Sunday, April 11, 2010

சோனியா சனியின் தூதுவர்

அண்ணே வணக்கம்னே.சனத்துக்கு சோசியம் சொல்லி சொல்லி பேஜார் ஆயிருச்சுண்ணே . அதான் இந்த பதிவுல நம்ம இன்டியாவுக்கே  நியூமராலஜி சொல்லியிருக்கேன். முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி,தொண்டு கிழ‌மான‌ பி.வி.ந‌ர‌சிம்ம‌ ராவ்,ஒட்டிய‌ முக‌ம் கொண்ட‌ சோனியா எல்லாம் எப்படி நம்மை ஆள முடியுதுங்கறதுக்கு பதில் எண் கணிதத்துல இருக்குண்ணே. பை தி பை உனக்கு22 எனக்கு 32 தொடரோட லேட்டஸ்ட் அத்யாயத்தை போட்டிருக்கேன். அதை படிக்க இங்கே அழுத்துங்கண்ணே

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த தேதி 15/08/1947. இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 6 வரும்.  நியூமராலஜி படி இதுதான்  நம் நாட்டின் உயிர் எண். இதன் அதிபதி சுக்கிரன். தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 8 வரும். இதை ஸ்தூல எண் என்பார்கள் இதற்கு அதிபதி சனி.

நம் நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது 26/01/1950 . இதில் தேதியை மட்டும் கூட்டுங்கள். 8 வரும். இது உயிர் எண். இதற்கு அதிபதி சனி.தேதி,மாதம்,ஆண்டு எல்லாவற்றையும் கூட்டி ஒற்றை எண்ணாக்குங்கள். 6 வரும். இது ஸ்தூல எண்.  இதற்கு அதிபதி சுக்கிரன்.

ஆக‌ எண்க‌ணித‌ப்ப‌டி ந‌ம் நாடு சுக்கிர‌ன்,ச‌னி ஆதிக்க‌த்தில் உள்ள‌து. இத‌ற்கான‌ ப‌லா ப‌ல‌ன் கள் என்ன‌? கெட்ட‌ ப‌ல‌ன் க‌ள் ஏற்ப‌ட‌ கார‌ண‌ம் என்ன‌? இத‌ற்கு ப‌ரிகார‌ம் என்ன‌? என்பதை இந்த பதிவில்  பார்ப்போம்.


 ஜோதிட‌ விதிப்ப‌டி ச‌னியும் சுக்கிர‌னும் ந‌ட்பு கிர‌க‌ங்க‌ளே. ஆன‌ல் ச‌ற்றே ஆழ‌மாக‌ யோசித்தால் இந்த இரண்டு எண்களிடையில் ஒரு ஆழமான முரண்பாடு இருப்பதை அறியலாம்.   ச‌னி ஏழ்மை,ப‌சி,ப‌ட்டினி,தாம‌த‌ம்,கூலிக்கு மார‌டித்த‌ல்,ஏழை ம‌க்க‌ளை இம்சித்து பொருளீட்டுத‌ல்,முதிய‌வ‌ர்க‌ள் அங்க‌ஹீன‌முள்ள்வ‌ர்க‌ளை காட்டும் கிர‌க‌மாகும்.இதுவே இந்தியாவின் முன்னேற்ற‌த்தை முட‌க்கி ஏழ்மையை  தொடரச்செய்கிறது என்று ஆணித்த‌ர‌மாக‌ கூற‌லாம்.

முட்டிவ‌லியால் அவ‌ஸ்தைப் ப‌ட்ட‌ வாஜ்பாயி,தொண்டு கிழ‌மான‌ பி.வி.ந‌ர‌சிம்ம‌ ராவ்,ஒட்டிய‌ முக‌ம் கொண்ட‌ சோனியா ,எல்லோருமே ச‌னியின் தூதுவ‌ர்க‌ள்தான்.

சுக்கிர‌ன் காத‌ல், சிற்றின்ப‌ங்க‌ளின் மீதான‌ நாட்ட‌த்துக்கு காரகர்.  நேருவுக்கும், லேடி மவுண்ட் பேட்ட‌ன் இடையில் காத‌ல், இந்திரா, ராஜீவ், பிரியாங்கா  காத‌ல் திரும‌ண‌ம் ஆகிய‌வற்றிற்கும் இந்த சுக்கிர ஆதிக்கமே காரணம்.இதோடு ம‌க்க‌ள் தொகையும் பெரும‌ள‌வில் அதிக‌ரித்து வ‌ருகிற‌து. ம‌த்திய‌ அர‌சாங்க‌ முடிவுக‌ளில் பெண்ணான‌  நாளிதுவரை சோனியாவின் ஆதிக்க‌ம் தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.இதோ பெண்களுக்கு சட்டமன்றங்களில் 33 சதவீதம் ஒதுக்கீடு கூட அமலாக போகிறது . (3+3= 6)

