Thursday, April 22, 2010

இஸ்லாம் சில கேள்விகள் : 2

இஸ்லாம் சில கேள்விகள் என்ற எனது  பதிவுக்கு சரித்திரம் காணாத வகையில் 22 மறுமொழிகள் இடப்பட்டது தெரிந்ததே.

இந்த மறுமொழிகளுக்கான  என் விளக்கத்தை கமெண்ட் ஃபார்மிலேயே  துண்டும் துண்டாக போடுவதை விட தனிப்பதிவாகவே போடலாம் என்ற எண்ணத்தில் இந்த பதிவை துவங்குகிறேன்.

என் ராசி சிம்மராசி. வாக்கில் சனி. இந்த நேரத்துல இப்படி ஒரு பதிவா ..என்ற தயக்கம் பிறந்தது உண்மை.  ஆனாலும் என் சின்ஸியாரிட்டி புரிந்துகொள்ளப்படும் அல்லாஹ் புரியவைப்பார் என்ற தைரியத்தில் தான் மேற்படி பதிவை போட்டேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. இறைவன் பேரருளாளன். எல்லா புகழும் இறைவனுக்கே.
_____________________

முதலில் பதிவுலகில்  அனாமதேயமாக இருந்த  அந்த நாள் முதல் இந்த நாள் வரை தட்ட வேண்டி வரும்போது தட்டியும், குட்ட வேண்டி வந்தால் தயங்காமல் குட்டியும் வரும் கோவி கண்ணன் அவர்கள் 786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்ற எனது கேள்விக்கு பதிலாக ஏற்கெனவே ஒரு பதிவை போட்டிருப்பது தெய்வ சங்கல்பம் தான்.

அடிக்கடி நான் சொல்வது வழக்கம். "கேள்வி முதலில் பிறப்பதில்லை. ஏற்கெனவே இருக்கும் பதில் தன்னை வெளிப்படுத்தி கொள்ள கேள்வியை பிறப்பிக்கிறது."
கண்ணுள்ளவர் பார்க்க கடவர். காதுள்ளோர் கேட்க கடவர் என்பது போல நான் கண்ணில்லாத குருடனாய் இருந்து வந்துள்ளேன்.

ச்சொம்மா அப்படி கூகுலில் போய் 786 என்று தேடியிருந்தால் கண்ணன் அவர்களின் பதிவு மாட்டியிருக்கும். பெட்டர் லேட் தேன் நெவர்.

___________________________________

கோவி. கண்ணன் அவர்கள்:
 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்பதை அரபியில் எழுதி அந்த எண் முறைக்கு மாற்றினாலும் '786' தான் வரும் என்று '786 உண்மைகள்(The Myth of 786)' பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அடியேன்:
வேற்றுமையில் ஒற்றுமை காணும் இது போன்ற அம்சங்கள் பரவலாக வெளிச்சத்துக்கு வராதது துரதிர்ஷ்டமே . உண்மை என்னவோ ஒன்னுதான் தலீவா ! அதை ஒரு உன்னதமான கணத்துல சில உன்னதமான மனிதர்கள் வாங்கறச்ச கூட இந்த பாழாப்போன தன் முனைப்பு  சேர்ந்து  மேற்படி உண்மை கரப்ட் ஆயிருச்சோனு கூட ஒரு சம்சயம் உண்டு.

அந்த தன்முனைப்புக்கு இடம் தரக்கூடாதுனுதான் எனக்கு தோணினதை தோணின படி பரஸ்பரம் எத்தனை முரண்பாடுகள் இருந்தாலும் அதை பத்தி கவலைப்படாம வாந்தி பண்ணிர்ரத வழக்கமா வச்சிருக்கேன்.

________________________________________

 கோவி கண்ணன்:
//இந்து மதத்திலாவது சூத்திரன் வேதம் படிச்சா நாக்கை அறு, சூத்திரன் வேதத்தை கேட்டா காதுல ஈயத்தை காச்சி ஊத்துனு வேதங்களை சரோஜா தேவி புஸ்தவம் மாதிரி மறைச்சு வச்சு படிச்சாங்க.//
I like this :)

அடியேன்:
சார் .. இந்த வேதங்களை அவிக மறைச்சு வச்சதுக்கு அசலான காரணம் என்னடான்னா அதுல இருக்கிற லூப் ஹோல்ஸ் வெளிப்பட்டுர கூடாதுங்கறதுதான்.
நான் என்ன நினைக்கிறேன்னா அதை பூட்டி வச்சதால என்னாச்சு  அதுல இருக்கிற லூப் ஹோல்ஸ் மறைக்கப்பட்டாற்போலவே  அதுல உள்ள கொஞ்ச நஞ்ச  விஷயம்  கூட மறைக்கப்பட்டுருச்சு. வீணா போயிருச்சு. அது சஸ்பிஷியஸ் ஆயிருச்சு. எல்லாமே டுபுக்கோங்கற எண்ணம் வந்துருச்சு

காசு பணத்தை வேணம்னா நான் தான் பொறுக்கினேனு நினைச்சுக்கலாம். ஆனால் அறிவுங்கறது ? ஞானங்கறது ? அது தேடிப்பெறுவதல்ல .. தானாய் வரப்பெறுவது. எங்கிருந்தோ இறங்கி வருவது.  ஏற்கெனவே நான் சொன்னமாதிரி நம்  தன் முனைப்பால் கரப்ட் ஆகியிருக்க கூடியது. அது தரப்பட்டது தனியொருவனின்  நலம் நாடியல்ல.

