Friday, April 30, 2010

தொழிலாளர் இழி நிலையும் பார்ப்பனீயமும்

முன் குறிப்பு:
என்னங்கண்ணா தலைப்புக்கும் ,விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லேனு அவசரப்பட்டு கமெண்ட் போட்ராதிங்க. கடைசில வருது விஷயம்

உலக தொழிலாளர்களே ஒன்று படுங்கள் போராடினால் இழப்பதற்கு ஏதுமில்லை அடிமைச்சங்கிலிகளை தவிர - என்றார் .காரல் மார்க்ஸ். எல்லா தொழிலாளர்களையும் ஒரே பிரிவில் அடக்கி இன்னமும் தொழிலாளர் நலன், தொழிலாளர் மேம்பாடு என்று கதைப்பது (இலங்கைத்தமிழ்) உண்மையிலேயே கதைப்பதாகிவிடும்.( தமிழகத்தமிழ் - இதற்கு கதை விடறதுனு அர்த்தம்).

முதற்கண் தொழிலாளி வர்கத்தை இரண்டு பிரிவாக பிரிக்கவேண்டும்.பிரிட்டீஷ் காரன் பிரிச்சது பிரிச்சு ஆள. நான் பிரிக்க சொல்றது உண்மையிலயே சுரண்டலுக்குள்ளாகற தொழிலாளி நலம் பெற .

அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்கள் (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்) இத்யாதியில் பணியிலிருந்து  பணிப்பாதுகாப்பு,
கு.ப.கூலி இத்யாதி பெற்றிருப்போரை  நிறைவு பெற்ற பிரிவினராக அறிவிக்கவேண்டும்.  (எங்கோ ஓரிரண்டு உண்மை பிரச்சினைகள், சுரண்டல்கள் இருக்கலாம்.அவற்றை அவ்வப்போது தீர்த்து ஒழிப்பது  நிர்வாகத்துக்கு  பெரிய விஷயமே இல்லை)அதாவது இவர்கள் டாட்டா,பிர்லாக்களாகிவிட்டார்கள் என்பதற்காக அல்ல அவர்கள் ஏழ்மை நிலையில் தொடர உள்ள காரணங்கள் வேறு. அவர்களின் தேவை வேறு.

அவர்களுக்கு சொந்த  வீடு, நோய்கள் விஷயத்தில் வருமுன் காப்பது, நோய் வந்தால் எதிர்கொள்வது, மணி மேனேஜ்மென்ட், பர்சனாலிட்டி டெவலப்மெண்ட், ஃபிட் நெஸ் மெயின்டெயினென்ஸ், வழக்குவிவகாரங்களை எதிர்கொள்ளுதல், தனிப்பட்ட பலவீனங்களை  (ஜரிதா,பான்,பீடா,சிகரட்,தண்ணி.ஊசி இத்யாதி) ஓவர் கம் செய்தல் இத்யாதி விஷயங்களுக்கு அரசு உலகத்தரம் வாய்ந்த கன்சல்டன்சி, சிகிச்சை, லோனிங் போன்று ஏதாவது செய்யலாம்.


இதையெல்லாம் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் லாப நஷ்டங்களுக்கு பொறுப்பேற்கவும்  வைக்க வேண்டும். இதென்னங்க அ நியாயம் யாரோ முடிவெடுக்கிற ஸ்டேஜ்ல இருக்கிற நிறுவனத்து லாப நஷ்டங்களுக்கு தொழிலாளிய எப்படி பொறுப்பாக்கறதுனு நீங்க கேட்கலாம்.  மேற்படி அரசு நிறுவனங்கள், அரசு சார் நிறுவங்கள், கார்ப்பரேஷன்களின்  (தமிழகத்தை பொருத்தவரை கழகங்கள்)  ப்ராஃபிட்டபிலிட்டியை என்ஷ்யூர் செய்யும் விதமாக மானில அளவில் சிட்டிங் ஜட்ஜ் தலைமையில் ஒரு கமிட்டியை போட வேண்டும்.

மேற்படி நிறுவங்களில் பணி புரிவோர் தங்கள் நிறுவனங்கள் லாபகரமாக இயங்க தடையாக உள்ள அம்சங்கள் எவை, லாபத்தை கூட்ட இன்னும் என்ன செய்யலாம் போன்ற விஷயங்களை நேரடியாக கமிட்டிக்கு எழுத்து மூலம் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். ஒரு தவறான முடிவு எடுக்கப்போகிறார்கள், நிறுவனத்துக்கு நஷ்டம் வரப்போகிறதென்றால் பர்ட்டிக்குலர் ட்ரேட் யூனியன் மட்டுமல்ல  தனிப்பட்ட தொழிலாளியும் மேற்சொன்ன கமிட்டிக்கு புகார் தர உரிமை வழங்கப்படவேண்டும்.
புகாரை பரிசீலிக்கும் கமிட்டி உடனடியாக அந்த தவறான முடிவை தடுத்து நிறுத்தவேண்டும். அம்முடிவை எடுக்க முயன்ற நிர்வாகியை தூக்கில் போட வேண்டும் (அதாவது அடையாள அட்டைய பிடுங்கி கிட்டு வீட்டுக்கு அனுப்பிட்டா மத்த வேலைய அவிக பெண்டாட்டி பசங்களே முடிச்சுருவாங்கண்ணே)

இதையடுத்து மேற்படி நிறுவனங்களிலேயே தினக்கூலி,தொகுப்பூதியம் எட்செட்ரா,
எட்செட்ரா, கேட்டகிரிலவச்சிருக்கிற தொழிலாளியையெல்லாம் நிரந்தரமாக்கிவிட்டுரனும். இவிகளையும் மேற்சொன்ன தன்னிறைவு கேட்டகிரில சேர்த்துரனும்.

இப்படி மேல இருந்து இறங்கி வந்தா அடியை பிடிக்க லேட்டாயிரும் போல இருக்கு. தொடரும்னு போட்டுட்டு டீல்ல விட்டுட்டா தொழிலாளர் வர்கம் சொம்மா விடாதுங்கறதால் வராக ஸ்வாமி மாதிரி பாதாளத்துக்கு பாஞ்சிருவம்.

அமைப்பு சாரா தொழிலாளிகள்னு சொல்றாங்களே ( பீடித்தொழிலாளர்களுக்கு கூட அமைப்பு இருக்குனு நினைக்கிறேன்) அவிகளை விட கேடு கெட்ட நிலைல உள்ள தொழிலாளர்கள் கூட இருக்காய்ங்க.

எங்க தொகுதில சிரஞ்சீவி கட்சி சார்பா எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கின ஒரு பார்ட்டி அஞ்சு வருஷத்துல 40 கோடி ரூபா செலவழிச்சாரு. அவரு ஏ ஒன் காண்ட்ராக்டர். கார்ல் மார்க்ஸ் சொன்னாரு முதலாளி லாபம் சம்பாதிக்கனும்னா அவன் தொழிலாளி வயித்த அடிச்சாதான் உண்டுன்னு. அது நிஜம்.

மேற்படி பார்ட்டி ரோட் காண்ட்ராக்ட் பிடிச்சாருனு வைங்க. மொத்தமா வாங்கறதால சிமெண்ட் மூட்டை மேலை அஞ்சு,பத்து குறையலாம், கான் க்ரீட் மிக்சர் மிஷன் சொந்தமா வச்சிருந்தா (அதுமேல வட்டி என்னாச்சு) இன்னொருபத்து ரூபா குறையலாம் இப்படி எந்த வழில மிச்சம் பண்ணாலும் 10% மிச்சமாகலாம்.  இவன் காண்ட் ராக்ட் பிடிக்க செலவழிச்சது, பிடிச்ச பிறகு கொடுத்து கமிஷன், பில்லாகற வரைக்கும் வச்ச முதலுக்கு வட்டி,இவன் ஆஃபீஸ் மெயிண்டெயினென்ஸ், கார்,பங்களா வெட்டி செலவு எல்லாம் போக என்னத்த மிச்சமாகுங்கறிங்க.

அப்போ அஞ்சு வருஷத்துல கேவலம் ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்டுக்காகவும், தேர்தல் செலவுக்கும் மட்டும் 40 கோடி ரூபா செலவழிச்சான்னா இவன் பெண்டாட்டி  நகைய வித்தா செலவழிச்சிருப்பான் இல்லே. டவுன்ல ஒரு மேஸ்திரிக்கு கூலி 300 ரூ. சித்தாளுக்கு 150 ரூ. இந்த கூலி கொடுத்து ரோடு போட்டா 40 கோடி மிச்சமாகுமா? ஒரு ...........ரும் ஆகாது. பின்னே என்னதான் பண்றாய்ங்க ?

சுதந்திரம் வந்து 63 வருஷம் ஆகியும் நிறைய மாவட்டங்கள்ள வறுமை (இது ரொம்ப சாஃப்டா இருக்குதுய்யா) தரித்திரம் தலைவிரிச்சாடுது. வானம் பார்த்த பூமி, மைக்ரேட் (வலசை போறதா) ஆனாதான் பிழைப்பு, கிரைம் ரேட் உச்சத்துல இருக்கும், விபச்சாரம் டாப்புல இருக்கும். சாராயம்,கஞ்சா எல்லாம் சகஜம். பொறுப்பில்லாத ஆம்பளைங்க எல்லாம் ஒன்னு  போதைல கிடப்பாய்ங்க. இல்லே ஜெயில்ல கிடப்பாய்ங்க . கணவனை இந்த, அப்பனை இழந்த,பொம்பளதான் சம்பாதிக்கனும். இப்படியா கொத்த பொம்பளைகளுக்கும் , கொஞ்சமே போல பொறுப்புள்ள ஆம்பளைகளுக்கும் ஆயிரம்,ரெண்டாயிரம் அட்வான்ஸ் கொடுத்தா கடனை கிடனை தீர்த்துட்டு ரயிலேறி கும்பலா வந்துர்ராய்ங்க. இவிகளுக்கு ரோட் சைட்ல பன்னி குடிசை மாதிரி போட்டு, அங்கனயே ஆக்கி துன்னச்சொல்லி  பிழிஞ்சு எடுக்கிறான். கூலி ?

அவனோ அவளோ பிழைச்சு கிடந்தா , காண்ட் ராக்ட் முடிஞ்சா அஞ்சோ பத்தோ கொடுத்து அனுப்பிருவான் போல. இப்படி வந்தது தான் 40 கோடி. இந்த மாதிரி ஏதோ எங்க ஸ்டேட்ல தான் நடக்குனு நினைச்சுராதிக. ஆல் ஓவர் இண்டியா இதான் நிலமை. அந்த ஆணும்,பொண்ணும் அந்த பன்னி குடிசைலயே தங்கி ஆக்கி துன்னு கர்பமாயி நடுவுல நோய் நொடி வந்து செத்தா ரோட்டு பக்கமே புதைச்சிட்டு போய்ட்டே இருப்பானுவ. கணக்கா வழக்கா ? இவனா பிழைச்சு போனாதான் உண்டு. எவன் தேடிட்டு வரப்போறான்.

இந்த சனம் தான் உண்மை தொழிலாளி. இவுகளை ஸ்டேட் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருகதான் சுரண்டறாங்கனு இல்லே சென்ட் ரல் கவர்ண்மென்ட் காண்ட் ராக்டருங்க கூட அம்புட்டுதான். 

நான்  1967லபிறந்தவன்  எங்க வீட்டு பக்கத்துலயே முனிசிபாலிட்டி தெருக்குழாய் இருந்தது.  ரெண்டு "ப" வை கவிழ்த்துப்போட்டு, மத்தில ஒரு பெரிய "ப" வை ஒன்னரை ஆள் உசரத்துக்கு கவிழ்த்து போட்டு சென்டர் "ப"  கீழே  கீபேட் வைக்கற மாதிரி ஒரு கருங்கல் நீட்டல். அதுல குழி வேற (குடம் வச்சா நிக்கறமாதிரி) மாதிரி இருக்கும். ரெண்டு பக்கமும் உள்ள "ப" வுலயும் ஒரு குழியல் குடம் வைக்கிற மாதிரி. தாளி இதை எந்த யுகத்துல கட்டினானுவளோ தெரியாது செக்கு செதிராம அப்படியே கிடந்தது.

என்னடா சமாசாரம்னா  பிரிட்டீஷ் கவர்ன்மென்ட்ல சம்பளத்துக்கு வேலை செய்த மேஸ்திரி கட்டினதாம் அது.

நேத்து முனிசிப்பல் காம்ப்ளெக்ஸ்ல இருக்கிற இன்டர் நெட் சென்டருக்கு போனேன். லேசா காத்து. காம்ப்ளெக்ஸ் எலிவேஷன் மேல தொங்க விட்டிருந்த டிஜிட்டல் போர்டு ஆடுச்சு. எலிவேஷன் அப்படியே பில்லை பில்லையா உதிருது. கிட்ட போய் பார்த்தா அச்சு அசல் சுண்ணாம்பு கணக்கா வெளுத்து கிடக்கு. சிமெண்ட்+ மணல் 1 க்கு பத்து போட்டானுவளா ? 16 போட்டு தொலைச்சுட்டானுவளா? இல்லே க்யூரிங்க் ஆகலையா ஒரு ம...ரும் தெரியலை.

இந்த நாட்டை ஆள்ற கிழவாடிகளுக்கு உண்மையிலயே தொழிலாளி வர்கத்துக்கு ஏதாவது செய்யனுங்கற எண்ணமிருந்தா முதல்ல மேற்சொன்ன தொழிலாளிகளை ஸ்பாட்ல பார்த்து டிஜிட்டல்ல போட்டோ பிடிச்சு ஐ.டி கொடுத்து அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கனும். தாளி அரசாங்கம் சாராயம் வித்தது, பார் நடத்துது, என்னென்ன இழவோ பண்ணுது. ஏன் இந்த பாவப்பட்ட ஜென்மங்களுக்காக மேன் பவர் ஏஜென்சி நடத்த கூடாது. எந்த நாதாரி காண்ட் ராக்ட் எடுக்குதோ அந்த நாதாரிக்கு அவனுக்கு தேவையான பாயிண்டுக்கு ஏன் தொழிலாளிகளை சப்ளை பண்ணி செருப்பாலடிச்சு கூலி வாங்கி இவிகளுக்கு நல்ல வழிய காட்ட கூடாது.

இது ஏதோ தர்மசெலவுனு நினைச்சுர கூடாது. இந்த ஒரு வேலைய செய்தா எத்தனையோ சட்டம்,ஒழுங்கு, சமூக, மருத்துவம்,  மனித வளம் தொடர்பான , பிரச்சினை தீரும், அரசாங்கத்துக்கு பல ஆயிரம் கோடி பணம் மிச்சமாவும், ஒப்பந்த பணிகளில் நாணயம் கூடும். எப்படினு கேட்கிறிங்களா?  கேட்காதிங்க கொஞ்சம் முக்கி யோசனை பண்ணுங்க. விஷயம் வெளிய வந்துரும்.

இவுக மட்டுமில்லே துணிக்கடைல, சோப்பு சீப்பு கடைல காலைல 7 மணிலருந்து ராத்திரி 10 மணி வரைக்கும் வேலை செய்யற ஆண் பெண்கள், வீட்டு வேலை செய்யறவுக, கிராமத்துலருந்து பிக் அப்  பண்ணி டவுன்ல சிட்டில எடுபிடியா வேலை பார்க்கிற சிறுவர் சிறுமிகள், டீக்கடை, ரோட்டோர டிஃபன் கடை, மெக்கானிக் கடைல வேலை பார்க்கிறவிக. ஓட்டல் தொழிலாளிங்க. (இதுல  நிறைய பேருக்கு குடும்ப வாழ்க்கை நாஸ்தி. டைவோர்சி அ  விடோயர்ஸ் அதிகமா இருப்பாய்ங்க. இல்லே சொந்த ஊர்ல தலைமறைவானவுக இருப்பாய்ங்க. இது என்ன சினேரியோ தெரியலை. தொழிலால குடும்பம் கெட்டதா ? குடும்ப வாழ்க்கை கெட்டதால இந்த தொழிலுக்கு வந்தாகளா ? யாராச்சு ஒரு ஆராய்ச்சி பண்ணா டாக்டரேட்டே வாங்கலாம்)

மேற்படி பட்டியல் அனுமார் வால் கணக்கா தொடருது. இவிகளையெல்லாம் ஒரு அமைப்புக்குள்ள கொண்டு வந்து அவிகளுக்கு கு.ப.கூலி, பணி பாதுகாப்புக்கு திட்டமிடலன்னா கண்ணவிஞ்சு போயிரும், கை ,கால் விழுந்துரும்னு சாபம் விட தாவலை.

அவிக பின்னாடி குடும்பங்கள் இருக்கு. ப்ளாஸ்டிக் மணியும், பஞ்சடைச்ச கண்ணும், ஒட்டடைகுச்சி தேகமும், மாதவிலக்கு கூட ஆகாத அளவுக்கு ரத்த சோகையுமா மனைவியர் இருக்காய்ங்க. அல்லாரும் பத்தினி பெண்டிரா இருந்து பட்டினி கிடந்து சாகத்தான் போறாய்ங்கனு அசால்ட்டா இருந்துர முடியாது.

கிராமப்புறங்கள்ள செக்ஸ் தொடர்பான கிரைம் ரேட் எகிற, மூட நம்பிக்கைகள் செழிக்க, இந்த கு.ப.கூ,ப.பா இல்லாமை கூட முக்கிய காரணம். தீவிர வாதம் முகிழ்க்க,, மாவோக்கள் காலூன்றவும் இது காரணமாகுது.

இன்னைக்கு ஃபேஷனாயிட்ட க்ளோபலைசேஷன், க்ளோபல் வில்லேஜ்,தனியார் மயத்துக்கு கூட இதெல்லாம் ஒதகாது. தொழில் துவங்க வர்ரவன் இதையெல்லாம் பார்த்துட்டு ஓடியே போயிருவான்.

இந்தியாவுல மனித வளம் யதேஷ்டமா இருக்கு. சோகம் என்னடான்னா கல்வியறிவின்மை, தொழிற்பயிற்சி இன்மை காரணமா நிறைய சதவீதம் நான் ஸ்கில்ட் லேபரா இருக்காய்ங்க. ஸ்கில்ட், நான் ஸ்கில்டுங்கற வித்யாசமில்லாம பொழப்பை கொடுக்கிற விவசாயத்துறை வீணா போயிட்டதால தான், நான்  ஸ்கில்ட் லேபர் எல்லாம் அடிமாட்டு கூலிக்கு வேலை செய்ய மாவட்டம் விட்டு மாவட்டம், மானிலம் விட்டு மானிலம் பறக்கறான். கு.ப கூலி அதல பாதாளத்துக்கு சரிஞ்சிட்டே வருது.

தொழிலாளர் பிரச்சினை மட்டும்னில்ல ,இந்தியாவோட எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் பசி, சுரண்டல். இதுக்கு காரணம் வறுமை. வறுமையால பசி, சுரண்டல் அதிகரிக்குது.

பசியை,சுரண்டலை ஒழிச்சு கட்டணும்னா எல்லா வர்க மக்களுக்கும் உற்பத்தி நடவடிக்கைகள்ள சம வாய்ப்பு கிடைக்கனும். அப்படி சம வாய்ப்பு கிடைச்சாதான் தேசீய வருமானத்துல உண்மையான பங்கு கிடைக்கும். அப்பத்தான் உண்மையிலயே தலைவருமானம் அதிகரிக்கும்.ஏழ்மை ஒழியும். பசி,சுரண்டல் ஒழியும்.

கலர் டிவி தர்ரதெல்லாம் புழுத்துப்போன புண்ணுக்கு புனுகு பூசற வேலைதான். இந்த சமாசாரம்லாம் ஆள்றவுகளுக்கும்,அவிகளை வழி நடத்தற ஸ்டேஜுல இருக்கிற பார்ப்பன ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் தெரியாதுங்கறிங்களா? தெரியும். சின்னதா கணக்கு போட்டு இவ்ள தான் சார் செலவாகும். இத்தீனி லட்சம் ஓட்டு கிடைக்கும்னு ஜொள்ளு விட வச்சோ, பூச்சி காட்டியோ எத்தனையோ செய்யலாம்.ஆனால் பரம்பரை பரம்பரையா வந்த ஆள் காட்டி புத்தி செய்ய வைக்கிறதில்லை.

ரில்லையன்ஸ் அம்பானி கறிவேப்பிலை கொத்துமல்லி விக்க வந்தான்னா..போது போகாமயா வந்தான். அவனுக்கா ஞானோதயம் ஆகி வந்தானா? கிடையாது. இந்த ஐயரு பசங்க பூணூலுக்கு பதில்  டைய மாட்டிக்கிட்டு ஏசி ரூம்ல போட்டுக்கொடுத்தா,காட்டிக்கொடுத்தா வந்தான்.

டாட்டா தீப்பெட்டி விக்கவேண்டிய அவசியம் என்ன? உப்பு விக்கவேண்டிய அவசியம் என்ன? அவளுக்கு ஆம்பள துணையில்லே, அண்ணன் குடிகாரன், தம்பி சின்னப்பையன்னு சொல்லி  கூட்டி கொடுக்கிற புத்தி,காட்டி கொடுக்கிற புத்தியெல்லாம் சூத்திரப்பயலுவளுக்கு கிடையாது. இது  எல்லாம் இந்த பூணூலுங்க பண்ற வேலை.

இந்த நாட்டை எவன் ஆண்டாலும், எவள் ஆண்டாலும் உண்மையில ஆண்டது,ஆள்றது இந்த ஐயரு பசங்கதான். பவித்திரமான காயத்ரி  மந்திரத்தை சொல்லிக்கிட்டு இப்படி கச்சாடா வேலைங்கள செய்துகிட்டிருந்ததாலதான்  இப்பவே சூத்திரனுங்க கிட்டே ஜாதக புஸ்தவத்தை கொடுத்து பலன் கேட்டுக்கிற நிலைக்கு வந்துட்டாய்ங்க.,

இனி கொஞ்ச நாள் போனா ?  வேணாம் என் வாயால எதுக்கு சொல்றது . திருந்துங்கப்பா.. கடந்து போன காலத்தை நினைச்சு வருந்துங்கப்பா..பிராமணனை கொன்னாதான்  பிரம்ம ஹத்தினு நீங்க எழுதி வச்சுக்கிட்டிங்க. கேயாஸ் தியரி தெரியுமில்லே.

