Showing posts with label Amman. Show all posts
Showing posts with label Amman. Show all posts

Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி விளக்கம் : முன்னுரை (அடியேன்)

அண்ணே வணக்கம்ணே !
வலைப்பூ ,வலை தளம்,முக நூல் வழியா  ஏற்கெனவே அறிமுகமான   நாம  இப்போ திரு சொக்கலிங்கம் ராம நாதன் தொகுப்பில் வெளியாகும் இந்த மின்னூல் வழியா  சந்திக்கிறோம். சாதாரணமா திருமணமான பெண் பெயருக்கு மிந்தி ஸ்ரீமதி தான் வரும். ஆனால் நாம ஸ்ரீ மட்டும் தான் கொடுத்திருக்கம்.

ஏன்னா ஆத்தா டூ இன் ஒன். அவனும் அவளே.அவளும் அவளே ! டூ இன் ஒன்  மட்டுமில்லை த்ரீ இன் ஒன். அவனும் -அவளும் -அதுவும் அவளே ! இது மட்டுமா?  எதுவும் யாவும் அவளே தான்.

சதம் = 100 , நாமம் =பெயர் , ஆவளி =வரிசை . (தீபங்களின் வரிசை தீபாவளி - 100 நாமங்களின் வரிசை சத நாமாவளி . நியூஸ் பேப்பர்ல கொடும்பாவி எரிப்புன்னு செய்தி போடுவாய்ங்க. அந்த படத்துல பார்த்திங்கனா சோள கொல்லை பொம்மை மாதிரி ஒரு பொம்மை இருக்கும். அதன் நெஞ்சுல பலானவரோட பேரை கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட் எடுத்து ஒட்டியிருப்பாய்ங்க. ஒடனே அந்த பொம்மை பலானவரோட உருவ பொம்மையாயிருது . இதான் பேருக்கு இருக்கக்கூடிய பவர்.

ஒரு ஏரியா. அந்த ஏரியாவோட தாதா நமக்கு ஏற்கெனவே அறிமுகம்னு வைங்க. அந்த ஏரியாவுல ஆரோ "பில்லக்கா" பசங்க வந்து நம்ம சட்டைய பிடிச்சுர்ராய்ங்க. அப்போ  நாம அந்த தாதாவோட பேரை சொன்னா என்னாகும்? ஒரு தாதா பேருக்கே அந்த பவர். ஆத்தாவோட பேருக்கு எம்மாம் பவர் இருக்கும்?

செரி பெயருக்கு இருக்கும் பவரை  கொஞ்சம் சீரியஸா  பார்ப்பமா?
ஆன்மீகத்துல நாமம் - நாமி ( பெயர் - பெயருக்குடையவர்) ரெண்டுக்கும் வித்யாசம் கிடையாது. ரெண்டுமே சமம். அதாவது ராமனால் முடியற வேலை எல்லாமே ராம நாமத்தாலயும் முடியும். (ஒரு சந்தர்ப்பத்துல ராம நாமம்  ராமனையே ஜெயிச்ச கதையும் நடந்திருக்கு )

நாம ஜபத்துக்கு நான் விரோதி இல்லை. ஆனால் நாமங்களை அவற்றிற்குரிய அர்த்தங்களோடு , தாத்பரியங்களோடு, ரெஃபரென்ஸ் டு தி கான்டெக்ஸ்டோடு சொல்ல வேண்டும் என்பது என் கருத்து, அனுபவம்.

சில சந்தர்ப்பங்கள்ள அர்த்தம் தெரியாம சொல்லிக்கிட்டிருக்கிற  நாமங்கள் கூட பலன் தர்ரதுண்டு. உதாரணமா ஆஞ்சனேயருக்கு ஸ்ரீ ப்ரதாயானு ஒரு பேர் உண்டு. இதற்கு  செல்வத்தை வழங்குபவனேனு அர்த்தம் அதை படிக்கிறப்பல்லாம் லட்சுமிக்கும் அனுமாருக்கும் என்னப்பா சம்பந்தம்னு நினைச்சிட்டே படிக்கிறது வழக்கம்.

சோத்துக்கு லாட்டரி அடிச்சிட்டிருந்த எனக்கு ஓரளவு மினிமம் கியாரண்டி கிடைச்சு இன்னைக்கு ஓரளவு செட்டில் ஆக  காரணம் ஆஞ்சனேயர் தான்னு சில வருஷங்களுக்கு முன்னாடிதான் ஸ்ட்ரைக் ஆச்சு. சீதை செல்வத்துக்கு அதி தேவதையான லட்சுமியோட அம்சம். ராமர் சீதைய தொலைச்சுட்டு அவதிப்பட்டப்போ சீதைய மறுபடி அடைய  ஆஞ்சனேயர் தானே உதவினார். ஆக அனுமார் செல்வத்தை வழங்குபவர்னுதானே அர்த்தமாகுது . அனுபவமாகுது.

என்னைக்கேட்டா எந்த ஒரு நூதன அனுபவமும் போக போக இயந்திரத்தனமா ஆயிரும். உங்க காதலி முதல் முதலா உங்க காதலிய அங்கீகரிச்சப்ப உங்களுக்கு ஏற்பட்ட புல்லரிப்பு, புளங்காகிதம், மயிர் கூச்செறிதலையெல்லாம் இப்ப உங்களால ஞா படுத்திக்க கூட முடியாது.

இந்த நாமாவளிகளும் அப்படித்தான்.  நாமாவளிகளை இயந்திரத்தனமா  சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது. ஏற்கெனவே சொன்னபடி அந்த நாமங்களை, அவற்றின் பொருளை, உட் பொருளை, தாத்பர்யத்தை அறிந்து சொல்லனும். வெறுமனே சொல்லிட்டு மறந்துர்ரதுல்ல. அவற்றை அடிக்கடி சிந்திக்கனும்.

நாமங்கள் ஜஸ்ட் கான்ஷியஸ் மைன்டை தான் டச் பண்ணும். நாமாக்களோட பொருள் சப் கான்ஷியஸ் வரை போகும். அந்த பொருளை குறித்த நிறைவு பெறாத சிந்தனை -சிந்தனையின் தொடர்ச்சி சப் கான்ஷியஸை தாண்டியும் போகும்.  இந்த நிலை வரும் போது கிடைக்கும் பலன் டூ இன் ஒன்னா இருக்கும். ஐ மீன்.. லோகாயதம்+ஆத்யாத்மிகம்.

இந்த நாமாவளியில் உள்ள நாமங்கள் நானே  தொகுத்தவை . நானே வரிசை படுத்தியவை ( ஆல்ஃபபடிக்கல் ஆர்டர்) . எனக்கே எனக்குன்னு உருவாக்கினதாலயா? அல்லது தொடர்ந்து படிச்சுக்கிட்டிருந்ததாலயா தெரியல .. இந்த நாமாக்கள் குறித்த மறை பொருள் எல்லாம் ஸ்பார்க் ஆக ஆரம்பிச்சது . (மறை பொருள் = மறைந்திருக்கும் பொருள் ; மறை =வேதம்??)
ஒவ்வொரு நாமத்துக்கும் பிட்டு பிட்டா ஸ்பார்க் ஆன  விளக்கங்களை அப்பப்போ நம்ம தளத்துல அவுத்து விட்டுக்கிட்டிருந்தம். இதை எல்லாம் நண்பர் சொக்கலிங்கம் ராம நாதன் பொறுமையா தேடிப்பிடிச்சு தொகுத்திருக்காரு அன்னாருக்கு நன்றி . இதை படிக்க போற ஷேர் பண்ண போற உங்களுக்கும் தான்.

-சித்தூர்.முருகேசன்
அனுபவஜோதிடம் டாட் காம்

Friday, August 26, 2011

நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சுங்கோ..


அவன் -அவள்-அது : 22
அண்ணே !
இந்த தொடரை எழுதும்போது என்னடா இது எல்லாம் பழைய சம்பவமா எழுதிக்கிட்டிருக்கம். சனம் ஆருன்னா ஒன்னோட ஆத்தா இப்பம் என்னடா கிழிச்சான்னு கேட்டுரப்போறாய்ங்கன்னு ஒரு குறுகுறு இருந்துக்கிட்டே இருந்தது. ஆனால் ஆத்தாவோட திருவிளையாடல் ஆரம்பமாயிருச்சுங்கோ... நம்ம கம்ப்யூட்டர் திருடு போயிருச்சு..

என்னடா இது எல்லாம் புலம்பலா இருக்குமோன்னு பக்கத்தை மூடிராதிங்க. பால பாடம் இன்னைக்கும் தொடருது. இங்கே அழுத்தி படிங்க.

கருத்து கந்தசாமி கணக்கா சமகால நேஷ்னல் டெவலப்மெண்ட்ஸ் பத்தியும் ஒரு ஐட்டம் தட்டி விட்டிருக்கேன். அதை இங்கே அழுத்தி படிங்க

இனி அவன் அவள் அது ..................


கடந்த பதிவு ஒன்றில் ஆத்தாளுக்காவ தெலுங்குல நான் எழுதின தெலுங்கு கவிதைகளை வலையேற்ற ஒரு ஜகத் சோம்பேறிக்கு பிளாக் அண்ட் வைட் மானிட்டரோட ஒரு கம்ப்யூட்டரை கொடுத்துட்டு வந்தது ஞா இருக்கலாம்.

