Thursday, April 29, 2010

நவகிரகங்களிடமிருந்து விடுதலை: 6

அண்ணே வணக்கம்ணே !
நீங்க தமில் பெஸ்ட் திரட்டியிலிருந்து வந்திருந்தா இங்கே அழுத்தி கடந்த அத்யாயத்தை படிச்சுட்டா இந்த அத்யாயம் ஓரளவுக்கு புரியும்.

கடந்த அத்யாயத்துல குடும்ப ஜோதிடரை சந்திச்சு கிரகங்கள், மற்றும் பாவங்களின் ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை சதவீதத்துல போட்டுட்டு வந்துருங்கனு சொல்லியிருந்தேன். அந்த வேலைய செய்துருந்தா இப்போ இந்த அத்யாயம்  ரொம்ப நல்லா புரியும்.  செய்யலன்னா இன்னைக்கு அ நாளைக்கு செய்துருங்க .ஓகேவா.

கு.ஜோதிடரை சந்திச்சவங்க தங்களோட ஜாதகத்துல கிரகங்கள் மற்றும் பாவங்களோட க்ரேடிங்கை பார்த்து  நொந்து போயிருப்பிங்க. ஏன்னா ஒரே ஒரு பாவத்துக்கு கூட ,ஒரே ஒரு கிரகத்துக்கு கூட 100% வந்திருக்காது.

இதை வச்சு நம்ம ஜாதகம் தரித்திரம் பிடிச்ச ஜாதகம்னு நினைச்சுராதிங்க. இங்கே இருக்கிற எல்லாரோட ஜாதகமும் அந்த அழகுதான்.  கிரக பலத்தை,பாவ பலத்தை எப்படி கணக்கிடறதுங்கறதுக்கு ரஃபா ஒரு அவுட்லைன் தரேன் பாருங்க. அப்பத்தான் புரியும் ஏன் கிரகமெல்லாம் ஃபெயில் மார்க் வாங்கிருச்சு.ஏன் பாவமெல்லாம் சோமாலியா குழந்தை மாதிரி சோனியா இருக்குன்னு

கிரேடிங் கொடுப்பது எப்படி ?


செவ்வாய் தோஷமில்லாம இருந்து, செவ்வாய் உங்க  லக்னத்துக்கு சுபராயிருந்து உச்சம் பெற்றிருந்தா  60% கொடுக்கலாம். மிச்சம் 40% ஐ காக்கா தூக்கிட்டு போயிருச்சான்னு  கேட்பிங்க. விருச்சிகம், மேஷம் செவ்வாயோட சொந்த வீடு இந்த ராசிகள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருந்தா ? செவ்வாயோட வேற ஏதாச்சும் சேரக்கூடாத கிரகம் சேர்ந்திருந்தா ? அவரை வேற ஏதேனும் கிரகம் பார்த்திருந்தா? அப்படி பார்த்த கிரகத்தோட வேற ஏதாச்சும் கிரகம் (சேரக்கூடாத) சேர்ந்து அதுவும் அவரை பார்த்தா ? உங்களுக்கு தாராபலம் இல்லாத நட்சத்திரபாதசாரம் வாங்கியிருந்தா. செவ்வாயை போலவே வேற ஏதாச்சும் கிரகம் உச்சமாகி இவரை பார்த்தா உச்சனை உச்சன் கண்டால் பிச்சை கூட கிடைக்காதுங்கற விதிப்படி ரெண்டு கிரகமும் டப்ஸாயிரும். இப்படி நிறைய டெக்னிக்கல் பாயிண்ட்ஸ்ல  அந்த 40 சதவீதத்தை விட்டுர வேண்டி வரும்.

எல்லாமே வீக்குதான்:
ஆக உலகத்துல பிறந்த,பிறந்திருக்கிற, பிறக்கப்போற எல்லாருடைய  ஜாதகமுமே  வீக்குதான். ஒரு நாளைக்கு மூணு வேளை  காம்ப்ளான் குடிச்சுட்டு சச்சின் மாதிரி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கட்டை விரலை தூக்க வேண்டியதுதான். அதுசரி காம்ப்ளானை வச்சு கிரகத்துக்கும், பாவத்துக்கும் எப்படி பலத்தை கூட்ட முடியும்னு கேட்கலாம். அது சொம்மா டமாசுக்கு சொன்னதுங்கண்ணா..


