Sunday, August 1, 2010

மாறியது காலம் மாறவில்லை ஜோதிடர்கள்

கே.வி முனி சாருக்கும், ஜோசியங்கற பேர்ல நாம பண்ற அலப்பறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. (பாவம் அவரு ரெம்ப சிஸ்டமேட்டிக் ஜோசியருங்கோ) . இந்த "கட்டிடக்கலை ஒரு அறிமுகம்" நூலுக்கு எழுத்து வடிவம் கொடுத்தது அடியேன் தான். அவருக்கு நம்ம எழுத்துமேல காதல். நமக்கு அவர் சோசியத்து மேல ஒரு பிரமிப்பு தட்ஸால். மத்தபடி குரு சிஷ்ய பந்தமெல்லாம் கிடையாது. இவரை பத்தி கொஞ்சமா தெரிஞ்சுக்க விரும்பினா இங்கே அழுத்துங்க.

நம்ம ஜோசியத்தை பத்தி கே.வி.முனியோட கருத்து " உங்க நல்ல மனசுக்கு நீங்க பஞ்சாங்கம் பார்க்காம சொன்னாலும் நடக்கும் தலை !" ஒரு நாள் இவர் ஆஃபீசுக்கு நான் போனேன். வெயில்ல போனதால மச மச.

உள்ளாற கே.வி.முனி சாரோட வயசுள்ள ஆசாமி ஒருத்தர் உட்கார்ந்திருந்தாரு. (ஹி ஹி கே.வி.முனி சாரோட வயசு என்னன்னு சொல்லவே இல்லியே.சுமார் அம்பது இருக்கலாம்). ரெண்டு பேரும் ஒரே குரு கிட்ட அப்யாசத்தை ஆரம்பிச்சாப்ல இருக்கு. முனி ஜோசியத்துல தங்கிர, வந்த பார்ட்டி அரசு வேலைக்கு டைவர்ட் ஆகி, ரிட்டையர் ஆன பிற்பாடு பெண்டாட்டி இம்சைலருந்து தப்பிக்க ஜோசியத்துக்கு ரீ என்ட்ரி கொடுத்தாப்ல இருக்கு.

நான் போறதுக்கு மிந்தியே அவரு இவர் கிட்டே ஒரு ஜாதகத்தை கொடுத்து குறிப்பிட்ட தசை பலன் தருமா தராதானு கேட்டாப்ல இருக்கு. நம்மவரு 20 சதவீதம் பலன் தரலாம்னு சொன்னாப்ல இருக்கு. இந்த மேட்டர்லாம் நமக்கு தெரியாது.

நான் உள்ளாற நுழைஞ்சு விஷ் பண்ணிட்டு உட்கார்ந்ததுதான் தாமதம் படக்குனு அந்த ஜாதகத்த தூக்கி எங்கிட்ட கொடுத்து " தலைவரே இந்த ஜாதகத்துக்கு இந்த தசையில இந்த புக்தி பலன் தருமா சொல்லுங்க"ன்னாரு. ( இந்த மாதிரி கே.வி சார் ஜாதகம் கொடுத்து கேள்வி கேட்டது அதான் முதலும் கடைசியும்)

நாமதான் ஸ்ட்ரெயிட் ஃபார்வோர்ட் ஆச்சே " இந்த ஜாதகத்துக்கு இந்த தசை மட்டுமில்லே எந்த தசையும் பலன் தராதுன்னுட்டன்"

கே.வி.சார் ஸ்பான்டேனியஸா "வெரி குட்"னுட்டாரு. ஜாதகத்தை கொடுத்த பார்ட்டிக்கு பயங்கர கடுப்பாயிருச்சு. கேவி சாரை பிடிச்சு ஏற ஆரம்பிச்சாரு ( ஒரு காலத்துல ரெண்டு பேரும் ஒரே குரு கிட்டே வித்யாப்யாசம்னு சொன்னேனே அந்த உரிமைல)

"என்னய்யா நீ என்னடான்னா 20 சதம் பலன் தரும்னே. இந்த ஆளு என்னன்னா எந்த தசையுமே பலன் தராதுங்கறாரு. நீ என்னடான்னா வெரி குட்ங்கறே.. நீ சொன்னது ரைட்டுன்னா இவர் சொன்னதை நீ கண்டிச்சிருக்கனும். இல்லே இவர் சொன்னது ரைட்டுன்னா நீ சொன்னது ராங்குன்னு ஒத்துக்க"

