Thursday, September 30, 2010

ஆத்தா நான் ஃபெயிலாய்ட்டன் !

நான்:
ஆத்தா ! நான் ஃபெயிலாயிட்டன்..
ஆத்தா:
எப்படி சொல்றே !
நான்:
பின்ன என்ன ஆத்தா 17 மாசமா மாஞ்சு மாஞ்சு எழுதினேன்.. இந்த பார்ப்பானுகளோட பயேடேட்டாவையே தூக்கிப்போட்டேன். இனியாச்சும் முழிச்சிங்கங்கப்பான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன் ..திருந்த மாட்டேங்கறாய்ங்களே..
ஆத்தா:
எத வச்சு இப்படி சொல்றே..
நான்:
டிஎன்.சேஷன்னு ஒரு அய்யரு இருந்தாரே ஞா இருக்கா? அவரு மறுபடி லைம் லைட்ல வர்ராரு
ஆத்தா:
வந்துட்டு போவட்டுமே உனக்கென்னா..
நான்:
அய்யோ ஆத்தா ! என் ஆதங்கத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறியே.. எஸ்.வி சேகர் மாதிரி ஆளாச்சும் நேரிடையா மக்களை சந்திச்சு  எம்.எல்.ஏ ஆனாரு ஆட்டம் போடறாரு. அவரோட வெற்றிக்கும் இந்த சூத்திரங்கதான் காரணங்கறது வேற விஷயம். ஆனால் இந்த டி.என்.சேஷன் மாதிரி ஆளெல்லாம்  ஜன நாயகத்துல மக்களை  சந்திக்காமயே மக்களோட நேரிடையா இன்டராக்ட் ஆகற அரசியல் வாதிகளை ஆட்டிப்படைக்க நினைச்ச பார்ட்டி. மக்கள் ஆதரவோட பெற வேண்டிய,   அரசியல் அதிகாரத்தை கொல்லைப்புற வழியா அனுபவிச்ச  பார்ட்டி.. மீடியால உள்ள குறுக்கு நூல் பார்ட்டிங்க ஓவர் பில்டாப் கொடுத்து தர்மத்தின் தலைவன் ரேஞ்சுல எக்சிபிட் ஆயிட்ட மன் நோயாளி.  இந்தாளு மறுபடி லைம் லைட்டுக்கு வரான் .காச்சி எடுக்க வேணாமா?

ஆத்தா:
சரிப்பா இப்படி கணக்கெடுத்தா தலைமை செயலகத்துல உள்ள துறை செயலாளர்கள், எம்.எல்.ஏ,மந்திரிகளோட பி.ஏக்கள்ள மஸ்தா பேரு அவா தானே இதையெல்லாம் தடுக்க முடியுமா?

நான்:
ஏன் முடியாது. நம்மாளுக குடிக்காம ,கூத்தடிக்காம, காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம் தான் பெருசுன்னு விவகாரத்துல குதிக்காம சாதி பேரால வெட்டு குத்து கொலைன்னு போகாம   யுகம் யுகமா தொடர்ர இந்த பஞ்சகச்சங்களோட சதியை  புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்தா  பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினா ஊதித்தள்ளிரலாமே

ஆத்தா:
ஏன் அதை நீ தான்  எடுத்து  சொல்றது..

நான்:
யாரு நானா? கிழிஞ்சுது போ.. மீடியாங்கறது அவாளோட கோட்டை.1987லயே முதல் கதை பப்ளிஷ் ஆகியும்   என் எழுத்துக்கள்  அட்லீஸ்ட் ஒரு ஐ நூறு பேரோட பார்வைக்கு போக 21 வருஷம் பிடிச்சது..

ஆத்தா:
சரி அந்த ஐ நூறு பேரை எஜுக்கேட் பண்ணு..

நான்:
அதுக்கும் நானே வச்சுட்டனே ஆப்பு..

ஆத்தா:
மறுபடி எதுனா வில்லங்கமா எழுதி தொலைச்சுட்டியா.. மறுபடி யாராச்சும் தடை பண்ணிட்டாய்ங்களா?

