Wednesday, August 4, 2010

உங்க முன் பின் பிறவி இதுதான் தலை !

இந்த மிஸ்டிக் சீக்ரெட் பதிவோட சீக்ரெட் ஆஃப் வாஸ்து (வாஸ்துரகசியங்கள்)  தொடர்பதிவும் தொடருதுங்கண்ணா ..


உங்க ஜாதகத்துல சனி இருக்கிற ராசிய  வச்சு உங்க கடந்த பிறவியை அறிய ஒரு குன்ஸு இருக்குதுங்கண்ணா. அதை இந்த பதிவுல விளக்க முயற்சிக்கிறேன்.கடந்த பிறவியை தெரிஞ்சுக்கறதால என்ன லாபம்னு கேட்பிங்க. இருக்குங்கண்ணா. ஒரு தடவை நின்னு தோத்த தொகுதில ரெண்டாவது தடவையும் நின்னா தேர்தல் வேலை சுளுவாகுது. வெற்றி வாய்ப்பு அதிகரிக்குதுல்லை . அதே மாதிரி தான் இதுவும். இங்கே வெற்றின்னா பிறப்பை தடுக்கிறது (காப்பர்டி போட்டு இல்லிங்கண்ணா கருமத்தை எல்லாம் ஒழிச்சுட்டு மறுபிறவிக்கு அவஸ்யமில்லாம பண்ணிக்கிறது)
மனிதப்பிறவி எந்தளவுக்கு உன்னதமான பிறவியோ அந்தளவுக்கு  கேடு கெட்ட பிறவி.
நாய் பிழைப்புனு கேவலமா சொல்றோமே. அந்த நாய் உடலுறவுக்கு மிந்தி பெண் நாயோட உறுப்பை முகரும்.எதுக்கு தெரியுமா? அது ப்ரெக்னென்டா இல்லியானு தெரிஞ்சுக்க.அது ஒரு வேளை ப்ரக்னென்டா இருந்தா ரிட்டர்ன் ஆஃப் தி ட்ராகன். ஆனால் நம்ம மனுசங்க?
பூகம்பம்,வெள்ளம் இத்யாதி வரப்போவுதுன்னா ஊர்ல உள்ள எலி,கரப்பான் எல்லாம் கழண்டுக்கும். ஆனால் மன்சங்க? டிவில குட்டிங்களோட தொடையையும் முலையையும் பார்த்து ஜொள்ளிக்கிட்டே செத்துப்போயிர்ராய்ங்க
நாம ஒரு தாய் வயித்துல வந்து பிறக்கறோம். நம்மை கருவில் தாங்கவும், நம்மை பெற்றெடுக்கவும்,வளர்த்து ஆளாக்கவும் அவிக எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிக்கிறாய்ங்க. அப்பா உழைச்சு ஓடா தேயறாரு. இதெல்லாம் ருணம். கடன். இந்த கடனை தீர்க்காத வரை மறுபடி மறுபடி பிறந்து வரவேண்டியதுதான்.
"ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி சுதாலயா"
(ருணம் - கடன் , பந்தம் -உறவு,  ரூபேணா - வடிவம் ,பசு - கால் நடைகள் ( இந்த காலத்துக்கு டூவீலர்,ட்ராக்டர், பால் பாக்கெட் போடற பையன்)  பத்னி - மனைவி, சுதா - சுதா சந்திரனில்லிங்க சுதான்னா குழந்தைகள்னு அர்த்தம். ஆலயா - வீடு)
போன பிறவில உங்களுக்கு கடன் பட்டவுக இந்த ஜன்மத்துல மனைவியா (கணவனா),குழந்தையா, கால் நடைகளா வந்து  பட்ட கடனை  தீர்க்கறாய்ங்களாம். இந்த லிஸ்ட்ல வீட்டையும் சேர்த்துருக்காய்ங்க.
போன பிறவில பேங்க் மேனேஜராவோ, இஞ்சினீராவோ,மேஸ்திரி,சித்தாளாவோ இருந்து சனங்க வீடுகட்டிக்க உதவியிருந்திங்கன்னா இந்த பிறவில உங்களுக்கு நல்ல வீடு கிடைக்கும்னு அர்த்தம்.போன பிறவில தேக்குமரமா நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை பாதுகாத்திருந்திங்கன்னா இந்த பிறவில வீட்டுக்கதவுக்கு நல்ல மரம் கிடைக்கும் .இல்லைன்னா கார்ப்பெண்டர் டுபாகூர் மரம் வாங்கி தந்து ஆட்டைய போட்டுருவாரு.
ஆக நீங்க பிறருக்கு நன்மைய செய்தாலும் அவிக கடன் தீர நீங்க  மறுபடி பிறக்கனும்.  நீங்க பிறருக்கு தீமைய செய்தாலும் அதுக்குண்டான கருமத்தை தொலைக்க  மறுபடி பிறக்கனும்.