கே.வி.சார் நிதானமா சொன்னாரு" தபாருப்பா.. நீ நானெல்லாம் புஸ்தவத்துலருந்து சோசியம் கத்துக்கிட்டவுக. உனக்கும் எனக்கும் தகராறு வந்தா நீ சொன்ன மேட்டருக்கு நீ ஏதோ ஒரு புஸ்தவத்துல உள்ள ஏதோ ஒரு ஸ்லோகத்தை ஆதாரமா காட்டுவ . நான் வேற ஏதோ ஒரு புஸ்தவத்துல உள்ள வேற ஏதோ ஒரு ஸ்லோகத்தை ஆதாரமா காட்டுவ. உன் கூட விவாதம் பண்ணலாம். ஆனால் முருகேசன் சார், அப்படியில்லை. காலம் மாறிப்போனதால , வாழ்க்கை முறைமாறிப்போனதால நீயும் நானும் கொண்டாடற புஸ்தவங்கள்ள உள்ள ,ஸ்லோகங்கள்ளயே சிலதெல்லாம் அவுட்டேட்டட் ஆயிருச்சுன்னு புதுசா ஒரு சப்ஜெக்டை ஃப்ரேம் பண்ணிக்கிட்டிருக்கிற பார்ட்டி . அதனாலதான் எதுக்கு வம்புன்னு வெரி குட்னிட்டேன்"

எதிர்பார்ட்டிக்கு பி.பி எகிறிப்போச்சு. " இன்னாது ரிஷிங்க எழுதி வச்ச மேட்டர் அவுட் டேட்டடாயிருச்சா. காலம் மாறிப்போச்சா. என்னய்யா இது பித்தலாட்டமா இருக்கு ? இப்ப என்ன சூரியன் மேற்குல உதிச்சு கிழக்குல மறையறாராமா"

(இதே கேள்விய நீங்க கூட கேட்பிங்க. உங்களுக்கு சேர்த்து பதில் சொல்றேன்)

1. அந்த காலத்துல குடும்ப கட்டுப்பாடு இல்லே. ஜாதகத்துல அஞ்சாவது இடத்துல
உள்ள பாவ கிரகங்கள் எல்லாமே குழந்தைகள் விஷயத்துலயே ஒர்க் அவுட் ஆயிரும். (மேலும் அந்த காலத்துல தடுப்பூசி எல்லாம் கிடையாதே அதனால் குழந்தை மரணம், போலியோ இப்படி நடந்துரும்)

அதனால நல்லவன் கெட்டவன் எல்லாரும் ஓரளவாச்சு போதுமென்ற மனமே பொன் செய் மருந்துனு வாழ்ந்தாய்ங்க இப்போ? உங்க ஜாதகப்படி எத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டியிருந்தாலும் "கட்"பண்ணிர்ரிங்க. அதனால அஞ்சாவது இடத்துல உள்ள தோஷங்கள் எல்லாம் உங்க புத்திய குழப்பி விட்டுருது. அதனால தான் மனுசாள்ள இத்தீனி வக்கிரம்.

2.அப்போ இருந்த படிப்பு வேற . அந்த படிப்புக்கு காரகத்வம் குரு அ புதன். இன்னைக்குள்ள படிப்புக்கு காரகத்வம் குரு மட்டும் இல்லே (ஏதோ அரசியல், பொருளாதாரம், எம்.பி.ஏ மாதிரி சிலபடிப்புகள் தவிர). நீதிக்கு குருதான் காரகர். இந்த காலத்து படிப்பு குரு காரகத்வத்துல அமையாததாலதான் வைட் காலர் க்ரைம்ஸ் அதிகமாயிருச்சு. படிச்சவன்லாம் மொள்ளமாரியா இருக்கான்.

3.அந்த காலத்துல பால்ய திருமணங்கள் இருந்தது. (ஏழாம் பாவத்து தோஷமெல்லாம் மனைவி மேல வேலை செய்து, கு.க இல்லாததால கச்சா முச்சானு பெத்து, உரிய மெடிக்கல் எய்ட் கிடைக்காம அவிக நார் நாரா ஆயிருவாய்ங்க.செத்தும் போயிருவாய்ங்க ). இன்னைக்கு முப்பது நாப்பது வயசு வரை அன் மேரீடா இருக்கிறதால அவளை,இவளை நினைச்சு ,அணைச்சு, நனைச்சு நாசமா போறதால அந்த ஏழாமிடத்து தோஷமெல்லாம் ஷேர் ஆகி லாஞ்ஜிவிட்டி( ஆயுள்) அதிகரிக்குது. கணவன் மனைவி சித்திர விசித்திரமா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சுர்ராய்ங்க.