நான்:
வேத்தாளு தடை விதிச்சாலும் பரவாயில்லையே நான் யாருக்காக தற்கொலை படை கணக்கா போராடிக்கிட்டிருக்கேனோ அவிகளே தடை விதிச்ச மாதிரி ஆயிருச்சே

ஆத்தா:
என்னப்பா சொல்றே..

நான்:
ரஜினி காந்தை தெரியுமில்லை. அந்தாளை சூப்பர் ஸ்டாராக்கினது சேரிப்பசங்க, சூத்திரப்பசங்க. ஆனால் அந்தாளை அவா அடாப்ட் பண்ணிட்டா. சிவாஜில லாப் டாப் வரை போன பார்ட்டி எந்திரன்ல ரோபோ வரை போயிட்டாரு.. வளர்த்து விட்ட  சனங்களுக்கு அன்னியமாயிட்டாரு. ரஜினி அய்யராகி மகளை மடில உட்கார்த்தி கன்னிகா தானம் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டாரு. நான் இந்த இழவையெல்லாம் வெளிச்சம் போட்டேன். ஒரு பார்ட்டி வந்து ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுருச்சு

ஆத்தா:
அதான் நானூத்தி சில்லறை பேர் படிக்கிறாய்ங்கல்லியா? அது எப்படி ஆளில்லாத கடையாயிரும்?

நான்:
அது  துக்கிளியூண்டா தெரியுது தாயி.. படிக்கிறவா எல்லாம் மெம்பர்ஸ் ஆயிட்டா பொட்டுல அடிச்சாப்ல தெரியுமில்லே..  ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஐ டெட்லைனா வச்சு 500 பேர் சைட்ல மெம்பரானாதான் புது போஸ்ட் இல்லைனா கழண்டுக்கறேனு நிபந்தனை போட்டேன்.

ஆத்தா:
அடப்பாவி ..ஏன் அப்படி வார்த்தைய விட்டே..

நான்:
எல்லாம் விட்ட குறை தொட்டகுறைதான்.. ஒரு நாளு  நீ,  நைனா எல்லாம் ஜாலியா ஏதோ பேசிக்கினு இருந்திங்க..அப்போ நானு சனங்க படற பாட்டை பத்தி பேசினேன்.
நீங்க இதெல்லாம் அவிகவிக விதிப்பானு அசால்ட்டா சொல்ட்டிங்க. நானு அப்போ அந்த விதியை அவிகளுக்கு டிஸ்க்ளோஸ் பண்ணாதானே சரியான ஆட்டம், நீங்க ஆடறது அழுகுணி ஆட்டம்னு வாதம் பண்ணேன். அப்போ நைனாவுக்கு மூக்கு மேல கோவம் வந்து நீயே போய் சொல்லுன்னு சாபம் உட்டுருச்சு..

ஆத்தா:
அடப்பாவி இதெல்லாம் எப்படி உனக்கு ஞா இருக்கு.

நான்:
அட நீ வேற.. இதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ஞா இருக்குன்னு சொல்ல முடியாது. ஒரு குன்ஸா கெஸ் பண்ணதுதான்..

ஆத்தா:
சரிப்பா நீ தான் விதியோட சீக்ரெட்டையெல்லாம் போட்டு உடைச்சிட்டயே .. அந்த விதியை எப்படி நெளிக்கிறது,வளைக்கிறதுன்னெல்லாம் கூட ஓப்பன் பண்ணிட்டயே அப்பாறம் என்ன வில்லங்கம்?

நான்:
வில்லங்கம் ஒன்னுமில்லை ஆத்தா.. ஆளில்லாத டீக்கடைன்னு ஒரு பிக்காலி சொல்லிருச்சே. இல்ல துரை நம்ம கடையில ஐ நூறு பேரு பெஞ்சு மேல குந்திக்கினு கீறாங்கோன்னு சொல்லலாமேன்னுட்டு..

ஆத்தா:
மறுபடி வில்லங்கம் பண்ணிக்கிட்டயா? டெட் லைன் எதுனா வச்சுட்டயா?

நான்:
அதேதான் . இப்போ அக்டோபர் 2 னு வச்சிருக்கன்..இன்னைய தேதிக்கு 254 பேர் சேர்ந்திருக்காய்ங்க.. இது ஐ நூறு ஆகப்போறதுமில்லை ..நான் புதுப்பதிவு போடப்போறதுமில்லை..

