Showing posts with label Satire. Show all posts
Showing posts with label Satire. Show all posts

Tuesday, September 21, 2010

யந்திரன் ப்ளாஃப் டாக்

சிவாஜில கருப்பு வெளுப்பாறதும், லாப் டாப் கம்ப்யூட்டருமே சனத்துக்கு ( முக்கியமா ரஜினி ரசிகர்களுக்கு)  புரியலை. இதுல ரோபோட் எல்லாம் யாருக்கு புரிய போகுது. புரிஞ்சவன் இங்கிலீஷ்லயே பார்த்திருப்பான். புரியாதவன் தான் பார்க்க வருவான். மறுபடி வருவானானு சனம் டவுட் படறாய்ங்க. மேலும் வ்ச்ச 150 கோடியை பத்து மடங்கா அள்ள சன் பிக்சர்ஸ் டிஸ்ட் ரிப்யூட்டர்ஸை மொட்டை போட்டிருப்பாய்ங்க. அந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட அவிக தியேட்டர் காரவுகள ஆட்டைய போட்டிருப்பாய்ங்க. கடைசில எல்லாம் வந்து ரசிகன் தலையில விடியும். நூறு தடவை பார்க்கிற ரசிகன் கூட மொத நாளு ஆயிரம் ஐ நூறுன்னு மொழி எழுதிட்டு தியேட்டர் பக்கம் திரும்ப போறதில்லை. இப்படி பல காரணங்களை காட்டி யந்திரனை பத்தி ரஜினி ரசிகர்களே பேசிக்கிட்டிருக்காய்ங்க. இந்த சந்தர்ப்பத்துல நம்ம கற்பனை குதிரையை தட்டி விட்டேன்.

செப்டம்பர் 30 ஆம் தேதி  விடியல் 4.30 .

கலா நிதி மாறன் தன்னோட சேம்பர்ல  கவலையா நகம் கடிச்சிக்கிட்டிருக்காரு. எதிர்க்க ரஜினி, சங்கர், வைரமுத்து கவலையா உட்கார்ந்திருக்காய்ங்க.

"எப்படி..எப்படி  வண்டுகள் மலரை பிரிந்ததெப்படி? கனித்தமிழ் கலைஞரை பிரிந்ததெப்படி?  ரஜினியை ரசிகர்க்ள் பிரிந்ததெப்படி? ன்னுட்டு வைரமுத்து ஒரு  நீள் கவிதைக்கு  முயற்சி பண்ண மாறன் கண்கள்ள ஆல்ப்ஸ் எரிமலையோட வெப்பம். வைரமுத்து ஸ்விட்ச் ஆஃப் ஆறார்.

ரஜினி காந்த் கண்ணை சிமிட்டி சிமிட்டி மூக்கை தேய்ச்சிக்கிட்டிருக்காரு. சங்கரோட மூக்கு ஏற்கெனவே செர்ரி.

மாறன் பேச ஆரம்பிக்கிறாரு.

"ஒரு காலத்துல தான் எதிர்த்த, தன்னை எதிர்த்த, அதனால ரசிகர்களை  பின்னியெடுத்த பார்ட்டிகளையெல்லாம்  நேர்ல சந்திச்சு தன்னோட மகள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வச்சது,  ரசிகர்கள் மட்டும்  வரக்கூடாதுன்னு  அறிவிச்சது, அப்பாறம் ஊர் ஊரா வந்து மணமக்களை அறிமுகப்படுத்தறேன்னுட்டு கொடுத்த வாக்குறுதிய காத்துல விட்டது, வைரமுத்து யந்திரன் ட்ரெய்லர் ரிலீஸ்ல சொன்ன போப் ஜோக் எல்லாமா சேர்ந்து ரஜினியோட ரசிகர்கள் யந்திரன் படத்தை பாய் காட் பண்றதோட இந்த படத்தை யாரும் பார்க்க கூடாதுன்னு வேற பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காய்ங்க. இந்த பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறதாவும்,  நாம சன் டிவில போட்டா கூட பார்க்க ஆளில்லேன்னும் இன்ஃபர்மேஷன். இப்போ ரிலீஸ் நேரத்துக்கு சரியா 24 மணி நேரம் பாக்கியிருக்கு. ஏதோ ஒன்னை செய்து சனம் தியேட்டருக்கு வராப்ல செய்துரனும்"

சங்கர்  முகம் சட்டுனு மலருது கையை சொடுக்கி " ஏரியல் வ்யூ ஒரு ஏர் போர்ட்லருந்து ஒரு டஜன் குட்டி விமானங்கள் சீறி கிளம்புது."

மாறன் " படம் பார்க்க வரமாட்டேன்னுட்டவுகளை யெல்லாம் குண்டு வீசி கொன்னுரபோறிங்களா?"

ஷங்கர் " நோ நோ.. என்னோட அடுத்த படத்தை பார்க்க கூட்டம் வேணமே ஒரு டஜன் விமானங்களும் தலா ஒரு திசையில பிரிஞ்சு பறக்குதுங்க. இப்போ ஒரே விமானம். உச்சி வானத்துல வட்டமடிக்குது.  அப்படியே டவுன் பண்ணா தியேட்டர் வாசல்ல ரஜினி சாரோட கட் அவுட் அனாதையா நிக்குது. விமானம் இன்னம் டவுன் ஆகி.."ன்னுட்டு இன்னம் என்னவோ சொல்ல வர்ராரு.

ரஜினி கடுப்பாகி "ஷங்கர் சார் இப்பயே எல்லாம் டவுன் ஆகித்தான் கிடக்கோம். இன்னம் இன்னம் ஏன் டவுன் பண்றிங்க"ன்னு ப்ளாஸ்ட் ஆறாரு.

மாறன் "ரஜினி நீங்க  பண்ணதே போதும் . ஷங்கருக்கும் ஒரு சான்ஸ் கொடுப்போம்.அதை ஏன் தடுக்கறிங்க. நீங்க சொல்லுங்க ஷங்கர் !"ங்கறார்

ஷங்கர் கன்டினியூஸ் " விமானம் நிறைய லாலா கடை லட்டுகள் இருக்கு."

மாறன் , எரிச்சலுடன் "என்ன ஷங்கர் ..ராகவேந்திரா கல்யாண மண்டப வாசல்ல ஐஸ் மோர் கணக்கா இருக்கு "ங்கறார்.

ஷங்கர் உஷாராகி " விமானத்துல தன் குடும்பத்தோட ரஜினி சார் இருக்காரு. ஒவ்வொரு தட்டா லட்டுகளை தன் கையில வாங்கி அப்படியே கொட்டறார்"

மாறன் யோசனையுடன் "ரஜினி - வாய்தா போன பார்ட்டி, லட்டா - லாலா கடை சரக்கு இதை எப்படி ஹைலைட் பண்ணலாம்? ஐடியா.. 1,116 லட்டுல தங்க மோதிரம் வச்சு புடிச்சா? "ங்கறாரு.

ரஜினி கிண்டலாக "116 லட்டுல வைர மோதிரம் கூட வைக்கலாமே"ங்கறாரு. மாறன் " பெட்டர் ஐடியா!"ன்னுட்டு தலையை ஆட்டறாரு.

இதே மேட்டரு ப்ரஸ் மீட், ப்ரஸ் நோட் மூலமா மீடியால ரிலீஸ் ஆகுது.

அக்டோபர் 1 விடியல் 4.30

ரஜினி மேல கடுப்பு இருந்தாலும், வைர மோதிரமும், தங்க மோதிரமும் இழுக்க யந்திரன் ரிலீஸ் ஆகிற தியேட்டர்களாண்டை கூட்டம் அம்முது.

குட்டி விமானங்கள்ளருந்து   லட்டுகள் கொட்டப்படுது. தங்க, வைர மோகம் காரணமா கூட்டத்துல தள்ளு முள்ளு ஏற்பட்டு    நூத்துக்கணக்கான பேர் செத்துப்போறாய்ங்க.

இந்த தகவலை கேட்டு மாறன் அண்ட் கோ அரண்டு போயிர்ராய்ங்க.  பைலட்டை விமானத்தை பாக்கிஸ்தானுக்கு திருப்ப சொல்றாய்ங்க. ஆனால் கோளாறு காரணமா சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுல தரையிறங்க வேண்டியதாயிருது.

அந்த நேரம் பார்த்து லட்டு கொட்டப்போன குட்டி விமானங்கள்ள ஒன்னு கோளாறு காரணமா  சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டுல தரை இறங்கி இருக்கிறதா தகவல் பரவுது.  ஒடனே மக்கள் கொலை வெறியோட சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டை நோக்கி ஓடறாய்ங்க.

அப்போ மாறன் மத்தவுகளுக்கு தைரியம் சொல்றாரு. 

"மத்த 11 விமானத்துலயும் நம்ம மாதிரியே டம்மி டாய்ஸை ரெடி பண்ணி வச்சிருக்கேன். இப்போ ஒடனே இன்னொரு விமானத்தை இங்கே கொண்டுவரச்சொல்லி அதுல உள்ள டம்மி டாய்ஸை இந்த விமானத்துக்கு மாத்திட்டு , வர்ர விமானத்துல  பாக்கிஸ்தான் தப்பிச்சு போயிரலாம் . ஒரு வேளை சனம்  டம்மி டாய்சை கொலைவெறியோட அழிச்சுட்டா பாக்லயே தங்கிரலாம். ஏதாவது அற்புதம் நடந்து சனம் தடுக்கப்பட்டுட்டா  இண்டியா திரும்பி வர்ரதை பத்தி யோசிக்கலாம்"

தான் சொன்னதை போலவே  விமானம் வரவழைக்கிறாரு.  ரஜினி,மாறன், வைரமுத்து மூணு பேரும் பாக்கிஸ்தான் போயிர்ராய்ங்க.

