Showing posts with label Jayalalitha. Show all posts
Showing posts with label Jayalalitha. Show all posts

Saturday, January 25, 2014

புரட்சிதலைவிக்கு ஒரு பகிரங்க கடிதம்

மாண்புமிகு புரட்சி தலைவி அவர்களுக்கு,
அம்மா !
சட்டமன்ற தேர்தல்களில் வெற்றிக்காக வாழ்வா சாவா என்ற தீவிரத்துடன் போராடிய நீங்கள் வெற்றிக்கு பிறகு அந்த வெற்றியை வழங்கிய சாமானிய தொண்டர்களையும், மக்களையும்,மக்கள் நலனையும் எப்படி எல்லாம்   புறக்கணித்தீர்கள்? ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.

அல்லும் பகலும் "உழைத்து " கடந்த ஆட்சியே மேல் என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கும் நிலையில் - இருப்பதை விட்டு பறப்பதற்கு பரபரக்கிறீர்கள். இதற்கு உங்கள் "எண்ண ஓட்டம்"புரிந்த அடிப்பொடிகளும் தூபம் போட்டு வரும் வேளையில்  - பெங்களூர் வழக்கு தலை மேல் கத்தியாக தொங்கும் இந்த வேளையில்

மத்திய அரசுடனான மோதல் போக்கால் -ஈழ ஆதரவு போக்கால் கிடைத்த மைலேஜையும் முள்ளி வாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளி இழந்து விட்ட இந்த நிலையில் .. இந்த பகிரங்க கடிதத்தை எழுதுகிறேன். அதற்கு முன் என்னை பற்றி சில வரிகள்.

அடிப்படையில் நான் காங்கிரஸ் எதிர்ப்பாளன் .திமுக அனுதாபி. ஆனால் எங்கள் மானிலத்தில் ஒய்.எஸ்.ஆர் அவர்களின் சக்தி வாய்ந்த தலைமை காங்கிரஸ் எதிர்ப்பை கொஞ்சம் மழுங்க செய்துவிட்டது வேறு விஷயம்.

அதே போல் கலைஞரின் குடும்ப பாசம், காங்கிரசுடனான அவரது தன்மானம் சுயமரியாதையற்ற நெடு நாள் கூட்டு,ஈழத்தமிழர்கள் பால் அவர் காட்டிய அலட்சியம் ஆகியன அவரையும் காட்டமாக விமர்சிக்க செய்ய வைத்தது வேறு விஷயம்.

தற்போதைய அவரது பி.ஜே.பி -காங்கிரஸ் எதிர்ப்பு நிலை என் மனதை கொஞ்சம் இளகச்செய்திருப்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். ( ஆனால் இவர் இந்த நிலையில் எத்தனை நாள் தொடர்வார் என்பதிலும் சந்தேகம் இருக்கிறது.)

இதை எல்லாம் நான் குறிப்பிட காரணம் நான் உங்கள் ஜால்ரா அல்ல என்பதை முதற்கண் தெளிவுப்படுத்தி விடத்தான்.

சமீபத்தில் ராஜ்ய சபா வேட்பாளர்களில் ஒருவரை மாற்றி அறிவித்துள்ளீர்கள். இந்த மாற்றங்களை  நான்  மறுபடி மறுபடி பார்க்கிறேன்.

என் ஊகம் என்னவென்றால் நீங்கள் தனித்தீவாக்கப்பட்டிருக்கிறீர்கள். இருட்டில் வைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களை சுற்றி சுய நலமிகளும் -துரோகிகளும் மட்டுமே இருக்கிறார்கள்.

அதே நேரம் இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்கள்/அமைப்புகள் உங்களுக்கு  முரண் பட்ட செய்திகளை தந்து கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு பரிதாப நிலை.

உங்கள் முன் உங்களுக்கு  மீண்டும் மீண்டும் மண்டியிடும்   நபர்கள் உங்களுக்கு பின் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்டு உங்களுக்காக அனுதாபம் கொண்டேன்.

நீங்கள் என்ன மாதிரியான கையறு நிலைகளை சந்தித்து மீண்டு வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். நதியை தேடி வந்த கடலுக்கு பிறகும் - எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகும் -சேவல் புறா எப்பிசோடுக்கு பிறகும் - ஆட்சியை இழந்த பிறகும் - ஊழல் வழக்குகள் பாய்ந்த போதும் எத்தனையோ எத்தனையோ டிசாஸ்டர்ஸ். அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளீர்கள்.

இதற்கெல்லாம் உங்கள்  தகுதிகள் திறமைகளை விட உங்கள் அரசியல் எதிரிகளின் தகுதியின்மையும்,திறமையின்மையுமே காரணங்களாக அமைந்துள்ளன.

ஆனால் நீங்களும் -உங்களுக்கு லாவணி பாடுபவர்களும் இந்த யதார்த்தத்தை முழுக்க மறந்து விட்டாற்போல் இருக்கிறது.

அவர்கள்  உங்களுக்கு லட்சார்ச்சனை செய்வதும். . நீங்கள் அவற்றை ரசிப்பதும்.. பார்வையாளர்களை தற்காலிக மூல நோயாளிகளாக மாற்றிவிடுகின்றன.

உங்களுக்கு பிரதமர் ஆகும் தகுதி இருக்கிறதோ? இல்லையோ? வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ?  மூன்றாம் நபராகிய நான் - எவ்வித லாப நோக்கும் இல்லாமல் பிரதமர் பதவிக்கான களத்தில் உங்கள் கைவாளாக  -குறைந்த பட்சம் கேடயமாக சுழல வல்ல ஒரு ஆயுதத்தை சபா நாயகர் அலுவலகத்துக்கு அனுப்பினேன்.
ஆம்.. அந்த வாள்  இந்தியாவின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல எனது திட்டம். .

1986 முதல் 1997 வரையிலான எனது உழைப்பில் தீட்டப்பட்ட திட்டம்.
அடுத்து என் வாழ்விலான 7 வருடங்களை தின்று விட்ட திட்டம். என்னை வறுமைக்கும் -பசிக்கும் தின்ன கொடுத்த திட்டம். அன்றைய ஆந்திர முதல்வருடன் என்னை போராட செய்த திட்டம்.
அதனை அதுவும் 234 பிரதிகளை  கூரியரில் தான்  அனுப்பினேன்.(சாதா தபாலில் அல்ல) இதற்கெல்லாம் ஒரு ரெஜிஸ்டர் போல ஏதாவது இருக்கலாம்.

அது குறித்த என் கோரிக்கைகள் மூன்று
1.மேற்படி பிரதிகளை .சட்டமன்றத்தில்  அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் கிடைக்க செய்தல்.அது குறித்து சிறிய விவாதம் நடக்குமாறு செய்தல்
2.ஒரு தீர்மானம் போடப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்புதல்
3.உங்கள்  பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் சேர்த்தல்

அரசியல் சாசனம் அந்த பதவிக்கு எத்தனை எத்தனை அதிகாரங்களை அள்ளி வழங்கியிருந்தாலும் சபா நாயகர் என்பவர் உங்கள் வீட்டுகொலு பொம்மை.
ஆனால் அந்த கொலு பொம்மைக்கு உங்கள் மீது எத்தனை அக்கறை என்றால் 2013 மார்ச்சில் அனுப்பப்பட்ட 234 பிரதிகள் பற்றிய தகவல் கூட தங்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.எம்.எல்.ஏ க்களுக்கு வழங்கப்படவில்லை. விவாதம்? தீர்மானம் ..உங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும் படவில்லை.