இன் கம் சர்ட்டிஃபிகேட் வைக்காததால காலேஜ்ல அவன் பையனுக்கு ரூ.31 ஆயிரம் அடிஷ்னலா கட்டவேண்டி வந்துருச்சு. அதை சாக்கா வச்சு வலையேற்றத்தை அவாய்ட் பண்ணிக்கிட்டு வந்தான். ஆத்தா அருளால காலேஜ் கண்டம் மலையேறிப்போச்சு.

இது நடந்து ஒரு வாரம் போல ஆனாலும் பார்ட்டி வலையேற்றத்தை கண்டுக்கற மாதிரி இல்லை. இத்தனைக்கும் அவனுக்கு எத்தனையோ ஆசையெல்லாம் காட்டினேன். மாசத்துக்கு இவ்ளன்னு காசுதரேன். எலக்ட்ரிசிட்டி போர்ட் ஆஃபீஸுக்கு போற வழியில தான் அவனோட மருந்து கடை . தாளி ஒரு டாட் மேட்ரிக்ஸ் ப்ரிண்டர் வாங்கித்தரேன். ஒரு மனு அடிச்சு கொடுத்தாலும் இருபது ரூபா வரும் இப்படி நிறைய.

ஆனால் பார்ட்டி எதையும் கண்டு்க்கலை. நேத்து ராத்திரி கடை பூட்டை உடைச்சு எல்லாத்தையும் வாரிக்கினு பூட்டானுங்களாம் ( நம்ம கம்ப்யூட்டர் உட்பட)

இதை எப்படி புரிஞ்சிக்கிறது புரியலை. காலையில 7 மணி அளவுல ஃபோன் வந்தது. இப்பம் 11.10 இதுவரை நாம என்ன ஏதுன்னு கண்டுக்கலை. இந்த சம்பவம் ஏன் நடந்தது? வலையேற்றத்தை நிரந்தரமா முடக்கவா? அது ஆத்தாளால கூட முடியாத வேலை.

வாழ்க்கையில லட்சியம்னு ஒன்னை வச்சுக்கிட்டு அதை தவிர மத்த எல்லாத்தையும் திராட்டுல விட்டுட்டு ஃபைட் பண்றவுக மேட்டர்ல கிரகங்கள் தோத்துப்போயிரனும்னு ஆத்தாளே ஒரு சாபம் விட்டு வச்சிருக்காளாமே தெரிமா?

இந்த சம்பவத்தால அசமஞ்சமா இருந்தா நம்மாளோட மைண்ட் உசுப்பப்பட்டு / இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் / கில்ட்டியால முழு வேகத்துல வலையேற்றம் நடக்குமோ?

அல்லது இதையே ஒரு சாக்கா வச்சு திராட்டுல விட்டுருவானோ? நமக்கு கம்ப்யூட்டர் திருடு போனதை பற்றி எள்ளளவும் கவலையில்லை.

எதுனா பூட்சின்னா கர்மம் தொலைஞ்சதுனு நினைக்கிற சாடிஸ்ட் நாம. எதுனா வந்தாதேன் பயப்படுவோம். இதும்பின்னாடி எந்த கருமம் வந்திருக்கோன்னு சிந்திப்பம்.


Wednesday, August 24, 2011

அவன் அவள் அது :20


கடந்த பதிவுல ஜகஜ்ஜால புரட்டனான ஒரு ரிப்போர்ட்டரோட மோத வேண்டி வந்தப்போ ஆத்தா எப்படியெல்லாம் ஹெல்ப் பண்ணினாங்கறதை சொல்றதா சொல்லியிருந்தேன். அப்பம் ஸ்டேட்ல சந்திரபாபுவோட உச்சா பெட்ரோலை விட வேகமா எரிஞ்சுக்கிட்டிருந்தது. அடுத்தும் சந்திரபாபு தான் சி.எம்னுட்டு 3 புதுப்பணக்காரவுக காசை தண்ணியா இறைச்சுக்கிட்டிருந்தாய்ங்க. அவிக கிட்ட அதிகமா குளிர்காய்ஞ்சது நிருபருங்கதேன். அவிகளுக்கு (பு.ப) ஸ்டேஷன்லயும் நல்ல வாய்ஸு.

அந்த நேரம் நம்ம தொகுதி எம்.எல்.ஏ ஆளுங்கட்சியோட பழிவாங்கலுக்கு டார்கெட் ஆகி இருந்தாரு. ஆனை படுத்தாலும் குதிரை மட்டம்தானே. இந்த தெலுங்கு தேசம் ஸ்கூலை பத்தி நமக்கு நல்லாவே அனுபவம். தாளி என்.டி.ஆர் ஃபேன் என்ற முறையில என்.டி.ஆர் காலத்துலருந்து உழைச்சிருக்கம்ல. கடேசியா 1999 தேர்தல் வரை ( சந்திரபாபு என்.டி.ஆருக்கு ஆப்படிச்ச பிற்காடும் கூட) தேர்தல் வேலையில எல்லாம் பார்ட்டிசிப்பேட் செய்திருக்கம். அவனுக (ஐ மீன் லோக்கல்) பவிசு நமக்கு நல்லா தெரியும்.

நம்ம எக்ஸ்பார்ட்டி போய் ஒரு ஆளை பிடிக்க நாமளும் அதே கட்சியில இன்னொரு ஆளை பிடிக்க குடுமிப்பிடியாயிரும்னு ஆந்திரபிரபா மேனேஜருக்கு நாம எம்.எல்.ஏ வை பார்க்கலாம்னு சஜஸ்ட் பண்ணேன். அவரு நீயே எதுனா சானலை பிடின்னாரு. ( நாம அவரு 3 தாட்டி ஜெயிச்சு ஹேட்ரிக் அடிச்சப்பல்லாம் அவருக்கு விரோதமாதான் வேலை செய்திருக்கம்)

எந்த சானலை பிடிக்கிற்துன்னு தலையை பிடிச்சுக்கிட்டம். முன்னாள் தி.தி.தே சேர்மன் பூமண கருணாகர் ரெட்டி (இப்பம் ஜகனோட முக்கிய தளபதிகள்ள ஒருத்தரு) ஞா வந்தாரு.

அவருக்கும் நமக்கும் என்ன லின்குன்னு கேப்பிக. சொல்றேன். ஆத்தா ஒவ்வொரு வேலையா செய்தா. வஷக் வஷக்னு ஜெபிச்சதுல ஆராரையோ வசியமாக்கி வச்சுட்டா. நம்மை பத்தி வார்த்தால செய்தி வந்ததை படிச்சுட்டு தன்னோட சர்க்கிள்ள நம்மை ரெம்ப ஸ்லாகிச்சு பேசினதா தகவல்.

அப்பம் நமக்கு ஆ.இ.2000 தவிர வேற வேலையே கிடையாது. உடனே டைரக்டரில அவரோட நெம்பரை பிடிச்சு பேசினம். அவரும் ரெம்பவே ஆர்வம் காட்டினாரா ஃபோன் தொடர்பு அப்படியே கன்டின்யூ ஆயிருச்சு.

நீங்க எங்க எம்.எல்.ஏவுக்கு சொல்லுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்.அதனால பொதுவா மேட்டரை சொன்னம். அவரு " அவ்ளதானே நான் பாபுவுக்கு (எங்க தொகுதி எம்.எல்.ஏ) ஃபோன் போட்டு சொல்றேன்
நீங்க போயி அவரை பாருங்கன்னுட்டு ஃபோனை வச்சுட்டாரு.

எம்.எல்.ஏவை பொருத்தவரை அவரோட கட்சி பவர்ல இல்லைதான். ஆனால் ஆளுங்கட்சி டுபுக்குங்களை நம்பறதை விட இவரை நம்பினா நம்பினோர் கைவிடப்படார். அவரோட கேரக்டர் இது.

ஒடனே திருப்பதிக்கு ஃபோன் போட்டு மேனேஜர் அண்ட் கோவை வரச்சொன்னேன். ச்சொம்மா பார்த்தோம். அவரு " சி.ஐ கிட்டே போங்க என்னை பார்த்ததா சொல்லுங்க. தேவைப்பட்டா ஃபோன் போடுங்க நானே வர்ரேன்" னாரு அவ்ளதேன். அதுக்குள்ள தகவல் தீயா பரவ.. மறுபடி ஸ்டேஷன்ல இருந்து ஆளு. சுதி இறங்கிப்போயி " ஃப்ரீயா இருக்கிறப்ப ஒரு அஞ்சு நிமிஷம் சி.ஐ சாரை பார்த்துட்டு வந்துருங்க சார்"

நம்மை பேசவிட்டா போறாதோ வாத்தியார் படம் மாதிரி " எங் வகக்கை நானே வாகாடுகிறேன்"னுட்டு கிழிச்சு ஆறப்போட்டுர மாட்டோமா? போட்டுட்டம். சி.ஐ சுஸ்தாயிட்டாரு. நம்ம மேனேஜர் " எக்ஸ் பார்ட்டிய திருப்பதிக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணியாச்சு ஜாயின் பண்றதா இருந்தா பண்ணட்டும் சித்தூர்ல டிஸ்டர்ப் பண்ணா சிவியர் ஆக்சன் எடுப்பம்"னு சி.ஐக்கு சொல்ட்டாரு.

யுத்தம் தானே க்ஷத்திரிய தர்மம். அது முடிஞ்சதுமே நம்ம வேலை ஓவர். வெற்றியை அனுபவிக்க எங்கருந்தோ ஒரு பார்ப்பான் வந்துருவான் தானே. அப்படி திருப்பதி ஏடிவிடி பார்ப்பான் புத்தூர் பார்ப்பான் ஒருத்தனை ஸ்டாஃபரா ரெக்கமண்ட் பண்ண நாம வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதாயிருச்சு. அது வேற கதை.

