Monday, August 9, 2010

நாட்டு நடப்பு

என்னதான் வாஸ்து,கில்மா வாஸ்துனு  ஒரு பக்கம்  ஜல்லியடிச்சிக்கிட்டிருந்தாலும் மறு பக்கம் சைனால தொடர் சுரங்க விபத்துகள்,காஷ்மீர்ல துப்பாக்கி சூடுகள்,  ஊரடங்கு உத்தரவு, அடை மழை, கோதாவரில வெள்ளம் இதை எல்லாம்  நினைச்சு மனசுல  நடுக்கமும் தொடருது. இந்தியாவுல உள் நாட்டு யுத்தமில்லே. யுத்தமேதும் நடக்கலை. இருந்தாலும் ஜஸ்ட் ஒரு எஸ்.ஐ, ஒரு எஸ்.பி, ஒரு கலெக்டர் டீல் பண்ணி சால்வ் பண்ணக்கூடிய மேட்டர்ல கூட பயங்கரமா சொதப்புறாய்ங்க. அரசு இயந்திரம் துருப்பிடிச்சு கிடக்கு. டாப் டு பாட்டம் தேக்கமிருக்கு.

பிரச்சினையோட ஆணிவேரை அசைச்சு பிடுங்கறத விட்டுட்டு பக்கவேர்,சில்லி வேர்களை பத்தி சந்து முனையில  சிந்து பாடறாய்ங்க.  இந்திய இஞ்சினீர்ஸுல  நிறைய சதவீதம் பேருக்கு வேலையே தெரியாதுன்னு ஒரு சர்வே சொல்லுது. பெண்ணை கழுத்தை நெறிச்சு கொன்னு சூட்கேஸ்ல வச்சு பஸ்ஸ்டாண்ட்ல விட்டுட்டு போன கேஸ டிஸ்க்ளோஸ் பண்றதுக்குள்ள  குழந்தைய துண்டு துண்டா வெட்டி கேரியர்ல போட்டு புதைச்சிருக்காய்ங்க. பரவால்லய்யா நாடு  நல்லா டெவலப் ஆயிரும்.

அரசியலை பத்தி எழுதனும்னாலே அருவறுப்பா இருக்கு. இருந்தாலும் என்ன பண்றது " சுக்க சிராதோ கோடி மெதள்ளு கதுலுதாயி" (ஒரு துளி மையால் கோடி மூளைகளில் சலனம் வரும்) ங்கறது உண்மையோ இல்லையோ ஒரு பிரதமர், ஒரு முதல்வரோட பேனாலருந்து ஒரு துளி மை சரிய்யான பேப்பர்ல செலவழிஞ்சா 120 கோடி மக்கள் வாழ்க்கைல வெளிச்சம் வந்துருமே. இந்த ஒரே ஒரு பாயிண்டுக்காகத்தான் இப்படி மன்னாடறது.

இன்னைக்கு ஒரு சோனியா காந்தி நினைச்சா எத்தனையோ செய்யமுடியும். ஆனால் அவிகளோட ஒரு  தாலி அறுந்ததுக்கு லட்சக்கணக்கான தமிழச்சிகளோட தாலிகளை அறுத்துட்டாய்ங்க அவ்ளதான். 

நம்ம கலைஞர் எத்தனையோ நாடகங்களை அரங்கேற்றினவர் (மேடைகள்ள மட்டுமல்ல) இலங்கை தமிழர்கள் விசயத்துல ஜஸ்ட் ஒரு கிம்மிக் செய்திருந்தா போதும் எத்தனையோ லட்சம் உயிர்கள் மிஞ்சியிருக்கும்.