நீங்க கொடுக்கிற ஐடியாவால எவனோ திவாலாறான்.எவளோ தாலியறுக்கிறானு அசால்ட்டா இருக்காதிக.  இன்னைக்கு எவனுக்கோ,எவளுக்கோ நடக்கறது உங்களுக்கு நடக்க பல காலம் பிடிக்காது. டேக் கேர் !

நான் எல்லாத்தயும்  பார்க்கிறேன் ,பார்த்துக்கிட்டே இருக்கேன்.  ஒரு நாளில்லை ஒரு நாள் என் குரல் ஒலிக்க வேண்டிய இடத்துல ஒலிக்கும். என் வாக்கு ஸ்தானத்துல செத்தவனை உயிர் பிழைக்க செய்யக்கூடிய சஞ்சீவினி மந்திரத்தை  கைவசம் வச்சிருந்த சுக்கிரபகவான் இருக்கார். உயிர் கொடுப்பேன். பிணங்களுக்கில்லே. குத்துயிரும் குலையுயிருமா இருக்கிற மனிதத்துக்கு, ஜன நாயகத்துக்கு உயிர் கொடுப்பேன்.  நான் ஸ்பாட்டுக்கு போகனுங்கற அவசியமில்லே.  என்னை காட்டற லக்னாதிபதி வாக்குஸ்தானத்துல நின்னாரு. நான் செய்ய வேண்டிய வேலைய என் பேச்சும், எழுத்தும் செய்யும். செய்ய வைப்பேன் (லொக்... லொக்....)

உனக்கு 22 எனக்கு 32 தொடர்

அரசு மருத்துவ மனை சிப்பந்தி ஸ்ட் ரெச்சரோட உள்ள வர ஜகனை தூக்கி குப்புற  ஸ்ட் ரெச்சர்ல போட்டுக்கிட்டு ஆம்புலன்ஸ்ல வச்சு சைரன்  அலற அலற வாழ்க்கைலயே மறக்க முடியாத பயணம்..  ஜகனோட மனைவிக்கு தகவல் கொடுத்து ஆசுவாசப்படுத்தி ஆஸ்பத்திருக்கு கூட்டி வரும்படி மாயாவுக்கு தகவல் கொடுத்தேன்.

அந்த 10 நிமிஷ பயணத்துலயே எஸ்.பி க்கு ஃபோன் மூலமா சில தகவல்கள் யோசனைகள் எல்லாம் சொல்லி அலர்ட் பண்ணேன். ஃபாரஸ்ட் ஏரியா, செக் போஸ்டு, பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் , ஊருக்கு வெளிய இருக்கிற சந்தேகாஸ்பதமான இடங்கள், சென்னகேசவனுக்கு சொந்தமான இடங்க, அவனுக்கு தேவைப்பட்டவங்களோட இடங்க எல்லாத்து மேலயும் ஒரு கண்ணை போட்டு வைக்கச்சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணேன். போலீசோட கோ ஆர்டினேட் பண்ணும்படி  ஸ்ரீராமுக்கு மெசேஜ் கொடுத்தேன்.  உன் பவிசென்ன, உன் டீமோட யோக்யதை என்னனு காட்ட இது ஒரு சான்ஸுன்னு உசுப்பேத்தினேன். ஜகனோட முக்கிய ஆதரவாளர்கள், அவர் ஒதுக்கி வச்சிருந்த பழைய நண்பர்கள் எல்லாருக்கும் மறு நாள் காலை 10மணிக்கு மீட் ஆகனும்னு மெசேஜ் கொடுத்தேன்.

ஆம்புலென்ஸ் ஆஸ்பத்திரி காம்பவுண்டுக்குள்ள நுழைஞ்சி கேஷுவால்டியை எட்டி பிடிக்க அங்கே ஆஸ்பத்திரி  சூப்பிரனன்டே  காத்திருக்க ஜகன் அணிஞ்சிருந்த ஸ்டோன் வாஷ் ஷர்ட்டை அப்படியே கட் பண்ணி எடுத்தாங்க.இடுப்பு பகுதில நடு முதுகுல புல்லெட் துளைச்சிருக்க இன்னம் கூட ரத்தம் தயங்கி தயங்கி கசிஞ்சிக்கிட்டிருந்தது. உடனே சூப்பிரனன்ட் காயத்தை சுத்தப்படுத்தி ஸ்டெரிலைஸ் பண்ணி ஒரு இஞ்செக்சன் கொடுத்தாரு. இன்டென்சிவ் கேருக்கு கொண்டு போங்கன்னாரு. நான் தயக்கமா" சார்.. இங்கன முடியுமா ? இல்லே சி.எம்.சி போயிரலாமா"ன்னேன்.

 " கம் லெட்டஸ் மூவ்னிட்டு ஸ்ட் ரெச்சரை  தொடர்ந்து நடந்து கிட்டே "முகேஷ்! டோன்ட் வொர்ரி. குண்டு மேலோட்டமாதான் பாஞ்சிருக்கு.அதை முதல்ல நீக்கிட்டு ட்ரஸ்ஸிங்க் பண்ணிர்ரன்.ப்ளட் வேற ஏத்தனும். உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லை.ஆனால் புல்லட் பாஞ்சிருக்கிறது தண்டுவடத்துல இதனோட விளைவு எப்படியிருக்கும்னு இப்ப சொல்ல முடியாது" ன்னிட்டு மாடில இருந்த இன்டென்சிவ் கேருக்குள்ள நுழைஞ்சிட்டார். வெளிய சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிச்சது.

கூடவே வந்திருந்த ஜூனியர் டாக்டர் ஒருத்தர் வந்து சார் உங்களுக்கு பி.பி செக் பண்ணிரலாம் வாங்கனு கூப்பிட இறங்கி வந்தேன்.  புஸ் புஸ்சுனு அடிச்சி பார்த்து எக்கச்சக்கமா எகிறியிருக்குன்னிட்டு ஒரு ஊசிய போட்டார். தன்னோட ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபி கொடுத்தார் .அதை குடிக்கவும் சிகரட் தாகமெடுக்க வெளிய வந்தேன்.
ஒரே இரைச்சல். கேஷுவாலிட்டிய ஏறக்கிறைய முற்றுக்கையிட்டிருந்தது சனம். அவிகளை கண்ட்ரோல் பண்ண முடியாம  போலீஸ் திணறிக்கிட்டிருந்தாங்க. எஸ்.பி சனத்தை கலைஞ்சு போக சொல்லி  மெகாஃபோன்ல  அப்பீல் பண்ணிட்டிருந்தாரு

என்னை பார்த்ததுமே எஸ்.பி என் பக்கம் வந்தாரு. நானும் அவரை நோக்கி போனேன். மெகா ஃபோனை என் கையில கொடுத்து ப்ளீஸ் ..இவிகளை கலைஞ்சு போக சொல்லுங்க. இல்லாட்டி லத்தி சார்ஜ் பண்ண வேண்டி வரும்.  ஜகனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்க்கிறதுக்கு முன்னாடியே பயங்கர கல்லெறி கடைகளையெல்லாம் அடிச்சு நாசம் பண்ணியிருக்காங்கன்னாரு"

நான் மெகாஃபோனை கையில் வாங்கி மக்களையும்,ஜகன் ஆதரவாளர்களையும் உருக்கமா ரிக்வெஸ்ட் பண்ணேன். தயக்கமா கலைஞ்சி போக ஆரம்பிச்சாங்க .

ஜகனோட பிரதான சிஷ்யனுங்க பி.கேவும் , விஷ்ணு ரெட்டியும் என்னையே பார்த்துக்கிட்டிருக்க, அவனுக ஊத்தி குளிப்பாட்டற பொறுக்கி கும்பல் எட்ட நின்னு எங்களையே பார்த்துக்கிட்டிருக்க வாங்கப்பானு ஆஸ்பத்திரி  பின்னாடி பக்கம் கூட்டிப்போனேன். சிகரட்டை எடுத்து நீட்ட பத்தவச்சிக்கிட்டு பி.கே " நினைச்சதை செய்துட்டானுவ இனி ரத்தத்துக்கு ரத்தம் தான். ஒத்தைக்கு ரெட்டையா போட்டு தள்ளனும்"னு கொதிக்க
விஷ்ணுரெட்டி "இன்னைக்கு ராத்திரி முகூர்த்தம் வச்சிருக்கேன்"னான். எனக்கு பயங்கரகடுப்பாயிருச்சு.

"ஏண்டா வெத்து தடியனுங்களா ! உங்களுக்கு கொஞ்சம் கூட மூளையே வேலை செய்யாதா? ஜகனுக்கு முதுகுல குண்டு பாய்ஞ்சு  ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரதுக்குள்ள என்னடா கல்லெறி, தீவைப்பு. கல்லெறிஞ்சுட்டா, தீ வைச்சுட்டா  ஜகன் உடம்புக்குள்ள போன குண்டு வெளியவந்துருமா செருப்பு பிஞ்சிடும்.  துப்பாக்கியால சுட்டவனுங்க எல்லாருமே வெளியூர் ஆளுதான். அவனுங்க ஒன்னு இங்கனயே தங்கனும்.இல்லாட்டி தப்பி போக முயற்சி பண்ணனும். ஸ்ரீராமும் அவனோட செட்டும் , போலீசோட  ஃபீல்டுல இறங்கியாச்சு. போங்க , உங்க ஆள் படை அம்போட போலீஸுக்கு கோ ஆர்டினேட் பண்ணுங்க. ஒன்னு ஆட்களையே பிடிக்கனும். இல்லே அந்த ஆட்கள் எங்கே தங்கியிருந்தாங்க, யார் தங்க வச்சாங்க, எங்கருந்து வந்தாங்க, எங்கே போனாங்க இந்த விவரமெல்லாம் தேவை. போங்க  டே குடிங்கடா.. பரவால்லை. குடிக்கிறதையே வேலையா வச்சிக்கிட்டா உங்களால ஒரு மயிரும் பிடுங்க முடியாது..போங்கடா போங்க"ன்னு துரத்தி விட்டுட்டேன்.

செல்ஃபோன் சிணுங்கவே எடுத்தேன் .சூப்பிரணன்டு. "சார் நீங்க உடனே வாங்க. ஜகன் சம்பந்தா சம்பந்த மில்லாம என்னென்னவோ உளர்ராரு"

ராம நாம மகிமை

ராம். இதை மேம்போக்காக பார்க்கும்போது இது ஒரு பெயர் மட்டுமே. சரி  மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீமன் நாராயணின்  அவதாரமான ஸ்ரீ ராமனை குறிப்பதாகவே எடுத்துக்  கொண்டாலும்  வெறுமனே  ராம் ராம் என்று ஜபிப்பதால் எப்படி அற்புதங்கள் நிகழ்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம் சொல்கிறேன். வெயிட் ப்ளீஸ்.

நீங்க ராம நாமத்தை தொடர்ந்து  ஜபிக்கிறிங்கனு வைங்க. என்ன ஆகும்.இது ஜஸ்ட் ஒரு வார்த்தைதான். இதை திரும்ப திரும்ப சொல்றதால என்ன நடந்துரும்?

ஓஷோ சொல்வாரு மேற்கத்திய விஞ்ஞானம் மனதுக்கு வியாதி வரும்னு சொல்லுது. கிழக்கத்திய ஆன்மீகம் சொல்லுது. மனமே வியாதின்னு.

கோயிலுக்கு போறோம். மனசு என்ன சொல்லுது? இங்கே வந்து என்னடா புண்ணியம். பப்புக்கு போயிருந்தா அயனான குட்டியா ஒன்னை தேத்தியிருக்கலாமே.

பப்புக்கு போறோம். அந்த சங்கீத  இரைச்சல்,  புகை, வள வள பேச்சு சத்தம்லாம் பார்த்துட்டு மனசு என்ன நினைக்குது? தத் இதென்னடா நாய் பிழைப்பு பேசாம அம்மாவோட கோயிலுக்கே போயிருக்கலாம்.

இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க இருக்கிற இடத்துல மனசு நிக்கறதில்லை. மனசு நிக்காத இடத்துல ப்ளெஷர் இல்லே.

இந்த மனசு (இதே பதிவுல பின்னாடி வர்ர இண்டிவியூஜுவல் மைண்டை சொல்றேன். அதாவது யூனிவர்சல் மைண்ட் + ஈகோ)

ரொம்பமுட்டாள் தனமானது. இயற்கைல இருந்து நம்மை வேறுபடுத்துது, மரண பயத்தை தருது. கண்டதையும் பார்த்து மரணத்தை பார்த்தாப்ல பேதியாக்குது.

( தனிமை,இருட்டு,பிரிவு, ஏழ்மை,நிராகரிப்பு இப்படி ஒன்னுல்ல மஸ்தா கீது)

இந்த மனசுங்கறது மிக நீளமான ஆடியோ டேப் மாதிரி. இதுல வர்ஜியா வர்ஜியமில்லாம கண்ட கசடுகள் பதிவாயிருக்கு. எந்த வடிவத்துல பதிவாயிருக்கு? சொல் வடிவத்துல பதிவாயிருக்கு. அந்த கசடுகளை நீக்க என்ன வழி? வேற ஏதாச்சும் பதிவாகனும். மறுபடி கண்டதையும் போட்டு பதிவு பண்ணிட்டா வேஸ்டு. அதுக்கு பதிலா ஒரே சொல்லை, அதுவும் சில விசேஷாம்சம் கொண்ட சொல்லை தொடர்ந்து பதிவு பண்ணிட்டா... பழைய பதிவுகள் எல்லாம் ஃபணாலாயிரும்.

என் மைண்ட்ல நிறைய சினிமா  பாட்டுங்க இருந்தது. அதுகளை ஒழிச்சு கட்ட நானா ஒரு டெக்னிக் யூஸ் பண்ணேன்.அது என்னடான்னா பாட்டுகள்ள இருக்கிற வார்த்தைகளை தூக்கிட்டு ராமாங்கற வார்த்தைய மட்டும் போட்டு பாடறது.

விசேஷம் என்னடான்னா அது என்னா ட்யூனா இருந்தாலும் இந்த ராமாங்கற சொல்லு பச்சக்குனு உட்காருது. உ.ம்

"கண்ணோடு காண்பதெல்லாம்"னு துவங்கற பாட்டை ராமாங்கற வார்த்தையை போட்டு நிரவறேன் பாருங்க.

ஸ்ரீராம ராம ஹரே ராமா..
ராம ராம ராம ஹரே..

இப்படி என் மைண்ட்ல இருந்த உதவாக்கரை பாட்டுவரியையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டேன். இது ஒரு வ்யூ.

இப்போ இன்னொரு கோணத்துல பார்க்கலாம். ஸ்ரீமன் நாராயணனே ஆதியந்தமான மெய்ப்பொருள் என்பவர்களும் இருக்கிறார்கள் (வைஷ்ணவர்கள்)  மும்மூர்த்திகளில் ஒருவர் என்று அங்கீகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.

கற்சிலைகள் பேசா , கேளா ,பாரா என்று சொல்பவர்களும் உள்ளனர். (அவர்களை ஓஷோவின் மறைந்து கிடக்கும் உண்மைகள் புத்தகத்தை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)

எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படி ஒரு தியரியை முன் வைக்கிறேன். இருப்பதெல்லாம் ஒரே உயிர். (ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் அன்று  அமீபாவில் ஆவிர்பவித்த -தோன்றிய  உயிர்) . அந்த ஒரே உயிர் (செல்) தன்னை தான் பிரதியெடுத்து ,பிரதியெடுப்பில் எர்ரர் வந்து புது ஜீவராசிகளாக பரிணமித்துத்தான் இன்றைய சனப்பெருக்கம் நிலை பெற்றுள்ளது.

ஒரு மாஸ்டர் சிடியை பிரதியெடுக்கும்போதே ஒவ்வொரு காப்பிக்கும் க்வாலிட்டி வேறுபடுகிறது. ( சிஸ்டத்தின் கான்ஃபிகரேஷனை  பொருத்து,அதன் கண்டிஷனை பொருத்து ) .

நிலைமை அப்படியிருக்க எல்லா சி.டியும் ஒரே க்வாலிட்டியில் இருக்காது. சில சமயம் மாஸ்டர் சி.டி.ரேஞ்சுக்கே காப்பீட் சி.டி. இருக்கலாம். சில சமயம் கண்டமாவும் வரலாம்.  ஒரு வேளை எதுனா விசேஷ சாஃப்ட் வேர் கிடைச்சா மாஸ்டர் சி.டி.ல உள்ள உள்ளீட்டை செமர்த்தியா தீட்டி, எக்ஸலெண்டா ஒரு பிரதியை கூட தயார் பண்ண முடியும்.

ஆஃப்டர் ஆல் ஒரு சிடி கதையே இப்படின்னா உயிர்களின் பெருக்கத்தில் எத்தனையோ ஆச்சரியகர மாற்றங்கள், உச்ச, நீச ஸ்திதிகள் ஏற்பட எத்தனையோ வாய்ப்பிருக்கு.  இந்த ப்ராசஸ்ல  ஒரு ராமன் தோன்றியிருக்கலாம்.
ஒரு ராமன் என்ன ஓராயிரம் ராமர்கள் தோன்றியிருக்கலாம்.

என்னைப்பொருத்தவரை இந்த உலகம் , இந்த படைப்பு இல்லாத காலமே கிடையாது.
இங்கே,இப்போ, எனக்கு  நடக்கிறதெல்லாம் எங்கயோ,எப்பயோ,எவனுக்கோ  நடந்ததுதான். இங்கே புதுசா நடக்க ஒரு இழவும் கிடையாது. இதுல சோகம் என்னடான்னா ஒவ்வொருத்தனும்,  நடக்கிறத இங்கே,இப்போ, தனக்கு மட்டும் முதல் முறையா நடக்கிறதா நினைச்சு கொ(கு)திக்கிறதுதான்.

எகனாமிக்ஸ்ல தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டினு ஒரு விதியிருக்கு. பேரை பார்த்து பயந்துராட்திங்க. பத்து லட்டிருக்கு. முதல் லட்டு சாப்பிட்டப்ப கிடைச்ச திருப்தி அடுத்தடுத்த லட்டை சாப்பிட குறைஞ்சிக்கிட்டே வருதுல்ல அதான் இந்த விதியோட சாராம்சம்.

ஒரே வாழ்க்கைய, பலமுறை வாழறப்ப உணர்வுகள் மருத்து போகனும்." தாளி .. நான் பார்க்காததா"ன்னு உதறி தள்ளனும். ஆனால் மனுஷனால முடியறதில்லை. இதுக்கு காரணம் என்னடான்னா அவன் ஈகோ. இந்த படைப்புக்கு தன்னை மையமா நினைச்சுக்கிற முட்டாள் தனம்.

இன்டிவீஜுவல் மைண்ட், யூனிவர்சல் மைண்டுனு ரெண்டிருக்கு. (ரெண்டும் தனி தனி உருப்படினு நினைச்சுராதிங்க.  ஒரே மூளையோட இரண்டு நிலைதான் இது)

 யூனிவர்சல் மைண்டுன்னா அதுல ஈகோ இருக்காது. தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க தெரியாது . தனக்கும் இந்த படைப்புல உள்ள ஒவ்வொரு ஜீவராசி,புல் பூண்டுக்கும் நடந்தது, நடக்கிறது,நடக்க போறது எல்லாமே தெரியும்.

ஒவ்வொரு குழந்தையும்  யூனிவர்சல் மைண்டோடதான் இந்த பூமிக்கு வருது .ஆனால் பெற்றோர், உற்றார் ,உறவினர், ஆசிரியர் எல்லாம் சேர்ந்து அந்த மைண்ட்ல ஈகோவை இஞ்செக்ட் பண்றாங்க. அது மெல்ல தன்னை இந்த படைப்புல இருந்து வேறுபடுத்தி பார்க்க கத்துக்குது. இந்த படைப்புக்கு தன்னையே மையமா நினைச்சு மயங்க ஆரம்பிக்குது. உடனே அதனோட  யூனிவர்சல் மைண்ட் இன்டிவீஜுவல் மைண்டா மாறிடுது.

அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும் . எத்தனை ராமர்கள் வந்தார்கள். எத்தனை முறை சீதையை ராவணன் சிறை பிடித்தான். எத்தனை முறை ராம ராவண யுத்தம் நடந்ததுன்னு  அந்த யூனிவர்சல் மைண்டுக்கு தெரியும்.

ஈகோ இஞ்செக்ட் ஆய்ட்ட இன்டிவீஜுவல் மைண்டுக்கு இதெல்லாம் பை.தனமா இருக்கலாம். அது சகஜம்.

நாம  உண்மைன்னு எதை  நினைக்கிறோமோ அது உண்மை  கிடையாது.  கிராமத்து கவிஞனின் கவிதையை உதவாக்கரை உதவி ஆசிரியன் எடிட் பண்ண மாதிரி  நம்ப எண்ணத்தை ஈகோ எடிட் பண்ணிருது.அதனாலதான் டீட்டெயில்ஸ் மிஸ் ஆகுது.

ஆக ஒரு ராமன் மட்டுமில்லே கணக்கற்ற ராமர்கள் பிறந்திருக்காங்க. வாழ்ந்திருக்காங்க. அவிக எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே இந்த விசுவத்துக்கப்பால் போக முடியாம   ஏதோ ஒரு சூட்சும வடிவத்துல அண்டை வெளில சுத்தி வந்துக்கிட்டே இருக்கு.

இதையே ராவணன் விஷயத்திலயும் பொருத்திப்பாருங்க. ட்யூன் பண்ணப்பட்ட விதத்தை பொருத்து டிவில  சேனல்கள் தெரியறாப்ல  உங்க மைண்ட் ட்யூனிங்கிற்கு ஏற்ற மாதிரி மேற்படி எண்ண அலைகள், பேச்சுக்கள் , சோகப் பெருமூச்சுகள் எல்லாமே எல்லாமே உங்க மூளைகளோட ட்யூனிங்கிற்கு ஏத்தாப்ல வந்தடையுது.

ஒரொரு  வீட்ல காலைல சன் டிவிய  வச்சு விட்டுட்டாங்கன்னா நள்ளிரவு வரை அந்த ஒரே சேனல் ஓடிக்கிட்டே கிடக்கும். இதுவாச்சும் பரவால்ல.