அதை அவன் பெற்ற போது ஒரு உன்னத மன நிலையில் இருந்திருப்பான். அதன் பின் அவன் மனம் அதோமுகமாக பயணப்பட்டிருக்கலாம் . கு.ப அதன் பொருளை ,உட்பொருளை கூட ரி கலெக்ட் பண்ணிக்க முடியாத ஸ்டேஜுக்கு வந்திட்டிருக்கலாம்.

அதை  வாத்தியார் பாடின மாதிரி கொடுத்ததெல்லாம் கொடுத்தான் (அது கடவுளோ ,ரிஷியோ) அதை ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்ங்கற எண்ணத்தோட பப்ளிசைஸ் பண்ணியிருந்தா அது பரிசீலிக்கப்பட்டிருக்கும். பரீட்சிக்கப்பட்டிருக்கும். முழுமை பெற்றிருக்கும். அத தடுத்துட்டானுவளேங்கற கடுப்புதான் என் பிராமணீய எதிர்ப்புக்கு முதல் காரணம்.

_____________________________________________________________-

கோவி,கண்ணன்:
//11. வரதட்சிணைக்கு தடை அதற்கு பதில் மொஹர்
    இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.//

கீழக்கரை, நாகூரில் வரதட்சனை லட்சங்களில் கொடுப்பது இஸ்லாமிய திருமண வழக்கம் ஆகி ஆண்டுக்கணக்காச்சு சாமியோவ்

அடியேன்:
மனிதர்களோட சைக்காலஜியே இதுதாங்கண்ணா. நான் முஸ்லீமா பிறக்காம போயிட்டமேனு வருந்தறேன். ஏன் பிறக்காததால. அவிக இஸ்லாமோட கொள்கைகளை குழி தோண்டி புதைக்கிறாங்க ஏன்? அவிக முஸ்லீமா பிறந்துட்டாங்களே. பெற்று  விட்ட வரத்தையெல்லாம் சாபமாவும் , பெறாததையெல்லாம் வரமாவும்  நினைக்கிறதுதான் மனுஷனோட சைக்காலஜியா இருக்கு. ஒன்னை இழக்கறவரைக்கும் அதனோட அருமை தெரியவே மாட்டேங்குது மனுஷனுக்கு. இந்த அம்மா சென்டிமென்ட் படங்கள் இந்த அளவுக்கு க்ளிக் ஆக காரணம் எவனும் ( நான் உள்பட) வாழ்ந்திருந்த காலத்துல தாயை கொண்டாடியிருக்கமாட்டான். நபிகள் (சல்) சொல்கிறார் "சுவர்கம் உன் தாயின் காலடிகளில் இருக்கிறது"
__________________________________________________

கோவி.கண்ணன்:

 //பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ? //

அருமையான,நடு நிலைப் பதிவு. முஸ்லிம்கள் விளக்கம் கொடுக்கலாம் அல்லது
கொடுக்காமலே இருக்கலாம். இந்தப் பதிவுக்கு சீறுப‌வர்கள் முஸ்லிம்களாய் இருக்க மாட்டார்கள். இஸ்லாம்/முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சி உடையோர், சீண்ட வாய்ப்பிருக்கிறது
அடியேன்:
உங்க கணிப்பு இந்த நிமிடம் வரை 50% நிஜமாகியிருக்கிறது.
"இஸ்லாம்/முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சி உடையோர், சீண்ட வாய்ப்பிருக்கிறது" இந்த பாயிண்ட் இதுவரை நிஜமாகலே. நாளை நடப்பதை யாரே அறிவார்.

_______________________________________

கோவி.கண்ணன்:
  //குர்திஷ், சன்னி,ஷியா,லெப்பை //
குர்தீஷ் என்பது குர்தீஷ் மொழி பேசக்கூடைய முஸ்லீம்கள் தான். அவர்களின் பெரும்பான்மையினர் சன்னி முஸ்லீம்கள். அது ஜாதி வேறுபாடு அல்ல அது மொழி அடிபடையிலான பிரிவு.
அடியேன்:
தவறான தகவலை திருத்தியமைக்கு நன்றி. ஆனால் தலீவா ! பிரிச்சது சாதியா இருந்தா என்ன ? மொழியா இருந்தா என்ன ? பிரிவு வந்துருச்சுல்லியா. இஸ்லாம் சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் தானே வலியுறுத்துது.
_________________________________________