க‌லை உள்ள‌ம் கொண்ட‌ நேரு, இள‌மை தோற்ற‌ம் கொண்ட‌ இந்திரா,ஓவிய‌ரான‌ வி.பி.சிங் எல்லாம் சுக்கிர‌னின் தூதுவ‌ர்க‌ள் . இவ‌ர்க‌ளின் ஆட்சி ச‌னியின் த‌டைக‌ளையும் மீறி ஓர‌ள‌வேனும் ஏழை ம‌க்க‌ளின் உண‌வு,உடை,இருப்பிட‌ம் (சுக்கிர‌னின் ஆதிப‌த்ய‌ம் உள்ள‌) ஆகிய‌ விஷ‌ய‌ங்க‌ளில் கவனம் செலுத்தப்பட்டது.


ச‌ரி இத‌ற்கு என்ன‌தான் தீர்வு?
சுக்கிரன் என்றால் கூட்டுற‌வு. இதென்னடா சுக்கிர‌ன் என்றாலே  செக்ஸ் தானே. இவர் என்ன புதிதாக கூட்டுறவு என்கிறார் என்று  திகைக்காதீர்கள்.

சமீபத்தில் ஒரு நண்பர் என் பதிவொன்றுக்கு "  ஹூ ஈஸ் ஹேப்பி ஆன் பெட் வில் பெயிண்ட் தி டவுன் " என்ற கொட்டேஷனை  மறுமொழியாக இட்டார்.

எவனொருவன் செக்ஸை எவ்வித குற்ற உணர்ச்சியும், மூட நம்பிக்கையுமின்றி ஆழமாக அனுபவிக்கிறானோ அவன் பெண்ணுடன் இரண்டற கலக்கிறான். முழுமை பெறுகிறான்.  தன் ஆன்மாவை கண்டு கொள்கிறான். தன்னுள் உள்ளதே அவளுள்ளும் இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக அறிகிறான்.அவன் தன் ஆன்மாவை கண்டு கொள்வதால் அதுவரை ஆன்மாவே போல்,உயிரே போல் பாவித்து காத்து வந்த  ஈகோ கரைந்து போகிறது . ஈகோ இல்லாதவன் எவருடனும் இணைந்து பணியாற்றும் இணக்கத்தை பெறுகிறான்.

காமத்தை திறந்த மனதுடன்  அங்கீகரித்த  சமுதாயம் அன்றைய சூழலை மனதிலிருத்தி பால்யவிவாகத்தை கொண்டுவந்தது. பால்ய விவாகத்தின் தாத்பரியத்தை அறியாத பிரிட்டீஷார் அதை முரட்டுத்தனமாய் சட்டம் கொண்டு ஒழித்து கட்டினர். பால்ய விவாகத்தை ஒழித்துக்கட்டிய பிரிட்டீஷ் அரசு ஒரு மாற்று ஏற்பாட்டையும் செய்திருக்கலாம். செய்யவில்லை.

காம துய்ப்பின் வழியே தன் ஈகோவிலிருந்து விடுதலை பெற வேண்டிய இளைய சமுதாயம் பூதமாய் கிளம்பும் காமத்தையும், காமத்தை ஏறக்குறைய தடை செய்து வைத்திருக்கும் சமுதாயத்தையும் ஒரு சேர கண்டு மிரண்டது. சிலர் காமத்தில் சிக்கி சீரழிய,பலர் இரட்டை வேடம் போட்டபடி தம்  காம இச்சையையே தன தாகமாகவும், பதவி வெறியாகவும்,வன் முறையாகவும் வெளிப்படுத்தும் நிலை வந்துவிட்டது.காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற தொன்மையான இந்திய சம்பிரதாயத்தை ஒரு ஓஷோ வந்துதான் நினைவுறுத்த வேண்டியதாகிவிட்டது.

செக்ஸ் மீதான புரிதல் இன்றி ஜஸ்ட் ஈகோ ஒன்றையே தம் உயிரே போல் பாவிக்கும் நிலையில் சமூகத்தில் கூட்டு முயற்சி என்பது கனவே ஆகிவிட்டது.

