இன்னாங்கடா இது அக்குறும்பா இருக்கு இத்தினீ நாளு மன்சங்க எல்லாம் ஃபுட் பால் மாரி. நவ கிரகம் எல்லாம் ஃபுட் பால் ப்ளேயர் மாரி. அதுக எப்படி உதைச்சா அந்த பக்கம் போயி உழ வேண்டித்தானு சொல்லிக்கினு இர்ந்த முருகேசு கபால்னு இப்படி ஒரு பதிவை போடறாருன்னு கும் மாயிட்டிங்களா?
இதுக்கே இப்டி டீலாயிட்டா எப்டி இன்னும் நெறய சரக்கு கீது நைனா. இத்னீ நாளு இந்த கிரகம் இங்கே நின்னா இப்டி , அங்கே நின்னா அப்டினு சொல்லிக்கினு கட்ந்தேனா.எனுக்கே பேஜாரா பூட்சிபா. நம்ம பெரியாரு பொறந்த நாட்ல, அவரு சாமியே இல்லே பூடுங்கடான்னு சொன்ன நாட்ல நாம ஜோசியம்,ஜாதகம்னு சொல்லிக்கினு கட்ந்தா கூடொ கேட்க ஆளிருக்கே..இன்னும் எத்தினி ஆயிரம் பெரியார் பொறந்தாலும் இந்த சனத்தை திருத்தவே முடியாதானு ரோசிச்சிக்கினு கட்ந்தேனா அப்போ கப்புனு ஒரு ஐடியா வஞ்சுபா.
சனங்க எதிர்காலத்தை இந்த ஜாதகங்களை வச்சி சொல்ல முடியறதாலதான் நித்யானந்தா சாமி மாரி டுபாகூர் பார்ட்டிங்க இந்தா மாரி ஆட்டமெல்லாம் போடறானுங்கோ கடவுளை கூடொ மறந்துட்டு இந்த நாத்தம் புட்ச சாமியாருங்களுக்கு சரண்டராவுறாங்கோ. அந்த கெரகத்துக்கே டேக்கா குடுக்க கத்து குடுத்துட்டா எப்டி கீயும்னு ரோசிச்சி ரோசிச்சி புச்சு புச்சா பரிகாரம் எல்லாம் கண்டு புட்சேன் நைனா..
அயிரை மீனுக்கு வேட்டி விரிச்சப்ப கொற மீனு மாட்னாப்ல ஒரு ஜவாப் கெட்சிச்சிப்பா. இப்போ நீ என்னை துரத்திக்கினு வரே. நீ என்னை புடிக்கனும்னா உனக்கு எதோ புடிப்பு கிடைக்கனும். என் அங்கவஸ்திரமோ, வேஷ்டி முனையோ, தலை மயிரோ, கையோ காலோ எதோ ஒன்னு கட்சாதான் உன்னால என்னை புடிக்க முடியும்.
இந்த ஆமை கீதுல்ல ஆமை அந்த மாதிரி கை,காலெல்லாம் உள்ளாற இஸ்துக்கினா எப்டிப்பா புடிக்க முடியும். இந்த கெரகம் எல்லாம் நம்மாளுங்களை எப்போ எஃபெக்ட் பண்ணுது தெரியுமா? அது குடுக்க நென்ச்சத விட மஸ்தா ஆசைப்பட்டு,அலைஞ்சி பறைசாத்தற பாரு அப்பத்தான் எஃபெக்ட் குடுக்குது.
ஒரு பேச்சுக்கு சொல்லிக்கிவம். உனக்கு ஒங்க ஊட்டு வேலைக்காரிதான் பெண்டாட்டியா வரனும்னு கீது. நீ அவளை கட்டிக்கிவியா.ஊஹூம்..பில் குல் கட்டமாட்டே. ஊர்ல கீற குடுமி அய்யருங்கோ, சாஸ்திர காரவுங்க்கோ எல்லாத்தயும் தாலியறுத்து யாகம் கீகம் பண்ணி சுமாரா ஒரு பொண்ணை கட்டிக்கிறேனு வை.
