Saturday, October 31, 2009

எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி

ஆம். இந்திய எம்.பிக்களின் மெயில் முகவரிகள் போலி என்பதை மிக உறுதியாக சொல்லக்கூடிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. கடிதங்களுக்கும், இ மெயில்களுக்கும் பிரபலங்கள் பதில் தராமலிருப்பது சகஜமே (இந்தியாவில்). ஆனால் இந்திய எம்.பிக்களுக்கு நான் அனுப்பிய மெயில்களுக்கு மட்டும் " நோ சச் யூசர்" என்று பதில்வந்தது. இத்தனைக்கும் நான் மெயில் அனுப்பிய முகவரிகள் தனிப்பட்டவை அல்ல. இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தரப்பட்டிருந்தவையே.

மனிதர்கள் போலி என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. இப்போது அவர்களின் மெயில் முகவரிகளும் டுபாக்கூர் என்பது செய்தி தானே. இத்தனைக்கும் நான் ஏன் அவர்களுக்கு மெயில வேண்டி வந்தது ?

நான் இந்திய திரு நாட்டை திருவோடு நாடு என்ற நிலையிலிருந்து திரு (லட்சுமி) வருள் பெற்ற நாடாக மாற்ற 1986 முதல் மண்டையை உடைத்துக்கொண்டு 1997 நவம்பரில் அதற்கு இறுதி வடிவம் கொடுத்தேன்.அதன் பெயர் ஆப்பரேஷன் இந்தியா 2000.

என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை எம்.பிக்களுக்கு வினியோகிக்கும்படி கோரி லோக்சபா ஸ்பீக்கருக்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அவை என்ன கதியானது என்பதை எனது பழைய பதிவுகளில் தேடி படித்துக்கொள்ளவும்.

இப்பத்தான் எல்லாம் ஹைடெக் ஆயிருச்சே. மெயிலுக்கே தட்டினா போவுது என்று தான் மெயிலினேன். அப்பதான் " நோ சச் யூசர்"னு பதில் வந்தது. ஒருத்தர் ரெண்டு பேருக்கு அனுப்பினதுக்கு மட்டுமல்ல ஒரே ஒரு எம்.பி.யை தவிர அனைத்து எம்.பிக்களுக்கு அனுப்பின மெயிலுக்கும் இதுதான் பதில்