கோவில்லருந்து திரும்பி வரப்போ வீட்டண்டை சின்னதா கூட்டம். காச் மூச்சுனு பேச்சுக்குரல். கும்பலுக்கு மையத்துல தலைல பெரிய கட்டோட ஒரு பெண். அவளோட அப்பன் மாதிரி இருந்த ஆளு பேசினான் " தம்பி ! இவள் தலைய பார்த்தே இல்லை. 12 தையல் போட்டிருக்கு. புருசங்காரன் மர ஸ்டூலை எடுத்து அடிச்சிருக்கான்.இத்தனைக்கும் ரெண்டு வருசம் இவளை காதலிச்சு தவமா தவமிருந்து கட்டிக்கிட்டவன் . ஆன அட்டூழியத்தையெல்லாம் பண்ணிட்டு இப்ப வந்து என் பெண்டாட்டிய என் கூட அனுப்பு குடித்தனம் பண்றேனு கேட்கிறான். என்ன பண்ண சொல்றே? சொல்லு .. நீ எப்படி சொல்றியோ அப்படியே செய்யறோம்" ஒரு செகண்ட் ஏதோ மின்னல் மாதிரி ஒரு எண்ணம் பளிச்சிட்டுது. ஆனால் மின்னல் மாதிரியே மறைஞ்சும் போயிருச்சு.
"உன் மாப்பிள்ளை எங்கப்பா?"னு கேட்டேன். இதோனு ஒரு செவத்த பையனை என் முன்னாடி தள்ளினாய்ங்க. "சரிப்பா ஒரு பன்னென்டு மணிக்கு (முனிசிபல்) ஆஃபீசுக்கு வந்துருங்க. தீர்த்துரலாம்"னுட்டு வீட்டுக்குள்ள போனேன். இன்னம் வானம் முழுக்க வெளுக்கலை . மாடிக்கு போனேன். ஒரு சிகரட்டை எடுத்து பத்த வச்சுக்கிட்டேன்.
ஆம்பளை பொம்பளை கண்ணாலம் கட்டிக்கிறாய்ங்க. ஓகே கண்ணாலத்தால ஒரு சில வசதிகள். ஒரு சில பாதுகாப்புகள் கிடைக்குது. பிடிச்சுத்தானே கட்டிக்கிறாய்ங்க.அப்பறம் எதுக்கு இந்த ரத்த சேதம்? அதுலயும் காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிடற பார்ட்டிங்க கூட ஏன் இப்படி வெட்டி மடியனும். இவன் பெண்டாட்டிக்கும் ஒரு மைல்ட் அட்டாக் வந்திருந்தா இப்படி கிழிச்சிருக்க மாட்டானோ? அதுலயும் 12 தையலா?
ஆ..........மாம்.. ஏன் இதெல்லாம் இப்படி நடக்குது? மாயாவுக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வரனும். இந்த பெண்ணுக்கு ஏன் இப்படி மண்டை கிழியனும்னு யோசிச்சிட்டிருந்தப்ப ஏதோ ஸ்பார்க் ஆச்சு.. கொஞ்ச நேரத்துக்கு முந்தி தானே அதுவும் மின்னல் மாதிரி . மின்னி மறைஞ்சுபோச்சே என்ன அது?
பக்கத்து காம்பவுண்ட்லருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது
" ஏண்டா இப்படி என்னை சாவடிக்கிறிங்க..நேரம் 7 ஆகுது எந்திரிக்க கூடாதா? எப்ப குளிச்சு எப்ப ஸ்கூலுக்கு போறது.? உங்களோட கத்தி கத்தியே ஒரு நா சாகப்போறண்டா ."
"கரெக்ட். நம்ம வாழ்க்கைல உயிர்ப்பில்லை. நாம, நம்மை சேர்ந்தவுக உசுரோட இருக்கிறதை உணர்ந்த நிலைல வாழலை. நம்மை சேர்ந்தவுக சாகறப்பவோ, அல்லது சாகக்கிடந்து மீண்டு வரப்பவோதான், அவிகளை பிரிஞ்ச பிறவுதான், பிரிஞ்சுருவமோங்கற திகில் வரப்ப தான் அவிக உசுரோட வாழ்ந்திருக்கிறதே உறைக்குது. ஏன் இப்படி? நமக்காகவே வாழறவுக உசுரோட இருக்கிறதை கூட உணராத வாழ்க்கை என்ன வாழ்க்கை ? ஏன் வாழ்க்கை இத்தனை மெக்கானிக்கலாயிருச்சு? நாம உசுரா தான் இருக்கம்னு நமக்கு நாம ப்ரூவ் பண்ணிக்கத்தான் எதிராளிய நோகடிக்கிறமோ, சாகடிக்கறமோ? எதிராளியோட நிலையும் இதுதானோ? ஏன் மனித வாழ்க்கைல உயிர்ப்பே இல்லாம போயிருச்சு."
" நோ .. என்னை எனக்கு ஞாபகப்படுத்த எனக்கே எனக்கான மாயாவுக்கு ஒரு மைல்ட் அட்டாக் வரவேண்டியிருக்குன்னா நான் வாழவே இல்லைனு அர்த்தம் ஷிட். நான் வாழ்ந்தாகனும். உயிர்ப்போட வாழ்ந்தாகனும். எனக்காக வாழறவங்க உசுரோடத்தான் இருக்காய்ங்கங்கற நினைப்போட வாழனும். என்னத்தை முனிசிபல் சேர்மன்.. என்னத்தை லைஃப் நான் சென்ஸ். இனி ஒரே ஒரு அஜெண்டா தான் . பேக் டு தி பெவிலியன் "
இனி ஒரே ஒரு அஜெண்டா தான் பேக் டு தி பெவிலியன். ரெண்டு நாள்ள மாயாவை வீட்டுக்கு கூட்டி வந்துட்டோம். ஒரு சுத்து இளைச்சிருந்தாள். கண்ணு கீழே கருவளையம். நடையில தளர்வு. நான் வச்ச கண்ணு வாங்காம பார்க்கிறத பார்த்து கண்ணாலயே "என்ன நடந்து போச்சு .ஒன்னுமில்லை ஐம் ஆல்ரைட்டுங்கறா" நோ.. மாயா ஐ வில் ஐ வில் லிவ் வித் யு, ஃபார் யு அண்ட் ஃபார் மி .
(தொடரும்
ஜகன் ஷிர்டி பாபாவோட சிலையோட வந்தாரு