இது போன்ற பொம்மைகளைத்தான் இன்னும் உங்கள் கொலுவில் வைத்திருக்கிறீர்கள் என்பதும்அந்த பிரதிகளை சபா நாயகர் அலுவலகத்து  அதிகாரி ஒருவர் தீவிரமாக அடைகாத்து வருகிறார் என்பது மட்டும் புரிகிறது.
சரி ஒழியட்டும் .. இந்த சங்கதியை உங்கள் தனிப்பிரிவுக்கு அனுப்புகிறேன்.அவர்கள் மேல் நடவடிக்கைக்காக "கட்சி அலுவலத்துக்கு அனுப்புகிறார்கள்"

கட்சி அலுவலகமோ பொறுப்பாக யாரிடமோ கொடுத்து அடை காக்க செய்திருக்கிறது. சீக்கிரமே குஞ்சு வெளிவரும் போல.

இந்த சங்கதியை தங்களை நேரில் சந்திக்கும் "வாய்ப்பு" பெற்ற வீணை காயத்ரி அவர்களுக்கு தெரிவிக்கிறேன். அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை.
சரி ..அம்மா சிங்கம். அம்மாவின் குகையில் சிங்கங்களுக்கு மட்டுமே இடம் இருக்கும்.  அம்மாவின் இல்ல முகவரிக்கு அனுப்பினால் அம்மா பார்வைக்கு நிச்சயம் போகும்  ஏன் என்றால் அங்கு விசுவாசிகளே இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் 234 பிரதிகளை அதே கோரிக்கைகளுடன் தங்கள் இல்ல முகவரிக்கு அனுப்பினேன் ( செப்ட ,2013)

அதையும் சீண்டுவார் இல்லை. உங்கள் மூக்குக்கடியில் நடப்பதே உங்கள் பார்வைக்கு வருவதில்லை எனும் போது .. யாரோ ஒரு ராஜ்ய சபா வேட்பாளர் பற்றிய  உண்மையான தகவல் உங்களுக்கு  எப்படி கிடைக்கும்.
Really I pity of you.

Tuesday, July 26, 2011

கலைஞர் இதயம் மீண்டும் இனிக்கும் :"ஜெ"வுக்கு ஆப்பு?


ஆமங்கண்ணா . மாறன் அண்ட் கோ மறுபடி வந்து கோவுர்த்துக்கிட்டப்ப 'இதயம் இனித்தது. கண்கள் பனித்தன"ன்னுசொன்னாரே அதே சீக்வென்ஸ் வந்துருச்சு. ஒருத்தரோட லாபம் இன்னொருத்தருக்கு நஷ்டமா முடியறது -ஒருத்தரோட ஆனந்தம் இன்னொருத்தருக்கு துக்கமா முடியறதுதேன் வாழ்க்கை.

கடகலக்ன காரவுகளுக்கு ரகசிய டார்ச்சர் கொடுக்கவே ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு பார்ட்டி ஆஜராயிரும். ஆனால் கடகம் ஜல தத்துவமாச்சே. "கடலுக்கென்ன மூடி"னுட்டு பொங்கி எழுந்துட்டா எல்லா கச்சாடாவும் அடிச்சிக்கிட்டு போயிரும்.

இதே கான்செப்ட் தேன் தாத்தா லைஃப்லயும் நடக்குது போல (கடக லக்னம்) . பிள்ளைகள்/பொஞ்சாதி/துணைவி ,( ஏன்யா நான் கரெக்டா பேசறனா/) சோனியா,தயா, ராசா அல்லாரும் மாறி மாறி ஆளுக்கொரு பக்கம் இழுக்க பழகிட்டாய்ங்க.

நம்ம ஜா.ரா வும் இவன் நாம போடற 'உவேக்' கமெண்டையெல்லாம் முருகேசன் ரகசியமா வச்சுப்பாங்கற தகிரியத்துல ரெம்ப ஓவரா போயிட்டாரு. அதேன் மொத்தத்தையும் அப்ரூவ் பண்ணிட்டன். கருப்பு ஆடு ஜா.ராதாங்கறதுக்கு ஆயிரம் ஆதாரம் இந்த கமென்ட்ஸ்லயே கிடைக்கும். என்ன கொஞ்சம் போல மூக்கை பொத்திக்கிடனும் தட்ஸால். நாறும்.

இன்னா.............ஆது கலைஞர் இதயம் மீண்டும் இனிக்குமா எப்டின்னு மொதல்ல சொல்லுப்பாம்பிங்க சொல்றேன்.அதுக்குத்தேன் இந்த பதிவு.

சட்டமன்ற தேர்தல்ல தாத்தாவுக்கு ஓய்வு கிடைக்கப்போவுதுன்னு சொன்ன இந்த வாய்தேன் இதையும் சொல்லுது. நாம ஏடிஎம் கவுண்டர் மாதிரி செருகின அட்டையில பேலன்ஸ் சொல்றோம். அம்புட்டுதேன். நமக்கு அவிக இவிகனு வித்யாசம்லாம் கிடையாது.

ஜா.ராவுதும் நம்முதும் ஒரே கேரக்டரு. இரட்டைதன்மை. ஒரு மன நிலையில ஜெ தான் ஆதிபராசக்தின்னு தோனும். இன்னொரு மன நிலையில ச்சே தாத்தா பாவம்யான்னு தோனும்.

ஆனால் நாம டுபுக் ப்ளாக் வச்சி - அனானி பதிவு -அனானி கமெண்டெல்லாம் போடறதில்லை.அப்பப்போ என்ன தோனுதோ அதை அப்படியே போட்டு உடைச்சுர்ரம்.

என்ன? மொக்கை போதுமா? பதிவுக்கு போயிரலாமா/

இந்த பதிவுக்கு நான் ரோசிச்ச இன்ன பிற தலைப்புகள்: (ரூம் போட்டெல்லாம் ரொசிக்கிலிங்கண்ணா-ஜஸ்ட் ஸ்பார்க் ஆனதுதேன்)

1.கலைஞர் தாத்தாவுக்கு நல்ல நேரம் பொறந்துருச்சுடோய்

2.அம்மா வெற்றி ச்சும்மா போகப்போகுதா?

3." கனி " மொழி சென்னையில ஒலிக்கப்போவுது

4. அம்மா கண்ணும் தாத்தா விரலும்

இதெல்லாம் கோசார கணக்கை அடிப்படையா கொண்டதுதேன். நான் நம்பி உபயோகிக்கும் தெலுங்கு பஞ்சாங்கப்படி 2011 நவம்பர் 17 அன்று சனிப்பெயர்ச்சி நடக்க போகிறது. தாத்தாவுது ரிஷபராசி.

கடந்த கன்னி சனி:
இது 2011 நவம்பர் 17 வரை நடக்கனும். 9/10க்கு அதிபதி அஞ்சுல இருந்த காலம் வரை நெல்லாவே "தொழில்" நடத்தி நெல்லாவே சொத்து சேர்த்தாரு. ஆனால் அஞ்சுல சனிங்கற கான்செப்ட்ல அவமானமும் நடந்தது (அஞ்சு பேர் புகழை காட்டும் இடம்) கனிமொழியும் திகார் (அஞ்சு புத்ர ஸ்தானம்) தயா நிதி மாறனும் அதே ரூட்ல ( புத்ர பவுத்ரர்கள் -பேரன் கள் எல்லாம் ஒரே கேட்டகிரிங்கோ) புத்தி மந்தமா போய் (அஞ்சு புத்தி ஸ்தானம்) 1 லட்சத்து 76 ஆயிரம் கொடிக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் ஈழத்தமிழர்களை பலி கொடுத்தாச்சு.