 கேபிள் கனெக்சன் இல்லாத டிவி மாதிரி வச்சிருக்கிற  நம்ம மூளைய நாம ட்யூனிங்கே பண்ணாம ஓட விட்டிருக்கோம்.  அந்த காலம் மாதிரி தப்பி தவறி ஒலியும் ஒளியும் வந்தாலும் ஒலி வந்தா ஒளி வர்ரதில்லை, ஒளி வந்தா ஒலி வர்ரதில்லை. கொஞ்சம் முயற்சிபண்ணா கேபிள் கனெக்சன் வாங்கலாம் .

இதே மூளைய செமர்த்தியா ட்யூன் பண்ணலாம்.புதுசு புதுசா சேனல்ஸ் பார்க்கலாம். ட்யூன்பண்ண ரிமோட் வேணமேங்கறிங்களா உங்க மைண்ட் வாய்ஸ் ரிகக்னிஷன் வசதி கொண்ட டிவிங்கோ. நீங்க சொம்மா "ராம்""ராம்""ராம்"  னு ஜெபிச்சிக்கிட்டிருந்தா போதும். படக்குனு சேனல் தெரிய ஆரம்பிச்சுரும். ஆரம்பத்துல  இதை உங்க பக்கத்துல இருக்கிறவர் பார்க்கமுடியாம இருக்கலாம். ஒரு  நாளில்லே ஒரு நாள் அவருக்கும் தெரிய ஆரம்பிச்சுரும்.

அன்னையின் (அரவிந்தாஸ்ரம அன்னை இல்லிங்கோ) சதநாமாவளியில் ஒரு நாமம் வருகிறது.
*பஞ்ச தசாக்ஷர்யை ஸ்வாஹா!
ப‌ஞ்ச(5) தசா(10) 5X10=50 அக்ஷரம் என்றால் எழுத்து. அதாவது 50 எழுத்துக்களாக உள்ளவளே என்பது இதன் பொருள்.

சமஸ்கிருதத்தில் உயிர்+மெய் எழுத்துக்கள் 50 தான். அதாவது 50 எழுத்துக்களுமே அம்மனின் வடிவம்தான்.

மேற்படி 50 எழுத்துக்களுடன் "ம்" சேரும்போது அது பீஜமாகிறது. தேவதைகளை தியானிக்கும் போது அவர்களின் பெயர் போன் நெம்பர் மாதிரியும், பெயரின் முதல் எழுத்தோடு "ம்" சேர்ந்து ஒலிக்கும் போது அது எஸ்.டி.டி கோட் போல‌வும் வேலை செய்கின்ற‌ன‌. (உ.ம்) ச‌ர‌ஸ்வ‌தி /இதில் முத‌ல் எழுத்து ச‌/இதோடு "ம்" சேரும்போது அது ச‌ம் எனும் ச‌ர‌ஸ்வ‌தி பீஜ‌மாகிற‌து.

ம‌ற்ற‌ தேவ‌தைக‌ளின் பெய‌ர்க‌ள் வேறாக‌வும், பீஜாக்ஷ‌ர‌ங்க‌ள் வேறாக‌வும் இருக்கும். ஆனால் ராம‌னை பொருத்த‌வ‌ரைஅவ‌ர் பெய‌ரே பீஜாக்ஷ‌ர‌மாக‌ இருக்கிற‌து.(ராம்)

எழுத்தோடு"ம்" சேரும்போது என்ன‌ ந‌ட‌க்கிறது?

வாயும்,ஆச‌ன‌மும் ஒரே குழாயின் ஆர‌ம்ப‌ம் ம‌ற்றும் முடிவாக‌ உள்ள‌ன‌. ஆச‌ன‌த்துக்கு ச‌ற்று மேல் பாக‌த்தில் மூலாதார‌ ச‌க்க‌ர‌ம் இருக்கிற‌து. "ம்" என்று உச்ச‌ரிக்கும் போது குழாயின் ஆர‌ம்ப‌மான‌ வாய் மூடுகிற‌து,இந்த வினைக்கு எதிர்வினை அந்த‌ குழாயின் முடிவான‌ ஆச‌ன‌ ப‌குதியில் நிக‌ழ்கிற‌து. அந்த‌ செய‌லின் விளைவாக‌ ஏற்ப‌டும் ஆழ்ந்த அதிர்வுக‌ள் மூலாதார‌ ச‌க்க‌ர‌த்தை அடைகின்ற‌ன‌.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் ந‌க‌ரும‌ல்லவா? அது போல் மூலாதார சக்கரத்தில்  பாம்பு வ‌டிவ‌த்தில் உற‌க்க‌ நிலையில் உள்ள‌தாய் யோக‌ நூல்க‌ள் குறிப்பிடும் குண்டலி எ  யோக‌ ச‌க்தியில் அசைவுகள் ஏற்படும். ஜெபத்தை தொடர தொடர  மேல் நோக்கி  நகர ஆரம்பிக்குது.

குண்ட‌லி  மேல் நோக்கி நகர ஆரம்பிதால் என்ன‌ ந‌ட‌க்கும்?
இங்கு குறிப்பிடுவன யாவும் என் அனுபவங்களே..இப்போது இவற்றை மறுபடி நடத்திக் காட்ட முடியாதுதான். ஆனால் ஏற்கெனவே நடந்தவற்றை நிரூபிக்க முடியும்/ தற்போதைய நிலை என்னவென்றால் அஷ்டாங்க யோகங்களில் மிக முக்கியமான பிரத்தியாஹாரம் -  விடுபட்டு மிக சாதாரணனாகி, இந்த வலைப் பூவில் எழுதும்போது ஒவ்வொரு பதிவுக்கு பின்னாடியும் டீலாகி, சுஸ்தாகி,பேஸ்தடித்து, ஆன தகிடுதத்தமெலலம் செய்து தான் அடுத்த பதிவிற்கு மனதை தயார் செய்ய முடிகிறது.

 விரைவில் தெய்வத்தின் அருளால் என்னை சுட்டத் தங்கமாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


சுய‌ ந‌ல‌ம் எரிந்து போகும். ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ளுக்கு நாம் க‌ட்டுப் ப‌ட்டிருப்ப‌து காலாவ‌தியாகி அவை ந‌ம‌க்கு க‌ட்டுப்ப‌ட்டிருக்கும்.

குண்ட‌லி ஸ்வாதிஷ்டான‌த்தை தொட்டால்:
செக்ஸ் மீது க‌ட்டுப்பாடு ஏற்ப‌டும். நாமாக‌ போதும் என்று நினைத்தால‌ன்றி வீரிய‌ம் ந‌ழுவாது. உடலுறவுகளுக்கிடையில் நீண்ட இடைவெளி ஏற்படும்.

குண்ட‌லி ம‌ணிபூர‌க‌த்தை அடைந்தால்:
எல்லையில்லாத‌ ச‌ஞ்ச‌ல‌ம் ஏற்ப‌டும். பந்தாடும்.
அணாஹ‌த‌ ச‌க்க‌ர‌த்தை அடைந்தால்:
அவ‌ர் இவ‌ர் என்ற‌ வேறுபாடு ம‌றைந்து எல்லோர் மீதும் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ அன்பு ஏற்ப‌டும்.

விஸுத்தி:
வாக் ப‌லித‌ம் ஏற்ப‌டும். பேச்சில் காந்த‌ம் வ‌ரும்.அனைவ‌ரையும் க‌வ‌ரும். பேச்சுக்கு எல்லோரும் கீழ்ப‌டிவ‌ர்.

ஆக்னா:

பேச்சுக்கு அவ‌சிய‌மின்றி வெறும் பார்வையாலேயே ந‌ம் ம‌ன‌தில் உள்ள‌ எண்ண‌ங்க‌ளை ஆணையாக்கி எதிராளியை கீழ்ப‌டிய‌ வைக்க‌லாம்.


ச‌ஹ‌ஸ்ரார‌ம்:
இறைவ‌னுட‌ன் இர‌ண்ட‌ற‌ க‌ல‌க்கலாம்.


(கடைசி ஐட்டம்  மட்டும்  இன்னும் அனுபவமாகலிங்கண்ணா . இடையில் தான் மேற்சொன்ன தடை-பிரத்யாஹாரம்.)

மேற்சொன்ன‌ முன்னேற்ற‌த்திற்கு துணை நின்ற‌து ராம‌ நாம‌ம் ஒன்றே என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.  அன்றைய உன்னத நிலையில் இன்று  என் மனமில்லாததால் சொல்லவந்ததை முழுதாக சொல்லவில்லையோ என்ற மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் சம் திங் ஈஸ் பெட்டர் தேன் நத்திங் இல்லையா?

பி.கு: நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை தொடர் பதிவு நாளை முதல் தொடரும்.

காஃபி வித் ஹனுமான்


அண்ணே,
வணக்கம்ணே. இந்த விடுதலை தொடரை  ஆரம்பிச்ச பிறகு நடந்த ஒரு சில சம்பவங்கள் டர்ராக்கிருச்சு. இருந்தாலும் விடறதாயில்லை. இன்னைக்கு காஃபி வித் ஹனுமான் பதிவோட ராம நாம மகிமை என்ற தனிப்பதிவையும் போட்டிருக்கேன். தலைப்பு மேல க்ளிக்கி ஒரு ஓட்டம் ஓட்டிருங்க. எப்பவும் போல உங்கள் கருத்துக்களை தெரிவிங்க. அதைவிட முக்கியம் நம்ம முருகேசு என்னத்தையோ சொல்லவர்ரார் , அதை சொல்ல விடாம ஏதோ ஒரு ஷக்தி (ரஜினிஸ்டைலுங்கண்ணா) தடுக்குது. ஸோ நம்ம மனோசக்தியை செலுத்தி முருகேசுவை பலப்படுத்துவோம். ஜஸ்ட் பிரார்த்தனை பண்ணுவோம்னு நினைச்சு பண்ணுங்கண்ணா. ந.கி.பா.விடுதலை தொடரை நாளைக்கு தொடர்ரேங்கண்ணா
நேத்து  சாயந்திரம் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து கிட்டு சீரியஸா யோசிச்சிட்டிருந்தேன்.

" ஏதோ நம்ம வரைக்கும்  நவகிரகங்களோட பிடிலருந்து  நழுவி நிம்மதியா இருந்தோம். இந்த வித்தைய " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"னு ப்ளாக்ல போஸ்ட் ஆரம்பிச்சோம். அதுக்கு முன்னாடி இங்கிலீஷ்ல போட் காஸ்ட் பண்ணப்பவே லேசா முரண்டு பிடிக்க ஆரம்பிச்சது. இந்த  விடுதலை சமாசாரத்தை  ஆரம்பிச்ச பிறகு எல்லாமே பஜ்னு ஆயிருச்சு. என்ன பண்ணலாம் பேசாம விட்டு தொலைச்சுரலாமா? "

- இப்படி சகட்டுமேனிக்கு சல்க் பண்ணிக்கிட்டிருந்த சமயம் திடீர்னு ஸ்வீட்டி ( என் மகள் வளர்க்கிற பாமரேனியன் நாய் குட்டி ) மண்டை தெறிக்க குலைக்க ஆரம்பிச்சுது. என்னங்கடா அக்கம் பக்கத்து பசங்க யாராச்சு கோல்,கொம்பை கொண்டு வந்து கேட்ல தட்டி கடுப்பேத்தறாங்களா?ன்னு போய் பார்த்தா அரையாள் உயரத்துக்கு ஒரு ஆண் குரங்கு சமீபத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க  வாங்கிய ஆளுயர பேரல்  மேல உட்கார்ந்திருந்தது.

ஆகா நம்ம கையறு நிலைய கண்டுக்கிட்டு சார்ஜ் ஏத்திவிட்டுட்டு  போக ஆஞ்சனேயரே வந்துட்டாப்ல இருக்குன்னு குஜிலியாயி ஸ்வீட்டியை பக்கத்து போர்ஷனுக்குள்ள (பாழடைந்த)  தள்ளி கேட்டை போட்டேன். மேற்படி ஆ.கு பேரல் மேல இருந்து குதிச்சு தயங்கி நின்னது. நான் " வாங்க..சார்" னிட்டு உள்ளார வந்து பாய் தலையணையெல்லாம் எடுத்து சேர்ல அடுக்கி பர பரனு பெருக்கி , பூஜை அலமாரில இருக்கிற மஞ்ச தண்ணி எடுத்து அறையெல்லாம் தெளிச்சேன். வெளியவே தயங்கி நின்ன ஆ. குரங்குக்கு செகண்ட்ஸ்ல வாங்கின மர சேரை காட்டி" உட்காருங்க சார்" னேன்.

அது  வந்து ராமர் படத்து முன்னாடி நின்னு கை கூப்பிட்டு சேரை தூர இழுத்து ஏறி உட்கார்ந்தது. காஃபி சாப்டுங்கன்னிட்டு ஃப்ளாஸ்க்ல இருந்து காஃபிய சரிச்சு கொடுத்தேன். கொஞ்சம் போல சாப்டுட்டு "க்கும்"னு தொண்டைய கனைச்சுக்குச்சு. கணீர் குரல்ல பேச ஆரம்பிச்சது.

"ஏம்பா .. ஒன்னாலே எனக்கு எங்கருந்தெல்லாம் பிரஷர் தெரியுமா?  உனக்கு கொடுத்திருக்கிற நாலெட்ஜெல்லாம் சாஃப்ட் வேரோட எவால்யூஷன் காப்பி மாதிரி . ஏதோ பர்சனலுக்கு யூஸ் பண்ணா பரவாயில்லை நீ பாட்டுக்கு ராமானுஜர் கோபுரம் ஏறி கூவினாப்பல ப்ளாக்ல போட்டு உடைக்கிறே"

"நினைச்சேன். என்னடா எல்லாம் ஏறு மாறா நடக்குதே ஜேஜிங்க எங்கனா  கோச்சிக்கிச்சோனு நினைச்சேன்..சரியா போச்சு"

"த பாரு உடனே நீ இந்த சீரியலை நிப்பாட்டனும் "

" என்னசார் இது அ நியாயமா இருக்கு. கடவுளுக்கு இந்த படைப்பே ஒரு லீலை ஜஸ்ட் ஒரு விளையாட்டுனு சொல்றாங்க.  விளையாட்டாவே இருந்தாலும் அதுக்குனு ஒரு விதியிருக்கனுமில்லையா. அந்த விதி ரெண்டு கட்சிக்கும் தெரிஞ்சிருக்கனுமில்லையா. ரூல்ஸை நீங்களே ரகசியமா  வச்சிக்கிட்டு ப்ளே ரூல்ஸே தெரியாத எங்களை நாயடி ,பேயடி அடிக்கிறது நியாயமா ? ஏதோ நானா கெஸ் பண்ண சில ரூல்ஸை சனத்துக்கு சொல்ல பார்த்தா அதுக்கு கூட தடையா? ஏன் ? ஒய் ? க்யோன்? எந்துக்கு?"

"பாத்திரமறிந்து பிச்சையிடுன்னு ஒரு பழமொழி இருக்கு தெரியுமோ?"

"தெரியும் சார். ஓஷோ சொல்வாரு. ஞானம் கிட்டின பிறகு ஞானிக்குள்ள ஒரு அதை பகிரனுங்கற துடிப்பு வருமாம். அந்த துடிப்பு தூண்டி விடறப்போ .. நம்ம முன்னே நீட்டப்பட்ட பாத்திரம் ஸ்டீலா, அலுமினியமானெல்லாம் பார்க்க முடியறதில்ல சார்.. இருக்கிறதையெல்லாம் ஊறி வர்ரதையெல்லாம் கொட்டி தீர்த்துரனும்னு தான் தோணுதே தவிர.."

"ஏம்பா நீ போட்டு உடைச்சிக்கிட்டிருக்கியே இதெல்லாம் தேவரகசியம்பா . தேவலோகமே கொந்தளிச்சு கிடக்கு"

"அட போங்க சார்.. எங்க கண்ட் ரில கூட அப்படித்தான் உதவாக்க்கரை ஃபைலையெல்லாம் சீக்ரெட் சீக்ரெட்டுனு இறுக்கிப்பிடிச்சாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது ரகசியங்கறது நம்மாளுங்களை பொருத்தவரைதான் பாக்,சீனா காரனுக்கெல்லாம் அது பர்த் டே சூட் மாதிரின்னு"

"அப்போ ரகசியமே கூடாதுங்கறயா?"

"இருக்கனும். எதுக்கு இருக்கனுமோ அதுக்குத்தான் இருக்கனும். ஒருத்தனை விட்டு லட்சுமி  போற காலம் வரதுக்கு முன்னே என்ன நடக்கும்? அதே லட்சுமி வர்ரதுக்கு முந்தி என்ன நடக்கும், அவன் சாகறதுக்கு முன்னாடி என்ன நடக்கும் இந்த மாதிரி சமாசாரமெல்லாம் என் மைண்ட்ல ஸ்டோர் ஆகியிருக்கு. அதையெல்லாம் ரகசியம்னு பூட்டி வச்சிக்கிட்டா வேஸ்டு. இப்போ மரணத்தை எப்படி தள்ளி போடமுடியும்னு கூட சில குன்செல்லாம் கண்டுபிடிச்சு வச்சிருக்கேன்.அதை போட்டு உடைச்சேனா? இல்லையே. யாராச்சும் ஆவிசு என்னனு பார்த்து சொல்லு சாமின்னா ..யோவ் சாகனும்னா சந்திராஷ்டமத்துல கூட செத்து போயிரலாம்.. பிழைச்சு வரனும்னா அஷ்டமத்துல சனி+செவ்வாய் சேர்ந்துவந்தாலும் பிழைக்கலாம் இதெல்லாம் கடவுளோட ஜூரிஸ்டிக்ஷன் நான் என்டர் ஆகமாட்டேன்னு கழட்டி விட்டுர்ரன் இல்லியா? பார்ப்பாரவுக கண்டதுக்கு சீக்ரெட் மெயிண்டெயின் பண்ணதாலதான். சூத்திரனுங்க போடா பொங்கின்னிட்டு விலகிப்போயிட்டாய்ங்க"

 "அப்போ நீ இந்த தொடர்பதிவை நிறுத்தமாட்டே.அப்படித்தானே"

"தலைவா! நான் ஹெச்.ஜி .வெல்ஸ் ரேஞ்சுல உலக அரசாங்கத்தை கனவு காண்ற பார்ட்டி. கடவுள் தான் பி.எம். கிரகங்கள் தான் மந்திரிங்க. மக்களுக்கு உணவு,உடை,இருப்பிடம், செக்ஸை தர்ர பொறுப்புள்ள சுக்கிர கிரகம் வருஷத்துக்கு 8 மாசம் அனுகூலமா இருக்கு.ஆனால் சனத்துக்கு இதெல்லாம் கிடைக்குதா இல்லே. எவனோ மத்தில அடிச்சிக்கிட்டு போயிர்ரான். தமிழ் நாட்ல அரசாங்கம் தர்ர இலவச  தொலைக்காட்சியையே எடுத்துக்கங்க. அந்த சனத்துக்கு சுக்கிர பலம் போதாமதான் இத்தனை காலம் டி.வி வாங்காம,வாங்க முடியாம இருந்தாங்க. ஆனா அரசாங்கம்  அவிகளுக்கு அதை கொடுத்துருச்சி. ஏதோ கொஞ்சம் நஞ்சம் சுக்கிர பலத்தை வச்சு ஓரளவு நிம்மதியா வாழ்ந்துக்கிட்டிருந்த சனம் பாழாப்போன டிவில வர்ர சீரியலுங்களை பார்த்து தலையை கெடுத்துக்கிட்டு, விளம்பரங்களை பார்த்து ஆசைகளை வளர்த்துக்கிட்டு மனசை கெடுத்துக்கிட்டு நாசமா போறாங்க.வேணம்னா ஒரு சர்வே எடுக்க சொல்லுங்க கலர் டிவி வர்ரதுக்கு முந்தி அவிக செக்ஸ் லைஃப் எப்படி இருந்தது. வந்த பிறகு எப்படியிருக்கு பார்க்க சொல்லுங்க.   நான் ஏதோ டைரக்டா கவர்ன்மென்ட்ஸை காண்டாக் பண்ணி நதிகளை இணைச்சு சுபிட்சத்தை கொண்டுவந்து அது மூலமா மக்களோட வாழ்க்கையை பெட்டராக்கனும்னு நினைசேன். முடியலை. ஸோ அப்போ மேக்ரோ லெவல்ல செய்ததை இப்போ மைக்ரோ லெவல்ல செய்யறேன். இதை கூட தடுத்தா எப்படி தலைவா?"

"நான் சொல்றதே உனக்கு புரியமாட்டேங்குது. ஆஃப்டர் ஆல் நீ  ஒரு தனிமனிதன். உன்னால எப்படி இத்தனை கோடி மக்களோட வாழ்க்கைய மாத்தமுடியும்?
எப்படியோ அந்த பிரமைல இருந்து ரிலீவ் ஆனேனு சந்தோஷப்படா இப்போ மைக்ரோ லெவல்ல போறேன்னுட்டு இயற்கை மர்மங்களையெல்லாம் போட்டு உடைக்க ஆரம்பிச்சுட்டே"

"பாஸ்! நான் பாட்டுக்கு கண்டவ பின்னாடி ஓடி நாசமா போயிருப்பேன். என் வாழ்க்கைய ஒடைச்சு திருப்பினிங்க. உங்க சான்னித்யத்துக்காக ராம நாமம் ஜெபிக்க ஆரம்பிச்சேன். யத்பாவம் தத்பவதிங்கற மாதிரி நானே ஒரு குட்டி ராமனாயிட்டேன். அவரோட ராமராஜ்ஜியத்தை மறுபடி இங்கே ஸ்தாபிக்கனும்னு டிசைட் ஆயிட்டேன். அந்த முயற்சில மேக்ரோ லெவல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000 மைக்ரோ லெவல்ல மணி சீக்ரெட்ஸ், நவகிரக பாதிப்பிலிருந்து விடுதலைய தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இங்கே நான் தனியில்லே. ஒரு புழு பூச்சிக்கு விளையற துன்பம் கூட என்னையும் சேர்ந்து பாதிக்குது. இந்த முயற்சிகள் பின்னாடி பொது நலம் போலவே சுய நலமும் சேர்ந்திருக்கு. இது ஜஸ்ட் சர்வைவல் இன்ஸ்டிக்ட் தலைவா.. ராமராஜ்ஜியம் வேணாங்கறிங்களா?"