எப்படி பலம் கூட்ட முடியும்?

கேள்வியே தப்பு. பலத்தை கூட்ட முடியாது. வேணம்னா இருக்கிற பலத்தை வச்சி ஒப்பேத்தலாம். லோ ஓல்டேஜ் ப்ராப்ளம் வந்துட்டா வீட்ல இருக்கிற எல்லா மின் உபகரணத்தையும் அணைச்சுட்டு  ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்துல ஹால்ல வந்து  உட்கார்ந்துக்குவமே அதே டெக்னிக்தான்.

( தியானம், யோகம்,யோகா இதெல்லாம் ஜெனரேட்டர் ஏற்பாடு பண்ணிக்கிற மாதிரி. சோகம் என்னடான்னா இதுக்கு கூட உங்க ஜாதகத்துலயே ப்ரொவிஷன்  இருக்கனும். உதாரணத்துக்கு லக்னாதிபதியே 6,8,12ல இருக்காருனு வைங்க. அந்த பார்ட்டி எங்கேருந்து தியானம் யோகா, யோகாசனம்லாம் பண்றது.

லக்னாதிபதி 6 லருந்தா இதெல்லாம் அன் சைண்டிஃபிக், எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைமுன்னிட்டு வாதம் பண்ணலாம்., லக்னாதிபதி 8ல இருந்தா தியான வகுப்பு போறப்பயோ,வரப்பயோ ஒரு விபத்து நடக்கலாம், இல்லே எக்கு தப்பா யோகாசனம் பண்ணி அஷ்ட வக்கிரர் மாதிரி ஃபிக்ஸ் ஆயிட்டு 108 க்கு ஃபோன்பண்ண வேண்டி வந்துரலாம், லக்னாதிபதி 12ல இருந்தா  நித்யானந்தா மாதிரி அடல்ட்ஸ் ஒன்லி சாமியார்ங்க கிட்டே மாட்டி பாடு பட்டு சேர்த்த பணத்தை எல்லாம் விரயமாக்கிரலாம் )

குறைஞ்ச பலத்தை வச்சுக்கிட்டு எப்படி ஒப்பேத்தறது?:

நம்ம வேலைக்காரன் டம்மி பீசு. ஓமகுச்சி நரசிம்மன் மாதிரினு வைங்க. 25 கிலோ வெயிட்டை தூக்கிட்டு 64 அடி நடந்து  போய் சமையல் ரூம்ல வைக்கனும். என்ன பண்ணலாம் ? கொஞ்சமா தம் கட்டி ஒவ்வொரு ரூம் வாசல் வரை கொண்டு போய் வச்சி தம்மாத்திக்கிட்டு அடுத்த ரூம் வாசலுக்கு போலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி கொண்டு போகலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி  64 அடிய 4 பகுதியா பிரிச்சுக்கிட்டு 16 , 16 அடியா கடக்கலாம். இது அசத்தல் டெக்னிக்.

இப்போ உங்க ஜாதகத்துல குரு செம ஸ்ட் ராங். கோசாரத்துல ஒரு வருஷம் குரு அனுகூலமா வராருன்னு வைங்க. அந்த ஒரு வருஷத்துலயே கல்யாணமாகும் ( குரு கங்கண காரகன் என்பதால்) அதே வருஷத்துல உங்க சம்சாரம் கன்சீவ் ஆவாங்க (குரு புத்ரகாரகன் என்பதால்) அதே வருஷத்துல பழைய சொத்து விவகாரம் ஏதோ தீர்ந்து லம்ப்சமா ஒரு அமவுண்ட் வரும்(குரு தனகாரகன் என்பதால்)

சப்போஸ் அதே குரு உங்க ஜாதகத்துல குரு செம வீக். கல்யாணத்துக்கு  பொண்ணை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அதே சமயம் சொத்து விவகாரம் தொடர்பா  கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கு. போனா வெற்றி நிச்சயம்னு வைங்க. உங்களுக்கு இருக்கிற குருபலத்துல கல்யாணமோ இல்லை சொத்தோ ரெண்டுல ஒன்னு  தான் சக்ஸஸ் ஆகும். இப்போ என்ன செய்யலாம் ?