ஆனா சனி ராசி மாறுவதற்கு 6 மாசம் முன்னாடியே அடுத்த ராசியோட பலனை தருவாருன்னு ஒரு விதி இருக்கு. அதாவது அஞ்சுல சனியே 6 ல சனியா வேலை செய்வாரு.

இந்த எஃபெக்டு மே 17 ஆம் தேதியே ஆரம்பிச்சிருச்சு. சனி இவிகளுக்கு 9 -10 க்கு அதிபதி. 9 ஆம் பாவம் தொலைதூர கார்டியனை காட்டும் (சோனியா) அதனால தேன் சோனியா அம்மா பிள்ளைய பயங்கரமா கிள்ளி விட ஆரம்பிச்சிட்டாங்க. தாத்தாவும் நான் மாத்தேன் அழ மாத்தேன்னுட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டிருந்தாரு புரச்சி தலைவி எப்பம் சமச்சீர் கல்வி மேட்டர்ல வாய வச்சாய்ங்களோ அங்கனயே தாத்தாவுக்கு அடுத்துவரும் துலா சனி:எஃபெக்ட் ஆரம்பமாயிருச்சு போல.

9 ங்கறது சொத்துக்கள்,சேமிப்பு,முதலீடுகளை காட்டுமிடம் இதுங்க மேலல்லாம் வம்பு வழக்கு வரனும். வந்துக்கிட்டே இருக்கு.

பத்தாம் பாவம் செய்தொழிலை காட்டுமிடம். இவர் 6 ஐ பார்க்கிறதால "விவகாரம் பண்றதும் -எதிராளி கண்ல விரலை விட்டு ஆட்டறதும்தேன் வேலை. வல்லடி பண்ணனும். எதிராளிக்கு தூக்கமில்லாம பண்ணனும். ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமா இதெல்லாம் முதல்ல ரிவர்ஸ்ல நடக்கும். அப்பறமாத்தேன் இருக்கு மெயின் பிலிம்..

6 ல சனி வந்தா சத்ரு நாசம் - ரோக நிவர்த்தி - ருண விமுக்தி நடக்கனும். இதனோட எஃபெக்டா தான் சினியுக் கடனா(?) கொடுத்த 214 கோடியை செட்டில் பண்ணாப்ல இருக்கு. ரோகம் இனி வராது போல (சின்னதா) அம்மா கதி என்ன ஆகப்போகுதோ? கர்னாடக கோர்ட்டு விவகாரம் வேற இதோ அதோங்குது. தாத்தாவோட ராசிக்கு 6 ல வந்த சனி அம்மா வெற்றிய ச்சொம்மா ஆக்கிருவாரா என்னனு பொறுத்திருந்துதேன் பார்க்கனும்.

எச்சரிக்கை:1
ஆனால் இதுல இன்னொரு பயங்கரமும் இருக்குங்ணா அம்மாவுக்கு 3 ல சனி /தாத்தாவுக்கு 6 ல சனி. அம்மா பயப்படமாட்டாய்ங்க. தாத்தா விடமாட்டாரு. தமிழகம் ரண களமாகப்போகுது.

எச்சரிக்கை;2

எங்க ஊர்ல என்.டி.ஆருக்கு அவரோட ராசிக்கு 5 ல சனி வந்தப்பதேன் பிள்ளை கணக்கா இருக்கவேண்டிய சந்திரபாபு ஆப்படிச்சிட்டாரு. அப்பம் நான் உணர்ச்சி வசப்பட்டு சனி 6 ஐ பார்க்கிற தேதிய குறிப்பிட்டு
" இன்ன தேதிக்கு அப்பாறம் உங்களுக்கு எதிரியே கிடையாது தலை"னுட்டு டெலிகிராம் கொடுத்தேன்.

ஆனால் அன்ன தேதிக்கு அப்பாறம் தலீவரு டிக்கெட் வாங்கிட்டாரு. அவரை ஈஸ்ட்மென் கலர்ல திட்டிக்கிட்டிருந்த தலைங்க எல்லாம் என்.டி.ஆர் மரணத்துக்கு அப்பாறம் அவதார புருசனு புகழ்ந்து தள்ளினாய்ங்க.

இந்த மாதிரி தாத்தா மேட்டர்ல நடக்காதுன்னு எப்படி உறுதி தரமுடியும்?

விவகார ஜெயம்:

சமச்சீர் கல்வி மேட்டரை ஏற்கெனவே சொல்ட்டன். அடுத்த மேட்டர் ராசா . நேத்து ராசா போட்ட குண்டுக்கு சோனியா - சிதம்பரத்தார் மற்றும் மன்மோகனார் அரண்டு கிடக்காய்ங்க. தாத்தா பார்கெயினிங் பொசிஷன்ல இருந்து டிமாண்டிங் பொசிஷனுக்கு வன்ட்டாருங்கோ.

ஆனால் நல்லதுல ஒரு கெட்டது மாதிரி குரு அஷ்டமாதிபதியா மறைஞ்சு நன்மை செய்ய பார்த்தாலும் -அவர் புத்ர காரகன் என்பதால் கனி திகாருக்கு போக பிரிவு ஏற்பட்டது.

ஆகஸ்ட் 30 ஆம் தேதி குரு வக்கிரமாறதால -முந்தா நாள் ராசா விட்ட அலப்பறைக்கு சோனியா கும்பல் அரண்டு கிடக்கிறதால கனி ஆகஸ்ட் 30 க்கு அப்பாறம் வெளிய வந்துரலாமுங்கோ.

Thursday, March 31, 2011

"ஜெ"வுக்கு ஜூன் 9 வரை நித்திய கண்டம் தேன்

ராகு தசை சந்திர புக்தி உபயத்தில் ஜூன் 9 வரை இழு பறி. அதுக்கு பிறவு ராகு தசையில செவ்வாய் புக்தி. செவ் 3 ஆமிடத்துல இருக்கிறதால அம்மா நெஞ்சுல வீரம் பொங்கும். ஒரு பிடி பிடிச்சுரனும்னு சீறி எழுவாய்ங்க. ஆனால் சகோதரஸ்தானத்துல நின்ன செவ்வாய்க்கு 6 ஆமிடத்து ஆதிபத்யமும் இருக்கிறதால உடன் பிறவா சகோதரியோ அ அம்மா நம்பின ஆரோ ஒரு சகோதரரோ  "டபுள் கேம்" ஆடலாம். அ அவிகளோட அம்மாவுக்கு விரோதம் வந்து கழட்டியும் விடலாம். அப்படி விட்டா அந்த பிரிவு 29/Jun/2012 வரை தொடரும். அ அந்த டபுள் கேமுக்கு அம்மா பலியானாலும் ஆகலாம். இதெல்லாம் தேர்தலுக்கு பிறகு. Read More

Saturday, February 26, 2011

ஜெ தலைமையில் கூட்டணி ஆட்சி நிச்சயம்


அண்ணே வணக்கம்ணே!
தி.மு.க வட்டாரத்துக்கு குலை நடுக்கத்தை தரப்போற இந்த பதிவை வருத்தத்தோடதான் போடறேன். ஆனை படுத்தாலும் குதிரை மட்டங்கற மாதிரி கலைஞர் என்னதான் நொந்து கிடந்தாலும் , நோகடிச்சாலும் தாத்தா மேட்டர்ல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கத்தான் செய்யுது. இன்னைக்கு ராத்திரி தாளி மஞ்ச துண்டை உதறிட்டு கருப்பு சால்வைய போட்டுக்கிட்டு பெட்டிப்படுக்கையோட "வீடு வரை உறவு - வீதி வரை மனைவி - காடு வரை பிள்ளை -கடைசி வரை மக்கள்"னு பாடிக்கிட்டே அறிவாலயத்துக்கு வந்து தங்கிட்டாருனு வைங்க.ஸ்டாலினா அழகிரியா தொண்டன் முடிவு செய்யட்டும்னு கட்சிக்குள்ள ஓட்டிங் அறிவிச்சுட்டாருனு வைங்க. இனி பெரியார் அண்ணா கொள்கைய பிரச்சாரம் பண்றதுதான் என் முழு நேர வேலைனு அறிவிச்சிட்டாருனு வைங்க.

