Wednesday, August 25, 2010

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?

அண்ணே வணக்கம்ணே ,

இந்த மேட்டர்ல ஒரு பத்து நாளைக்கு சின்னதா ஒரு தொடர் பண்ணலாம்னு உத்தேசம்.( மறுபடியுமாஆஆஆஆஆ)



கில்மா ஜோசியம் ,   பகவத்கீதை ஒரு உட்டாலக்கடி தொடர்களும் தொடருது.



இந்த தொடருக்கு "திருமண(ன) முறிவுகளுக்கு முறிவு "ன்னிட்டு ஒரு தலைப்பையும் வைக்கலாம் தான். ஆனால் ரீச் ஆறது கஷ்டம் அதனாலதான் ஆசை 60 நாள் மோகம் 30 நாள்தானா?ன்னு டைட்டில் வச்சிருக்கன். எவனாச்சும் கண்ணாலத்துக்கப்பறம் பெண்டாட்டியோட நெருக்கமா இருந்தா பெருசுங்க விடற டயலாக் இது தான் . உபரியா ஒரு ஹூங்காரம் வேற,



திருமணம்ங்கறதே இயற்கைக்கு விரோதமானதுதான். ஆனால் இந்த மேரேஜ் செட் மட்டும் இல்லைன்னா சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் படி பார்த்தா சோனி, முண்டத்துக்கெல்லாம் லைஃப் பார்ட்னரே கிடைக்காம கையில பிடிச்சுக்கிட்டு அலைய வேண்டியதுதான் ( மொபைல் ஃபோனை சொன்னேன்) .



நான் அரசு நிர்வாகம் சீர்பட ஒரு சஜஷன் கொடுக்கிறது வழக்கம். மன்சனை மன்சனா நினைச்சு ப்ளான் பண்ணா எந்த ப்ளானா இருந்தாலும் அது ஃபணாலாயிரும். மன்சனை மிருகமா நினைச்சு ப்ளான் பண்ணா சூப்பர் சக்ஸஸ் கியாரண்டி.



திருமணங்கறது மன்சனை மிருகமா நினைச்சு ஏற்படுத்தின அமைப்பு அதனாலதான் இன்னைக்கும் தூள் பண்ணுது. ஆனால் காலத்தின் கோலம் திருமண கல் கோட்டைய தூள் பண்ணியே தீர்ரதுனு ஆண் பெண்கள் டிசைட் ஆயிட்டாய்ங்க இதுக்கு ஒரு தீர்வை முன் வைக்கத்தான் இந்த பதிவு.



மன்சாள்ள பல ரகம் இருக்கு பாஸ். உடல்,மனம்,புத்திங்கற 3 டைமன்ஷன்ல வாழற சனம் நாட்ல இருக்கு. உடல்ங்கறது காட்டுமிராண்டி . உடல் மட்டத்துல வாழற சனம் கண்ணால கட்டியே தீரனும். இல்லைன்னா பவர் கட்ல, சிட்டிபஸ் கூட்டத்துல பாஞ்சுருவாய்ங்க.



( இவிக நேரம் நல்லாருந்து பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கிடைச்சுட்டா பிரச்சினையில்லை. இவிகளுக்கு கண்ணாலமும் தேவையில்லை) .



அடுத்தது மனம். மனசு சஞ்சலம் நிறைஞ்சது. மாறிக்கிட்டே இருக்கும். நான் 10 வயசுலருந்து லவ் பண்ணேன். 14 வருசத்துல நான் லவ் பண்ண குட்டிகளோட எண்ணிக்கை மட்டும் செஞ்சுரியை தாண்டிரும். ( இதை படிக்கற நீங்க மட்டும் என்னவாம். இதே கேஸுதான். நான் ஏதோ தில்லு துரைங்கறதால போட்டு உடைச்சேன் . நீங்க நகராட்சி டம்பிங் ஏரியா மாதிரி குவிச்சு வச்சிருக்கிங்க)



எதுக்கு சொல்றேன்னா மனித மனம் அந்த அளவுக்கு சஞ்சலமானது. மன மட்டத்துல வாழற சனத்துக்கும் கண்ணாலம் அவசியம். இல்லைன்னா சமூகம் நாறிப்போயிரும். நீங்க எத்தனை தாட்டி கண்ணாலம் கட்டினாலும் மனசு மாற்றத்தை தான் விரும்பும்.



அடுத்தது புத்தி. புத்தின்னா அரை குறை புத்தியெல்லாம் இருந்தா வேலைக்காதுங்கோ.சூரியன் உதிச்ச பிறவு கயிறு கயிறா,பாம்பு பாம்பா தெரியற மாதிரி பச்சக்குனு நெஜத்தை உணர்ர புத்தி இருக்கனும். அதுல ஈகோ இருக்க கூடாது. புத்திக்கு பிரமைகள் இருக்காது, இங்கன மாறாதது மாற்றம் ஒன்னுதான்னு தெரியும். மாற்றத்துக்கு சித்தமா இருக்கும். எதையும் லாஜிக்கலா தான் ரோசிக்கும். கற்பனைக்கு இடம் தராது. எதையும் இறுக்கிக்க துடிக்காது.இப்படியா கொத்த அக்மார்க் புத்தி மட்டத்துல வாழற சனம் கண்ணாலமில்லாமயே சேர்ந்து வாழலாம்.



சரிங்கண்ணா புருசன் பொஞ்சாதி பிரச்சினைக்கு தீர்வு தரேன்னிட்டு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா எப்படினு அவசரப்படாதிங்க.



நிலைமை எப்படினா இருக்கட்டும் - சம்சாரம் தாய் வீட்டுக்கே போயிருக்கட்டும் - விவாகரத்து கேட்டு நோட்டீஸ் கூட கொடுத்திருக்கட்டும் - வீட்டுக்கொடுமை,வரதட்சிணை வழக்கு போட்டிருக்கட்டும் - செயிலுக்கு கூட அனுப்பியிருக்கட்டும். அவிக வந்து குடும்பம் நடத்தனும் - உங்க இல்வாழ்க்கை சிறக்கனும் - தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் மாதிரி உங்க மனைவி மாறிரனும் -இதானே உங்க கோரிக்கை.



ஓகே . நாளைலருந்து பிரச்சினை ஏன் வருது? அதை வளர்க்கறது எது? இந்த பிரச்சினைகளுக்கான கர்ப்பப்பை எது ? அதுக்கு ஒரு லூப் மாட்டறது எப்படிங்கற மேட்டரையெல்லாம் அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம்.