Thursday, August 19, 2010

கில்மா ஜோசியம்: 2

நான் செக்ஸ் பத்தி அடிக்கடி  சொல்ற பஞ்ச் டயலாக்  " உடல்,மனம் ,வாழ்க்கையின் மையம் செக்ஸ். இதை தவிர்க்கவே முடியாதுங்கறதுதான்.

மூளைய பொருத்த வரை செக்ஸ் மையத்த ஒட்டித்தான் அறிவுமையம் கூட அமைஞ்சிருக்காம். செக்ஸ் மையத்துல ஏற்படற அதிர்ச்சிகள் அடுத்துள்ள அறிவு மையத்தை தாக்கினா விஞ்ஞானி ஆயிர்ராய்ங்களாம்.

உடல்,மனம்(மூளை), வாழ்க்கையில மட்டுமில்ல ஜாதகத்துல கூட காதலி/மனைவி/அதான்னே செக்ஸை காட்டற 7 ஆம்  ராசியும் மையத்துலதான் அமைஞ்சிருக்கு. ஆமாங்கண்ணே 7ஆவது ராசிலருந்து 7 ஆவது வீடு லக்னம் .( உங்களோட நிறம்,குணம்,மணம் எல்லாத்தையும் காட்டற பாவம் இது) லக்னத்துலருந்து 7 ஆவது வீடு களத்ரம். அப்ப மையத்துல இருக்கிறாப்ல தானே கணக்கு. செக்ஸுக்கு 180 டிகிரில நீங்க. உங்களுக்கு 180 டிகிரில செக்ஸ். இதற்கிடையில உள்ள மத்த சமாசாரமெல்லாம் கரீட்டா ஸ்மூத்தா நடந்தேறினா தான் அடுத்த பாவங்கள் வேலை செய்யும் 8.9.10,11,12 எல்லாம்.

7 செக்ஸ காட்டற இடம். இது கரெக்டா அமைஞ்சா செக்ஸுல ஏற்படற குட்டி மரணத்தை உணர முடியும். அதை உணர்ந்தா மரணத்தை காட்டற இடமான  எட்டை தாண்டலாம்  . அதுக்கடுத்து வர்ர 9 ஆம் பாவம் தான் தூர தேசங்களை காட்டுது. (செக்ஸை தாண்டினாத்தான் புற உலகோட கம்யூனிகேஷன் ஏற்படும். இல்லாட்டி உங்க உலகமே உலகமா இருந்துருவிங்க) அது மட்டுமில்லை 9ங்கறது  உங்க ஆன்மீகத்தை காட்டற இடம். ரயில் பாட்டை ரசிக்க ஆரம்பிச்சாதான்  சிம்ஃபனியை கேட்கிற அளவுக்கு வளர முடியும். ஓகே. அடுத்த பாவம் ஜீவன பாவம். உங்க தொழில்,உத்யோகம்,வேலை வெட்டியை காட்டற இடம். செக்ஸ் -குட்டி மரணம் - ஆன்மீகம் இதுல கரை கண்டவன் தொழில்ல இறங்கினா சிகரங்களை தொடலாம். அதுக்கப்பறம் வர்ரது லாப பாவம். உங்க கடந்த கால சாதனைகள் லாபத்தை குவிக்க உதவும். அடுத்தது விரய பாவம். தானம், தர்மம் இத்யாதிய காட்டற இடம்.


லக்னத்துல உள்ள கிரகங்கள் 7 ஐ பார்க்கும். 7 ல் உள்ள கிரகங்கள் லக்னத்தை பார்க்கும். அதாவது நீங்க உங்க பார்ட்னரை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவிங்க. உங்க பார்ட்னர் உங்களை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுவாய்ங்க. டெல் மீ யுவர் ஃப்ரெண்ட் ஐ வில் டெல் யு வாட் யுவார்ங்கறாய்ங்கல்ல. அணுமின் நிலையங்கள் நஷ்ட ஈடு விவகாரத்துல பா.ஜ.க ஜெ போட்டுருச்சுண்ணே தமிழ்ல கூட்டுக்களவாணிம்பாய்ங்க. தெலுங்குல "தொங்கலு கலிசி ஊள்ளு பஞ்சுகுன்னட்டு"ம்பாய்ங்க . ( திருடங்க சேர்ந்து ஊர்களை பிரிச்சுக்கிட்ட மாதிரி)

