Showing posts with label Guest of kavithai07. Show all posts
Showing posts with label Guest of kavithai07. Show all posts
Friday, September 3, 2010
இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? : 2
உயிர்களிடத்தில் ஏன் காமத்தில் இவ்வளவு ஆசை? அது அதிலிருந்து உருவானதாலயேதான். ஆனால் ஐந்தறிவு வரை ஒரு வரைமுறையிருக்கிறது. இயற்கையோடு ஒத்த காமத்தூண்டுதல் இருக்கும். ஆனால் மனிதருக்கோ அவன் நினைத்தால் எல்லாம் நடக்கும். உலகமே 99.9% காமத்தை வழிமொழிவார்கள்... 1% சட்டமோ, நல்லெண்ணமோ, வெட்கமோ அல்லது பயமோ அதை தடுத்துவிடும்.
அரிசி சாத்திற்காக உலையில் கொதித்துக்கொண்டு இருக்கும்பொழுது எத்தனை தடவைதான் தட்டை திறந்து மூடி கொதியை அடக்குவீர்கள்...
நன்றாக உணருங்கள்... நீங்கள் ஏறக்குறைய ஒரு முற்றும் துறந்த முனிவனைப்போலத்தானே காமத்தை கையாளமுடிகிறது. தனக்குப்பிடிக்கும் என்பதை விடவும் அடுத்தவர் என்னை என்ன நினைப்பாரோ என்றுதானே உங்கள் காமத்தை கசக்கி பிழிகிறீர்கள் அல்லது காமம் உங்களை கசக்கி பிழிகிறதுதானே!
காமத்தை உன்னதமாக, உள்ளது உள்ளபடி இருக்கவேண்டும், உணரவேண்டும் என்றால் புதிதாக பிறக்கவேண்டும். சாத்தியமில்லை... ஆகவே புதிதாக அணுகவேண்டும். உன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார். நீண்ட பெரு மூச்சை உருவாக்கு.மனதிலிருக்கிற குப்பையை துடைத்து எறி. காமத்தைப்பற்றிய பழைய எண்ணங்களை உதறி விடு. வேறெந்த யோசனையும் இல்லாதிரு.
இப்பொழுது கவனி... சற்றுமுன் வரை எது பற்றி நினைக்க, பார்க்க, படிக்க நினைத்திருந்தாய்? உன்னை ஒரு கணமும் விட்டகலா இருந்தது என்ன? உனக்குள்ளாக மனதிலும், மூளையிலும், உடலிலும் ஆக்கிரமித்திருந்தது என்ன?
நீ இப்பொழுது புன்னகைக்கிறாய்... ஆமாம்... காமம்தான்...
இப்பொழுது முடிவு செய்... காமம் உன்னை கையாள வேண்டுமா? அல்லது நீ காமத்தை கையாள வேண்டுமா?
காமத்தில் நீயாக மூழ்கினால் முத்தெடுக்கலாம்... காமம் உன்னை மூழ்கடித்தால் கரையேற முடியாது காணாமற்போவாய்...
கவனத்தில் கொள்க... இப்போதைய காலகட்டத்தில் நம்முடைய இரண்டும், ஏழும், எட்டும் பணத்திற்காக எதையும் செய்யும் வியபார பாவிகளால்தான் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கிரகங்களால் அல்ல.
அத்தகையவர்களை (கயவர்களை?!) ஆறாம் இடத்திற்கு தள்ளிவிட்டீர்களென்றால் பொருத்தமாக இருக்கும்.
இப்பொழுது சுகுமார்ஜி என்ன சொல்ல வருகிறான் என்பதை யூகிக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் என் கைகளோடு இணைந்து இருக்கிறீர்கள்... வாருங்கள்... ஒரு நீண்ட பயணத்தை துவக்கலாம்...