கோவி.கண்ணன்:
//குர்தீஷ்கள் ஈரான், ஈராக், சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் பரவி வாழுகின்றனர். இந்த பகுதிகளை ஒண்றினைத்து குர்தீஸ் நாடு என்ற தனி நாடு கோருகிறார்கள். அந்த கோரிக்கையை அந்தந்த நாடுகள் தனது ரானுவ பலத்தைக் கொண்டு அடக்குகிறார்கள். அதனால் வந்த பிரிவினைதான் தவிர. தனி பிரிவு அல்ல.//
இஸ்லாமாலயே இணைக்க முடியாத மனங்களை வேற எது வந்து இணைக்க போவுதுன்னு அயர்ச்சி தான் ஏற்படுது.
______________________________________________

ஷாகுல்:

 சன்னி பிரிவு என்பது முகமது நபியவர்களி பின்பற்றுவது என்பதாகும்.
ஷியா என்ற பிரிவு நபியவர்கலீன் மருமகனாகிய அலி என்பவரை பின்பற்றுபவர்கள். அவர்கள் ஒரு கை உருவத்தை வணம்க்குவார்கள்.
அடியேன்:
தகவலுக்கு நன்றிங்கய்யா..

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு . நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கு தாழ்வே"ங்கற விஷயத்தை புரிஞ்சி நடந்திருந்தா இந்த பிரிவே ஏற்பட்டிருக்காது.

ஷாகுல்:
(காங்கிரசின் கை அல்ல)
அடியேன்:
 நல்ல ஜோக் ! காங்கிரசோட கை சாதாரண  கையில்லிங்கண்ணா.. அது பஸ்மாசுர ஹஸ்தம்.

ஷாகுல்:
இது இஸ்லாத்தின் வணக்க முறைக்கு எதிரானதாகும். இருப்பினும் அவர்களும் குரான்னையே வேதமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குரானை ஏற்றுக்கொண்டவர்கள் என்றால் ஓரிறை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் என்று தான் பொருள்.

இறைவனுக்கு இணை வைக்க கூடாது என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்று தான் பொருள். 
 .
இந்த நிலையில் ஒரு பிரிவினர்  முகமது நபி அவர்களை பின் பற்றுவதும்  மற்றொரு பிரிவினர்  கையை வணங்குவதும்   இஸ்லாமின் ஆணி வேரையே அசைப்பதாகிறதே.
______________________________________
ஷாகுல்:
லெப்பை ராவுத்தர் மற்றும் மரைக்காயர் போன்ற பிரிவுகள் தமிழ் நாட்டில் மட்டுமே இருக்க கூடிய பிரிவுகள். இது ஜாதி பிரிவு அல்ல. லெப்பை ராவுத்தர் வீட்டிலிருந்து பெண் எடுக்கிறார்கள் கொடுக்கிறார்கள். மரைகாயரும் அப்படிதான். விரிவாக பார்க்க http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D இங்கு செல்லவும்.
அடியேன்:
தகவலுக்கு நன்றி.
___________________________________
 ஷாகுல்:
 //அதன் வாசனை கூட எட்டாத முசல்மான்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்//

முன்னொரு காலத்தில் டாக்டர்களும் வக்கில்களும் மார்க்க அறிங்கர்களாகவே இருந்தனர். அதாவது நடமாடும் திருகுரானாக. பின் வந்த போட்டி மயமான நவின வாழ்ககியில் மார்க்க கல்வியை அனைவரும் மறந்தே விட்டனர்.

அதற்க்கு காரணம் போதிக்கும் முறை. குரானை போதிக்கும் கல்வி நிலையங்கள் உலக கல்வியை போதிப்பதில்லை அதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பிந்தங்கி விடுகிறார்கள். இதர்க்கு தீர்வு மார்க்க கல்வி வழங்கு கல்வி கூடங்கள் உலக கல்வியும் சேர்த்தே போதிக்க வேண்டும். அப்படி செய்யும் போது அனைவரும் குரானை மணம் செய்து நீங்கள் கூறியது போல் நடமாடும் திருகுரானாகவே இருக்கலாம்.

அடியேன்:
உண்மை நிலையை ஒப்புக்கொண்டது தங்களின் பரந்த மனப்பான்மையை காட்டுகிறது.  மார்க கல்வி/உலக கல்வி இரண்டும் கை கோர்க்காததால் ஏற்பட்டுவிட்ட  இரண்டு பிரச்சினைகளையும் ( மார்க அறிவில் பின்னடைவு + பொருளாதார பின்னடைவு ) தங்கள் ப்ரபோசல் தி பெஸ்டாக தோன்றுகிறது.
____________________
ஷாகுல்:
நீங்கள் கூறியது போல் இப்போது யாரும் குரானின் வாசனை கூட அறியாமல் இருப்பதில்லை. மனனம் செய்ய முடியாவிட்டாலும் பார்த்தாவது ஓதுகிறார்கள்.