கோழியிலிருந்து முட்டை. முட்டையிலிருந்து கோழி  என்பது போல் செக்ஸ் மூலம்  ஈகோவிலிருந்து விடுதலையும், அதிலிருந்து கூட்டு முயற்சியும் தோன்றுவது போல சற்றே முயற்சித்தால் கூட்டு முயற்சி மூலம் ஈகோவிலிருந்து விடுதலை பெற்று (மன,அரசு,சமூக ) தடையற்ற காமத்தை பெற்று  ஈகோவிலிருந்து நிரந்தர விடுதலை பெறலாம்.   இது எப்படி சாத்தியம் என்பதை அடுத்தடுத்த பாராக்களில் பாருங்கள்.


ச‌னி என்றால் விவ‌சாய‌ம். சுக்கிரன் என்றால் கூட்டுற‌வு. சப்போஸ் கூட்டுறவு  ப‌ண்ணை விவ‌சாய‌ம் அம‌லாகிறது என்று வையுங்கள். எலி தரைக்கும்,தவளை தண்ணீருக்கும் இழுத்த கதையாய் இந்தியாவை அல்லாட செய்த  உயிர் எண், கூட்டு எண் விஷயத்தில் ஒரு ஒத்திசைவு ஏற்பட்டுவிடும்.

ஆனால் இந்திய விவசாயத்துறைக்கு பெரும் சவாலாக  இருப்பது பாசன நீர் பற்றாக்குறை. இதற்கு தீர்வாக நதி நீர் இணைப்பு திட்டத்தை மேற்கொள்ளலாம். சம்பிரதாய முறைகளில் ( டெண்டர், காண்ட் ராக்ட்) இந்த  இணைப்பை மேற்கொண்டால் திட்டம் நிறை வேறுவதற்குள் கங்கை வறண்டு விடலாம். காவிரி ஜீவ நதியாக மாறிவிடலாம்.

எனவே நாட்டில் உள்ள வேலையற்ற ஆண்,பெண்களை கொண்டு ஒரு சிறப்பு ராணுவம் ஏற்படுத்தலாம். நதிகளை இணைக்கும் கால்வாய்கள் வெட்டும் வேலையை அந்த சி.ரா.மேற்கொள்ளலாம்.

கோழியிலிருந்து முட்டை. முட்டையிலிருந்து கோழி  என்பது போல் செக்ஸ் மூலம்  ஈகோவிலிருந்து விடுதலையும், அதிலிருந்து கூட்டு முயற்சியும் தோன்றுவது போல சற்றே முயற்சித்தால் கூட்டு முயற்சி மூலம் ஈகோவிலிருந்து விடுதலை பெற்று (மன,அரசு,சமூக ) தடையற்ற காமத்தை பெற்று  ஈகோவிலிருந்து நிரந்தர விடுதலை பெறலாம்.  வடக்கு, தெற்கு,சாதி,மதம், மொழி ,கலாச்சார வேறுபாடுகளை கடந்து சி.ராணுவத்து யுவதி,யுவர்களிடை. காதல் தோன்றும். அரசு இவற்றை அங்கீகரித்து திருமணம் & விவாகரத்து சட்டத்தை எளிமையாக்கினால் போதுமானது. ஒரு புதிய சமுதாயம்.. எவ்வித மனச்சிக்கல்,சிடுக்குகள் அற்ற சமுதாயம் தோன்றும்.


விவ‌சாய‌ கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளில் பெண்க‌ளுக்கு ச‌ம‌மான‌ இட‌ம் த‌ர‌ப்ப‌ட்டு பூக்க‌ள்,ப‌ழ‌ங்க‌ள் தொட‌ர்பான‌ உற்ப‌த்தியில் க‌வ‌ன‌ம் செலுத்தினால் ச‌னி,சுக்கிர‌ தொட‌ர்பினால் ஏற்ப‌ட்ட‌ முன்னேற்ற‌ த‌டைக‌ள் வில‌கி சுக்கிர‌னின் ஆதிக்க‌த்திற்குட்ப‌ட்ட‌ உண‌வு,உடை,இருப்பிட‌ம் ஆகிய‌ன‌ எல்லோருக்கும் கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். அதோடு ம‌க்க‌ள் தொகை பெருக்க‌மும் க‌ட்டுப் ப‌டுத்த‌ப்ப‌டும்.இது ஜோதிட‌ ரீதியில் ம‌ட்டும் அல்ல‌ விஞ்ஞான‌ முறைப்ப‌டியும் சாத்திய‌மே. இது எப்ப‌டி ஏற்ப‌டும் என்ப‌தை பின்ன‌ர் விவ‌ரிக்கிறேன்.