"ராமன்,கிருஷ்ணன் எல்லாம் கால வெள்ளத்துல அடிச்சுக்கிட்டு போற துரும்பு. அந்தந்த காலகட்டத்துல அதது தானா நடக்குமே தவிர நீ வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கின மாத்திரத்துல நடந்துராது. "

"அஸ்கு புஸ்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? உன் எண்ணத்தை பொருத்து  உன் குடும்பம், உன் சர்க்கிள், நீ வாழற சமூகம், நாடு ராஜாவோட மனசு எல்லாமே மாறும்னிருக்காரு"

"தானா மாறும்னு சொல்லியிருக்காரே தவிர சாதகனால  மாத்த முடியும்னு சொல்லலியே."

"இது அநியாயம் சார் .. ராவணன் சீதைய தூக்கிட்டு போயிட்டான். அவனே கொண்டு வந்து ஒப்படைக்கட்டும்னு வெயிட்டிங்லயா இருந்திங்க."

"ஷிட்! அது வேற காலம், வேற யுகம். வேற தர்மம். இது வேற காலம்,வேற யுகம் வேற தர்மம்"

"தேவ லோகத்துல எமர்ஜென்சி ஏதாச்சும் டிக்ளேர் பண்ணியிருக்காங்களா சார்"

" எமர்ஜென்சி மட்டுமில்லே,  ஷஃப்ளிங் கூட நடக்கப்போவுது. அதோட உனக்கென்ன வேலை.  நீ பை.தனமா முன் யோசனை இல்லாம டிஸ்க்ளோஸ் பண்ற விஷயங்க படக்கூடாதவன் கண்ணுல பட்டுட்டா என்னாகறது? ஒவ்வொருத்தனை வதம் பண்ண கடவுள் தான் அவதாரம் எடுத்து வரனும்.."

"அ..சொம்மா டகுல் விடறிங்க. நான் இதுவரை எழுதின விஷயங்களை டோட்டலா படிச்சவுகளே ஜஸ்ட் பிலோ 600 தான். இதுல எத்தனை பேருக்கு புரிய போவுது.புரிஞ்சவங்கள்ள எத்தனை பேரு ஃபாலோ பண்ணப்போறாங்க"

"ஒரு அணைல ஏற்படற  சின்ன கசிவு தான் அந்த அணையையே அடிச்சுட்டு போயிரும்"

"ராம ராஜ்ஜியம்லாம் இப்பத்துல கிடையாதா பாஸ்?"

"வரும் எல்லாம் வரும். காத்திருக்கனும்"

"எவ்ள காலம் பாஸ்?"

"உன் எழுத்து இந்த சனத்தை சென்றடையற காலம் வரைக்கும்"

"அட்றா சக்கைன்னானாம் அப்ப நான் சரியான ரூட்ல தான் போய்க்கிட்டிருக்கேன்"

"என்ன போட்டு வாங்கறியா? "

"நான் எங்கே போட்டு வாங்கினேன் பாஸ்.. நீங்க தானே கொட்டிட்டிங்க"

"என்னை வணங்கி வணங்கி என் லட்சணமெல்லாம் உனக்கும் வந்துட்டாப்ல இருக்கு.தேவ லோகத்துல எல்லாரும்  என்னை பிடிச்சு ஏர்ராங்க . நீ இருக்கிற தைரியத்துல தான் இவன் இந்த ஆட்டம் போடறான். நீ விலகிக்க .. நாங்க பார்த்துக்கறோங்கறாங்க"

"விலகிருங்க தலைவா ..இந்த ஒதகாத வெறும்பயலுக்காக நீங்க ஏன் அகுடாவறிங்க"

"எங்க விலகறது? உன் மைண்ட்ல தான் ஒரு ட்ராக்ல ராம நாமம் போயிட்டே இருக்கே"

"அப்போ  நீங்களே விலக நினைச்சாலும் விலக முடியாதுங்கறிங்க "

"ஆமாப்பா அதான் சோகம்"

"அப்ப சரி இன்னைக்கு ராம நாம மகிமைனு ஒரு தனிப்பதிவு போட்டு தாக்கறேன்"

"அய்யய்யோ இவன் இம்சை தாங்க முடியலியே ராமா.."ன்னிட்டு அந்த ஆ.குரங்கு ஓடியே போயிருச்சு.

பி.கு: இந்த உரையாடல் கற்பனைதான். ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடறமாதிரி எத்தனையோ சம்பவங்களை ஆஞ்சனேயர் என் லைஃப்ல நடத்தி காட்டியிருக்காரு. அதெல்லாம் அந்தந்த சந்தர்ப்பம் வரப்போ சொல்றேன்.

Thursday, April 29, 2010

நவகிரகங்களிடமிருந்து விடுதலை: 6

அண்ணே வணக்கம்ணே !
நீங்க தமில் பெஸ்ட் திரட்டியிலிருந்து வந்திருந்தா இங்கே அழுத்தி கடந்த அத்யாயத்தை படிச்சுட்டா இந்த அத்யாயம் ஓரளவுக்கு புரியும்.

கடந்த அத்யாயத்துல குடும்ப ஜோதிடரை சந்திச்சு கிரகங்கள், மற்றும் பாவங்களின் ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை சதவீதத்துல போட்டுட்டு வந்துருங்கனு சொல்லியிருந்தேன். அந்த வேலைய செய்துருந்தா இப்போ இந்த அத்யாயம்  ரொம்ப நல்லா புரியும்.  செய்யலன்னா இன்னைக்கு அ நாளைக்கு செய்துருங்க .ஓகேவா.

கு.ஜோதிடரை சந்திச்சவங்க தங்களோட ஜாதகத்துல கிரகங்கள் மற்றும் பாவங்களோட க்ரேடிங்கை பார்த்து  நொந்து போயிருப்பிங்க. ஏன்னா ஒரே ஒரு பாவத்துக்கு கூட ,ஒரே ஒரு கிரகத்துக்கு கூட 100% வந்திருக்காது.

இதை வச்சு நம்ம ஜாதகம் தரித்திரம் பிடிச்ச ஜாதகம்னு நினைச்சுராதிங்க. இங்கே இருக்கிற எல்லாரோட ஜாதகமும் அந்த அழகுதான்.  கிரக பலத்தை,பாவ பலத்தை எப்படி கணக்கிடறதுங்கறதுக்கு ரஃபா ஒரு அவுட்லைன் தரேன் பாருங்க. அப்பத்தான் புரியும் ஏன் கிரகமெல்லாம் ஃபெயில் மார்க் வாங்கிருச்சு.ஏன் பாவமெல்லாம் சோமாலியா குழந்தை மாதிரி சோனியா இருக்குன்னு

கிரேடிங் கொடுப்பது எப்படி ?


செவ்வாய் தோஷமில்லாம இருந்து, செவ்வாய் உங்க  லக்னத்துக்கு சுபராயிருந்து உச்சம் பெற்றிருந்தா  60% கொடுக்கலாம். மிச்சம் 40% ஐ காக்கா தூக்கிட்டு போயிருச்சான்னு  கேட்பிங்க. விருச்சிகம், மேஷம் செவ்வாயோட சொந்த வீடு இந்த ராசிகள்ள ஏதாச்சும் வில்லங்கம் இருந்தா ? செவ்வாயோட வேற ஏதாச்சும் சேரக்கூடாத கிரகம் சேர்ந்திருந்தா ? அவரை வேற ஏதேனும் கிரகம் பார்த்திருந்தா? அப்படி பார்த்த கிரகத்தோட வேற ஏதாச்சும் கிரகம் (சேரக்கூடாத) சேர்ந்து அதுவும் அவரை பார்த்தா ? உங்களுக்கு தாராபலம் இல்லாத நட்சத்திரபாதசாரம் வாங்கியிருந்தா. செவ்வாயை போலவே வேற ஏதாச்சும் கிரகம் உச்சமாகி இவரை பார்த்தா உச்சனை உச்சன் கண்டால் பிச்சை கூட கிடைக்காதுங்கற விதிப்படி ரெண்டு கிரகமும் டப்ஸாயிரும். இப்படி நிறைய டெக்னிக்கல் பாயிண்ட்ஸ்ல  அந்த 40 சதவீதத்தை விட்டுர வேண்டி வரும்.

எல்லாமே வீக்குதான்:
ஆக உலகத்துல பிறந்த,பிறந்திருக்கிற, பிறக்கப்போற எல்லாருடைய  ஜாதகமுமே  வீக்குதான். ஒரு நாளைக்கு மூணு வேளை  காம்ப்ளான் குடிச்சுட்டு சச்சின் மாதிரி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜின்னு கட்டை விரலை தூக்க வேண்டியதுதான். அதுசரி காம்ப்ளானை வச்சு கிரகத்துக்கும், பாவத்துக்கும் எப்படி பலத்தை கூட்ட முடியும்னு கேட்கலாம். அது சொம்மா டமாசுக்கு சொன்னதுங்கண்ணா..


எப்படி பலம் கூட்ட முடியும்?

கேள்வியே தப்பு. பலத்தை கூட்ட முடியாது. வேணம்னா இருக்கிற பலத்தை வச்சி ஒப்பேத்தலாம். லோ ஓல்டேஜ் ப்ராப்ளம் வந்துட்டா வீட்ல இருக்கிற எல்லா மின் உபகரணத்தையும் அணைச்சுட்டு  ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்துல ஹால்ல வந்து  உட்கார்ந்துக்குவமே அதே டெக்னிக்தான்.

( தியானம், யோகம்,யோகா இதெல்லாம் ஜெனரேட்டர் ஏற்பாடு பண்ணிக்கிற மாதிரி. சோகம் என்னடான்னா இதுக்கு கூட உங்க ஜாதகத்துலயே ப்ரொவிஷன்  இருக்கனும். உதாரணத்துக்கு லக்னாதிபதியே 6,8,12ல இருக்காருனு வைங்க. அந்த பார்ட்டி எங்கேருந்து தியானம் யோகா, யோகாசனம்லாம் பண்றது.

லக்னாதிபதி 6 லருந்தா இதெல்லாம் அன் சைண்டிஃபிக், எல்லாம் வேஸ்ட் ஆஃப் டைமுன்னிட்டு வாதம் பண்ணலாம்., லக்னாதிபதி 8ல இருந்தா தியான வகுப்பு போறப்பயோ,வரப்பயோ ஒரு விபத்து நடக்கலாம், இல்லே எக்கு தப்பா யோகாசனம் பண்ணி அஷ்ட வக்கிரர் மாதிரி ஃபிக்ஸ் ஆயிட்டு 108 க்கு ஃபோன்பண்ண வேண்டி வந்துரலாம், லக்னாதிபதி 12ல இருந்தா  நித்யானந்தா மாதிரி அடல்ட்ஸ் ஒன்லி சாமியார்ங்க கிட்டே மாட்டி பாடு பட்டு சேர்த்த பணத்தை எல்லாம் விரயமாக்கிரலாம் )

குறைஞ்ச பலத்தை வச்சுக்கிட்டு எப்படி ஒப்பேத்தறது?:

நம்ம வேலைக்காரன் டம்மி பீசு. ஓமகுச்சி நரசிம்மன் மாதிரினு வைங்க. 25 கிலோ வெயிட்டை தூக்கிட்டு 64 அடி நடந்து  போய் சமையல் ரூம்ல வைக்கனும். என்ன பண்ணலாம் ? கொஞ்சமா தம் கட்டி ஒவ்வொரு ரூம் வாசல் வரை கொண்டு போய் வச்சி தம்மாத்திக்கிட்டு அடுத்த ரூம் வாசலுக்கு போலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி கொண்டு போகலாம். இது ஒரு டெக்னிக்.

25 கிலோ வெயிட்டை 5 பாகமாக்கி தலா 5 கிலோ இருக்கிற மாதிரி பேக் பண்ணி  64 அடிய 4 பகுதியா பிரிச்சுக்கிட்டு 16 , 16 அடியா கடக்கலாம். இது அசத்தல் டெக்னிக்.

இப்போ உங்க ஜாதகத்துல குரு செம ஸ்ட் ராங். கோசாரத்துல ஒரு வருஷம் குரு அனுகூலமா வராருன்னு வைங்க. அந்த ஒரு வருஷத்துலயே கல்யாணமாகும் ( குரு கங்கண காரகன் என்பதால்) அதே வருஷத்துல உங்க சம்சாரம் கன்சீவ் ஆவாங்க (குரு புத்ரகாரகன் என்பதால்) அதே வருஷத்துல பழைய சொத்து விவகாரம் ஏதோ தீர்ந்து லம்ப்சமா ஒரு அமவுண்ட் வரும்(குரு தனகாரகன் என்பதால்)

சப்போஸ் அதே குரு உங்க ஜாதகத்துல குரு செம வீக். கல்யாணத்துக்கு  பொண்ணை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க. அதே சமயம் சொத்து விவகாரம் தொடர்பா  கோர்ட்டுக்கு போக வேண்டியிருக்கு. போனா வெற்றி நிச்சயம்னு வைங்க. உங்களுக்கு இருக்கிற குருபலத்துல கல்யாணமோ இல்லை சொத்தோ ரெண்டுல ஒன்னு  தான் சக்ஸஸ் ஆகும். இப்போ என்ன செய்யலாம் ?

எது முக்கியம்னு பார்க்கனும். வீட்ல பொம்பளயே கிடையாது.  அம்மா உயிரோட இல்லை. வீட்டு வேலைகளை எடுத்து செய்யக்கூடிய வயசுல  அக்கா தங்கச்சிங்க யாருமில்லை. இருந்தாலும் கண்ணாலம் கட்டிக்கிட்டு போய்ட்டாங்க. இருக்கிறதெல்லாம் உங்களை விட சின்ன பசங்கதான். அப்பா அல்சர் பேஷண்ட். நீங்க தான் மூத்த பிள்ளைன்னு வைங்க பேசாம சொத்து விவகாரத்துல கோர்ட்டுக்கு வெளிய செட்டில் பண்ணிக்கிட்டு (பத்து ரூபா குறைவா வரும்னாலும்) கண்ணாலம் கட்டிக்கலாம்.

நிலைம அப்படியில்லே ஏதோ பொம்பள துணையிருக்கு. சொத்து விஷயமா இப்போ கோர்ட்டுக்கு போலன்னா கோவிந்தாவாயிரும்னு வைங்க அப்ப என்ன பண்ணனும் கண்ணாலத்தை போஸ்ட் போன் பண்ணிக்கிரனும்.

முக்கியமா குழந்தை விஷயம்.. கண்ணாலம் கட்டிக்கிட்டாலும் ஏதாச்சும் தகிடு தத்தங்கள் பண்ணி ( சேஃப்டி டேஸ், காண்டோம், காப்பர் டி ) குழந்தை உருவாகாம பார்த்துக்கனும்.

அடுத்தபடியா குரு எப்போ  அனுகூலமா வராரோ அப்போ குழந்தை பிறப்பை வச்சிக்கலாம். நவகிரகத்தோட பிடியிலருந்து விலக முதல் வழி,முக்கியமான வழி அது கொடுக்கிறத மட்டும் வாங்கிக்கிட்டு அடிஷ்னல் ஃப்ரூட்ஸ், ஓவர் ட்ராஃப்டுக்கெல்லாம் போகாம இருக்கிறதுதான். போனா லோ ஓல்டேஜ்ல ஆன் பண்ணி வச்ச ஃப்ரிட்ஜுக்கு மோட்டர் போயிர்ர மாதிரி, டிவிக்கு பிக்சர் ட்யூப் போயிர்ர மாதிரி கஷ்டம் , நஷ்டம் தப்பாது.


என்னங்கடா இது புத்தர் ஆசையே கூடாதுன்னார், ஜக்கி வாசுதேவ்  எல்லாத்துக்கும் ஆசைப்படுன்னார். இவரு அளவா ஆசைப்படுங்கறாரேனு குழம்பிராதிங்க.

புத்தர் ஆசையே கூடாதுங்கறார். உங்க மனசுல ஆசையெ இல்லன்னா உங்க கான்ஷியஸ் மைண்ட்  நிர்மலமாயிரும். சப்கான்ஷியஸ் ஆக்டிவாகும். அதுலயும் ஆசைகள் இல்லேன்னா உங்க ப்ரக்ஞை  இன்னும் ஆழமா  போகும். உள்ளாற ஹெவி டோஸ்  ஓப்பியம் கலந்த பீடாவை போட்ட மாதிரி மயக்கத்துல இருக்கிற ஆத்மால விழிப்பு வரும் . இது ஒரு டெக்னிக்

ஜக்கி வாசுதேவ் சொல்றாப்ல எல்லாத்துக்கும் ஆசைப்பட்டா என்னாகும் ? கிருஷ்ணர் கோகுலத்துல இருந்த எல்லா குட்டிகளையும் ( கண்ணாலமான குட்டிகள் உட்பட) கணக்கு பண்ணாரு. அவரோட கான்சன்ட் ரேஷன் எல்லா குட்டிங்க மேலயும் வைடா ஸ்ப்ரெட் ஆயிருச்சு. எந்த குட்டிமேலயும் அவருக்கு அட்டாச் மெண்ட் இல்லே. ஸ்பெஷல் இண்டரஸ்ட் இல்லே. பொசசிவா இல்லே. ஆனால் எல்லாத்தயும் கணக்கு பண்ணாரு. அதனாலதான் அவர் மேல அந்த குட்டிகளுக்கு அவ்ளோ ஜொள்ஸ். யமுனைல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடறப்ப நான் உண்மையான அஸ்கலித பிரம்மசாரியா இருந்தா வழி விடுன்னாராம். உடனே யமுனை வழி விட்டுதாம்.

இதுலருந்து என்ன புரியுது ?  ஆசைங்கறது ஒரு வட்டம் மாதிரி. நீங்க  ஜீரோ டிகிரில இருந்தாலும், 360 டிகிரிக்கு போய்ட்டாலும்  எஃபெக்ட் ஒன்னுதான்.

இதை இன்னொரு உதாரணம் மூலம் விளக்கறேன்.

ஒரு ஏழை, பரம ஏழை இருக்கான்.  அவன் பையில பத்து பைசா கூட இருக்காது. முகேஷ் அம்பானியோ, அனில் அம்பானியோ பையில சில்லறையா எவ்ளோ வச்சிருப்பாங்கங்கறீங்க. ஜீரோ.

(திவாலா பார்ட்டியெல்லாம் ஆயிரம் ரூபா நோட்டா பாக்கெட்ல வச்சிருக்கும். அரை டஜன் ஏடிஎம், அரை டஜன் டெபிட்  கார்ட், முக்கா டஜன் க்ரெடிட் கார்ட் கழுத்துல தாம்பு கயிறு ரேஞ்சுக்கு செயின் எல்லாம் வச்சிருக்கும்.இதுங்க அரை குறைங்க. 20 அ 30 டிகிரில இருக்கிற பார்ட்டிங்க. இதுங்களை பத்தி பேச்சே கிடையாது)


இனி நம்ம தத்துவத்துக்கு வருவோம் . அளவா ஆசைப்பட சொல்றேன். அளவுன்னா உங்க வீட்டு அளவு,எங்க வீட்டு அளவு இல்லே. கிரகங்கள் கொடுக்க கூடிய  அளவு. இந்த ரேஞ்சுக்கு நீங்க வந்துட்டிங்கன்னா நீங்க இயற்கைல ஒரு பாகமாயிர்ரிங்க. ஆத்தோட மிதந்து போறமாதிரிதான்.

அடுத்து கிரகங்களோட பிடி  நம்ம மேல இறுக காரணம் அட்டாச் மெண்ட். பேதபாவம். என் பிள்ளை. பக்கத்து வீட்டுக்கார"ர்" பிள்ளை, அவனா.. வாட்ச் மேன் பிள்ளைனு நினைக்கிறேன்.

எப்போ நீங்க ஒரு பொருளை/ ஒரு மனிதனை/ ஒரு இடத்தை இது என்னோடது, இவன் என்னோட ஆளு, இந்த இடம் என்னோட இடம்னு நினைக்க ஆரம்பிக்கறிங்களோ உடனே அதுக மேல,அவிக மேல உங்க ஜாதகம் வேலை செய்ய ஆரம்பிச்சுருது.

இதை ஒரு உதாரணம் மூலமா விளக்கறேன்.
வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகின்னு ஒரு பழமொழிய கேட்டிருப்பிங்க. இந்த பழமொழி 100% உண்மை நிலவரத்தை காட்டுதுனு சொல்ல முடியாதுதான்.ஆனால் இந்த பழமொழி உருவாக ஓரளவாவது உண்மை நிலவரம் தூண்டுதலா இருந்திருக்கனும்.

வாத்தியார் ஜாதகத்துல அஞ்சாவது இடம் அவர் புத்திய காட்டுது, பிள்ளையையும்காட்டுது. அந்த அஞ்சாம் பாவம் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருந்திருந்தா அவரும் நல்லா படிச்சு வாத்தியார் ஆயிருப்பார். அவரோட பையனும் நல்லா படிச்சிருப்பான்.

ஆனால் அனுபவத்துல பார்க்கும் போது எந்த ஜாதகத்தை எடுத்தாலும் நல்லது கெட்டது கலந்தேதான் இருக்குது. எந்த பாவமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே. அதே மாதிரி எந்த கிரகமும் 100% ஃப்ரூட்ஃபுல்லா இருக்கிறதில்லே.

இதனால என்னாகுதுன்னா அந்த அஞ்சாவது பாவம் வாத்தியாருக்கு புத்திஸ்தானமா ஒர்க் அவுட்டாயிருச்சு. வாத்தியாராயிட்டார். புத்ரஸ்தானமா டப்ஸாயிருச்சு. பையன் மக்காயிட்டான்.

இது ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூ. இன்னொரு கோணத்துல பாருங்க. அதே வாத்தியார் ஊர் பிள்ளைங்களுக்கெல்லாம் பாடம் கத்துக்கொடுக்கிறார். அவிக மக்காகலே. ஏன்? அவர் " ஸ்கூல்ல எவனோ செத்தான் எனக்கென்ன போச்சுன்னு தான் பாடம் நடத்தறார். அவருக்கு அந்த ஸ்கூல் பிள்ளைங்களோட எந்த விதமான அட்டாச் மெண்டும் இல்லை. ஆனா வீட்ல வந்து பெத்த பிள்ளைக்கு பாடம் நடத்தறப்போ அதிக அக்கறையோட அதிக அட்டாச் மெண்டோட பாடம் நடத்தறார். இங்கே அந்த அட்டாச்மெண்டே வில்லனாயிருது.