அடியேன்:
குரானை ஓதினாலே போதும் அவர்கள் உண்மையான மூஸ்லீம்கள்தான் என்று கூறுவது போல் இருக்கிறது. குரானை ஓத வேண்டும் என்று குரான் கூறுவது என்றோ ஒரு நாள் அதன் பொருளை சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றுதான் .  சிந்திக்க ஆரம்பிப்பது அதை பின் பற்றத்தான் . ஃபைனல் கோல் பின்பற்றுவது. அதை எத்தனை பேர் செய்கிறார்கள் என்பதே என் கேள்வியின் உண்மையான பொருள்.
_______________________
 ஷாகுல்:
 //786 என்ற எண்ணுக்கும் இஸ்லாமுக்கும் என்ன தொடர்பு என்பதே புரியவில்லை. //

எதத் தொடட்பும் இல்லை. அது பிஸ்மில்லாஹ் னிர்ரன்ஹ்மான் னிர்ரஹிம் என்ற வாக்கியத்தில் வரும் அரபு எழுத்துக்களை கூட்டி போடுகிறார்கள்.

பிஸ்மில்லாஹ் - 7 எழுத்து அரபியில்.

னிர்ரன்ஹ்மான் - 8 எழுத்து அரபியில்.

னிர்ரஹிம் - 6 எழுத்து அரபியில்.

வேறு எந்த சிறப்பும் இஸ்லாத்தில் அந்த எண்களுக்கு இல்லை. எதை எழுத ஆரம்பித்தாலும் இறைவனின் திருவுளப்படி என்று எழுதுவது அக்கால இந்துக்களின் வழக்கம் . இதற்கும் அதே பொருள் தான் என்று கோவி.கண்ணன் கூறியுள்ளார். தங்கள் விளக்கத்துக்கு நன்றி.
_______________________
 ஷாகுல்:

 //ஆண்கள் சிறு நீர் கழித்தபின்பு கற்களால் சுத்தம் செய்வதை பார்த்திருக்கலாம்//

 இது பாலைவனத்துக்கா வகுத்துக் கொண்ட விதி அல்ல மாறாக சுகாதாரத்துக்கான விதி ஆகும் சிறுநீர் கழித்த பிறகு கடைசி துளி உங்களது உடையில் பட்டு விடக்கூடாது என்பதற்க்காக தன்னீர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது விதி. அப்படி தன்னீர் கிடைக்காத பட்சத்தில் கற்க்களை பயன் படுத்தல்லம். அது நீரை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும். சுகாதாரம் என்பது பாலைவனத்துக்கு மட்டுமல்ல. நந்தவனத்திற்க்கும் முக்கியமானது. 

அடியேன்:

ஜன நெருக்கம்,போக்குவரத்து  அதிகமாக உள்ள பிரதேசத்தில் எல்லா கற்களுமே உபயோகிக்கப்பட்டவையாய் இருக்கவே வாய்ப்பிருக்கிறது என்பது என் கருத்து.

____________________________________
ஷாகுல்:
 //பலதார மணம். அது யுத்த காலம். யுத்தத்தில் வீரமரணங்கள் சகஜம்//

எந்த ஒரு முஸ்லீமும் கண்டிப்பக 4 மனைவிகளை பெற்றிருக்க வேண்டும் என எங்கு சொல்ல வில்லை.
அடியேன்:
அப்படி சொன்னதாய் நான் சொல்லவில்லை /எழுதவில்லை தலைவா..அனுமதிக்கப்படுகிறது என்ற தொனியில் தான் எழுதியிருந்தேன்
____________________________________

ஷாகுல்:
அது ஒரு சிறப்பு அனுமதியாகவே சொல்லப்பட்டுள்ளது.
அடியேன்:
நானும் இதைத்தான் சொன்னேன் தலைவா..

__________________
ஷாகுல்:
இரண்டு மனைவிகள் வைத்திருக்கும் முஸ்ல்லீகள் மிக மிக அரிது.

அடியேன்: முஸ்லீம் ஜனத்தொகை குறைவு என்பதால் இரண்டு பெண்டாட்டிக்காரகள் சதவீதம் அதிகமாக தோன்றுகிறது போல.

ஷாகுல்:
மற்ற அனைவரும் ஒண்றுடனே வாழ்கிறார்கள். இங்கு (அரபு நாடுகளில்) ஒருவர் இரண்டாவ்து திருமனம் முடிக்க வேண்டு மென்றால் முதல் மனைவி NOC கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இரண்டாவது திருமனம் நடக்காது.

