Thursday, August 12, 2010

கில்மா வாஸ்து: 6

கடந்த பதிவுல மனைவியை சயனேஷு ரம்பாவா மாத்த எப்படி மோட்டிவேட் பண்றதுன்னு ஆரம்பிச்சேன். அப்பாறம் பார்க்கலாம்னு தள்ளி போட்டேன். இன்னைக்கு அந்த மேட்டருக்கு அடி போட்டிருக்கேன். அதை படிக்க
இங்கே    அழுத்துங்க.

வாஸ்துல (அதாங்க வீட்ல )  மொத்தம் 9 திசைகள் இருக்கு. இதுல பெட் ரூம் அமைக்க  பெரியவுக வாயு மூலையை ப்ரிஸ்க்ரைப் பண்ணியிருக்காய்ங்க. ஆனால் இது பெஸ்ட் சாய்ஸ் தானானு இங்கன பார்ப்போம்.

அந்த காலத்துக்கும் இந்த காலத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. அப்ப்ல்லாம் விவசாயம் தான் முக்கிய தொழில். கால் நடை வளர்ப்புங்கறது செகண்டரி. பழைய வாஸ்து புஸ்தவத்துல பார்த்திங்கன்னா  தானிய கிடங்கு (மேற்கு திசையில் அமையனும்),  மாட்டுதொழுவம் ( காம்பவுண்டிற்கு உள்ளே  அ வெளியே மேற்கு அ வடமேற்கு திசைல அமையனும் - தொழில் முறை பண்ணைக்கு வேற வாஸ்து இருக்குதுங்கண்ணா)  இத்யாதிக்கு நிறைய முக்கியத்துவம் தந்திருப்பாய்ங்க.

இப்ப எத்தனை வீட்ல இதெல்லாம் இருக்கு?  விவசாயம், கால் நடை வளர்ப்பெல்லாம் இயற்கையோடு நெருங்கிய தொடர்பு கொண்ட தொழில்கள். அதாவது சூரியனோடயே எந்திரிச்சு அவர் மறையறதுக்குள்ள வீட்டை வந்து சேர்ர தொழில்கள். மேலும் உடலுழைப்பு நிறைந்த தொழில்கள். இப்போ எத்தனை பேர் இந்த ஃபீல்டுல இருக்காய்ங்க. எத்தனை பேருக்கு உடலுழைப்பு இருக்கு? எத்தனை பேரு காலை 6 க்கு பொழப்ப பார்க்க போயி மாலை 6 க்கு வீடு திரும்பறாய்ங்க?

அந்த காலத்துல மேற்படி தொழில்கள்ள திடீர் நஷ்டத்துக்கு வாய்ப்புண்டே தவிர திடீர் லாபத்துக்கெல்லாம் வாய்ப்பு கிடையாது. இப்போ மாதிரி மார்க்கெட்டிங் சிஸ்டம்லாம் இல்லியே. ஆன் லைன் வர்த்தகம் இல்லவே இல்லையே. யந்திரமயம் கிடையாது ( கை நிறைய வேலை) , மருத்துவ துறையில பெருசா வளர்ச்சி கிடையாது ( சின்ன சின்ன வியாதிக்கெல்லாம் நடுங்கனும் - இதனால ஹெல்த் ரூல்ஸை ஆன்மீகத்தோட கலந்து ஸ்ட் ரிக்டா ஃபாலோ பண்ணாய்ங்க)  முக்கியமா வாடகை வீடுங்கற கான்செப்டே கிடையாது.  எல்லாருமே ஸ்திர வாசம் தான். எப்பயோ கொள்ளை  நோய் , வறட்சி,பஞ்சம் வந்தாதான் சேஞ்ச் ஆஃப் ப்ளேஸ்.

காஸ்ட் ஆஃப் லிவிங் குறைவு ( நிலம், நீர், எரிபொருள், தானியம்,காய் கறி, மாமிசம் எல்லாமே ஃப்ரீ)  ஆசைகளும் குறைவு (கம்யூனிகேஷன்ஸ் குறைவு - ஒரு ஏரியாவோட லக்சரி இந்த ஏரியாவுக்கு தெரிய பல காலம் பிடிக்கும். இப்போ மாதிரி டிவி சேனல்ஸ் -அதுல விளம்பரம்லாம் கிடையாதே) .ஸ்திரமான வருமானம் ( லீஸ்டா இருந்தாலும் ஸ்டேபிள்) இப்போ மாதிரி போன மாசம் வரை மாச சம்பளம் 10 லட்சம் அடுத்த மாசம் ரோடுங்கற சீனெல்லாம் கிடையாது. பால்ய திருமணங்கள் இருந்ததால மனசு அலைபாயற வாய்ப்பும் கிடையாது. முன் அனுபவங்கள் கிடையாது. (இப்போ இல்லாதவுகளே கிடையாது)  அந்த காலத்துல அவனவன் 8 அடி உசரம், பலகையா மாருன்னு இருந்தாய்ங்க. நிறை குடம். தளும்ப தாமதமாவும். இப்போ அவனவன் பேட்டரி வீக்காகிப்போயி டெஸ்ட் லாம்ப் மாதிரி  செக்ஸை யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான்.

அப்போ சனத்துக்கு சஞ்சலம் குறைவு, அன் செர்ட்டினிட்டி குறைவு, மேலும் கூட்டுக்குடும்பம்ங்கறதால வாயுமூலைல உள்ள பெட் ரூமுக்கு எப்ப..யாச்சும் தான் போக முடியும்.  எப்பல்லாம் கெட்ட காரியம் பண்ணா நஷ்ட ஜாதகர்கள் பிறப்பாய்ங்களோ அதையெல்லாம் கணக்கு போட்டு பண்டிகையா வச்சுட்டாய்ங்க, அதுக்கு வீட்டை கழுவி,மாட்டை கழுவி பூஜை முடிக்கிறதுக்குள்ள தூக்கம் கண்ணை சொழட்டும்.

இப்போ நிலைமை ரெம்ப மாறிப்போச்சு. சனம் பூஞ்சையாயிட்டாய்ங்க ( உடல் உழைப்பு ,பலம் இல்லே) இதனால மனசு தந்திரம் கத்துக்குச்சு.  சஞ்சலம் சாஸ்தி.ஆசைகள் சாஸ்தி. காஸ்ட் ஆஃப் லிவிங் தூக்கிருச்சு. எவனுக்கும், எதுக்கும் கியாரண்டி கிடையாது ( மந்திரிக்கெல்லாம் எப்படிங்கண்ணா ஜுரம் வருது ?எங்க ரோசய்யாவுக்கும் ஜுரம்தேன்)

இந்த மாதிரி நிலைல இவிகளை நம்பி சஞ்சலம், நிலையற்ற தன்மை, கோர்ட்டு கச்சேரி, தேவடியாத்தனத்துக்கெல்லாம் காரகத்வம் வகிக்கிற வாயுமூலைல பெட் ரூம் கட்டினா சரியா வருமா?

ஆக்னேயத்துல கட்டினா என்ன ஆகும்?
நைருதி பெட்டர் சாய்ஸா?
ஈசான்யம்?

அடுத்த பதிவுல பார்ப்போமா?