இதுலருந்து என்ன தெரியுது?இவன் என் மகன்,  இது என்னோட காருன்னு அட்டாச் மெண்ட் வரும்போதுதான் கிரகம் வேலை செய்யுது. அந்த அட்டாச் மெண்ட் இல்லாத இடத்துல கிரகம் வேலையே செய்யறதில்லை.

முகேஷ் அம்பானிக்கு ஆயிரத்தெட்டு தொழில் இருக்கு அவரால எது மேலயாவது 100 சதம் கான்சன்ட் ரேட் பண்ணமுடியுமா ? ஊஹூம். அவர் அப்படி கான்சன்ட் ரேட் பண்ணாதான் அவரோட தலையெழுத்து அந்த தொழில் மேல வேலை செய்யும். தி ப்ளேனட் எஃபெக்ட்ஸ் யு வென் எவர் யு ஆர் இன் எ பொசிஷன் டு டேக் எ டெசிஷன் அண்ட் டேக் டெசிஷன்.

நீங்க முடிவெடுக்க கூடிய நிலைல இருந்து (சொந்த) முடிவை எடுத்தாதான் உங்க தலையெழுத்து அங்கே வேலை செய்யும். ஆக நவகிரகங்களிடமிருந்து விடுதலை பெறனும்னா இது என்னோடதுங்கற அட்டாச் மெண்டை விட்டுரனும்.

இன்னைக்கு நிறைய வீட்ல பையன்/பொண்ணு எல்.கே.ஜி.ல நூத்துக்கு ஒரு மார்க் குறைஞ்சுட்டா  இல்லாத ஆகாத்தியமெல்லாம் பண்றாங்க. நான் பத்தாம் கிளாஸ் படிக்கிற காலத்துல எங்கப்பா வருஷத்துக்கு ரெண்டு தரம் தான் ஊருக்கே வருவார். வர்ரப்பல்லாம் " டே இப்ப நீ எந்த க்ளாஸ் படிக்கிறே"னு கேட்டு தெரிஞ்சுக்குவார். அப்போ எனக்கு எஸ்.எஸ்.சில 72 % கிடைச்சது. நான் தான் ஸ்கூல் செகண்ட்.  நான் இண்டர் வரதுக்குள்ளே  அவரை  உள்ளூருக்கே ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டாய்ங்க. படிபடின்னு கழுத்தறுக்கலன்னாலும் நிறையவே உபதேசம் பண்ணுவார். 100 அடி தூரத்துல இருக்கிற காலேஜுக்கு போக சைக்கிள் வாங்கி கொடுத்தார். 50%. டிகிரி வந்தேன். செகண்ட் இயர்ல காலேஜ் எலக்சன்ல நிக்கறேன்னேன். ஆரம்பிச்சுருச்சு சனி. ரொட்டீன் அப்பாவாகி செமை கடி. அப்பத்துக்கு ட்ராப் ஆனேன். ஃபைனல் இயர்ல ஃபைன் ஆர்ட்ஸ் செக்ரட்ரியா போட்டியிட்டேன். 468 ஓட்டு வாங்கி மூனு வோட்டு வித்யாசத்துல தோத்து போயிட்டன். ஃபைனல் இயர்ல டமால். ஒரு டெர்ம் விட்டு மறுபடி எழுதினேன் டமால்.

காரணம் என்ன ? அட்டாச் மெண்ட், அப்பாவோட அருகாமை. எஸ்.எஸ்.சில சக்ஸஸ் ஆக காரணம் என்ன ? டிட்டாச் மெண்ட் ,அப்பாவுடனான பிரிவு.

நவகிரகபாதிப்புலருந்து நீங்க விடுதலை பெறனும்னா..கிரகங்கள் கொடுத்திருக்கிற கோட்டா அளவுக்கே ஆசைப்படுங்க, உங்களுக்கு கிடைச்ச எதையும்  இது என்னோடதுன்னு நினைக்காதிங்க, சனத்தோட (பெண்டாட்டி,பிள்ளைன்னாலும் சரி )ஒட்டிக்காதிங்க. எட்டியே, பிரிஞ்சே வாழுங்க. ஸ்தூலமா இல்லேன்னாலும் சைக்கலாஜிக்கலா பிரிஞ்சிருங்க. ( சண்டை போடனும்னுல்ல ரிசர்வ்டா இருந்துட்டாலே போதும்) .

இன்னொரு டமாசு எவனையும்,எவளையும்( அப்பன், ஆயி, மனைவி, பிள்ளை, அண்ணன்,தம்பி)  திருத்த நினைக்காதிங்க.  நினைச்சா அவனை கெடுத்துக்கிட்டு  இருக்கிற கிரகம் உங்களுக்கு ஆப்பு வச்சிரும். ஒவ்வொரு மனுஷனும் போஸ்ட் கார்ட் மாதிரி கடவுள் அவிக போய் சேர வேண்டிய  அட்ரஸை மார்க்கர் பேனாலயே எழுதிவச்சிருக்கான். குடிக்கிறத நிறுத்தின பாவத்துக்கு விஷம் குடிச்ச வி.ஐ.பி பத்தியும், மூணு மாசத்துக்கொருதரம் குளிக்கிற பார்ட்டிய குளிக்க வச்ச பாவத்துக்கு
விபத்துல சிக்கின பார்ட்டிய பத்தியும், அதுக்குண்டான காரண காரியங்களை பத்தியும் அடுத்த பதிவுல பார்ப்போம்.

Wednesday, April 28, 2010

நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை : 5

நவகிரகங்களின் பிடியிலிருந்து விலக உதவினதா கடந்த பதிவுல  பல அம்சங்களை குறிப்பிட்டேன். இதெல்லாம் தானா அமைஞ்ச விஷயம், தானா நடந்த விஷயம்.  நான் ஜோதிஷத்துல ஓரளவுக்கு தேர்ந்த பிற்பாடு இந்த விஷயங்களையெல்லாம் சார்ட் அவுட் பண்ணி டேலி பண்ணேன்.

ஜோதிஷத்துல எனக்கு ஆர்வம் பிறந்து கத்துக்கிட்டதா பலரும் நினைக்கலாம்.  இல்லே அதுக்கும் ஒரு விதி இருக்கு. மனிதன்ல உடல்,மனம்,புத்தி, சப் கான்ஷியஸ் மைண்ட் ஆத்மானு அஞ்சு ஐட்டம் இருக்கு. முதல் நாலோட ஒர்க்கிங் ஏரியா  ரொம்ப லிமிட்டட். மனுஷனுக்கு அவனால தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்னு வரனும். அவன் அதை தீர்க்க முதல்  நாலு ஐட்டம்ஸை கொண்டு தீவிரமா ட்ரை பண்ணனும். அட்டர் ப்ளாஃப். ஆகனும். அப்போ அஞ்சாவது ஐட்டம் லேசா புரண்டு படுக்குது. ஆத்மாவுக்கு பரமாத்மாவுக்கும் இடையில எந்த வித்யாசமும் கிடையாது. அதனால முடியாத விஷயமே கிடையாது.

அப்படி ஒரு பிரச்சினை எனக்கும் வந்தது. 1967 டு 1984 "வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்"னிட்டு வாத்தியார் கணக்கா பாடிக்கிட்டிருந்த நான் இண்டர்ல குண்டு. சப்ளிமெண்ட் எக்ஸாம் எழுதி 72 மார்க் வாங்கிட்டேன்னு வைங்க

( இதான் நான் பண்ண தப்பு. இதேதான் நாமெல்லாரும் பண்ற தப்பு. அதாவது ஒரு தோல்வி வந்ததும் அரண்டு போயிர்ர்ரம். எப்படியாவது அதை ரெக்டிஃபை பண்ணவோ அல்லது அதனால கேரியர்ல  ஏற்பட்ட கேப்பை ஃபில் அப் பண்ணவோ மு.மூச்சா இறங்கிர்ரோம்.

முன்னொரு அத்யாயத்துல  ஜாதகம்னு சொல்ற  ராசி சக்கரத்துல இருக்கிற 12 கட்டத்தையும்  நிமிர்த்தி நிக்க வச்சா அதான்  நம்ப பாடின்னேன்.

இப்பவும் நிமிர்த்துங்க ஆனா நிக்க விடாதிங்க. படுக்க போடுங்க.  அதை    12 கி.மீ கொண்ட பாதைனு வைங்க. எந்த கட்டத்துல எத்தனையாவது மி.மீட்டர்ல  வெடிகுண்டு வச்சிருக்கோ.. இல்லே பன்னீர் ஊற்று மறைஞ்சிருக்கோ தெரியாது. அதை மிதிச்சபிறகுதான் தெரியும் அது வெடிகுண்டா இல்லை பன்னீர் ஊற்றான்னு.

நீங்க என்னதான் இலங்கைக்கு தாவின ஆஞ்சனேயர் மாதிரி தாவினாலும் அந்த பப்பெல்லாம் வேகாது. ஒவ்வொரு கட்டமாதான், அதிலயும் ஒவ்வொரு மி.மீ தான் கடக்க முடியும்.

ஒரு வெடிகுண்டு வெடிச்சதுமே நாம டென்ஷனாயிர்ரம் கச்சா முச்சானு குதிக்க ஆரம்பிச்சுர்ரம்.அந்த குதியல்ல ஒரு தடவை மட்டும் மிதிச்சு, ஒரு தடவை மட்டும்  வெடிக்க வேண்டியதை பத்து தரம் குதிச்சு ஒரு நஷ்டத்தை பத்தாக்கிக்கிறோம்.

எங்கப்பா ஜாதகமும் கடக லக்னம் தான்.சப்தம(மனைவி) ,அஷ்டமாதிபதி( மரணம்)யான சனி  நாலில் உச்சம். அந்தாளு பெண்டாட்டி,அம்மா, வீடு எல்லாத்தயும் விட்டுட்டு ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டிருந்தவரைக்கும்  வீடு  சொம்மா ஆரம்ப கால ஜனசங் மாதிரி, பி.ஜெ.பி மாதிரி கட்டுக்கோப்பா இருந்தது. பார்ட்டி கடைசி காலத்துல சொந்த ஜில்லாவுக்கு வந்தார்.அதுவே ஜாஸ்தி. இதுல வீட்டை வேற கட்ட ஆரம்பிச்சுட்டார். அதுக்கு முன்னாடி வீடு சொம்மா தாஜ்மகால் மாதிரி இருந்துச்சு.(அதாவதுங்கண்ணா பழைய ஓட்டுவீடாச்சா, பனங்கழி எல்லாம் செதிலடிச்சுரும். அதுக்கு முட்டு கொடுத்து வச்சிருப்பாய்ங்க. அதைத்தான் பந்தாவா சொன்னேன்)  கட்ட ஆரம்பிச்சாரு. என் படிப்பு காலி ( நாலாவது இடம் தான் வீட்டையும்,படிப்பையும், தாயையும் காட்டுது)  கெட்டா போகுதுனு விட்டு தொலைச்சு சப்ளிமென்ட்ல பார்டர்ல பாஸ் ஆகியிருந்தா இத்தனை லொள்ளே கிடையாது.

அந்த வருஷமே எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்து லோக்கல்ல பயாப்ஸி பண்ணி பார்த்துட்டு கான்சர்னிட்டாங்க. சி.எம்.சிக்கு போனோம். கத்துக்குட்டி டாக்டரெல்லாம் வேலை கத்துக்கிட்டானே தவிர, அந்த டெஸ்ட் இந்த டெஸ்டுன்னு எஸ்.டி.டி பில் சைஸ்ல பில்ல கொடுத்து கொள்ளையடிச்சானுங்களே தவிர கான்சர் அட்டாக் ஆன யூட்ரஸை அறுத்தெரியலை. அம்மாவ வாரிக்கொடுத்துட்டம்.

யாராச்சும் சின்ன ந்யூசென்ஸ் பண்ணா கூட  அவன் அப்பன் உயிரோட இல்லன்னு வைங்களேன் தெலுங்குல முண்ட நா கொடக்காம்பாங்க.  முண்டச்சி பெத்த மகனேனு அர்த்தம்.

ஆனால் எனக்கு தெரிஞ்சு அப்பன் இல்லாத குடும்பங்கள் எத்தனையோ உருப்பட்டிருக்கு. ஆனால் அம்மா இல்லாத குடும்பம் மாத்திரம் ஒன்னு கூட உருப்படலை.

இந்த மாதிரி எங்கப்பன் வீட்டை கட்டி, நான் சப்ளிமெண்ட்ல 72 மார்க் வாங்கி எங்கம்மாவுக்கு பாடை கட்டிட்டோம். நவ கிரகங்கள்ளருந்து விடுதலை பெற ஒரே வழி நடந்து போன நஷ்டத்தை மென்னு விழுங்கி சீரணிச்சிக்கறதுதான்.

சின்ன சின்ன நோய்களுக்கு கூட டப்பா டப்பா மருந்து ,மாத்திரை விழுங்கறவங்களை பார்த்தா பயங்கர கடுப்பு. சைன்டிஃபிக்கா பார்த்தா கூட ஆண்டிபயாடிக்ஸ் எல்லாம் அதிகம் சாப்பிடகூடாது. கிட்னில இருக்கிற திசுக்களையெல்லாம் தின்னுருதாம்பா. இன்னைக்கு பாருங்க எது போலி எது ஒரிஜினல்னே தெரியாத நிலை.

வங்கில கடன் வாங்கியிருப்பான். (வங்கி வட்டி எவ்ளங்கண்ணா .. இங்கே தாய்குலத்துக்கு நூத்துக்கு  நாலணா வட்டிதா) லக்சரீஸை குறைச்சு, ஆதாயத்தை கூட்டி விழுந்து எழுந்து கட்டி தொலைக்கலாம்.கட்ட மாட்டான். கடன் வசூலுக்கு வீட்டண்டை வந்த  ஃபீல்ட் ஆஃபீசர்கிட்டே வாக்குவாதம் பண்ணுவான். யோவ் ..உன் பணம் நாளைக்கே வந்து சேரும். சொம்மா பேசாதேம்பான். ரெண்டு வட்டிக்கு வாங்குவான். ரெண்டு வட்டிகாரன் கராறா வட்டி கேட்பான்.  நம்மாளு கவரி மான் ஜாதியாச்சே அஞ்சு வட்டிக்கு வாங்கி ரெண்டு வட்டி கடனை தீர்ப்பான். தேவையா இது? )

சரி நான் ஜோதிஷம் கத்துக்கிட்டது பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன். எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டம். வயசாகுதுல்ல. ஆங் .. தீர்க்கமுடியாத பிரச்சினை வரனும். ஆத்மா எந்திரிக்கனும்னு சொன்னேன். அப்படி தீர்க்க முடியாத பிரச்சினை என்ன வந்துருச்சின்னா அம்மா செத்த பிறகு வீடு சபா நாயகர் இல்லாத பாராளுமன்றம் மாதிரி ஆயிருச்சு.  என்னுதா கடகலக்னம். கடக லக்ன காரனுக்கு வீடுதான் சொர்கம். அவன் வீட்டுப்பறவை.  ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் கேஸு. இதுல அம்மாவுக்கும் எனக்கு இன்டிமசி ஜாஸ்தி.

அவிக இசை ஞானமாகட்டும், கையெழுத்தாகட்டும், வீட்டு வேலைல நறுவிசாகட்டும்  சமையல்ல ருசியாகட்டும் ..சம்பந்தா சம்பந்தமில்லாம  எதுக்கு சொம்மா  இழுத்துக்கிட்டு . தனியா ஒரு பதிவையே போட்டுட்டா போவுது.

இண்டிமசிக்கு மாத்திரம் ஒரு சின்ன உதாரணத்தை சூ காட்டிட்டு விஷயத்துக்கு வந்துர்ரன். பேஷண்டா இருக்கிறப்ப கட்ட கடைசியா பாக்யராஜோட முந்தானை முடிச்சு படம் பார்த்தாங்க. அதுல  ஊர்வசி ஆராரோ பாட்டை ஏடா கூடமா படி பாக்கியராஜை உசுப்பேத்த கடைசில பாக்யராஜ் போய் அவசரமா த்லைக்கு குளிப்பாரு. அது ஏன்னு அம்மாவுக்கு புரியலை.  மாத்ருபூதம் மாதிரி நான் தான் அனலைஸ் பண்ணேன்னா பாருங்க.

ஒரு ஆண் முத முதல்ல பார்க்கிற பெண் தாய். தாய்க்கும் அவனுக்கும் இடைவெளி ஏற்பட்ட பிறகுதான் ( தத் என்னடா இது எருமமாடு மாதிரி வந்து விழறே.. வேர்வை நாத்தம் .. தள்ளி நின்னு பேசு இத்யாதி) அவன் பார்வை அடுத்த பெண்ணுக்கு டைவர்ட் ஆகுது. (இதுவே தான் பெண்குழந்தைகள் விஷயத்துலயும் நடக்குது)

1984 டு 1989 கண்டவளுக்காகவும் சர்க்கஸ் காரன் மாதிரி  அட்வெஞ்சர் பண்ணேன். பஃபூன் மாதிரி காமெடி பண்ணேன். பலதும் மடங்குச்சு.  சிலது (முக்கியமா இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் கேஸுங்க முறுக்குச்சி) . என்னதான் என்.டி.ஆர் ஸ்டைல்ல சுய கவுரவம் இத்யாதியெல்லாம் மெயிண்டெயின் பண்ணாலும் "பலான" சமாசாரத்துக்கப்புறம் அவளுக கிட்டே ஏதோ ஒருவிதத்துல இன்ஃபிரியர் ஆயிட்ட  மாதிரி ஒரு ஃபீலிங். ( வேற மா.............ரி எதுனா நினைச்சுரப்போறே அண்ணாத்த அந்த விஷயத்துல ஒரு பி.ஹெச்.டி கட்டுரையே எழுதற அளவுக்கு புலி நாம. இப்பவாச்சும் ஏதோ சர்க்கஸ் புலி மாதிரி கிடக்கமே தவிர அப்போ காட்டுப்புலி .)

தத் என்னடா இது நமக்குனு ஒருத்தி வந்துட்டா " நல்லதோ கெட்டதோ" நம்மோட போயிரும். இதுக போய் கண்டவள் கிட்டே பேசி காமெடி கீமெடி பண்ணா நம்ம ப்ரஸ்டிஜ் என்னாறதுங்கற ஃபீலிங் வந்துருச்சு.

இந்த காலகட்டத்துல ஒரு பெண் அறிமுகமானாள். பேரு "ச"னு வச்சிக்குவம். மா நிறம் .( எங்க அம்மா நிறம்) வட்ட முகம் ( எங்கம்மா மாதிரியே)  சரிய்யான ஹெல்த்தி பாடி ஸ்ட்ரக்சர் . ரொட்டீனா தான் ஆரம்பிச்சேன். ஒரு சில மாசம் தான். ஐ.டி.ஐ படிக்கிற நண்பனோட அறைல  குடித்தனமே நடத்திட்டேனு வைங்களேன்.பயங்கர  அட்டாச் மெண்ட் வந்துருச்சு.

ஒரு தடவை ரெண்டு பேரும் சினிமா போனோம். ஒரே ஏரியால இருந்துக்கிட்டு சினிமா போய் ஒரே நேரத்துல ரிட்டர்ன் ஆனா நாஸ்தியாயிர போவுதேனு பொழுதை போக்க ஒரு மரத்தடி ஜோசியர் -அவர் பேரு "ராம"சாமி - கிட்டே தேங்கினேன். நான் என்னத்தையோ கேட்க அவரு  ஒரு நாள் , ஒரு வாரம் அல்லத் ஒரு மாசத்துல பிரிஞ்சிருவிங்கனு சொல்ட்டார் .  அப்போ அந்த மாதிரியெல்லாம் நடக்கிற அளவுக்க் சீனே இல்லை. ஆனா பாருங்க அவர் சொன்ன மாதிரியே நடந்துருச்சு. அதுவும் கல்யாணம் கூட முடிஞ்ச பிறகு. அப்ப இருக்ககூடிய மெச்சூரிட்டிக்கு (வயசு 22) இது பெரிய பிரச்சினைதானே.

ஏன்,எதற்கு,எப்படின்னு சுஜாதா கேள்வி பதில் மாதிரி 24 மணி நேரமும் ஒரே குழப்பம். அந்த குழப்பத்துல மேற்சொன்ன 4 ஐட்டமும் அலுத்து போச்சு.( உடல்,மனசு,புத்தி,சப்கான்ஷியஸ்)  ஆத்மா புரண்டு படுத்துச்சு. 1986 டு 1989 செய்த ராம  நாம ஜெபத்தால குண்டலி விழிச்சு மூலாதாரத்தை தாண்டிருச்சு. பூமி தத்துவமான மூலாதாரத்தை குண்டலி தாண்டிட்டா பூமி மேல இருக்கிற எல்லா பொருட்கள் மேலயும் கமாண்ட் வரனும். அதுக்கு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி ஜோதிஷத்து மேல என் பார்வை திரும்புச்சு. கத்துக்க ஆரம்பிச்சேன். சாரி .. ஞா படுத்திக்க ஆரம்பிச்சேன்.


ஆமாங்க என்னைப்பொருத்தவரை எவனும் எதையும் புதுசா கத்துக்கிடறதில்லை. ஜஸ்ட் ஞா படுத்திக்கிறான்னு வேணம்னா சொல்லலாம். நான் முறைப்படி ஜோசியத்தை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சது 1989 பிப்ரவரிக்கு பிறகுதான். ஆனா 1987 லயே ஜோதிஷத்தை பத்தின எந்த வித நாலெட்ஜும் இல்லாத சமயத்துலயே குட்டிகளை மடக்க சொம்மா டேட் ஆஃப் பர்த்த வச்சு பீலா விடறது வழக்கம். ஆனா நான் ஜோதிஷம் கத்துக்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் அப்போ விட்டதெல்லாம் பீலா இல்லே . விட்ட குறை தொட்ட குறையா இந்த ஜன்மத்துலயும் தொடர்ந்துவர்ர ஜோதிஷ ஞானம்னு புரிஞ்சிக்கிட்டேன்.