மனித பிறவியா ஈனப்பிறவியா இருக்கு.  திருவிளையாடல்ல சிவாஜி சொல்ற மாதிரி அனைத்தும் அறிந்த யூனிவர்சல் மைண்டோட இந்த பூமிக்கு வரோம். நம்மையும் இந்த உலகத்து பொருட்களையும் வேறுபடுத்தி பார்க்கதெரியாத உன்னத நிலைல வரோம்.
முக்கியமா நம்மையே தேர்ட் பார்ட்டியா பாவிக்கிற ஸ்டேஜுல வர்ரோம். (குழந்தை தனக்கு எதுனா வேணம்னா எனக்கு கொடுன்னு கேட்காது. "பாப்பாக்கு குது"ன்னு தான் கேட்கும் ஞானி தன்னை "இது" ன்னு தான் குறிப்பிடுவார்.
ஆனா பெற்றோரும், ஆசிரியர்களும் நமக்குள்ள ஈகோவை நுழைச்சி இயற்கைலருந்து வேறுபடுத்திர்ராய்ங்க. இயற்கையோட தேசலான  கனெக்சன் கொண்ட பாடி சொல்ற மெசேஜை கூட கேட்க முடியாத நிலைக்கு வந்துர்ரம்.
ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி பண்ணி எதையுமே பிடிக்க முடியாம போய் சேர்ந்துர்ரம்.  அந்த காலத்துலயாவது சனம் குறைவா இருந்ததால ஆறடி மண்ணாச்சும் சொந்தமா இருந்தது. இப்ப ஒரு ப்ளாஸ்டிக் பைல சாம்பலாக்கிர்ராய்ங்க. இந்த கேடு கெட்ட வாழ்க்கையில  அவன்,இவன், நம்மாளு, வேத்தாளுனு பேதங்கள் வேற.
இந்த ஜனன மரண சக்கரத்தை  நிறுத்தவே முடியாதா? முடியும் தலைவா. மனமிருந்தா மார்கமுண்டு.
பல்வேறு முகமூடிகள்ள மன்சங்க செய்றது ரெண்டே வேலையத்தான்.ஒன்னு சாகறது ரெண்டு சாகடிக்கிறது. சாகடிச்சா கர்மம் வரும்.மறுபடி மறுபடி  ஜென்மமெடுத்து  அந்த கருமத்தை ஒழிக்கனும்.  பேசாம கொல்லுங்கடா என்னைனு நின்னுட்டா பூர்வ கருமம்லாம் ஒழியும். இதுவே கடைசி பிறவியாயிரும்.
என்ன ஒரு பிரச்சினைன்னா அடுத்தவுக உங்களை கொல்றச்ச (பேச்சால,செயலால) இரு இரு நேரம் வரட்டும்னு கருவிக்கிட்டிருந்தா அடுத்த பிறவி நிச்சயம். "ஹும் எல்லாம் நான் பண்ண பாவம். கருமம் ஒழிஞ்சா சரி" ன்னு நடக்கிறதை ரெகக்னைஸ் பண்ணிட்டிங்கன்னா யுவார் ஃப்ரீ.
எப்படி வாழ்ந்தாலும் மரணம் நிச்சயம். மரணத்தை ஜெயிக்க ஒரு உபாயமும் இல்லே. (புகழுடல் வாழும்னுவாய்ங்க அதெல்லாம் ஜல்லி.  நான் வாழப்போறதில்லையே)
இந்த ஒரு பிறவியே ரெம்ப போர் அடிச்சுருச்சுங்கண்ணா. ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சின்னு பாடினாரு கவிஞரு.  அறிவுல ரெண்டு விதம். வெளியிலருந்து ஊட்டறது ஒரு அறிவு. இது டெம்ப்ரரி. பிரச்சினைனு வந்தா  நாலு காலை தூக்கிரும்.
உள்ளாறவே இருக்கிறது இன்னொரு அறிவு. வெளியிலருந்து தரப்பட்ட அறிவு மொக்கையாகி நீங்க தக்கையாகி சீக்காகி சீரழிஞ்சு இதுக்கு ஒரு சொல்யூஷனே இல்லியானு ஆத்மாலருந்து அலறுவிங்க பாருங்க அப்ப துணைக்கு வரும். உள்ளாற இருக்கிற அறிவு. இதை அறிவுனு சொல்றது கூட தப்பு. ஞானம்னு சொன்னாலும் தவறுதான். ஞானம்லாம் செயற்கை. உங்க இயல்பை நீங்க  உணர்ந்துக்குவிகனு வேணம்னா சொல்லலாம்.
