நண்பர் ஒருவர் தமிழ் தெலுங்கு இரண்டும் தெரிஞ்ச நீங்க எங்களுக்கு தெலுங்கு கற்றுத்தரலாமே என்று சொன்ன போது அதான் குமுதத்துல சிலுக்கு கத்து குடுத்தாங்களேன்னிட்டன். (அவிக கிட்டே தெலுங்கு கத்துக்கிட்டவுகளுக்கு இப்போ
ஏதாச்சும் டவுட் வந்தா எப்படிங்கண்ணா?)
திடீர்னு ஒரு நாள் என்.டி.ஆர் சினிமாலருந்து ஒரு காட்சிய தமிழ்படுத்தி கொடுத்தேன்.
திடீர்னு ஒரு நாள் தெலுங்கு திரை இலக்கியத்தில் சிருங்காரம்னு ஒரு பதிவு போட்டேன்.
பிரபலமாறதுக்கு முந்தியே அம்மனுக்காக நான் தெலுங்கில் எழுதிய கவிதைய தமிழ் எழுத்துக்களை உபயோகிச்சு பதிவு போட்ட தில்லு துரை நாம.
ஓகே இன்னிலிருந்து அல்லாரும் தெலுங்கு கத்துக்கிடனும் ஓகேவா. ஆமா இது எதுக்கு உதவும்? தெலுங்குகுட்டிகளை கணக்கு பண்ணலாம். முருகேசன் ஏதாச்சும் தெலுங்குல ஏதாச்சும் மேற்கோள் காட்டினா அது சரியா தப்பா பார்க்கலாம். இல்லனா..
ரொம்ப முக்காதிங்க ராசா .. கார்ல் மார்க்ஸ் தெரியுமில்லியா ? அவர் சொன்னார் "வாழ்க்கை போராட்டத்துல கூடுதல் மொழிங்கறது ஒரு ஆயுதம்"
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" ஸோ முதல்ல தெலுங்கு எழுத்துக்களை கத்துக்கங்க ராசா. ஜிலேபி சுத்தனாப்ல இருக்குனு நக்கலடிக்காம ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு போய் எழுதிபாருங்க. நாம அ,ஆ,இ,ஈ ஐ தமிழ்ல உயிர் எழுத்துங்கறோம். அவிக "அல்லுலு" நாம க,ங, ச, ஞ வை மெய்யெழுத்துங்கறோம்.அவிக "அச்சுலு"
சரி முருகேசன்லு பாடத்தை ஆரம்பிங்கங்கறிங்க அப்படித்தானே .உடு ஜூட்
అ-அ
ఆ-ஆ
ఇ-இ
ఈ-ஈ
ఉ-உ
ఊ-ஊ
ఋ- று( இந்த எழுத்தை எல்லாம் இப்ப உபயோகிக்கிறதில்லைங்கண்ணா)
ౠ-றூ
ఎ -எ
ఏ-ஏ
ఐ-ஐ
ఒ-ஒ
ఓ-ஓ
ఔ-ஔ
అం-அம்
అ:-அஹா
இன்னைக்கு இதுவே போதும். அச்சுலுவை நாளைக்கு பார்ப்பம். ஓகே
క ఖ గ ఘ ఙ
చ ఛ జ ఝ ఞ
ట ఠ డ ఢ ణ
త థ ద ధ న
ప ఫ బ భ మ
యరలవశ స హ క్ష