நாம மட்டும் தெலுங்கு தேச க்ரூப்ல போய் வாய வச்சிருந்தம் தாளி ஊறப்போட்டே நாறடிச்சிருப்பானுவ.இது நம்ம லைஃப்ல ஒரு டர்னிங் பாய்ண்ட்.

எம்.எல்.ஏவோட இன்டர் ஆக்ட் ஆக தடையா இருந்தா 15 வருச கம்யூனிகேஷன் கேப் /அல்லது ஒரு தயக்கம் தூளாகிருச்சு. இன்னைக்கு ஜஸ்ட் எம்.எல்.ஏவோட அடிப்பொடிகளுக்காகவே லோக்கல்ல பத்திரிக்கை அதுவும் மல்ட்டிகலர் ந்டத்திக்கிட்டிருக்கம். அதுவும் வெற்றிகரமா.

அடுத்த வாரம் வினாயகர் சதுர்த்தி கம் ரம்ஜான் ஸ்பெஷலும் ரிலீஸ் ஆகப்போகுது. மல்ட்டி கலராக்கி ஒரு வருஷம் கம்ப்ளீட் ஆயிருச்சு. பத்திரிக்கை நடத்தி போன்டியானவுக எத்தீனி பேரு கீறாய்ங்கன்னு உங்களுக்கே தெரியும்.

ஆத்தா மனசு வச்சா பத்திரிக்கை நடத்தி கூட காசு பார்க்கலாமுங்கோ.


Thursday, November 11, 2010

விதவை மைத்துனி

சூ மந்திர காளி : ?
நான் கமெண்டுகளோட எண்ணிக்கைக்கு  முக்கியத்துவம் கொடுக்கிறதை விட்டு மாமாங்கமாச்சு. அதே போல மறுமொழிக்கு மறுமொழி கொடுக்கிறதையும் விட்டுட்டன். ஒரு சிலதுக்கு நிச்சயம் தேவைப்படும்..இதோட தொடர்ச்சி நின்னுரும்னு  நம்பிக்கை பிறந்தா மட்டும் ம.மொ போடறதை வழக்கமா வச்சிருக்கேன்.

இந்த தொடர்பதிவோட தலைப்புக்கு ஒரு பார்ட்டி "சரியான தலைப்பு"னு ம.மொ போட்டிருந்துச்சு. பார்த்திங்களா பத்தி பத்தியா பெரியார்லருந்து மேற்கோள் காட்டி கிழி கிழினு கிழிக்கிறதுல வர்ர எஃபெக்ட் ஒரே ஒரு வார்த்தையில வந்துருச்சு. ஐ லவ் தீஸ் டைப் ஆஃப் கமெண்ட்ஸ்.


ஓஷோ சொல்வாரு "நான் என்ன பேசனுமோ அதைத்தான் பேசிட்டிருப்பேன். தலைப்பெல்லாம் சொம்மா உளுவுளாக்காட்டிக்கு"

யத்பாவம் தத்பவதிங்கறாப்ல ஓஷோவோட எழுத்துக்களை படிச்சு படிச்சு நமக்கும் அந்த கப்பாசிட்டி வந்துட்டாப்ல கீது. என்னோட சாக்தேய சாதனைகளை சொல்றேன்னு தான் இந்த தொடர்பதிவை ஆரம்பிச்சேன். ஆனால் ஸ்ருதி கூட்டவே 4 அத்யாயம் தீர்ந்து போயிருச்சு. சரிங்கண்ணா பதிவுக்கு போயிரலாமா?


மந்த்ரோபதேசம்  நடந்ததென்னவோ 2000,டிசம்பர் 23 ஆம் தேதிதான். ஆனால் சாக்தேய சாதனைகளுக்கான  விதைகள் பால்யத்துலயே விதைக்கப்பட்டுட்டாப்ல இருக்கு. 1 ஆம் கிளாஸ்லருந்தே புவனேஸ்வரிங்கற க்ளாஸ் மெட் இருந்தது ஞா வருது.(1973) எங்கம்மாவுக்கு மார்ல கட்டி வந்தப்ப பார்த்து பயாப்சி பண்ணுங்கனு உசார் பண்ண கைனகாலஜிஸ்ட் பேரு புவனேஸ்வரி.(1984)

1991க்கு முந்தியே (1989க்கு பிறவு) நம்ம ஜாதகத்துல சிவசக்தியோகம் இருக்குன்னு சிவசக்தி உபாசனை ஆரம்பமாயிருச்சு.சைட் ஃபோஸ்ல சிவனும் சக்தியும் உள்ள டாலர் அணிய ப்ளான் பண்ணி ரெடிமேட் கிடைக்காம ஆஞ்சனேயர் டாலர் பின்னாடியே டை போட சொல்லி கழுத்துல   போட்டதும், கவர்,லெட்டர் பேட்ல எல்லாம் அந்த லோகோவை பொறிச்சிக்கிட்டதும்  ஞா வருது.

ச்சொம்மா ஃப்ளாஷ் பேக்கை சொல்லிக்கினிருந்தா கடுப்பாகத்தான் செய்யும். அதனால இந்த சாதனைகளோட   லேட்டஸ்ட் விளைவு  என்னனு பார்ப்போம்.

கடந்த 10 மாசமா ஆக்னேயத்துல பெரிய வேப்பமரம் இருக்கிற சிதிலமான ஓட்டுவீட்ல குடியிருந்ததும் ..  இந்த மழைக்கு எங்கே விழுந்து தொலைச்சுரப்போவுதோனு அவசர அடியா தேடிய இந்த சூப்பர் வீடு கிடைச்சதும்தான்.

மந்த்ரோபதேசம் நடந்த புதுசுல நானா சில கஸ்டம்ஸ் வச்சுக்கிட்டேனு சொல்லியிருந்தேனில்லையா.அதுல மஞ்ச தண்ணியோட வேப்பிலையையும் சொல்லனும்.

நாம என்னதான் நாமர்தா வேலைகள் செய்துக்கிட்டு இருந்தாலும் மாடியில தனியறை கொடுத்துத்தான் ராஜா வீட்டு கன்னுக்குட்டி மாதிரிதான் அப்பா வச்சிருந்தாரு. அதுல கூட அட்டாச்ட் எல்லாம் கிடையாது.( 1984 டு 1991)

இப்ப உள்ளது மாதிரியான  வசதிகள் கொண்ட வீட்ல என் லைஃப் டைம்ல எப்பயும் குடியிருந்ததில்லை. இத்தனைக்கும் வாடகை ஜஸ்ட் ரூ900 தான் வாட்டர் சார்ஜஸ் ரூ 300.ஆனால் சொம்மா சொல்ல கூடாது தூள். ஒரு வராண்டா,அதையொட்டி சமையலறை, பெரிய ஹால், அதையடுத்து பெட் ரூம், அதையொட்டி அட்டாச்ட். ஒவ்வொரு அறையிலயும் பரண், சுவத்துல மானாவாரியா  அலமாரிங்க அட ஷோ கேஸ் கூட இருக்குன்னா பார்த்துக்கங்களேன்.

கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சுவத்துக்கு இடுப்புயரத்துக்கு  பச்சை அடிப்பாய்ங்களே அது மாதிரி இங்கன மெருன். இதையெல்லாம் ஏன் லிஸ்ட் அவுட் பண்றேன்னா..

நம்ம ஜாதகத்துல வீக் சுக்கிரன். ஏதோ சந்திரனோட சேர்ந்து சமாகமனம் பெற்றதால  மதியம் 3 மணிக்கு சோறு, ராத்திரி 12 மணிக்கு டிஃபனுன்னு தரார். ட்ரஸ் விஷயமும் இப்படித்தான்.

தினத்தந்தில நிருபரா இருக்கிறச்ச சொந்த பத்திரிக்கை,ஜோதிஷம், கன்ஸ்யூமர் டிஸ்ப்யூட்ஸுனு பத்துவழில பணம் வர்ர காலத்துல கூட நான் இருந்த வீட்டுக்கு பவர் கிடையாது.

அடுத்து வந்த வீட்ல எலி ராஜ்ஜியம். தெரு லெவலுக்கே ஃப்ளோரிங். தாளி வீட்ல படுத்தா ஃப்ளாட்ஃபாரத்துல படுத்திருக்கிறாப்லயே ஒரு ஃபீலிங் வரும்.

அதுக்கடுத்து வந்ததுதான் வேப்பமரத்து வீடு. வாஸ்து ரீதியில பார்த்தா நொந்து போயிருவிங்க. தெற்கு வாசல். அதுலயும் பக்கா நைருதிலதான் கேட். கிழக்கெல்லாம் கட்டிடம். மேற்கெல்லாம் காலியிடம். அகட விகடம்தான்.

ஆக்சுவலா இந்த வாஸ்துல 6 மாசம் குடியிருந்தா குடும்பத்தலைவன் காலி. அடுத்த 6 மாசத்துல தலைவி காலி. அடுத்த 6 மாசத்துல தலைவாரிசு காலி. உள்ளதெல்லாம் ஓடிப்போயிரனும்.

இந்த எஃபெக்டெல்லாம் வீட்டு ஓனருக்கு 100 சதவீதம் ஒர்க் அவுட் ஆகியிருக்கு. இதுக்கு முன்னாடி குடியிருந்தவுகளுக்கு ஆகியிருக்கு.  ஆனால் நமக்கு மட்டும் பேப்பே. இங்கதான் ஆத்தா நிக்கறா.. ஆத்தரை நிக்க வைக்கிறா.