எது முக்கியம்னு பார்க்கனும். வீட்ல பொம்பளயே கிடையாது.  அம்மா உயிரோட இல்லை. வீட்டு வேலைகளை எடுத்து செய்யக்கூடிய வயசுல  அக்கா தங்கச்சிங்க யாருமில்லை. இருந்தாலும் கண்ணாலம் கட்டிக்கிட்டு போய்ட்டாங்க. இருக்கிறதெல்லாம் உங்களை விட சின்ன பசங்கதான். அப்பா அல்சர் பேஷண்ட். நீங்க தான் மூத்த பிள்ளைன்னு வைங்க பேசாம சொத்து விவகாரத்துல கோர்ட்டுக்கு வெளிய செட்டில் பண்ணிக்கிட்டு (பத்து ரூபா குறைவா வரும்னாலும்) கண்ணாலம் கட்டிக்கலாம்.

நிலைம அப்படியில்லே ஏதோ பொம்பள துணையிருக்கு. சொத்து விஷயமா இப்போ கோர்ட்டுக்கு போலன்னா கோவிந்தாவாயிரும்னு வைங்க அப்ப என்ன பண்ணனும் கண்ணாலத்தை போஸ்ட் போன் பண்ணிக்கிரனும்.

முக்கியமா குழந்தை விஷயம்.. கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் ஏதாச்சும் தகிடு தத்தங்கள் பண்ணி ( சேஃப்டி டேஸ், காண்டோம், காப்பர் டி ) குழந்தை உருவாகாம பார்த்துக்கனும்.

அடுத்தபடியா குரு எப்போ  அனுகூலமா வராரோ அப்போ குழந்தை பிறப்பை வச்சிக்கலாம். நவகிரகத்தோட பிடியிலருந்து விலக முதல் வழி,முக்கியமான வழி அது கொடுக்கிறத மட்டும் வாங்கிக்கிட்டு அடிஷ்னல் ஃப்ரூட்ஸ், ஓவர் ட்ராஃப்டுக்கெல்லாம் போகாம இருக்கிறதுதான். போனா லோ ஓல்டேஜ்ல ஆன் பண்ணி வச்ச ஃப்ரிட்ஜுக்கு மோட்டர் போயிர்ர மாதிரி, டிவிக்கு பிக்சர் ட்யூப் போயிர்ர மாதிரி கஷ்டம் , நஷ்டம் தப்பாது.


என்னங்கடா இது புத்தர் ஆசையே கூடாதுன்னார், ஜக்கி வாசுதேவ்  எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னார். இவரு அளவா ஆசைப்படுங்கறாரேனு குழம்பிராதிங்க.

புத்தர் ஆசையே கூடாதுங்கறார். உங்க மனசுல ஆசையெ இல்லன்னா உங்க கான்ஷியஸ் மைண்ட்  நிர்மலமாயிரும். சப்கான்ஷியஸ் ஆக்டிவாகும். அதுலயும் ஆசைகள் இல்லேன்னா உங்க ப்ரக்ஞை  இன்னும் ஆழமா  போகும். உள்ளாற ஹெவி டோஸ்  ஓப்பியம் கலந்த பீடாவை போட்ட மாதிரி மயக்கத்துல இருக்கிற ஆத்மால விழிப்பு வரும் . இது ஒரு டெக்னிக்

ஜக்கி வாசுதேவ் சொல்றாப்ல எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா என்னாகும் ? கிருஷ்ணர் கோகுலத்துல இருந்த எல்லா குட்டிகளையும் ( கண்ணாலமான குட்டிகள் உட்பட) கணக்கு பண்ணாரு. அவரோட கான்சன்ட் ரேஷன் எல்லா குட்டிங்க மேலயும் வைடா ஸ்ப்ரெட் ஆயிருச்சு. எந்த குட்டிமேலயும் அவருக்கு அட்டாச் மெண்ட் இல்லே. ஸ்பெஷல் இண்டரஸ்ட் இல்லே. பொசசிவா இல்லே. ஆனால் எல்லாத்தயும் கணக்கு பண்ணாரு. அதனாலதான் அவர் மேல அந்த குட்டிகளுக்கு அவ்ளோ ஜொள்ஸ். யமுனைல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறப்ப நான் உண்மையான அஸ்கலித பிரம்மசாரியா இருந்தா வழி விடுன்னாராம். உடனே யமுனை வழி விட்டுதாம்.