இன்னைக்கும் சரி  இலங்கையில தமிழர்கள் எல்லாரும் அவிக பகுதிகள்ள குடியேறனும். இல்லைன்னா  செப்டம்பர்ல ரிலீசாக வேண்டிய இயந்திரன்  ரிலீசாகாதுனு சொல்ட்டா போதும் ரஜினி ரசிகர்கள் எல்லாம் தில்லிக்கு போய் சோனியா தாவாங்கட்டைய பிடிச்சு கெஞ்சி கூத்தாடி காரியத்தை முடிச்சுருவாய்ங்க. ( என்ன தம்பிகளா முடிப்பிங்கதானே)

என்னோட பஞ்ச் டயலாக் ஒன்னு :

ஆண்டவன் கெட்டவனுக்கு கெட்ட நேரத்துல நல்ல புத்திய கொடுத்து ஒழிச்சுருவான்
இதுக்கு லேட்டஸ்ட் உதாரணம் : கலைஞரின் மதுவிலக்கு முயற்சி.
வேணாம் தாத்தா ..  தேவுடுன்னு பேர் வாங்கின என்.டி.ஆரையே லிக்கர் லாபி ஒழிச்சுருச்சு.

என்ன..? தேர்தல் நிதி சேகரிப்புக்காக பூச்சித்தான் காட்டறிங்களா? அது சரி அதுசரி என்னைக்கேட்டா மது விலக்கெல்லாம் வேஸ்டு.  ஒவ்வொரு  நகரத்துலயும் ஒரு ஏரியாவ லா ஃப்ரீ ஜோனா அறிவிச்சுரனும். அங்கன போயி குடி,கூத்தடி,கொல்லு வழக்கு கிடையாதுன்னிரனும். என்ன வெளிய வரச்ச  ஒரு ஹெச்.ஐ.வி டெஸ்ட் முடிச்சு ரிப்போர்ட் கொண்டுவந்தாதான் ஊருக்குள்ள விடனும்.

கம்யூனிஸ்டுங்க விஜயவாடால ஏதோ கூட்டம் போட்டு ( தலைவருங்க மட்டும் பேசுவாய்ங்க போல) சுரங்கங்களை தேசீயமயமாக்கனும்னு டிமாண்ட் பண்ணியிருக்காய்ங்க.  பா.ஜ.கவும் இதே டிமாண்ட். இங்கன காங்கிரஸ்காரவுகளும் இதே டிமாண்ட். என்னடா மேட்டருன்னா

கர்னாடகத்து ரெட்டி ப்ரதர்ஸ். இவிக கர்னாடகால பா.ஜ.கவுக்கு ஆப்பு வச்சாய்ங்க. அதனால அவிகளுக்கு காண்டு. ஆந்திரால ஜகனுக்கு சப்போர்ட் பண்ணி ரோசய்யாவுக்கு ஆப்பு வைக்க பார்க்கிறாய்ங்க அதனால காங்கிரஸ்காரனுக்கு காண்டு.

கம்யூனிஸ்டுங்களுக்கு என்ன காண்டுனு தெரியலை.


ஏன் மேற்கு  வங்காளத்துல இருக்கிற ஸ்பெஷல் எகானமி ஜோன்ஸை யெல்லாம் முதல்ல தேசீயமயமாக்கலாம்ல.

கேரளாவுல இவிகளோட கட்சி பத்திரிக்கையான மாத்ருபூமிக்கு லாட்டரி கிங்  மார்ட்டின் கிட்டருந்து ஒரு கோடி ரூபா வளர்ச்சி நிதி வாங்கியிருக்காய்ங்க. மேட்டர் லீக்கானதும் திருப்பிட்டாய்ங்க. இந்தியாவுலயே அதிக சொத்து வச்சிருக்கிற கட்சி கம்யூனிஸ்டுங்கதான். தலைவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்கண்ணா.(அடையாள சம்பளம்லாம் கிடையாது)

யார் எதை பேசறதுனு விவஸ்தையே இல்லாம போயிருச்சு. குழாயடில அப்படித்தான் ஊரறிஞ்ச ........யா ஊர்ல இருக்கிறவளையெல்லாம் தே...யான்னு கூவிட்டிருப்பா.

ஓபுளா புரம் மைன்ஸ் மேட்டர்ல (ரெட்டி ப்ரதர்ஸ்) சுப்ரீம் கோர்ட் அப்பாயிண்ட் பண்ண சர்வே ஆஃப் இண்டியாவே  எல்லாம் பர்ஃபெக்டு  ஜஸ்ட் 100 மீட்டர்லதான் குழப்பமிருக்குன்னிட்டாய்ங்க.