சேப்பாக்கத்துலருந்து ஒண்டியா கெலிச்சாரே அந்த மாதிரி தோத்தாலும் அது வெற்றிதான்.வெற்றியை தவிர வேறில்லை. அதை விட்டுட்டு மானம்,மரியாதை எல்லாத்தயும் சோனியா ,ராகுல் காலடியில போட்டுட்டு எத்தீனி தகிடு தத்தம் பண்ணாலும் பல்பு வாங்கறது வாங்கறதுதான்.இங்கனதான் கிரகங்கள் நின்னு விளையாடுதுங்கோ.

ஏற்கெனவே ஜெயலலிதாம்மாவோட ஜாதகத்தை அனலைஸ் பண்ணி சக்ஸஸ்ஃபுல்லா அவிக வெற்றிய ப்ரிடிக்ட் பண்ணி அவிக கிட்டருந்து தேங்க்ஸ் கார்டு கூட (ராமர் கோவில்ல சுண்டல் கொடுத்தாப்ல - கும்பல்ல கோவிந்தா) வாங்கியிருக்கிற தைரியத்துல ஏற்கெனவே போட்ட இந்த பதிவை திருத்திய பதிவா இன்னைக்கு போடறேன்.

அம்மாவோட ஜாதகத்தையும், அவிக வாழ்க்கையையும் எந்தளவுக்கு அனலைஸ் பண்ணியிருக்கேனு அதை படிச்சா புரியும்.அதனால இந்த பதிவை சுருக்கமாவே போடறேன்.

அம்மாவோட ஜாதகம் :
மிதுனலக்னம், மக நட்சத்திரம்,சிம்மராசி. லக்னத்துக்கு ரெண்டாவது வீட்ல சனி, 3ல சந்திரன் செவ், அஞ்சுல கேது, 7ல குரு,9ல சூரிய,புதன், பத்துல சுக்கிரன், 11ல ராகு.

2011-ஃபிப்ரவரி 3 முதல்2012/8/3 வரை நடக்க உள்ள ராகு தசையிலான சந்திர புக்தி என்ன மாதிரியான பலனை தரும்னு இப்போ பார்ப்போம். தசா நாதனான ராகுவுக்கும், புக்தி நாதனான சந்திரனுக்கும் பகை கிடையாது. இவர் மிதுனத்துக்கு தன,வாக்கு,குடும்ப நேத்திரஸ்தானாதிபதி. இதனால அம்மாவோட லைஃபே ஏறினா ரயிலு இறங்கினா ஜெயிலு கணக்கா மாறிரும்.

சந்திரன் 3 ல நின்னு வளர்பிறைல பயத்தையும், தேய் பிறைல தைரியத்தையும் மாத்தி மாத்தி கொடுப்பாரு. மேலும் சந்திரன் கூட செவ்வாயும் சேர்ந்திருக்கிறதால அம்மாவோட பேச்சுல பொறி பறக்கும். (கருணா நிதி அண்ட் கோவுடைய மானமும் தான்)

செவ்வாய் 6,11 க்கு அதிபதியாகி வாக்குல நின்னதால தொண்டையே ரணமாகிற அளவுக்கு பேசுவாய்ங்க.

அவிக வாக்கு வளர்பிறைல சௌம்யமாவும், தேய்பிறைல ரௌத்ரமாவும் வரும். சில சமயம் தேவைக்கு குறைச்சலாவும், சில சமயம் தேவைக்கு அதிகமாவும் பேசுவாய்ங்க. டெசிபல்ஸும் இதே மாதிரி மாறும். மிமிக்ரி எல்லாம் பண்ணுவாய்ங்க பாருங்களேன்.

ஜாதகத்துல வாக்குல உள்ள சனி மிதுனத்துக்கு 8 க்கு அதிபதிங்கறதால அம்மாவோட வாக்கு கல்லடி,வக்கீல் நோட்டீஸ், சிறைவாசத்தை கூட பெற்றுத்தரலாம். அதே நேரம் அதே சனிக்கு பாக்யாதிபத்யமும் இருக்கிறதால ராஜயோகத்தையும் பெற்றுத்தரும்.

இப்படி பார்த்தா அவிக ராசியான சிம்மத்துக்கு வாக்குல சனி. ( 2011, டிசம்பர் 12 வரை) வாக்கு ஸ்தானத்துல (கோசாரம்) உள்ள சனி எதிரிகளை எப்படியெல்லாம் கொல்லாம கொல்லப்போகுதோ நினைச்சாலே குலை நடுங்குது.

அதே நேரம் கைக்கெட்டினது வாய்க்கெட்டலை கதையா போகவும் வாய்ப்பிருக்கு. அதனாலதான் கூட்டணி ஆட்சினு சேஃப் சைடாயிட்டன்.

சந்திரன் ஜல கிரகம். ஜலத்தோட நேச்சர் என்ன பள்ளத்தை நோக்கிபாயறது. அது மாதிரி அம்மா இறங்கி வந்து கூட்டணி எல்லாம் வைக்கப்போறாய்ங்க. அதே நேரம் சந்திரன் இன்ஸ்டெபிளிட்டிக்கு காரகர்ங்கறதால நிறைய இழு பறிகளுக்கு பிறவு அம்மா தலைமையில கூட்டணி மந்திரி சபையே அமையும். அதுவும் நித்ய கண்டம் பூர்ணாயுசா தான் இருக்கும்.

2012 ஆகஸ்டு, 3க்கு மேல ( ராகு தசை செவ் புக்தி, செவ் 3ல இருக்காரு) கவர்ன்மென்ட் ஓரளவு ஸ்டெடியாயிரும்.ஆனால் 2013 ஆகஸ்ட்,21 க்குள்ள அம்மா தன்னோட அதீத தைரியத்தால இடைத்தேர்தலுக்கு போனாலும் ஆச்சரிய பட மாட்டேன்.

அம்மாவுக்கு ஒரு வேண்டு கோள்:
போன தாட்டி கூரியர்ல அனுப்பினேன். தேங்க்ஸ் கார்ட் அனுப்பினிங்க. இந்த தாட்டி சொந்த சைட்ல போஸ்ட் பண்ணியிருக்கேன். சொன்னது ஒர்க் அவுட் ஆகி உங்க தலைமைல கூட்டணி ஆட்சி அமைஞ்சா நம்ம ஃபீஸை மட்டும் செட்டில் பண்ணிருங்க தாயீ..( 25000 பைசா - அதாங்க ரூ 250)

Tuesday, August 17, 2010

மிஸ்டர் கலைஞர்! டேக் கேர் ! !




