Monday, August 9, 2010

நீங்களும் உங்க எதிரியும்

ஆற்றங்கரைல  குழந்தைங்க தங்க(ள்)  கையால தோண்டினா ரெண்டு மூணு அடில தண்ணி வரும். அதை மணற்கேணிம்பாய்ங்க (இப்பல்லாம் ஆத்துக்குள்ள ரிக் வச்சு போர் போட்டாலே தண்ணி வரமாட்டேங்குதுங்கறிங்களா?)

வள்ளுவர் காலத்துல இந்த நிலைமை இல்லை தலை. அதனாலதான் இந்த மணற்கேணிக்கு பள்ளம் பறிக்கிறதையும் கற்றலை பற்றியும் ஒரு குறள் எழுதியிருக்காரு

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு.

படிக்கிற அளவுக்கு அறிவு வளரும்னு சொல்லலை . கத்துக்கிற அளவுக்கு அறிவு வளரும்ங்கறாரு. நம்ம வலைப்பூவை கூட மஸ்தா பேரு படிக்கிறாய்ங்க. நேத்து மட்டும் 24 ஹவர்ஸ்ல ( ஞாயிறு இரவு முதல்  திங்கள் மதியத்துக்குள்ள) அறு நூற்று சில்லரை பேரு படிச்சிருக்காய்ங்க. இதுல எத்தனை பேரு என்ன கத்துக்கிட்டாய்ங்கனு தெரியலை.

ஆரம்ப காலத்துல ஒரு புள்ளை ( நல்லாருக்கட்டும்) " நீங்க எழுதற மேட்டர் நல்லாருக்குண்ணா .படிக்கத்தான் கஷ்டமா இருக்கு"னு என் கண்ணை தொறந்துவிட்டது. இதைக்காட்டிலும் எளிமையா எழுதமுடியும்னு தோணலை.

நான் அடலசன்ட் ஏஜ்ல இருந்தப்பயே செக்ஸ் பத்தின ஷை, கில்ட்டி, தயக்கத்தை ஒழிக்க பலான உதாரணங்கள வச்சு பேசுவேன். இன்னம் எளிமையா எழுதனும்னா அந்த  ஸ்டைலுக்கு தான் போவனும். ஆனால் நாறிரும். வேணங்கண்ணா.

படிக்கிறது முக்கியமில்லே. கத்துக்கிடறதுதான் முக்கியம். கத்துக்கிடறது கூட வெறுமனே தராதரம் பார்க்காம அள்ளி எடுத்து ஃப்ரிட்ஜ்ல வச்சுர்ரதுல்ல. பாலா இருந்தா காய்ச்சி வைக்கனும். சாணியா இருந்தா தோட்டத்துக்கு போடனும்.
முடிஞ்சா ராம் தேவ் பாபாவுக்கு வித்துரனும்.

வெறுமனே கொடுத்ததை வாங்கி மண்டைல வச்சிக்கிறது வேஸ்ட். சொன்னதை ஏன் சொன்னான்? எதுக்கு சொன்னான்னு கெஸ் பண்ணி பார்க்கனும். ஃபில் அப் தி ப்ளாங்க்ஸ் பண்ணனும்.

ஜோசியம் தெரிஞ்சவுக, வாஸ்து தெரிஞ்சவுக என்னை உஃபுனு ஊதி தள்ற ரேஞ்சுல மஸ்தா கீராங்க. நம்ம ஸ்பெஷாலிட்டி என்ன? ( போதுங்கண்ணா செல்ஃப் டப்பாங்கறிங்க அப்படித்தானே ஓகே)

படிக்கலாம். கத்துக்கலாம். ஏன் எதுக்குனு ரோசிக்கலாம். ஃபில் அப் தி ப்ளாங்க் கூட பண்ணலாம். ஆனா உங்க ஜாதகத்துல புதன் வீக்காயிருந்தாருனு வைங்க மென்டலாயிரும். பரவாயில்லையா?

ஒரு காலத்துல எந்த இழவையாவது படிச்சுட்டா அது பிடிச்சிருந்தா ஃபுல் ஸ்டாப் கமாவோட கோட் பண்ணுவேன். அப்பாறம் அப்பாறம் அதுல உள்ள சாரத்தை   மட்டும் கேட்ச் பண்ணிக்கிட்டு சந்தர்ப்பம் வர்ரப்ப சொந்த ஒக்காபிலரில சொல்ல ஆரம்பிச்சேன்.