ஒய்.எஸ்.ஆர் உசுரா இருக்கிறப்ப மேற்படி  நிலங்களை ரெட்டி ப்ரதர்ஸுக்கு ஒதுக்கினப்ப எந்த பிக்காலியும், எந்த பன்னாடையும் அப்ஜெக்ட் பண்ணலை.ஏன்னா அங்கே இரும்பு தாது கிடைக்குமா கடக்கால் கல் கிடைக்குமானு யாருக்கும் தெரியாது. ஒரு வேளை அங்கன தாது கிடைக்காம போயிருந்தா ரெட்டி ப்ரதர்ஸ் திவாலாகியிருப்பாய்ங்க. அப்ப  இவிக வந்து காம்பன்சேட் பண்ணியிருப்பாய்ங்களா?
ஒரு வேளை ரெட்டி ப்ரதர்ஸ் ரோசய்யாவுக்கு பெட்டி கொடுத்தா அவரு வாங்காம இருப்பாரா? வாங்கி சோனியாவுக்கு அனுப்பாம இருப்பாரா?

சிரஞ்சீவி கடந்த பொது  தேர்தல் பிரச்சாரத்துல " ஒய்.எஸ். நம்ம பணத்தை கொள்ளையடிச்சு சோனியா காலடில கொட்டறாரு"னு  கிழிச்சிக்கிட்டாரு. அப்பாறம் சோனியம்மன் காலடில இவரே குப்பையா கொட்டிக்கிடக்காரு.  முந்தா நாள் அரசியல் வாரிசுங்க குறுகிய காலத்துல எப்படி இவ்ளோ கோடி சம்பாதிக்கிறாய்ங்கனு கேள்வி வேற கேட்டிருக்காரு (ஜகனை உத்தேசிச்சு) . ஜகனோட அம்மா  தன் புருசனுக்கு  முந்தி விரிச்ச  லக்ன யோகம் அது. 10 ரூபாய் ஷேர் 1,040 ரூபாயா உசந்துருச்சுங்கோ. (இப்ப ஒய்.எஸ்.ஆர் முதல்வரில்லை, உசுராவும் இல்லே)

ஆமாங்கன்னா அரசியல் வாரிசுகள்னா அதுல கலைஞரோட வாரிசுகளும் அடக்கமா? இதுக்கு கலைஞர் கேள்வி பதில் வடிவத்துல ரெஸ்பாண்ட் ஆயிருவாரோ?

சந்திரபாபு திருமலை அபவித்திரமாயிருச்சுன்னு நடை பயணம் தர்ணால்லாம் பண்ணாரு. நல்ல காலம் ஆந்திரபோலீஸுங்கறதால் அரெஸ்ட், தடியடியெல்லாம் இல்லே. இதெல்லாம் ஜஸ்ட் ஒரு சம்பிரதாயமாயிருச்சு. அவரோட முக்கிய குற்றச்சாட்டு தேவஸ்தான சேர்மன் லிக்கர் லாபியை சேர்ந்தவருங்கறது.

கூத்து என்னடான்னா அவரை மொதல் மொதலா கட்சில சேர்த்துக்கிட்டு  தி.தி.தேவஸ்தான சேர்மனாக்கின பார்ட்டி சந்திரபாபுதான். அதோட நிக்காம அவருக்கு எம்.பி டிக்கெட்டை கொடுத்து மாவட்ட அரசியலை பணமயமாக்கினதும் சந்திரபாபுதான்.