7 ஆம் இடத்தை ஜூம் பண்ணி பார்த்தா உங்க பார்ட்னரோட உயரம்,பருமன், நிறம்,டேஸ்ட், மென்டாலிட்டி, பிறந்த இடம், இவ்ள ஏன் அவிக பேரை கூட கெஸ் பண்ணிரலாம். அதுக்கு தான் இந்த பதிவு. இன்னொரு மெத்தட் இருக்குங்கோ அது என்னன்னா உங்க ஜாதகத்துல 7ஆவது ராசியை லக்னமா வச்சு கணிக்கிறது. இந்த மெத்தட்ல உங்க உட் பி அ மனைவியோட பயோடேட்டாவே வந்துரும். பலான மேட்டர்ல அவிக விருப்பம்/விருப்பமின்மை கூட .

7ஆவது இடம் ஜஸ்ட் உங்க உட் பி அ மனைவியை மட்டும் காட்டறிதில்லிங்கோ. காதலி,கள்ளக்காதலி, மனைவி,முன்னாள் மனைவி எல்லாத்தயும் காட்டுது.  இந்த 7 ஆவது இடம் தான் கில்மா பார்ட்டியை டிசைட் பண்ணுது. (லக்னத்துல உள்ள கிரகங்களும் தான்)  ஆமாண்ணே உங்க ஜாதகத்தை பக்கத்துல வச்சிக்கிட்டுதானே இந்த பதிவை படிக்கிறிங்க?

பெண்கள் 9+9  வகைன்னு ஒரு பதிவு போட்டேன் ஞா இருக்கா. அதுல எந்த வகை பெண் உங்கள் செக்ஸ் பார்ட்னருன்னு தெரிஞ்சிக்கனும்னா உங்க ஜாதகத்துல அ தற்சமயம் உள்ள கோசாரத்துல லக்னத்துல எந்த கிரகம் இருக்கு, 7ல எந்த கிரகம் இருக்குன்னு பார்க்கோனும். அதே போல 7 ஆவது இடத்தை எந்தெந்த கிரகம் எல்லாம் பார்க்குதுன்னும் பார்க்கோனும். இதுல எந்த கிரகம் வலிமையா இருக்குன்னும் பார்க்கோனும்.   (இதையெல்லாம் நம்ம சுப்பய்யா வாத்தியார் விவரமா சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்) . எந்த கிரகம் தெலுங்கானால டி.ஆர்.எஸ் மாதிரி ஸ்வீப் பண்ணியிருக்கோ அந்த கிரகத்தோட ஆதிக்கத்துக்குட்பட்ட  பார்ட்னர் அமைவாய்ங்க.கிரகங்கள் 9 அதனால பெண்களை (ஏன் ஆண்களை கூட)  9 வகையா பிரிச்சு அவிக கேரக்டர்ஸை பதிவா போட்டிருந்தேன்.

அதுசரி அப்ப 9+9 எதுக்கும்பிங்க? சொல்றேன்.

எல்லா ஜாதகத்துலயும் ஏதோ ஒரு கிரகம் ( 7 ஆமிடத்துக்கு சம்பந்தப்பட்டு) அமிஞ்சிருக்கும்ங்கற கியாரண்டி கிடையாது. எல்லா கிரகமும் சோனியா மாதிரி சோனியா இருந்தா அதுல எந்த கிரகம் பெட்டராயிருக்குன்னு பார்த்து பட்டர் ஹாஃபை தேட வேண்டிவந்துரும். அப்போ அந்த குறிப்பிட்ட கிரகத்தோட நெகட்டிவ் ஃபேக்டர்ஸ் இருக்கிற கேரக்டர்தான் பார்ட்னர்.

