லிஸ்டலருக்கிறவனுக்கெல்லாம் மெசேஜ் கொடுத்தேன் . எல்லாம் வந்திருந்தாங்க.வராதவுக பேரையெல்லாம் தனியா நோட்பண்ண சொன்னேன்
மீட்டிங்ல ஜகன் என்ன பேசனும்னு சொன்னேன். ஜகன் தயங்கினார் " என்னப்பா இதெல்லாம் 15 வருஷமா ஒரு நல்ல பேரை வாங்கி வச்சிருக்கேம்பா. பேரு ரிப்பேராயிரப்போவுதுப்பா"ன்னு புலம்பினார்.எப்படியோ கன்வின்ஸ் பண்ணி கூட்டி வந்தேன். ஜகன்," பாருங்கப்பா போன 15 வருஷமா நான் எம்.எல்.ஏவா இருந்தும் தொகுதிக்கு ஒன்னும் செய்ய முடியாம போயிருச்சு. இப்ப ஸ்டேட்ல ஒய்.எஸ். சி.எம்மா இருக்கிற இந்த அஞ்சு வருஷத்துல நம்ம தொகுதியை டெவலப் பண்ணாதான் உண்டு. இந்த 5 வருஷத்தை கோட்டை விட்டுட்டா கதை கந்தலாயிரும்.
கடந்த தேர்தல்ல நான் ஏன் தோத்துப்போனேன்னு உங்கள்ள சிலருக்காவது தெரிஞ்சிருக்கும். இன்னும் 6 மாசத்துல நகராட்சி தேர்தல் வரப்போவுது. இதுலயாவது காங்கிரஸ் கட்சியை நாம ஜெயிக்க வச்சாதான் சி.எம்.கிட்டே தொகுதிக்குனு ஏதாவது கேட்க எனக்கு முகமிருக்கும். நம்ம முகேஷை சேர்மனா ப்ரப்போஸ் பண்ணியிருக்கேன். மிச்ச விஷயத்தை முகேஷ் சொல்லுவான்"ன்னிட்டு போயிட்டார்.
நான் வந்தவங்களுக்கு கடந்த எலக்ஷன்ல ஃபைனான்ஸ் பற்றாக்குறையால எதையெல்லாம் செய்ய முடியாம போயிருச்சு.ஜகன் ஏன் ஜெயிக்க முடியாம போயிருச்சு எல்லாத்தயும் ஷார்டா சொன்னேன் . உடனே ஒரு பார்ட்டி எந்திரிச்சு "ஃபண்டுதானேப்பா இவ்ளோனு சொன்னா கொடுத்துர போறோம்"னுச்சு.
"கரீக்டு கண்ணா ஃபண்டு கொடுத்துருவிங்க. கொடுத்துட்டு அதுக்கு 100 மடங்கா சம்பாதிச்சுருவிங்க. ஊரெல்லாம் சொல்லுவிங்க ஜகனுக்கு ஃபண்ட் கொடுத்தோம். அதனால தான் ரேட்டை கூட்ட வேண்டியதாயிருச்சும்பிங்க. இதை மிச்சம் பிடிக்க கூலிக்காரன் வயித்துல அடிப்பிங்க. அந்த பப்பெல்லாம் வேகாது"ன்னுட்டு
ஒவ்வொரு பார்ட்டிய பத்தியும் விவரமா விசாரிச்சு போட்டு வச்சிருந்த
ஃபைல்ஸை ஒவ்வொரு ஆளுக்கும் கொடுத்தேன்.
போன 15 வருஷத்து கணக்கு இது. இனி இந்த கதை நடக்காது. போன 15 வருஷமா ஊரை அடிச்சு உலைல போட்டு சேர்த்து வச்சிங்க. போன 15 வருஷ காலத்துல ஜகன் வந்து உங்க யாரு கிட்டயும் பத்து பைசா தேர்தல் நிதி கேட்டதில்லை. பூர்விக சொத்தை விக்கறதும், ஃப்ரெண்ட்ஸ் செலவு பண்றதுமாவே அவரோட அரசியல் வாழ்க்கை நடந்துக்கிட்டிருக்கு. உங்களுக்கு தெரியும். என் விஷயத்துக்கு வந்தா நான் எவ்வளவு செலவு பண்ணேன். என் பணம் 50 லட்ச ரூபா வரைக்கும் கவர்ன்மென்ட்ல டம்ப் ஆகி எவ்ளோ அவஸ்தை பட்டுக்கிட்டிருக்கேனு தெரியும்.
ஜகன் ஃபீல்டுக்கு வரதுக்கு முன்னாடி தினம் தினம் கலவரம்,வாரத்துக்கொரு கொலை,பத்து நாளைக்கொரு கற்பழிப்பா இருந்தது .எப்போ கடையடைக்கனும், எப்போ கடை கண்ணாடி உடையும்னு தெரியாது. ஜகன் மேல அந்த காலத்து ரவுடிக்கூட்டம் பல தடவை கொலை முயற்சிகள் செய்தப்போ நீங்க யாரும் வந்து பார்க்கல.