கொலை வெறியோட மக்கள் கூட்டம் சேப்பாக்கம் கிரிக்கெட் கிரவுண்டை நோக்கி வராய்ங்க. அப்போ ஒரு சுதந்திர போராட்ட வீரர்  ஒரு மலை மேல நின்னு  மெகா ஃபோன் மூலமா சனங்களை தடுக்கறாரு.

"என்று  தணியும் எங்கள் அடிமையின்  மோகம்னு பாரதியார் பாடினாரு. என்று தணியும் எங்கள் சினிமா மோகம்னு பல காலமா  தமிழ் தாய் கேட்டுக்கிட்டிருந்த
கேள்விக்கு இன்னைக்கு பதில் சொல்ல கங்கு கரையெல்லாம் உடைச்சுக்கிட்டு  காட்டாற்று வெள்ளமா ஓடிவர்ர நீங்க ஒரு ரஜினியையோ, ஒரு மாறனையோ, ஒரு வைரமுத்துவையோ கிழிக்க வேண்டிய அவசியமில்லே.  கிரிக்கெட் கிரவுண்டை நோக்கிய உங்க ஓட்டமே அதுக்கான பதிலை கொடுத்துருச்சு"

மக்கள் அமைதி பெற்று  வீடு திரும்பறாய்ங்க. ஆனால் போற வழில உள்ள சினிமா ப்ளெக்ஸ் போர்டெல்லாம் நாசம் . மாறன் அண்ட் கோவை சுமந்துகிட்டு போன குட்டி விமானம் டாக்கால தரையிறங்குது.

பாக்கிஸ்தான் பிரசிடெண்ட் பாக் ஏவியேஷன் அமைச்சகத்துக்கு ஃபோன் மூலம் உத்தரவிடறார் " என்னைக்கோ ஒரு நாள் சினிமா மோகத்தாலயாச்சும் இந்தியா நாசமாகும்னு ஒரு ஆசை பாக்கியிருந்தது. அந்த ஆசையை கூட வேரோட கெல்லியெறிஞ்சிட்ட அந்த இந்திய எலிகளை சிறையில் தள்ளி தோலை உறியுங்கள்"

Saturday, April 24, 2010

சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்

சினிமா ஸ்டோரி டிஸ்கஷன்லாம்  ஒரு காலத்துல அந்தந்த சினிமா  கம்பெனிலயே   நடக்கும்.மாத சம்பளத்துக்கு கதை இலாகால ஆள போட்டு வச்சிருப்பாங்க. ஒரு குறிப்பிட்ட காலம் வரை தயாரிப்பாளர்களோட ராஜ்ஜியம் நடந்தது. அதுவரைக்கும் இதான் நடைமுறை. மேலும் புதுசா கதை பண்றதெல்லாம் ரேர். சூப்பர் டூப்பர் ஹிட்டான நாடகங்களோட உரிமைய வாங்கி சினிமாவுக்கு ஏத்தாப்ல மாத்தறதுதான் அதிகம்.

அப்புறம் கொஞ்ச நாள் ஹீரோக்களோட ராஜ்ஜியம் நடந்தது. அந்த காலத்துல கூட டிஸ்கஷன்லாம் கம்பெனி காம்பவுண்ட்லயே நடக்கும்.அப்புறம் ஹீரோக்களுக்கு கதை சொல்லி அவர் சொல்ற கரெக்சன்ஸ் பண்ணிக்குவாங்க. இந்த ஸ்டேஜுல கூட டைரக்டர்ஸுக்கு அசிஸ்டண்ட்ஸ் இருந்திருக்காங்க.ஆனால் அவிக கம்பெனிக்குத்தான் ரெஸ்பான்சிபிள். ஏன்னா அவிகளுக்கு சேர வேண்டிய  பைசாவ கம்பெனிதான் பைசல் பண்ணும்.

அதுக்கப்புறம்  டைரக்டர்களோட ராஜ்ஜியம் வந்தது. அப்பத்தான் ஒவ்வொரு டைரக்டரும் அசிஸ்டண்டுங்கன்னிட்டு ஒரு  குரூப்பை  மெயிண்டெயின் பண்ண ரம்பிச்சாக.அவிகளுக்கு சம்பளம் டைரக்டரே தருவாரு.  ( அதாவது தன்னோட சம்பளத்துல அவிக சம்பளத்தை கூட்டி வாங்கி இவர் கணக்கு பண்ணி தருவார். படம் இல்லாத காலத்துல சொந்த பணத்துல தருவாரு). சில டைரக்டர்கள்னா நாலஞ்சு க்ரூப்ஸ் கூட மெயிண்டெயின் பண்ணுவாங்க. ஒரு படத்துக்கு ஒரு க்ரூப் பண்ணிட்டா அடுத்த சினிமாவுக்கு வேற க்ரூப், அடுத்ததுக்கு அடுத்த படத்துல இன்னொரு க்ரூப்.

ஒரு க்ரூப்புக்கு அடுத்த படத்துல ஒர்க் பண்ற வாய்ப்பு வர்ர வரை என்ன வேலை? டிவிடி பார்க்கிறதுதான். பாரதியார் கூட சொன்னார்.

"சென்றிடுவீர் எட்டு திக்கும். கொணர்ந்திங்கு சேர்ப்பீர் கலைச்செல்வங்கள் யாவும்"

ஆனால் எவனோ பெத்து போட்ட குழந்தை  என்னதான் மகாலட்சுமி மாதிரி இருந்தாலும் அதை மருமகளா கொண்டு வரலாம்.இல்லே பலானவர் பொண்ணு சம்மர் லீவுக்கு வந்திருக்குனு சொல்லலாம். அதை விட்டுட்டு அப்படியே உருவறது கயவாளித்தனம்.

ஓகே ஓகே விஷயத்துக்கு வரேன். டைரக்டர்கள் ராஜ்ஜியம் துவங்கின பிறகுதான்
ஸ்டோரி டிஸ்கஷன்ங்கற சம்பிரதாயமே ஆரம்பமாச்சு. இவன் டைரக்டராவறதுக்கு முன்னாடி ஏதோ சில்லறை வேலையெல்லாம் செய்துக்கிட்டே ஒரே ஒரு கதைய 24 மணி நேரம் அசை போட்டு அசை போட்டு வருஷ கணக்கா  நகாசு வேலையெல்லாம் செய்து வச்சிருப்பான் போல. முதல் படம் பண்ணி முடிச்சதுமே டெலிவரி ஆன பொம்பளை மாதிரி டீலாயிருவான் போல. ஒத்தை ஆளா ஒரு கதை பண்ற கெப்பாசிட்டி தாரவார்ந்து போயிருமோ என்னமோ கூட ஆள் சேர்த்துக்கிட்டு கதை "பண்ண" ஆரம்பிச்சுருவான்.

அறிஞர் அண்ணா ஒரே ராத்திரில ஒரு சினிமாவுக்கு கதை வசனம் எழுதிட்டாராம். அதுக்குத்தான் அந்த படத்துக்கு ஓர் இரவுனு பேர் வச்சாங்க.அண்ணா யார்கிட்டயும் டிஸ்கஷன் பண்ணலை.டிக்டேட் பண்ணா எழுதிக்கறதுக்காக ஒரு மாணவரை கூடவே போட்டு வச்சிருந்தாங்க. அவரும் பாவம் அந்த ராத்திரி ஊழல்,விலைவாசி   ஏற்றம் விஷயத்துல மத்திய மானில அரசுகள் மாதிரி தூங்கிக்கிட்டிருந்தார்.

இந்த டிஸ்கஷன்லாம் எப்படி நடக்கும்னா விக்ரம் டிஸ்கஷனை பத்தி சுஜாதா சொல்றப்ப எல்லாரும் ஒரே கதைய யோசிக்க ஆரம்பிக்க ஒரு வாரமாச்சாம்.

இதுல ஹீரோயினியோட ப்ரொட்யூசர், டைரக்டர்,ஹீரோ நடாத்தற டிஸ்கஷன் எல்லாம் வேற ஜாதி. இதை பத்தி ஆ.வி.க்ரூப் எழுதித்தொலையட்டும்.

தெலுங்குல அஸ்வினி தத்துனு ஒரு ப்ரொடியூசர் பயங்கர சவுண்ட்பார்ட்டி. அவரு ஏதோ ஹிந்தி படத்தை தெலுங்குல எடுக்கிறதுக்காக டிஸ்கஷன் ஆரம்பிச்சார். பிரபல எழுத்தாளர் ஒருத்தரையும் இதுக்கு கூப்பிட்டிருந்தாரு. ஏற்கெனவே மேற்படி எழுத்தாளரோட பல கதைகள் படமாகி, க்ளிக் ஆகி நல்ல பேரு.

காலைல டிஃபன் காஃபிக்கப்புறம் டிஸ்கஷன்  ஸ்டார்ட் ஆகும். எழுத்தாளர் ஒன்னுமே பேசமாட்டார். தன் சூட் கேஸ்ல இருந்து மினி கேஸ்,குக்கிங்க் வெசல்ஸ் எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு சமைக்க ஆரம்பிச்சுருவார்.

ஒரு தடவை ப்ரொட்யூசருக்கு கடுப்பாயிட்டு அதான் கீழ ரெஸ்டாரண்ட்ல சாப்பாடு கிடைக்குதுல்ல அப்புறம் இங்கெதுக்கு சார் சமைச்சு அவஸ்தை படறிங்கன்னாரு.

