அண்ணே வணக்கம்ணே,
இன்றைய ஸ்பெசல்:
வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் : 4
"மாறும் வாழ்க்கைமுறைகள் - நீர்க்கும் ஜோதிட சித்தாந்தங்கள்"
ஆமாங்கண்ணே ..இன்னைக்கு வாஸ்து சாஸ்திர ரகசியங்கள் : 4 ஆம் அத்யாயம் போட்டிருக்கேன். நாட்கள் போக போக இந்த தொடர் பதிவு காலம் கடந்து நிற்கும்ங்கற நம்பிக்கை அதிகரிச்சுட்டே இருக்கு.ஆகஸ்ட் 15 முதல் இதெல்லாம் "ஃபார் மெம்பர்ஸ் ஒன்லி" ஆகப்போவுது. அதுக்குள்ளாற மெம்பராயிருங்கண்ணே.
கையோட கையா "மாறும் வாழ்க்கைமுறைகள் - நீர்க்கும் ஜோதிட சித்தாந்தங்கள்" ங்கற தலைப்புல கடந்த பதிவுல கோடி காட்டின வாஸ்து நிபுணர் கே.வி.முனி அவர்களுக்கும் எனக்கும் இடையில் நடந்த ஒரு வில்லங்க சம்பவத்தை விவரிச்சிருக்கேன்.மர்ம நாவல் கணக்கா இருக்கும் படிச்சு பாருங்க. இதுல நிறைய சரக்கும் இருக்கு.
சொம்மா அசால்ட்டா மொக்கை போட்டு ரெம்ப நாளாச்சு. தமிழ் மணம் தடை போட்டதும் லேசா டர்ரானது உண்மைதான். இரெஃபரர் கணக்குப்படி நம்ம ப்ளாகுக்கு நிறைய பேர் தமிழ் மணத்துலருந்துதான் வர்ரது வழக்கம். ஆனால் இந்த பத்து பதினைஞ்சு நாள்ள குறிப்பா சொன்னா "வாஸ்து வாஸ்தவம் தான்" பதிவுக்கப்புறம் ஏறுமுகம்தான். இப்ப தமிழ் மணம் தடை போடறதுக்கு முந்தி இருந்த சராசரி வருகைகளை எட்டிப்பிடிச்சாச்சுங்கோ.
பிரபாகரன் மேட்டர்ல அவர் உயிரோடத்தான் இருக்காருன்னு அடிச்சு சொல்லியாச்சு.
( நமக்கு முன்னாடியே ஒரு பார்ட்டி கணிச்சிருந்தது ஆச்சரியம்) . டிசம்பர் 6 வரை குரு வக்கிரத்துல தான் இருக்காரு. கிரகங்கள் வக்கிரம் போறச்ச பழைய சம்பவங்கள்ளாம் ரிப்பீட் ஆகும்னு ஒரு கணக்கு.
கலைஞர் காங்கிரஸ் எதிர்பபாளரா மாறலாம் (அதென்னவோ ராகுல் காந்தி தொகுதி பங்கீட்டு பே.வா.யை 100 சீட்லருந்து ஆரம்பிக்கலாம்னாராமே. நெஜம்தானா? காங்கிரஸ் மறுபடி கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையா தேயலாம்.
தெலுங்கானால 12 க்கு 12 சீட்ல தோத்திருக்கு இதுவே காங்கிரஸ் அழிவுக்கு ஆரம்பமோ என்னவோ? ஒய்.எஸ்,.ஆர் இருந்திருந்தா பாதிக்கு பாதியாவது அடிச்சிருப்பாரு.கு.ப ஜகனை தெலுங்கானாவுக்குள்ள டூர் அடிக்க விட்டிருந்தா ரெண்டு மூணாச்சும் தேறியிருக்கும். தெலுங்கானால வாங்கின உதைக்கு அரண்டு போய் உள்ளாட்சி தேர்தல்களை ஆறுமாசத்துக்கு ஒத்தி வச்சுட்டாய்ங்க.
இன்னைக்கு ( ஆகஸ்ட் 1) சந்திரன் மீனத்துல(ஜலராசி) இருந்ததால+ அங்கன குரு நின்னு அவரை கன்னில இருந்து சனி +செவ் பார்த்ததாலயோ என்னவோ நிறைய ஏரி,குளத்துல மூழ்கி செத்துருக்காய்ங்க.
என்னதான் தமிழ் ஓவியா மாதிரி பார்ட்டிங்க கிழி கிழின்னு கிழிச்சாலும் ஜோசியத்துல விசயம் இருக்குங்கண்ணா. என்னடான்னா அதை ஒரு பொது நல நோக்கோட,சேவை நோக்கோட முன்னெடுத்து செல்ல மாட்டேங்கறாய்ங்க.