அரபு நாடுகளில் கூட பெரும்பாலன அரபுகள் மாத சம்பளம் வாங்குபவர்கள் ஒரு மனைவியோடு மட்டுமே வாழ்கிறார்கள்.
அடியேன்:
நல்ல தகவல். இந்துத்வா வாதிகள் உண்மை நிலையை புரிந்துகொள்ளட்டும்
___________________________________________

 ஷாகுல் :
 //பிள்ளை பெறுவதற்கும் இதே விதியை பொறுத்திப்பாருங்கள்//

இஸ்லாத்தில் தற்காலிக குடும்ப கட்டுப்பாடு அனுமதிக்கப் பட்டிருக்கிறது.
குழந்தை உருவாவதை தடுக்கலாம். ஆனால் நல்ல முறையில் உள்ள கருவை கலைப்பது குற்றம்.
இறைவன் மிக அறிந்தவன்.
உண்மையிலேயே எனக்கிது புதிய தகவல்.இந்துத்வா வாதிகள் உண்மை நிலையை புரிந்துகொள்ளட்டும்

ஷாகுல் said...

//முஸ்லீம்கள் மீசையை ட்ரிம் செய்து கொள்வதும் ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை கடிக்கத்தான்.//
இல்லை. மீசையை டிரிம் செய்வது சாப்பிடு போது மீசையில் உள்ள முடி உதிர்ந்து வாய்க்குள் போக கூடாது என்பதுதான். மாமிசம் சாப்பிட்டாலும் சரி தாவர உணவு சாப்பிடாலும் சரி மிசை முடி உதிரத்தான் செய்யும். அதை தடுக்கவே இந்த முறை சிபாரிசு செய்யப் பட்டுள்ளது.
அடியேன்:
 தலைவா .. மீசை முடி உள்ளார போயிரும்/இல்லே தட்டில உதிரும்னு நீங்க உடைச்சு சொன்னிங்க. நான் குன்ஸா சொன்னேன் .அவ்ளதான் வித்யாசம்
__________________________________

 ஷாகுல்:
 //முஸ்லீம்கள் விருந்துண்ணும்போது சாப்பாடு பாய் மீது பரிமாறப்படும். விருந்தினர் அனைவரும் உணவுப்பொருட்களை சுற்றி தரையிலமர்ந்து உண்பர். இதுவும் பாலை நிலத்தை(மணல்) கருத்தில் கொண்டு செய்ய‌ப்பட்ட ஏற்பாடே.//

ஒரு பருக்கையை கூட வீனாக்க கூடாது என்பது நபி மொழி அதனால் கீழே விழுந்த சோற்றை மீண்டும் எடுத்து உண்ணுவதற்காக விரிப்பு விரிக்கப் பட்டிருக்கலாம். வீட்டில் யாரு அப்படி சாப்பிடுவதில்லை. மேசையில் வைத்தே அல்லது தரையில் அமர்ந்தோதான் சாப்பிடுகின்றனர்.

பாலை என்றாலும் மண் கொண்டு தரை அமைத்துதான் வீடு கட்டப்படும் அதனால் வீட்டிற்க்குள் மணல் இருக்காது.

அடியேன்:
விரிப்போ, மண் தரையோ, மணலை தவிர்த்தாலும் மணற்புயல் வீசலாம் அல்லவா
_______________________
 ஷாகுல் :

 // ஆடு,மாடு ,ஒட்டகம் போன்றவற்றின் எலும்புகளை
 கடிக்கத்தான்//
 எலும்பை கடிக்க பல் தான் தேவை மீசை தேவையில்ல ஐயா :)))))
மீசை முடி அதுகள்ள ஒட்டாம இருக்க, உள்ளாற போகாத இருக்கன்னு  நான் விளக்கமா சொல்லியிருக்கனும். உடைச்சி சொல்லலே சரி விடுங்க..
___________________________
ஷாகுல்:
 //நான் அவதானித்த வரையில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் முஸ்லீம்கள் ஒருவித அபத்திர பாவத்தால் இன்றைய கால,தேச ,வர்த்தமானங்களுக்கு பொருதாத மேற்படி பழக்க வழக்கங்களை பிடிவாதமாக தொடர்கிறார்களே தவிர //
மேற்க்கண்டவைகள் இங்கு பொருந்தும்.
அடியேன்:
மேற்சொன்ன அனைத்துமே ஹைஜின், லாஜிக்கல் முஸ்லீம்களில்  எல்லா வர்க மக்களும் (ஏழை பணக்காரர்) அவற்றை இன்னைக்கும் பின்பற்றிவராங்கனு நீங்க சொல்றிங்க . மன்னிக்கனும். இதை நான் ஏத்துக்கமாட்டேன்.

அது இந்துமதமா, இஸ்லாமாங்கற கேள்வியெல்லாம் அப்புறம். மேற்கத்திய நாகரீகம் மதம் சார்ந்த எத்தனையோ பழக்க வழக்கங்களை  விழுங்கி ஏப்பம் விட்டுருச்சி. ஏனோ நீங்க ஏத்துக்க மாட்டேங்கிறிங்க.

