Sunday, August 1, 2010

வாஸ்து ரகசியங்கள்: 3

கடந்த பதிவுல நீங்க வீடு கட்ட வாங்கப்போற மனைக்கும் (அல்லது வீட்டுக்கும்) கோவில்களுக்கும் இருக்க வேண்டிய டிஸ்டன்ஸ், கோவில்கள் இருக்க கூடாத பக்கங்களை பத்தி பார்த்தோம். இந்த பதிவுல இன்னும் சில நிபந்தனைகளை பத்தி பார்ப்போம்.



மனை சதுரமாவோ ,செவ்வகமாவோதான் இருக்கனும். (தெரியாதவுக உங்க கணக்கு வாத்தியாரை ..........என்ன பண்ணனும்னு நினைக்கிறிங்களோ சொல்லுங்க) .ஏன் இந்த நிபந்தனை ?



உங்க மைண்ட் செட்டை பொருத்துதான் உங்க சைட் செலக்சனும் இருக்கும், வீட்டு கன்ஸ்ட் ரக்சனும் இருக்கும். நீங்க எந்த வேலையையும் முறையா, ஒழுங்கா, செய்யற பார்ட்டியா இருந்தா சதுரமாவோ, செவ்வகமாவோ இருக்கிற மனையைத்தான் செலக்ட் பண்ணுவிங்க.அப்படியே ஒழுங்கில்லாத மனையை வாங்கினாலும் தத் என்னடா சைட் இது முதல்ல மூலைமட்டம் வச்சு நூல் கவுறு கட்டி மார்க் பண்ணுங்கப்பாம்பிங்க.



ஒழுங்கில்லாத மனையா இருந்தாலும் ஒழுங்கில்லாத பகுதிக்கும் சேர்த்துத்தான் பணம் கொடுத்திருப்பிங்க. ஆனால் நீங்க எந்த வேலையையும் முறையா, ஒழுங்கா, செய்யற பார்ட்டியா இருக்கிறதால நீங்க விலை கொடுத்து வாங்கின இடம் வீணா போனாலும் சரினு அதை விட்டொழிச்சுட்டு கடைக்கால் போடுவிங்க.



சப்போஸ் நீங்க அமாவாசை இருட்டில பெருச்சாளிக்கு போனதெல்லாம் வழிங்கற மாதிரி அலையற பார்ட்டியா இருந்தா, சாணில சல்லிக்காசு இருந்தாலும் நக்கி எடுத்துர்ர பார்ட்டியா இருந்தா கோணா மாணையா இருந்தாலும் சரி ஒரு அடி கூட வீணா போயிரக்கூடாதுன்னு "வளைந்து நெளிந்து செல்லும் பாதை "மாதிரி மங்கை மோக கூந்தல் கணக்கா கடைக்காலை போட்டுருவிங்க. அப்பாறம் சுவர் எழுப்பறதுலருந்து பூசுவேலை பண்றதுலருந்து , டைல்ஸ் போடறதுல இருந்து எல்லா வேலையிலயும் லொள்ளு வந்துக்கிட்டே இருக்கும்.



ரஜினி காந்த் சொல்றாப்ல " என் மனை,என் வீடு, என் காசு,என் பணம், என் டப்பு"னு சொல்ற பார்ட்டின்னா உங்க மனைக்கு முன்னெ,பின்னே, அந்த பக்கம் இந்த பக்கம் இருக்கிற மனைக்காரவுக வீடு கட்ட ஆரம்பிக்கறப்ப சீரியஸ் லொள்ளு ஆரம்பிக்கும். அவன் ஒரு வேளை சிஸ்டமேட்டிக் பர்சனா இருந்தா உன் துண்டை எனக்கு வித்துரு, இல்லை என் துண்டை நீ வாங்கிக்கனு ப்ரப்போஸ் பண்ணுவான்.



நீங்க அல்பம்ங்கறதால தான் ஒரு சில அடி நிலம் கலந்து வரும்னு கோணா மாணையா வீட்டை கட்டியிருக்கிங்க. அப்ப நீங்க அமிக்கபிளாவோ, கன்ஸ்ட்ரக்டிவாவோ ஆஃபரும் பண்ண மாட்டிங்க். வந்த ஆஃபரை ஒப்ளைஜும் பண்ண மாட்டிங்க. ஒரு வேளை அந்த பார்ட்டி பலான பலான பின்னணியுள்ளவனா இருந்தா உங்க மனையை நீங்களாவே பாதி விலைக்கு விக்கிறாப்ல பண்ணிருவான். ஒரு வேளை வில்லங்கமான பேர்வழியா இருந்தா வல்லடியா ஆக்கிரமிக்க பார்ப்பான். அசலுக்கு மோசமாயிரும்.