இதுக்கு ஒரு சொல்யூஷனே இல்லியானு ஆத்மாலருந்து அலறுனேன் பாருங்க ஒரு அலறல் . உங்க ஊர்ல வந்து கேட்டிருக்கும். அப்பத்தான் உயிர்களின் இயல்பு என்ன? உடல்களின் பங்கு என்னங்கறதெல்லாம் ஸ்ட்ரைக் ஆச்சு. இருக்கிறது ஒரே உயிர்தான். உடல்கள் தான் வேற. நெட் ஒர்க் ஒன்னுதான். ஹேண்ட் பீஸ் தான் வேற. உயிர்களோட தத்துவம் இணையறது.  ஈகோவோட  வேலை பிரிக்கிறது. ஆனால் மனுஷன் இந்த உடல்தான் என்னை மத்த உயிர்கள்கிட்டேருந்து பிரிக்குதுனு மிஸ் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கிட்டு கொல்றான்.கொல்லப்படணும்னு துடிக்கிறான்.
நானு சின்ன வயசுலருந்தே லீடிங் பெர்சனா இருந்தவன். நாலாங்கிளாஸ்ல தமிழ் சங்க தலைவன். ராசி சிம்மம்ங்கறதாலயோ, லக்னத்துல குரு உச்சம்ங்கறதாலயோ பேசிக்கலாவே அகங்காரி (ஈகோயிஸ்ட்) ஆத்தாளுக்கு கூட ஆங்காரி ஒரு பேர் இருக்குதுங்கண்ணா. ஆனா இதுக்கு அர்த்தம் அகம் உடையவள் கிடையாது.
செத்துப்போனதுக்கும் உயிர் கொடுக்கிற பீஜங்கள் சிலதிருக்கு "ஆம் ஹ்ரீம் க்ரோம்"
இதுல வர்ர ஆம் என்ற பீஜத்துக்கு உடையவள்ங்கறதால தான் "ஆம் காரி" ஓம்காரிங்கறதை ஓங்காரினு சொல்றோமில்லையா. அப்படி ஆங்காரி.
சனத்துக்கும் ஈகோ இருக்கும். ஆனால் நம்ம மேட்டர்ல அணுஅணுவுலயும் போய் எல்கட்ரான்,புரோட்டான், நியூட்ரான் மாதிரி சுற்றி சுழன்றுகிட்டிருந்தது.
அது ஒன்னுமே உச்சத்துக்கு போகும்போது  எதிரிடையா மாறிருது. உ.ம் ஆத்திகம் நாத்திகமா, நாத்திகம் ஆத்திகமா.
அந்த ஈகோதான் என்னை வழி நடத்துச்சு. தாளி நான் இருக்கிறச்ச. உசுரோட இருக்கறச்ச இதெல்லாம் இப்படி இருக்கலாமா? ன்னு ஈகோ ப்ராப்ளம்.
அந்த ஈகோ தான்  என்னை ஹ்யூமேனிஸ்டா மாத்திருச்சு . எல்லாரும் நல்லா இருக்கனும். அட நெல்லா இருக்காட்டி போவுதுங்கண்ணா இப்பத்திய நிலைமைய விட கொஞ்சம் பெட்டரா வாழ்ந்தா போதும்.
மத்த சனம் எருமைமாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி கிடக்காங்கோ. நமக்கு முடியலிங்கண்ணா. அதுக்குத்தான் ஆப்பரேஷன் இந்தியா 2000 இது லார்ஜ் ஸ்கேல் மறுமலர்ச்சிக்கு.  எக்கானமி பேக்கேஜ் இது ஸ்மால் ஸ்கேல் மறுமலர்ச்சிக்கு. ஜோதிஷம்,வாஸ்துவெல்லாம் மைக்ரோ லெவல் மறுமலர்ச்சிக்கு.
ஒரு பெண்ணை கழுத்தை நெறிச்சு கொன்னு சூட்கேஸ்ல அடைச்சு  பஸ்ஸ்டாண்டல் விட்டுட்டு போயிருக்காய்ங்க.
சிசுமரணம் கணக்கில்லாம போயிட்டிருக்கு. குப்பை தொட்டிலயும்,குப்பை மேட்லயும், முள் புதர்கள்ளயும் நாய்களுக்கு இரையாகற அந்த பச்சை மண்ணுகளை நினைச்சா ரத்தம் கொதிக்குது.
விபத்து,கொலை,தற்கொலை  இவிக அரசாளனும்னா கூட சனம் தேவையில்லிங்களா? எல்லாரும் செத்து ஒழிஞ்சா யாரை ஆளுவாய்ங்க.
சனங்க படற பாட்டை பார்க்க முடியலிங்கண்ணா. வெறுத்து போவுது. நான் என்ன ரஜினிகாந்தா கல்யாண மண்டபத்தண்டை மோர்பந்தல் வச்சுட்டு குண்டி மண்ணை உதறிட்டு போக.
மாற்றம் வரணும். பெட்டர்மென்ட் வரணும். "மனுஷனை மனுஷன் சாப்பிடறாண்டா தம்பிப்பயலே"ன்னாரே பட்டுக்கோட்டையாரு. பாவம் அவரு ரெம்ப அவசரப்பட்டுட்டாரு. இந்த கவிஞர்களே டெண்டர் ஹார்ட்டடு. முந்திரிக்கொட்டை மாதிரி ஒதகாத மேட்டருக்கெல்லாம் ரெம்ப உ.வ பட்டுர்ரது.
நான் கூட இப்படித்தான் 1989 ல ஒரே ஒரு கண்ணாலத்தை பிரிச்சுப்போட்டுட்டதுக்கு