மேலும் பழங்காலத்து ஓட்டு வீடு பக்கத்து போர்ஷன் விழுந்தே கிடக்க தேள்,பூரான் எல்லாம் லாட்ஜு வைத்தியர் மாதிரி ரெகுலர் விசிட். குடைக்குள் மழை மாதிரி வீட்டுக்குள் மழை. இத்தனை இம்சை இருந்தாலும், இத்தனை களேபரத்துக்கிடையிலயும்   வேப்பமரத்துல கேம்ப் அடிச்சிருந்த ஆத்தாளோட அருளால பொருள் எல்லாம் வந்து சேர்ந்தது. ( மூனு டிவி பாஸ் - ஒன்னை விதவையான என்  மைத்துனிக்கு இரவல் கொடுத்திருக்கேன்) . வைட் அண்ட் ப்ளாக்ல வந்துட்டிருந்த மாதமிருமுறை கலராச்சு. டோட்டல் இன்வெஸ்ட்மென்ட் அதுவரை அஞ்சாயிரம்னா கலருக்கு வந்ததும் 15 ஆயிரமாச்சு. வீட்டுக்கே நெட் கனெக்சன் வாங்கினேன். என் மகள் பீரோ வாங்கினா. 2.5 கொடுத்து எலக் ட்ரிக் ஸ்டவ் வாங்கினா. இன்னம் என்னென்னவோ கண்ட கசுமாலத்தையெல்லாம் வாங்கி சேர்த்தாய்ங்க.

தீபாவளியன்னைக்கு என் ஃப்ரெண்டு லட்சுமி பூஜை பண்றது வழக்கம். அவன் திவாலாகி ஊரை விட்டு ஓடிப்போயி வந்தப்ப மொதல் பூஜைக்கு நான் தான் கூட மாட இருந்தேன்.(2003)

அதோட 2010ல கூப்டான். போனேன். தாத்தா காலத்துல ஜாதிக்காய் பெட்டில காலண்டர் லட்சுமிய ( சிட்டிங்)  ஒட்டி வச்சிருப்பாய்ங்க. அதுக்குத்தான் 10 ஆயிரம் ரூ டெக்கரெஷன்.

இந்த தாட்டி.." லட்சுமிய  நிக்க வைக்கலாம்பான்னேன்" சாதில செட்டியாரா இருந்தாலும் தில்லு துரை. வச்சுத்தான் பார்ப்பமேன்னான். நெட்ல டவுன்லோட் பண்ணி ஃபோட்டோ ப்ரிண்ட் போட்டு பூஜை .

ஒரு அரை லி. பெட்ரோல் எரிச்சு அங்கன இங்கன சுத்தியிருப்பேன். தட்ஸால். ஷாட் கட் பண்ணா 3 ஆவது நாள் இந்த வசந்த மாளிகை.

சுக்கிரன் கிருக காரகன். சுக்கிரனுக்குரிய அதி தேவதை லட்சுமி.

இதுக்கு நான் கொடுக்கிற விளக்கம் என்னன்னா கர்ப காலம் பத்து மாசம். ஆத்தா வேப்பமரத்து நிழல்ல 10 மாசம் அல்லாட வச்சு ,  என் கருமத்தையெல்லாம் ஒழிச்சி கொடுத்த பரிசு இது.

மந்திரோபதேசம் நடந்து சரியா 10 வருஷம் முடியற நேரத்துல சினிமா செட் மாதிரி ஒரு வீடு. வீடுங்கறது உங்க மனசோட நீட்சினு சொல்லியிருக்கேன். வே ஆஃப் திங்கிங்கே மாறிரும். இதான் வாஸ்துவுக்கு அடிப்படை.

ஆத்தாளோட நமக்கேற்பட்ட உறவு -அதிலான திருப்பங்கள் எல்லாத்தையும் சொல்லனும்னா 10 வருஷ கதைய சொல்லனும். நான் 2000 டு 2010 ன்னு லாங் ஜம்ப் அடிச்சுட்டன்.

நோ ப்ராப்ளம் நாளைலருந்து வரிசையா பார்ப்போம். "விஜயவாடா நித்யானந்தம்"னு காதுல சொன்னது.. "கொலுசு சத்தம் கேட்டது" தன்னோட  என்ட்ரியை அக்கம்பக்கத்து  போர்ஷன்ஸ்ல பெரிய ஜாமானா தள்ளி சத்தம் பண்ணி தெரிவிக்கிறது, சூல மேடைக்கு எதிர் வாசல்லயே நம்மை குடி வச்சது.. நூத்துக்கணக்கான அற்புதம்லாம் நடந்தது வாத்யாரே..

எல்லாத்தயும் சொல்லத்தான் போறேன்..

Thursday, September 30, 2010

ஆத்தா நான் ஃபெயிலாய்ட்டன் !

நான்:
ஆத்தா ! நான் ஃபெயிலாயிட்டன்..
ஆத்தா:
எப்படி சொல்றே !
நான்:
பின்ன என்ன ஆத்தா 17 மாசமா மாஞ்சு மாஞ்சு எழுதினேன்.. இந்த பார்ப்பானுகளோட பயேடேட்டாவையே தூக்கிப்போட்டேன். இனியாச்சும் முழிச்சிங்கங்கப்பான்னு தலை தலையா அடிச்சிக்கிட்டேன் ..திருந்த மாட்டேங்கறாய்ங்களே..
ஆத்தா:
எத வச்சு இப்படி சொல்றே..
நான்:
டிஎன்.சேஷன்னு ஒரு அய்யரு இருந்தாரே ஞா இருக்கா? அவரு மறுபடி லைம் லைட்ல வர்ராரு
ஆத்தா:
வந்துட்டு போவட்டுமே உனக்கென்னா..
நான்:
அய்யோ ஆத்தா ! என் ஆதங்கத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறியே.. எஸ்.வி சேகர் மாதிரி ஆளாச்சும் நேரிடையா மக்களை சந்திச்சு  எம்.எல்.ஏ ஆனாரு ஆட்டம் போடறாரு. அவரோட வெற்றிக்கும் இந்த சூத்திரங்கதான் காரணங்கறது வேற விஷயம். ஆனால் இந்த டி.என்.சேஷன் மாதிரி ஆளெல்லாம்  ஜன நாயகத்துல மக்களை  சந்திக்காமயே மக்களோட நேரிடையா இன்டராக்ட் ஆகற அரசியல் வாதிகளை ஆட்டிப்படைக்க நினைச்ச பார்ட்டி. மக்கள் ஆதரவோட பெற வேண்டிய,   அரசியல் அதிகாரத்தை கொல்லைப்புற வழியா அனுபவிச்ச  பார்ட்டி.. மீடியால உள்ள குறுக்கு நூல் பார்ட்டிங்க ஓவர் பில்டாப் கொடுத்து தர்மத்தின் தலைவன் ரேஞ்சுல எக்சிபிட் ஆயிட்ட மன் நோயாளி.  இந்தாளு மறுபடி லைம் லைட்டுக்கு வரான் .காச்சி எடுக்க வேணாமா?

ஆத்தா:
சரிப்பா இப்படி கணக்கெடுத்தா தலைமை செயலகத்துல உள்ள துறை செயலாளர்கள், எம்.எல்.ஏ,மந்திரிகளோட பி.ஏக்கள்ள மஸ்தா பேரு அவா தானே இதையெல்லாம் தடுக்க முடியுமா?

நான்:
ஏன் முடியாது. நம்மாளுக குடிக்காம ,கூத்தடிக்காம, காரியம் பெருசா வீரியம் பெருசான்னா வீரியம் தான் பெருசுன்னு விவகாரத்துல குதிக்காம சாதி பேரால வெட்டு குத்து கொலைன்னு போகாம   யுகம் யுகமா தொடர்ர இந்த பஞ்சகச்சங்களோட சதியை  புரிஞ்சிக்கிட்டு வாழ்ந்தா  பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினா ஊதித்தள்ளிரலாமே

ஆத்தா:
ஏன் அதை நீ தான்  எடுத்து  சொல்றது..

நான்:
யாரு நானா? கிழிஞ்சுது போ.. மீடியாங்கறது அவாளோட கோட்டை.1987லயே முதல் கதை பப்ளிஷ் ஆகியும்   என் எழுத்துக்கள்  அட்லீஸ்ட் ஒரு ஐ நூறு பேரோட பார்வைக்கு போக 21 வருஷம் பிடிச்சது..

ஆத்தா:
சரி அந்த ஐ நூறு பேரை எஜுக்கேட் பண்ணு..

நான்:
அதுக்கும் நானே வச்சுட்டனே ஆப்பு..

ஆத்தா:
மறுபடி எதுனா வில்லங்கமா எழுதி தொலைச்சுட்டியா.. மறுபடி யாராச்சும் தடை பண்ணிட்டாய்ங்களா?

நான்:
வேத்தாளு தடை விதிச்சாலும் பரவாயில்லையே நான் யாருக்காக தற்கொலை படை கணக்கா போராடிக்கிட்டிருக்கேனோ அவிகளே தடை விதிச்ச மாதிரி ஆயிருச்சே

ஆத்தா:
என்னப்பா சொல்றே..

