Friday, April 2, 2010

எமலோகத்தில் நித்யானந்தா

நித்யாவை (அதாங்க இத்தனை நாள் நித்யானந்தானு குமுதம் மாதிரி பத்திரிக்கைங்க காசை வாங்கிகிட்டு எழுதி குவிச்சாங்களே அந்த டுபுக்குதான்)  எமதூதர்கள் அழைத்து (சாரி இழுத்து) வருகிறார்கள். எமதூதர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் வரும் அடியாட்கள் கணக்காய் வழுக்கை தலை,தொப்பை ,வரி வரியா பனியன்,கழுத்தில் கர்சீஃப் கட்டியிருக்க நித்யா "போலீஸ் போலீஸ்" னு கத்திக்கிட்டே வரார்.

எமதர்ம ராஜன் காலத்துக்கேத்தாப்ல எம்.டி.ராஜன்னிட்டு பேரை மாத்தி லேப்டாப்பும், காதுல ஹெட்செட்டுமா இருக்கார். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய்  நித்யா "போலீஸ் போலீஸ்" னு பெரிய எழுத்துல கத்தறார். எமன் சின்னதா "ஷட் அப்"ங்கறார்.

சி.குப்தா ஷார்ட்ஸும் மாரெல்லாம் மயிருமா இருக்கார். "ஏய் ! ஏன்யா கத்தறே.. நான் சென்ஸ்"ங்கறார்.

நித்யா அரண்டு போய் "அய்யோ அய்யோ நான் சாகலை. இது எமலோகமில்லே நீ சித்திர குப்தனில்லே,அவரு எமன் இல்லே எல்லாம் போலி போலி"ன்னு கத்தறார். அவரை இழுத்துட்டு வந்த எம தூதருங்க கழுத்துகிட்டே ஏதோ நரம்பை சுண்ட சத்தம் வெளிய வரதில்லையே தவிர நித்யா ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கார்.

எமன்: மிஸ்டர் குப்தா..இப்ப இந்த ஆசாமி போலி போலினு கத்தினானே..ஏன்?  இவன் கேஸ் என்ன?

குப்தா; சார்.. இந்தாளு போலி சாமியாரு. எல்லாத்தயும் ஈர கோவணம் கட்ட சொல்லிட்டு இவரு மட்டும் குஷாலா அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டு கேமராவுக்கு சிக்கி நாறிபோய் தற்கொலை பண்ணிக்கிட்டு வந்துருக்காரு. தான் திருடி பிறனை நம்பான் . கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்ங்கற மாதிரி நம்மை பார்த்து போலி போலினு கத்தறான்.

எமன்: என்ன  குத்தத்தை ஒத்துக்கறானா?

குப்தா: இந்த நக்கல் தானே வேணாங்கறது உங்க முன்னாடிதானே நம்மை போலி போலின்னு கத்தினான். நம்மையே ஒத்துகிடல .இதுல குற்றத்தை எங்கே ஒத்துக்கறது, நம்ம தீர்ப்பை எங்கே ஒத்துக்கறது.

எமன்:என்னய்யா இது காலங்கார்த்தால சாவு கிராக்கி
குப்தா: சார் இது எமலோகம் சாவு  கிராக்கி வராம பின்னே யார் வருவாங்களாம்
எமன்:சரி சரி அந்தாள பேசவிடுங்க. என்னதான் சொல்றான் பார்க்கலாம்"
( அடியாட்கள் சாரி எம தூதர்கள் மறுபடி நித்யா கழுத்துல ஏதோ வேலை காட்ட)

நித்யா: இந்த வழக்கை நீங்க விசாரிக்க கூடாது
எமன்:(அதிர்ந்து போய்) ஏன்?
நித்யா: நீங்க கூட செக்ஸ் ஸ்காண்டல்ல மாட்டின பார்ட்டிதானே
எமன்: என்னய்யா சொல்றே
நித்யா: ஆமாங்க. மகாபாரதம்லாம் படிச்சிருக்கேன். அதுல விலாவாரியா குடுத்திருக்காங்களே. குந்தி பாண்டுராஜாவ கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பாண்டு டம்மி பீஸு. அப்போ நீங்க தானே தலைச்சன் புள்ளய குடுத்திங்க..
எமன்: குப்தா இவன் சொல்றதுலயும் நியாயமிருக்கு . பேசாம கேஸை கைலாசத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிரலாமா?
நித்யா: நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்
எமன்:ஏன்?
நித்யா: அவர் மட்டும் என்ன யோக்கியமா.. தாருகாவனத்துல ரிஷிங்க பெண்டாட்டிங்களோட கிட்டி புள்ளா விளையாடினாரு. எல்லாத்தயும் கர்பம் பண்ணிட்டாரே
எமன்:சரி .. வைகுண்டத்துக்கு மாத்திரட்டா..
நித்யா: நோ .. விஷ்ணு மட்டும் என்ன யோக்கியமா கிருஷ்ணவதாரத்துல கோகுலத்துல அவர் கை வச்சதெல்லாம் ஊரான் பெண்டாட்டிதானே
எமன்: எனக்கொரு சந்தேகம். புராணத்துல இந்த மாதிரி சமாசாரங்களை மட்டும் தேடிப்பிடிச்சு படிச்சியா என்ன?
நித்யா: ஹி ஹி..
எமன்:சரி உன் பாவத்துல நீ போ. எனக்கென்ன போச்சு.. வாட் அபவுட் பிரம்மா . பிரம்மாவ விசாரிக்க சொல்லவா?
நித்யா:அவர் மட்டும் யோக்கியமா என்ன?  திலோத்தமாவ அவர் தான் படைச்சாராம். அவரே அவளை துரத்திக்கிட்டு ஓடினாராம்
எமன்:என்னய்யா உன் கிட்டே பெரிய ரோதனையா பொச்சு .. உன் கேசை யார்தான் விசாரிக்கனும்னு நீயே முடிவு பண்ணு
நித்யா:பதிவுலகத்துல என்னோட பக்தர்கள் நிறைய பேர் இருக்காங்க.அவிக யாராவது விசாரிக்கட்டும்.
எமன்:அஸ்கு புஸ்கு.. என்னை என்ன கேணையனு  நெனைச்சயா? அதெல்லாம் ஒத்துக்கிட முடியாது. வேணம்னா பதிவாளர்கள் பேரையெல்லாம் எழுதி குலுக்கி போடறோம் . யார் பேர் வந்தா அவிக விசாரிக்கட்டும்.
நித்யா: (மனதுக்குள்) " சரி இவ்ள மாத்திரம் ரிஸ்க் எடுத்துதான் ஆகனும். ஹிப்னாட்டிசம் அது இதை வச்சி மேனேஜ் பண்ணிரலாம்" ( வெளியே)  "சரி நான் ஓகே "

(பதிவர்கள் பெயர்களை குலுக்கி போடறாங்க. நித்யாவே எடுக்கிறார். படிக்கிறார்)
வலைப்பூவின் பெயர்: கவிதை07 : பதிவர் பெயர்: சித்தூர்,முருகேசன்

(தொடரும்)