"சாவும் என்னை விரும்பவில்லே  ..நோவும் என்னை நெருங்கவில்லே" ன்னு  கவிதை எழுதிட்டன். மனுஷனை மனுஷன் சாப்பிடறதுன்னா இப்போ இன்னைக்கு நடக்குதே அதாங்கண்ணா.
நாடார் கடைகளை  ரிலையன்ஸ் ஒழிச்சா, ரிலையன்ஸ ஒழிக்க வால்மார்ட் வரப்போவுது. ஹைதராபாத்ல ஒரு பெண்ணுக்கு ஸ்வேன் ஃப்ளூ ஃபீவர். 108க்கு ஃபோன் பண்ணியிருக்காய்ங்க. 108 காரவுக ஏத்தமாட்டேன்னுட்டாய்ங்களாம்.
கடவுள் மனிதனை சுதந்திரனா படைச்சான் . ஆனால் மனுஷன் இயற்கைலருந்து விலகி , இயற்கையிலருந்து தன்னை வேறா கற்பனை பண்ணிக்கிட்டு சுய நலப்புழுவாகி  இந்த நிலைக்கு வந்துட்டான்.
 தபார்ரா ஜாதகத்துல சனியோட இருப்பை வச்சு கடந்த பிறவியை அறியலாம்னு சொல்ட்டு பதிவையே முடிச்சுட்டியேனு கடுப்பாயிராதிங்க.   குன்சை போட்டு உடைக்கிறேன்.
சனி கர்மகாரகன்.
சனி உங்க ஜாதகத்துல பாதகமான நிலைல இருந்தா :
கடந்த பிறவில நீங்க எந்தெந்த மேட்டர்ல சனம் உங்களை  டார்ச்சர் பண்ணிங்களோ அந்த மேட்டர்களுக்கு காரகத்வம் வகிக்கிற பாவத்துலயே நின்னு விட்ட குறை தொட்ட குறையா அந்த வாசனை காரணமா இந்த பிறவிலயும் சனத்தை அதே மேட்டர்கள்ள டார்ச்சர் பண்ண வைப்பாரு. இரு இருன்னு கருவுனா அடுத்த பிறவியிலயும் இதே பாவத்துலதான்  நிப்பாரு. ஓஞ்சு போவட்டும் என் கர்மத்தை தொலைக்க இவிக உதவறாய்ங்கனு நினைக்க ஆரம்பிச்சு அப்படியே வாழ்ந்துட்டிங்கன்னா யுவார் ஃப்ரீ ஃப்ரம் ஜனன மரண சக்கரம்
சனி உங்க ஜாதகத்துல சாதகமான நிலைல இருந்தா :
கடந்த பிறவில  சனம் உங்களை  எந்தெந்த மேட்டர்ல  டார்ச்சர் பண்ணிங்களோ அந்த மேட்டர்லயெல்லாம் சக்கை போடு போட ஏதுவான   காரகத்வம் வகிக்கிற பாவத்துலயே நின்னு விட்ட குறை தொட்ட குறையா  வாசனை காரணமா இந்த பிறவிலயும் சனத்தை அதே மேட்டர்கள்ள உங்கள்ள கொஞ்ச நாளைக்கு  டார்ச்சர் பண்ண வைப்பாரு.  படக்குனு ரிலீவும் பண்ணிருவாரு. ஆனா நீங்க சனிபலத்தை வச்சு ஓவரா போனிங்கனு வைங்க ( அந்த பலன்களை  முழு மூச்சா அனுபவிக்கிறது) மறுபடி பிறவி எடுத்து கருமம் தொலைக்க வேண்டியதுதான்.
மேட்டர் மேட்டருனு மர்மமா சொல்ட்டா எப்படி தலைனு கேட்பிங்க. சொல்றேன். கீழே 12 பாவங்களோட காரகத்வத்தையும் தந்திருக்கேன். உங்க ஜாதகத்துல சனி எங்கன இருக்காருனு பார்த்து டேலி பண்ணிக்கங்க.
அப்படியே சனியோட காரக்த்வங்களையும் தந்திருக்கேன். இதுலயெல்லாம் உங்களுக்கு இப்போ நன்மை நடந்துக்கிட்டிருந்தா நீங்களே சிலதை வாலண்டியரா விட்டு கொடுத்துருங்க. எந்தளவுக்கு இதுகள்ள பயன் அடையறிங்களோ அந்த அளவுக்கு இதே மேட்டர்ல அடுத்த பிறவில டார்ச்சர் அனுபவிக்கனுமுங்கோ
ஒரு வேளை சனி காரகத்வங்கள்ள உங்களுக்கு தீமை நடந்துக்கிட்டிருந்தா இது கருமம் தொலைக்க எடுத்த பிறவினு அர்த்தம். "இரு இரு  நேரம் வரட்டும்"னு கருவிக்கிட்டு கிடக்காம கருமம் தொலைஞ்சது போனு விட்டுட்டு வேற வேலை பாருங்க.
12 பாவங்களின் காரகத்வம்: ( சேனல்ங்கறதுக்கு பதில் பாவம்னு படிச்சுக்கங்க)
முத‌ல் சேன‌ல்:(ல‌க்ன‌ம்)