மேற்கத்திய நாகரீக தாக்கத்தையும் மீறி இளைய தலைமுறையிலும், பணக்கார வர்கத்திலும் இன்று வரை நடை முறையில் உள்ள பத்து பழக்க வழக்கங்களை கூறினால் மிக மகிழ்வேன்.
____________________________
ஷாகுல்:
// ஆனால் இன்று ஒன்றரையணா அரசியல்வாதியை கூட இந்திரன் சந்திரன் என்று புகழும் முஸ்லீம்கள் உள்ளனர்.//
பதவிக்காக ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அன்வர் ராஜா. தன் இனத்தையே கருவருக்க துடிக்கும் பாஜ்க வில் இருக்கும் சிலர். இவர்கள் பெயர் தாங்கிகள். முஸ்லீம்கள் அல்ல. பதவிக்காகவும் பணத்திற்க்காவும் எதுவும் செய்வார்கள்.
அடியேன்:
ஹிப்பாக்ரசி இன்றி என் கருத்தை அங்கீகரித்தமைக்கு நன்றி.

_______________________
 ஷாகுல்:

 //ஆனால் பலர் கூசாமல் பத்து வட்டி வசூலிப்பதையும் காண முடிகிறது.//

 இஸ்லாம் வட்டியை முழுமையாக தடை செய்திருக்கிறது. மீறி வட்டி வாங்குகிறார்கள் என்றால் அது அந்த மனிதனின் தவறு. அவ்ரின் கனக்கு இறைவனிடம் உள்ளது. அவர் பதில் சொல்லுவார்.

அடியேன்:
கணக்கு இறைவனிடம் உள்ளது இதில் எனக்கெவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இஸ்லாம் என்ற நந்தவனத்தில் முளைத்துவிட்ட இது போன்ற களைகளை அகற்ற ஜமாத்துகள், முல்லாக்கள்,இமாம்களால் என்ன   நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
_________________________

ஷாகுல்:
//தர்காவை வணங்குவோர் எத்தனை பேர் ! ஃபகீர்களை வணங்குவோர் எத்தனை பேர் ! //
பலர் இருந்தார்கள் சில அமைப்புகளின் முயர்சியால் அவர்கள் சிலராகி விட்டனர். இன்னும் அவர்களிடம் விழிப்புனர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.
அடியேன்:
பலரை சிலராக்க எடுத்த அவர்களின் முயற்சி வெற்றி பெற முழுமையான மக்களிடையே 100 % விழிப்புணர்ச்சி ஏற்பட வாழ்த்துக்கள்.
_________________________________
ஷாகுல்:
வால் போய் கத்தி வந்தது என்ற கதையாக இப்போது கபர் வணக்கம் குறைந்து குழு மணப்பான்மை அதிகரித்து விட்டது. இது நபிகளாரின் போதனைக்கே எதிரானதாகும். This is pure ego.
அடியேன்:
வெறுமனே ஈகோனு சொல்ட்டா எப்படிங்கண்ணா.. ராம கிருஷ்ண பரமஹம்சர் சொல்வாரு பலாப்பழத்தை பிளந்து சுளையெடுக்கிறதுக்கு முன்னாடி கைல விளக்கெண்ணை பூசிக்கிடனுமாம். அத மாதிரி ஒரு குழந்தை/சிறுவன்/சிறுமி லோகாயத வாழ்வுங்கற பலாப்பழத்தை பிளந்து சுளையெடுக்கறதுக்கு முன்னாடியே ஆன்மீகங்கற விளக்கெண்ணையை பூசி விட்டுரனும். அதை பூசாம விட்டுட்டதால அந்த குழந்தை எடுப்பார் கைப்பிள்ளையா மாறிருது. இயந்திரமயமாக்கம் காரணமா மாடர்ன் லைஃப் . மாடர்ன் லைஃப் காரணமா  தேவைகள் பெருகி, தேவைகளை நிறைவேத்திக்கற துடிப்புல போட்டிகள் பெருகி, மனிதம் மண்ணா போயிர்ரதால தான் சுய லாபம் கருதி குழுக்கள் ஏற்படுது. இந்த குழுக்களை அரசியல் ஊட்டி வளர்க்குது. இதுக்கெல்லாம் தீர்வு நீங்க சொன்ன மார்க கல்வியோட ,உலக கல்வி தான்.

___________________________
ஷாகுல்:
 //மதச்சார்பற்ற தன்மை உள்ளத்தில் இருந்தால் போதுமே தவிர இறைவன் ஒருவனே என்ற முடிபுக்கு களங்கம் விளைவிப்பது ஹராம் தான்//

இதுதான் எனது முடிவும். எனது மற்ற மத நன்பர்களின் உணர்வுகளை மதிக்கிறேன். அதற்க்கா சர்சில் சென்று சிலுவை போட்டுக் கொண்டும். கோவிலி சென்று பட்டை போட்டு கொன்டும் என்னால் நடிக்க முடியாது.
அடியேன்:
என் கருத்தும் இதுவே.