எழுத்தாளர் நீங்க தெலுங்குல எடுக்க போற படத்தை கூட ஏற்கெனவே இந்தில எடுத்துட்டாங்க இல்லையா நீங்க எதுக்கு தெலுங்குல எடுத்து அவஸ்தை படறிங்கனு கேட்டார்.

ப்ரொட்யூசர் ஆகே பீச்சே பந்த் ஆயிட்டாரு. டிஸ்கஷன் முடிஞ்சது. ப்ரொட்யூசர் எழுத்தாலருக்கு ஒரு லம்பான தொகைக்கு  செக் கொடுத்தார். எழுத்தாளர் செக்கை ப்ரொட்யூசர்கிட்டே கொடுத்து  இது உங்களுக்கே தேவைப்படலாம் வச்சிக்கங்கனு கொடுத்துட்டு போயிட்டார். படம் ரிலீசாச்சு. படம் பப்படம்.

டிஸ்கஷனால லாபமே கிடையாதுனு நான் சொல்லமாட்டேன்.1987ல  நான் ஒரு கதை பண்ணேன் (சினிமாவுக்காக எழுதற கதைய எல்லாம் எழுதினேனு சொல்லவே முடியாது. பண்ணேங்கறது சரியான பிரயோகம்). என்னை பொருத்த வரை ரொம்ப நல்லா வந்தது.

ஒரு நாள் என் க்ளாஸ்மெட் அருஞ்சுனை பாண்டியன் வீட்டு  மாடில இருந்த என் ரூமுக்கு வந்தான். எட்டாங்கிளாஸ்ல தான் வந்து சேர்ந்தான். அப்பவே ஸ்கூலுக்கு  சைக்கிள்ளதான் வருவான். .ஃப்ரண்ட் பேக்  கேரியர் , ஹேண்டில்கெல்லாம் கவர், ரிவர் வ்யூ மிர்ரர், சக்கர நடுவுல ஒட்டடை குச்சி மாதிரி அலங்காரம்லாம் செய்து பொய்க்கால் குதிரை மாதிரி இருக்கும். எனக்கெல்லாம் இண்டர் வந்த பிறகுதான் சைக்கிள் யோகம்.

7 வருஷம் ஓடிப்போச்சு. படிக்கிற வயசுல  பார்ட் டைமா பண்ணிக்கிட்டிருந்த  கோணி வியாபாரத்தை  ஃபுல் டைமா மாத்திக்கிட்ட பாண்டியன் அந்த வயசுலயே பெரிய அளவுல லாவாதேவி பண்ணுவான். அவன் சொல்ற கடன்,சீட்டு,ஃபைனான்ச் பிரச்சினை எல்லாம் அப்ப  நமக்கு புரியாது. சரி சரி விஷயத்துக்கு வரேன்.

இப்போ உடுப்பி ஓட்டல் சர்வர் மாதிரி யாருக்கு என்ன பிடிக்குமோ அதை மட்டும் (பேசற) சர்வ் பண்ற மெச்சூரிட்டி வந்திருக்கு. அப்போ தராதரமெல்லாம் கிடையாது. எவன் வந்தாலும் கவிதை நோட்டை பிரிச்சு வச்சிக்கிட்டு ஆரம்பிச்சுருவன்.

பாண்டியனுக்கும் இலக்கியம், சினிமா இத்யாதிக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கிடையாதுன்னு எனக்கொரு அபிப்ராயம். இருந்தாலும்  அன்னைக்கு  நான் எழுதின திரைக்கதைய சொல்ல ஆரம்பிச்சேன்.

பாக்கெட்லருந்து வில்ஸ் ஃப்ளேக் சிகரட் பாக்கெட்டை எடுத்து எனக்கொரு சிகரட்டை கொடுத்தான், தானும் ஒன்னை  பத்த வச்சிக்கிட்டு ஆடாம அசையாம கதைய கேட்க ஆரம்பிச்சான்.

கடைசில "முருகா!  எல்லாம் நல்லாருக்கு.ஆனால் ஹீரோயினோட அம்மாவுக்கும், ஹீரோவோட அப்பாவுக்கும் செக்ஸுவல் காண்டாக்ட் இருக்கே. அப்ப ஹீரோவுக்கு ஹீரோயின் தங்கச்சி முறையாயிருதுல்லயா"ன்னான் பாருங்க ..மண்டைல கிரிக்கெட் மட்டைலயே ஒன்னு போட்டாப்ல ஆயிருச்சு. அடுத்த அஞ்சு நிமிஷத்துல அந்த குறைய ரெக்டிஃபை பண்ணி கதைய மாத்திட்டன் . அது வேற விஷயம்.ஆனால் அந்த குறை எனக்கு எப்படி தெரியவந்தது. அந்த கதைய பாண்டியனுக்கு சொன்னதாலதானே. இதான் டிஸ்கஷனோட பலம்.

டிஸ்கஷன்ங்கறது ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட ஒரு கதையை மெருகேத்தவோ, சரிபார்க்கவோ நடக்கலாமே தவிர டிஸ்கஷன் மூலமாவே ஒரு கதை உருவாவறது அயோக்கிய தனம்.

தெலுங்குல ஒரு பிரபல டைரக்டர். அவர் வசனத்தையே பத்து பேரை  எழுதச்சொல்வாராம். எல்லாத்தயும் படிச்சு அததுல இருந்து ஒரு வார்த்தை அ ஒரு வரினு தூக்கி தானும் ஏதாச்சும் சேர்த்து எழுதிருவாராம். ஒரு பீரியட்ல வெறுமனே டைரக்டர்னு தன் பேரை போட்டுக்க அனுமதி கொடுத்து அதுக்கும் லம்பா ஒரு தொகைய கலெக்ட் பண்ணதாவும் செய்திகள் உண்டு.

சரி இதையெல்லாம் எழுதிட்டு வந்ததோட நோக்கம் என்னன்னா.. எனக்கே வசதி வந்து (வசதியால இப்ப இருக்கிற  இந்த அரையணா மூளை கூட வேலை செய்யாம போயி) இந்தியாவை பணக்கார நாடாக்க நான் தீட்டின ஆப்பரேஷன் இந்தியா 2000 ஐ ஃபோக்கஸ் பண்ணி ஒரு சினிமா எடுக்க முடிவு பண்ணி அதுக்கான டிஸ்கஷன் நடந்தா எப்படியிருக்கும்னு எழுதி உங்களை சிரிக்க+சிந்திக்க வைக்கிறதுதான்.

நான்: வணக்கம் தம்பிகளா .. நீங்கல்லாம் நேத்துவரை பிரபல டைரக்டர்ங்க கிட்டே அசிஸ்டண்டா இருந்து நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கேதர் பண்ணியிருக்கிங்க. என்னப்பத்தி உங்களுக்கு ஓரளவு  தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.  நான் 1986ல இருந்து உழைச்சு இந்தியாவ பணக்கார நாடாக்க ஒரு திட்டம் தீட்டினேன். அதனோட முக்கிய அம்சங்கள் ...

பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல் ,.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல், நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்,.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்தை அன்றைய ஆட்சியாளர்ங்க கவனத்துக்கு எடுத்துட்டு போக 1997 லருந்து என்னென்னவோ தகிடுதத்தங்கள் பண்ணியும் ஒரு பப்பும் வேகலை. ஒரு 7 வருஷம் சின்சியரா ட்ரை பண்ணிட்டு ஒதுங்கிட்டன்.ஏண்டான்னா தனிப்பட்ட வாழ்க்கை ரொம்பவே நாறிப்போச்சு.  என் மேல உள்ள  மரியாதைல உதவ முன்வரவங்க கூட இவனுக்கு உதவ போய் நாம சிக்கல்ல மாட்டப்போறோம்னு ட்ராப் ஆகிற மாதிரி ஆயிருச்சு. தப்பி தவறி உதவறவங்க கூட குடிகாரனுக்கு, சூதாடிக்கு, கூத்திக்கள்ளனுக்கு சொல்றாப்ல " பார்த்து சாமி ! நீங்க நல்லாருக்கனும், நாலு பேர் மாதிரி ( சுய நலத்தோட) நல்லபடியா வாழனும்னுதான் இந்த உதவிய பண்றேன். நீங்க பாட்டுக்கு மறுபடி ஆப்பரேஷன் இண்டியா, இந்தியாவ பணக்கார நாடாக்கறேனு கிளம்பிராதிங்கன்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டான்.

விவேகானந்தர் சொல்வாரு " தா பாரு கண்ணா இந்த படைப்புலயே உன் மனசை விட உன்னத வஸ்து பிரபஞ்சத்துலயே கிடையாது. சப்போஸ் ஏதாவது ஒரு வஸ்து உன்னதமா தோணுச்சின்னா . உன் மனசு வீக்கா இருக்குனு அர்த்தம்"

நாலு பேருக்கு அட்வைஸ் பண்ற  பொசிஷன்ல இருந்துக்கிட்டு அந்த நாள் முதல் இந்த நாள் வரை  எவனெவனோ நாதாரி  பண்ண நாதாரி வேலைக்கு  நாசமா போன நாட்ல மானங்கெட்டு வாழந்து கிட்டு தன்னை வேகவைக்க கல்லடுப்பு மேல  போட்ட உலைல ஜல கிரீடை பண்ற ஆமை மாதிரி அற்ப சந்தோஷம் அனுபவிக்கிற சனம் கிட்டே  நான் அட்வைஸ் கேட்டுக்கற நிலை எதுக்கு வந்தது என் கிட்டே பணமில்லேங்கறதாலதானே.. முதல்ல பணம் பண்ணி நான் பணக்காரனாகி அப்புறம் இந்த  நாட்டை பணக்கார நாடாக்கிறேனு சபதம் போட்டேன்.