நான்:
ரஜினி காந்தை தெரியுமில்லை. அந்தாளை சூப்பர் ஸ்டாராக்கினது சேரிப்பசங்க, சூத்திரப்பசங்க. ஆனால் அந்தாளை அவா அடாப்ட் பண்ணிட்டா. சிவாஜில லாப் டாப் வரை போன பார்ட்டி எந்திரன்ல ரோபோ வரை போயிட்டாரு.. வளர்த்து விட்ட  சனங்களுக்கு அன்னியமாயிட்டாரு. ரஜினி அய்யராகி மகளை மடில உட்கார்த்தி கன்னிகா தானம் பண்ற ரேஞ்சுக்கு போயிட்டாரு. நான் இந்த இழவையெல்லாம் வெளிச்சம் போட்டேன். ஒரு பார்ட்டி வந்து ஆளில்லாத கடையில யாருக்கு டீ ஆத்தேறேனு கேட்டுருச்சு

ஆத்தா:
அதான் நானூத்தி சில்லறை பேர் படிக்கிறாய்ங்கல்லியா? அது எப்படி ஆளில்லாத கடையாயிரும்?

நான்:
அது  துக்கிளியூண்டா தெரியுது தாயி.. படிக்கிறவா எல்லாம் மெம்பர்ஸ் ஆயிட்டா பொட்டுல அடிச்சாப்ல தெரியுமில்லே..  ஏற்கெனவே ஆகஸ்ட் 15 ஐ டெட்லைனா வச்சு 500 பேர் சைட்ல மெம்பரானாதான் புது போஸ்ட் இல்லைனா கழண்டுக்கறேனு நிபந்தனை போட்டேன்.

ஆத்தா:
அடப்பாவி ..ஏன் அப்படி வார்த்தைய விட்டே..

நான்:
எல்லாம் விட்ட குறை தொட்டகுறைதான்.. ஒரு நாளு  நீ,  நைனா எல்லாம் ஜாலியா ஏதோ பேசிக்கினு இருந்திங்க..அப்போ நானு சனங்க படற பாட்டை பத்தி பேசினேன்.
நீங்க இதெல்லாம் அவிகவிக விதிப்பானு அசால்ட்டா சொல்ட்டிங்க. நானு அப்போ அந்த விதியை அவிகளுக்கு டிஸ்க்ளோஸ் பண்ணாதானே சரியான ஆட்டம், நீங்க ஆடறது அழுகுணி ஆட்டம்னு வாதம் பண்ணேன். அப்போ நைனாவுக்கு மூக்கு மேல கோவம் வந்து நீயே போய் சொல்லுன்னு சாபம் உட்டுருச்சு..

ஆத்தா:
அடப்பாவி இதெல்லாம் எப்படி உனக்கு ஞா இருக்கு.

நான்:
அட நீ வேற.. இதெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை ஞா இருக்குன்னு சொல்ல முடியாது. ஒரு குன்ஸா கெஸ் பண்ணதுதான்..

ஆத்தா:
சரிப்பா நீ தான் விதியோட சீக்ரெட்டையெல்லாம் போட்டு உடைச்சிட்டயே .. அந்த விதியை எப்படி நெளிக்கிறது,வளைக்கிறதுன்னெல்லாம் கூட ஓப்பன் பண்ணிட்டயே அப்பாறம் என்ன வில்லங்கம்?

நான்:
வில்லங்கம் ஒன்னுமில்லை ஆத்தா.. ஆளில்லாத டீக்கடைன்னு ஒரு பிக்காலி சொல்லிருச்சே. இல்ல துரை நம்ம கடையில ஐ நூறு பேரு பெஞ்சு மேல குந்திக்கினு கீறாங்கோன்னு சொல்லலாமேன்னுட்டு..

ஆத்தா:
மறுபடி வில்லங்கம் பண்ணிக்கிட்டயா? டெட் லைன் எதுனா வச்சுட்டயா?

நான்:
அதேதான் . இப்போ அக்டோபர் 2 னு வச்சிருக்கன்..இன்னைய தேதிக்கு 254 பேர் சேர்ந்திருக்காய்ங்க.. இது ஐ நூறு ஆகப்போறதுமில்லை ..நான் புதுப்பதிவு போடப்போறதுமில்லை..

ஆத்தா:
இந்த இழவைத்தான் அந்த நாள்ளயே நானும் நைனாவும் சொன்னோம். சனங்க தங்களுக்கு எது விதிக்கப்பட்டிருக்கோ அதைத்தான் செய்வாய்ங்க.. அவிகள திருத்தமுடியாதுன்னு மன்னாடினோம் கேட்டியா?

நான்:
கேட்கலையே.. இப்போ இன்னாதான் பண்றது

ஆத்தா:
மறுபடி பாட்டெழுதறது..

நான்:
பாட்டா உன்னை வச்சா கிழிஞ்சது போ.. தமிழ்ல எழுதினதையெல்லாம் மதுரை மீனாட்சி கோவில் இ.ஓ க்கு அனுப்பினேன்.அவன் அதை பிருஷ்டத்துங்கீழே வச்சு சூடுபடுத்திக்கிட்டிருக்கான். தெலுங்குல எழுதினதையெல்லாம் இங்கிலீஷ் லிபில அடிச்சு வச்சேன். அப்பாறம் ப்ரிண்ட் எடுத்து வச்சேன். அதை காப்பி பண்ணவச்சேன் அதெல்லாம்  வீட்ல கடந்து தூங்குது..மறுபடி பாட்டா வேணாம் தாயீ..

ஆத்தா:
ஏம்பா அலர்ரே..

நான்:
பின்னே என்ன ?  உன்னை நினைச்சு எழுத ஆரம்பிச்சா செந்தமிழா ஊறுது. தமிழ் சனத்துக்கு தமிழ்னாலே வேப்பங்காயா கசக்குது .. இங்கன ஏதோ பேச்சுத்தமிழை வச்சு கதை பண்ணிக்கிட்டிருந்தேன்.. ஒரு நானூத்தி சில்லறை பேரு படிச்சிக்கிட்டிருந்தாய்ங்க.இப்ப அதுவும் போச்சு ..

ஆத்தா:
அப்போ இன்னாதான் பண்ணப்போறே..

நான்:
நீ ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி கேட்டாலும் உன் மனசுல இன்னா நினைச்சு இதெல்லாம் பண்றேன்னு புரியுது.. நான் ஃபெயிலாயிட்டேன்னு ஒத்துக்கிடனும். ஆகே பீச்சே மூடிக்கிட்டு மறுபடி தபஸ்ல இறங்கனும். இதானே உன் டார்கெட்

ஆத்தா:
அப்படியே என் மனசை படிக்கிறியே ராசா .. கோ அஹெட்.

நான்:
ஆத்தா ஆங்காரி( ஈகோயிஸ்ட்) ங்கற உன் பேரை ஜஸ்டிஃபை பண்ணிட்டே பார்த்தியா..  நான் ஃபெயிலாயிட்டேனு ஒத்துக்கிட்டா உன் ஈகோ சேட்டிஸ்ஃபை ஆயிரும். சனம் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை. நான் தோத்துப்போயிரனும். நீ ஜெயிச்சுரனும்  . சக மனிதர்களை நட்டாத்துல விட்டுட்டு என் சொந்த மோட்சத்துக்கு மட்டும்  நான் கமிட் ஆயிரனும். இதானே உன் அஜெண்டா .. ஓகே ஓகே .. தற்சமயத்துக்கு அப்படியே நடக்கட்டும்.. ஒரு நாளில்லை ஒரு நாள் சனம் என் எழுத்தோட வீச்சை புரிஞ்சிக்கத்தான் போறாய்ங்க.. என்னைக்கோ ஒரு நாள் என் சைட் மெம்பர்ஸோட எண்ணிக்கை 500 ஆகத்தான் போகுது அப்ப வச்சிக்கிறேன் கச்சேரி. தற்சமயத்துக்கு அம்பேல் உனக்கு சந்தோசந்தானே அம்பாள்!

ஆத்தா:
உன்னையெல்லாம் திருத்த முடியாதுப்பா.. இப்பயாச்சும் புத்தி வந்ததே இனியாச்சும் ஒழுங்கு மரியாதையா பொளப்ப பார்ப்பேனு நினைச்சேன் .. ஊஹூம் ஒன்னும் தேறாது போல இருக்கு.

Friday, September 24, 2010

அம்மா சொன்ன பலான கதை

அம்மான்னா வீரம் செறிஞ்ச கதைகள்,( வீர சிவாஜிக்கு அவிக அம்மா சொன்ன மாதிரி )  நீதிக்கதைகள்தான் சொல்லனும் ( காந்திக்கு புத்லி பாய் சொன்ன மாதிரி) னு ஒரு எழுதப்படாத விதி இருக்கு. ஆனா எங்கம்மா எனக்கு  ஒரு பலான கதை கூட சொல்லியிருக்காய்ங்க. அதை அப்பாறம் சொல்றேன். அதுக்கு மிந்தி நீதின்னா என்ன  ,நீதிக்கதைன்னா என்னனு பார்ப்போம்.

நீதிக்கு தலைவணங்குன்னு வாத்தியார் படம் ஒன்னிருக்கு. நீதின்னா எப்படிப்பட்ட
அநீதிக்காரனும் அதுக்கு தலைவணங்கனும் அந்த அளவுக்கு அது பர்ஃபெக்டா இருக்கனும். சமீபத்துல ஒரு ஐ.ஏ.எஸ் ஆள்றவுக பெருசா  பண்றாய்ங்க, நாம சிறுசா செய்தது வெளிய வராதுன்னு இருந்தது ஞா இருக்கும்னும் நினைக்கிறேன்.