இதுலருந்து என்ன புரியுது ?  ஆசைங்கறது ஒரு வட்டம் மாதிரி. நீங்க  ஜீரோ டிகிரில இருந்தாலும், 360 டிகிரிக்கு போய்ட்டாலும்  எஃபெக்ட் ஒன்னுதான்.

இதை இன்னொரு உதாரணம் மூலம் விளக்கறேன்.

ஒரு ஏழை, பரம ஏழை இருக்கான்.  அவன் பையில பத்து பைசா கூட இருக்காது. முகேஷ் அம்பானியோ, அனில் அம்பானியோ பையில சில்லறையா எவ்ளோ வச்சிருப்பாங்கங்கறீங்க. ஜீரோ.

(திவாலா பார்ட்டியெல்லாம் ஆயிரம் ரூபா நோட்டா பாக்கெட்ல வச்சிருக்கும். அரை டஜன் ஏடிஎம், அரை டஜன் டெபிட்  கார்ட், முக்கா டஜன் க்ரெடிட் கார்ட் கழுத்துல தாம்பு கயிறு ரேஞ்சுக்கு செயின் எல்லாம் வச்சிருக்கும்.இதுங்க அரை குறைங்க. 20 அ 30 டிகிரில இருக்கிற பார்ட்டிங்க. இதுங்களை பத்தி பேச்சே கிடையாது)


இனி நம்ம தத்துவத்துக்கு வருவோம் . அளவா ஆசைப்பட சொல்றேன். அளவுன்னா உங்க வீட்டு அளவு,எங்க வீட்டு அளவு இல்லே. கிரகங்கள் கொடுக்க கூடிய  அளவு. இந்த ரேஞ்சுக்கு நீங்க வந்துட்டிங்கன்னா நீங்க இயற்கைல ஒரு பாகமாயிர்ரிங்க. ஆத்தோட மிதந்து போறமாதிரிதான்.

அடுத்து கிரகங்களோட பிடி  நம்ம மேல இறுக காரணம் அட்டாச் மெண்ட். பேதபாவம். என் பிள்ளை. பக்கத்து வீட்டுக்கார"ர்" பிள்ளை, அவனா.. வாட்ச் மேன் பிள்ளைனு நினைக்கிறேன்.

எப்போ நீங்க ஒரு பொருளை/ ஒரு மனிதனை/ ஒரு இடத்தை இது என்னோடது, இவன் என்னோட ஆளு, இந்த இடம் என்னோட இடம்னு நினைக்க ஆரம்பிக்கறிங்களோ உடனே அதுக மேல,அவிக மேல உங்க ஜாதகம் வேலை செய்ய ஆரம்பிச்சுருது.

இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.
வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு ஒரு பழமொழிய கேட்டிருப்பிங்க. இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.

வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.

ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.

இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.

இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.

இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன்,  இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.

முகேஷ் அம்பானிக்கு ஆயிரத்தெட்டு தொழில் இருக்கு அவரால எது மேலயாவது 100 சதம் கான்சன்ட் ரேட் பண்ணமுடியுமா ? ஊஹூம். அவர் அப்படி கான்சன்ட் ரேட் பண்ணாதான் அவரோட தலையெழுத்து அந்த தொழில் மேல வேலை செய்யும். தி ப்ளேனட் எஃபெக்ட்ஸ் யு வென் எவர் யு ஆர் இன் எ பொசிஷன் டு டேக் எ டெசிஷன் அண்ட் டேக் டெசிஷன்.