மேலும் அந்த ரவுடிக்கூட்டத்தோட அராஜகத்துக்கு பயந்து தினசரி மாமூல்,வார மாமூல், மாத மாமூல்,பண்டிகை மாமூலெல்லாம் கொடுத்து போண்டியாயிட்டிருந்திங்க. இத்தனை செலவழிச்சாலும் எப்போ எவன் வந்து முகத்துல குத்துவானு தெரியாத நிலை.
இதை எதிர்த்த ஜகன் மேல பல முறை அட்டெம்ப்ட் நடந்தது . இதுக்கு பின்னணில எந்த கட்சியிருந்தது, காங்கிரஸ் கட்சில யார் யார் துணை போனாங்கனு உங்களுக்கே தெரியும். வேறு வழியில்லாத நிலைல ஜகனோட நண்பர்கள் சிலர் ஜகன் எவ்ள தடுத்தும் கேட்காம அந்த ரவுடி கூட்டத்தோட மிச்சம்,சொச்சத்தை கூட மீதி வைக்காம போட்டுத்தள்ளிட்டாங்க. ஜகன் அவிகளை தள்ளி வச்சுட்டார்.
இந்த தொகுதி அரசியலுக்கு ஜகன் வந்த பிறகுதான் ரவுடியிசம் கண்ட்ரோல் ஆச்சு. நீங்களும் உங்க பிசினஸ் ஆக்டிவிட்டீஸை நிம்மதியா செய்ய முடிஞ்சது. ஆனால் நீங்க அந்த நிம்மதிய உங்க சுய நலத்துக்கு உபயோகிச்சுக்கிட்டு வேகமா சமுதாயத்தையும்,ஏழை மக்களையும் சுரண்ட ஆரம்பிச்சுட்டிங்க. ஜகனுக்கு உங்களை பத்தி எத்தனை புகார் வந்தாலும் கைல பவர் இல்லாததாலயும், அவருக்கு வன்முறைல நம்பிக்கை இல்லாததாலயும் கண்டும் காணாம விட்டுக்கிட்டிருந்தாரு.
இத்தனை தியாகத்துக்கும் நீங்க கொடுத்த பரிசு கொலைப்பழி, தேர்தல்ல தோல்வி.
இப்போ இருக்கிற ஜகன் பழைய ஜகனில்லே. உங்க சுய நலம், துரோகம் எல்லாத்தயும் அனுபவிச்சு தெரிஞ்சிகிட்ட ஜகன். அவர் கைல பவர் இருக்கு.
இனியும் உங்களை விட்டு வைக்கிறதா இல்லே. உங்க வியாபாரங்கள் பழைய ஸ்டைல்ல நடக்க கூடாது. மாறனும். ஒட்டு மொத்தமா மாறனும். அதே நேரத்துல கடந்த 15 வருஷமா நமக்கா லைஃப் ரிஸ்கெல்லாம் எடுத்து ,கொலைப்பழி சுமந்து, நொந்து போயிருக்கிற ஜகன் குடும்பத்துக்கு ஒரு செக்யூரிட்டிய கொடுக்க வேண்டியது நம்ம கடமை. நம்ம தொகுதி மக்களுக்கே கடந்த 15 வருசமா செக்யூரிட்டி கொடுத்த ஜகனை நீங்க கை விட்டுரலாம். ஆனால் நான் விடறதா இல்லே.
நான் நாலு விதமா யோசனை பண்ணி நகர தூதால ஜகனுக்கு 49% பார்ட்னர் ஷிப் தர்ரதா முடிவு பண்ணியிருக்கேன்.நகர தூதன் பத்திரிக்கைய ஸ்டேட் வைட் எக்ஸ்டெண்ட் பண்ண போறேன். இதுக்கு பணம் தேவைப்படுது. வீடில்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு இதுக்கு முந்தி கட்டினமாதிரியே லார்ஜ் ஸ்கேல்ல பல்வேறு க்ரூப்ஸுக்கு வீடுங்க கட்டி தரப்போறேன். இதுக்கெல்லாம் பணம் தேவைப்படுது.
நான் உங்களை லஞ்சம் கேட்கலை. தேர்தல் நிதி கேட்கலை. நீங்க ஏமாத்தி சம்பாதிக்கனும்னா இத்தனை நாள் நீங்க சுரண்டின மக்கள் கொஞ்சமாச்சும் நல்லாருந்தாதான் தொடர்ந்து ஏமாத்த முடியும். இல்லேன்னா ஈ ஓட்ட வேண்டியதுதான்.
இதுக்காக நகர தூதாவுக்கு பெரிய அளவுல ஆயுள் சந்தா கலெக்ட் பண்ணவும் முடிவு செய்திருக்கேன். ஒரு ஆயுள் சந்தா ரூ.10,000 .உங்கள்ள யார் யாரு போன 15 வருஷமா எவ்ள சம்பாதிச்சிருக்கிங்கனு ஒரு கணக்கிருக்கு.அதனோட அடிப்படையில யார் எத்தினி சந்தா கட்டணும்னு இன்ஃபார்ம் பண்றேன்.அவிக வேற வேற பேர்ல ,வேற வேற பேங்க் அக்கவுண்ட்ஸ் செக்/டிடி மூலமா சந்தா கட்டணும் .