_____________---
ஜாதகம்னா இன்னா தெரீமா? ஆகாசத்துல கச்சா முச்சானு நட்சத்திரங்க கீதுல்ல. அந்த மேப்பு தாம்பா ஜாதகம். ஆகாசத்துல கோயி முட்டை ஷேப்ல கீரத நம்ம வசதிக்கு சதுர்ரமா போட்டுக்குரோம் அம்புட்டுத்தான்.
அந்த சதுரத்தை 12 டப்பாவா பிரிச்சி வச்சிகிரானுங்கல்லே. அது டப்பா இல்லே மாமு.. ஒரு ஏரியானு வச்சிக்கியேன். மொத்தம் 12 ஏரியா கீது. ஒவ்வொரு ஏரியாவுக்கு
30 டிகிரி. மொத்தம் 12 டப்பா 12X30 = 360 டிகிரி.
நட்சத்திரம் நட்சத்திரம்ன்றாங்களே அது சிங்கிள் நட்சத்திரம் இல்லேமா. ஒரு க்ரூப்பு . இப்போ அஸ்வினின்றானுங்கோ. அஸ்வினின்னா இன்னா குதிரே. குதிரே ஷேப்ல இருக்கிற நட்சத்திர க்ரூப்பை அஸ்வினின்னானுங்கோ. பிரியுதா..
ஒரொரு நட்சத்திரத்தையும்(அதாம்பா க்ரூப்பு) 4 பாகமா பிரிச்சானுங்கோ.இந்தா மாதிரி கீர பாகத்துல 9 பாகம் சேர்ந்தது ஒரு ராசி. ஒரு ராசிக்கு ஒரு டப்பானு 12 டப்பா போடறானுங்கோ. ஒரு ராசிக்கு 9 பாகம் . 12 ராசிக்கு 108 பாகம். இது எங்கயோ ஆகாசத்ல கீதுனு சொன்னேன். அதுல ஒன்னும் மாத்தமில்லே.
ஆனால் அதே செட்டப்பு நம்போ பாடிலே கூட கீதுபா..இந்த டப்பாவுங்களை நெல்லா பாருங்கோ. ரைட்டு ,லெஃப்டு, டாப்பு,டவுனு எப்டி பார்த்தாலும் நாலு நாலு டப்பா தெரியுதா.
இந்த டப்பாவுங்களை அப்டியெ அடிச்சி நிமிர்த்தி நிக்க வை மாமூ.. அத்தான் மன்சன். மொத டப்பா கீது பாரு அதான் தலை. ரெண்டாவது டப்பா கண்ணு,வாயி, இப்டி 12 ஆவது டப்பா பாதத்தை காட்டுது.
அங்கே ஆகாசத்துல எப்டி கிரகம் எல்லாம் ரவுண்ட் அடிக்குதோ அதே மாதிரி இங்கனயும் அதாம்பா நம்ப பாடிலயும் ரவுண்ட் அடிக்குது. இத்த தான் பெரி மன்சனுங்கோ அண்டத்ல கீர்து பிண்டத்துல கீது.பிண்டத்ல கீர்து அண்டத்ல கீதுனு சொல்லி வச்சிருக்கானுங்கோ.
நம்போ ஆகாசத்துக்கு போயி அங்கே இன்னா நடக்குதுனு பார்க்கனும்னா இஸ்ரோ காரன் விடற ராக்கெட்ல தான் போய் பார்க்கனும். ஆனால் நம்ப பாடில இன்னா நடக்குதுனு கொஞ்சம் கான்சன்ட் ரேட் பண்ணா பார்க்கமுடியுமில்லியா? இத்தை கண்ட் ரோலுக்கு கொண்டார முடியுமில்லியா. இதை பத்தி வெவரமா சொல்னும்பா .. அப்பாறமா பார்ப்போம்.