நீதிங்கறது அடுத்தவன் வந்து சொல்லனும்னு கிடையாது. அது நம்ம மனசாட்சிக்கே தெரியனும். இந்த ப்ளாகை படிக்கிறவுகளுக்கு நான் யாரு ,என்னனு தெரியாது. நான் உத்தமன்,அஸ்கலித  நைஷ்டிக பிரம்மசாரினு பீலா விட்டாலும் நம்பத்தான் போறிங்க. இருந்தாலும் அல்லாத்தையும் போட்டு உடைச்சேன்.

மேற்படி ஐ.ஏ.எஸ் கூட எப்போ தன் லைஃப் ஸ்டைலை மாத்திக்கிட்டாரோ அன்னைக்கே ராஜினாமா பண்ணியிருக்கலாம்.  பிரச்சினை வர்ரதுக்கு மிந்தியே நான் பலான கோட்டால பதவிக்கு வந்தேன். ஆனால் இன்ன நம்பிக்கைகள் எனக்கிருக்குது, சட்டப்படி இது தப்புன்னா ராஜினாமா பண்ண தயார்னு முன்  கூட்டியே சொல்லியிருக்கனும்.

அதைவிட்டுட்டு முதுகெலும்பில்லாத கலைஞர் அரசு மண்டியிட்டுட்ட மாத்திரத்துல அவர் தர்மத்தின் தலைவனாயிர முடியாது.

சரிங்கண்ணா இப்போ  நீதிக்கதைக்கு வந்துருவம். கதைக்குள்ளாற ஒர் நீதியை வச்சிருக்கிற கதை நீதிக்கதையா? அல்லது ஒரு நீதியை சொல்லவே  எழுந்த கதை நீதிக்கதையா? எப்படியோ கதைக்கும் நீதிக்கும் சேர்த்து இடம் கொடுக்கிற கதை நீதிக்கதைனு வச்சிக்கலாம்.

எங்கம்மா  கதை சொல்றதுலயும் புலி, கதை சொல்லிட்டே வெறும் ரசம் சோத்துக்கு  காரக்குழம்பை சைட் டிஷ்ஷா மாத்திர்ரதுலயும் புலி.

(புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? எங்க சித்திக்கு  - அம்மாவுக்கு தங்கச்சிங்கோ - 20லருந்து 7 வரை பல்வேறு வயசுல பொம்பளை பசங்க- பெரியவ புடவை , கடைக்குட்டி ஜட்டி போட்டுக்கிட்டு அலையும்- அவிக வீட்டுக்கு நான் போனா எல்லா டிக்கெட்டும் ஹால்ல சோஃபாவுலயே ஐக்கியமாயிர்வாய்ங்க- சித்தி சமையலறைலருந்து கரண்டியோட வரும்- இந்த பையன் வந்தாலே இம்சைதான்- எல்லாம் இவன் வாயை பார்த்துக்கிட்ட் உட்கார்ந்துருதுங்கனு திட்டிக்கிட்டே வரும்- சித்தி உத்தேசம்  நம்ம கதைக்கூடத்தை கலைக்கிறது- ஆனா அடுப்புலருந்து எதுனா தீயற வாசனை வர்ர வரை கதை கேட்டுட்டுத்தான் கிச்சனுக்கு அலறியடிச்சுக்கிட்டு ஓடும் )

கதை சொல்றதுல புலியா இருந்து என்னையும் புலியாக்கின எங்க அம்மாவே "கதை கேட்ட நாயி வேட்டைக்கு உதவாது"ன்னும் ஒரு கதை சொல்லியிருக்காய்ங்க. அது டக்குனு ஞா வரலை. அதாவது வெறுமனே கதை கேட்கிறது கிரிமினல் வேஸ்ட். அந்த கதையிலருந்து நமக்கு தேவையானதை க்ராஸ்ப் பண்ணிக்கிற கப்பாசிட்டி இருக்கனும்.

நீங்க கத்துக்க சித்தமாயிட்டா எதுலருந்து வேணம்னா கத்துக்கிடலாம். அதுக்கு கதை,கவிதைன்னு தராதரம்லாம் இல்லே.

நான் டீன் ஏஜ்ல இருந்தப்ப சரோஜா தேவி கதைகள் மாதிரியே  இந்து நேசன்ங்கற புஸ்தவமும் பலான கதைகளுக்கு பிரபலம். வீட்டுக்காரம்மாவுலருந்து வேலைக்காரி வரை எல்லாரும் எல்லாரோடயும் தக் ஜம் பண்ணுவாய்ங்க. சொம்மா ஜிவ்வுனு ஏறும். என்ன ஒரு லொள்ளுன்னா கடைசில கெட்டகாரியம் பண்ண எல்லாரும் ஒன்னு ஜெயிலுக்கு போயிருவாய்ங்க அ கொலையாயிருவாய்ங்க. ஏறினதெல்லாம் பொசுக்குனு இறங்கிரும்.

என்னைக்கேட்டா ஒவ்வொரு மனிதவாழ்க்கையும் ஒரு நீதிக்கதை தான். எப்படி வாழக்கூடாதுங்கற நீதியை சொல்ற கதை. அட ஒவ்வொரு நாளூம் நீதிக்கதைதான் பாஸ்.

இப்ப நான் ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கிற P4 சிஸ்டம் ஆரம்பத்துல வைரஸால லொள்ளு பண்ணாலும் சமீப காலமா சி ட்ரைவ்  லாக் பண்ணிட்டதால பதவிசாதான் வேலை செய்துக்கிட்டிருந்தது.

நம்ம  கிட்டே ஒரு கெட்ட புத்தி என்னன்னா எதையும் அப்கிரேட் பண்ணிட்டே இருக்கிறதுதான். பாண்டான்னு ஒரு ஆண்டி வைரஸ் போட்டிருந்தேன். சுட்டியா வேலை செய்துக்கிட்டிருந்தது.

வைரசை டெலிட் பண்ணலின்னாலும் நியூட் ரலைஸ் பண்ணிரும். கடந்த வாரம் அவாஸ்த் ஆண்டி வைரஸ், அடோப் ரீடர்,டேட்டா ரிக்கவரி சாஃப்ட் வேர்சை இன்ஸ்டால் பண்ணினேன். நேத்து போட்ட நாலு ஐட்டத்தையும் பக்காவா ரெடி பண்ணி, பென் ட்ரைவ்ல போட்டுக்கிட்ட  பொறவு தூசு தட்டினேன். ( இன்னொரு செட் ஆஃப் சாக்கெட்ஸ் போட வசதியா இருந்த கேபினெட் ( டப்பா  )  கேப்ல ஒரு எலி உள்ளாற போய் ஃபேமிலியே நடத்திக்கிட்டிருந்ததுங்கண்ணா)

மறுபடி மக உதவியோட சிஸ்டத்தை கனெக்ட் பண்ணி ஓட விட்டேன்.ஓகே.அவாஸ்தை வச்சு ஒரு ஃபுல் ஸ்கேன் கொடுத்துட்டு நாம ப்ரிண்ட் பண்ண அம்மன் , ஷீரடி பாபா, கிருஷ்ணன்  சத நாமாவளியை ஒரு பாட்டம் படிச்சேன். அவாஸ்த் ஏதோ ஒரு சிஸ்டம் ஃபைலை தூக்கிருச்சு போல . சிஸ்டம் ஆஃப் ஆயிருச்சு.என்னென்னமோ தகிடுதத்தம்லாம் பண்ணியும் பெப்பே.

என் மகளோட லவ்வர் களமிறங்கி என்னென்னவோ கதை பண்ணான் .பெப்பே. டிஸ்ப்ளே வரலை, கீ போர்டு ,மவுசு கூட வேலை செய்யலை, கடைசில ஜேம்ஸை வரச்சொன்னேன் ( இவரை பத்தி ஒரு பதிவே போடனும்)

அஞ்சு நிமிஷத்துல நானா ..வேலை செய்யலையா.. நான் படு சுட்டியாக்கும்ங்கறா மாதிரி பதவிசா வேலை செய்யுது. சிஸ்டம் வேலை செய்யாம இருந்த காலை 10 முதல் இரவு 10 வரை என்னென்னமோ யோசனைகள்.

கடவுள் நமக்கு 16-112 ஐ நிவாசமாக்கின மாதிரி எலிக்கு பி4 ஐ டிசைட் பண்ணாப்ல இருக்கு. அதனோட வயித்தெறிச்சலை கொட்டிக்கிட்டதாலதான் டப்பா வேலை செய்யாம போயிருச்சா? அல்லது சிஸ்டம் இருக்கிற சிமெண்ட் அலமாரியோட மேல் தட்டுத்தான்  ஸ்வீட்டியோட  ( பெண் பாமரேனியன் குட்டி )  டென். சோன் பப்டி மாதிரி வெள்ளை மயிர் பறந்துக்கிட்டே இருக்கும். கம்ப்யூட்டரை க்ளீன் பண்ணப்பறம் அதை பக்கத்துக்கு அறைக்கு ஷிஃப்ட் பண்ணும்படியாவும், இங்கன விடக்கூடாதுன்னும் ஒரு ஜி.ஓ பாஸ் பண்ணியிருந்தேன்.

சிஸ்டம் வேலை செய்யாம போயிரவே டர்ராயிட்டன். ஏழை மக்களை குப்பத்தை விட்டு காலி பண்ண வைக்கிற சினிமா வில்லனுக்கும், எலி , நாயை விரட்டியடிச்ச நமக்கும் என்ன வித்யாசம்ங்கற மாதிரி கில்ட்டி கூட வந்துருச்சு. கில்மா ஐட்டங்க எழுதினப்பல்லாம் ஒன்னும் ஆகலே, மாமியாருக்கு மருமவ சக்களத்திதானு எழுதினப்பயும் ஒன்னும் ஆகலை.