என் திட்டத்தை அமல் படுத்த சொல்லி நான் அனுப்பற ரெஜிஸ்டர் போஸ்ட், கொரியர்,தந்தி,மெயிலை பார்த்து ரெஸ்பாண்ட் ஆகிற அளவுக்கு இன்னைய தேதில  உத்தமர்கள் யாருமில்லே.

ஸோ டெம்ப்ரரியா ஆ.இ  க்கு லீவு விட்டேன். என்னை நானே கமர்ஷியலைஸ் பண்ணிக்கிட்டேன். கடந்த 2 வருஷத்துல ஒரு நாய் கிட்டே போய் நூறு கொடு ஆயிரம் கொடுன்னு கேட்க தேவையில்லாத ஸ்டேஜுக்கு வந்துட்டன். நான் என் லட்சியத்தை கை விட்டது குடிகாரன் குடியை விட்ட கணக்கா சர்க்கிள் எல்லாம் பரவி  நம்ம ரெப்புடேஷன் ஜாஸ்தியாயிருச்சு.

நானும் மனசாட்சிய கழட்டி வச்சுட்டு காசு பொறுக்க ஆரம்பிச்சேன். பேசிக்கலா அறிவாளியான நான் என் அறிவை சம்பாதனை பக்கம் திருப்பினேன். காலமும் கை கொடுத்தது. இன்னைக்கு  என் திட்டத்தை  தீமா வச்சி  ஒரு கோடி ரூபா பட்ஜெட்ல ஒரு படம்  எடுத்து தமிழ்,தெலுங்கு,இந்தினு மூணு மொழில ரிலீஸ் பண்ண ப்ளான் பண்ணியிருக்கேன்.

என் கண்டிஷன் ஒன்னுதான். என் திட்டத்தோட 5 அம்சங்கள் ரசிகர் மனசுல சிக்குனு நிக்கனும் .அதுக்காக அந்த காலத்து ந்யூஸ் ரீல் மாதிரி பண்ணீராதிங்க. .இதை சொல்ல காரணம் போட்ட பணம் திரும்பனும்னுல்ல. சொல்ல நினைச்ச விஷயம் சனங்களை சென்றடையாம போயிருமேனுதான்"
துணை இயக்குனர் 1:
சார் ஹீரோ யாரு, ஹீரோயின் யாரு,வில்லன் யாருனு சொல்லுங்க சார்
நான்:
 ஏன்யா உங்க ஊர்லல்லாம்  காலுக்கேத்தாப்ல செருப்பை வாங்க்குவிகளா? செருப்பேக்காத்தாப்பல காலை வெட்டிக்குவிங்களா?
துணை இயக்குனர்1:
 ஐம் சாரி சார்.. நம்ம பட்ஜெட்டுக்கு ரஜினி ,கமல்,விஜய், அஜீத்தெல்லாம் கிடைப்பாங்களா சார். ஹீரோ யாருனு தெரிஞ்சா கதை பண்ண நல்லாருக்குமேனுதான் கேட்டேன்
நான்:
தம்பி நான் சொன்ன ஒரு கோடி ரூபா பட்ஜெட் சினிமா தயாரிப்பு செலவுக்குதான் . நீங்க தயார் பண்ற கதைய ரஜினி பண்ணாதான் நல்லாருக்கும்னு தோணினா ரஜினியையே புக் பண்ண தயங்க மாட்டேன்.
துணை இயக்குனர்2
: அவருக்கு லம்ப் ரெம்யூனரேஷன்  தரணுமே சார்.
நான்:
 கண்ணா .. நதிகளை இணைக்க ஒரு கோடி ரூபா டொனேஷன் தரேன்னாரில்லையா. அனவுன்ஸ் பண்ணி பலவருஷமாச்சு. இந்த படத்தோட லட்சியம் கூட அதுவேதான். ஸோ ஃப்ரீ ஆஃப் காஸ்ட் நடிச்சு கொடுங்கனு கேட்கிறேன்
துணை இயக்குனர்3:
(மனசுல) ஏதோ படம் கிடைச்சது .. ஒரு ஆறுமாசம் பிழைப்பை  ஓட்டிரலாம்னு பார்த்தா இந்தாளு வில்லங்கம் பிடிச்ச ஆளாயிருக்கானே (வெளியே) ஓகேசார்..
நான்:
வெரிகுட் தட் ஈஸ் தி ஸ்பிரிட்.
துணை இயக்குனர்:1
சார் நம்ம படம் ஃபேண்டசி படமா?  சோஷியல் மூவியா?, ஹிஸ்டாரிக்கல் மூவியா?
நான்: தம்பி .. இதுதான் நான் தயாரிக்கப்போற முதல் படம். இதுவே கடைசிபடம் கூட மனுஷனைத்தான் சாதி பேரை சொல்லி பிரிச்சு வச்சுட்டம். சினிமாவ கூட ஏன் பிரிக்கனும். மூணுமே சேர்ந்து வராப்ல ஒரு கதை பண்ணுங்க
துணை இயக்குனர்2:
ஓகே சார். ஒரு சின்ன சந்தேகம் நம்ம கதை  நீங்க சொன்ன 5 அம்சங்களை அமலாக்க ஹீரோ பண்ற முயற்சிகளோட துவங்கி அமலாகிறதுல முடியனுமா? இல்லே இன்டர்வெல் பேங்ல  அமலாயி, அதுக்கப்புறம் இந்த திட்ட அமலாக்கத்துல  வர்ர பிரச்சினைகள்,  கிடைக்கிற லாபங்களை  கூட ஃபோக்கஸ் பண்ணனுமா?
நான்: ரெண்டாவது ஆப்ஷனே பெட்டராயிருக்குப்பா..
துணை இயக்குனர்1: ஓகே சார். நம்ம கதை ஹீரோ ஓரியண்டடா இல்லை ஹீரோயின் ஓரியண்டடா?
நான்: டே நான் ஆண்பிள்ளை சிங்கம்டானு அலட்டிக்கிறமே தவிர ஆண்மகன் ஒரு  ட்ரை கேரக்டர். ஹீரோ ஓரியண்டட் படத்தை ஆண்களே பெரிசா ரசிக்கிறதில்லை. இதை ரசிக்கிறவுக ஒரு குறிப்பிட்ட ஏஜ் க்ரூப்ல தான் இருப்பாங்க. ஹீரோயின் ஓரியண்டட்னா ஆல் ஏஜ் க்ரூப்ஸ் அட்ராக்ட ஆவாங்க. ஸோ ஹீரோயின் ஓரியண்டடாவே இருக்கட்டும்.

Saturday, April 3, 2010

எமலோகத்தில் நித்யானந்தா : 2

முன் கதை
எமதூதர்கள் நித்யானந்தாவை எமலோகம் அழைத்து வருகிறார்கள். நித்யானந்தா தன் வழக்கை விசாரிக்கும் தகுதி எமன், பிரம்மா,விஷ்ணு,மகேஸ்வரன் யாருக்கும் கிடையாது.எல்லாரும் செக்ஸ் ஸ்காண்டலில் சிக்கியவர்களே என்று வாதம் பண்ணுகிறார்.

ப்ளாகர்ஸ்ல யாராவது ஒருத்தரை குலுக்கல் முறைல தேர்வு செய்தா அவர் விசாரண பண்ண  ஒத்துக்கறேனு நித்யானந்தா சொல்றார்.

குலுக்கல்ல சித்தூர்.முருகேசன் பேர் வருது. இனி படிங்க‌
ஹி ஹி.. உனக்கு 22 எனக்கு 32 தொடர் கதைல  ஹீரோ ஹீரோயினுக்கு இப்ப இதாங்க வயசு தொடர் கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தை  படிக்க இங்கே அழுத்துங்க‌





நித்யா: (மனசுக்குள்) அய்யய்யோ இதென்னடா நித்யானந்தாவ பிடிச்ச கிரகம் இப்படி ஆட்டி வைக்குது.
எமன்: என்ன ஓய் .. உம்ம விருப்பப்படியே குலுக்கல்ல வந்த பேர்
கொண்ட  ஆசாமிய வரவழைக்கிறேன். விசாரணைக்கு சம்மதம் தானே
நித்யா: (மனசுக்குள்) சம்...........மதம் ?  கேட்கறிங்களா? சம்மதம்?ஹும்.. மசாலா தடவ கோழி கிட்ட சம்மதம் கேட்டாப்ல இருக்கு (மேலுக்கு) சம்மதம் தான்