________________________________
 ஷாகுல்:
  //பலதார மணத்தை கைவிடுங்கள். குடும்பக்கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள்.//
 முன்னமே கூறியது போல் அனைத்து முஸ்லிம்களும் பல தார மனம் புரிவதில்லை. ஒரு சிலரே செய்கின்றனர். அப்படி செய்பவர்கள் இஸ்லாத்தில் மட்டுமல்ல அனைத்து மததிலும் இருக்கின்றார்கள்.
அடியேன்:
பல தார மணம் ஃப்யூடல் செட்டப்போட எச்சம்ங்கறது என் கருத்து மக்கள் தொகைல பாதியா இருக்கிற பெண்களை, அவிக உணர்வுகளை புறக்கணிச்சுட்டு எந்த சமூகமும் முன்னேற முடியாதுங்கற எண்ணத்துலதான் இந்த விஷயத்தை பிரஸ்தாபிச்சேன். இதை வெறுமனே முஸ்லீம்களுக்கு மட்டும் நான் சொல்வதாய் ஒரு தோற்றம் இருந்திருக்கும் . (தலைப்பு அப்படி) ஆனால் நான் சொல்ல நினைச்சது ஒட்டு மொத்த மனித குலத்துக்கு

______________________
ஷாகுல்:
    // பிள்ளைகளுக்கு (ஆண்,பெண்) கல்வியை வழங்க பாருங்கள்.//

இந்திய முஸ்லீம்கள் கல்வியரிவில் பின் தங்கி இருப்பத்ற்க்கு பல காரணிகள் உண்டு. முஸ்லீம் பென்கள் மட்டுமல்ல ஆண்களூம் கல்வியில் பின் தங்கி உள்ளனர். இப்போதுதான் விழிப்புனர்வு வந்து கல்வியை கற்கின்றனர்.

பென் வயதுக்கு வந்த உடன் நடை பெற்ற திருமணம் இப்போது ஒரு இளங்கலை பட்டம் பெற்ற பின்னே நடக்கிறது. மாஹா அல்லாஹ்!
அடியேன்:
இது குறைந்த பட்சம் டிகிரி முடித்த பிறகு என்ற நிலை வர உழைப்போம்.

__________________-

ஷாகுல்:
 //இருக்கிற பாய் எல்லாம் பழைய இரும்பு வியாபாரம்,ஆட்டோ புரோக்கர் என்று இருப்பது நல்லதா ?//

அது ஒண்றும் கேவலமில்லையே செந்தமாக தொழில் செய்கிறார்கள். அனைவர்ம் படித்து விட்டு மாதசம்பளம்த்திற்க்கு தான் செல்வேன் என்றால் என்ன செய்வது.
அடியேன்:
இல்லை தலீவா.. நான் மேற்படி தொழில்களை கேவலமா நினைக்கலே. ஆனால் மேற்படி தொழில்கள்ள முஸ்லீம்கள் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருக்க காரணம் லேக் ஆஃப் எஜுகேஷன் / டெக்னிக்கல் எஜுகேஷனுங்கற அர்த்தத்துல சொல்ல வந்தேன்
_________________________________
 ஷாகுல்:
 //நான் இஸ்லாமை தழுவவும் தயங்க மாட்டேன்.//

 இது ஒரு உனர்வு மேலீட்டால் சொல்லி இருக்கலாம் ஆனால் நடைமுறையில் சாத்தியப்படாது ஏனென்றால் நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உங்கள் தொழிலை அதாவது ஜோசியம் பார்க்ப்பதை விட்டு விட வேண்டும். இஸ்லாம் ஜோசியதை கடுமையாக சாடுகிறது.

அடியேன்:
நீங்கள் என்னை வெகு சாதாரணமாக மதிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னை பொருத்த வரை ஜோதிடம் என்பது ஆன்மீகத்தின் முதல் படிதான். இறைவன் அடுத்தடுத்த படிகளை கண்ணுக்கு காட்டி அழைத்தால் இந்த முதல்  படியிலேயே த(தூ) ங்கிவிட நான் என்ன முட்டாளா?

இஃப் மை கான்ஷியஸ் ஈஸ் சேட்டிஸ்ஃபைட் இதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாதுங்கோ
____________________________
ஷாகுல்:
//பார்ப்போம் முஸ்லீம் சகோதரர்கள் ஆக்கப்பூர்வமான வாதங்களை எடுத்து வைக்கிறார்களா .."எரி தழல் கொண்டு வா " என்று சீறி விழுகிறார்களா ? //

ஆக்கப்பூர்வமான மரியாதையான அவதூறு பரப்பும் கேள்விகளல்லாத கேள்விகளுக்கு ஆக்கப்பூர்வமான முறையிலே பதில் அளிப்போம்.