உங்க‌ள் உட‌ல்,ம‌ன‌ ந‌ல‌ம்,நிற‌ம்,குண‌ம்


2ஆவது சேன‌ல்:

(த‌ன‌ பாவ‌ம்)த‌ன‌ம்,வாக்கு,குடும்ப‌ம்,க‌ண்க‌ள்


3 ஆவது சேனல்:

சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில்

பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்


4ஆவது சேனல்:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம்


5.ஆவது சேனல்:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்,தியானம்,வயிறு


6.ஆவது சேனல்:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாம‌ன்,வயிறு


7.ஆவது சேனல்:
நண்பன்,காதலர்/லி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்


8.ஆவது சேனல்:
வெல்ல முடியாத‌ ,உயிருக்கு ஆப‌த்து விளைவிக்க‌ கூடிய‌ சத்ரு, தீராத‌ ரோகம், தீர்க்கமுடியாத‌ ருணம்(கடன்),சிறைப் ப‌டுத‌ல், ம‌ஞ்ச‌ள் க‌டிதாசு கொடுத்த‌ல்,அடிமையாத‌ல்,மேஜ‌ர் விப‌த்து, ஆப்ப‌ரேஷன்,மர்மஸ்தானம்


9.ஆவ‌து சேன‌ல்:
த‌ந்தை,த‌ந்தைவ‌ழி உற‌வு,த‌ந்தை சொத்து,

சேமிப்புக்க‌ள்,தூர‌ பிர‌யாண‌ங்க‌ள்,வெளி நாட்டுப் ப‌ய‌ண‌ங்க‌ள்.


10ஆவ‌து சேன‌ல்:
வாழும் வ‌ழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோக‌ம்,வியாபார‌ம்


11.ஆவ‌து சேன‌ல்:
மூத்த‌ ச‌கோதிரி/ச‌கோத‌ர‌ன்,லாப‌ம்.


12ஆவ‌து சேன‌ல்:
தூக்க‌ம்,செக்ஸ்,ம‌ர‌ண‌ம்,ம‌ர‌ண‌த்துக்கு பின்னான‌ நிலை,செல‌வு செய்யும் வித‌ம்,பாத‌ங்க‌ள்.
சனியோட காரகத்துவம்: ( சனி பகவானே சொல்றாருங்கண்ணா)
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.