(இதனோட தொடர்ச்சியா ஜஸ்ட் ஒரு எம்.எல்.ஏ கேண்டிடெட் -ப்ரஜா ராஜ்ஜியம் தான் - இவரோட தேர்தல் செலவு 40 கோடின்னு பேசிக்கிறாய்ங்க - ரிசல்ட்டு? ரெண்டாயிரத்து ஐ நூறு வாக்கு வித்யாசத்துல தோத்து போயிட்டாரு)

ஆனால் பாருங்க தெய்வமிருக்கு. இவரு தெ.தேசத்துலருந்து விலகி  காங்கிரஸ்ல சேர்ந்து ராகுல் ரேஞ்சுல போய் கர்சீஃப் போட்டு  சேர்மனாயிட்டாரே தவிர இவருக்கு எம்.பி சீட் மேலத்தான் குறி. ஆனா என்ன ப்ண்ன இவருக்கும் பேப்பே இவிக மகனுக்கும் பெப்பே. கடாசில மகன்  ப்ரஜாராஜ்ஜியத்துல சேர்ந்து  டிக்கெட் வாங்கி நின்னு தோத்தும் போயிட்டாரு. இப்ப இந்த மாசம் இவரோட பதவி காலம் ஓவர். யார் கண்டா ராகுல்ஜி புண்ணியத்துல ரென்யூவல் ஆனாலும் ஆயிரும்.ராஜீவ் ஜி மிஸ்டர் க்ளீன் .  ராகுல்ஜீ மிஸ்டர் டபுள் க்ளீன் தெரியுமில்லை

இந்த அரசியல் இயக்கங்களை பத்தின ஐடியாவே மாறிப்போச்சுங்கண்ணா. ரிப்போர்ட்டரா இருக்கிறச்ச பார்த்திருக்கேன். பத்து பேரு பத்தே பேரு தர்ணா பண்ணுவாய்ங்க. எஸ்.ஐயோ, சி.ஐயோ லத்தியை கையில தட்டிக்கிட்டு பார்த்துக்கிட்டிருப்பாரு. எங்க ஃபோட்டோ கிராஃபர்ஸெல்லாம் பளிச் பளிச்சுனு ஃபோட்டோ எடுப்பாய்ங்க. டிவிகாரவுக ஸ்டேட்மென்ட் ரிகார்ட் பண்ணுவாய்ங்க. பத்து நிமிஷமானதும் எஸ்.ஐ வந்து  போதும் எந்திரிக்கப்பானுவாரு உடனே குண்டி மண்ணை தட்டிக்கிட்டு போயிருவானுக . இதான் தர்ணா. அடப்போங்கடா உங்க பொழப்பும் நீங்களும்.

அண்ணே " ஆனாலு இது ஓவரு"ன்னு தனிக்காட்டுராசா மாதிரி பார்ட்டிங்க கமெண்ட் போட்டாலும் சரி. நான் சொல்ல நினைச்சதை சொல்லிர்ரன்.  ஹலோ சோனியா மேடம் ! ஹலோ மிஸ்டர் ராகுல்ஜி. மிஸ்டர் ரோசய்யா காரு, மிஸ்டர் கருணா நிதி அண்ட் கோ சாக்கிரதை..

நான் ஒருத்தன்  இருக்கேன்.உசுரேட இருக்கேன். என் பின்னாடி ஒரு சக்தி  இருக்கு. நான் டம்மி பீஸா, காமெடி பீஸா இருக்கலாம். ஆனால் அந்த சக்தி உங்களை நோக்கி என்னை செலுத்திக்கிட்டிருக்கு.

இந்த சனங்கதான் என் வயித்தை ரொப்பினாய்ங்க.  நான் அவிக மனசை நம்பிக்கையால நிரப்பினேன். நிரப்பிக்கிட்டிருக்கேன். இது இந்த காலம் . ஆனால் ஒரு நாளில்லை ஒரு நாள் அவிக வாழ்க்கைய வெளிச்சத்தால் நிரப்பப்போறதும் நான் தான். உங்களை வெளிச்சம் போடப்போறதும் நான் தான் கபர்தார் !

தவறான பாதையில எவ்ள தூரம் வந்துட்டம்ங்கறது முக்கியமில்லை. இந்த செகண்ட் இந்த செகண்டாச்சும் மனம் திரும்புங்க. ஸ்வர்கம் காத்திருக்குனு சொல்லலன்னாலும் உங்க வம்சங்கள்ள அடுத்து வரப்போற ஏழேழு தலைமுறைகளோட வாழ்க்கை நரகமாயிராம இருக்கும்.