உதாரணமா இப்ப சனி +செவ் சேர்க்கையிருக்கு. செப்டம்பர் 5 வரை இருக்கு. இந்த பீரியட்ல பூசம், அனுஷம்,உத்திரட்டாதிங்கற சனிக்குரிய நட்சத்திரங்கள்ளயும், மிருகசிரம்,சித்திரை ,அவிட்டம்ங்கற செவ்.க்குரிய நட்சத்திரங்கள்ளயும் கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்தா நன்னாருக்கும். உ.ம் மறியல்,ஊர்வலம் இத்யாதிக்கு அனுமதி கொடுக்காம இருக்கலாம். உயிர் சேதத்தை குறைக்கலாம்.
ஆமாங்கண்ணா பாவம் கருணாஸ கூட இலங்கைக்கு போக விடமாட்டாய்ங்க போலிருக்கு. காரியம் பெருசா வீரியம் பெருசான்னா காரியம்தான் பெருசு இதை எப்பத்தான் சீமான்,வைகோ வகையறாக்கள் புரிஞ்சிக்க போறாங்களோ?
அப்பாறம் தமிழ் நாட்ல முன் கூட்டி தேர்தல் வரும்னு பேசிக்கிறாய்ங்க நெஜமாவா? இடைத்தேர்தல் ஃபார்முலா எல்லாம் பொதுத்தேர்தலுக்கு ஒர்க் அவுட் ஆகுமா?
எந்திரன் பாட்டு எப்படி இருக்குனு வாசனை கூட பார்க்கலை. ரஜினிக்கு சிம்ம லக்னம் மகர ராசினு ஞா . மகரத்துக்கு முதலீட்டை காட்டற 9 ஆவது பாவத்துல சனி செவ் சேர்ந்திருக்காய்ங்க. சரத் குமாரோட படத்தை நெட்ல விட்ட மாதிரி விட்டுர்ராய்ங்களோ இல்லை படம் பப்படமாக போவுதோ தெரியலிங்கண்ணா.
ரஜினி காலசர்ப்பதோஷ ஜாதகர். (ராகு கேதுக்களிடையில் அனைத்து கிரகங்களும்-ராகு கேதுன்னா நிழல்கள் )அவர் வெளிச்சத்துக்கு வந்ததே லக்கி டிப் மாதிரி. இதுல ரோபோ எல்லாம் கேது காரகத்துவம்.வெளி நாட்டு கொலாபரேஷனெல்லாம் சக்ஸஸ் ஆகனும்னா ராகு பலம் தேவை. ரெண்டுமே பலமிழந்தாதலதான் கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலருனு வாழ்ந்துக்கிட்டிருக்காரு. யந்திரன் நெஜமாலுமே ரஜினியை சன்னியாசியாக்கிருமானும் ஒரு சம்சயம் உண்டு.
நித்யாவுக்கு விஷத்துல ஒரு கண்டம் இருக்கு, சந்தேகமரணத்துக்கு வாய்ப்பு இருக்குனு ஒரு குண்டை போட்டேன். அது வெடிக்கிற காலம் நெருங்கி கிட்டிருக்கு. நண்டு கொழுத்தா வளையில தங்காதுன்னு நித்யா அரசியல் வேற பண்ண ஆரம்பிச்சுட்டாரு போல. சர்ப்ப தோஷ கேஸுங்கறதால எதிரிகளை விட நண்பர்களாலதான் இந்த கண்டம் ஏற்படும்போல.
தாத்தா மேட்டர், தாத்தாவோட வாரிசுகளோட மேட்டருக்கும் செப்ட. 5 தான் டெட்லைன்.பார்ப்போம். பலன் சொல்றப்ப நான் கிரகம் சொல்றதை மட்டும்தான் கவனிப்பேன். யதார்த்தத்தை கணக்குலயே வைக்கமாட்டேன். ஒன்னு நடக்கும்னு சொல்லும்போது இதெல்லாம் நடக்கிற விஷயமானு உங்களை மாதிரியே எனக்கும் தோணும். ஆனால் அது மெட்டீரியலைஸ் ஆகும்போது அது எப்படி நெஜமாலுமே நடந்ததுனு நானும் நிறைய சந்தர்ப்பத்துல ஆச்சரியப்பட்டிருக்கேன்.
அம்மாவுக்கு ரெண்டுல சனி பேசியே கெட்டுப்போகப்போறாய்ங்க. மேலும் குருவேற எட்டுல இருக்காரு. களி திங்க போறாய்ங்க.ஸ்டாலினோடதும் இதே ராசிதான். பார்ப்போம்.
வாஸ்துன்னா வீடு. வீடுன்னு ஒன்னிருந்தா அதுல பெட் ரூமும் இருக்குமில்லியா. அடுத்த பதிவுல மசாலா கியாரண்டி தம்பிகளா. அடிச்சு தூள் கிளப்புங்க. மறக்காம நம்ம சைட்ல மெம்பராயிருங்க. உங்க ஆன் லைன் நண்பர்களையும் மெம்பராக்குங்க. ஆகஸ்ட் 15 முதல் வேற எந்த திரட்டிலயும் பிங் பண்றதா இல்லை. பதிவுகளை படிக்கிற யோகம் ஒன்லி ஃபார் மெம்பர்ஸ்தான். அப்பாறம் உங்க இஷ்டம்.உடுங்க ஜூட்