பூலோகம் , ஆந்திர மானிலம் சித்தூர்

எம தூதர்கள்: வாய்யா கொஞ்சம் வேலையிருக்கு
முருகேசன்: யாருப்பா நீங்க அக்பர்  கவுசர் அனுப்பின ஆளுங்களா?
எம தூதர்கள்: ஊஹூம்
முருகேசன்: திருமலை கோடி?
எம தூதர்கள்:  ஊ ஹூம்
முருகேசன்:பின்னே யாருப்பா நீங்க?
எமதூதர்கள்:எமதூதருங்க சார்
முருகேசன்: தபார்ரா.. அப்ப ஆட்டம் க்ளோசா? ஆமா செத்த பிறகுதானே வரனும். உயிரோட இருக்கிறப்பவே வரிங்க?
எமதூதர்கள்: உன் விதி முடிஞ்சு வரலப்பா . எமலோகத்துல சின்ன விசாரணை இருக்கு..வந்து போயிருவ வா
முருகேசன்:என்னப்பா ராணி புக் மாதிரி தமாசு பண்றிங்க? நானெல்லாம் ரொம்ப சின்ன ஆளுப்பா. ஏதோ சின்ன சின்ன பஞ்சாயத்து பண்றது உண்டுதான் அதுக்காக யமலோகமெல்லாம் வர்ர அளவுக்கு நமக்கு சீன் இல்லப்பா
எமதூதர்கள்: ஏன்யா எமலோகம்னா கொஞ்சூண்டு கூட பயமில்லாம இருக்கே
முருகேசன்:எத்தினி சினிமால பார்த்திருக்கேன் .. அப்புறம் என்ன பயம். ஆமா உங்க பாஸ் அதான் எமன்  எப்படி இருக்காரு.இப்ப கூட எமண்டானு கத்தி இருமுறாரா?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா  கார்ப்போரேட் ஆஃபீஸ் மாதிரி மாறிருச்சு. சித்ர குப்தன் ஷார்ட்ஸ் எல்லாம் போடறாருன்னா பார்த்துக்கயேன்
முருகேசன்: அப்பசரி பார்த்துர வேண்டியதுதான் . கிளம்பலாமா?
எமதூதர்கள்: ஏயப்பா உனக்கு எமலோகம்னா பயமில்லயா?
முருகேசன்: அதுக்கு தாத்தாவா இங்கே பல இடம் இருக்கு.. எல்லாம் பார்த்தாச்சுங்கண்ணா போலாம் போங்க
எமதூதர்கள்: எதுக்கு கூட்டுவரச்சொன்னாங்கனு கேளேன்
முருகேசன்:என்ன இருக்கு எமலோகத்தில் நித்யானந்தானு ஒரு பதிவு போட்டேன். அதுல உங்க பாஸ் குந்திக்கு தலைச்சன் புள்ள கொடுத்ததை பத்தி எழுதியிருந்தேன். ராம கோபாலன் சார் எதுனா கம்ப்ளெயிண்ட் பண்ணியிருப்பாரு ..அதப்பத்தி தானே விசாரணை?
எமதூதர்கள்:அதெல்லாம் ஒன்னுமில்லப்பா .. நித்யானந்தா நித்யானந்தானு ஒரு போலி சாமியார்
முருகேசன்: அடத்தெரிக்க .. அந்தாள எப்ப புக் பண்ணிங்க
எமதூதர்கள்: இன்னைக்குதான்
முருகேசன்:அப்போ சந்தேக மரணம்தான் .. ஓஞ்சு போட்டும் சாகறப்ப நமக்கு ஒரு நல்லது பண்ணியிருக்கு பார்ட்டி .அதுசரி நித்யானந்தா கேஸ்ல நான் எங்கே வரேன். சாட்சி கீட்சி சொல்லனுமா?
எமதூதர்கள்:இல்லப்பா .. குறுக்கு விசாரண பண்ணனுமாம்
முருகேசன்: காமெடி கீமிடி பண்ணலியே
எமதூதர்கள்:அட நீ கெளம்புப்பா

                    * * *
எமலோகம்                   
எமன்: வாப்பா .. நீதான் முருகேசனா? என்னப்பா ஏதோ மாமியார் வீட்ல விருந்தாட வந்த மாதிரி வர்ரே..இது எமலோகம் ஞா இருக்கில்ல
முருகேசன்:எனக்கு இன்னும் இன்னும் இந்த நாறிப்போன வாழ்க்கைய வாழனும்னு இருந்து நீங்க  இங்கே கூட்டிட்டு வந்திருந்தா கொஞ்சம் ஆடிப்போயிருப்பேன். நமக்குத்தான் அந்த எண்ணமே கிடையாதே.
எமன்: என்னப்பா அப்படி சொல்ட்டே. மனித வாழ்க்கைல இன்பமே கிடையாதுங்கறியா?
முருகேசன்: ஹும் ..இன்பம் இருக்கு .ஆனால் எல்லாமே டெம்ப்ரரியா இருக்கே. ஒரு இன்பம் தன் பின்னாடியே ஒரு துன்பத்தை கோர்த்துக்கிட்டுதானே வருது. இன்பம் கின்பம்  எல்லாம்  யோசிக்காத வாழறவனுக்குதான் சாரே ! நாம லேசா யோசிக்கறம். அதுவும் சம்பவ நேரத்துலயே ரோசிக்கிறமா.. மீனிங் லெஸ்ஸுன்னுதான் தோணுது . வாழ்க்கை   ஜவ்வான மெகாசீரியலு மாதிரி இருக்குது தலை.. முடிஞ்சி தொலையாதாங்கற ஸ்டேஜுக்கு வந்துட்டன்.
எமன்:பின்னே தற்கொலை பண்ணிக்கிட வேண்டியதுதானே
முருகேசன்:அஸ்கு புஸ்கு.. அது மட்டும் பண்ணக்கூடாது வாத்யாரே..ஏன்னு கேளு. எங்கம்மா என்னை ஜி.ஹெச் லதான் பெத்தா. நான் கவர்ன்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சேன். கவர்மென்டுக்கு ஏது பணம் மக்கள் வரி கட்டினாதானே கவர்ன்மென்டுக்கு பணம்.  அதே மக்கள் தான் ஜோசியம் பார்த்துக்கிட்டு காசு பணம் கொடுத்து என்னை போஷிச்சாங்க.  நான் அவிகளுக்கு கடன் பட்டிருக்கேன். அவிக துன்பங்களை ஒரு மி.கி அளவாவது குறைக்க எதையாச்சும் குரைச்சிக்கிட்டே  இருந்தா கூட போதும் . கடன் தீருதுல்ல. கருமம் ஒழியுதுல்ல
எமன்:அட அடா என்னா பாலிசிப்பா
முருகேசன்: வாத்யாரே சீக்கிரம் வேலைய முடிக்கலாம். ஊர்ல சின்னதா ரெண்டு வேலையிருக்கு. அதையாவது பார்க்கலாம்ல
எமன்: சரிப்பா அந்த நித்யானந்தாவ கொண்டுவாங்க
முருகேசன்: சார் சார்.. இங்கே கொஞ்சம் ஃபெனாயில் கினாயில் கிடைக்குமா ?
எமன்: ஏம்பா?
முருகேசன்: பார்ட்டி வந்தா ரொம்ப நாறும் சார்
எமன்: ஹா ஹா ..ஹா

( நித்யானந்தாவை எம தூதர்கள் கொண்டு வர்ராங்க)

நித்யானந்தா: ( தமது வழக்கமான ஸ்டைலில் புன் சிரிப்புடன் ஆசி வழங்கிய படி)  நண்பனே உன் கடமைய செய்யலாம். விசாரணை துவங்கட்டும்
முருகேசன்: நான் உங்களை விசாரிக்கலாம்ல .உங்களுக்கெதுவும் அப்ஜெக்சனில்லயே
நித்யானந்தா: இப்படி ஒரு திருவிளையாடலை யாம் தான் ஏற்பாடு செய்தோம்.
முருகேசன்: இந்த வெட்டி பந்தாவுக்கொண்ணும் குறைச்சலில்லே . இதென்ன உங்க ஆசிரமமா .. இல்லே நான் என்ன பக்த சிகாமணியா?
நித்யானந்தா: ஞானி நரகத்தை கூட ஸ்வர்கமாவே நினைச்சு வாழறாம்பா. இதை எம லோகம்னு நினைச்சாதான் எமலோகம்.
முருகேசன் : அப்போ உங்க  ஆசிரமத்தை கூட ஆசிரமமா நினைச்சு வாழல போல இருக்கு அப்படித்தானே
நித்யானந்தா: (மனசுக்குள்) என்னங்கடா இது கொக்குக்கு ஒன்னே மதிங்கற மாதிரி பாயிண்டுக்கே இழுக்கறான் (மேலுக்கு) யோகிக்கு எல்லாமே ஒன்னுதான் தம்பி
முருகேசன்:ஓஹோ அதனாலதான் ஹீலிங் தெரஃபின்னிட்டு கண்ட குட்டி மேலயும் கை போட்டியா
நித்யானந்தா:என்ன மரியாதை குறையுது.........   நீ என்ன உத்தமனா.. பலான ஜோக் எழுதுற  பார்ட்டிதானே
முருகேசன்: அடத்தெரிக்க .. என்னடா பார்ட்டி அதி வினயம் காட்டுதுனு  ரோசிச்சேன். பாஞ்சுட்டே இல்லை. இப்ப வச்சிக்கிறேன். பலான ஜோக் எழுதினேங்கற இல்லைங்கல. நான் எந்த கண்டிசன்ல எழுதினேன் தெரியுமா ப்ளாக் வச்சி எட்டுவருஷம் சுத்த சைவமா நடத்தி பார்த்தேன். உன்ன மாதிரி டகுலு காட்டற பார்ட்டிங்களுக்கு 7 வருசம்  சர்வீஸ் பண்னாலும் , ஏழு ஜன்மம் உங்க காலடில விழுந்துகிடந்தாலும் பேராத ஸ்ருஷ்டி ரகசியத்தை எல்லாம் ரத்தினமா கொட்டினேன். பப்பு வேகலை. தாளி.. இதென்னடா கடல்ல பெய்த மழையா வீணா போகுது. நாம எழுதறது பத்து பேர் படிக்கத்தானே. யாரும் படிக்கலன்னா எழுதி என்ன பிரயோஜனம்னு திங்க் பண்ணி சனத்தை கூவி கூப்பிட பலான ஜோக் எழுதினேன்.  உன்னை மாதிரி உசுப்பி விடலே கண்ணா, செக்ஸை பார்த்து சிரிக்க வச்சேன். வெறுமனே சிரிக்க வைக்கலே நைனா .. அதும் பின்னால இருக்கிற சைக்கலாஜிக்கல்,செக்ஸாலஜிக்கல் சத்தியங்களை விவரிச்சேன்.
நித்யானந்தா:அதெல்லாம் எனக்கு தெரியாது செக்ஸ் எழுதினயா இல்லையா?
முருகேசன்: நீ பேசறது எப்படி இருக்குன்னா இந்த குழாயடில பொம்பளைங்க பேசிக்கிறாப்ல இருக்கு . அங்கேதான் சில தே....யாளுங்க ஆன அழும்பெல்லாம் பண்ணிக்கிட்டு யாராவது அந்த  அநியாயத்தை  தட்டிக்கேட்டா ஊர்ல இருக்கிற்வளையெல்லாம் தே...யான்னு சாதிப்பாளுங்க. உன் பேச்சு அப்படித்தான் இருக்கு. யோவ் நான் சிவிலியன். ஆர்டினரி சிட்டிசன் ஆஃப் இண்டியா. நீ சன்னியாசி. காவி கட்டின ஸ்வாமிஜி. அதுலயும் பிரம்மச்சரியத்தை போதிச்ச உத்தமன். இந்த விசாரணை உன்னை பத்தி தான் . என்னை பத்தி கிடையாது
நித்யானந்தா:பைபிள்ள ஜீஸஸ் என்ன சொல்றாரு " உங்களில் பாவம் செய்யாதவர் யாரோ அவர் முதல் கல்லை வீசட்டும்"னாரு.
முருகேசன்: சரிப்பா நாங்கல்லாம் தப்பு பண்ணவங்க கிரேனை வச்சி ஒரே கல்லா பெரிய கல்லா போட்டுரட்டுமா? பாவம் பண்ணாதது கிரேன் ஒன்னுதான்.
நித்யானந்தா: நான் காவி கட்டினவன். பிராமணனுக்கு சமமானவன் .என்னை கொன்னா பிரம்ம ஹத்தி தோஷம் வரும்.
முருகேசன்:அட போய்யா பொங்கி. ராவணனை கொன்னப்ப ராமனுக்கு கூட பிரம்மஹத்தி வந்துருச்சாம். கடல்ல குளிச்சா அதெல்லாம் காக்கா தூக்கிட்டு போயிரும்.
நித்யானந்தா: நாலு சுவருக்குள்ள நடந்ததை விசாரிக்கிறது தனி மனித உரிமை மீறல்.