சாக்தேயம் பத்தி ஏதோ நாலு பேரு தெரிஞ்சிக்கிட்டம்னு "அவள்" தொடர் ஆரம்பிச்ச பொறவு இப்படி நடக்குதேனு வருத்தம் + நல்லாவே ரீச் ஆகும் போலன்னு ஒரு நம்பிக்கை. இளையராஜா மொதல் மொதலா ரிக்காரிடிங்குக்கு போனப்பபவர் கட்டாம்ல.

இதையெல்லாம் நான் சொல்ல காரணம்,அக்டோ 2 முதல் விடை பெறுவதான என் அறிவிப்பு என் செல்ஃப்லருந்து வந்ததில்லை. காலத்தோட அஜெண்டாலயே இருக்காப்ல இருக்குனு சொல்லத்தான். லோக்கல்ல  ப்ராண்ட் பேண்ட் வாங்கிரலாமா? அல்லது பி.எஸ்.என்.எல் வாங்கிரலாமானு ரோசிச்சிட்டிருந்த சமயம் அசலுக்கு மோசம் வந்துருச்சு பாருங்க.

நாம ஏறவேண்டிய படிகளை பார்க்கிறோம். கடவுள் நாம ஏறிவந்த படிகளை ஞா படுத்தறான்.  சரிங்கண்ணா நீங்க இவ்ள நேரம் தங்கினதே சாஸ்தி. இப்போ எங்கம்மா சொன்ன பலான கதைய பார்ப்போம்.

அபரஞ்சின்னு ஒரு தாசி. ரெம்ப காஸ்ட்லி. மினிமம் ஆயிரம் வராகன் இருந்தாதான் கதவையே தட்ட முடியும்.அதே ஊர்ல ஒரு பஞ்ச கச்சம். அதுக்கு அபரஞ்சின்னா பயங்கர ஜொள்ளு. ஒரு  நா அவன் கனவுல அபரஞ்சி வந்தா. "தக் ஜம்" எல்லாம் ஜாம் ஜாம்னு நடந்துருச்சு. இந்த சந்தோசமான (?) சம்பவத்தை (?) ஆற்றங்கரைல தன் நண்பர்கள் கிட்டே சொல்லி குஜிலி பண்ணிக்கிட்டிருந்தாரு ஐயரு.

இதை தாசி வீட்டு வேலைக்காரி கேட்டுட்டு ஓனரம்மாக்கிட்டே போட்டு கொடுத்துட்டாள். தாசி பஞ்சாயத்துல ப்ராது கொடுத்துட்டா.

பஞ்சாயத்துக்கும்,குப்பைக்கும் ஒரு ஒத்துமை உண்டு. ரெண்டையும் கூட்டுவாய்ங்க மேறப்டி பஞ்ச கச்சம் கனவுல தன்னை அனுபவிச்சதுக்கு ஆயிரம் வராகன் கொடுத்தே ஆகனும்னு அபரஞ்சியோட டிமாண்ட்.

பஞ்சாயத்துல செட்டியார் ஒருத்தரும் இருந்தாரு. அவர் கிட்டே ஒரு அறிவுள்ள கிளி இருந்தது. ஜட்ஜ்மென்டை அதுங்கிட்ட விட்டாய்ங்க. கிளி லாஜிக்கலா திங்க் பண்ணி ஆயிரம் வராகனை ஒரு சாட்டின் பைல போட்டு கண்ணாடி முன்னாடி தொங்க விட்டு கண்ணாடிக்குள்ள தெரியற பொற்காசு மூட்டைய அபரஞ்சி எடுத்துக்கனும்னு  தீர்ப்பு சொல்லிருச்சு.

இதுக்கு அபரஞ்சி அந்த கிளியை எப்படி பழி வாங்கினாள் ,அந்த கிளி எப்படி தப்பிச்சுருச்சு. எப்படி அபரஞ்சியை மொக்கை பண்ணிருச்சுங்கறதெல்லாம் கூட ஞா இருக்குங்கண்ணா அதையெல்லாம் ஆருனா கேட்டா சொல்றேன்

மொத்தத்துல இன்னிக்கு பதிவோட நீதி :

 நாம ஏறவேண்டிய படிகளை பார்க்கிறோம். கடவுள் நாம ஏறிவந்த படிகளை ஞா படுத்தறான். ( நாம மறந்துட்டப்போ).

Wednesday, September 22, 2010

அவள்

அண்ணே வணக்கம்ணே, எத்தனையோ தொடர்கள் ..எல்லாம் அரைகுறை. இருந்தாலும் என்ன இதோ இன்னொரு தொடர். இதுல அவளுடனான , 2000 டிசம்பர் 23 முதலான என் அனுபவங்களை சொல்ல உத்தேசம். அவள்னா யாருனு கேப்பிக.



எவளுக்குள்ளயும் ஆணினம்  அவளைத்தான் தேடுது. அவளைபத்தி சொன்னா பீலா விடறதா தோணும். எல்லா எழுத்தும் அவளையே குறிக்கும். ஒன்னுக்கொண்ணு முரண்பட்ட எல்லா வார்த்தையும் அவளையே குறிக்கும். காலாயை நமஹான்னாலும் அவதான். காலாதீதாயை நமஹான்னாலும் அவள் தான்.



சூர்ய ப்ரகாசாயை நமஹாம்பாய்ங்க. படக்குனு சந்திரமண்டல வாசினிம்பாய்ங்க. மஹோதர்யைம்பாய்ங்க ( பெரிய வயிறு படைச்சவள் - இல்லாட்டி இத்தீனி ட்ரில்லியன் குட்டிகளை போட்டிருக்கமுடியாதே) டக்குனு நித்ய கன்னிம்பாய்ங்க.



அவளுக்கு ஷண்மதப்ரியேன்னு ஒரு பேருண்டு . ஷண் என்றால் 6 ன்னு அர்த்தம். ஷண்முகன் - ஆறுமுகன். அதை போல ஆறு மதங்கள் உண்டு. ஆறுமதங்களும் பரஸ்பரம் வெட்டுப்பழி,குத்துப்பழின்னு அலைஞ்சாலும் அந்த ஆறு மதங்களும் கொண்டாடற தெய்வம் அவள். அவளை முன்னிலைப்படுத்தும் மதத்துக்கு சாக்தேயம்னு பேரு.



ஏ.பி நாகராஜன், தேவர் மாதிரி பார்ட்டிங்க எத்தீனி படம் எடுத்திருந்தாலும் 2000 டிசம்பர் 23 வரை நமக்கு சாக்தேயத்துல ஆர்வம் ஏற்படலை. அவனருளாலே அவன் தாள் வணங்கி கணக்கா ஜோதிஷம் கத்துக்கிட்ட புதுசுல ( 1990) நம்ம ஜாதகத்துல சிவசக்தி யோகம் இருக்கிறதா படிச்சதுல லெட்டர் பேட்,கவர்ல யெல்லாம் சிவ சக்திகள் சைட் ஃபோஸ்ல இருக்கிற படத்தை லோகோ கணக்கா உபயோகிச்சது உண்டு. என்னோட ஆதர்ச தலைமையகத்துக்கு சிவசக்தி நகர்னு பேரை கூட கனவு கண்டதுண்டு. ஆனால் அதெல்லாம் ஜஸ்ட் சினிமா ஸ்லைடு மாதிரி. படம் என்னவோ 2000 டிசம்பர் 23 க்கு அப்பாறம் தான் துவங்குச்சு. அதுக்கு முந்தி சின்ன ட்ரெய்லர்.



வாணியம்பாடில அக்பர் கவுசரோட பத்திரிக்கைல உதவி ஆசியரா குப்பை கொட்டிக்கிட்டிருந்த காலத்துல ஒரு முஸ்லீம் நண்பர் அறிமுகமானார். அவர் தனக்கு மந்திர தந்திரங்கள்ள கமாண்ட் இருக்கிறதா சொல்வாரு. ஆவிகள்,செய்வினை பத்தியெல்லாம் எங்களுக்குள்ளாற நீண்ட விவாதங்கள் நடக்கும் . ஒரு நா நான் அவரை ரெம்ப கடுப்படிச்சிட்டாப்ல இருக்கு. அவர் நீங்க ரூமுக்கு போங்க நான் ஒரு ஐட்டத்தை அனுப்பறேன். அது என்ன பண்ணுச்சுன்னு நாளைக்கு சொல்லுங்கன்னாரு.



நான் ரூமுக்கு வந்துட்டன். மதிய நேரம் தான். அந்த ரூம் கதவுக்கு உள் தாப்பா கிடையாது. பாட் லாக் தான். குறுக்கால ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை விட்டுட்டு படுத்து படிச்சிக்கிட்டிருந்தேன். திடீர்னு யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. விதி விதிர்த்து போச்சு. உள்ளுக்குள்ள டர்ராகிட்டேன்.



இருந்தாலும் பெரியார் எழுத்தையெல்லாம் படிச்ச பார்ட்டி .ராம பக்தன், வீராஞ்சனேயரோ சிஷ்யன் இந்த பிரமைக்கெல்லாம் பயந்துரலாமா அது இதுன்னு என்னை நானே தேத்திக்கிட்டு ராம நாமம்லாம் சொல்லிட்டு இந்த பக்கம் திரும்பி படுத்தேன். மறுபடி யாரோ தோள்ள தட்டி எழுப்பினாப்ல இருந்தது. நம்முது கல்லு குடல்ங்கறதால ஒன்னுமாகலை .இல்லைன்னா நிச்சயம் பேதியாயிருக்கும்.