அண்ணா ஏ தாழ்ந்த தமிழகமேன்னு தலைப்பு வச்சாப்ல ஏ (கருணையில்லாத) கருணா நிதியே! ன்னுதான் தலைப்பு வைக்கலாம்னு நினைச்சேன். ஏ. கருணா நிதின்னு ஒரு பழம்பெரும் நகைச்சுவை நடிகர் இருக்காரேனு ஞா வந்தது. விட்டுட்டன். மிஸ்டர் கருணா நிதின்னு வைக்கலாம்னு பார்த்தேன். வேலூர் - சித்தூர் பயண நேரம் ரெம்ப குறைவா இருக்கவே விட்டுட்டன்.

நம்ம உத்தேசம் யாரையும் வெறுமனே கிழிக்கறதோ அவமானப்படுத்தறதோ இல்லிங்கண்ணா. நம்முது கைப்புள்ள கேரக்டர். "என்னங்க முருகேசன் ! வடிவேலுவை பி.எம் ஆக்க எதுன ஸ்கெட்ச் இருக்கானு கேட்டா அதுக்கும் மாஞ்சி மாஞ்சி ஐடியா கொடுக்கிற பார்ட்டி. தாத்தா மேல இன்னம் நமக்கு கவுரதை ,மரியாதையெல்லாம் மிச்சமிருக்குங்கோ.அதனாலதான் கலைஞர் தன்னோட வாழ்க்கை வரலாறை திருத்திக்க சஜஷன் தரேன்.

குரங்குக்கு கூடு கட்டிக்க சஜஷன் கொடுத்த குருவி கதையாயிர போவுதுன்னு உதறல் இருந்தாலும். தாத்தாவே தான் சொல்லி வச்சிருக்காரே. " கோழை வாழ்வதே இல்லை. வீரன் சாவதே இல்லை" அப்போ "மாவீரன்" (ரஜினி) கதி கூட அவ்ளதானா?

தாத்தா மேல இன்னமும் கொஞ்சூண்டு நம்பிக்கை ஒட்டிக்கிட்டிருக்க முக்கிய காரணங்கள் ரெண்டு ஒன்னு எமர்ஜென்சியை எதிர்த்தது. ரெண்டு எதிர்கட்சில இருந்தப்பயாச்சும் இலங்கை மேட்டர்ல ஆக்டிவா இன்டராக்ட் ஆனது.அதுக்காக ஆட்சியை இழந்தது. உபரியா மாறன் ப்ரதர்ஸ் உள்ளடி வேலையில இறங்கினப்ப

குருக்ஷேத்து அர்ஜுனன் மாதிரி பந்தம்,பாசம் எல்லாத்தயும் தூக்கி கூவத்துல போட்டுட்டு பதறடிச்சது.

காலேஜ்ல பசங்க கல்லூரி ஆரம்பமான நாள்ள இருந்து கடலை போடறது,ராக் பண்றது, பேட்ச் மெயின்டெயினென்ஸ் , பீடி,சிகரட்,பான்,பீடா, பப்,பார்ட்டினு காலத்தை கழிச்சுட்டாலும் காலேஜ் டே ,ஃபேர் வெல் ஃபங்க்ஷன் வந்துட்டா ஒரு மாதிரி ஒரு டீலாயிருவாய்ங்க. அதுலயும் ஃபைனல் இயர்னா கேட்கவே தேவையில்லை. காலேஜ் பக்கம் ஒதுங்காத பசங்க கூட அட்லீஸ்ட் பிட் பிரிப்பரேஷன்லயாவது இறங்கிருவாங்க

தாத்தா ஆட்சியோட இறுதிகட்டத்துல மட்டுமில்லை ஆயுளோட இறுதி கட்டத்துலயும் இருக்காரு. "சாகறப்ப சங்கரா சங்கராங்கறான்" ஒரு சொலவடை உண்டு. அதாவது வாழ் நாள் எல்லாம் பஞ்சமாபாதகங்கள் பண்ணிட்டிருந்தவன் கூட சாகற சமயத்துல கடவுளை நினைச்சு ஸ்வர்கத்துல கர்சீஃப் போட்டு வைக்க பார்க்கிறானு அர்த்தம்.

கீதைல கிஷ்டர் மரண தருவாயில் என்னை நினைத்தவன் என்னையே அடைகிறான்னு ஷார்ட் கட் ரூட்டெல்லாம் போட்டுவச்சிருக்காருன்னா. அதுமாதிரி கலைஞர் ஒரு நூறு தாட்டி டபுள் ப்ரமோஷன் அடிச்சு பெரியார், அண்ணா க்ரூப்ல சேர்ந்துர்ரதுக்கு ரூட் போடறேண்ணே.

திருக்குவளை சீர்த்திருத்த சிறுவர் சங்கம், நாடகம், முரசொலியை கையில எழுதி கைல கொண்டு வித்தது, காப்பரேஷன் எலக்சன்ல தி.மு. க வை செயிக்க வச்சு அண்ணா கையால கணையாழி வாங்கினது, அண்ணாவுக்கு இரங்கல் கவிதை "உன் இதயத்தை இரவலாக கொடுத்து செல் அண்ணா" - பி.ஜு பட்னாயக் தி.மு.க அதிமுக இணைப்பு ட்ரை பண்ணப்ப போட்ட நியாயமான நிபந்தனைகள் - 13 வருஷம் கட்சியை கட்டிக்காத்தது - பூமாலைங்கற வீடியோ கேசட்லருந்து சன் டிவியை வளர்த்தெடுத்தது இப்படி எத்தனையோ பொன்னேடுகள் தாத்தா லைஃப்ல இருக்கு.

நீண்ட ஆயுள் படைச்ச ட்ரெண்ட் செட்டர்ஸ் எல்லாம் இப்படித்தான் அவுட் டேட்டடாயிருவாய்ங்களாம். நான் தாத்தாவுக்கு சொல்றதெல்லாம் ஒன்னேதான். சரித்திரம் படைச்ச நீங்க இப்படி உங்க புகழையெல்லாம் இழந்து தரித்திரனா போய் சேரனுமான்னுதான்.

விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்னு அண்ணா,காமராஜர் சமாதில ஏத்திவச்சுட்டா போதாது பாஸு.ஏழை சனங்க வாழ்க்கையிலயும் ஒரு சிம்னி விளக்காவது ஏத்துவைங்க

பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். உங்க ஸ்டைல்ல சொன்னா நடந்தவை நடந்தவையா இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். நீங்களும் எங்க ஊர் திட்டத்தையெல்லாம் சகட்டுமேனிக்கு காப்பியடிச்சிங்க. சந்திரபாபு கிட்டருந்து உழவர் சந்தை, நமக்கு நாமே, ஒய்.எஸ்.ஆர் கிட்டருந்து 108 சேவை, காப்பீடு திட்டம்.

ஊர் பிள்ளை கிணத்துல இறங்கி வந்த பிறவாவது அழம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு அப்ளை பண்ணியிருக்கலாம். ஈயடிச்சான் காப்பிதான் அடிக்கிறிங்க. நிர்வாகத்துல புலின்னு ஒரு பட்டம் வேற இருக்கு.

ராமதாசு காங்கிரஸு தலைமைல கூட்டணி வரணுங்கறாரு. யானை இளைச்சதும் எலி பும்ஸவனத்துக்கு ( ஃபர்ஸ்ட் நைட்) முகூர்த்தம் கேட்ட கதையா இருக்கு.

காங்கிரசுக்கு 100 சீட்டு வேணமாம். டெப்புட்டி சி.எம் வேணமாம். பார்த்திங்களா தாத்தா நீங்க என்னவோ வயசான காலத்துல எதுக்கு ரிஸ்குன்னு தமிழினத்தையே பலி கொடுத்திங்க. வடவர் ஆணவப்போக்கை பார்த்திங்களா?