முருகேசன்: நீ காவி கட்டாத இருந்திருந்தா நீ வெறுமனே சுய இன்பம் அனுபவிச்சிருந்தா அது உன் பர்சனல் விஷயம். ஆனால் நீ காவி கட்டியிருக்கே,  பிரம்மச்சரியத்தை போதிச்சிருக்கே. உன் போதனைய பரப்பறதுக்காக மக்கள்    நெத்தி வேர்வை நிலத்துல சிந்த சம்பாதிச்ச பணத்தை கொட்டிக்கொடுத்திருக்காங்க  . நீ ஜஸ்ட் சுய இன்பம் அனுபவிச்சிருந்தா கூட.. அட ஸ்வப்ன ஸ்கலிதம் நடந்திருந்தா கூட அது ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட் . சரி உன் காவி உடைய தவிர்த்துட்டு கூட பார்க்கலாம்.  

நித்யானந்தா: அய்யய்யோ இப்ப வஸ்திராபரணம் நடக்கப்போவுதா?

முருகேசன்: அட த்தூ.. திருடனுக்கு திருட்டு புத்தி அவிங்கப்பனுக்கு அதே புத்திங்கற மாதிரி புத்தி போவுது பாரு. நீ சன்னியாசிங்கறத மறந்துட்டு பார்த்தா கூட நீ பண்ணது குற்றம்தான்னு  சொல்ல வந்தேன். உன் அஜால் குஜால் வேலைல இன்னொரு பார்ட்டி சம்பந்தப்பட்டிருக்கு.ரஞ்சிதா ஒன்னும் ப்ரொஃபெஷ்னல் செக்ஸ் ஒர்க்கர் கிடையாது. அப்படியே இருந்தாலும் இந்தியாவுல பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. நீ எப்போ லெமன் லைட்டுக்கு வந்துட்டயோ, எதுவுமே பர்சனல் இல்லே கண்ணா. நீ  ஒரு ஊருக்கு போறே ,  கேம்ப் நடத்தறேன்னா அது உன்+ உன்னை நம்பி வந்தவுங்களோட  பர்சனல் ப்ரோக்ராமா இருந்தா அதுக்கு ஏன்யா குமுதத்துல விளம்பரம்,ஆப்ளிகேஷன் ஐட்டம்?.  நீ தனிமனிதனில்லயா.. சனாதன மதத்தோட சிம்பலா எஸ்டாப்ளிஷ் பண்ணிக்கிட்டே. 

