Monday, August 9, 2010

கில்மா வாஸ்து : 2

என்னங்கடா இது வாஸ்துலயும் வாஸ்து கில்மா வாஸ்துனு கிர்ரடிச்சி கிடப்பீக. நம்ம பஞ்ச் டயலாக் தெரியுமில்லை. சிற்றின்பத்தையே எழுத்துக்கூட்டாத பார்ட்டி பேரின்பத்தை படிச்சுரவா போறான்?சுங்குவார் சத்திரம் தாண்டினாத்தானே சென்னை. வாக்காளர் பட்டியல்ல பேர் இருந்தாதானே முதல்வர். மனித உடல், மனம்,புத்தி எல்லாத்துக்கும் ஆரம்பம், மையம் செக்ஸ் தான். செக்ஸை தாண்டினா ( பிரிச்சு மேஞ்சி) ஆன்மீகம். இல்லைன்னா 90 வயசுலயும் கொக்கோகம்.

குளத்து நடுவுல கல்லை எறிஞ்சா தான் குளம் முழுக்க அலையடிக்கும். அதனாலதான் கில்மா வாஸ்து. கில்மா வேலைக்கும் கிரகம் ஒத்துழைச்சாதான் நட முடியும் நான் சொல்றது வெற்றிக்கொடியை.



ஜுஜுலிப்பா வேலைக்கும் வாஸ்து ஒத்துழைக்கனும். அப்பத்தான் 7 : 23 பேலன்ஸ் ஆகும். ஜாதகசக்கரத்துலயே இதுவும் அடங்கியிருக்குங்கண்ணோ. பெட் ரூமையும் சேர்த்துத்தானே வீடுங்கறோம். கடந்த பதிவுல லேசா கோடி காட்டினேன். இப்ப நூல் பிடிச்ச மாதிரி பூந்து வந்துரலாம் ராசா.



அதுக்கு முந்தி சின்ன விளக்கம்:



திசைகள் மொத்தம் 9. இதுல வடக்கு, கிழக்கு, ஈசான்யம்ங்கற மூணு திசைய தவிர மத்த 6 திசைகள்ள பள்ளம், கிணறு , காலியிடம், வீட்டுல உபயோகிக்கிற தண்ணி இந்த திசைகள்ள போறது , மனை குறையறது ( வாயு மூலை, அக்னி மூலைல மிளகாய் விதை ரேஞ்சுக்கு குறையலாம். அலவுட்) மாதிரி அமைப்புகள் இருந்தா ஆண்கள் டம்மியாயிருவாய்ங்கனு சொல்லியிருந்தேன். பெண்கள் வழி தவற வாய்ப்பிருக்கிறதாவும் சொல்லியிருந்தேன். ஆனால் இந்த மாதிரி அமைப்புள்ள வீடுகள்ள வாழற பெண்கள் எல்லாருமே இப்படி ஆயிருந்தா நாடே நாறிப்போயிருக்கும்.



ஜோதிஷத்துல எப்படி ஒரே கிரகஸ்திதி ரெண்டு பேருக்கு ஒரே எஃபெக்டை கொடுக்கிறதில்லையோ அதே மாதிரி வாஸ்துவும் ரெண்டு பேருக்கு ஒரே எஃபெக்டை கொடுக்கிறதில்லை. இந்த விதிப்படி பார்த்தா மேற்குல கிணறு இருந்த வீட்டுக்காரியான என் தாயும் வேசியாகியிருக்கனும். ஆனால் ஆகலை அதற்கு பதிலா அப்பா உத்யோக மாற்றல் காரணமா ஜில்லா ஜில்லாவா சுத்திக்கிட்டு கிடந்தாரு. (இருந்தும் இல்லாம போயிட்டாரு) , அம்மாவுக்கு யூட்ரஸ் கான்சர்.



ஆக்னேயத்துல பள்ளமிருந்தா, வளர்ந்திருந்தா அந்த வீட்டுக்காரன் கொலைகாரனாத்தான் ஆகனும்னுல்ல. அவனே கொலையாகவும் வாய்ப்பிருக்கு. அந்த வீட்டுப்பெண் வேசியாத்தான் மாறனும்னுல்ல.. ரத்தம் எரிச்சல் தொடர்பான வியாதிகள் ஏற்படலாம். கோபக்காரியா மாறலாம். தற்கொலை பண்ணிக்கலாம். அல்லது எவனையாவது ( தப்பா நடக்க முயற்சி பண்ண) போட்டுத்தள்ளிரலாம்.



ஏற்கெனவே சொல்லியிருக்கேன். ஈசான்யம் குறைஞ்சு அக்னி வளர்ந்திருந்த வீட்ல நான் குடியிருந்தப்ப சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன். அடுத்த மாசமே பக்கத்து போர்ஷன் பையன் கொலை கேஸ்ல மாட்டினான். என்னைத்தேடியும் போலீஸ் வந்தது. எதுக்கு ? கெஞ்சி, கொஞ்சி ,கோஞ்சாடி உண்ணாவிரதத்தை கைவிட வைக்க.