ஆத்தா:
இந்த இழவைத்தான் அந்த நாள்ளயே நானும் நைனாவும் சொன்னோம். சனங்க தங்களுக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அதைத்தான் செய்வாய்ங்க.. அவிகள திருத்தமுடியாதுன்னு மன்னாடினோம் கேட்டியா?

நான்:
கேட்கலையே.. இப்போ இன்னாதான் பண்றது

ஆத்தா:
மறுபடி பாட்டெழுதறது..

நான்:
பாட்டா உன்னை வச்சா கிழிஞ்சது போ.. தமிழ்ல எழுதினதையெல்லாம் மதுரை மீனாட்சி கோவில் இ.ஓ க்கு அனுப்பினேன்.அவன் அதை பிருஷ்டத்துங்கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டிருக்கான். தெலுங்குல எழுதினதையெல்லாம் இங்கிலீஷ் லிபில அடிச்சு வச்சேன். அப்பாறம் ப்ரிண்ட் எடுத்து வச்சேன். அதை காப்பி பண்ணவச்சேன் அதெல்லாம்  வீட்ல கடந்து தூங்குது..மறுபடி பாட்டா வேணாம் தாயீ..

ஆத்தா:
ஏம்பா அலர்ரே..

நான்:
பின்னே என்ன ?  உன்னை நினைச்சு எழுத ஆரம்பிச்சா செந்தமிழா ஊறுது. தமிழ் சனத்துக்கு தமிழ்னாலே வேப்பங்காயா கசக்குது .. இங்கன ஏதோ பேச்சுத்தமிழை வச்சு கதை பண்ணிக்கிட்டிருந்தேன்.. ஒரு நானூத்தி சில்லறை பேரு படிச்சிக்கிட்டிருந்தாய்ங்க.இப்ப அதுவும் போச்சு ..

ஆத்தா:
அப்போ இன்னாதான் பண்ணப்போறே..

நான்:
நீ ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி கேட்டாலும் உன் மனசுல இன்னா நினைச்சு இதெல்லாம் பண்றேன்னு புரியுது.. நான் ஃபெயிலாயிட்டேன்னு ஒத்துக்கிடனும். ஆகே பீச்சே மூடிக்கிட்டு மறுபடி தபஸ்ல இறங்கனும். இதானே உன் டார்கெட்

ஆத்தா:
அப்படியே என் மனசை படிக்கிறியே ராசா .. கோ அஹெட்.

நான்:
ஆத்தா ஆங்காரி( ஈகோயிஸ்ட்) ங்கற உன் பேரை ஜஸ்டிஃபை பண்ணிட்டே பார்த்தியா..  நான் ஃபெயிலாயிட்டேனு ஒத்துக்கிட்டா உன் ஈகோ சேட்டிஸ்ஃபை ஆயிரும். சனம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான் தோத்துப்போயிரனும். நீ ஜெயிச்சுரனும்  . சக மனிதர்களை நட்டாத்துல விட்டுட்டு என் சொந்த மோட்சத்துக்கு மட்டும்  நான் கமிட் ஆயிரனும். இதானே உன் அஜெண்டா .. ஓகே ஓகே .. தற்சமயத்துக்கு அப்படியே நடக்கட்டும்.. ஒரு நாளில்லை ஒரு நாள் சனம் என் எழுத்தோட வீச்சை புரிஞ்சிக்கத்தான் போறாய்ங்க.. என்னைக்கோ ஒரு நாள் என் சைட் மெம்பர்ஸோட எண்ணிக்கை 500 ஆகத்தான் போகுது அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி. தற்சமயத்துக்கு அம்பேல் உனக்கு சந்தோசந்தானே அம்பாள்!

ஆத்தா:
உன்னையெல்லாம் திருத்த முடியாதுப்பா.. இப்பயாச்சும் புத்தி வந்ததே இனியாச்சும் ஒழுங்கு மரியாதையா பொளப்ப பார்ப்பேனு நினைச்சேன் .. ஊஹூம் ஒன்னும் தேறாது போல இருக்கு.