Monday, August 30, 2010
சுகுமார்ஜி பக்கங்கள்
என்னங்கடா இது நம்ம முருகேசு எப்ப பேரை மாத்திக்கினாரு. ஆராண்டை "பேரை மாத்தி வச்சிக்கிறேன்"னு பந்தயம் போட்டு பேரை மாத்திக்கினாருன்னு கன்ஃப்யூஸ் ஆயிராதிங்க. இனி இந்த தலைப்புல எழுதப்போறவரு சாட்சாத் சுகுமார்ஜி தான் .அவரோட ஓப்பனிங்கை படிக்க பரபரக்கிறவுக கவிதை07 ல் அண்ணாத்தையோட முதல் பதிவான இராத்திரியில் நீ எப்படிப்பட்டவன்? - ஐ படிக்க இங்கன
அழுத்துங்க .
கணையாழில சுஜாதா பக்கங்கள் மாதிரி கவிதை07 ல் சுகுமார்ஜி பக்கங்கள் சக்சஸ் ஆக வாழ்த்துக்களுடன் ( க னாவுக்கு க னா, சு னாவுக்கு சு னா அடி தூள் !
பொறுமையானவுகளுக்கு அவரைப்பற்றி சின்ன அறிமுகம்:
பெயர் - சுகுமாரன்
தகப்பனார் பெயர் - ஜெகநாதன் -தாயார் பெயர் - நாகரத்தினம்
பிறந்த நாள் - ஆகஸ்ட் 21ம் நாள் - 1970 ( ஆவணி 5ம் நாள்)
திருமணமானவர்
கல்வி - முதுகலை - பத்திரிக்கை மற்றும் தகவல்தொடர்பு
கைபேசி எண் - +91 9442783450
மின்னஞ்சல் - sugumarje@gmail.com
வலைப்பூ – http://sugumarje.blogspot.com
மேலும் கொஞ்சம்.. சுகுமார்ஜி வார்த்தைகளிலேயே..
என் முன்னோர்கள் சோதிட ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். என் தந்தைக்கு நானறிந்தவரையில் அத்தகைய ஆர்வமில்லை... ஆனால் நான் பெற்றுக்கொண்டேன்... வீட்டிலிருந்த 'சோதிடக்களஞ்சியம்' நூலை படித்தறிந்ததை அடுத்து, தமிழகத்தில், திருவருள் சோதிட பயிற்சி மூலமாக (ஆசிரியர் திரு. சாந்தலிங்கனார்) பட்டயச்சான்று கல்வி (1996ல்) பெற்றேன். ஆனாலும் 1991ல், வேதாத்திரி மகரிஷியின் குண்டலி தியான பயிற்சி பெற்று (அருள்நிதி) இரண்டு வருட பயிற்சியாளராக பணியாற்றி உள்ளேன்... இதன் பயனாக சோதிடம், கிரகங்கள் பற்றிய அறிவு எளிதாக புரிய ஆரம்பித்தன...
ஷாட் கட் ! ஓவர் டு முருகேசன் ( ஹி ஹி நான் தான் அண்ணாத்தை ) :
அந்த நாள் முதல் இந்த நாள் வரை அல்லாரையும் அண்ணா வா அக்கா வா நம்ம ப்ளாக்ல ஏதாச்சும் எயுதுனு கேட்டுக்கினே இருந்தனா பாவம் சுகுமார்ஜி தான் இப்பத்துக்கு மாட்னாரு.
தமிழ் நடிகைகள் அக்கட பூமிக்கு போய் கொழிக்கிறாப்ல இங்கிலீபீஸ்ல ஒரு ப்ளாக் வைக்கனும்னு ரெம்ப நாளா ஒரு ஜொள்ளு. ஆனால் நம்ம இங்கிலீபீசு கவர்ச்சி நடிகை உடை மாறி பத்தாக்குறையா இருந்ததால "ஆராச்சும் சகாயம் பண்ணுங்கப்பு"ன்னு சொல்லியிர்ந்தேனா அப்பத்தான் நம சுகுமார் சாரு லிங்க் ஆனாரு.

Subscribe to:
Comments (Atom)