இப்போ புரியுதுங்களா? 9 கிரகங்களோட 9 விதமான பாசிட்டிவ் கேரக்டர்ஸோட 9 வகை, 9 கிரகங்களோட 9 விதமான  நெகட்டிவ்  கேரக்டர்ஸோட 9 வகை, ஆக 9+9 = 18 வகை பெண்கள் இருக்காய்ங்க. இவிக கேரக்டர்ஸையெல்லாம் (இவிக எந்த திசையிலிருந்து வருவாய்ங்கங்கறது உட்பட ) ஏற்கெனவே கொடுத்தாப்ல ஞா. (அரைகுறையா விட்டிருந்தா கம்ப்ளீட் பண்ணிருவம்).

கிரகத்தோட வலிமைன்னா அதை டிசைட் பண்றதுக்கு பல விதிகள் இருக்குங்கண்ணே . அதையெல்லாம் விவரிக்க ஆரம்பிச்சா பக்கத்தை மூடிட்டு போயிருவிங்க. இருந்தாலும் சுஜாதா ஸ்டைல்ல வலிக்காம சொல்லறேன்.

மொதல்ல உங்க லக்னத்துக்கு அது சுபனா இல்லையானு பார்க்கனும். அதுல ரெண்டு விதம் இருக்கு . நைசர்கிக பாபத்வ சுபத்வம்.  லக்னாத் .பாபத்வ சுபத்வம்.

நைசர்கிக சுபத்வம்:
இந்த விதிப்படி வளர்பிறை சந்திரன், குரு,இந்த விதிப்படி பாவிகளான கிரகங்களோட சேராத புதன், சுக்கிரன் இவிக சுபகிரகங்கள். டெக்னிக்கலா சொன்னா நைசர்கிக சுபர்கள்

சூரியன், தேய்பிறை சந்திரன், செவ்வாய்,ராகு,சனி, பாவிகளோட சேர்ந்த புதன் ,கேது இவிகல்லாம் பாபிகள்

குறிப்பு:
ஆனா நான் இந்த நைசர்கிக சுபத்வ பாபத்வங்களை கண்டுக்கிடறிதில்ல. ஏன்னா  நைசர்கிக பாபி லக்னாத் சுபனா இருக்கும்போதும் நிச்சயமா பலன் கொடுத்துர்ராரு.
(என்ன பலன்  கொடுக்கிற விதம் வெரைட்டியா இருக்கும்) நைசர்கிக சுபன் லக்னாத் பாபியா இருக்கும்போது நிச்சயமா பலன் தர்ரதில்லை. இன்னம் சொல்லப்போனா ஆப்பு வச்சிர்ராரு.

லக்னாத் சுபத்வ பாபத்வம்:
மார்க்கெட்ல ஆற்காடு வே.சீதாராமய்யர் பஞ்சாங்கம்னு ஒன்னு விப்பாய்ங்க. இது தினத்தந்தி ரேஞ்சு. கதை கதையா கொடுத்திருப்பாய்ங்க. புரட்டிப்பாருங்க. ( ஆனா இது வாக்கிய பஞ்சாங்கம் .. இது அவுட் டேட்டடாயிருச்சு). இதெல்லாம் கட்டுச்சோறு மாதிரி. ஊசிப்போயிரும்.

லக்னாத் பாபத்வ சுபத்வங்களை கண்டுக்கிடனும்னா சிம்பிள் மெத்தட் இருக்கு. அதை அடுத்த பதிவுல பார்ப்போம்.

உங்க கருத்துக்களை தெரிவிக்க மறந்துராதிங்க ( என் மறுமொழியை  எதிர்பார்க்காதிங்க.. ஆன்லைன்ல பணம் போட்டவுகளுக்கு பலன் அனுப்பலைன்னா வேட்டிய உருவிருவாங்கண்ணே ..புரிஞ்சுக்கோங்க)