இப்ப புரியுதுங்களா? டோன்ட் ட்ரீட் தி டிசீஸ் ட்ரீட் தி பேஷண்ட். வாஸ்துவ பார்த்துட்டு பலன் சொல்ல ஆரம்பிச்சுரக்கூடாது. அந்த வீட்டில் உள்ளவுக ஜாதகத்தை அலசனும் அதை வச்சு அவிக கேரக்டரை பிழிஞ்சு எடுக்கனும். அப்பாறமா ரிசல்ட் ,ரெமிடி கொடுக்கனும்.



இப்ப கில்மா மேட்டருக்கு வந்துருவம்.



ஆண்,பெண் சமம்ங்கறத கொள்கை ரீதியா ஒத்துக்கிடறேன். (இன்னம் சொல்லப்போனா பெண்கள் பல விஷயத்துல அதிசமம்) நான் பேசிக்கலா சமத்துவ வாதி. ஆனால் இயற்கைல உள்ள சில இனீக்வாலிட்டீஸை (அசமம்?) செயற்கையா வீம்பா அலட்சியப்படுத்தி இயற்கைக்கு புறம்பா போற அளவுக்கு ஃபோபியால்லாம் கிடையாது.



சந்திர நாடி,சூரிய நாடினு கேள்விப்பட்டிருப்பிங்க. வலது நாசில ஸ்வாசம் நடந்தா

அதை சூரிய நாடிம்பாய்ங்க. இடது நாசில ஸ்வாசம் நடந்தா சந்திர நாடிம்பாய்ங்க.



இது ஆண் பெண்கள் விஷயத்துல உல்ட்டா அடிக்குது. அதாவது பெண்ணுக்கு இடது நாசி ஸ்வாசம் தான் சூரிய நாடி, வலது நாசி ஸ்வாசம் தான் சந்திர நாடி. ஹஸ்த சாமுத்ரிகம் பார்க்கிறப்ப கூட பெண்களுக்கு இடது கைய பார்ப்பாய்ங்க.



மூளைல கூட வலது ,இடது மூளை வித்யாசம் இருக்கு. சிலருக்கு வலது ஸ்ட் ராங், சிலருக்கு இடது ஸ்ட்ராங். இந்த வரிசைப்படி வாஸ்துல ஆண்,பெண்களுக்கு வித்யாசமிருக்கு.



கிழக்கு, வடக்கு ஆண்களுக்குரிய திசை . இது காலியா இருக்கனும் ( வீடுங்கறது உங்க உடலோட நீட்சி.



பெண்களை நாம வீக்கர் செக்ஸுங்கறமே அது சொம்மா டுபுக்கு. பல மேட்டர்ல அவிக ஜூரிங்க. முக்கியமா செக்ஸுல ஆண் அவளோட தயவை, கோ ஆபரேஷனை எதிர்பார்க்கிற பரிதாப நிலைலதான் இருக்கான். நள்ளிரவுல பக்கத்துல பெண்டாட்டிய தடவறச்ச அவள் கொஞ்சம் சலிப்பாவோ, எரிச்சலாவோ ரெஸ்பாண்ட் ஆனா போதும் இவனோட கிளர்ச்சி,எழுச்சி எல்லாம் ஃபணால்.



அவளுக்கு ( ஆஃபீஸ் கோயரா இருந்து) பத்து ரூபா சம்பள உயர்வு கிடைச்சுட்டா போதும். இவன் டாக்டர் மாத்ருபூதத்தை பார்க்க வேண்டியதா போயிரும். பெண்ணடிமைக்கு காரணமே ஆண்களோட இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்தான்.



ஒரு ஆண் ஆண்மையோட திகழனும்னா அவன் மேல ப்ரஷர் இருக்ககூடாது. எந்த வகையிலயும். முக்கியமா வீட்டுக்கு வந்த பிறவு. அதனாலதான் கிழக்கு, வடக்கு காலியா இருக்கனும் , தெரு இருக்கனும், பள்ளமா இருக்கனும், ஈரமா இருக்கனும் மாதிரி நிபந்தனைகள்.



ஆண் பேசிக்கலா சோனி. சின்ன பிரச்சினைக்கும் குமுங்குவான். பெண்கள் ஆரம்பத்துல குமுறி குமுறி அழுதாலும் தமாய்ச்சுக்குவாய்ங்க. அம்மா சாவுக்கு புறப்படறச்ச கூட ஏங்க நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததும் எல்லா ரூமும் பூட்டிக்கினு பால் காய்ச்சி ஃப்ரிட்ஜ்ல வச்சுட்டுனு ரொட்டீனுக்கு வந்துருவாய்ங்க.