என்னடா இது நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலைன்னு ஆரம்பிச்சு கடைசில எல்லாத்தயும் ஜோசியம் கத்துக்க சொல்றானேனு நொந்துராதிங்க. கத்துக்கிடாட்டி போவுது (அதுக்கும் ஒரு அமைப்பு வேணம் இல்லியா)

நீங்க பண்ண வேண்டியதெல்லாம் சிம்பிள். உங்க குடும்ப ஜோசியரை போய் பாருங்க. உங்க ஜாதகத்தை கொடுங்க. அய்யா என் ஜாதகத்துல உள்ள கிரகங்களுக்கு உள்ள பலத்தை ( பலவித ஜோதிட விதிகளை அடிப்படையாய் கொண்டு) , பாவங்களின் பலத்தை ( ஃப்ரூட் ஃபுல் நெஸ்ஸை ) சதவீதத்துல போட்டு தாங்கனு கேளுங்க. கேட்டுவைங்க. அடுத்த பதிவுல சந்திப்போம்/.

Tuesday, April 27, 2010

நவகிரக பிடியிலிருந்து விடுதலை

நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவிய அம்சங்கள் பலப்பல. அவற்றின் பட்டியலை இப்பதிவில் தருகிறேன். இவை உங்கள் வாழ்வில் தன்னிச்சையாய் அமைந்திருந்தாலோ அல்லது ஏற்பாடு செய்து கொள்ள கூடியவற்றை  நீங்களும் ஏற்பாடு செய்துகொண்டாலோ   நிச்சயமாக நவகிரகங்களின் பிடியிலிருந்து விடுதலை பெறலாம்.

1.பழைய தெலுங்கு சினிமாவில் ஒரு டயலாக் இருக்கு " அதிர்ஷ்டசாலியை எவனும் கெடுக்க முடியாது.துரதிர்ஷ்ட சாலிய எவனும் உருப்பட வைக்க முடியாது. நான் பை பர்த் அதிர்ஷ்டசாலி. இதான் முதல் பாயிண்ட் ( இந்த லிஸ்ட்ல வரப்போற விஷயங்களை பார்த்து நீங்களே இதை ஒத்துக்கிடுவிங்க)

2.தன் வரை தர்ம நியாயத்துக்கு பயந்து  தர்மாத்வா  வாழ்ந்த என்  அப்பா லைம் லைட்டுக்கு (புகழ் வளையம்) வரதுக்கு முயற்சியே பண்ணலை. இத்தனைக்கும் அவருக்கு அதுக்குண்டான எல்லா தகுதிகளும் இருந்தது.

அப்பனோட ஜாதகத்துல அஞ்சாவது இடம் தான் அவரோட பெயர் புகழை காட்டறதோட பிள்ளைகளையும் காட்டுது. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர், கலைஞர் மாதிரி செலிப்ரிட்டீஸோட விஷயத்துல அவிக ஜாதகத்துல அஞ்சாவது இடம்  பெயர் புகழை தர்ரதுலயே உழைச்சு ஓடா தேஞ்சு போச்சு.

அதனால தான் எம்.ஜி.ஆருக்கு பிள்ளையே இல்லை. என்.டி.ஆர் ஒரு டஜன் பெத்தும்  ஒரே ஒரு மகள் தான் ஓரளவு பேசப்படறாங்க. ( ஜோதிஷ சாஸ்திரபடி பெண் குழந்தைய பெற்றாலும் அவன் மலடன் கீழே தான் கணக்கு ,பெண் குழந்தை லைம் லைட்டுக்கு வந்தாலும் அது கணக்குல வராது )

கலைஞர் விஷயத்துல மு.க.  முத்து  ஒரு சோக அத்யாயம். என்னதான் ஒப்பேத்த பார்த்தாலும் அழகிரி முரண்டு பிடிச்சிக்கிட்டே இருக்கார். கலைஞர் எந்தளவுக்கு தன் மக்களை (பிள்ளைகளை) ஃபோக்கஸ் பண்ண முயற்சி பண்றாரோ அந்த அளவுக்கு மொக்கையாகிறார் என்பதை கவனிக்கவும்.

இந்த கணக்குப்படி உன்னோட பிறந்தவங்க எல்லாருமே அதிர்ஷ்ட சாலிகளா இருக்கனுமேனு கேட்பிங்க. இல்லே . அது ஏன்னு கேட்டா எங்கப்பாவுது கடகலக்னம். கடகலக்னத்துக்கு பஞ்சமாதிபதி (பெயர்,புகழ்,பிள்ளைகளை காட்டற பாவம்) செவ்வாய்.

எங்க பெரிய அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயிட்டான். (செவ்வாய் ரத்தத்துக்கு காரகன். இதயம் தான் ரத்தத்தை பம்ப் பண்ற மிஷின். மேலும் ஹார்ட் அட்டாக்குக்கு வழி வகுக்குறது ஹை ப்ளட் ப்ரஷர் தானே)

எங்க சின்ன அண்ணன் ப்ளட் (செவ்வாய்) கேன்சர்ல போய்ட்டான்.

என் தம்பி டிகிரி படிக்கிற வயசுலயே பெப்டிக் அல்சர் காரணமாய் ரத்தம் ரத்தமா (செவ்வாய்) கக்கினதை பார்த்திருக்கேன்.  ஒரு தரம் ரத்த வாந்திக்கு சோர்ந்து போய் கண்ணெல்லாம் செருகிப்போக கை நிறைய க்ளூகோஸ் பவுடரை தண்ணீல போட்டு குடுத்து அவன் உயிரை காப்பாத்தியிருக்கேன்.

இப்ப என் கேஸு என்னாகும்னு நினைக்கிறிங்களா? ஒன்னும் ஆகாது . ஏன்னா என்னோடது செவ்வாய் காரகத்வம் வகிக்கிற காதல்+ கலப்பு திருமணம் தான்  செவ்வாய் காரகத்வம் வகிக்கிற  சகோதரர்கள்  3 பேரும் நமக்கெதிரா கூட்டு சேர்ந்து  3 வருஷம்  குடும்ப சொத்தான 1200 ச.அ வீட்டில் (பூமிகாரகன் செவ்வாய் )  பங்கு கொடுக்காம அவிகளே அனுபவிச்சாங்க.

நான் செங்கல் சுவருக்கு (இதற்கும் செவ்வாய் தான் காரகன்) பூசு வேலை கூட செய்யாத  குடிசை வீட்ல குடியிருந்தேன். 1992 லருந்து 2003 வரை வருடத்துக்கு ரெண்டு தடவை கூட ரத்த தானம் பண்ணியிருக்கேன். கடைசியா டாக்டர் நியாயப்படி  உங்களுக்கே ஏத்தனும்னு சொன்னபிறகு வருஷத்துக்கு ஒருதரம், ரெண்டுவருஷத்துக்கு ஒரு தரம்னு குறைச்சிக்கிட்டே வந்துட்டன்.

எல்லாத்துக்கும் மேல செவ்வாய் காரகத்வம் வகிக்கிற போலீஸோட  நமக்கு டீலிங்க் ஜாஸ்தி ( எல்லாம் ஊர் பஞ்சாயத்து தான்) மேலும் டவுன்ல இருக்கிற அடிதடி கும்பலோட எல்லாம் ஒரு கட்டத்துல மோதியிருக்கேன். ஒரு கட்டத்துல பொலிட்டிக்கலா இணைஞ்சி பணியாற்றியிருக்கேன்.  எலக்ட் ரானிக்ஸ், கார்ப்பெண்டரிங்கல(இதுக்கும் செவ்வாய் தான் காரகன்)  எல்லாம் இன்டரஸ்ட் அதிகம் மஸ்தா சுத்தியடி, எலக்ட் ரிக் ஷாக் எல்லாம் வாங்கியிருக்கேன்.

இதெல்லாம் ஒரு பக்கம்னா முக்கியமான விஷயம் நான் புரட்சிக்காரன். கேள்வி கேட்கிறவன். அப்படி கேட்டு  நிறையவே இழந்தவன்.  என் பெயரும் செவ்வாய்க்குரிய கடவுளான முருகன் பெயராவே அமைஞ்சதும்  ஒருவகைல பரிகாரமா போச்சு
நம்ம லட்சியமான  நதி நீர் இணைப்புக்கு கூட ராணுவ  ஸ்டைல்ல ஆப்பரேஷன் இந்தியா 2000னு பேர் பேர் வச்சிருக்கேன். சிறப்பு ராணுவம் ஏற்படுத்தறதை ஒரு முக்கிய அம்சமா வேற வச்சிருக்கேன். நம்ம ப்ளாகை கூட பாருங்க ஜேம்ஸ்பாண்ட் 007 மாதிரி 07னு வச்சிருக்கேன் . செவ்வாய்னா போலீஸ், செவ்வாயோட கேது சேர்ந்தா ரகசிய போலிஸ். ஜேம்ஸ்பாண்டும் ரகசிய போலீஸ்தானே.

என் தம்பி பேரும் முருகன் பெயர் தான். அவனோடதும் காதல் திருமணம்தான். என்ன கையில ஜாப் இருந்ததால அண்ணங்கள் மூலமா லாபியிங்க் பண்ணி கண்ணாலம் கட்டிக்கிட்டான்.  முக்கியமா உயிர் பிழைச்சிருக்கிற எங்க ரெண்டு பேருக்குள்ளவும் 1997லருந்து தொடர்பே கிடையாது.

ஜோசியத்துல வியோகம்னு ஒரு சொல் வரும். அதுக்கு பிரிவுன்னும் அர்த்தம் சொல்லலாம். மரணம்னும் சொல்லலாம். எங்க ரெண்டு பேரை பொருத்தவரை ஒருத்தனுக்கொருத்தன் இருந்தும் செத்து போனமாதிரிதானே.

உங்களுக்கு இந்த சந்தர்ப்பத்துல சின்ன டிப். யாராச்சும் ஜோசியர் ( ஓரளவு லாஜிக்கலா கணிச்சு உங்க கடந்த காலத்தை சொல்லி தங்கள் வித்வத்தை நிரூபிச்ச பார்ட்டிங்க) மனைவிக்கு கண்டம் இருக்கு, அம்மாவுக்கு கண்டம் இருக்குனு சொன்னா அவிகளை காப்பாத்த ஒரே வழி அவிகளை பிரியறதுதான். ஜோசியத்துல பிரிவும், மரணமும் சமம்.

என்னோடதும்  கடகலக்னமாவே அமைஞ்சு பஞ்சம  ஜீவனாதிபதியான செவ்வாய்  வித்யா ஸ்தானமான 4 ல் உட்கார்ந்து கேதுவோட சேர்ந்துட்டார். இது தரித்திர யோகத்தை கொடுத்தாலும் (40 வயசுவரை அப்பப்போ சோத்துக்கே லாட்டரிங்கண்ணா)
தர்கத்துக்கு அதிபதிங்கறதால , ஞான காரகனான கேதுவோட சேர்ந்து தர்க ரீதியிலான ஞானத்தை கொடுத்துட்டார். 1997 லருந்தே சனம் நம்மை சாமி சாமினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாய்ங்க.

(கேது ஜாதகர்களுக்கு கொடுக்கிற சாய்ஸ் ரெண்டு தான் ஒன்னு பிச்சைக்காரனாகனும்,இல்லே சாமியாராகனும் . நம்ம விஷயத்துல சனம் நம்மை சாமியாராக்கிருச்சு. இதுக்கு லக்னத்துல உச்சம் பெற்ற குருவும் அவர் கொடுத்த பிராமண லட்சணங்களும் கூட உதவுச்சு). நான் ஏன் பிராமணாளை இப்படி சகட்டுமேனிக்கு விமர்சிக்கிறேனு ஒரு கேள்வி கேட்பிங்க. கடகத்துக்கு குரு 6,9க்கு அதிபதி. ஆறுன்னா சத்ரு,ரோகம்,ருணம். அதனாலதான் அவிக நம்மை எதிரியா பாவிக்கிறாய்ங்க. நமக்கு அவிக எதிரிங்க கிடையவே கிடையாது.  நான் அவிகளைஅச்சு பிச்சு கேசுகளாதான் பார்க்கிறேன். பிராமணீயத்தால் அவாளுக்கே ஆபத்துனு ஒரு தனிப்பதிவே போட்டிருக்கேன்.

3. என் ஜாதக பிரபாவத்தால எனக்கு 17 வயசு இருக்கும்போதே யூட்ரஸ் கேன்சர்ல 1984லயே அம்மா காலி.  1984 முதலே ரீ மாடலான வீட்ல மாடியறைய நமக்கு ஒதுக்கிட்டாய்ங்க. வாஸ்து தோஷங்கள் கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கிறவங்களுக்கு 100% வேலை செய்யும். மாடில இருக்கிறவிங்களுக்கு 50 % தான் வேலை செய்யும்.

பால்யத்துல வந்த சுக்கிர தசை  பிரபாவத்துல செக்ஸுல பூந்தாலும்  ஜன்மத்துல உச்சமா இருந்த குரு சீக்கிரமே (2 வ) வெளிய கொண்டுவந்துட்டாரு. அந்த ப்ராசஸ்ல ஆஞ்சனேயரை பிடிச்சேன். அவருக்கு பிடிக்குமேனு ராம நாம ஜபம் ஆரம்பிச்சேன்., வாஸ்து தோஷங்களை ராம நாம ஜபம் பரிகாரம் பண்ணிரும்னு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலகுமார ஸ்வாமிகள் கூட சொல்லியிருக்கார். ( அட நம்ம எழுத்தாளர் பாலகுமாரனுங்கோ)

இத்தனை சப் க்ளாஸ் நமக்கு ஃபேவரா இருந்தாலும் 1991ல அந்த வீட்டை விட்டு வெளியேர்ர வரை பட்டறிவுங்கறது ஒரு மாற்று கம்மிதான்.( எங்க வீட்டுல இருந்த வாஸ்து தோஷங்களை வச்சி ஒரு தொடர்பதிவே போடலாம்னா பார்த்துக்கங்க)

தாய்,வீட்டை  காட்டற 4 ஆவது இடத்துல இருந்த  செவ்வாயும்,கேதுவும் தாயின் மரணத்தாலயும், வீட்டை விட்டு வெளியேறினதாலயும்  வெடிச்சு போன க்ளைமோர் பாம் மாதிரி ஓரளவு ந்யூட்ரலாயிட்டாங்க. நாம வெறுமனே லாஜிக்கை வச்சிக்கிட்டு எதையெதையோ ப்ளாஸ்ட் பண்ணி அசலான சத்தியங்களையே சிறை பிடிச்சிட்டோம்.

4.அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னுவாங்க. என்னை பொருத்தவரை ஸ்தூலமா அவிக தெரிஞ்சோ தெரியாமயோ எனக்கு இன் ஜஸ்டிஸ் பண்ணியிருந்தாலும் ( நாம என்ன அவிகளுக்கு கொஞ்சமாவா இம்சை கொடுத்தோம்)
அவிகளோட ஜீன்ஸும், நல்ல குணங்களும்  சர்வ நிச்சயமா எனக்கொரு அசெட் தான். நான் லைஃப்ல எடுத்த ரிஸ்குகளை மீறி பைத்தியம் பிடிக்காது, இன்னும் உயிரோடு இருக்க , இந்த அளவுக்கு கடவுள் கைல வச்சிருக்கிற அஜெண்டாவையே பிட் அடிக்கிற அளவுக்கு, அவரோட மகா மந்திரிகளான நவகிரகங்களுக்கே டேக்கா  கொடுக்கிற அளவுக்கு வளரவும் அவிக பண்ண புண்ணியம், சைக்கிரியாட் ரிஸ்டுங்க கோணத்துல பார்த்தா அவிக கொடுத்த  நல்ல என்விரான்மென்ட், சுத்தியுள்ள மனிதர்கள் என்னதான்  நீசமான சனமாக இருந்தாலும் பெரும்போக்காவே  போன ஸ்டைல் இதெல்லாம் எப்படிப்பட்ட க்ரைசிஸ்லயும் கொஞ்சம் நின்னு நிதானிச்சுக்க தேவையான மெச்சூரிட்டிய கொஞ்சம் தாமதமாவாச்சும் கொடுத்தது

5.  தமிழ் நாட்ல எந்த அம்மாவாவது பிரதி வெள்ளிக்கிழமையும், நல்ல நாட்களிலும் அறிஞர் அண்ணாவோட படத்துக்கு தீபாராதனை காட்டி அண்ணா என் பிள்ளைங்க  உங்களை   மாதிரி அறிவில் சிறக்க ஆசீர்வாதம் பண்ணுங்கனு வேண்டியிருக்காங்களா? எங்கம்மா அப்படி வேண்டிக்கிட்டாங்க.
அண்ணாவோட அப்பா முருகனுக்கு பண்ண தேனாபிஷேகம் அண்ணாவுக்கு தேனினும் இனிய சொல்லாற்றலை தந்தாற்போல எங்கம்மா அறிஞர் அண்ணாவுக்கு செய்த பூஜை அண்ணா அளவுக்கு இல்லன்னாலும் அவரை தமிழ் சினிமா க்ளைமாக்ஸில் தங்கச்சி கேரக்டர் மாதிரி "அண்ணா ஆஆஆஆஆஆ "ன்னு கூவினா
அவருக்கு கேட்கிற உயரத்துக்காவது கொண்டு போகும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு.

6..கொஞ்சம் அறிவியல்,உயிரியல், மனோதத்துவம்  கலந்த உண்மை ஒன்னும் இருக்கு. அது என்னன்னா என் ரெண்டு அண்ணன் மாருக்கு பிறகு பத்து வருஷம் கழிச்சி என் பெற்றோரின் நடுத்தர வயதில் பிறந்தவன் நான். (இப்ப எல்லாருக்கும் நடுத்தர வயதுலதான் கல்யாணமே நடக்குது. அது வேறு விஷயம்) .

ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுத்தர வயசுல புதுசா என்ன கிடைச்சுர போவுதுனு நீங்க கேட்கலாம். என் பதில் மெச்யூரிட்டி.  கல்யாணமான புதுசுல உடல் தொடர்பான வேட்கை பிரதானமா இருக்கும். போக போக அது குறைஞ்சு உண்மையான இணக்கம் ஏற்படும். தொடர்ந்த,குற்ற உணர்வற்ற, ஆத்திரம்,அவசரம், இனெக்யூரிட்டி இல்லாத  உடலுறவுகளால் அவிகளால உடலுறவின் ஆழத்துக்கு போக முடியுது. மேலும் அவிக சரீர தர்மங்கள் ( உஷ்ண த்ரேகம், சீதள த்ரேகம்) சமப்படுகின்றன. இப்படி மனம், உடல் ரெண்டுமே ஒரு நிதானத்துக்கு வர்ர காலத்துல பிறக்கிற பிள்ளைகளுக்கு ஐக்யூ அதிகமா இருக்கும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க.அவிக உடலுறவுக ஆன்ம கலப்பு ஏற்படும்னு ஞானிகள் சொல்றாய்ங்க. இன்னும் நிறைய விஷயம் இருக்கு. இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஆக பெற்றோருக்கு அவிக நடுத்தர வயசுல பிறந்ததும் நவகிரக பிடியிலிருந்து விடுதலை பெற எனக்கு உதவுச்சுனு சொல்ல விரும்பறேன்.

மேலும் கமலோட அப்பா மாதிரி என் அப்பாவும் குழந்தை பிறப்பு விஷயத்துல ஏதேனும் ஆராய்ச்சி பண்ணாரான்னும் ஒரு சம்சயம் உண்டு.ஏண்டான்னா அவர் தன் லைப்ரரில சேர்த்து வச்சிருந்த புக்ஸ்ல இந்த மாதிரி சமாசாரங்க நிறைய இருந்தது. நாள் நட்சத்திரம் பார்த்து ஜோசிய கணக்கு ஏதாச்சும் போட்டு  கசமுசா பண்ணாரானும் ஒரு டவுட்.

இந்த இடத்துல ஒரு விஷயத்தை ( அசம்பந்தமா இருந்தாலும்) சொல்லிர்ரன். கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும். அது மாதிரி பெற்றோர் ஜாதகத்துல உள்ள அம்சங்களை கொண்டுதான் பிள்ளைகள் பிறக்குது. ஆனால் அடுத்தடுத்து குழந்தைகள் பிறக்கும்போது பெற்றோர் ஜாதகத்துல யோகங்கள் இருந்தா குழந்தைக்கு குழந்தை குறைஞ்சிக்கிட்டே வருது. ஆனால்  தோஷங்கள் மட்டும் அதிகரிச்சிட்டே போய் மூனாவது நாலாவது குழந்தைலருந்து குறைய ஆரம்பிக்குது. சில கேஸ்ல படக்குனு ஒரு குழந்தைக்கு கேப் விட்டு அடுத்த குழந்தைக்கு கடுமையான தோஷமும் ஏற்பட்டுருது. 

இதுக்கெல்லாம் ஏதோ ஒரு விதி இருக்கு. அதை என்னனு கண்டு பிடிக்கனும்னா ஒரு மெகா சர்வேக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ஒத்துழைக்கனும்.  குத்தாட்டங்களை ஸ்பான்சர் பண்ற தர்மாத்மாக்கள் இதை ஸ்பான்சர் செய்ய முன்வரனும். எப்படியோ இந்த வகையிலும் எனக்கு உதவி கிடைச்சது.

7. பிதுர்கள்:
பிதுர்கள்னா உங்க மூதாதையர்கள்னு அர்த்தம். வெறுமனே உங்க  மூதாதையர்கள் மட்டுமில்லே. ஒட்டு மொத்த ஆவி உலகமே உங்க ஆட்டத்தை கவனிக்குது.  கொய்யா மரத்துல கொய்யா தான் காய்க்கும்ங்கற பழமொழிய ஜஸ்ட் உங்க பேரண்ட்ஸை வச்சி மட்டும் சொன்னேன்.. வம்ச விருட்சம்னா என்ன தெரியுமா ?
பாபர்,ஹுமயூன்,அக்பர்,ஜஹங்கீர்,ஷாஜஹான்,ஔரங்கசீப்னு வமிசாவழி சொல்றோமில்லை. அதான் வமிச வ்ருட்சம். வசதி வாய்ப்பிருந்தா ஒரு வம்சத்தை மட்டும் எடுத்துக்கிட்டு ஒரு பதினாலு தலைமுறைக்கு அவிக விவரங்கள்,வாழ்க்கை முறையை ஆராய்ச்சி பண்ணா ஒரு ஆச்சரியகரமான உண்மை வெளிப்படும். அது என்னன்னா .... ஒவ்வொரு வம்சத்துலயும் ஒரு சில தலைமுறைகளுக்கு பிறகு அதே ஆட்கள் பிறந்து வராங்க.