கல்கில தலையங்கம் எழுதறாய்ங்க.ராமதாஸு சொன்னது கரீட்டாம்.அதிமுக,திமுக நிழல் படியாத கட்சிகள் ஒன்னு சேரனுமாம். ஆக ஆமா நான் பாப்பாத்திதானு அறைகூவினாலும் ஜெயலலிதா அம்மா கூட அவாளுக்கு எங்கனயோ சரிய்யா ஆப்பு வச்சாப்ல தான் இருக்கு.

ஆனா பாருங்க அடுத்த பாராலயே விஜயகாந்த விட்டுர கூடாதாம். என்ன ரகசியம்னா விஜயகாந்த் பா.ஜ.கவோட போராட்டத்தை கையிலெடுத்துட்டாரு.

கலைஞரய்யா உங்களுக்கென்னா பாராட்டு விழா தானே வேணம் ( வயசாயிட்டா கிழவாடிங்க சின்னப்புள்ளத்தனமா பிஹேவ் பண்ணுவாய்ங்களாம்) நல திட்டம் ,இலவசம்லாம் நிறுத்திருங்கனு சொல்லமாட்டேன். தில்லில காங்கிரசுக்கு சப்போர்ட்டை வாபஸ் வாங்குங்கனு சொல்லமாட்டேன்.

அழகிரியை கட்சிக்கு தலைவராக்கி,ஸ்டாலினை சி.எம்மாக்கிட்டு - உங்க நிலைக்கு நடைபயணம் கூட தேவையில்லை. அதான் வீல் சேர் இருக்கே . இங்கன இருக்கிற மானமுள்ள தமிழனையெல்லாம் திரட்டிக்கிட்டு தில்லிக்கு புறப்படுங்க வீல் சேர் பயணம். உங்க பயணம் தில்லி எல்லைய தொடறதுக்குள்ள சோனியாம்மா இத்தாலி நோக்கி பறக்கலைன்னா அப்பாறம் வந்து என்னடா நாயேனு கேளுங்க.

அய்யா! அரசியல் சாணக்கியரே மந்தைல நுழைஞ்ச நரி மாதிரி காங்கிரஸ் தமிழ அரசியல்ல நுழைய பார்க்குது. சிங்கமும் 4 எருமைகளும் கதை தெரியும்ல. போயஸ் கார்டனுக்கு ஒரு கால் போடுங்க . காங்கிரஸ் களவாணிகளை சேர்த்துக்காதம்மா நமக்குள்ள ஆயிரம் இருக்கும். அதை அப்பாறம் பார்த்துப்போம்னு ஒரு பேச்சு சொல்லுங்க
எப்படியும் அடுத்த தேர்தல்ல திமுக காலி. இந்த கடைசிகட்டத்துலயாவது ஒய்.எஸ்.ஆர் தன் ரெண்டாவது ரெஜிம்ல செய்ய நினைச்ச அரசோட டெலிவரி மெக்கானிசத்தை சரி பண்ணிருங்க. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கொடுங்க, அதிகாரம் கொடுங்க. எங்க ஸ்டேட்ல முதியோர் உதவித்தொகைய நகராட்சி காரவுக வீடு தேடி கொடுத்துட்டு போறாய்ங்க. உங்க ஸ்டேட்ல அன்புடன் தமிழக முதல்வர்னு சீல் பொட்டு எம்.ஓ பண்ணிக்கிட்டிருந்திங்க. மாத்துங்கய்யா.

வீடு போ போங்குது. காடு வா வாங்குது. இப்பயாச்சு மாறுங்க மாத்துங்க. உங்க வாழ்க்கை வரலாற்று பொன்னேடெல்லாம் செதிலடிச்சு போச்சு .கட்டக்கடைசியா ஒரே ஒரு வரியாச்சும் உங்க வாழ்க்கை வரலாறுல நல்லதா இடம் பெறட்டும்.

நீங்க இத்தனை தாட்டி சி.எம் ஆகி பரிபாலனம் பண்ணிங்களே இந்த அரசு இயந்திரத்தை கட்டி எழுப்பினது ப்ரிட்டீஷ் காரன். அந்த காலத்து லெட்டர் ப்ரஸ் மாதிரி, கக்கூஸு மாதிரி நாறுது. இதை தூக்கி போட்டு புது இயந்திரத்தை இன்ஸ்டால் பண்ணிட்டு போங்க.

பல காலத்துக்கு மிந்தி ஏதோ தீபாவளி மலர்ல மிட்டாய்னு ஒரு கதை படிச்சேன். அதுல ஒரு கேரக்டர் . திவால் பார்ட்டி. செலவை சுருக்க மட்ட சரக்கு, மட்ட சோறுன்னு விழுங்கி வைக்கும். உள்ளாற போனது வெளிய வந்துராம படக்குனு ஒரு மிட்டாயை வாயில திணிச்சுக்கும். அந்த பார்ட்டிக்கு ஒரு பட்லி.

மிட்டாய்ய் பார்ட்டியோட மனைவி தன்னை தேடிவந்து கதறிட்டு தற்கொலைக்கு ரயிலை தேடி ஓட அவளை விலக்கிட்டு தான் செத்து போகுது அந்த பட்லி. நாற வாழ்க்கைய வாழ்ந்த அவள் மிட்டாய் மாதிரி ஒரு வேலைய செய்துட்டான்னு கதாசிரியர் கதைய முடிக்கிறார்.

தாத்தா .. உதவாக்கரை தமிழ் படங்களுக்கு வசனம் எழுதினது போதும், வசன மழை பொழிஞ்சது போதும். ஒரு ஃபெடல் காஸ்ட்ரோ மாதிரி சரித்திரத்துல இடம் பிடிக்க ஒரு கர்சீஃபை கொடுத்திருக்கேன். இதை உங்க தலைல போட்டுக்கிட்டு பாய்ங்களை ஏமாத்துவிங்களோ? இல்லை சனம் தலை மேல போட்டு ஒழிச்சு கட்டிருவிங்களோ ? உங்க சவுரியம்.

பி.கு:
வேலூர்லருந்து டாக்ஸி மட்டும் அனுப்பிராதிங்க தலைவா! (அம்மாவுக்கும் உங்களுக்கும் இருந்த வித்யாசமெல்லாம் குறைஞ்சுக்கிட்டே போகுது) இந்தியாவை பணக்கார நாடாக்க ( சன் க்ரூப் ரேஞ்சுக்குஇல்லைனாலும்) ஆப்பரேஷன் இந்தியா2000 ன்னிட்டு ஒரு ப்ளான் வச்சிருக்கேன். இதை பத்தி கழுகுங்கற வலைச்சரத்துல பதிவு போடனும். நம்ம கச்சேரிய அப்பாறம் வச்சிக்கலாம். நான் வடிவேலு மாதிரி. எங்க போகபோறேன்.

Tuesday, April 27, 2010

கலைஞர் திமுகவுக்கு 'ஜெ' வை தலைவியாக்கினால் என்ன?

மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களே,
தீர்காயுள் படைச்ச சரித்திர புருஷர்களோட வாழ்க்கை எவ்ள கேவலமா முடியுங்கறதுக்கு உங்க வாழ்க்கை சரியான உதாரணம்.

