Wednesday, September 30, 2009

ஞானி சார் மறுமொழி போட்டாரோச் !


ஆமாம். டுபாக்கூர் என்ற வார்த்தைக்கு நான் கொடுத்த வியாக்யானத்தை தவறு என்று குறிப்பிட்டுள்ளார். தனக்கு தொடர்பில்லாத விஷயம் என்றாலும் தவறான தகவல் பதிவுலகில் பரவிடக்கூடாது என்ற தாய் மனதுடன் திருத்தியுள்ளார். ஒரிஜினலில் உள்ளபடி (இது அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதையொன்றின் தலைப்பு) நான் சாதாரண வாசகன் . இன்னும் சொல்லப்போனால் அவரது சமூக பொறுப்புக்கும், நேர்மை துணிவிற்கும் ரசிகன். ஒரு வகையில் அவர் எனக்கு ரோல் மாடல் என்று கூட சொல்லலாம்.

ஒரு முறை அவர் பாலியில் கல்வி தொடர்பான தொடரை எழுதி வந்தபோது கல்கி அதை விமர்சித்து எழுதியது. அதை கண்டித்து நான் ஒரு பதிவு கூட எழுதியுள்ளேன்.

மேலும் தமிழ் எழுத்தாளர்களின் போக்கை கண்டித்து எழுதும்போது ஞானி அவர்களுக்கு விதி விலக்கு அளித்தவன் நான். பதிவர்களிடையில் சிலர் "மொட்டை தாத்தன் குட்டையில் விழுந்தான்" பாணியில் ஞானியை குறை சொன்ன போது கூட கண்டித்துள்ளேன்.

எது எப்படியோ ஞானியின் மறுமொழி புத்துயிரை ஊட்டியுள்ளது. ஞானி அவர்களுக்கு நன்றி !

அப்துல் கலாம் குறித்த என் பதிவுகள் மீதான பதிவர் கருத்தறிய நடாத்திய கருத்து கணிப்பின் முடிவு :

பொறுப்பான எழுத்து : 3 சதவீதம்
பொறுப்பற்றது : 66 சதவீதம்
சரி:15 சதவீதம்
தவறு: 27 சதவீதம்

நீதி: கருத்துக்கணிப்பு மட்டும் கோரவே கூடாது. நான் சொன்னது சரிதான் என்று அடாவடி அடிக்கவேண்டும்.

கேள்வி: படித்தவர்கள் 330 பேர் (சொச்சம்)
வாக்களித்தவர்கள் :33 பேர்
வாக்களிக்காதவர்கள் : நான் கணக்குல வீக்குங்க


கடந்த பதிவில் சொல்லக்கூடாத ஜோக்கின் க்ளைமாக்ஸை பதிவில் வைக்கக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். செல் அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாய்ந்ததால் க்ளைமாக்ஸை இந்த தொடர்பில்லாத பதிவில் ஒளித்து வைக்கிறேன். பாவிகள்(?) கண்களுக்கு மட்டும் இது சிக்கட்டும்.

வெங்கடேஷ் பூனைக்கடி வாங்கி ஊரை விட்டு ஓடிப்போன பின் எப்படியோ பிடித்துவரச்செய்தாள் வெங்கடேஷின் மாமியான். என்னதான் கவுன்சிலிங் கொடுத்தாலும் பலனில்லை. மகளின் நல்வாழ்வு கருதி அந்த தியாகத்தை செய்தேவிட்டாள். காரியம் முடிந்ததும் மாப்பிள்ளை முதுகில் படர்ந்திருந்த வியர்வை துளிகளை துடைத்தபடி "பார்த்திங்களா மாப்பிள்ளை பல்லுமில்லை ஒரு இழவுமில்லே " என்று மகளின் முதலிரவுக்கு அடி போட்டாள்.

வெங்கடேஷ் " போங்க அத்தை உங்களுக்கு வயசாகிப்போச்சு.. பல்லெல்லாம் விழுந்திருக்கும். உங்க மகளுக்கு பல்லும் இருக்கு என்னை கடிக்கவும் செய்யுது. கடி வாங்கின எனக்கு தெரியாதா " என்றானே பார்க்கலாம்


வேண்டுகோள்: இந்த கதையில் வரும் வெங்கடேஷ் மட்டுமல்ல நம்மில் பலரும் பாலியல் தொடர்பாக பல்வேறு மூட நம்பிக்கைகளுடன் தான் வாழ்ந்து வருகிறோம். அந்த மூட நம்பிக்கைகள் காரணமாக உள்ளடக்கி வைக்கப்பட்ட பாலியல் கோரிக்கைகளை வன்முறையாக வெளிப்படுத்திக் கொண்டு நாஸ்தி பண்ணுகிறோம். இவ்வகை மூ. ந. பற்றி தனியே ஒரு பதிவு போட உத்தேசம்