சின்ன வயசுல என் தம்பியோட இடது கை வழக்கத்தை வச்சு எல்லாம் எங்க தாத்தா மாதிரினு முடிவு பண்ணாங்க.ஆனால் லாங் ரன்ல பார்க்கும் போது என் தாத்தாவோட பல குணங்கள் என் கிட்டே வெளிப்பட்டுது. அவர் பேரு முனிசாமி. என் பேரு முருகன் (ஒரே நட்சத்திரம்), அவரும் எந்த வேலையையும் 6 மாசத்துக்கு மேல செய்யமாட்டார். ( என்னோட ஹையஸ்ட் ரிக்கார்ட் தினத்தந்தி 2007 ஏப்ரல் கடைசி வாரத்தல இருந்து 2009 ஏப்ரல் கடைசி வாரம் வரை). ஜோசியத்துல பிரவேசம் உண்டு.

ஆவியுலகத்தை பொருத்தவரை உங்களுக்கு ஒரு சின்ன விஷயத்தை சொல்லி இந்த பதிவை முடிக்கிறேன்.

உலகத்துல உள்ள அத்தனை குடும்பங்களோட கதையையும் எடுத்து பார்த்தா பாதி குடும்பங்கள்  ஏதோ ஒரு 10 வழில உருப்பட்டிருக்கு. அதே மாதிரி பாதி குடும்பங்கள் ஏதோ ஒரு 10 வழில நாசமா போயிருக்கு.

உருப்படவும் புதுவழி இல்லே. நாசமா போகவும் புதுவழி இல்லே. இது எப்படி சாத்தியம்னு நீங்க கேட்கலாம். இந்த உலகத்தை ஒரு ஸ்போர்ட்ஸ் ட்ரெயினிங் சென்டரா நினச்சுக்கங்க. எல்லாரும் ஏதோ ஒரு ஆட்டத்தை ஆடிக்கிட்டிருக்கோம். கேலரியெல்ல்லாம் ஆவி கூட்டம் உட்கார்ந்து எஞ்சாய் பண்ணிக்கிட்டிருக்கு. அவிக எல்லாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லே முன்னாள் ஆட்டக்காரர்கள். வெறுமனே பாப் கார்ன் தின்னுட்டு,கோக் சாப்பிட்டுட்டு போக முடியாதுல்லயா?
அதுனால அவிக தங்களுக்கு பிடிச்ச ஆட்டத்தை , (ஒரு காலத்துல தாங்கள் விளையாடின ஆட்டத்தை ஆடற தங்களுக்கு பிடிச்ச ஆட்டக்காரன் கூட ட்ரெயினியா வந்து சேர்ந்துக்கறாங்க. வெறுமனே கம்பெனிக்காக குடிக்க ஆரம்பிச்சவன் கேவலம் ஒரு குவார்ட்டருக்காக சொந்த தங்கச்சிய/பெண்டாட்டிய கூட்டி கொடுக்கிற ஸ்டேஜுக்கு வரான்னா அவன் பின்னாடி ஒரு குடிச்சே செத்த  ஆவி வந்து சேர்ந்துக்குச்சுனு அர்த்தம் இது  ஒரு வ்யூ.


இன்னொரு வ்யூல பாருங்க. இந்த உலக மனிதர்களோட வாழ்க்கை கதைகளையெல்லாம் தொகுத்து கம்ப்யூட்டரைஸ் பண்ணி பார்த்தா மொத்தம் ஒரு
100 ஸ்க்ரீன் ப்ளே கிடைச்சா அதிகம். நாமெல்லாரும் என்ன நினைக்கிறோம்னா கடவுள் என் தலைல மட்டும் இந்த வாழ்க்கைய ஸ்பெசலா இப்படி எழுதிட்டானு நினைக்கிறோம் .அது தப்பு. இத்தீனி பேருக்கு தனி தனியே எழுதனும்னா ஆயிரம் கை இருந்தாலும் கஷ்டம் தான். அதனால கடவுள் என்னா பண்ணாருன்னா ஒரு நூறு ஒன்லைனை ஆஃப்செட்ல ப்ரிண்ட் பண்ணிட்டு காட்சி காட்சியா கட் பண்ணி கலந்து விட்டுட்டார். கைக்கு கிடைச்சத தூக்கி ஒட்டியனுப்பிர்ரார்.

நாமெல்லாரும் யார்,யாருக்காகவோ கடவுளால் எழுதப்பட்ட ஸ்க்ரீன் ப்ளேவோட துண்டு துணுக்குகள்ள நடிச்சிக்கிட்டிருக்கோம்.அசிங்கமாயில்லே.

இந்த உலக வாழ்க்கைல ஒன்னே ஒன்னுதான் முக்கியம் அது எண்ணம். அந்த எண்ணம் பிறப்பது ஆகாய வெளில மிதந்துகிட்டிருக்கிற  நம் முன்னோரின் எண்ண லைகள்ள இருந்துதான். அந்த எண்ண அலைகள்ள நல்ல எண்ணங்களும் இருக்கு. கெட்ட எண்ணங்களும் இருக்கு.  நாம எதை ஏத்துக்கறதுங்கற விஷயத்துல நமக்கு பூரண, சம்பூரண உரிமை இருக்கு.

அந்த எண்ணம்தான் நம்ம வாழ்க்கைய  நிர்ணயிக்குது, நம் உணர்வுகளை பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் சுரந்து வெளியிட்டு ரத்தத்தில் கலக்கச்செய்யும் ரசாயனங்கள் தான் கண்ட் ரோல் பண்ணுதுங்கறாய்ங்க. மேற்படி நாளமில்லா சுரப்பிகளையெல்லாம் கண்ட் ரோல் பண்ற கிங் ஆஃப் க்ளாண்ட்ஸ் ஹைப்போதலாமஸை கண்ட் ரோல் பண்றது எது தெரியுமா ? நம் எண்ணங்கள்.

அதனாலதான்

லுக் அப் எய்ம் ஹை - எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - ஃபைண்ட் எ வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே

இப்படி எத்தனையோ விஷயங்களை பெரியவுக சொல்லி வச்சிருக்காக. 

ஹ்ய்மன் லைஃபோட  போக்கை  டிசைட் பண்றது எண்ணம். அந்த எண்ணங்களும் ஏற்கெனவே வாழ்ந்து முடிஞ்ச நம்ம முன்னோருடையது. அதை செயல்படுத்த பின்னணிலருந்து உதவறதும் அவிக ஆத்மாக்களே.

நவ கிரக பிடியிலிருந்து விலகனும்னா நல்ல ஆத்மாக்கள் உங்களை சூழனும். அவிக வரணும்னா உங்கள்ள   நல்ல எண்ணம் இருக்கனும். அதை செயல்படுத்தனுங்கற துடிப்பு இருக்கனும். அந்த நல்ல எண்ணம் அண்டை வெளிலருந்துதான் கிடைக்கனும். கூடவே தீய எண்ணங்களும் அங்கே மிதந்து கிட்டுதான் இருக்கு. அந்த தீய எண்ணங்கள் நுழைஞ்சிரகூடாது. அதே சமயம் நல்ல எண்ணங்கள் நுழையனும்.

இதுக்கு என்ன பண்றது?

உங்க மைண்டை ட்யூன் பண்ணிக்கனும். ஆல் இண்டியா ரேடியோல கர்னாடக சங்கீதம்ன வுடனே படக்குனு   ஸ்டேஷன் மாத்திர்ரமில்லே அது மாதிரி தீய எண்ணங்கள் நுழைய ஆரம்பிக்கறச்ச படக்குனு ஸ்டேஷன் மாத்திரனும், முடியலையா நீங்களே  இடம் மாறனும். பாதி ராத்திரி சமயம் போலீஸ் டவுட் கேஸ்ல புடிச்சிருவானு பயமா ? படக்குனு ஒரு குளியல் போடுங்க. தண்ணி பஞ்சமா
உள்ளங்கைல கொஞ்சம் தண்ணிய எடுத்துக்கிட்டு கங்கா,காவேரி,சிந்து,பிரம்ம புத்ரான்னிட்டு தலைல தெளிச்சுக்கோங்க. பஸ்கி எடுங்க. என்ன வேணம்னா பண்ணுங்க. அந்த எண்ணத்தை மட்டும் நுழைய விடாதிங்க.

பி.கு:
கடந்த பதிவை படிச்சுட்டு ஒரு பார்ட்டி செரிக்காதவன் எடுத்த வாந்தி மாதிரி இருக்குனு மறுமொழி போட்டிருந்தாரு. எனக்கே தெரியுது இது ஃபார்ம்ல இல்லேன்னு.

ஆனா என்ன செய்ய இதெல்லாம் வைரமுத்து மாதிரி கார்ல, ஃப்ளாஸ்க்ல காஃபியோட பெரியார் பூங்காவுக்கு போய் எழுதுன காலணா சினிமா பாட்டு இல்லே.

இயற்கைங்கறதே முரண்பாடுகளின் மொத்த உருவம். எந்த ஒரு பாயிண்ட் ஆஃப் வ்யூவையும் விடக்கூடாதுங்கற அக்கறைல ஃபார்ம் பத்தி கவலைப்படாம, என் ஈகோவுக்கு என்ட்ரி குடுக்காம   மனம் போன போக்குல எழுதிக்கிட்டு போறேன். ஏன்னா சமுதாயம் மோல்ட் பண்ண ஈகோவை விட இதனால டச் பண்ண முடியாத சப் கான்ஷியஸ் மைண்டுக்கு இயற்கையோட நல்ல ஒத்திசைவு இருக்கு. அதுக்கு ஃபார்ம், வே ஆஃப் ப்ரசண்டேஷன்லாம் தெரியாது. அதனால தான் இந்த அளவுக்கு தேவரகசியங்களை கூட அசால்ட்டா டச் பண்ணமுடியுது..ஓகே உடு ஜூட். 

கலைஞர் திமுகவுக்கு 'ஜெ' வை தலைவியாக்கினால் என்ன?

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே,
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.

என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி  நேரத்துல பசங்க கொளுத்தற  பூத்தொட்டி  மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா  கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு  வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.

உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு.  அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே  அதோட உங்க உள்ளீடு .. காலி.

நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம்  காரணமா  தவற விட்டுட்ட பொது நலத்தை,  காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.

இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.

திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை.  நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.

சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு  பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.

தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே  ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.

இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"

இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து)  கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.

இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார்.   நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட  இறுதி பத்தில  நானே சொல்றேன்)

குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான  குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் ) 

மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!


உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.

(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல  விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)

9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.

கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல  பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.

ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.

பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும்  பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி   உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த  சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.

சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..

சரி இது கூட  ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..

ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.

நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.

மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல 

கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில  உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன)  பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,

பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும்  " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற  ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட

உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே  இத்தனை காலம் கட்டிக்காத்த


ஜெயலலிதாவை  திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?

குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத  குறளா ?  ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா? 


வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின்  இழி நிலை மாறுமல்லவா?

உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக  இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள்.  என்ன  சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன? 

Monday, April 26, 2010

ஜாதக பாதிப்பிலிருந்து 100% விடுதலை :2

இன்னா நைனா நம்ம முருகேசுக்கு இன்னா ஆச்சு. அப்பாறம் பார்க்கலாம்னிட்டு அப்டியே டீல்ல விட்டுருவாரு. இப்ப இன்னாடான்னா  பொறுப்பா  பாதில விட்ட விஷயத்தை கனிட்ன்யூ பண்றாருனு குஜிலி ஆயிட்டியா . ஓகே. ஆனால்  நம்ம கண்டு பிடிப்பான நவீன பரிகாரங்களை இங்கிலீஷ்ல போட்ட  நாள்ள இருந்து "மானா உட்டுடு . மானா உட்டுடு"ன்னு சொல்லாம சொல்றாப்ல சிம்ப்டம்ஸ் .அதுக்குனு ஜகா வாங்கிரமாட்டேன் ப்ரதர்..

ஆனால் ஒரு வேண்டு கோள். உங்க இஷ்ட தெய்வத்தை ப்ரே பண்ணுங்க. " சாமி !முருகேசன் சாருக்கு உடல் பலம்,மனோபலம்,பண பலத்தை கொடுங்க. அவர் கொடுக்கிற டிப்ஸ்  மூலமா  நாங்க இன்னும் ப்ரொடக்டிவா, இன்னும் இன்டிபெண்டன்டா, இன்னும் செல்ஃப்லெஸ்ஸா , இன்னும் ஸ்பிரிச்சுவலா மாற அருள் கொடு"ன்னு வேண்டிக்கோங்க.

புலம்பல்:

இன்னா பண்றது நைனா.. வயித்து பொயப்புக்கு,பொய்து போறதுக்கு  இன்னா எய்துனாலும் ஒன்னும் குடி முழுகி போறதில்லை. அட ஜோசியம் (பத்தி ) சொன்னா(எள்தினா) கூட பெரிசா  ஒன்னும் ஆவறதில்லப்பா. இந்த பரிகாரம், விடுதலைனு ஆரம்பிச்சா மாத்திரம் சுஸ்தாயிருதுபா. சிக்கன் குன்யா வந்தாப்ல கை,கால் வலி, தூக்கம் வர்ரதில்லை, அதேசமயம் மூதேவி அமுக்குவா. கட்டைல சுறு சுறுப்பே வராது. ரொட்டீன் லைஃபு பயங்கரமா அடி வாங்கிருது.ஆனாலும் விடறதாயில்லை இந்த சமாசாரத்தை ஃபுல்லா குடுத்துட்டுத்தான்  சாவேன்.

இந்த மொக்கையை எல்லாம் ஸ்க்ரால் பண்ணிராம படிச்சுட்டு இங்கே  வந்த  பார்ட்டிகளுக்கு  ஒரு நற்செய்தி. இங்கேருந்து இந்த புலம்பலுக்கு இடையில இடையில க்ளூஸ் கொடுத்துக்கிட்டே போறேன்.

விடுதலைக்கான டிப்ஸ்:
ஏழரை சனி,. மங்கு சனி,பொங்கு சனி,மரண சனி. பொங்குசனி, ஜன்ம சனி,கண்ட(கழுத்து) சனி, அர்தாஷ்டம சனி, பஞ்சம சனி, சப்தம சனினு விதவிதமா சொல்றாய்ங்களே. சனி என்னதான்  பண்றாரு தெரியுமா? அவர் ஆசனத்துக்கு காரகர். ஆசனம் என்பது மோட்டார் வண்டிக்கு சைலன்சர் மாதிரி. சைலன்சர் அடைச்சிக்கிட்டா பெட் ரோல், டீசல்  புகை வெளிய போகாது. வண்டியே ஸ்டார்ட் ஆகாது. இப்போ என்ன பண்ணனும்னா? சைலன்சர் அடைப்பை நீக்கனும். ஃப்யூச்சர்ல அடைப்பு ஏற்பட்டுராம பார்த்துக்கனும்.ஏற்கெனவே அடைப்பு காரணமா ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ரெக்டிஃபை பண்ணிக்கனும்.

எப்படி? எப்பீடி? எப்பூடி?

1.எனிமா எடுத்து வயிறை க்ளீன் பண்ணலாம்.
2.நிறைய தண்ணி குடிக்கலாம்.
3.சனி மலச்சிக்கலை மட்டுமில்லை, பைல்ஸ், நரம்பு பலகீனம் மாதிரி வியாதிகள்ளயும் கொண்டு விட்டுருவார் டேக் கேர். இதுக்கு சொல்யூஷன் கையில ஆயில் கறை,கெரசின் கறை படியற மாதிரி வேலை செய்யலாம். கு.ப் எக்ஸர்சைஸ் செய்யலாம்.
4.காலங்கார்த்தால எண்ணெய்,மசாலா, சீயா,சீச்சி ( நான் வெஜ்) அவாயிட் பண்ணலாம்.இட்லி, தோசை மாதிரி வெறுமனே வேக வச்ச ஐட்டம் தொட்டுக்க பால்,தயிர்
5.சமையல்ல  நல்லெண்ணை உபயோகிக்கலாம் ( சனிக்குரியது எள் அதுலருந்து தயாரிச்சது தான் நல்லெண்ணெய்) இது உடல் உஷ்ணத்தை தணிக்கும்.
6.சஃபாரி சூட் அணியலாம். வசதி,வாய்ப்பு உள்ளவர்கள் தில்லு துரைகள் காக்கி, நீலம்  போன்ற நிறங்களில்யூனிஃபார்ம் அணியலாம். ( எனக்கு ஜன்ம சனி இருந்த போது காக்கிச்சட்டை அணிந்தேன்)
7.தூசு படியற வேலைகள் செய்யலாம். ( ஒட்டடை அடிக்கிறது)
8.க்ளாஸ் ஃபோர் எம்ப்ளாயி வேலைகள் செய்யலாம். காலைல டீ,காஃபி போட்டு ஃபேமிலி மெம்பர்ஸுக்கு தரலாம். பெண்டாட்டிக்கு சமையல் ரூம்ல எடுபிடி வேலை செய்யலாம்.( கரைச்சு குடுக்கிறது,அரைச்சி கொடுக்கிறது.
9.சனி பிடிச்சாலோ/கேது தசா புக்தி நடந்தாலோ  நீங்க போலீஸ் ஸ்டேஷன்,ஆஸ்பத்திரி,சுடுகாடு,கோர்ட் ஆகிய பிரதேசங்களுக்கு போய் தான் ஆகனும். யாராச்சு மேற்படி ஸ்தலங்களுக்கு லிஃப்ட் கேட்டா கொடுக்கலாம். சாவு விழுந்தால் சுடுகாடு வரை போய் வரலாம். நோயாளிகளுக்கு துணையா ஆஸ்பத்திரி போகலாம்.
10. சனிக்கு கருப்பு நிற பொருட்கள் மேல கவர்ச்சி அதிகம். ஸோ டை போடற வயசாயிருந்தா டை போடாதிங்க. இளமைல தலை முடி கருப்பா இருக்கிறதால தான் முதல்  சனியான மங்கு சனி  போட் கழட்டுது . ரெண்டாவது சனில தலைமுடி வெளுக்க ஆரம்பிச்சிர்ரதால பொங்கு சனி பெட்டர்ங்கறாங்க. மூனாவது சனி பெரிசா எஃபெக்ட் தராதுங்கறதுக்கு காரணம் கூட இதுதான்.

டை  போட்டுத்தான் ஆகனும்னா  தலைக்கு  நீல நிற  தொப்பி அணியுங்கள் (இப்போ கோடை வேற கொளுத்துதுல்ல . மேச் ஆயிரும். தொப்பிய லைட்  ப்ளூ கலர்ல செலக்ட் பண்ணுங்க ..வெயிலுக்கும் நல்லது)). ஹேண்ட் பை ஹேண்ட் கருப்பு நிற பொருட்களை அவாய்ட் பண்ணுங்க. அதுக்கு பதில் ப்ளூ கலர் திங்க்ஸ் உபயோகியுங்க.

11.சனிக்கு உரிய சுவை கசப்பு. ஸோ அகத்தி கீரை,பாகற்காய் மாதிரி கசப்பு ஐட்டங்களை சாப்பாட்ல சேர்த்துக்கங்க.

இந்தலிஸ்ட் ரொம்ப பெரிசுப்பா.. ச்சொம்மா அப்படி அப்ளை பண்ணி பாருங்க. உங்க அனுபவத்தை எழுதுங்க .இன்னொரு தாட்டி  டீட்டெயில்டா மீள் பதிவு போட்ருவம்

புலம்பல் தொடர்கிறது:

நவகிரக,ஜாதக பாதிப்புலருந்து வெளிவர,விடுதலை பெற டிப்ஸை அள்ளி வழங்கற இந்த விஷயத்துல நமக்கு ஸ்ரீராமானுஜர்தான் இன்ஸ்பிரேஷன்.அவர் தனக்கு கிடைச்ச அஷ்டாட்சரி மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணாய) கோபுர உச்சில ஏறி கூவிட்டு குதிச்சுர்ரார்.( மேற்படி மந்திரத்தை கத்துக்கொடுத்த குரு இதை சூத்திரப்பசங்களுக்கு குடுத்துராதே நரகத்துக்கு போவேனு வார்ன் பண்றார். இவரோ தத் இத்தினி பேரு ஸ்வர்கம் போறதுக்காக நான் ஒருத்தன் நரகத்துக்கு போனா என்னனு மேற்படி காரியத்தை பண்ணிர்ரார்.)

நம்மளுதும் அதேகேஸ்தான். நம்ம ஜாதக மகிமை+ பஞ்சாட்சரி ஜபம்+ராம நாம ஜபம்+ ஹ்ரீங்கார மந்திர ஜபம் + 20 வருச நாயடி பலனா கிடைச்ச இந்த நவ கிரக பாதிப்பிலிருந்து விடுதலை சப்ஜெக்டை இப்படி  போட்டு உடைக்கிறதுல  நிறைய பார்ட்டிங்களுக்கு அப்ஜெக்சன் இருக்கு.( மூவர்,தேவர்)  அதுக்கான சிம்ப்டம்ஸ் எல்லாம் நல்லாவே தெரியுது.

தாளி ..விவேகானந்தரே சொல்லியிருக்காரு.. தன்னை சேர்ந்தவங்க முன்னேற்றத்துக்கு பாடுபடற முயற்சில நம்மளோட ஆன்மீக முன்னேற்றம் லேட் ஆனா கூட டொண்ட் கேர்

இத்தினிக்கும் இந்த மாதிரி தேவ ரகசியத்தை எல்லாம் எள்தறப்ப  ஆத்தாள பயங்கரமா கன்வின்ஸ் பண்ணிட்டுத்தான் எள்தறேன்.