சரி இஞ்சினீர்கள் முதல்,வாஸ்துக்காரவுக அட்வைஸ் எல்லாத்தயும் மீறி நீங்க கோணா மாணையா வளர்ந்த இடத்தையும் சேர்த்துக்கட்டிட்டிங்க. இதை நீங்களே உபயோகிச்சுக்கிட்டா அது ஒரு வகைல பிரச்சினை. சிலர் அதி ஞானத்தோட அதுக்கு வெளிப்புறம் வாசல் வச்சு அந்த பகுதியை வாடகைக்கு வேற விடுவாய்ங்க. வீட்டுல நடக்கிற கூத்தெல்லாம் அந்த டெனன்டுக்கு ரிலே ஆயிட்டே இருக்கும். நெல்லவன் எவனும் அந்த மாதிரி இடத்துல வந்து கடையும் வைக்கமாட்டான். குடித்தனமும் வரமாட்டான். வந்ததும் நாதாரியா இருந்து அங்கன வந்து கூடறதும் போடுகாலுங்களா இருந்து வீட்ல ஒரு வயசுப்பொண்ணும் இருந்தா என்னாகும்னு ரோசிச்சி பாருங்க.



ஃபர்ஸ்ட் அஃபால் அந்த சைட்டு ஏன் அப்படி இருக்கனும் ?

( ஒரு பக்கம் வளர்ந்தும்,ஒரு பக்கம் குறைஞ்சும்)



1.ஒரு காலத்துல நல்லா வாழ்ந்தவன் தன் நிலத்துல கொஞ்சம் கொஞ்சம் மொத்தமா வித்துக்கிட்டு வந்திருப்பான். இது கட்டக்கடைசில கழவடையா நின்னுருக்கலாம். அதையும் வித்து நொந்துகிட்டே போயிருப்பான்.



2.உங்களுக்கு முன்னாடி வாங்கினவுக எல்லாருமே ஒரே மென்டாலிட்டி உள்ளவுகளா இருந்திருக்க முடியாதில்லையா. அதுல கன்ஸ்ட்ரக்டிவ் மைண்ட் இருக்கிறவுகளும் இருந்திருப்பாய்ங்க. சைட்டை சரிபண்ணிர முயற்சி பண்ணியிருப்பாய்ங்க. இருந்தாலும் முடியாம போயிருச்சு. ஏன் ? அந்த சைட்டோட நெய்பர்ஸ் கொடா கண்டர்களா இருந்திருப்பாய்ங்க.



இந்த மாதிரி ஏரியால நீங்க எப்படி நிம்மதியா வாழ்ந்துரமுடியும்.



சைட் சதுரமாவோ, செவ்வகமாவோதான் இருக்கனும்ங்கற நிபந்தனைக்கு பின்னாடி இவ்ளோ மேட்டர் இருக்கு. நீங்களும் உட்கார்ந்து ரோசிங்க (இல்லை ரூம் போட்டு யோசிங்க.. நிறைய விஷயம் ஸ்ட்ரைக் ஆகும். இன்னைக்கு போல அன்னைக்கு பேப்பர் கிடையாது, டிடிபி கிடையாது ஆப்செட் மிஷின்ஸ் கிடையாது. ஜஸ்ட் ஓலை நறுக்குத்தான். அதுல தபாருபா சைட் இப்படியிருந்தா லட்சுமிகரம். இல்லைன்னா லொள்ளுன்னு ரெண்டு வரிதான் எழுதமுடியும்.



(இதுல சிலது மனித வாழ்விலான மாற்றங்கள் காரணமா காலாவதி ஆயிருச்சுங்கறதும். அய்யர்மாரு நம்மை மாதிரி ஏன் எதுக்கு எப்படினு ரோசிக்காம ஓலை மேட்டருங்களை அப்படியே பட்டி விக்கிரமாதித்யர்கள் மாதிரி பட்டியடிச்சு ஒப்புவிக்கிறதால இப்பயும் ஃபாலோ பண்ணிக்கிட்டிருக்கோம். அந்த மாதிரி மேட்டரையெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம். ஞா படுத்துங்க.)



(தொடரும்