சிலர் இஸ்லாத்தின் மீது எப்படியாவது பழி ஏற்படுத்திவிடவேண்டும் என துடியாய் துடித்து தன்னை தானே அசிங்கப் படுத்திக் கொள்கிறார்கள். அந்த மாதிரிப் பதிவுகளுக்கு பதில் சொல்லுவதே இல்லை. ஏனென்ரால் சொல்லும் பதில்கள் வெளிவருவதில்லை. அனானியாக பாட்டி முதல் பிறந்த குழந்தை வரை பாகம் குறித்து படம் வரைவார்கள். அதனால் அதை கண்டு கொள்வதே இல்லை. Ignore is best solution for them.
அடியேன்:
இங்கே எல்லா உண்மையுமே ஒன்னுதான். ஆனால் எல்லாமே கொஞ்சமா கரப்ட் ஆகியிருக்கு. உண்மையான இந்து எவனுமே எந்த மதத்துக்கும்  களங்கம் கற்பிக்கமாட்டான். அரை குறைகளால் தான் எங்குமே பிரச்சினை.
___________________
ஷாகுல்:
 மிக நேர்மையாக பன்புடன் கேள்விகளைக் கேட்ட உங்களுக்கு நன்றி நன்பரே.
அடியேன்:
என் உண்மையான அக்கறையை புரிந்துகொண்ட தங்களுக்கு நான் தான்  நன்றி சொல்லவேண்டும் . நன்றி நண்பரே
________________
 RIZWAN:

 நண்பர் அவர்களுக்கு, தாங்கள் இஸ்லாத்தை இந்தளவுக்கு புரிந்துள்ளது ஆச்சரியம். மகிழ்ச்சி.இஸ்லாத்தை பற்றி சிறந்த அபிப்ராயம் தங்களுக்கு இருந்தாலும் வேறு சில சந்தேகங்களும் இருப்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். இஸ்லாம் வலியுறுத்தும் சில விசயங்களை மாற்ற சொல்கிறீர்கள்
அடியேன்:
இஸ்லாமோட அடிப்படைய ,சாரத்தை மாற்றச்சொல்லலிங்க. என்னை கவர்ந்ததே அதுதான். அதை எப்படி மாத்த சொல்வேன். நான் ரீ கன்சிடர் பண்ண சொன்னது சில பழக்க வழக்கங்களைதான்.

_________________-
 RIZWAN:
உலகத்தில் மாற்றம் இல்லாத வேதத்தை கொண்ட இஸ்லாம் நடைமுறை வாழ்கையில் மனிதன் மனிதனாக வாழ எல்லா வழிகளையும் காட்டியுள்ளது. அதன் சட்ட திட்டங்கள் என்றுமே முரண்பட்டதில்லை. நமக்கு தோன்றும் சிந்தனைகளுக்கு ஏற்ப காலத்திற்கும் மாற்றிக் கொண்டிருந்தால் இஸ்லாத்திற்கும் பிற மதங்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்காது.
அடியேன்:
இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எது சொல்லப்பட்டது என்பதை மட்டும் சிக்கென பிடித்து பின்பற்றுவதை காட்டிலும் ஏன் சொல்லப்பட்டது .. எந்த பின்னணியில் சொல்லப்பட்டது என்பதையும் சற்று ஆழமாக சிந்திக்கலாமல்லவா என்பதே என் கேள்வி
___________________________
 RIZWAN:
இஸ்லாத்தின் சில அம்சங்கள் பாலைவன வாழ்கையை தழுவி உள்ளதாக சொல்கிறீர்கள்.அவ்வாறு இல்லை.
அடியேன்:
இன்னும் சற்று விளக்கமான பதிலை எதிர்பார்க்கிறேன். ப்ளீஸ்..

_____________________________
 RIZWAN:

இஸ்லாத்தின் மீதுள்ள ஆர்வம் உங்கள் சந்தேகங்களை விரைவில் தீர்க்கும். இப்போதுள்ள தகவல் தொழில்நுட்பம் அதற்கு நிறைய வழிசெய்கிறது. திருக்குரானை படியுங்கள், www.onlinepj.com தளத்தை தாங்கள் பார்வையிட்டால் உங்களுக்கான சந்தேகங்கள் தீர வழி இருக்கிறது. உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் தீர்த்து வைப்பார்கள்.
அடியேன்:
தங்கள் பரிந்துரைக்கு நன்றி. இன்றே பின்பற்ற ஆரம்பித்துவிட்டேன்

____________________________
 RIZWAN:
நீங்கள் சொல்வதுபோல் இஸ்லாம் ஒரு தன் நிகரற்ற மார்க்கம்தான்.மேலும் எல்லா முஸ்லிம்களும் worst followers இல்லை. இஸ்லாத்தை தவறாக விளங்கியவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது. மனிதர்களில் உயர்வு தாழ்வு இல்லை. இறை அச்சமுடையவரே மனிதர்களில் சிறந்தவர். Allah is the only god, prophet mohamed (sal) is the best person and Islam is the only best religion in the world. so i would like to invite you to read and understand islam. அல்லாஹ் நாடினால் நீங்களும் இஸ்லாத்தை ஏற்பீர்கள்.
அடியேன்:
அந்த நன்னாளை எதிர்பார்க்கிறேன்.
________________________