ஆத்தா.. ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னாப்ல நீ தாய்புலி, நான் குட்டிப்புலி.  நான் உனுக்கு பயந்துகினு கடந்தா அது உனுக்குதானே அகுமானம். ஒன்னோட இதர பிள்ளை,பொண்ணுக எல்லாம் தங்களை ஆட்டுக்குட்டிங்கற நினைப்புல இருக்காக. அவிகளோட என்னைய சேர்த்து கணக்குபோடாதே. எனக்கு கொஞ்சம் சைடு கொடுத்தா அவிக எல்லாரையும்  யப்பா யம்மா நீங்களும் புலிங்கதான். ஆட்டுக்குட்டி இல்லப்பானு ருசு பண்ணிர்ரன்.

ஒனக்கு "சர்வ ஸ்வந்த்ராயை நமஹ"ன்னு ஒரு ஸ்துதி கூட கீதுல்லே. சுகந்திரமானவளா இருக்கிற நீ படைச்ச மன்சா மாத்ரம் இப்படி கெரகங்க பிடில சிக்கி தவிக்கிறது நல்லாவா கீது. இம்மாத்தூண்டு விசியம் தெரியாம சனம் இப்பிடி கட்ந்து அல்லாடுதேனு ஒரு ரூட்டு போட்டுக்குடுக்கலாம் பார்த்தா ரொம்பத்தான் அழும்பு பண்றே..

சரி சரி  நீ இதுக்கு எதிரா சொல்ல வர்ர பாயிண்டு புரியுது. கெட்டவனுக்கு கெரகம் கெட்டுப்போற  நேரம்னு வர்ரப்ப தான் நல்லவங்களுக்கு  ரிலீஃப் கிடைக்குது. தர்மத்து மேலயே நம்பிக்கை வருது.  நீ பாட்டுக்கு சுப்ரமணிய பாரதி கணக்கா விடுதலை விடுதலை அல்லாத்துக்கும் விடுதலைனு துள்ளி குதிச்சா எப்படின்னு தானே கேழ்க்கற.

ஆத்தா உனக்கு தெரியாதது இன்னா கீது சொல்லு. விதி வழியே மதின்னுவான். அப்பால பார்த்தா மதியால விதிய வெல்லலாம்னுவான். இன்னொரு ஸ்டெப்பு மின்னாலே போய் இன்னாதான் சொல்றபான்னா விதி வழி விட்டு விலகினா மதி வேலை செய்யும்னுவான்.

நான் பாட்டுக்கு ஜாதக பாதிப்புலருந்து விடுதலைன்னிட்டு டைப்படிச்சு ப்ளாக்ல போட்ட மாத்திரத்துல ஒலக மக்க எல்லாம் கெரகங்க பிடிலருந்து ரிலீஸாயிர போறாங்களா. ஒரு ம...........ரும் கிடையாது. மிஞ்சி மிஞ்சி போனா 230 பேர் படிப்பாங்கோ. அதுல பட்டா சூப்பரா கீதுபா இதை எப்டினா ஃபாலோ பண்ணிரனும்னு 23 பேர் நினைப்பாங்கோ. நாலு நாள் கழிச்சு அவிகளை  இத்த பத்தி கேட்டா அப்டியா நான் கூட பட்சேன்பா ஆனா மேட்டர் கியாபகம் இல்லேனுவாங்க.

இதுக்கு போயி பயந்துகினு என்னை சுஸ்தாக்கிறியே. இன்னா..து நீ இன்னா வேணா எள்திட்டு போ.. அதை எவனும் ஃபாலோ பண்ணமுடியாம நான் பண்றேங்கறியா. சரி சரி உன்னிஷ்டம். ஒன் ஸ்டெப் அட் ஒன் மூவ்மெண்ட். என்னை மட்டும் பேஸ்தடிக்க வச்சிராத. சனத்துக்கு நம்ம கிட்டே கொஞ்சம் வேலை கீது தாயி. என் மண்டைல கீறதெல்லாம் காயித்துல வச்சி, காய்த்தல கீரதெல்லாம் ப்ளாக்ல வச்சிட்டா அப்பாறம் நீ எப்டி விட்றியோ அப்டி ..ஓகேவா உடு ஜூட்டு
விடுதலைக்கான டிப்ஸ்:
சரிபா விசயத்துக்கு வரேன்.போன தபா(ல்)ல இன்னா சொன்னேன்?  கெரகம் ஆகாசத்துல மட்டுமில்லே நம்ப பாடிலயும் கீது. அங்கே கீர சந்திரனை ஒன்னும் பண்ணமுடியாது. ஆனால் இங்கே நம்ப பாடில கீர வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷனை  மாத்த முடியும்.இந்த பாடில கீர தண்ணியும், கடலோட தண்ணியும் ஒரே கெமிக்கல் காம்பினேஷன்ல கீதாம்பா. அதனாலதான் பவுர்ணமி அன்னைக்கு சந்திரன் சமுத்திரதண்ணிய ஐஸ்காந்தம் இரும்பு தூளை இசிக்கிறா மாரி இசிக்கிறானாம். பாடில 70% இந்த வாட்டர் கண்டென்ட் தான் கீது.

இந்த கெமிக்கல் காம்பினேஷனை எப்டி மாத்தறது? மாத்திபுட்டா வேற எதுனா பிரச்சினை வருமா?

சரக்கடிக்கறப்போ ஒரு பார்ட்டி மூனு அவுன்ஸுக்கு ஒரு சோடா கலந்துக்கறான். இன்னொரு பார்ட்டி ஆறு அவுன்ஸுக்கு ச்சொம்மா சோடாவ காம்ச்சிட்டு உள்ள தள்ளிர்ரான். ரண்டு பேரும்  ஒரே சரக்குதான் அடிக்கிறான். ஆனால் டைல்யூட் பண்ணி அட்சா லிவர் இன்னொரு அஞ்சாறு வருசத்துக்கு தாங்கும். ராவா அட்சா சீக்கிரம் பட்த்துக்கும் அதான் வித்யாசம்.

இதே ஃபார்முலாவ அப்ளை பண்ணா ஹ்யூமன் பாடி வாட்டர் கண்டென்ட்டை கூட டைல்யூட் பண்ண முடியும். நீ எந்தளவுக்கு டைல்யூட் பண்றியோ அந்த அளவுக்கு சந்திரனோட எஃபெக்டை குறைக்க முடியும்.( கடல் நீருக்கு சமமான கெமிக்கல் காம்பினேஷன் மாறிட்டா சந்திரனால நம்ம பாடில இருக்கிற வாட்டர் கண்டென்டை இன்ஃப்ளுயன்ஸ் பண்ண முடியாதுப்பா.

இந்த சந்திரந்தாம்பா நம்ம மனசை கச்சா முச்சானு கலைச்சி உட்டுட்டு டீச்சருக்கு லவ் லெட்டர் குடுக்க வைக்கிறான். ஃபீஸ் கட்டறதுக்கு  குட்த பணத்துல லவ்வுக்கு ஃபலூடா வாங்கி குடுக்க வைக்கிறான்.

இந்த ஆள் பிடில இருந்து வெளிய வந்தா போதும் . மன்சாளுக்கு வர்ர பிரச்சினைல முக்கா வாசி ஃபணாலாயாரும். எப்டிங்கறியா சனத்தோட பிரச்சினைல முக்காவாசி சைக்கலாஜிக்கல் தான்.

ஸ்தூலமான பிரச்சினைகளை எல்லாம் தூர தள்ளிட்டு ,ப்ராக்டிக்கல் சொல்யூஷனுக்கு முயற்சி பண்றத விட்டுட்டு சாமியார்ங்க பின்னாடி பூட்றது, கட்சி கொடிய புட்சிக்குனு கோஷம் போடறது,ஆகாச கோட்டை கட்டறது, மனக்கோட்டை கட்டறது  இதுக்கெல்லாம் சந்திரன் தான் காரணம்.

அது சரிபா வாட்டர் கன்டெண்டை டைல்யூட் பண்றது எப்படி? முதல் கட்டமா அதுல இருக்கிற  சுத்த தண்ணிரோட சதவீதத்தை அதிகரிக்கனும்.அது எப்படி? நிறைய தண்ணி குடிக்கனும். வாட்டர் தெரஃபிங்கறாங்களே அதுமாதிரி. இதே தெரஃபிய உண்ணாவிரதம் இருந்துகிட்டு எடுத்துக்கிட்டா இன்னும் சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்.
(முதல்ல உங்க ஃபேமிலி டாக்டரை கன்சல்ட் பண்ணீட்டு அப்புறமா இதுல இறங்குங்க நைனா.. ஜாஸ்தி கம்மியாயிர போவுது)

 கையோட கையா   மறு நாள் காலைல  ஒரு செம்பு  வென்னீர்ல ரெண்டு டீ ஸ்பூன்  சோத்து உப்பை போட்டு கரைய விட்டு  வெறும் வயித்துல குடிச்சா அதான் எனிமா . நீங்க அடிஷ்னலா உள்ளாற அனுப்பின உப்பு உடம்புக்குள்ள போய் சேருது.  உடம்பு ஏற்கெனவே   சேர்த்துவச்சிருக்கிற வித விதமான உப்புகளோட  ஸ்டாக் லெவல் அதிகமாகுது. இதை சமப்படுத்த வயித்தை கலக்கி கூடுதலா சேர்ந்த உப்பை வெளியேத்தற முயற்சில இறங்குது.  ஒன்னு ரெண்டு தடவை மோஷன் ஆகும். பயபடாதிங்கோ.. என்ன ரத்த மாமிசமா போகுது மஷ்டெல்லாம் கழியுது. கழியட்டும். உடம்பெல்லாம் துவைச்சி போட்ட துணியாட்டம் இருக்கும். இருக்கட்டும். உடனே சுஸ்தா கீது ஆட்டுக்கால் பாயாவோட அரை டஜன் தோசைய உள்ள தள்ளுவோம்னு கிளம்பிராதிங்க. சவாலே சமாளிதான்.

காரம்,மணம்,குணம் நிறைஞ்ச வாட்டர் கண்டென்ட் தான் உங்களை எப்படியெல்லாமோ ஆட்டி வச்சிருது. இந்த உண்ணாவிரதம், வாட்டர் தெரஃபி, எனிமா மூலமா அதுல இருக்கிற  காரம்,மணம்,குணம்லாம் ஆட்டோமேட்டிக்கா குறைஞ்சிரும்.  ஆமா இதெல்லாம் குறைஞ்சு போயிட்டா எதுனா பிரச்சினை வருமானு கேட்கிறிங்க அப்டிதானே.

வராது குரூ..! இந்த உடம்போட நேச்சர் அப்படி. இது சுடாத  களி மண் பொம்மை மாதிரி. கொஞ்சம் முயற்சி பண்ணா இதை நம்ம விருப்பப்படி ஷேப் அப் பண்ணிக்கலாம் மறுபடி ஆல்க்கஹாலையே உதாரணத்துக்கு எடுத்துக்குவம். அடிப்படைல ஹ்யூமன் பாடில ஆல்க்கஹால் இருக்கா இல்லியா தெரியலை. (லாஜிக் படி பார்த்தா இருக்கனும்.கு.ப மிக மிக குறைஞ்ச அளவுல. ஏன்னா ஏற்கெனவே இருக்கிற ஐட்டத்தை வெளியயிருந்து அனுப்பினாதான்  பாடி ஏத்துக்கும். இல்லனா அலர்ஜிட்டிக் ஆயிரும்)

லாலா பார்ட்டிங்க என்ன பண்றாய்ங்க. வெளியயிருந்து குவார்ட்டர் குவார்ட்டரா உள்ள விடறாங்க. ரத்தத்துல ஆல்க்கஹால் பர்சண்டேஜ் அதிகமாகுது. ஆனால் அது ஸ்திரமா இருக்குதா இல்லே. லிவர்,கிட்னி எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு ஆல்க்கஹாலை வெளியேத்துதுங்க. ப்ளட்லஆல்க்கஹால் பர்சண்டேஜ் குறைஞ்சதும் பார்ட்டிக்கு மறுபடி குடிக்கனுங்கற எண்ணம் வருது. குடிக்கலன்னா கை கால் எல்லாம் உதறுது,தொண்டையெல்லாம் ட்ரை ஆயிருது. குடி அடிமைகள் விஷயத்துலன்னா இப்ப குடிக்கலன்னா செத்தே போயிருவமோங்கற அளவுக்கு பயம்,திகில் வந்துருது.  தன்னை தடுக்கிறவங்க மேல கொலை  வெறி வருது. குவார்ட்டர் வாங்க பணம் புரட்ட பெண்டாட்டியையே நாயடி பேயடி அடிக்க வைக்குது.

ஆனால் உண்மை நிலவரம் என்ன? ப்ளட்ல ஆல்க்கஹால் பர்சண்டேஜை அதிகரிச்சது இவன். அதை குறைக்கிறது சரீர தர்மம். மறுபடி அதை அதிகப்படுத்தலன்னா செத்து போயிருவானா ஊஹூம்.

இதே ஃபார்முலாதான் வாட்டர் கன்டென்டோட கெமிக்கல் காம்பினேஷன் விஷயத்துலயும் ஒர்க் அவுட் ஆகுது.  அதனோட அடர்த்திய கூட்டினது நீங்க.
போதிய தண்ணீர் குடிக்காம, செரிக்காம, பசிக்காம,  காரம்,மணம்,குணம் நிறைஞ்ச உணவுகளை உள்ளாற தள்ளி, மலச்சிக்கல் இத்யாதிய கண்டுக்காம விட்டு வாட்டர் கன்டென்டை நாறடிச்சது நாம. மலச்சிக்கல்ல இருக்கிற சிக்கல் என்னடான்னா. வெளியேற்றப்படாத மலத்துல உள்ள நீர்சத்தை உடம்பு மறுபடி க்ராஸ்ப் பண்ணிக்கிறது.அது என்ன அமுதமாவா இருக்கும்?

அதனாலதான் தகிரியமா சொல்றேன்.  எந்த பிரச்சினைக்கும் மனமிருந்தால் மார்கமுண்டு. அந்த மனமே பிரச்சினையாயிருந்தா என்ன செய்ய ? அதனால முதல்ல சந்திரனோட இன்ஃப்ளுயன்ஸ்லருந்து வெளிய வரனும்.

என்னையே எடுத்துக்கங்க .

1987 ல சனி என் ராசியான சிம்மராசிக்கு அஞ்சாவது இடத்துக்கு வந்தாரு. அந்த ரெண்டரை வருஷதுல இமேஜுக்கு ஆன டேமேஜை இன்னி வரைக்கும் கூட கம்ப்ளீட்டா பேலன்ஸ் பண்ண முடியலை. ஆனால் இப்ப பாருங்க போன ரெண்டரை வருஷம் ஜன்ம சனி. இப்போ 2009  செப்டம்பர் 16 லருந்து வாக்குல சனி ..சிம்ம ராசியெல்லாம் நாறிக்கிடக்கு. ஆனால் நான் மட்டும் ஜாலாக்கா சைடு கொடுத்துக்கிட்டே காலத்தை கடத்தறேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னா?

1994 ல அப்பா காலி. என்னதான் இன்டர் காஸ்ட் மேரேஜ் பண்ணிக்கிட்டு தனியே அவதி பட்டாலும்  ரெண்டாமறம் தெரியாம ஏறத்தள்ளிக்கிட்டிருந்த பார்ட்டி காலியானதுமே பக்கு ஆயிட்டாலும் ,சரி சொத்திருக்கில்லயா பங்கு தராத போயிருவானுகளானு தைரியமா இருந்தேன். பப்பு வேகலை.

மொதல்ல தெரிஞ்சு வச்சிருந்த ஜோதிஷம் உதவியால  காலகதி தெரிஞ்சாலும், சம்பவ கண்ணிகளோட  முடிவு பெரு  வெற்றியில முடியறது புத்திக்கு உறைச்சாலும், என் முயற்சியே, வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டர் தனமாய் எண்ணி தவிக்கும் தன்மையே வெற்றியை எட்டிப்போக செய்வதை உண்ர முடிஞ்சாலும்   ஈகோ ஒப்புத்துக்கலை. தோல்வி வெறியை கிளப்ப அதை ஒப்புத்துக்க ஈகோ முன் வராம யுத்தம், வெற்றி வேல் ,வீர வேல்னு முழங்கி ஜீரோ பேலன்ஸுக்கு வந்துட்டன்.

ஆனால் எந்த குருவும் கத்து தராத வித்தைகளை ஏழ்மை கத்து கொடுத்தது.  இந்த படைப்பில் நான் தனியோ தனியானவன் என்ற நிஜம் உறைத்தது. என் சர்வைவலே கேள்வியாயிட்ட க்ஷணத்துல உயிர் வாழும் இச்சை பல ஜாலக்குகளை கற்றுத்தந்தது.

அன்றாட பிரச்சினைகள் காரணமா அசலான பிரச்சினைக்கு லீவு விட்டது, நடக்கவிருந்ததை அனுமதிச்சது  2400 சதுர அடி வீடு இருந்தும் ஓட்டை குடிசைல வாழ்ந்தது. இதெல்லாம் கிரகங்களோட பாதிப்பின் வீரியத்தை வெகுவா குறைச்சிட்டதால அம்பேல் வச்சுட்டு  ஆட்டத்துல ஒதுங்கிட்டதால, வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சதால  நிறைய புரிஞ்சிக்கிட்டேன்.

1997லருந்து ப்ரேக் ஃபாஸ்டை கட் பண்ணிட்டேன்.  காரம்,சாரம்,மணம்,குணம் நிறைஞ்ச சமையலுக்கு பேர் போன வன்னியர் குலத்து நங்கையான என் மனைவிக்கு உப்பு ,காரம்,புளிப்பு குறைவா போட்டு சமைக்க கத்துக்கொடுத்தேன். மேல் தீனி, நொறுக்கு தீனி,ஜங்க் ஃபுட், டின் ஃபுட் இதெல்லாம் பக்கத்துல  சேர்க்கவிடறதில்லை.

( அன்னைக்கு நான் ஏழை தான்.ஆனால் பத்து நாளைக்கு ஒரு தரமாச்சும் பம்பர் லாட்டரி மாதிரி காசு கொட்டும். ஏக் தின் கா சுல்தான் மாதிரி வாழ்ந்து மறு நாள்ளருந்து மறுபடி பழைய குருடிகதவை திறடிவாழ்க்கைக்கு போயிருக்கலாம். ஆனால் ஒட்டகம் கணக்கா மாறிட்டேன்)

என் ஈகோவுக்கு அடிக்கு  மேல அடி. தியாகய்யர்  உஞ்ச விருத்தி பண்ண மாதிரி, ஷீர்டி சாயிபாபா பிச்சை எடுத்த மாதிரி ஆயிருச்சு கதை. பசி பட்டினி,சொறி சிரங்கு எல்லாம் பார்த்தாச்சு. ஆனால் உடல் எவ்வளவுக்கெவ்வளவு  தேஞ்சதோ அந்த  அளவுக்கு மூளை  தீட்டப்பட்டுருச்சு.  கையில ஜோதிஷ ஞானம்  இருந்தது, தர்கத்துக்கு ஒத்துவராத சம்பவங்களா சரமாரியா நடந்தது. ரெண்டையும் பொன் வறுவலா வறுத்து அரைச்சி ஓ சாரி சாரி ரெண்டையும் அப்சர்வ் பண்ணி அனலைஸ் பண்ணினதுல ஒரு சில  தேவரகசியங்கள்  வெளிப்பட்டுது.
தேவ ரகசியம்:

அது என்னடான்னா காலம்ங்கறது   ஒரு பைப் லைன். இதுல  நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ  பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)

அதே மாதிரி பைப்லைன்ல  முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).

சிம்பிளா சொன்னா  ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான்  முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை

விடுதலைக்கு முக்கிய டிப்:
கொஞ்சம் சூட்சும புத்தியோட யோசிச்சா சூழ் நிலை நம்மை ஒரு புள்ளிய நோக்கி அழுத்தி தள்றத நம்மால புரிஞ்சிக்க முடியும். அந்த புள்ளிய நோக்கி  ஏதோ ஒரு சக்தியால தள்ளப்படறத விட அந்த புள்ளி எதுன்னு ஜட்ஜ் பண்ணி கொஞ்சம் முன் கூட்டியெ நாமே ஒழுங்கு மரியாதையா போயிரலாம். அப்படி போகவும் முடியும்.  இது இறைவனின் ஆணைக்கு கீழ்படியறதா ஆகுமே தவிர புரட்சி ஒன்னும் கிடையாது. கிரக பாதிப்பிலிருந்து விடுபட முக்கிய டிப் இதுதான்.

சொந்த வியாபாரத்துல நஷ்டத்துக்கு மேல நஷ்டம் வருது, தமிழ்சினிமால ஹீரோவோட அப்பாவுக்கு வர்ர மாதிரி போட் கழட்டுது. இந்த சம்பவங்கள் எந்த புள்ளிய நோக்கி அழுத்தி தள்ளுதுனு சிந்திக்க மூளை கூட தேவையில்லை. கிட்னி போதும்.

இந்த சந்தர்ப்பத்துல என்ன பண்ணனும் ? படக்குனு எல்லாத்தயும் வைண்ட் அப் பண்ணிட்டு ப்ளே கிரவுண்டை விட்டு வெளிய வந்துரனும். வேணம்னா அங்கயே பாப் கார்ன் விக்கலாம். புக்கியாகலாம். அம்பயராகலாம். அட உள்ளாற சமாளிக்க முடியாதுன்னா சைக்கிள் ஸ்டாண்ட் காண்ட் ராக்டரா மாறிடலாம். அதை விட்டுட்டு பேட்ஸ் மேனாதான் இருப்பேன்னா டக் அவுட் ஆக வேண்டியதுதான்.

தானா நடக்கறது நல்லதோ ,கெட்டதோ லாங் ரன்ல நமக்கு நல்லதாவே முடியும்.   நாமா அலைஞ்சு பறை சாத்தி நடக்க வைக்கிறோமே அதான் ஆப்பா முடியுது.
தோல்வி உறுதிங்கறப்போ எதிரிக்கு தோல்விய பரிசா கொடுத்துர்ரது பெட்டரில்லயா?

சரி ரொம்ப தத்துவார்த்தமா போயிட்டம் . அடுத்த பதிவுல ஒவ்வொரு கிரகத்தோட பிடியிலிருந்து விலக என்ன செய்யனும், ஜாதகத்துல உள்ள  ஒவ்வொரு பாவத்தோட எஃபெக்டலருந்து வெளிய வர என்ன செய்யனுங்கற விஷயத்தை எல்லாம் பார்ப்போம்.