என்னை பொருத்தவரை ஒவ்வொரு மனிதனும் தீபாவளி  நேரத்துல பசங்க கொளுத்தற  பூத்தொட்டி  மாதிரி. ஒரு பொறி அவன் மேல விழறவரைக்கும் வெறுமனே கோன் வடிவ களிமண்ணுருண்டையா  கிடப்பான். ஒரு பொறி அவன் மேல விழுந்து சீறி கிளம்பினானு வைங்க எல்லாரும் மூக்குல விரல் வைப்பாங்க. அந்த அளவுக்கு  வானவில்லு ஒன்னு அதுக்குள்ள ஒளிஞ்சிருந்து சீறி கிளம்பின மாதிரி இருக்கும். அதுல எரிமலையோட சீற்றமும் இருக்கும், கண்ணுக்கு விருந்தாகிற வண்ண ஊற்றும் இருக்கும். உள்ள இருக்கிற மசாலா தீர்ந்திருச்சுனு வைங்களேன். கொஞ்ச நாழி அதை பிரமிப்போட பார்ப்பாங்க. ஏன்னா அதுல காலி பெருங்காய டப்பால வாசனை மாதிரி அனல் கொஞ்சம் மிச்சமிருக்கும். இன்னும் கொஞ்ச நாழி ஆயிருச்சுனு வைங்களேன் கூட்டி குப்பைல சேர்த்துருவாங்க.

உங்க கதையும் ஏறக்குறைய(உங்க மனசு புண்பட்டுர கூடாதுன்னு இந்த வார்த்தைய வெத்தா உபயோகிச்சிருக்கேன்) இப்படித்தான் ஆயிருச்சு.  அன்னைக்கு எமர்ஜென்சியை எதிர்த்து சிறை புகுந்திங்களே. ஒரு அரசாங்கத்தோட அடக்குமுறைக்கு ஆட்சியை, கட்சியை, குடும்பத்தை உங்களை ஒட்டு மொத்தமா பலி கொடுத்திங்களே  அதோட உங்க உள்ளீடு .. காலி.

நீங்க கடக லக்னத்துக்கே உரிய பந்து ப்ரீதி,குடும்ப பாசம்  காரணமா  தவற விட்டுட்ட பொது நலத்தை,  காமன் மேனோட பாய்ண்ட் ஆஃப் வ்யூவை கேட்ச் பண்ணிக்கிட்ட எம்.ஜி.ஆர் 13 வருஷம் உங்களை இருந்தும் இல்லாமயே செய்துட்டாரு.

இடையில ஒரு கட்டத்துல பி.ஜு பட் நாயக் ரெண்டு கழகத்தையும் இணைக்க முயற்சி பண்ணார். அப்போ மட்டும் நீங்க உங்க மூளைய அதுல இருக்கிற அதி சாணக்கியத்தை புறந்தள்ளி ,பரந்த மனப்பான்மையோட , சரித்திர பொறுப்போட ஒரு முடிவெடுத்திருந்தா எம்.ஜி.ஆர் மறைவுக்கு அப்புறம் ஜா இல்லே ஜெ இல்லே .இப்படி மைனாரிட்டில காலந்தள்ள வேண்டிய அவசியமுமில்லே.

திமுகங்கற மானில கட்சியை, மானில சுயாட்சிக்காக குரல் கொடுத்த கட்சியை காங்கிரசோட தமிழக கிளை மாதிரி நடத்த வேண்டிய தலை எழுத்தும் இல்லை.  நளினியை விடுதலை பண்ண மத்திய அரசோட ஒப்புதல் கேட்டு கேட்டு அதன் படி நடக்க சுயக்கட்டுப்பாடு விதிச்சுக்க வேண்டிய அவசியமும் இல்லே.

சரி அது கூட ஓஞ்சு போவட்டும். எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு  பெரிய மன்சனா சரித்திரத்துல நின்னுர்ரதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது. அன்னைக்கு மேய்ப்பனில்லாத ஆட்டு மந்தையா அதிமுக தவிச்சப்ப கொஞ்சம் பெரிய மனசோட ,பெரிய மன்ச தராவா நடந்துக்கிட்டிருந்தா இரண்டு கழகமும் இணைஞ்சிருக்கும். அந்த இணைப்பால கட்சிக்கும், அதன் வெற்றிக்கும் ஒரு துரும்பை கூட எடுத்து போடாத
பெரிய வீட்டுக்கும்,சின்ன வீட்டுக்கும் இடையில அல்லாட வேண்டிய அவசியம் இருந்திருக்காது. அதே மாதிரி பல்லாயிரக்கணக்கான அதிமுக தலைவர்களும்,தொண்டர்களும் மன்னார் குடு கும்பல் கிட்டே சிக்கி சீரழிய வேண்டி வந்திருக்காது.

தலைவா! உன் பொது வாழ்வோட வயசு கூட இல்லாத நானெல்லாம் உன்னை சகட்டு மேனிக்கு கேள்வி கேட்கிறாப்ல வச்சிருக்கிறது என்ன தெரியுமா? அளவுக்கு மீறின குடும்ப பாசம். இப்போ மஞ்ச துண்டெல்லாம் போட்டு, சத்ய சாயிபாபாவையே வீட்டுக்கு இன்வைட் பண்ற அளவுக்கு, புதிய சட்டசபை வளாகத்துக்கு கிரக பிரவேச முகூர்த்தமெல்லாம் வைக்கிற அளவுக்கு வளர்ந்துட்ட உங்களுக்கு ஒரு ஜோதிடனா ஒரே  ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்.

இப்போ உங்க லக்னமான ரிஷபத்துக்கு பஞ்சம சனி. ஆந்திராபக்க கிராமங்கள்ள ஒரு சொலவடை உண்டு. "பஞ்சம சனி வாட்னி மஞ்சம் பக்கன சேர்ச்சகுரா"

இதுக்கு என்னடா அர்த்தம்னா அஞ்சுல சனி கொண்டவனை(கயித்து)  கட்டிலண்டை கூட சேர்க்காதே . அவனை நாலு போட வந்தவன் உன்னையும் ரெண்டு போட்டுருவான்.

இன்னொரு கோணத்துல பார்த்தா சனி உங்களுக்கு தர்ம கர்மாதிபதி. அதாவது செயல் திறத்தையும், அதே சமயம் புண்ணியத்தையும் ஒரு சேர வழங்க கூடியவர். இவர் பூர்வ புண்ணியத்தை காட்டற அஞ்சாவது இடத்துல நிக்கிறார்.   நீங்க மட்டும் ஜஸ்ட் ஒரு அஞ்சு நிமிஷம் மாத்தி யோசிச்சா தூள் கிளப்பலாம்.(அது எப்படினு இந்த பதிவோட  இறுதி பத்தில  நானே சொல்றேன்)

குரு பத்துல இருக்காரு.(பதவி பறிபோகனும்- பொது விதி- ஆனா குரு உங்களுக்கு அஷ்டமாதிபதி .மரணத்தை காட்டற கிரகம் , அதனாலதானோ என்னவோ ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா சாக நீங்களும் ஒரு காரணமாயிட்டிங்க. பத்துல வந்த அஷ்டமாதிபதியான  குரு உங்களை கசாப்பு கடைக்காரராக்கிட்டார் ) 

மே4 ஆம் தேதிக்கு பிறவு இவர் பதினொன்னுக்கு போறார். தன் சொந்தவீட்டுக்கு போறார். இது பொது விதிப்படி சூப்பரு........... ஆனா அஷ்டமாதிபதியான இவரு 11 க்கு போறது அதுவும் ஆட்சி பெறுவது ரொம்ப ரொம்ப கெட்டது தலைவா!