ஒடனெ எந்திரிச்சு சட்டைய போட்டுக்கிட்டு பாயை தேடிப்போனேன். "இன்னா பாய் நீங்க.. நானேதோ விளையாட்டுக்கு பேசினா இப்படி டர்ராக்கிட்டிங்களே"ன்னு புலம்பினேன்.



அவரு யாரோ பேய்ங்க் கஸ்டை அனுப்பிட்டு ஃபோன்ல கேட்கிறாப்ல " என்னதான் பண்ணுச்சு சொல்லுங்க"ன்னாரு. நான் மேட்டரை சொன்னேன்.



உ.வசப்பட்டுட்டாரா. அப்படியா தோள்ள தட்டுச்சா தோள்ல தட்டுச்சானு மறுபடி மறுபடி கேள்வி. நான், "அய்யோ விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க பாய்!"னுட்டு துடிச்சேன்.



அதுக்கு அவரு " முருகேசன்! நீங்க எந்த பாதையில பயணிக்க பிறந்திங்களோ அதுக்கான பாதை சித்தமாயிருச்சு. நீங்க புறப்பட வேண்டியதுதான்"னாரு.



அவர் சொன்னதைப்போலவே திமிர் காரணமா கவுசருக்கு டாட்டா சொல்லிட்டு ஊர் வந்தேன்.



அதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையின் முதல் பாகம் ( லலிதா டீச்சர் செய்த வஸ்திராபரணம்ங்கற தலைப்புல கொஞ்சமா சூ காட்டியிருக்கேன் .படிச்சு பாருங்க) அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டான இரண்டாவது பாகம். ரெண்டுக்கும் உள்ள வித்யாசம் என்னனு அப்ஜெக்டிவ் டைப் ஆன்சராவாச்சும் சொல்லியாகனும்.



முக்கியமா இரண்டாவது பாகத்துல இருந்து ஒரே ஒரு எப்பிசோடை யாச்சும் , சுருக்கமாவாச்சும் சொன்னாத்தான் அந்த வாழ்க்கையோட அவலம் , என் ஜப,தபங்களுக்கான உந்துதல் , என் சாதனையை மெச்சி ஆத்தா கொடுத்திருக்கிற இந்த வாழ்க்கை (ரெண்டுத்துக்கும் உள்ள வித்யாசம்) இதெல்லாம் உங்களுக்கு புரியும்.



மனைவி முழுகாம இருக்கா. நிறை மாசம். ஜூன்ல பிரசவம் நடக்கப்போவுது. மே மாசம் கங்கையம்மன் திருவிழா நடக்குது. அதுக்கு ஒரு வாரம் முன்னே இருந்து பயங்கர நெருக்கடி.



ஷீரடி பாபா ரேஞ்சுல இமேஜ் இருக்கிறதால பீடி சிகரட்டுக்கு பஞ்சமில்லைதான். நாம தன்மான சிங்க மில்லையா. கை மாத்து,கடன் எல்லாத்துக்கும் நமக்கு நாமே ஒரு சீலிங் வச்சிருப்பம். அது தாண்டிட்டா தாளி உயிரே போனாலும் அந்த ஜோலிக்கு போக மாட்டோம். அந்த மாதிரி ஒரு நிலை. திருவிழா கத்திரிலதான் நடக்கும். ஜோசியத்தொழிலுகு அன் சீசன். ஒரே ஒரு டீக்கடைல சீலிங் முடியலை. அதனால அங்கன போய் ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதும் மதியம் மறுபடி ஒரு டீ அடிச்சுட்டு ஒரு கப் பால், ஒரு ப்ரெட் வாங்கிட்டு வந்து பொஞ்சாதிக்கு கொடுத்துட்டு முயற்சிகளை தொடர்ரதுமா இருந்தது. மறுபடி ராத்திரிக்கும் அதே ப்ராசஸ்.



கர்பமா இருந்தப்போ பொஞ்சாதிக்கு போதுமான நியூட் ரிஷன் இல்லாமத்தான் என் மகள் மண்ணாந்தையாயிட்டாளோன்னும் ஒரு சம்சயம் உண்டு. ( அகடமிக்ல மட்டும்தான் தொத்தல். அவளும் இப்போ அடோப் ஃபோட்டோஷாப்ல புலியாகி என்னைவிட அதிகம் சம்பாதிக்கிறது வேற விஷயம்)



ஒரு வார கொலைப்பட்டினிக்கப்பாறம் தூரத்து சொந்தமான மாமனுக்கு ரத்ததானம் கொடுத்ததும் இதை கேள்விப்பட்டு எங்கப்பன் "அடடே நாம நினைச்ச ரேஞ்சுல நம்ம பையன் அராத்துல்ல போலிருக்கேன்னு வந்து பேட்ச் அப் ஆனதும் வேற கதை.



இந்த ஒரு வார கதைய வச்சு இப்படியேத்தான் வாழ்ந்தாராக்கும் நினைச்சுராதிங்க. நம்முது கடகலக்னமாச்சா ஏறினா ரயில்,இறங்கினா ஜெயிலுன்னு தாளிச்சிக்கிட்டிருந்தமில்லை. உடுப்பில சர்வருக்கு கொடுத்த டிப் பணத்துல சாப்பாட்டை முடிச்சதும் உண்டு. உடுப்பில ஒரு குடும்பம் சாப்பிட்டா ஆகிற பில்லை ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுத்து ஒரு வாரத்துக்கு பிச்சையெடுக்காதேனு சொன்னதும் உண்டு.



கவுசர் வேலைய நம்பி என் பொஞ்சாதி ஐ நூறு ரூபா வாடகைல வீட்டை பிடிச்சு வச்சிருந்தாளா.. நான் பாட்டுக்கு வேலைய விட்டுட்டு ஊரை பார்க்க வந்துட்டனா .. ஊர்ல இல்லாததால தொழில் வேற படுத்துப்போயிருந்ததா எத்தை தின்னா பித்தம் தெளியும்ங்கற நிலை.



அப்பத்தான் ஒரு க்ரூப் டச் ஆச்சு. அந்த க்ரூப்போட செனேரியோவை விவரிச்சன்னா மூட நம்பிக்கைய பரப்பறான்னு வேட்டியை உருவிருவிங்க. அவிக உலகம் மந்திரத்துல மாங்கா விழற உலகம். ஆவிகள்,தேவதைகள் மார்னிங் வாக் பண்ற உலகம்.



அந்த க்ரூப்ல ஒரு பார்ட்டிய மெல்ல ஓரம் கட்டி ஏம்பா என்னென்னமோ பேசறிங்க. பைசா புரள்ற மாதிரி எதுனா மந்திரம் ஒன்னு சொல்லிகொடுங்களேன்னேன். அந்த ஆளும் எதையோ சொன்னான். எழுதிக்கிட்டேன்.



இதுல ரகசியம் என்ன? அந்த மந்திரம் இதான் :



ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் வஷக் வஷக் வஷக்



நமக்கு ஏற்கெனவே பரிச்சயமான பீஜங்கள் தான். என்.டி.ஆர் வீரபிரம்மேந்திர சுவாமி சரித்ரா படம் எடுத்தாரு. அந்த இன்ஸ்பிரேசன்ல பிரம்மங்காரு தொடர்பான புத்தகங்கள் எல்லாம் நிறைய படிச்சேன் . அவரு ஒரு மூல மந்திரம் உபதேசிச்சிருக்காரு.



அந்த மூலமந்திரம் இதான்:

ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சிவாய ப்ரம்ஹனே நமஹ



இதை ஏற்கெனவே சில லட்சமாச்சும் ஜெபிச்சிருப்பேன். ( இதெல்லாம் இப்ப எடிட் பண்ணி சொல்லிட்டிருக்கிற விஷயம். அந்த சமயம் இதெல்லாம் ப்ளாங்கா இருந்திருக்கும்)



மந்திரத்தை ஒரு பிடி பிடிச்சேன். அப்பத்துல ஜோசியம் தான் முழு நேரத்தோழில். அதோட டைமிங் ரெம்ப குறைச்சல்.ஊர் ஊரா தேசாந்திரம் போயிட்டு வந்ததால க்ளையண்ட்ஸும் குறைச்சல். அதனால 1986 ல ராம நாமத்தை ஒரு பிடி பிடிச்சாப்ல மேற்படி மந்திரத்தை விடாம ஜெபிச்சிட்டிருந்தேன்.



எப்படியோ மந்திரம் வேலை செய்ய ஆரம்பிச்சுருச்சு. அம்மனுக்கு சம்பந்தப்பட்டு நம்ம லைஃப்ல நடந்த மேட்டர் எல்லாம் மாண்டேஜ் ஷாட்ஸ் கணக்கா மைண்ட்ல மின்ன ஆரம்பிச்சுது.



அந்த ஆளு ஏதும் சாங்கியம் சம்பிரதாயம்லாம் சொல்லலை. நானா சிலது ஏற்படுத்திக்கிட்டேன். சிலது காலப்போக்குல சேர்ந்துக்குச்சு. மந்திரம், மந்திரத்துக்குரிய மகராசி, எல்லா (ரு) மா சேர்ந்து என்னெல்லாம் நடத்தி வச்சாய்ங்கனு வரப்போற பதிவுகள்ள விவரிக்கிறேன். ஒரு ஆன்மீக பயணத்துக்கு தயாராயிருங்க. உடு ஜூட்