4.அந்த காலத்துல பால்ய திருமணங்கள் காரணமா பெண்களோட அஷ்டம பாவத்து தோஷம்லாம் கணவனுக்கு டிக்கெட் கொடுக்கிறதுலயே வேலை செய்து சின்ன வயசுலயே விதவையாயிட்டிருந்தாய்ங்க. இப்ப மாங்கல்ய ஸ்தானம் என்னதான் கெட்டிருந்தாலும் - மருத்துவ முன்னேற்றம் காரணமா கணவன் சாக வாய்ப்பு குறையறதால பிரிஞ்சுர்ராய்ங்க. அல்லது ட்ரைவரோடயோ, எதிர்வீட்டு பையனோடயோ ஓடிப்போயிர்ராய்ங்க

( ஜோசியத்துல வியோகம் -பிரிவுங்கறது மரணம் மூலம் நடந்தாலும் ஒன்னுதான்/ விவாகரத்து மூலமா நடந்தாலும் ஒன்னுதானுங்கோ)

5.அந்த காலத்துல கூட்டுக்குடும்பங்கள் இருந்ததால அப்பனை காட்டற 9ஆவது இடடத்து தோஷம் அப்பன்,பெரியப்பன்,சித்தப்பன் எல்லாத்துக்கும் ஷேர் ஆயிருச்சு. இப்போ சிம்பிள் ஃபேமிலிங்கறதால ஒன்பதாவது இடம் கெட்டா அப்பனுக்கு உடனடி பல்புத்தான்.இதுவே தான் 4 ஆவது இடத்துக்கும் பொருந்தும் (அம்மா) (பெண்கள் விஷயத்துல 4 ங்கறது கற்பை கூட காட்டுதுங்கோ. அம்மா அப்படி இப்படி இருந்தா பொண்ணு கூட அப்படியே தான் இருக்கும்ங்கற கணிப்பு இது.

6.ஜாதகத்துல லக்னம்தான் ஜாதகனோட மனம், குணம், அழகு,ஆடை ,அலங்காரத்தையெல்லாம் காட்டுது . அந்த காலத்துல சோப்பு கூட கிடையாது. இன்னைக்கு? ஆண் பெண் வித்யாசமில்லாம சோத்துக்கில்லாதவன் கூட அழகு,ஆடை ,அலங்காரத்தை கட்டியழறான். இவனோட லக்ன பலமெல்லாம் இதுக்கே சரியா போயிருது. உள்ளார பார்த்தா எல்லாம் வெத்து.

7.மூணாவது சனிபெரிசா எஃபெக்ட் கொடுக்காதுனு சாஸ்திர சொல்லுது.ஏன் ? சனிக்கு கருப்பு மேல கவர்ச்சி அதிகம். மூணாவது சனின்னா அப்ப மிடில் ஏஜை தாண்டியிருப்பான். தலைமுடியெல்லாம் வெளுத்திருக்கும். சனியோட பிரபாவம் குறையும்னு ஒரு கணக்கு . இன்னைக்கு கிழவாடியெல்லாம் ஹேர் டை போட்டு சீன் போடறான். அப்பாறம் குத்துதே குடையுதேனு புலம்பல்

8.சகோதரர்கள் மேட்டரை பாருங்க. ஒரு காலத்துல பெரியப்பா பையனை கூட அண்ணன் தம்பி ன்னுவாய்ங்க. இப்போ கூட பிறந்த அண்ணன் தம்பி கூட ஜஸ்ட் ப்ரதர்தான். இந்த மாதிரி டிஸ்டன்ஸ் இருக்கிறதால சகோதர காரகனான செவ்வாய் தன் எஃபெக்டை ஜஸ்ட் விபத்துகள் மூலமாவே காட்ட வேண்டியிருக்கு.

ஜாதக அலங்காரம், ஜாதக பாரிஜாதம், ப்ருஹத் ஜாதகம் இத்யாதி நூல்கள் எழுதப்பட்ட காலத்துக்கும் இப்பத்துக்கும் இப்படி எத்தனையோ மேட்டர் சப்ஜாடா மாறிப்போச்சு. அதனால அவிக எழுதி வச்ச பலனும் மாறிப்போச்சுனு அந்த பார்ட்டிக்கு கேள்வி பதில் வடிவத்துல டெலிக்ராம் லேங்குவேஜ்ல சொன்னேன் .

அந்தாளு பாவம் " அய்யய்யோ கண்ணைக்கட்டுதே"னு அலறிக்கிட்டே ஓடிப்போயிட்டாரு.