நித்யானந்தா: காவி கட்டினதுதான் என் தப்பா ? ஜீன்ஸ் போட்டுக்கிட்டு என்னவேணா செய்யலாமா?
முருகேசன்: அட அல்ப்பம் இப்படி நினைச்சித்தான் காலிஃபோர்னியால ஜீன்ஸ் மாட்டிக்கிட்டு கெட்ட ஆட்டம் போட்டியா? நீ ஜீன்ஸ் போட்டாலும்,காவி போட்டாலும் அடுத்தவன் பெண்டாட்டியோட உருண்டா அது அடல்ட் ரிய்யா.. தினத்தந்தி பாஷைல சொன்னா கள்ள காதல் . நீ இதே வேலைய ஒரு சித்தாள் பெண்டாட்டி விஷயத்துலயோ, கூலிக்காரன் பெண்டாட்டி விஷயத்துலயோ செய்திருந்தா சங்கை அறுத்திருப்பான். ரஞ்சிதா வீட்டுக்காரர் கொஞ்சம் வசதியான ஆள் போல அதான் விட்டுவச்சிருக்காரு
நித்யானந்தா: நீ கொலை செய்ய தூண்டறே.
முருகேசன்: நீ ஆன்மீகத்தை, ஆன்மீக ஆர்வலர்களோட நம்பிக்கையையே கொன்னுட்ட. தன்னை கொல்ல வர்ர பசுவை கூட கொல்லலாம்னு தர்ம சாஸ்திரம் சொல்லுது. உன்னை கொல்லாம விட்டாங்களேனு சந்தோசப்படு..
நித்யானந்தா:அடுத்தவுக ஒப்புதலோட படுத்துக்கிட்டா தப்பில்லேனு சட்டம் சொல்லுது.
முருகேசன்: நீ என்ன பி.பியா இல்லே?  டிஃபென்ஸ் லாயரா? இல்லே லா காலேஜ்ல லெக்சரரா? நீ உபதேசிச்சதெல்லாம் தர்மம் நைனா. அந்த தர்மத்தை நீ ஃபாலோ பண்ணனும். இல்லேன்னா அது 420 வேலை, ஃப்ராடு வேலை,மொள்ளமாரி வேலை. ப்ரீச் ஆஃப் காண்ட் ராக்ட், சதி, மோசடி, மத நம்பிக்கைகளை அவமதிச்ச குற்றம்.
நித்யானந்தா:இதெல்லாம் கோர்ட்டுல நிக்காது
முருகேசன்: இது மேனோட  கோர்ட்டில்ல சாமி.. எமனோட கோர்ட்..
நித்யானந்தா: மிஸ்டர். எம்.டி.ராஜன் இதையெல்லாம் நீங்க அனுமதிக்கிறிங்களா?
எமன் : அனுமதிக்கவோ,மறுக்கவோ இந்த கோர்ட்ல இப்ப நான் நீதிபதியோட ஸ்தானத்துல இல்லை. எனக்குத்தான் உன்னை விசாரிக்கவே தகுதியில்லேன்னிட்டியேப்பா.
நித்யானந்தா:(மனசுக்குள்) அய்யய்யோ ஆப்பசைச்ச குரங்குகதையாயிருச்சே.. ஒரு வேளை பிரம்மச்சரிய முகமூடிய போட்டுக்கிட்டு கச முசா பண்ணதால ஆஞ்சனேயருக்கு கோபம் வந்து இப்படி இந்த குரங்குபயல்கிட்டே மாட்டிவிட்டு சோதிக்கிறாரோ.
முருகேசன்: என்ன சாமி முணுமுணுக்கறிங்க.. இதெல்லாம் கோர்ட் அவமதிப்பு கீழே வந்துரும் ..டேக் கேர்
நித்யானந்தா:அய்யய்யோ நான் ஒன்னும் முணுமுணுக்கல
முருகேசன்: சரி மேட்டருக்கு வா.பண்ண  தப்பை  தப்புனு ஒத்துக்கிடறியா இல்லையா..
நித்யானந்தா: நான் யாரையும் வற்புறுத்தலை.ரஞ்சிதாவ  ரேப்பா பண்ணேன்.
முருகேசன்: அட  டுபுக்கே இது மேல் சேவனிஸ்ட் சொசைட்டி. பெண் வீக்கர் செக்ஸாவே இருக்கா. இந்த சமூகத்துல உண்மையான ஒடுக்கப்பட்ட ஜீவன் பெண் தான். இதுவே நீ பத்து ரூபா இல்லாத பன்னாடையா, மூஞ்சி முகம் தெரியாத கஞ்சா அடி சாமியாரா , இருந்திருந்தா இதே ரஞ்சிதா செருப்பாலடிச்சிருப்பாங்க.  நீ உன்னோட நேம்,ஃபேம்,ப்ராஸ்பெரிட்டி,செல்வாக்கு எல்லாத்தயும் வச்சு அவிகள மறைமுகமா ப்ளாக் மெயில் பண்ணேனுதான் சொல்லனும். மேலும் அவிக டைவோர்சியா, விடோவா, அன் மேரீடா இருந்திருந்தாலும் பரவால்ல அவிக கல்யாணமானவுக. மேரேஜுங்கறது ஒரு சோஷியல் அக்ரிமென்ட். இதை அவிக ப்ரேக் பண்றாப்ல பண்ணியிருக்கே. குற்றங்கள்ள பேர்பாதி குற்றம் செக்ஸ் ஓரியண்டட்தான். ஒரு வேளை அவிக வீட்டுக்காரர் ரஞ்சிதாம்மாவை போட்டுத்தள்ளியிருந்தா ..
நித்யானந்தா: நீ என்னை சாமானியனா நினைச்சு பேசிக்கிட்டிருக்கேப்பா   நான் இதையெல்லாம் கடந்தவனப்பா. அக்கரையிலருந்து பார்க்காதே இக்கரைக்கு வா .பாரு அப்பதான் நிஜம் புரியும்.
முருகேசன்: நீ எட்ட இருந்தாலே நாறுது. அதுலயும் உன் கரைக்கு வந்தா அவ்ளதான். நீ ஆள விடு. உன் கரையில ,உன் கறைங்களோட நீயே இருந்துக்க.
நித்யானந்தா:  நான் சாமானியனில்லே. தர்ம சாஸ்திரப்படி நான் பிராமணன். எங்களுக்குனு சிறப்பு உரிமைகள் எல்லாம் இருக்கு.
முருகேசன்:ஓ அப்படி வர்ரியா.. வா. சரியா நீ பார்ப்பானாவே கூட இரு.  நீ ராஜா சம்சாரத்தை வேலை பார்த்திருந்தா அதுவும் வெறும் சந்தானத்துக்காக தான் உங்க ஸ்பெஷல் ப்ரிவிலஜ் படி ஓகே. ரஞ்சிதா எந்த  நாட்டு ராஜாவ கட்டியிருக்காங்க.
நித்யானந்தா: (மனசுக்குள்)  அய்யய்யோ ரவுண்டு கட்டி அடிக்கிறானே (வெளியில்) நான் என்னை பொறுத்தவரை எந்த தப்பும் செய்யலை.  நான் ஒரு ஆராய்ச்சியாளன். ஜஸ்ட் சில பரிசோதனைகள் செய்தேன்.
முருகேசன்:அப்படிங்கறே. அப்ப நீ செக்ஸாலஜி படிச்சிருக்கனும். யூனிவர்சிட்டில ரிசர்ச் ஸ்காலரா பதிவாயிருக்கனும். உன் பரிசோதனைக்கு எலி, பூனைய உபயோகிக்கிற மாதிரியிருந்தா கூட மேனகா காந்தியை கன்வின்ஸ் பண்ணியிருக்கனும்.  நீ ஒரு மனுஷ உசுரை, அதுலயும் கல்யாணமான   பொம்பளைய உபயோகிச்சிருக்க.  அதுக்கு ஆரு கிட்டெ பர்மிஷன் வாங்கினே.
நித்யானந்தா: உங்க பேச்சுல குரோதம் இருக்கு. என் வளர்ச்சிய பார்த்து பொறாமை உங்களுக்கு .
முருகேசன்:வளர்ச்சியா.. போடாங்கோ.உன் வளர்ச்சி எதுலன்னு உன் ஆராய்ச்சியும், வீடியோவுமே சொல்லுதே.
நித்யானந்தா: என்னை அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டறிங்க.
முருகேசன்: இல்லே நைனா தூக்கு தண்டனைய நீயே நிறைவேத்திக்கோனு சஜஸ்ட் பண்றேன்
நித்யானந்தா:   நீங்க  வீடியோல பார்த்ததெல்லாம் ஜஸ்ட் என் உடம்புதான். ஆத்ம ரீதியில பார்த்தா நான் சாட்சாத்  கிருஷ்ண பரமாத்மா. அவிக எல்லாம் கோபிகைங்க
முருகேசன்:  யோவ் நித்யா இப்படி வர்ரயா? வா வச்சிக்கிறேன் உன்னை. கிருஷ்ணர் ஒரு தரம் யமுனா நதிக்கரைல இருந்தாராம். யமுனா அப்படியே இந்தியாவுல ஊழல் மாதிரி பெருக்கெடுத்து ஓடுது.அப்போ ஒரு தயிர்காரி வந்து "யப்பா .. நான் ஆத்த தாண்டி போனா தான் பிழைப்பு .எதுனா பண்ணே"னு கேட்கிறா.உடனே கிருஷ்ணர் அவ கிட்டே வெண்ணை வாங்கி திருப்தியா சாப்டுட்டு  யமுனா நதியை நோக்கி " நான் உப வாசம் இருந்தது உண்மைன்னா நான் அஸ்கலித பிரம்மச்சாரிங்கறது உண்மைன்னா வழி விடு" ன்னாராம். யமுனா நதி வழி விட்டுச்சாம். உனக்கு கூவம் தான் வழி விடும். அதுவும் எதுக்கு உன் நாத்தம் தாங்க முடியாம.
நித்யானந்தா: என்னை தொடர்ந்து அவமதிக்கிறிங்க
முருகேசன்: நீ ஆதியந்தமில்லாத கடவுளை,சனாதன தருமத்தை, சன்னியாசத்தை,காவியுடைய, உன்னை நம்பி வந்த லட்சக்கணக்கான பக்தர்களை அவமதிக்கலாம். உன் பேரை சொன்னா அது அவமதிக்கிறதா ஆயிருமா?
நித்யானந்தா: டுபுக்கு,அல்பம்,துடுப்பு இதெல்லாம் என் பேரா?
முருகேசன்:இதெல்லாம் காரணப்பெயர் நைனா
நித்யானந்தா: எனக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் இருக்காங்க.
முருகேசன்: ஹிட்லருக்கு இருந்தாங்க. மது கோடாவுக்கு இருக்காங்க, ஏன் துரோகத்துக்கு மறு பேரான சந்திரபாபுவுக்கு கூட இருக்காங்க. ஃபாலோவர்ஸ் இருந்தா நீ என்ன வேணம்னா பண்ணலாமா?
நித்யானந்தா: நான் பல கோடி ரூபா செலவு பண்ணி ஆசிரமங்கள் கட்டியிருக்கேன்
முருகேசன்:அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையேன்னானாம் எவனோ. எல்லாம் ஊர் பணம்தானே
நித்யானந்தா:என் வாக்குவன்மையால வந்த பணம்
முருகேசன்:அதுசரி.வேசி .......... காட்டி சம்பாதிப்பா,அதுவாச்சும்  அவளுக்கு மட்டும் சொந்தம் நீ வாய காட்டி சம்பாதிச்சே. ஆனால் உன் பேச்சு உனக்கு மட்டுமேவா  சொந்தம்?
நித்யானந்தா: அந்த ஒரு சமாச்சாரத்தை தவிர வேற என்ன குற்றம் சொல்ல முடியும் உங்களால..
முருகேசன்:இப்ப இப்படி வர்ரியா. இந்தியாவுக்கு சுதந்திரம் வந்து 63 வருசம் ஆகுது.ஆனால் இன்னைக்கும் 63.8 கோடி மக்களுக்கு கழிவறை கிடையாது. உன் காலடில கொட்டினாங்களே பணம்.. அது உனக்கு சொந்தமில்லே கண்ணா. திருப்பதில  ஏழுமலையான் கால்ல  கொட்டறாங்களே பணம் அது ஏழுமலையானுக்கு சொந்தமில்லே கண்ணா..லாபங்கறது எப்படி வருதுனு டாஸ் கேப்பிடல்ல மார்க்ஸ் சொல்லிட்டாருப்பா. அதெல்லாம் ஏழைகளோட பணம் ஏழைய சுரண்டின பணம். காந்தி என்னா சொன்னாரு தெரியுமா ? உன் சொந்த பணத்துக்கே நீ வெறும் ட்ரஸ்டிதாண்டான்னாரு. நீ உத்தமனா இருந்திருந்தா இதையெல்லாம்   நினைச்சி பார்த்து  நான் சொன்ன  63.8 கோடி மக்களுக்கு கழிவறை கட்டி கொடுத்திருக்கனும். நீ கட்டின ஆசிரமங்கள விட இந்த கழிவறைங்கனால மக்களுக்கு உபயோகம் அதிகம்.
நித்யானந்தா: நாக்குல சரஸ்வதிய வச்சிக்கிட்டு இ..ப்..படி பேசலாமா?
முருகேசன்: கூட்டணிக்கு கூப்பிடறியா..கன்வின்ஸ் பண்றியா.. நான் இந்த  நாட்டு மக்கள் செலுத்தின வரிப்பணத்துல வளர்ந்தவன். என் அப்பன் ஒரு கவர்ன்மென்ட் எம்ப்ளாயி அவனுக்கு கிடைச்ச சம்பளம் கூட மக்களோட வரிப்பணம்தான். நான் கர்ணன் மாதிரி . ஒரு பிடி சோத்துக்காக என் உயிரையே தருவேன். நீ இவிக பணத்தை மட்டும் கொள்ளையடிச்சிருந்தாலும் பரவால்ல. ஆனால் நீ இவிக இறை நம்பிக்கைய கொள்ளையடிச்சுட்டே. என்ன சொன்னே நாக்குல சரஸ்வதியா? சரஸ்வதி இருந்து பேசினதுக்கெ வேட்டி நனைஞ்சுருச்சு. சரோஜா தேவிய வச்சு பேச சொல்றியா? காவி கட்டின நீ சரோஜா தேவி சமாச்சாரத்தை செய்யவே செய்யலாம். ஜீன்ஸ் போட்ட  நான் பேசக்கூடாதா என்ன?
நித்யானந்தா: அய்யோ எமதர்ம ராஜா ! என் குற்றத்தை நான் ஒப்புத்துக்கறேன். இந்தாளு பேசற பேச்சு அப்படியே விஷம் மாதிரி தலைக்கேறுது. நீ என்ன தண்டனை கொடுத்தாலும் ஓகேப்பா
எமன்: நீ என் கேஸ்ல நீதிபதியா இருக்கவே லாயக்கில்லேன்னிட்டயேப்பா நான் என்னத்த  தண்டனை கொடுக்க முடியும்.. முருகேசன் .. நித்யா குற்றத்தை ஒப்புத்துக்கிட்டாரு. தண்டனையையும் நீயே சொல்லிருப்பா
முருகேசன்: ஜஸ்ட் ..ஒரு ப்ளூ ஃபிலிம் பாருங்க
எமன்: ஏய் என்ன சொல்றே நீ
முருகேசன்: உ.வ.படாதிங்க சார். இந்த தலைப்புல ஒரு கதை எழுதியிருக்கேன். அதை படிங்கனு சொல்லவந்தேன்