சிலர் கொட்டேசன் விடறதுக்காகவே பேசுவாய்ங்க. சம்பந்தா சம்பந்த மில்லாம கொட்டேசன் விட்டு என்னை மாதிரி ஆளுக்கிட்ட வாங்கி கட்டிக்குவாய்ங்க. 1986 வரை நாமளும் இந்த கேஸுதான். ( அப்ப வெறுமன புஸ்தவங்களை தானே படிச்சிட்டிருந்தோம்) அப்பாறமாதானே வாழ்க்கைய படிக்க ஆரம்பிச்சோம்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்னு வள்ளுவர் சொல்வாரு. எதையும் இழக்காதவனுக்கு கொடுக்கிறதுங்கறது நரகம். எல்லாத்தையும் இழந்து பெற்றவனுக்கு கொடுக்கிறது ஒரு சுகம். இதுல நாம ரெண்டாவது கேஸு. ஒரு தாட்டி ரெண்டு தாட்டி இல்லிங்கண்ணா பல தடவை ஜீரோ பேலன்சுக்கு வந்தாலும் தாளி நம்ம கேரக்டர் மாறலை. அப்ப இது ஒரிஜினல்தானே.

வஸ்துக்களை கொடுத்தா அது கெட்டுப்போயிரலாம். கெட்டுப்போக்கிரலாம். ஆனால் வாழ்க்கை தத்துவத்தை கொடுத்தா - பெற்றவன் வமிசமே வாழ்த்தும் - அவன் க்ளிக்காகி நாலு எம் ஜி ஆர் வேலை செய்தா அந்த புண்ணியத்துல ஷேர் வேற உபரியா கிடைக்கும்.

அதனாலதான் உயிரை, உயிரா மதிச்சிட்டிருந்த மானத்தை ( இப்பல்லாம் விட்டுட்டோமில்லை)  இழந்து பெற்ற அனுபங்களை அசால்ட்டா அள்ளி வீசறது
ஏன் ? இதெல்லாம்   புஸ்தவத்துல கிடைக்கிலிங்கண்ணா.

ஒரு குப்பை தொட்டி நிறைய புஸ்தவங்களை கிளறி புரட்டினா ஒரு பாக்கெட் டயரி ரொம்பினா சாஸ்தி. எழுதறவன்ல நிறைய பார்ட்டி தொடை நடுங்கிங்க. எஸ்கேப்பிஸ்டுங்க. கற்பனா வாதிங்க. வெறுமனே மூளையாலே சிந்திக்கிற பார்ட்டிங்க.

எங்க ஊரு எண்டமூரி தெரியுமில்லையா? சுசீலா கனகதுர்கா புண்ணியத்துல தெலுங்கு நாத்தம் போகாத மொழி பெயர்ப்பை படிச்சிருப்பிங்க.  அந்தாளுக்கு ஒரு தாட்டி ஆப்பரேஷன் இந்தியா2000 திட்டத்தோட சுருக்கத்தை மெயில்ல அனுப்பினா "இன்னொரு தாட்டி மெயில் அனுப்பினா கமிஷ்னருக்கு கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன்னு பதில் கொடுத்தான்.

அந்தாளோடது சைட்டு. நம்மோடது ப்ளாகு. அவரு கிழிச்சது 5 வருஷம். நாம கோதாவுல இறங்கினது 14 மாசம். அந்தாளோட சைட்டுக்கு கிடைச்ச  ஹிட்ஸ் லட்சத்து சில்லறை . நமக்கு ரெண்டு லட்சம். முத லட்சத்துக்காச்சும் முக்கா வருசமாச்சுனு நினைக்கிறேன். ரெண்டாவது லட்சம் குவார்ட்டர்லயே முடிஞ்சு போச்சு.

இருந்தாலும் அந்தாளோட கொட்டேஷன் ஒன்னு எனக்கு ரெம்ப பிடிக்கும். "இதயத்தால சிந்திச்சு மூளையால அமல் படுத்து" எங்க ஒய்.எஸ்.ஆர் இதயத்தாலயெ சிந்திச்சு இதயத்தாலயே அமல் படுத்திட்டாரு. அதனாலதான் ஸ்டேட் திவாலா கண்டிஷனுக்கு வந்துருச்சு.

ஆங் புஸ்தவங்களை பத்தி பேசிக்கினிருந்தோம். ஒதகாத புஸ்தவமா இருக்கும். ஆனால் அதுலயும் ஒரு மணி கிடைக்கும். இன்னைக்கு ஒரு அரிச்சுவடித்தனமான ஆங்கில ஜோசிய புஸ்தவ ஒன்னு புரட்டிக்கிட்டிருந்தேன். (படிக்கிற வயசெல்லாம் போயிருச்சு பாஸு !)

துவாதச பாவ காரகத்துவத்துல 1 ஆம் பாவம் (லக்னம்)  : (ஜாதகரை காட்டுமிடம்)
6 ஆம்பாவம் ( சத்ரு ரோக ருண பாவம்) உங்க எதிரிகளை காட்டற இடம். இதை  நூலாசிரியர் சொல்றாரு தெரியுமா?

லக்னம்: நீ எப்படி இருக்கேன்னு காட்டும் இடம்
6 ஆம் பாவம்: நீ எப்படி இருக்க முடியலேன்னு வருத்தப்படறியோ அவிகளை காட்டும்.

எப்டி ? சொம்ம  நச்சுனு இல்லை.