இவன் கதை அப்படி கிடையாது. உள்ளுக்குள்ள சல்க் பண்ணிக்க ஆரம்பிப்பான். டென்ஷன். ஆண்மை குறைவுக்கு ஆதி காரணம் டென்ஷன் தான். இதனாலதான் வடக்கு கிழக்கு காலியா இருக்கனும்னு நிபந்தனை.



மேற்கு, தெற்கு பகுதிகள் இதுக்கு ஆப்போசிட்டா இருக்கனும். அதாவது

கன்ஸ்ட்ரக்சன் இருக்கனும், மேடா இருக்கனும், (கூரைப்பகுதி கூட ) , மூடியிருக்கனும். திண்ணைகள் போன்ற லோட் இருக்கனும். உட்பக்கம் பரண்கள் இருக்கலாம். சன்னல் இருக்ககூடாது.



இதுக்கு ஆப்போசிட்டா இருந்தா என்ன ஆகும் ? தெற்குக்குரிய ஸ்பெஷாலிட்டியே அது ரத்தம்,கோபம் மாதிரி மேட்டரை காட்டற இடம். பெண்களுக்கு மாதவிலக்கு சக்கரம்ங்கறது ரெம்ப முக்கியம். அது பர்ஃபெக்டா நடக்கிற வரை பிரச்சினை குறைவு.



ஆண்களுக்கு வர்ரது வெறும் பாடு தான் . பெண்களுக்கு மா.வி சக்கரத்துல பிரச்சினை வந்தா ( ஓவர் ப்ளீட், கன்டினியுவஸ் ப்ளீட்) இதை பெரும்பாடும்பாய்ங்க.



ஆரோக்கியமான பெண்களே மா.வி சமயத்துல சித்திர விசித்திரமா பிஹேவ் பண்ணுவாய்ங்க. செல்ஃப் பிட்டி,எரிச்சல், கோபம் இத்யாதி. இந்த சந்தர்ப்பத்துல ரத்தத்தோட அடர்த்தியா குறைஞ்சுருமாம்.



இதுல தெற்கு பகுதில குறை இருந்து மா.வி சக்கரத்துல சிக்கல் ஏற்பட்டா நிலைமை எப்படி இருக்கும்னு கெஸ் பண்ணிக்கங்க.



மேற்கு பகுதி வாஸ்து நிபந்தனைகளுக்கு விரோதமா இருந்தா ஆண்கள் ஏதோ சினிமால வடிவேலு மாதிரி "சொம்மா இருக்க கத்துக்குவாய்ங்க" குடும்ப பாரம் பெண்கள் மேல விழ ஆரம்பிக்கும்.



இந்த உடம்பு இருக்கே உடம்பு இது ஒரு அற்புதமான கருவி. சிச்சுவேஷனுக்கு ஏத்தாப்ல தன்னை தான் மாத்திக்கும். ஆண் வேடம் போடும் பெண்களுக்கு ( புருசங்காரன் டுபாகூரா இருந்து குடும்ப பாரத்தை ஏத்துக்கிறவுக) படிப்படியா மா.வி நின்னுரும். ஈஸ்ட் ரோஜனோட சுரப்பு குறைஞ்சு போயி ( பெண் ஹார்மோன்) ஆண்ட் ரோஜனோட சுரப்பு சாஸ்தியாயிரும். மீசை தாடியெல்லாம் வளர ஆரம்பிச்சுரும்.



இது ப்ராசஸ்ல வர்ர பை ப்ராடக்ட் மாதிரி இதனோட முடிவு எப்படியிருக்குமோ ஆருக்கு தெரியும்.



ரெஃபர் டு பகவத் கீதை பரதர்மம் - சுதர்மம்



அப்படியே நைருதி. இது டீம் கேப்டனை காட்டற இடம். இது மேடா, க்ளோஸ்டா இருக்கனும். இல்லைன்னா வீட்ல பவர் வார் ஸ்டார்ட் ஆயிரும். இவன் பொசிஷன் வீக்காகுதுல்ல.பூனை வீக்காயிட்டா எலி பப்புக்கு கூப்பிடுமாம்.



அடுத்தது ஈசானம். இது வீட்டு உறுப்பினர்களோட மூளையை காட்டற இடம் . இது பள்ளமா, காலியா,திறந்த வெளியா,ஈரமா இருக்கனும். (அதுக்குனு சாக்கடைய தேங்க விட்றாதிங்க.. கள்ள உறவு கூட ஏற்படுமாம். ஓடலாம். தேங்க கூடாது ஓகே)



அடுத்த பதிவுல படுக்கையறை எங்கன அமையனும். அதனோட அமைப்பு எப்படி இருக்கனும். ஏன்னு பார்ப்போம். ஓகே ஜூட்..........