"அய்யய்யோ..............."னு கத்திக்கிட்டு  எமலோகத்தை விட்டு நித்யா ஓடறார். தவறி கீழே விழறார். விழுந்த இடம்  கூவம் ஆறு.

இனம் இனத்தோடு சேருங்கறமாதிரி கூவத்து அசிங்கமெல்லாம்  நித்யாவை தேடிவந்து சேர்ந்துக்க கூவம் சுத்தமாயிருது.

கலைஞர் அவசரமா  இந்த சாதனையை விவரிக்க உடன் பிறப்புக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறார்.

Friday, April 2, 2010

எமலோகத்தில் நித்யானந்தா

நித்யாவை (அதாங்க இத்தனை நாள் நித்யானந்தானு குமுதம் மாதிரி பத்திரிக்கைங்க காசை வாங்கிகிட்டு எழுதி குவிச்சாங்களே அந்த டுபுக்குதான்)  எமதூதர்கள் அழைத்து (சாரி இழுத்து) வருகிறார்கள். எமதூதர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் வரும் அடியாட்கள் கணக்காய் வழுக்கை தலை,தொப்பை ,வரி வரியா பனியன்,கழுத்தில் கர்சீஃப் கட்டியிருக்க நித்யா "போலீஸ் போலீஸ்" னு கத்திக்கிட்டே வரார்.

எமதர்ம ராஜன் காலத்துக்கேத்தாப்ல எம்.டி.ராஜன்னிட்டு பேரை மாத்தி லேப்டாப்பும், காதுல ஹெட்செட்டுமா இருக்கார். இதையெல்லாம் பார்த்து மிரண்டு போய்  நித்யா "போலீஸ் போலீஸ்" னு பெரிய எழுத்துல கத்தறார். எமன் சின்னதா "ஷட் அப்"ங்கறார்.

சி.குப்தா ஷார்ட்ஸும் மாரெல்லாம் மயிருமா இருக்கார். "ஏய் ! ஏன்யா கத்தறே.. நான் சென்ஸ்"ங்கறார்.

நித்யா அரண்டு போய் "அய்யோ அய்யோ நான் சாகலை. இது எமலோகமில்லே நீ சித்திர குப்தனில்லே,அவரு எமன் இல்லே எல்லாம் போலி போலி"ன்னு கத்தறார். அவரை இழுத்துட்டு வந்த எம தூதருங்க கழுத்துகிட்டே ஏதோ நரம்பை சுண்ட சத்தம் வெளிய வரதில்லையே தவிர நித்யா ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கார்.

எமன்: மிஸ்டர் குப்தா..இப்ப இந்த ஆசாமி போலி போலினு கத்தினானே..ஏன்?  இவன் கேஸ் என்ன?

குப்தா; சார்.. இந்தாளு போலி சாமியாரு. எல்லாத்தயும் ஈர கோவணம் கட்ட சொல்லிட்டு இவரு மட்டும் குஷாலா அஜால் குஜால் வேலை பண்ணிக்கிட்டு கேமராவுக்கு சிக்கி நாறிபோய் தற்கொலை பண்ணிக்கிட்டு வந்துருக்காரு. தான் திருடி பிறனை நம்பான் . கூத்தி கள்ளன் பெண்டாட்டிய நம்பான்ங்கற மாதிரி நம்மை பார்த்து போலி போலினு கத்தறான்.

எமன்: என்ன  குத்தத்தை ஒத்துக்கறானா?

குப்தா: இந்த நக்கல் தானே வேணாங்கறது உங்க முன்னாடிதானே நம்மை போலி போலின்னு கத்தினான். நம்மையே ஒத்துகிடல .இதுல குற்றத்தை எங்கே ஒத்துக்கறது, நம்ம தீர்ப்பை எங்கே ஒத்துக்கறது.

எமன்:என்னய்யா இது காலங்கார்த்தால சாவு கிராக்கி
குப்தா: சார் இது எமலோகம் சாவு  கிராக்கி வராம பின்னே யார் வருவாங்களாம்
எமன்:சரி சரி அந்தாள பேசவிடுங்க. என்னதான் சொல்றான் பார்க்கலாம்"
( அடியாட்கள் சாரி எம தூதர்கள் மறுபடி நித்யா கழுத்துல ஏதோ வேலை காட்ட)

நித்யா: இந்த வழக்கை நீங்க விசாரிக்க கூடாது
எமன்:(அதிர்ந்து போய்) ஏன்?
நித்யா: நீங்க கூட செக்ஸ் ஸ்காண்டல்ல மாட்டின பார்ட்டிதானே
எமன்: என்னய்யா சொல்றே
நித்யா: ஆமாங்க. மகாபாரதம்லாம் படிச்சிருக்கேன். அதுல விலாவாரியா குடுத்திருக்காங்களே. குந்தி பாண்டுராஜாவ கண்ணாலம் கட்டிக்கிறாங்க. பாண்டு டம்மி பீஸு. அப்போ நீங்க தானே தலைச்சன் புள்ளய குடுத்திங்க..
எமன்: குப்தா இவன் சொல்றதுலயும் நியாயமிருக்கு . பேசாம கேஸை கைலாசத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிரலாமா?
நித்யா: நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்
எமன்:ஏன்?
நித்யா: அவர் மட்டும் என்ன யோக்கியமா.. தாருகாவனத்துல ரிஷிங்க பெண்டாட்டிங்களோட கிட்டி புள்ளா விளையாடினாரு. எல்லாத்தயும் கர்பம் பண்ணிட்டாரே
எமன்:சரி .. வைகுண்டத்துக்கு மாத்திரட்டா..
நித்யா: நோ .. விஷ்ணு மட்டும் என்ன யோக்கியமா கிருஷ்ணவதாரத்துல கோகுலத்துல அவர் கை வச்சதெல்லாம் ஊரான் பெண்டாட்டிதானே
எமன்: எனக்கொரு சந்தேகம். புராணத்துல இந்த மாதிரி சமாசாரங்களை மட்டும் தேடிப்பிடிச்சு படிச்சியா என்ன?
நித்யா: ஹி ஹி..
எமன்:சரி உன் பாவத்துல நீ போ. எனக்கென்ன போச்சு.. வாட் அபவுட் பிரம்மா . பிரம்மாவ விசாரிக்க சொல்லவா?
நித்யா:அவர் மட்டும் யோக்கியமா என்ன?  திலோத்தமாவ அவர் தான் படைச்சாராம். அவரே அவளை துரத்திக்கிட்டு ஓடினாராம்
எமன்:என்னய்யா உன் கிட்டே பெரிய ரோதனையா பொச்சு .. உன் கேசை யார்தான் விசாரிக்கனும்னு நீயே முடிவு பண்ணு
நித்யா:பதிவுலகத்துல என்னோட பக்தர்கள் நிறைய பேர் இருக்காங்க.அவிக யாராவது விசாரிக்கட்டும்.
எமன்:அஸ்கு புஸ்கு.. என்னை என்ன கேணையனு  நெனைச்சயா? அதெல்லாம் ஒத்துக்கிட முடியாது. வேணம்னா பதிவாளர்கள் பேரையெல்லாம் எழுதி குலுக்கி போடறோம் . யார் பேர் வந்தா அவிக விசாரிக்கட்டும்.
நித்யா: (மனதுக்குள்) " சரி இவ்ள மாத்திரம் ரிஸ்க் எடுத்துதான் ஆகனும். ஹிப்னாட்டிசம் அது இதை வச்சி மேனேஜ் பண்ணிரலாம்" ( வெளியே)  "சரி நான் ஓகே "

(பதிவர்கள் பெயர்களை குலுக்கி போடறாங்க. நித்யாவே எடுக்கிறார். படிக்கிறார்)
வலைப்பூவின் பெயர்: கவிதை07 : பதிவர் பெயர்: சித்தூர்,முருகேசன்

(தொடரும்)