உங்க ராசியான கடக ராசிக்கு சனி 3 ல இருக்காரு. குரு எட்டுல இருக்காரு. சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு எட்டுல இருந்தது யோகம்தான்.ஆனால் இவர் இப்போ 9க்கு வரப்போறார். 9ங்கறது தூர தேசத்து தொடர்புகளை காட்டற இடம். அங்கே சத்ரு,ரோக,ருண வாதைகளை காட்டற குரு போறதால சோனியா அம்மா கூட டெர்ம்ஸ் கெட்டுரும்.

(இப்போ அழகிரி பாராளுமன்றத்துக்கு போகாம டுப்கி அடிச்ச கதை தெலுங்கு சேனல்ஸ்ல கூட கூவம் மாதிரி நாறுது. இதுல சென்னைக்கும், மதுரைக்கும் அரசாங்க செலவுல  விமானத்துல ஷட்டில் வேற அடிச்சிருக்காரு.அஞ்சா நெஞ்சன் உங்களுக்குதான் மகன். சோனியாவுக்கு கிடையாது. உங்க பப்பெல்லாம் வேகாது)

9ங்கறது தூர பிரயாணங்களை காட்டற இடம். மறுபடி எங்கனா தில்லி போய் பதவி வாங்க போயிரப்போறிங்க. சாக்கிரதை. மேலும் முக்கியமா உங்களுக்கு கேது தசை நடக்கிறதா கேள்வி.

கேதுங்கறவர் ஞான காரகன். "கண்ணா ! இந்த உலகத்துல  பெண்டாட்டி, பிள்ளை, பேரன்,கொள்ளு பேரன் எல்லாம் பொய். கடவுள் தான் மெய்னு காட்டி ஞானத்தை தரக்கூடிய கிரகம் கேது.

ஏற்கெனவே சன் டிவி, தயா நிதிமாறன் விஷயத்துல பார்த்திங்க. இப்போ கலைஞரை தவிர வேற யாரையும் தலைவனா ஏற்க மாட்டேன். தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு அறிவிச்சு அழகிரியும் ஓரளவுக்கு ஞானத்தை தர முயற்சி பண்ணியிருக்காரு.

பாவம் .. ஒரு தரம் எமர்ஜென்சி,இன்னொரு தரம் ராஜீவ் கொலைனு ஆட்சிய இழந்தவரு. கடைசி காலத்துல அரசு மரியாதையோட போய் சேரனும்னு நினைக்கிறாரு. ஓஞ்சு போட்டும்னு விட முடியலை. ஏன்னா உங்க ஆட்சிய காப்பாத்திக்க நீங்க இலங்கை தமிழர்களை பலி கொடுத்துட்டதா சனம் பேசிக்கிறாங்க. இல்லை தலைவா.. எத்தனையோ தோல்விகளுக்கும்  பின்னாடி, எம்.ஜி.ஆர்,வைகோ விஷயங்கள்ள செய்த இமாலய தவறுகளையும் மீறி   உன்னை நிழல் மாதிரி தொடர்ந்து வந்துக்கிட்டிருந்த  சரித்திரத்தை பலி கொடுத்துட்டிங்க.

சரி தலைவா.. இதை கூட "உன்னை சொல்லி குற்றமில்லை ..என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி"னு சமாளிச்சுரலாம். ஆனால் முந்தா நேத்து நளினி விவகாரம், நேத்து பிரபாகரனோட தாய் விவகாரம்லாம் என்ன மாதிரி தமிழக அரசியலுக்கு, தமிழ் நாட்டுக்கு தூரமா வாழற என்னையே கடுப்பாக்கிருச்சே. உங்களுக்கு எங்கயும் லேசா கூட குத்திக்கலியா தலைவா..

சரி இது கூட  ஓஞ்சு போவட்டும். புஸ்வானமாகி போன பட்டாசை கழுத்துவரை உரிச்சு உள்ளார இருக்கிற திரியை லேசா கிள்ளி பத்த வைப்போமே அது மாதிரி உன்னை பத்த வைக்க , உன் புகழை விழுங்க வந்திருக்கும் அவப்பெயரை விரட்ட சின்ன வேலை செய் தலைவா..

ஒரு கிராமத்துக்காக ஒரு குடும்பம், ஒரு ஊருக்காக ஒரு கிராமம். ஒரு நாட்டுக்காக ஒரு ஊரு நாசமா போனாலும் தப்பில்லேங்கறது .. தர்ம சாஸ்திரம்.

நீ ஒன்னும் உன் குடும்பத்தை ரோட்ல விட்டுரலை. குஞ்சு குளுவான்ல இருந்து அததுங்க மில்லியன்,ட்ரில்லியன்ல வள்ளாடுதுங்க. அவிக தகுதிக்கு அது போதும் . அவிகளால நீங்க மூட்டை கட்டிக்கிட்ட அவப்பெயர் போதும்.

மாத்தி யோசிங்க. காலுக்கு சக்கரம் கட்டிக்கிட்டு ஒடியாடின காலத்துல பிள்ளைங்க சொல் பேச்சு கேட்கலைன்னா பரவால்ல , வயசான காலத்துல, சக்கர நாற்காலிலயே வாழ்க்கைய கழிக்கிற இந்த காலத்துல 

கூப்பிடு தூரத்துல இருக்கிற தில்லில  உங்க மானம் என்னாகும்னு கூட யோசிக்காம, யாரை எதிர்த்து உங்க வாழ் நாளெல்லாம் போராடினிங்களோ அந்த இனத்துக்கு சொந்தமான (பார்ப்பன)  பத்திரிக்கைக்கு எவனையும் தலைவனா ஏத்துக்க மாட்டேன், தலைவர் பதவிக்கு போட்டியிடுவேனு பேட்டி கொடுக்கிற மகனைவிட,

பிரச்சினை இவ்ளோ தூரத்துக்கு நாறியும்  " உங்க காலம் வேற .. எங்க காலம் வேற  ஒருத்தருக்கு ரெண்டு பதவி எதுக்கு எனக்கு வேணாம் .. அவரே தலைவரா இருக்கட்டும்" னு சொல்ல முன் வராத மகனை விட

உங்க ஆருயிர் நண்பர், உங்க பிள்ளைப்பாசம் காரணமாய் நட்டாற்றில் கழட்டிவிடப்பட்டும் மக்கள் ஆதரவால் கரையேறி கடற்கரையில் மீளாத்துயிலில் இருக்கும் எம்.ஜி.ஆரின் இயக்கத்தை அவருடன் எந்த உறவும் ( சட்டப்படி) இல்லாமலே  இத்தனை காலம் கட்டிக்காத்த


ஜெயலலிதாவை  திமுக தலைவியாக்கினால் என்ன?
கட்சி வென்றால் அவரே முதல்வர் என்று அறிவித்தால் என்ன?

குறளோவியம் தீட்டிய உங்களுக்கு தெரியாத  குறளா ?  ஏதோ ஒரு குறளை எடுத்துவிட்டால் அவனவன் ஆகே பீச்சே மூடிக்கொள்ள மாட்டானா? 


வெறுமனே ஈகோ காரணங்களால் இரண்டு இயக்கங்களாக பிரிந்து தமது பிறப்பின் நோக்கத்துக்கே உலை வைத்தபடி கிடக்கும் அவ்வியக்கங்களின்  இழி நிலை மாறுமல்லவா?

உமது இரண்டு ஜம்போஜெட் குடும்பங்களுக்காக  இத்தனை ஆண்டுகள் உழைத்தீர்கள்.  என்ன  சுகம் கண்டீர்கள். லட்சோப லட்சம் தமிழ் குடும்பங்களுக்காக ஒரு நாள் வாழ்ந்தால் என்ன?