நீங்க முடிவெடுக்க கூடிய நிலைல இருந்து (சொந்த) முடிவை எடுத்தாதான் உங்க தலையெழுத்து அங்கே வேலை செய்யும். ஆக நவகிரகங்களிடமிருந்து விடுதலை பெறனும்னா இது என்னோடதுங்கற அட்டாச் மெண்டை விட்டுரனும்.

இன்னைக்கு நிறைய வீட்ல பையன்/பொண்ணு எல்.கே.ஜி.ல நூத்துக்கு ஒரு மார்க் குறைஞ்சுட்டா  இல்லாத ஆகாத்தியமெல்லாம் பண்றாங்க. நான் பத்தாம் கிளாஸ் படிக்கிற காலத்துல எங்கப்பா வருஷத்துக்கு ரெண்டு தரம் தான் ஊருக்கே வருவார். வர்ரப்பல்லாம் " டே இப்ப நீ எந்த க்ளாஸ் படிக்கிறே"னு கேட்டு தெரிஞ்சுக்குவார். அப்போ எனக்கு எஸ்.எஸ்.சில 72 % கிடைச்சது. நான் தான் ஸ்கூல் செகண்ட்.  நான் இண்டர் வரதுக்குள்ளே  அவரை  உள்ளூருக்கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க. படிபடின்னு கழுத்தறுக்கலன்னாலும் நிறையவே உபதேசம் பண்ணுவார். 100 அடி தூரத்துல இருக்கிற காலேஜுக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்தார். 50%. டிகிரி வந்தேன். செகண்ட் இயர்ல காலேஜ் எலக்சன்ல நிக்கறேன்னேன். ஆரம்பிச்சுருச்சு சனி. ரொட்டீன் அப்பாவாகி செமை கடி. அப்பத்துக்கு ட்ராப் ஆனேன். ஃபைனல் இயர்ல ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட்ரியா போட்டியிட்டேன். 468 ஓட்டு வாங்கி மூனு வோட்டு வித்யாசத்துல தோத்து போயிட்டன். ஃபைனல் இயர்ல டமால். ஒரு டெர்ம் விட்டு மறுபடி எழுதினேன் டமால்.

காரணம் என்ன ? அட்டாச் மெண்ட், அப்பாவோட அருகாமை. எஸ்.எஸ்.சில சக்ஸஸ் ஆக காரணம் என்ன ? டிட்டாச் மெண்ட் ,அப்பாவுடனான பிரிவு.

நவகிரகபாதிப்புலருந்து நீங்க விடுதலை பெறனும்னா..கிரகங்கள் கொடுத்திருக்கிற கோட்டா அளவுக்கே ஆசைப்படுங்க, உங்களுக்கு கிடைச்ச எதையும்  இது என்னோடதுன்னு நினைக்காதிங்க, சனத்தோட (பெண்டாட்டி,பிள்ளைன்னாலும் சரி )ஒட்டிக்காதிங்க. எட்டியே, பிரிஞ்சே வாழுங்க. ஸ்தூலமா இல்லேன்னாலும் சைக்கலாஜிக்கலா பிரிஞ்சிருங்க. ( சண்டை போடனும்னுல்ல ரிசர்வ்டா இருந்துட்டாலே போதும்) .

இன்னொரு டமாசு எவனையும்,எவளையும்( அப்பன், ஆயி, மனைவி, பிள்ளை, அண்ணன்,தம்பி)  திருத்த நினைக்காதிங்க.  நினைச்சா அவனை கெடுத்துக்கிட்டு  இருக்கிற கிரகம் உங்களுக்கு ஆப்பு வச்சிரும். ஒவ்வொரு மனுஷனும் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் அவிக போய் சேர வேண்டிய  அட்ரஸை மார்க்கர் பேனாலயே எழுதிவச்சிருக்கான். குடிக்கிறத நிறுத்தின பாவத்துக்கு விஷம் குடிச்ச வி.ஐ.பி பத்தியும், மூணு மாசத்துக்கொருதரம் குளிக்கிற பார்ட்டிய குளிக்க வச்ச பாவத்துக்கு
விபத்துல சிக்கின பார்ட்டிய பத்தியும், அதுக்குண்டான காரண காரியங்களை பத்தியும் அடுத்த பதிவுல பார்ப்போம்.