சு.

ஜகன் தன் தோல்விய கூட மறந்துட்டு ஒய்.எஸ் வெற்றிய கொண்டாட ஆரம்பிச்சுட்டாரு. ஹைதராபாத் போய் ஒய்.எஸ் .ஆரை பார்த்தோம். அவரு " ஜகன் !  யுவார் மை பெட் . உனக்கு நான் இருக்கேன். இன்னும் 6 மாசத்துல நகராட்சி தேர்தல் வருது.  நீ என்ன பண்ணுவயோ ஏது பண்ணுவயோ எனக்கு தெரியாது. நகராட்சில எதிர்கட்சியே இருக்ககூடாது. ஏ டு ஜெட் நீதான் டிசைட் பண்ணனும். நீ கொடுக்கிற லிஸ்டை அப்படியே டிசிசிக்கு அனுப்பிருவன்"னாரு.

சித்தூர் வந்தோம். ஜகன் சொன்னாரு.

"பாரு முகேஷ் ! இனி என் ஃபார்முலா ஒர்க் அவுட் ஆகுங்கற  நம்பிக்கை எனக்கில்லை. ஆல்ரெடி எம்.எல்.ஏவா தோத்து கிடக்கிற சந்தர்ப்பத்துல ஒய்.எஸ் குடுத்திருக்கிற இந்த அசைன்மென்டும் நாஸ்தியாயிட்டா என்னால தாங்க முடியாது. நீ என்னவேணம்னா பண்ணு நீதான் சேர்மன் கேண்டிடெட். இதை மறுக்க கூடாது. என்னை பத்தி கவலைப்படாதே ஒய்.எஸ் இருக்கிற வரை எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நகராட்சியை பிடிச்சு ஒய்.எஸ் கைல  கொடுத்துட்டா போதும்"

2004 தேர்தலை நோக்கி கதைய வேக வேகமா இறைக்க இறைக்க  ஓட்டிக்கிட்டு வந்ததுல ஒரு முக்கியமான விஷயம் விட்டு போச்சு. அதான் இன்டர் நெட். எனக்கு 1999லயே பரிச்சியமாகியிருந்தாலும்..அது மேல ஒரு கமாண்ட் வர்ரதுக்கு 4 வருஷமாயிருச்சு. சோஷியல் நெட் வொர்க்கிங், சாட்டிங், ப்ளாகிங் பத்தியெல்லாம் ஒரு ஐடியா வந்துர ஒரு டப்பாவ (அதாங்க கம்ப்யூட்டர்)  வாங்கி போட்டிருந்தேன். நெட் கனெக்சனும் வாங்கி வச்சுருந்தேன். எல்லாத்தயும் வித்தப்ப இதை மட்டு அனியாய ரேட்டுக்கு கேட்டானுவனு விக்காம வச்சுட்டேன். ஓய்வு நேரத்துல தமிழ் ,தெலுங்குல டைப்படிக்கவும், ப்ளாகவும் பழகிட்டேன்.

ஜகன் மொத்த பொறுப்பையும் என் தோள்ள சுமத்தவும் ஊர்ல எவனெவன் பத்து வட்டி, எவனெவன் மும்பை ப்ளாட்பார துணிய ஷோ கேஸ்ல வச்சு 1000 பர்சன்ட் அதிகம் வச்சு விக்கிறான், எவனெவன் காண்டராக்டருனு  சின்னதா ஒரு  லிஸ்ட் தயாரிச்சேன்.